தமிழ் அமைப்புகளின்
அத்திவாரம் பலமாக இருந்தால் பணிகளும்
பலமாக இருக்கும்
"
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழா 2015
கலை இலக்கிய சமூகக் கருத்துக்களின் சங்கமாகத்
திகழ்ந்த எழுத்தாளர்
ஒன்றுகூடல்
ரஸஞானி
" இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா உட்பட தமிழர் புலம்பெயர்ந்து
வாழும் நாடுகளிலிருந்து வருகைதந்து புகலிடம்பெற்ற அவுஸ்திரேலியா ஒரு குடியேற்ற நாடாகவும் பல்லின கலாசார நாடாகவும் உலக அரங்கில் மதிக்கப்படுகிறது. அத்தகைய இந்நாட்டில் வதியும் தமிழ் கலை, இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் மூத்த இளம் - தலைமுறையினரையும் ஒன்றிணைக்கும் இயக்கமாக தோன்றிய அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 15 ஆவது எழுத்தாளர்
விழாவில் இதற்கு பலமான அத்திவாரம் இட்டவர்களையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்." இவ்வாறு கடந்த 14 ஆம் சனிக்கிழமை மெல்பனில் ஸ்ரீசிவா விஷ்ணு ஆலயத்தின் பீக்கொக் மண்டபத்தில் நடந்த வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழாவில் தலைமையுரை நிகழ்த்திய சங்கத்தின் முன்னாள் தலைவர்
திரு. ம. ஜெயராம சர்மா தெரிவித்தார்.