மரண அறிவித்தல்

.
Dr ஜெகதாம்பிகை  ஞானப்பிரகாசம்




கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் கொழும்பு, லண்டன், சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட Dr ஜெகதாம்பிகை ஞானப்பிரகாசம் அவர்கள் 24/02/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றவர்களான திரு திருமதி அப்பாக்குட்டி, நாகரத்தினம் சுப்ரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலம் சென்ற Dr. John Baptist ஞானப்பிரகாசம் (Srilanka , லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும் , கீர்த்திகுமார் (Seattle), துஷ்யந்தன் (Southampton), வசந்தகுமார் (லண்டன்), கிரிஷாந்தன் (சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நிர்மலா (Seattle), ஜெபசீலி (Southampton), ரோஷினி (லண்டன்), தர்ஷினி ( சிட்னி ) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுஷன் (San Francisco), லோகன் (Seattle), Andrew (Southampton), Abigail (Southampton), Hannah (Southampton), ராதா (லண்டன்), சுமி (லண்டன்), சாய் தர்மராஜ் (சிட்னி), சாய் காயத்ரி (சிட்னி) ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
லீலாவதி (கொழும்பு) , ஜெயராணி (சிட்னி), காலம் சென்ற கிரிஷ்ணநாதன் (கொழும்பு), சர்வாம்பிகை (Dover), காலம் சென்ற சர்வானந்தா (Detroit), ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார் .
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 03/03/2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியிலிருந்து 10.45 வரை Camelia Chapel, Macquarie Park Crematorium இல் நடைபெறும் .
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு Krisha (மகன்) 0435 409 697
Dharshini (மருமகள்) 0407 870 114

மரண அறிவித்தல்

.
     திருமதி புவனேஸ்வரி கனகசபை 


மலேசியாவைப் பிறப்பிடமாகவும், மலேசியா , மயிந்தானை கரவெட்டி , கொழும்பு Anderson Flats, சிட்னி அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புவனேஸ்வரி கனகசபை அவர்கள் 16.02.2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .

அன்னார் காலம் சென்ற கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் , காலம் சென்ற வீரகத்தி தம்பதிகளின் அன்பு மருமகளும் , காலம் சென்ற கனகசபை ( புகையிரத திணைக்களம் )  அவர்களின் அன்பு மனைவியும் ,
சிவபாக்கியம் , மகேஸ்வரி , மயில்வாகனம் , ஜனகன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலம் சென்ற ரஜனி , ரஞ்சன் (கொழும்பு ), சிட்னி அவுஸ்ரேலியாவை சேர்ந்த வாசன் , ஹரன், உதயன் , ரோகிணி ஆகியோரின் அன்புத் தாயாரும் துஷ்யந்தி (கொழும்பு) , சிட்னி அவுஸ்ரேலியாவை சேர்ந்த சந்திரா, சுமதி, நந்தினி , சுபேந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்

அவுஸ்ரேலியாவை சேர்ந்த சசிதரன், விஜிதரன், ரிஷிதரன், பிரதீப், லாவண்யா, டினேஷ், பிரகாஷ், ஆரணி, ஹரிணி, சுபேட்டா, ரோகிட்டா, ஆகியோரின் அன்புதப்  பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25.02.2019  திங்கட்கிழமை காலை 10.15 முதல் 11 மணிவரை Macquarie park crematorium, Magnolia Chapel , Cnr Plassey  and Delhi Roads
North Ryde இல் பார்வைக்காக வைக்கப்பட்டு அதன் பின் இறுதிக் கிரிகைகள் 12.45 வரை இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் .

தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு - ரோகிணி -0405 228 265
                                         ஹரன்  - 0410 392 192  
                                         உதயன் -0412 270 476
                                         வாசன் - 0415 307 680



காதல் எனும் கனியமுது - மகாதேவஐயர் ஜெயராமசர்மா

.
இளமையிலும் காதல் வரும் 
        முதுமையிலும் காதல் வரும்
    எக்காதல் இனிமை என்று
        எல்லோரும் எண்ணி நிற்பர்
    இளமையிலே வரும் காதல்
          முதுமையிலும் தொடர்ந்து வரின்
    இனிமை நிறை காதலென
          எல்லோரும் மனதில் வைப்போம் 

      காதலுக்கு கண்ணும் இல்லை
         காதலுக்குப் பேதம் இல்லை
     காதல் என்னும் உணர்வுதனை
         கடவுள் தந்தார் பரிசெனவெ 
     காதலிலே மோதல் வரும்
          காதலிலே பிரிவும் வரும்
     என்றாலும் காதல் எனில்
        எல்லோரும் விரும்பி நிற்பார்


   காதல் என்று சொன்னவுடன்
      கவலை எல்லாம் ஓடிவிடும்
   கனவுபல தோன்றி  வந்து 
        கண்ணுக்குள் புகுந்து நிற்கும்
   கற்பனையில் உலா வந்து
       களிப்புடனே நாம் இருப்போம்
   காதல் என்னும் உணர்வில்லார்
       கல்லினுக்கே சமம் ஆவார் 


காவியத்தில் காதல் வரும்
   ஓவியத்தில் காதல் வரும்
கல்வியிலும் காதல் வரும்
    காசினிலும் காதல் வரும்
அக்காதல் கொள்ள மனம்
   ஆசை பட்டு நின்றாலும்
 அழகு மங்கை தரும்காதல் 
   அனைவருக்கும் பிடிக்கும் அன்றோ 


மனித குலம் முழுவதற்கும்
    மகிழ்வு எனும் மருந்தாக
வரமாக காதல் அது 
   வந்து அமைந்து இருக்கிறது 
புவிமீது நாம் வாழ
    பொலிவு தரும் அமிர்தமென
காதல் எனும் கனியமுதை
   கடவுள் எமக் களித்துள்ளார் 

    

உலகின் சிறந்த ஆசிரியர் யசோதை செல்வக்குமரன்.

.


உலகில் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள ஒரு ஆசிரியருக்கு, ஒரு மில்லியன் டொலர் பணத்துடன் Varkey Foundation உலகின் சிறந்த ஆசிரியர் என்ற பரிசை கடந்த சில வருடங்களாக வழங்கி வருகிறது.  இந்தப் பரிசு, ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நோபல் பரிசு என பத்திரிகைகளால் குறிப்பிடப்பட்டுகிறது.
2019ம் ஆண்டு வழங்கப்படும் உலகின் சிறந்த ஆசிரியர் பரிசுக்குத் தேர்வாகியுள்ள 50 ஆசிரியர்களில் இருவர் ஆஸ்திரேலியர்கள். அவர்களில் ஒருவர் தமிழ் – NSW மாநிலத்திலுள்ள ரூட்டி ஹில் உயர்நிலைப் பள்ளியில் வரலாறு மற்றும் சமூக கலாச்சார ஆசிரியராகக் கடமையாற்றும் யசோதை செல்வக்குமரன்.

கான்பராவில் பாராளுமன்ற வளாகத்தில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டு கழகத்தின் பொங்கல் விழா

.



தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் ஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பராவில் உள்ள பாராளுமன்ற  வளாகத்தில் இவ்வருடம்   மூன்றாம் முறையாக  பொங்கல்   விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் விதமாக அரங்கம் பொங்கல் பானை, கரும்பு , வாழை மரங்களுடன், மாவிலை தோரணங்களும் சேர்ந்து ஆஸ்திரேலியா பாராளுமன்றம் விழாக்கோலம் பூண்டிருந்தது. இவ்விழாவில் ஆளும் கட்சி சார்பாக  Russell Broadbent  MP , எதிர் கட்சித்  தலைவர் சார்பாக பரமட்டா மத்திய பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்  Ms Julie Owens MP பசுமை கட்சியின் தேசியத் தலைவர் Mr Richard De Natalie MLC மட்டுமல்லாது பிற பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் செனட்டர்களும் கலந்துகொண்டனர். இவ்விழாவை அமைப்பின் தலைவர்  அனகன் பாபு    துவக்கி வைத்தார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு பொங்கல் விழா பற்றி   எடுத்துரைத்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இத்திருவிழாவை காண பிற மாநில தமிழ் அமைப்புகளை சார்ந்த தமிழ் ஆர்வலர்களும் வந்திருந்தனர். அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது  இறுதியாக அமைப்பின் செயலாளர் கர்ணன் சிதம்பரபாரதி  நன்றி கூற விழா இனிதே  முடிந்தது. இதே போல் ஆஸ்திரேலிய பழமையான நியூ சவுத் வேல்ஸ் மாநில பாராளுமன்றத்திலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



Sydney Sri Durka Devi Devasthana Thiruvizha 2019 .துர்க்கை அம்மன் ஆலய திருவிழா 2019

துர்க்கை அம்மன் ஆலய தீர்த்த திருவிழா 19.02.2019.

படப்பிடிப்பு ஞானி ஞானாரட்ணம் 



நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்கள் அறிமுக விழா

.

உலக தாய்மொழி தினம் - அகிலா இளஞ்செழியன்

.

உலக தாய்மொழி தினம்: 'தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை; தொடர்ச்சியில் இருக்கிறது'

ஒவ்வொரு மொழிக்கும் அந்த மொழிக்கே உரிய சிறப்புத் தன்மைகள் உண்டு. ஒவ்வொரு இனக் குழுவிற்கும் அடையாளமாக இருப்பது அவர்களின் தாய்மொழி. தாய்மொழிகளின் சிறப்பையும், அவசியத்தையும் எடுத்துணர்த்த, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ம் நாள் உலக தாய்மொழிகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
தாய்மொழிக் கல்வியின் அவசியம் குறித்து, கணினி வல்லுநர் மணி மணிவண்ணன் உடன் பிபிசி தமிழ் பேசியது. அவர் பகிர்ந்துகொண்டவற்றை கீழே தொகுத்துள்ளோம்.
தாய் மொழியினைக் கற்றுக் கொள்வது இயல்பான, எளிமையான செயல். தாய் மொழியினைக் கற்றுக் கொள்ளாமல் ஓர் அயல் மொழியினையோ, குடியேற்ற மொழிகளையோ கற்றுக் கொள்ள முயற்சிகள் தேவை.
ஒவ்வொரு மொழிக்கும் சில தனித்தன்மைகள் உண்டு, அது அனைத்தையும் பிற மொழிகளில் மொழி பெயர்த்துவிட முடியாது. உதாரணமாக , தமிழில் 'மனம் குளிர வரவேற்கிறோம்' என்ற சொற்றொடரை ஆங்கிலத்தில் 'Warm Welcome' என்று மொழிபெயர்க்கும்போது அதன் பொருளே மாறுபட்டு விடும்.

சமூக செயற்பாட்டாளர் முகிலன் ரயிலில் ஏறினாரா?

.தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சூழலியல் போராளியுமான முகிலனை கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் காணவில்லை.


இது தொடர்பாக ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் காணாமல் போனதற்கான காரணம் குறித்த மர்மம் நீடிக்கிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த கலவரம், துப்பாக்கிச் சூடு ஆகியவற்றுக்கு தென்மண்டல ஐ.ஜி., டி.ஐ.ஜி. ஆகியோர் காரணம் என்று கூறி, அதற்கான ஆதாரமாக'கொளுத்தியது யார்? ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள்' என்ற தலைப்பில் வீடியோ படம் ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமையன்று முகிலன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டார்.

சமூக செயற்பாட்டாளர் முகிலன்படத்தின் காப்புரிமைFACEBOOK/MUGILAN SWAMIYATHAL

யாழ்ப்பாணத்தில் முருகபூபதியின் நூல்கள் அறிமுக நிகழ்வு

.


படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான அவுஸ்திரேலியாவில் வதியும் லெ. முருகபூபதி எழுதிய சொல்லவேண்டிய கதைகள் மற்றும் சொல்லத்தவறிய கதைகள் ஆகிய இரண்டு நூல்களின் அறிமுக அரங்கு எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் – நல்லூரில் நாவலர் மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு நடைபெறும்.

சொல்லவேண்டிய கதைகள் - யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி கலை இலக்கிய மாத இதழின் வெளியீடாகும்.
யாழ்ப்பாணம் காலைக்கதிர் வார இதழ் உட்பட பல இணைய இதழ்களிலும்  வெளியான  சொல்லத்தவறிய கதைகள் கிளிநொச்சி மகிழ் பதிப்பக வௌியீடாகும்.
இந்நிகழ்வில் எழுத்தாளர்கள்  திரு. கருணாகரன், திருமதி கோகிலா மகேந்திரன், காலைக்கதிர் ஆசிரியர் திரு. வித்தியாதரன்  ஆகியோர் உரையாற்றுவர்.

தமிழ் இலக்கிய கலை மன்றம் – திருக்குறள் மனனப் போட்டிகள் – 2019



இப்போட்டிகள் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் மாலை 2.15 மணியிலிருந்து நடைபெறவுள்ளன. போட்டிக்கான பரிசுகள் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்ற பிரிவுகளின் கீழ் வழங்கப்படவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பரிசு பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முறை கையாளப்படுகிறது.
போட்டிகளுக்கான விண்ணப்பப்படிவம்
விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து 1  MARCH 2019 க்கு முன்பு கிடைக்கக்கூடியதாக tikmkural@gmail.com முகவரிக்கு அனுப்பிவைக்கவும். ஒருவர் அந்தந்த வயதுக்கேற்ற போட்டிகளில் பங்கு பெறலாம். ஒரு நபருக்கு திருக்குறள் போட்டிக்கென நுழைவுக்கட்டணமாக $5, போட்டி நடைபெறும் தினத்தில் பெறப்படுகிறது.
போட்டிக்கான விதிமுறைகள், குறள்கள் முதலிய விவரங்களை விண்ணப்படிவத்துடன் பெற்றுக்கொள்ளலாம்.


பேரன்பு - சினிமா விமர்சனம்

.

'கற்றது தமிழ்' ராம் இயக்கத்தில், மம்முட்டி கதாநாயகனாக நடித்து வெளிவரும் பேரன்பு திரைப்படம், இயற்கையின் பல குணங்களை விவரிக்கும் தனித்தனி அத்தியாயங்களின் வழியாக கதை சொல்லும் பாணியைக் கடைபிடிக்கிறது. நாம் வாழும் வாழ்க்கையின் உன்னதத்தைப் பற்றிப் பேசுகிற படம்.

திரைப்படம்பேரன்பு
நடிகர்கள்மம்மூட்டி, அஞ்சலி, அஞ்சலி அமீர், சாதனா


நீங்க எவ்வளவு நல்ல ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்கனு நீங்க புரிஞ்சுக்கறதுக்காக என் வாழ்க்கையில நடந்த சில சம்பவங்களத் தேர்ந்தெடுத்து இந்தக் கதைய நான் எழுதறேன்' என்கிற அமுதவனின் (மம்மூட்டி) குரலுடன் தொடங்கும் படம், இயற்கையை பல அத்தியாயங்களாக பிரித்து பேரன்புமிக்க ஒரு வாழ்வின் தரிசனத்தை பார்வையாளர்களுக்கு தருகிறது.
உலகமயமாக்கல் எப்படி தனி மனிதர்களின் வாழ்வில் தாக்கம் செலுத்துகிறது என்று தனது முந்தைய மூன்று படங்கள் மூலம் பேசிய இயக்குநர் ராம், இந்த திரைப்படத்தில் இயற்கையின் முரண் குறித்து கேள்வி எழுப்புகிறார்.
இயற்கை ஒவ்வொருவரையும் விதவிதமாய் படைத்திருக்கிறது. ஆனால் சமமாய் பாவிக்கிறது. ஏன் இந்த முரண்? என்ற கேள்வியே பேரன்பு.

'ஒரு குருவி, ஒரு குதிரை, ஒரு வீடு, கொஞ்சம் நெயில்பாலிஷ்'

இயற்கை இரக்கமற்றது, இயற்கை அதிசயமானது , இயற்கை மகத்துவமானது, இயற்கை அழகானது, இயற்கை கொடூரமானது, இயற்கை கருணையானது, இயற்கை பேரன்பானது என இயற்கையின் பல்வேறு குணங்கள் ஊடாக விரிகிறது இந்த திரைப்படம்.

கவிஞர் கண்ணதாசன் விழா 02 03 2019

.


புலவர்கள் மட்டுமே இரசித்து வந்த தமிழை எம்மைப் போன்றவர்களும் இரசிக்க
வைத்தவர் கவியரசு கண்ணதாசன்.

அந்த அற்புதக் கவிஞருக்கொரு விழா எடுக்கின்றோம்.

விபரம் இத்துடன் இணைத்துள்ளேன்.

நீங்கள் வந்து தமிழுக்குச் சிறப்புச் சேர்க்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.

தொடர்புகளுக்கு த. நந்திவர்மன் 0434 314 240.

நோன்பு / விரதம் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

.


விரதம் / நோன்பு என்பதை மேலோட்டமாகப் பார்க்குமிடத்து உணவை உண்ணாது விடுவது. இத்தகைய உண்ணாநோன்பைப் பல மதத்தினரும் கைக்கொள்ளுகிறார்கள். மதங்கள் போதிப்பதை மத அனுஷ்டானங்களாக அம் மதத்தைச் சார்ந்தவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள். மதங்கள் வேறுபட்ட தெய்வங்களை வழிபட்ட போதும்; மக்களின் மேன்மைக்கான வழிமுறைகளைக் காட்டி நிற்பதே மதம் ஆகும்.

உண்ணா நோன்பு எமக்கு உணர்த்துவனவோ பல. நோன்பு இருக்கும் போது பசி, தாகம் போன்ற உனர்வுகளை நாம் அந் நேரம் கட்டுப்படுத்துகிறோம். இவ்வாறு பசியுணர்வை அனுபவித்தால் தான் எமக்குப் பசி என்றால் என்ன என்பது புரியும். நாமே பசியின் இயல்பை அறியும் போது அதன் தாக்கம் எத்தகையது என்பதை அனுபவித்து உணர்கிறோம். இவ்வாறு உணர வைப்பதால் பசிக்கொடுமையால் வாழுபவரின் துன்பத்தை நாமும் உணருகிறோம் அல்லவா? அதன் பின்பும் பசியால் வாடுபவனுக்கு உணவளிக்காமல் இருப்போமா? இதை உணர்த்துவதே மதங்களின் உயர்ந்த நோக்கம்.

அதை விடுத்து, நாம் உண்னாமல் பட்டினி கிடந்தால் ஆண்டவன் அள்ளிக் கொடுப்பான் என எண்னுவது எத்தனை மடமை! இதையே யுகக்கவி பாரதியும் ‘தனி ஒருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினையே அழித்திடுவோம்’ என ஆவேசமாக ஆர்ப்பரித்தான். உணவில்லாதவர் படும் துன்பத்தை மத அனுஷ்டானமாக நாசுக்காக நம்மை உணர வைப்பதல்லவா மதம்! இதுதான் மதம் மனிதனை மனிதனாக்கும் யுக்தியோ?

விரதம் அல்லது உண்ணா நோன்பு எம்மை பசி என்றால் என்ன என்பதை மட்டும் உணர வைக்கிறதா? இல்லை, எமது உடலையும் மனதையும் திடப்படுத்துவது இந்த நோன்பு. அதன் மூலம் எமது சிந்தையும் உடலும் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இதனால் நாம் திடசித்தம் பெறுகிறோம்.

சினிமா விமர்சனம் ஆண் தேவதை

.

மிடில் கிளாஸ் குடும்பங்களே... ஈ.எம்.ஐ.வாழ்க்கையை ஈஸி ஆக்குகிறதா?! - `ஆண் தேவதை' விமர்சனம்கணவன் மனைவிக்கு இடையே வளரும் ஈகோ எனும் சாத்தானை வென்று, கொன்று குடும்பம் போற்றுகிறான், இந்த `ஆண் தேவதை'.

மிடில் கிளாஸ் குடும்பங்களே... ஈ.எம்.ஐ.வாழ்க்கையை ஈஸி ஆக்குகிறதா?! - `ஆண் தேவதை' விமர்சனம்
இருப்பதை வைத்து வசதியாய் வாழும் மெடிக்கல் ரெப் இளங்கோ (சமுத்திரக்கனி). வசதியாக வாழவேண்டுமென இருப்பதையெல்லாம் புதுப்பிக்கும் ஐ.டி ஊழியர் ஜெஸ்ஸி (ரம்யா பாண்டியன்). இருவரும் காதலித்து, திருமணம் செய்து, இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்து, லோயர் மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்கிறார்கள். `மகிழ்ச்சியாய் வாழ்வதற்குப் பணம் தேவையில்லை, நல்ல மனம் இருந்தால் போதும்' என்ற கொள்கையுடையவர், சமுத்திரக்கனி. ஒரு கட்டத்தில் வேலை வேலையென ஓடி, குழந்தைகளைக் கவனிக்க மறப்பதை உணர்பவருக்கு, `வாழ்வதற்காக சம்பாதிக்கிறோமா அல்லது சம்பாதிப்பதற்காக வாழ்கிறோமா?' என்ற கேள்வி எழுகிறது. வேலையை விட்டுவிட்டு ஹவுஸ் ஹஸ்பண்டாக குழந்தைகளையும் மனைவியையும் கவனித்துக்கொள்கிறார். அத்தியாவசியம் போதுமென நினைக்கும் கணவன்; ஆடம்பர வாழ்க்கைக்கு நகர நினைக்கும் மனைவி... இருவருக்குமிடையேயான ஈகோ, சண்டை, சச்சரவுகளே மீதிக்கதை. 
ஆண் தேவதை
பெரும்பாலான படங்களைப் போலவே பக்கா பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி. அட்வைஸ் சொல்கிறார், அரசியல் பேசுகிறார், நடிக்கிறார், அவ்வப்போது நகைச்சுவைகூட செய்கிறார். நாயகிக்குப் பிரமாதமான கதாபாத்திரம். நடிக்க அத்தனை சூழல்கள் இருக்கிறது படத்தில்... அதை முழுமையாகப் பயன்படுத்தத் தவறியிருக்கிறார். இளவரசு, காளி வெங்கட், அறந்தாங்கி நிஷா, வினோதினி போன்றவர்களை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம். ஓரிரு காட்சிகளில் வருகிறார்கள், போகிறார்கள் அவ்வளவே. கொடுத்த கேரக்டரைக் கச்சிதமாகச் செய்துமுடித்து அனுதாபம் அள்ளுகிறார், சுஜா வரூணி. அதேபோல், ராதாரவியும் திடீரென வருகிறார். அவர் அணிந்திருக்கும் சட்டையும் அதிலிருக்கும் பாக்கெட்டும் தமிழ் சினிமாவுக்குப் புதுசு. குருவிக்குப் போடும் தினையில் ஆரம்பித்து, ஏழை எளியோருக்குக் கொடுக்கும் பணம் வரை... உபயம்: இந்தச் சட்டை பாக்கெட்தான்! `விக்ரம் வேதா' சேட்டாதான் படத்தின் வில்லன். கடனைத் திருப்பி வாங்க அவர் செய்யும் யுக்தி, தமிழ்நாட்டுக்கு இல்லை, இந்தியாவுக்கு இல்லை, உலகத்துக்கே புதுசு. ச்சே... அப்படி மிரட்டி, கடன் வசூலிக்கும் வில்லனை யாரும் பார்த்ததே கிடையாதுப்பா!
ஆண் தேவதை
அடுத்து இதுதான் நடக்கப்போகிறது எனப் படம் ஆரம்பித்த இருபது நிமிடங்களிலேயே கண்டுபிடித்து கதை சொல்லிவிடலாம். முதல்பாதிதான் இந்தத் தேவதையின் பலவீனம். இரண்டாம் பாதி ஓரளவுக்குக் காப்பாற்றி உயரே பறக்க வைக்கிறது. `மகிழ்ச்சியா இருக்கியா, மகிழ்ச்சியா இருக்கியா...' எனப் படம் முழுவதும் குடும்பத்தார்கள் அனைவரும் ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், பின் பாதி ஏற்படுத்தப்போகும் சோகத்தையும், தாக்கத்தையும் முன் பாதி கொடுக்க மறுத்திருக்கிறது. தவிர, வலிந்து திணிக்கப்பட்ட பல காட்சிகள் படத்தில் இருக்கின்றன. `இதையெல்லாம் இப்படிச் சொன்னாதான் புரியுமா?' என்ற கேள்வியும் சில காட்சிகளுக்கு எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை.  
படத்தில் அழுத்தமாகச் சொல்ல நினைத்த விஷயம், கடன் வாங்குவதும், அதற்குப் பலியாவதும்தான். அதை சரியாகச் சொல்லியிருக்கிறார், இயக்குநர் தாமிரா. வசதிக்காக கடன் வாங்கியாவது புது வீடு, புது கார் என தனது வாழ்க்கைத் தரத்தை சமூகத்துக்காக உயர்த்திக்கொள்ளத் துடிக்கும் பலருக்கும் இந்தப் படம் எச்சரிக்கை. திரைக்கதையில் இந்தப் பகுதிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை குடும்ப விஷயங்களுக்கும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இன்னும் எத்தனை படங்களில்தான் ஐ.டி நிறுவனம் என்றாலே பார்டி, பப் என்று மட்டும் காட்டப்போகிறார்களோ...! கார்ப்பரேட் அரசியல், குழந்தை வளர்ப்பு, நல்லது கெட்டது என அனைத்தும் பேசும் சமுத்திரக்கனி, அப்படியொரு விடுதியையா தங்குவதற்குத் தேர்ந்தெடுப்பார். அப்படியே இருந்தாலும், குடித்து எறியப்பட்டிருக்கும் காலி பாட்டில்களைப் பார்த்து, `ஏழ்மை இருக்கும் இடத்தில்தான் கடவுள் இருப்பார்' எனச் சொல்வதெல்லாம் ஓவர்டோஸ்.  
ஆண் தேவதை விமர்சனம்
ஜிப்ரானின் பாடல்கள் பெரிதாய் ஈர்க்கவில்லை. பின்னணி இசையும் அப்படியே. படத்தின் தேவைக்கென உழைத்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். படத்தின் கதைக்கேற்ப எடிட் செய்து கொடுத்திருக்கிறார், படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன். இதைப் பலரும் `பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்' படத்தின் தழுவல் என்றார்கள். அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் கடுகளவுகூட சம்பந்தமில்லை.  
சொல்லவந்த கருத்தை தெளிவாகக் கடத்திவிட்டாலும், புதுமையும் சுவாரஸ்யமும் இல்லாத திரைக்கதையால், இந்த `ஆண் தேவதை'யைக் காப்பாற்ற முடியவில்லை.