வேதனையும் சோதனையும் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா - மெல்பேண் .... அவுஸ்திரேலியா


            வேதனைக்கும் சோதனைக்கும் 
                   காரணந்தான் என்னவென்று 
             வாதமிட்டு வாதமிட்டு 
                    வகையறியா நானிருந்தேன் 
            தலையெழுத்தாய் இருக்குமென்று
                   மனமெனக்கு சொல்லியது
            தலையெழுத்து மாற்றமுற
                  தண்டனிட்டேன் இறைவனிடம் ! 

              வேதனையில்  சோதனையில் 
                    சிக்குண்ட  மணிவாசகர் 
             காதலுடன் இறைவனது 
                    கழலினையே இறுகணைத்தார் 
              வேதனையால் சோதனையால்
                        வெகுண்டெழுந்து போகாமல் 
               நாதனது அருட்டிறத்தை
                        நயமுடனே எடுத்துரைத்தார்  ! 

               தலையெழுத்தால் தாக்குண்ட 
                      மார்க்கண்டு  எனுமடியார் 
                நிலைதளம்பா உறுதியுடன்
                        நிமலனையே சரண்புகுந்தார்
                வேதனையும் சோதனையும் 
                          விலகியங்கே ஓடிடவே 
                நாதனால் இளமையுடன்
                        வாழ்ந்தனரே  அடியவரும் ! 

தமிழர்களிற்கும் முஸ்லீம்களிற்கும் கோத்தாபய ஒரு கொடுங்கனவாக காணப்படுவார்.


டெய்லர் டிப்போர்ட
தமிழில் ரஜீபன்
19/10/2019 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தங்களிற்கான வெற்றியை சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகள் உறுதி செய்யும் என ஜிஎல்பீரிஸ் அவ்வளவு நம்பிக்கையுடனும்  உறுதியுடனும் ஏன் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறித்து நான் குழப்பத்தில் உள்ளேன்.
சிறுபான்மை சமூகத்தினரிற்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் கடந்த நான்கரை வருடங்களில் நிறைவேற்ற தவறியுள்ளது என்பது உண்மை தான்.சிறுபான்மை சமூகத்தவர்களின் துயரங்களிற்கு இந்த அரசாங்கம் போதியளவிற்கு தீர்வை காணவில்லை.
ஆனால் பதவிக்கு வந்தால் கோத்தாபய அரசாங்கம் எப்படி சிறுபான்மையினத்தவர்களை நியாயமாக நடத்தும் என்பது விளங்காத விடயமாக உள்ளது.
மாறாக மற்றுமொரு ராஜபக்ச அரசாங்கம் தேசம் பெற்றுக்கொண்ட பலவீனமான ஜனநாயகத்தின் பலாபலன்களை அழித்துவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன.

சட்ட நூலுக்கு தமிழ்ப்பேராய விருதுகலாநிதி   சந்திரிகா சுப்ரமணியன் எழுதிய “ இணையக் குற்றங்களும்இணையவெளிச் சட்டங்களும்”  சட்ட  நூலுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் 2019  ஆம் ஆண்டுக்கான தமிழ்ப்பேராய விருதுகளில் பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது மற்றும் அப்துல்கலாம் தொழில்நுட்ப விருது வழங்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப நூல் வகையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான இந்த விருது  ஒன்றரை லட்ச ரூபாய் பரிசும் , பட்டயமும்  உள்ளடங்கியது.
இவ் விருதினை கலாநிதி   சந்திரிகா சுப்ரமணியனுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் வழங்கிட பட்டயத்தை கவிப்பேரரசர் பத்ம பூஷன் வைரமுத்து வழங்கி கௌரவித்தார்.  
13 விடயங்களை அடிப்படையாகக்கொண்டு தமிழ் கட்சிகளுடன் பேச நான் தயாரில்லை : கோத்தாபய ராஜபக்ஷ விசேட செவ்வி


19/10/2019வடக்கில் தமிழ் கட்சிகள் தயாரித்துள்ள 13 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் அந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன். அதில் எந்த பயனும் இல்லை. நான் யதார்த்தத்தையே பேசுவேன். இந்த 13 விடயங்களை அடிப்படையாக கொண்டு அவர்களை சந்திப்பதற்கு கூட தயார் இல்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்று கேட்டால் அதற்கு பதிலளிக்க தயார். அப்படியாயின் தமிழ்க் கட்சிகளை சந்தித்து பேசலாம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஆனால் 13 விடயங்கள் தொடர்பில் பேசமாட்டேன். இதனை தெளிவாக எழுதுங்கள். இந்த ஆவணத்தில் உள்ள விடயங்களை பேசுவதற்கு தயார் இல்லை. ஆனால் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு என்ன? என்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்டால் அதற்கு நான் பதிலளிக்க தயாராக இருக்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அச் செவ்வியின் முழு விபரம் வருமாறு,

தீபாவளி விழாவில் வில்லுப் பாட்டு - (கன்பரா யோகன்)

நேற்று(19-10-2019) கன்பராத் தமிழ் சங்கம்(CTA) தனது வருடாந்த தீபாவளி விழாவை குயீன்பியன் பைசென்டினரி மண்டபத்தில் கொண்டாடியது.  பல்வேறு நடன, இசை, வாத்திய  இசை நிகழ்வுகளுக்கிடையே ஒரு வில்லுப்பாட்டு நிகழ்வும் அரங்கேறியது. இதைப் பற்றிய குறிப்புகளையே இங்கு எழுத எண்ணினேன்.

‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்…?’ என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த வில்லுப்பாட்டு கன்பராவுக்கு 25 வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்த ஒரு தமிழ் குடும்பத்தைப்  பற்றிய கதையை  25 நிமிடங்களில் சொல்வதற்கென்று தயாரிக்கப்பட்டிருந்ததெனினும்  இது பார்வையாளர்களிடம் எப்படி சென்றடைந்தது என்பதை அறிந்து கொண்டால் மட்டுமே இதன் தாக்கத்தைப் பற்றி கூறமுடியும். 

முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ இலங்கையர்கள் எவ்வாறு பாரதியைக் கொண்டாடினார்கள் ?

( கொழும்பு தமிழ்ச்சங்கம் வினோதன் மண்டபத்தில் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் நிகழ்த்திய மதிப்பீட்டுரை)  
பாரதிதான்    முதன்முதலில்   சாதாரண     மக்களின்   சமூக வாழ்வை கவிதையில் பாடு பொருளாக்கியவன்.    அதற்கு முன்னர் கவிதை நிலப்பிரபுத்துவ    வாழ்க்கையை உள்ளடக்கமாகக்   கொண்டிருந்தது.  சமயச் சார்புடையதாக இருந்தது.
பாரதிதான் அரசியல் சமூக வாழ்வைக் கவிதையில் கொண்டுவந்தவன்.   “ எளிய பதங்கள்,    எளிய நடை,     எளிதில் அறிந்து     கொள்ளக்கூடிய   சந்தம்,   பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு    இவற்றினையுடைய   காவியம்    ஒன்று     தற்காலத்திலே செய்து தருவோன்    நம் தாய் மொழிக்கு புதிய உயிர் தருவோன் ஆகிறான் "   என்று கூறியவன் பாரதி.
எனவே இலக்கியத்தில் நவீனத்தை புகுத்தியவன் பாரதி. அதாவது நவீனத்தை பாடு பொருளிலும் எடுத்துரைப்பு முறையிலும் புகுத்தி புதுமை செய்தவன் பாரதி.  இலக்கியத்தில்   திருப்பு முனையை ஏற்படுத்தியவன் பாரதி.   அவன் காட்டிய வழியில் புதிய யுகத்திற்குள்   படைப்பாளிகள்   புகுந்தனர்.
இந்தப்பின்னணிகளுடன் முருகபூபதி  எழுதியிருக்கும்   புதிய நூல்  இலங்கையில் பாரதி.   பாரதி ஏற்படுத்திய தாக்கம் எத்தகையது? பாரதியை இலங்கையர்களாகிய நாம் எவ்வாறு கொண்டாடுகிறோம் என்பதை  இந்நூல்  விரிவாகப் பேசுகிறது.
பாரதி  பற்றிய பல நூல்கள் ஈழத்திலே வெளிவந்துள்ளன.                                 ந. இரவீந்திரன் எழுதிய பாரதியின் மெய்ஞ்ஞானம், இளங்கீரனின் பாரதிகண்ட சமுதாயம்,  அமிர்தநாதர் தொகுத்த பாரதி தரிசனம், பேராசிரியர் க. அருணாசலம் எழுதிய பாரதியார் சிந்தனைகள், எஸ். எம். ஹனிபா எழுதிய மகாகவி பாரதி, பேராசிரியர் கைலாசபதி எழுதிய இரு மகாகவிகள்,  பேராசிரியர் தில்லைநாதன் எழுதிய வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை, க.த. ஞானப்பிரகாசம் எழுதிய பாரதி பிள்ளைத்தமிழ், சொக்கன் எழுதிய பாரதியின் சக்திப் பாடல்கள்,  பேராசிரியை  சித்திரலேகா எழுதிய பாரதியின் பெண்விடுதலை,  அகளங்கள் எழுதிய பாரதியின் பாஞ்சாலி சபதம்,  மனோன்மணி சண்முகதாஸ் எழுதிய பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப்பாட்டு, தாழை செல்வநாயகம் எழுதிய ஈழம் வருகிறான் பாரதி  முதலான பல நூல்கள் இலங்கையில்  ஏற்கனவே வந்துள்ளன.
நான் மேலே குறிப்பிட்ட நூல்கள் யாவும் பாரதியின் படைப்புகளை வெவ்வேறு கோணங்களில் அணுகியிருக்கின்றன. மேற்குறிப்பிட்ட நூல்களிலிருந்து முருகபூபதியின் இந்த நூல் எவ்வாறு வேறுபடுகிறது என்று பார்ப்போமானால், பாரதி இலங்கையில் எவ்வாறு முக்கியப்படுத்தப்பட்டான்?,    இலங்கையர்கள் எவ்வாறு பாரதியைக்    கொண்டாடினார்கள்?   பாரதியின் புகழ்பரப்புவதில் எவ்வாறு பங்களிப்புச்   செய்தார்கள், பாரதியை இளந்தலை முறையினருக்கு    எவ்வாறு கொண்டு சென்றார்கள் என்பது   பற்றி இந்த   நூல்    ஆராய்கிறது.

கொழும்பில் நடைபெற்ற முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ ஆய்வு நூல் வெளியீட்டரங்கு மறைந்த பேராசிரியர் பொன். பூலோகசிங்கம், உபாலி லீலாரத்ன, ஓவியர் மொறாயஸ் ஆகியோர் நினைவுகூரப்பட்டனர்
படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ( ஆய்வு ) நூலின் வெளியீட்டு அரங்கு கொழும்பு தமிழ்ச்சங்கம் விநோதன் மண்டபத்தில்  கடந்த  05 ஆம் திகதி (05-10-2019) சனிக்கிழமை மாலை  நடைபெற்றது.
மகாகவி பாரதியின் படைப்பாளுமை பண்புகள் இலங்கையில் ஏற்படுத்திய  தாக்கம் குறித்து ஆய்வுசெய்யப்பட்ட  இந்நூலின் உள்ளடக்கம்,   யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் காலைக்கதிர் இதழில் 40 வாரங்கள் தொடராக வெளியானதுடன் அவுஸ்திரேலியா தமிழ் முரசு இணைய இதழிலும் மறுபிரசுரமானது.
இலங்கையில் பாரதி நூல் வெளியீட்டரங்கு செல்வி பாமினி செல்லத்துரையின் வரவேற்புரையுடன்,  ஈழத்தின் மூத்த எழுத்தாளர் திரு. தெளிவத்தைஜோசப் தலைமையில் ஆரம்பமாகியது.
சிட்னியில் அண்மையில் மறைந்த பேராசிரியர்  பொன். பூலோகசிங்கம்,  கொழும்பில் மறைந்த,   தமிழ் – சிங்கள இலக்கியப் பரிவர்த்தனைக்கு பாலமாக விளங்கிய மொழிபெயர்ப்பாளர் உபாலி லீலாரத்ன, மற்றும் பிரபல ஓவியரும் முருகபூபதியின் இலங்கையில் பாரதி நூலுக்கு முகப்பு ஓவியம் வரைந்தவருமான மொறாயஸ் ஆகியோரை நினைவுகூர்ந்தும்   கடந்த ஏப்ரில் உயிர்த்த ஞாயிறில் கொல்லப்பட்ட மற்றும் போர் அநர்த்தங்களில் கொல்லப்பட்ட  இன்னுயிர்களின் நினைவாகவும்  இந்நிகழ்ச்சியில் மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது.
 யாழ். காலைக்கதிர் ஆசிரியர் திரு. வித்தியாதரன் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார்.

இலங்கைச் செய்திகள்


பலாலியில்  வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதலாவது இந்திய விமானம்

தமிழ் கட்சிகளின் இணக்கப்பாடு குறித்து சுமந்திரன், சுரேஷ் தெரிவிப்பது என்ன ?

5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்

இலங்கை – இந்­திய உறவு வானத்தை தொட்­டு­விட்­டது - இந்­திய   உயர்ஸ்­தா­னிகர்

பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவின் மரண அச்சுறுத்தல் விவகாரம்- இன்று மீண்டும் நீதிமன்றில்

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம் 

யாழ். விமானநிலைய பெயர்ப்பலகை விவகாரம்: இனவாதத்தை தூண்டும் வகையிலான செய்திகள் கண்டனத்திற்குரியவை - ரஞ்சன் 


பலாலியில்  வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதலாவது இந்திய விமானம்

15/10/2019 யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்தில் இந்திய தொழிநுட்ப அதிகாரிகள் குழுவுடன் இந்தியாவின் எயா் இந்தியா அலைன்ஸ் விமானம் இன்று பலாலியில் தரையிறங்கியது. 

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்நன்றி வீரகேசரிஉலகச் செய்திகள்


கல்கி ஆச்சிரமத்தில் வரி ஏய்ப்பு ; பல கோடி பணம், தங்கம் பறிமுதல்

ராஜீவ்காந்தி கொலை- ஏழு தமிழர்களை விடுதலை செய்யப்போவதில்லை- தமிழக ஆளுநர் தீர்மானம்?

பிறிக்ஸிட் விவ­காரம் ; முக்­கி­யத்­துவம் மிக்க உச்­சி­மா­நாட்டு ; உடன்­ப­டிக்­கையை எட்­டு­வ­தற்கு பேச்சு

பாகிஸ்தானில் முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்ற இங்கிலாந்து இளவரசர்

ஜப்பானை புரட்டி போட்ட ஹகிபிஸ் : பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு

சஹ்ரானால் ஈர்க்கப்பட்டவர்கள் உட்பட ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 127 பேர் இந்தியாவில் கைது

துருக்கியின் விமானதளத்தில் அமெரிக்காவின் அணுக்குண்டுகள்- சர்வதேச ஊடகங்கள்


கல்கி ஆச்சிரமத்தில் வரி ஏய்ப்பு ; பல கோடி பணம், தங்கம் பறிமுதல்

18/10/2019 இந்தியாவிலுள்ள கல்கி ஆச்சிரமத்திற்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில், அமெரிக்க டொலர்கள் உட்பட இந்திய ரூபா மதிப்பில் 93 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புகழ் பெற்ற கல்கி ஆச்சிரமம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதைய பாளையத்தில் அமைந்துள்ளது.
இதேவேளை, தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆச்சிரமத்தின் கிளைகள் உள்ளன.
கல்கி ஆச்சிரமங்களுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அங்கு நடக்கும் சிறப்புப் பூஜைகளிலும் பங்கேற்கிறார்கள்.

பொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்தரதாஸ் பகுதி 16

நம்நாடு
தமிழ்த் திரையுலகில் நடிகராக அடியெடுத்து வைத்து, நட்சத்திரநடிகராகி அரசியலில் பிரவேசித்து பின்னர் தமிழக முதல்வராகவும் ஆகி இன்றும் மக்கள் மனதில் மங்காப்புகழுடன் வீற்றிருப்பவர் மக்கள் திலகம் எம். ஜி. ஆர்.  இவர் அரசியல்வாதியாக வேடமேற்று நடித்தபடம் தான் நம்நாடு.

பிரபல படநிறுவனமான விஜயா புரடக்ஷன்ஸ் அதிபர்களான நாகி ரெட்டி, சக்கரபாணி இருவரும் இணைந்து தெலுங்கில் என்டிராமராவ் நடித்து வெற்றி பெற்ற படத்தை தமிழில் நம்நாடு என்ற பெயரில் வண்ணப்படமாக தயாரித்தார்கள்.  ஊழல் அரசியல்வாதிகளின் முகமூடியை கிழித்து அவர்களின் அக்கிரமங்களை ஒழித்துக் கட்டும் துரை என்ற பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். கதாபாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாக எம்.ஜி.ஆர். காட்சியளித்தார்.  அலுவலக ஊழியராகவும் அரசியல்வாதியாகவும் செல்வந்தராகவும் மூன்று வித பாத்திரங்கள் ஏற்றிருந்தார் எம்.ஜி.ஆர்.
நகரசபைத் தலைவராகவும் கட்டட காண்ட்ரக்டராகவும் வியாபாரியாகவும், மருத்துவராகவும் இருக்கும் சில பெரியபுள்ளிகள் எப்பேற்பட்ட அயோக்கியர்களாக நடமாடுகிறார்கள் என்பதை படம் தெளிவுப்படுத்தியது.

எம்.ஜி.ஆரின் படங்களில் வில்லனாக வழக்கமாக வரும் நடிகர்களுக்கு பதிலாக இதில் எஸ்.வி.ரங்கராவ் வில்லனாக நடித்திருந்தார்.  படத்திற்கு தனிச்சிறப்பு சேர்ப்பது போல் அவரின் நடிப்பும் மேகஅப்பும் அமைந்தது.  அலட்டல் இல்லாமல் மிக இயல்பாக தன் நடிப்புத் திறமையைக் காட்டியிருந்தார் ரங்கராவ். இவருடன் கே.ஏ.தங்கவேலு,  எஸ்.ஏ.அசோகன், எஸ்.வி.ரமதாஸ், என்னத்தே கன்னையா ஆகியோரும் பசுத்தோல் போர்த்த புலிகளாக படத்தில் வருகின்றனர்.
இவர்களை அதிர்த்து அரசியலில் குதித்து எம்.ஜி.ஆர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுகிறார்.  ஆனால் ஊழல் அரசியலுக்கு ஒத்துழைக்க மறுத்து பதவியை இழக்கிறார்.  

எம்.ஜி.ஆரின் இந்த கதாபாத்திரம் ரசிகர்களை மிக கவர்ந்து பிற்காலத்தில் அவர் அரசியலில் உச்சம் தொட மிக உதவியது.

படத்தில் இளநீர் விற்பவராக வருபவர் ஜெயலலிதா.  எம்.ஜி.ஆருக்கு பணிவிடை செய்து அவரின் மனதிலும் இடம பிடிக்கிறார். எம்.ஜி.ஆரின் அண்ணனாக டி.கே.பகவதியும், அண்ணியாக பண்டரிபாயும் நடிக்கிறார்கள்.  நாகேஷ் ஜோடியில்லாமல் தோன்றி நகைச்சுவையை வழங்குகிறார்.

படத்தின் வசனங்களை சொர்ணம் எழுதியிருந்தார்.  'தேர்தலில் பணக்காரரிடம் பணத்தை வாங்கவேண்டும் ஏழைகளிடம் வாக்குகளை வாங்கவேண்டும் பதவிக்கு வந்த பின் இருவரையும் மறந்து விடவேண்டும் விடக்கூடாத இடத்தை நாம்' விட்டு விட்டோம் வரக் கூடாத இடத்திற்கு அவன் வந்து விட்டான் போன்ற அவரின் பல வசனங்கள் இன்றைய அரசியலுக்கும் பொருந்துகிறது.
படத்தில் அனைத்துப் பாடல்களையும் வாலி இயற்றினார். நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, வாங்கையா வாத்தியாரையா, நான் ஏழு வயதிலே இளநீ விற்றவ, ஆடைமுழுதும் நனைய நனைய ஆகிய பாடல்கள் இனிமையாக அமைந்தன. நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் பாடலும் இசையும் அதற்காகப் போடப் பட்ட அரங்கமும் பிரம்மாண்டமாக காட்சியளித்தன.  மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் குறைந்த வாத்தியங்களுடனும், ஏராளமான வாத்தியங்களுடனும் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பல படங்களுக்கு படத் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் டைரக்டரான ஜம்பு படத்தை டைரக்ட் செய்திருந்தார்.

1969ம் ஆண்டு தீபாவளிக்கு நம்நாடு திரையிடப்பபட்டது. வெற்றிப்படமானது. இந்த ஆண்டின் ஆரம்பத்திலும் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இலங்கையில் திரையிடப்பட்டு ரசிகர்களின் ஆதரவை தக்க வைத்துக் கொண்டது நம்நாடு!

O S Arun கர் நாடக இசை - பயிற்சிப் பட்டறை(22/10/2019), கர் நாடக இசை நிகழ்ச்சி(23/10/2019)

பேர்த் பாலா முருகன் கோவில் தீபாவளி திருநாள் 27/10/2019


கண்டிச் சீமை நூல் வெளியீடு 16/11/2019

தமிழ் சினிமா - காப்பான் திரை விமர்சனம்

சூர்யா கடந்த சில வருடங்களாகவே ஒரு பெரிய வெற்றி கொடுக்க போராடி வருகின்றார். அந்த வகையில் அவர் திரைப்பயணத்தில் மிகப்பெரும் வெற்றியை கொடுத்த கே.வி.ஆனந்துடன் கைக்கோர்த்து காப்பானில் களம் இறங்க, அவரும், ரசிகர்களும் எதிர்ப்பார்த்த வெற்றி இதில் அமைந்ததா? பார்ப்போம்.   

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே நாட்டின் பிரதமர் மோகன்லாலை கொலை செய்ய ஒரு திட்டம் நடக்கின்றது. அதை தொடர்ந்து சூர்யா சில நாசவேலைகளை செய்கிறார்.
என்ன என்று பார்த்தால் அவை அனைத்தும் சூர்யா மோகன்லாலை காப்பாற்ற செய்யும் வேலை, அவரும் ஒரு ரகசிய உளவாளி என தெரிய வருகிறது.
பிறகு பிரதமரின் பாதுகாப்பு பிரிவில் சூர்யா சேர, அதை தொடர்ந்து பிரதமரின் உயிருக்கு பலரும் குறி வைக்கின்றனர். அந்த குறியில் இருந்து சூர்யா மோகன்லாலை காப்பாற்றுகிறாரா? அந்த குறி யார் வைக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

சூர்யா வழக்கம் போல் ஒன் மேன் ஷோ தான், பிரதமரை காப்பாற்றும் ஆபிசர், துறுதுறுவென படம் முழுவதும் அவருடைய பார்வை போல் கதாபாத்திரமும் அமைந்துள்ளது. பைனலி சூர்யா இஸ் பேக்.
மோகன்லால் பிரதமராக நிகழ்கால பிரதமரை கண்முன் நிறுத்துகின்றார். என்ன தான் இந்தியா உணர்வு என்று பேசினாலும் பாகிஸ்தான் மக்களுக்காகவும் அவர் பேசும் காட்சி கைத்தட்டல் அல்லுகிறது.
ஆர்யா எப்போதும் போல் ஜாலி பாய் கதாபாத்திரம் என்றாலும் போமன் இரானியிடம் அவர் அடிக்கும் கவுண்டர் வசனங்கள் ரசிக்க வைக்கிறது. சாயிஷா போஷன் தான் ஏதோ பார்வையாளர்கள் திசை திருப்ப திணிக்கப்பட்டது போல் உள்ளது, அது பெரிதும் உதவவும் இல்லை.
வில்லன் நடிகராக வரும் வட இந்திய ஆள் துப்பாக்கி வித்யூ ஜமால் போல் மிரட்டுகின்றார். ஆனால், அதற்காக துப்பாக்கி போலவே பல காட்சிகள் இருப்பது தவிர்க்க முடியவில்லை.
கே வி ஆனந்த் படம் என்றாலே மீடியா, பயோ கெமிஸ்ட்ரி சார்ந்த விஷயங்களை அங்கங்கு நிரப்பியிருப்பார். அந்த வகையில் இதில் சிலிபிரா என்ற பூச்சி இனத்தை காட்டுவது பிரமிக்க வைக்கிறது, அது விவசாய நிலத்தை ஆகிரமிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் சூப்பர்.
ஆனால் அதே நேரத்தில் விவசாயிகளை காப்பாற்றுவதை விட, தமிழ் சினிமாவில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று தான் தோன்றுகின்றது, விவசாயி குறித்த வசனங்கள் அனைத்தும் கிளிஷேவ் தான்.
கே.வி.ஆனந்த் படத்தில் டுவிஸ்ட் இருந்துக்கொண்டே தான் இருக்கும். ஆனால் இதில் எல்லாமே நேரடியாக தெரிவதால் பெரிய டுவிஸ்ட் இல்லை, சில பல லாஜிக் குறைகள் இருந்தாலும் முடிந்த அளவிற்கு சரி செய்து நல்ல சவாரியாகவே கொண்டு சென்றுவிட்டார்.
ஆனால் அமித்ஷா சொன்ன ஒரே மொழி கொள்கையை கே.வி.ஆனந்த் தான் சரியாக கடைப்பிடித்துள்ளார். என்ன அவர் சொன்னது ஹிந்தி, இவர் காட்டியது தமிழ், காஷ்மீர் முதல் கண்ணியாகுமரி ஏன் பாகிஸ்தான் எம்பஸி ஆள் கூட தமிழ் தான் பேசுகிறார்.
படத்தின் ஒளிப்பதிவு லண்டன், காஷ்மீர் என பல பகுதிகளை படத்தில் காட்டி செம்ம கலர்புல்லாக படம் பிடித்துள்ளனர். ஹாரிஸ் பாடல் மட்டுமில்லை பின்னணி இசையிலும் ஏமாற்றிவிட்டார். என்ன தான் ஆச்சு சார்.

க்ளாப்ஸ்

சூர்யா தனி ஆளாக ரவுண்ட் கட்டி அடித்துள்ளார். மோகன்லால் பெரிய கதாப்பாத்திரம் இல்லை என்றாலும் டீசண்ட்.
படத்தின் ஸ்டெண்ட் காட்சிகள், குறிப்பாக ட்ரெயின் ஸ்டெண்ட் எடுத்த விதம்.
நம் நாடு என்றில்லாமல் பக்கத்து நாட்டிற்கும் அக்கறையாக பேசுவது போல் அமைந்த வசனங்கள்.

பல்ப்ஸ்

படம் போர் என்று பெரிதாக இல்லை என்றாலும், நீளத்தை குறைத்திருக்கலாம்.
பெரிய திருப்பங்கள் என்று ஏதுமில்லை.
மொத்தத்தில் காப்பான் யாருக்கு எப்படியோ சூர்யா ரசிகர்களின் இத்தனை நாள் காத்திருப்பிற்கு ஒரு சிறிய ட்ரீட்.  நன்றி CineUlagam