மயிலிறகு மனசு - ஷிஃபானா - படித்து சுவைத்த கவிதை

 .என்
வயதினையொத்தவர்களின்
அம்மாக்கள்
அவர்கள் காலத்தில்
பதினாறு பதினேழு
வயதுகளில்
தன் கனவுகளை
துறந்தவர்கள்
ஆனால்
துறவிகளைப்போலில்லை

அவர்களின்
அம்மாக்களின்
அறியாமையினாலும்
அப்பாக்களின்
பிடிவாதங்களினாலும்
தன் ஆசைகளை
துறந்தவர்கள்
அதனால்
துறவிகளைப்போலில்லை

வீட்டின்
எளிமைகளினாலும்
தன் மனதை
துறந்தவர்கள்
ஆதலால்
துறவிகளைப்போலில்லை

தனக்குப்பின்னால்
பிறந்த தம்பி தங்கைகளுக்கு
அக்காக்களும்
இன்னுமொரு
தாயென்பதால்
தன் இலட்சியங்களை
துறந்தவர்கள்
எனவே
துறவிகளைப்போலில்லை

"மல்லிகை" டொமினிக் ஜீவா அகவை 94 -எழுத்தாளர் மேமன் கவியுடன் - கானா பிரபா

 


இன்று (27.06.21) எங்கள் "மல்லிகை" டொமினிக் ஜீவாவுக்கு அகவை 94 .


அவர் நம்மோடு இல்லாத முதல் பிறந்த நாள் இது. ஒவ்வொரு ஆண்டும் ஜீவாவின் பிறந்த நாளில் அவரின் நட்பு சக வாசக வட்டத்தில் பிறந்த நாள் பகிர்வுகளை வாங்கி அவருக்குக் கொடுத்து மகிழும் எழுத்தாளர் மேமன் கவி இன்று காலை நினைப்பில் வந்தார்.

ஒரு குறுகிய சந்திப்பில் டொமினிக் ஜீவாவுக்காகத் தாம் செய்ய நினைப்பதைப் பற்றியும், அவரிச் சந்தித்த முதல் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்
எழுத்தாளர் மேமன் கவி
Youtube இணைப்பில்

இன்று ஜூன் 27 மல்லிகை ஜீவா பிறந்த தினம் மூவின இலக்கியவாதிகளினாலும் நேசிக்கப்பட்டவருக்கு இலங்கை அரசு நினைவு முத்திரை வெளியிடவேண்டும் ! முருகபூபதி


யாழ்ப்பாணத்தில்   சாதாரண மத்தியதரக் குடும்பத்தில்


பிறந்து,  உயர்கல்வியை பெறுவதற்குரிய  வாய்ப்பு வசதிகளை இழந்து,  அறிஞர்களினதும் முற்போக்கு எழுத்தாளர்களினதும் நூல்களை வாசித்துப்பெற்ற அனுபவங்களினாலேயே  மேதையாக வலம்வந்து, ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்திருக்கும் மல்லிகை ஜீவா,   கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் மறைந்தார்.

அவரையும் சமகால கொரோனோ தொற்று விட்டுவைக்கவில்லை என அறியப்படுகிறது.

ஈழத்து மற்றும் தமிழகம் உட்பட உலகநாடுகள் எங்கும் யாராவது இலக்கிய ஆளுமை மறைந்தால், அவர்களுக்காக அஞ்சலிக்குறிப்பினை தமது மல்லிகையில் பதிவேற்றி வந்தவர் ஜீவா. இலங்கையில் கலை, இலக்கியம் சார்ந்த எவரும் மறைந்துவிட்டால், முடிந்தவரையில் பயணம் மேற்கொண்டு இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்துவதையும் தனது வாழ்வில் மரபாகவே  கொண்டிருந்தவர்.

இவ்வாறு ஏனையோர் துயரத்தில் பங்கேற்ற மல்லிகை ஜீவாவின் இறுதிநிகழ்வு,  அவரது ஏக புதல்வன் திலீபன் முன்னிலையில் மாத்திரம் நிகழ்ந்தது வியப்புக்கலந்த அதிர்ச்சியை அளித்தது.

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 47 முருகபூபதி கதைகளை சுமந்து வாழும் எழுத்தாளர்களின் மனைவிமார் ! 1984 இல் கவியரசர் இல்லத்தில் முதல் தரிசனம் !! முருகபூபதி


கடந்த 46 ஆம் அங்கத்தில்,  பாரதியாரின் மனைவி செல்லம்மா, தி. ஜானகிராமனின் மனைவி, மற்றும்  ஏ.வி. மெய்யப்பச்செட்டியாரின் மனைவி இராஜேஸ்வரி ஆகியோர், தத்தம் கணவர்மார் பற்றி தெரிவித்த கருத்துக்கள் பற்றி எழுதியிருந்தேன்.

இந்த அங்கத்தில் மற்றுமொருவரின் மனைவி பற்றி சொல்லநேர்ந்தது,  எதிர்பாராத தற்செயல் நிகழ்வுதான். அவர்தான் திருமதி பார்வதி அம்மா கண்ணதாசன்.

ஜூன் மாதம் 24 ஆம் திகதியை  என்னால் மறக்கமுடியாது.


அன்றுதான் கவியரசு கண்ணதாசன் – முத்தையா என்ற இயற்பெயருடன் பிறந்த தினம்.

எனது மகன் முகுந்தன் பிறந்த தினமும் அதுதான் !

1984 ஆம் ஆண்டு தமிழகப்பயணம் சென்றிருந்தபோது, நான் முதல் முதலில் தரிசித்த  தமிழக  எழுத்தாளர் – கவிஞரின்  இல்லம் கவியரசு கண்ணதாசனின் வாசஸ்தலம்தான்.

அதற்கு முன்னர் அவரது பாடல்களை விரும்பிக்கேட்டிருந்தாலும், அவரது வனவாசம் – மனவாசம் – அர்த்தமுள்ள இந்து மதம், மாங்கனி காவியம் முதலானவற்றை படித்திருந்தாலும், அவர் பற்றி நான் எழுதத்தொடங்கியது, அந்த 1984 ஆம் ஆண்டு சென்னைப்பயணத்தின் பின்னர்தான்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எங்கள் ஊர் மாணவர்கள் விக்னேஸ்வரன், சுபாஸ்கரன்  ஆகியோர் படித்துக்கொண்டிருந்தனர்.

கவிஞருமான விக்னேஸ்வரனுக்கு கவியரசர் மீது அலாதிப்பிரியம்.  தனது முதல் கவிதைத் தொகுதிக்கு தென்றல் விடு தூது எனப்பெயரிட்டு, தனது புனைபெயரிலேயே அதனை வெளியிட்டுமிருந்தார்.

இந்த விக்னேஸ்வரனின் அக்கா மாலதியைத்தான் நான் பிற்காலத்தில் திருமணம் முடித்தேன்.

விக்னேஸ்வரனின் புனைபெயர் முத்துதாசன்.  கவியரசரின் இயற்பெயர் முத்தையா.  பச்சையப்பன் கல்லூரியில் விக்னேஸ்வரன் படிக்கும்போது  சூளைமேட்டில்  ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து நண்பர்களுடன் தங்கியிருந்து  படித்துக்கொண்டிருந்தார்.

அத்துடன்  தமிழமுது என்ற இலக்கிய இதழையும் நண்பர்களுடன் இணைந்து நடத்தினார்.  அக்காலப்பகுதியில்  வடக்கிலிருந்து  வந்து சேர்ந்த  புளட் செயல் அதிபர்  உமா மகேஸ்வரனும் அவ்வப்போது அங்கு வந்து செல்வதாக அறிந்தேன்.

சமூக அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய பௌர்ணமியில் ஒரு மரணம் Death on a Full moon day - முருகபூபதி


 சமூக அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய           பௌர்ணமியில்  ஒரு  மரணம்   Death on a Full moon day  சிங்களத் திரையுலகின் ஆளுமை பிரசன்ன விதானகே


காடும், காட்டை அண்மித்த பிரதேசமும் கொண்ட  அந்தச்சிங்களக் கிராமத்தில்  ஒரு முதிய விவசாயியின் சிறிய குடும்பம்.

மனைவி இல்லை. இரண்டு மகள், ஒரு மகன்.  வானம்பார்த்த பூமி. குடிதண்ணீருக்கும் குளத்தை தேடிச்செல்லவேண்டும். குடும்பத்தின் ஏழ்மையை போக்குவதற்காக மகன் பண்டார இலங்கை இராணுவத்தில் சேர்ந்து  உள்நாட்டுப் போர்க்களம் சென்றுவிடுகிறான்.

விடுதலைப்புலிகளின் ஈழப்போராட்டத்தில் ஒரு கண்ணிவெடித்தாக்குதலில்  அவன் உடல் சிதறிச்செத்துவிட்டான் என்ற செய்தியுடன், அவனது உடல்


மூடிய சவப்பெட்டியில் சீலிடப்பட்டு வருகிறது.

அவனது தந்தையான முதியவர் வின்னிஹாமி க்கு கண்பார்வையும் மங்கல்.  தட்டுத்தடுமாறி, ஊன்றுகோலுடன் நடமாடும் அவருக்கு செவிப்புலன் கூர்மையானது.

பறவைகளின் குரலும், குளத்தில் கும்மாளமிட்டு குளிக்கும் சிறுவர்களின் சிரிப்பொலியும் கேட்டு பரவசமடைபவர்.

ஒரு வாகனத்தில்  சவப்பெட்டியை எடுத்துவந்து அந்த குடிசையில் ஒப்படைத்துவிட்டு விடைபெறும் இராணுவத்தினர், உடல் மிகவும் மோசமாக சிதறியிருக்கிறது. அதனால் திறக்கவேண்டாம் என்றும் வலியுறுத்துகின்றனர்.

இலங்கையின்  தேசியக்கொடி போர்த்தப்பட்ட அந்த சவப்பெட்டியை பார்த்து  சகோதரன் பண்டாரவை நினைத்து கதறி அழுகின்றனர் சகோதரிகள்.  தேசத்தை காக்கச்சென்றவன்,  சிதறுண்டு வருகிறானே என்ற சோகம்  அக்கிராமத்தை சூழ்ந்துவிடுகிறது.

கண்ணனும் கண்ணதாசனும்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா  

 

அப்பா அம்மா வைத்த பெயர் முத்தையா. முத்தான முத்தையா


தமிழுக்குச் சொத்தல்லவா ? ஆனால் அகிலவுலகும் போற்றும் பெயர் கண்ணதாசன். கண்ணதாசனாய் எப்படி ஆகினார் ? விரும்பி ஏற்றதா ? அல்லது வெற்றியைத்தர வாய்த்ததா ?  அல்லது அந்தப் பரம்பொருளே இந்தப் பெயரை கவிஞரின் மனதில் இருத்தினாரா? எழுத வேண்டும் என்னும் ஆசையினை மட்டுமே உள்ளத்தில் இரு த்தி வைத்துக் கொண்டு திரிந்த முத்தையா - திருமகள் பத்திரிகை யில் உதவி ஆசிரியர் வேலைக்கு செல்கிறார். அங்கு தனது கை யிலிருந்த சிபார்சுக் கடிதத்தைத் கொடுக்கிறார். கடிதத்தை வாங்

கிய  பத்திரிகையின் அதிபர் " இதற்கு முன்பு எழுதி இருக்கிறீர்க ளா 
? அப்படி எழுதியிருந்தால் என்ன புனை பெயரில் எழுதி இருக்கிறீர்கள் என்று கேட்கிறார் " தன்னுடைய எழுத்துக்களை எ.எல். எஸ் முத்தையா என்னும் பெயரில் எழுதினாரே அன்றி - எந்த புனை பெயரிலும் அவர் எழுதவில்லை. புனை பெயரில் எழுதுவது அக்காலத்தில் மிகவும் பிரபலமாய் இருந்தது. பத்தி ரிகை அதிபர் கேட்டவுடன் ;  முத்தையா மொழிந்தார் கண்ணதாசன் என்று. முத்தைத் தரு பக்தித் திருநகை - என்று அருணகிரி வாயில் வந்து - சந்தம் சிந்தும் தமிழ்க் கவிதை களுக்கு முருகப் பெருமான் அனுக்கிரகம் கொடுத்தது போல் ;  கண்ணதாசன் என்னும் பெயரை உடனே சொல்லுவதற்கு அந்தக் கண்ணனே அருள் புரிந்தார் என்றுதான் எண்ணி விடத் தோன்றுகிறதல்லவா ! வேறு பெயர்கள் எதுவுமே நாவில் வராமல் கண்ணதாசன் என்று வந்ததால் உலகமே போற்றியது. தமிழின் உன்னத கவியரசர் ஆகும் நிலையும் உருவாகியது. புகழும் குவிந்தது ! பொருளும் குவிந்தது ! இன்றும் என்றும் நினைக்கவும்பேசவும் , தமிழ் உலகில் முடிசூடா மன்னனாய் , கண்ணனின் காதலனாய்,  கண்ணனின் காவலனாய் ஒளி விட்டு நிற்கிறார் என்பதுதான் உண்மையாகும்!

மேதகு எங்கட தலைவரின் துவக்கம் - கானா பிரபா

 மேதகு

🔥
எங்கட தலைவரின் துவக்கம்
🔥 பட அனுபவம்
“பிரபாகரன்”
ஏந்திய குழந்தைக்குப் பெயர் வைக்கும் காட்சியில் சிலிர்த்துப் போய்க் கண் மடை திறக்க, மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றதொரு பரவச அனுபவம். இப்படியாக “மேதகு” படத்தில் பயணத்து விட்டு வந்திருக்கிறேன்.
எண்பதுகளில் ஈழப்போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் சின்னஞ்ச் சிறுவர்களாக நாம் இருந்த அந்தக் காலத்தில், இரவு கழிக்கும் நேரத்தில் அந்த அமைதியை ஊடறுத்து ஒரு பறையொலி கிளம்பும்.
எல்லோரும் வீதிக்கு ஓடுவோம்.
சொல்லி வைத்தாற் போல வட்டம் போல நாமெல்லோரும் சூழ, அங்கே வந்திருக்கும் “தெருக்கூத்துக் குழு” நம் இன விடுதலையையும், நம் தமிழினம் எப்படி அடக்கி ஒடுக்கப்படுகிறது என்பதையும் பாட்டோடும், நிகழ் வரலாறுகளோடும் பாடிக் காட்டும்.
“இன்னார் மகன் இயக்கத்துக்குப் போய் விட்டாராம்” என்று அடுத்தடுத்த நாட்களில் வரும் ஊரார் பேச்சு. இதெல்லாம் நாம் வாழ்ந்த காலத்தில் தேங்கிய வாழ்வியல் நினைவுகள். வரலாற்று நாயகர்களின் அடிச்சுவடுகள் முகிழ்ந்த காலங்கள்.

தெருவாழ் மக்கள் - - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணே சர்.

 .

  தாம் வாழ்வதற்கு இடம் இல்லாது தெருவிலே வாழ்பவர்கள். அழுக்கடைந்த உடை, சவரம் செய்யாத முகம், கைகளிலே அவர்கள் உடைமையாக வைத்திருக்கும் பொதிகள், அவர்களைக் கண்டால் ஒதுங்கி மறுபுறம் போய்விடுகிறோம். ஆனால் பல தொண்டு நிறுவனங்கள் அவர்களும் மனிதர்கள்தான் என மதித்து, அவர்கள் பசியைப் போக்குவதற்கு உணவளித்து வருகிறார்கள். ஏதோ ஒரு மனித சேவை செய்த திருப்தி இவர்கட்கு. ஆனால் அவர்களும் மனிதர்தான் என சிந்திக்காதவர்களே பலர்.

  இவ்வாறானோர் தமது வாழ்வை எவ்வாறு மேம்படுத்த முடியும் என அவர்கட்காக ஒரு நூலை எழுதியுள்ளார் சேரா காணற். அவர்கட்கு தான் இருக்க வீடு கிடையா, உடமைகளோ சில அழுக்கடைந்த பொருட்கள். இப்படிப்பட்டோர் வாழ்வை மேம்படுத்த நூலா? அதை அவர்கள் வாசிப்பார்களா? இவ்வாறாக பலரும் வியக்கலாம். இந்த சந்தேகத்தை தீர்ப்பதற்காகப் போலும் ABC வானொலி நிருபர் Mickal Pahart சேராவை பேட்டி கண்டார். அதை செவிமடுக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. அவற்றை மற்றவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமே என்னை எழுதத் தூண்டியது.

  அவர்களை நன்கு அறிந்த சேரா கூறுகிறார், அவர்களும் பண்பான மனிதர்கள். சாப்பாடு கொடுக்கும் இடத்திலே, நிரையாக நிற்கும் இடத்திலே சில முரட்டுத்தனம் இடம் பெறும். ஆண்கள் அவர்களை அடக்கும்போது அவர்கள் மேலும் கோபம் அடைவதுண்டு. ஆனால் அத்தனைப் பேரும் தாயின் பரிவை உணர்ந்தவர்கள். ஒரு பெண் அவர்களிடம் பரிவாக கூறினால் அவர்கள் மிகமிக நிதானத்துடன் நடந்துகொள்வார்கள்.

 

பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - ஜஸ்டிஸ் விஸ்வநாதன் - ச. சுந்தரதாஸ் - பகுதி 4

 .


தமிழில் நூற்றுக்கும் அதிகமான படங்களை தயாரித்து சாதனை புரிந்த நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். இவர்கள் நட்சத்திர நடிகர்களை மட்டும் நம்பாமல் சாதாரண நடிகர்களை வைத்து படம் எடுப்பார்கள். அசோகன், நம்பியார், மனோகர், மனோரமா போன்றோர் இவர்கள் நிறுவன படங்களில் கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். அந்த வகையில் மேஜர் சுந்தரராஜனை கதாநாயகனாக போட்டு அவர்கள் உருவாக்கிய படம்தான் ஜஸ்டிஸ் விஸ்வநாதன்.


உயர் நீதிமன்ற நீதிபதியான விஸ்வநாதன் தனக்கு இழைக்கப்படட துரோகத்திற்கு பழிவாங்குவதற்காக ஓடும் ரயிலில் சுரேசை சுட்டு கொன்று விடுகிறார், ஆனால் அதனை சந்தியா என்ற பெண் பார்த்து விடுகிறாள், கொலையைப் பற்றி எவரிடமும் மூச்சு விடக்கூடாது என்று கூறும் விஸ்வநாதன் சில தினங்கள் கழித்து வீடு திரும்புகிறார், அங்கே அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. எந்தக் கொலையை ஒருத்தி பார்த்தாளோ அவளே அவரின் வீட்டிற்கு அவரின் தாயற்ற குழந்தையை பராமரிக்க வந்திருக்கிறாள்.


அமெரிக்கா கருப்பின மக்களின் வரலாறு - நூல் மதிப்புரை: கி.ரமேஷ்

.

நூல்: 

அமெரிக்கா
கருப்பின மக்களின் வரலாறு
ஆர்.பெரியசாமி

நூல் மதிப்புரை: கி.ரமேஷ்

இன்று காலைச் செய்தி: “ஜார்ஜ் ஃப்ளாய்டை இரக்கமின்றித் தன் மூட்டால் அழுத்திக் கொன்ற வெள்ளைப் போலீஸ்காரனுக்கு 22 ½ ஆண்டுகள் சிறைத்தண்டனை”(26.06.2021).  இந்த செய்தி நமக்குக் கூறும் விஷயம் என்ன?  இன்றும் அமெரிக்காவில் கருப்பின மக்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது.  அதையும் மக்களைக் காக்க வேண்டிய காவலர்களே செய்கிறார்கள் என்பதுதான்.  இந்தப் படுகொலை சம்பவத்திற்குப் பிறகும் இதே போன்ற செயல்கள் அமெரிக்காவில் அரங்கேறி விட்டன.

அமெரிக்காவின் அடிமை மக்கள் வரலாறு மிகவும் நீண்டது.  அமெரிக்கா உருவாகி, அங்கு தெற்குப் பகுதியில் குடியேறிய ஆங்கிலேயர்கள் தோட்டத் தொழிலில் இறங்கினர்.  அதற்கு ஏராளமான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.  ஆங்கிலேயர்களால் அமெரிக்காவின் உண்மையான பழங்குடி மக்களை அந்த வேலையில் இறக்க முடியாத நிலையில், பிரிட்டிஷ் இந்தக் கேவலமான வேலையைத் தொடங்கியது.  லட்சக்கணக்கில் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து ஆடு, மாடுகளைப் போல் பிடித்து, கப்பல்களில் அடைத்துக் கொண்டு வரப்பட்ட கருப்பின மக்கள் அங்கு அடிமைகளாகக் கேவலமாக வேலை வாங்கப்பட்டனர்.  சவுக்கடி, சங்கிலிகளால் கட்டி வைத்தல், இன்னும் என்னென்ன கொடூரங்கள் உண்டோ இவையனைத்தும் அங்கு அரங்கேறின.  அவற்றையெல்லாம் படிக்கும் போதே நமக்கு ரத்தம் கொதிக்கும்.  அவ்வளவு கொடூரம்.  அதை விடக் கொடூரம் அவையெல்லாம் ‘சட்டபூர்வமாக்கப்பட்டன’ என்பதாகும்.  இவற்றைத் தெரிந்து கொள்வதற்கு நாம் ஃப்ரட்ரிக் டக்ளஸ் எழுதிய வரலாறு, டாம் மாமாவின் குடிசை போன்றவற்றைப் படிக்கலாம்.  இன்னும் ஏராளமாக எழுதப்பட்டுள்ளன.

புத்தர்பிரானின் வழியில் வந்தவர்கள்… !? அவதானி

புத்தர்பிரானின் சரித்திரம் தெரிந்தவர்கள்தான், இலங்கை வாழ் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த சிங்கள மக்கள்.  இவர்கள் தமது

ஆரம்பக்கல்வியை தொடரும்போதே,  புத்த சரித்தய என்ற பாட நூலையும் படிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

தமது இளம் வயதில் சிங்கள மொழியை இரண்டாம் பாடமாக பயிலும் பிற இனத்துப்பிள்ளைகளும்  குறிப்பிட்ட  புத்தசரித்தய நூலைப்படிப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிட்டும்.

அந்நாட்களில் குமாரோதய, புத்த சரித்தய முதலான பாட நூல்கள் இலங்கையில் பிரசித்தம்.

இன்றைய நேபாள எல்லைக்குள் இருக்கும் கபிலவஸ்து நகரத்தின் மன்னர் சுத்தோதனனின்  பிள்ளையாகப்பிறந்த  புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தன்.

அரண்மனைவாசியாகவே வாழ்ந்திருக்கும் சித்தார்த்தன் அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்தார்.  தனது பதினாறாவது வயதில்  உறவப்பெண்ணான யசோதராவை மணம்முடித்து  ராகுலன் என்ற ஆண் மகவுக்கும் தந்தையானார்.

அரண்மனையை விட்டு வெளியே செல்லும் சந்தர்ப்பம் அவருக்கு கிட்டியபோது, ஒரு முதியவரையும், ஒரு நோயாளியையும் , ஒரு மரணமுற்றவரையும்,  ஒரு துறவியையும் காண்கிறார்.

அவர் அதுவரையில் வாழ்ந்துகொண்டிருக்கும் அரண்மனையில் காணாத காட்சிகளை அந்த நால்வரின் தோற்றத்திலும் காண்கிறார்.

அரண்மனை வாழ்க்கைக்கும் அப்பால் மற்றும் ஒரு வாழ்க்கை வெளியே இருக்கிறது என்பதை உணர்ந்தார்.

தூங்காநகர நினைவுகள் - 23: காலம்தோறும் மதங்கள்! - அ.முத்துக்கிருஷ்ணன்

 


தூங்காநகர நினைவுகள்
தூங்காநகர நினைவுகள்

மதுரை சமண நிலமாகத் திகழ்ந்ததற்கான ஏராளமான இலக்கிய, கல்வெட்டு மற்றும் படுகைகள்/குகைகள் வடிவில் சான்றுகள் உள்ளன. மதுரையைச் சுற்றிய மலைகளில் சமணப் பள்ளிகள் இருந்ததற்கான சான்றுகள் இன்றளவும் காணக்கிடைக்கின்றன.

முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து, முதலில் இந்தக் கோவிலையும், பின் மதுரை நகரத்தையும், குலசேகரப் பாண்டிய மன்னன் நிர்மாணித்தார். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து, அழகிய நகரமாக்கும்படி, பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் கனவில், சிவபெருமான் தோன்றிக் கூறியதால், அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான் என்பது மதுரையில் புழங்கும் நம்பிக்கை. 2500 ஆண்டுகள் பழைமையான நகரம் என்பதால் வரலாற்றுச் சான்றுகள் மதுரை எங்கும் வியாபித்துக் கிடக்கின்றன.

மதுரை கோவில் மாநகரம் என்று இன்று அழைக்கப்படுகிறது. எங்கு திரும்பினாலும் இன்று கோவில்களை நீங்கள் காணலாம். மதுரை மீனாட்சியம்மன் கோவில், குடல் அழகர் பெருமாள் கோவில், அழகர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், முக்தீஸ்வரர் கோவில், வண்டியூர் மாரியம்மன் கோவில், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என திராவிடக் கட்டடக் கலையின் நுட்பத்திற்குச் சான்றாக அழகிய கோவில்களை நீங்கள் காணலாம்.

இலங்கையில் மலேய் மக்களின்வருகையும் அவர்களின் வாழ்வும் - ஏலையா க.முருகதாசன்

.

இலங்கை வரலாற்றோடு சோழ பாண்டிய வருகையும் அவர்களின் படையெடுப்பின்  போது வருகை தந்த கணிசமான தொகையினர் இலங்கை மக்களோடு மக்களாக கலந்துவிட்டது போன்று பிற்காலத்தில் போத்துக்கீசரின் வருகையின் போது ஆபிரிக்காவிலிருந்து ஆபிரிக்க மக்கள் தொழிலாளர்களாக கொணடுவரப்பட்டதும் அவர்களின் பரவல் புத்தளம் பகுதியில் இருப்பதும் அவர்களில் கணிசமான தொகையினர் சிங்களவர்களுடனும் தமிழர்களுடனும் கலப்புத் திருமண முறையில் கலந்து கலப்பினமாக மாறியிருக்கின்றனர்.

பிரித்தானியாவுக்கு கீழ் இலங்கை காலணித்துவ ஆட்சியாக இருந்த போது தமிழகத்திலிருந்து தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழர்கள் கொண்டுவரப்பட்டனர்.அவர்களும் இலங்கையர்களாக தமது பழக்க வழக்கங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் வறுமையில் வாடிக் கொண்டும் தமது வாழ்வாதாரத்திற்காக வேலை தேடித் திரிந்த மக்களுக்கு கடல்கடந்த சீமையில் வேலை என்றவுடன் வாட்டிவதைத்த வறுமை அவர்களை இலங்கையில் கொண்டு வந்து நிறுத்தியது.

இலங்கையில் பிரித்தானியரின் காலணித்தவ ஆட்சி காலத்தில் தென்னாபிரிக்காவிலிருந்த பூவர் சிறைக்கைதிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு சுத்தமான காற்றுக் கிடைக்க வேண்டுமென்பதற்காக தலவாக்கொல்லையில் சிறைவைக்கப்பட்டார்கள் என்ற செய்தியும் உண்டு.

காலப்போக்கில் மீண்டும் இவர்கள் தென்னாபிரிக்காவிற்கு திரும்பினார்களா அல்லது இலங்கை மக்களோடு கலந்து வாழத் தொடங்கினார்களா என்பதை தெளிவாக அறிய முடியவில்லை