தை மலர்ந்து வருக வருகவே!

          


பாரதி இளமுருகனார்















பொங்கல்தனை இனிமைபொங்கப்  பொங்கலோ பொங்கல்

     பொலிந்திடுக”  என்றேபுத் தரிசி கொண்டு

பொங்கியதைப் புடவிவாழப் பொற்கதிர் வழங்கும்

     பொற்புமிகு பரிதிக்குப் படையல்செய்து

பொங்கிநிற்கும்  இந்நாளில் தமிழ ரெல்லாம்

     புகலரிய ஒற்றுமையை மனதிற் பொங்கிப்

பொங்குமின்பத்  தமிழ்த்தாயைநினைந்து வணங்கிப்

      போற்றிடவே தைமலர்ந்து வருக வருகவே!

 

 பழையபொருள் கழித்திடவே சேர்த்துத் தீயில்

        பலர்கூடி எரித்திடுவர் போகியன்று!

கழைவதற்கு  மனதிற்குள் பலபல இருந்தும்

        கழிவுகளைச் சிலர்என்றும் ஒழிப்ப தில்லை

உழைத்துழவர் பெற்றபுது அரிசி பொங்கி

        உயர்பண்பாம் நன்றிக்கடன் செலுத்து முன்பு

திழைத்திருப்போர் மனஅழுக்கை எரித்துப் போக்கிச்

       சீர்செய்யத் தைமலர்ந்து வருக வருகவே

தைப்பொங்கல் - தமிழர் திருநாள்

 

சிவஞானச் சுடர்

பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்

(வாழ்நாள் சாதனையாளர்)

சிட்னி -அவுஸ்திரேலியா

 






























தேனிறைந்த  புதுமொட்டு  முகையவிழந்து  விரியத்
     தேடிவண்டு  இரீங்காரம்  இடுங்காலை  நேரம்
ஆனமட்டும்  தம்குரலில்  திருப்பள்ளி  எழுச்சி
    ஆர்ப்பரித்துச்  சிறகடித்துச்   சேவல்கள்  பாடக்
கானமெனக்  கிஞ்சுகங்கள்   துணையுடனே  கூடிக்
    காதலொடு  திருமுறையை  ஓதிநின்று  வாழ்த்த
வானிலெழும்  வாழ்வுதரும்  கதிரவனை  நினைந்து
    வணங்கிநன்றிக்  கடன்செயுநாள்  தைப்பொங்கல்  அன்றோ?

 

 











பொங்கல் என்பது மங்கலம் ஆகும் !




















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 

 

 

மார்கழி மாதம் மனமுறை மாதம்
தேவர் விரும்பும் திருவுறை மாதம்
சைவம் வைணவம் போற்றிடும் மாதம்
மெய்யாம் இறையினைத் துதித்திடும் மாதம் 

இறையினைத் துதித்து எல்லோர் மனமும்
புனிதம் ஆகியே நிற்பது தையிலே
தையிலே வருவதோ தலைநிமிர் பெருவிழா
அதுவே தமிழரின் ஆனந்தப் பெருவிழா

உழவை மதிக்கும் உன்னதப் பெருவிழா
உழைப்பை உவக்கும் உழைப்பவர் திருவிழா
நன்றியை நவிலும் நயப்புடைப் பெருவிழா
நல்லதை நல்கிடும் தைப்பொங்கல் நல்விழா

மலையாளம் தந்த மகோன்னதன் ஜெயச்சந்திரன் ❤️ எழுத்தாக்கம் : கானா பிரபா

வருஷம் 1958


State School Arts கேரளாவின் மாநில இளையோர் இசை நிகழ்வில் இரண்டு இளையோர் மேடைக் கச்சேரியை அலங்கரிக்கிறார்கள்.

ஒருவர் 18 வயசு நிரம்பியவர், Palluruthy பள்ளியில் இருந்து

கே.ஜே.ஜேசுதாஸ் பாடகராகவும்,

இன்னொருவர் இரிஞ்சாலக்குடா தேசியப் பள்ளியில் இருந்து, 14 வயது நிரம்பிய P.ஜெயச்சந்திரன் மிருதங்க வாத்தியக் கலைஞராகவும் அந்தக் கச்சேரி அமைகின்றது.

மலையாள சினிமாவின் அடுத்த யுகத்தின் முன்னணி இசை நட்சத்திரங்களாக ஒளிவீசுவார்கள் என்று அப்போது நினைத்திருப்பார்களோ தெரியவில்லை. ஆனால் காலம் அப்போது கணக்கு வைத்துக் கொண்டது.

பாடகராக வருவதற்கு முன்பே ஜெயசந்திரன் சகோதரர் அமரர்


சுதாகரனின் நண்பராக விளங்கியவர் கே.ஜே.ஜேசுதாஸ். ஜெயச்சந்திரனின் இளைய சகோதரர் கிருஷ்ணகுமாருக்கு ஹிந்திப் பாடகர்களில் கிஷோர் குமார் என்றால் இஷ்டம், ஜேசுதாஸுக்கோ மொஹமெட் ரஃபி என்றால் கொள்ளைப் பிரியம். இருவரும் சேர்ந்து பாடி மகிழ்வார்களாம்.

ஜெயசந்திரனை மலையாளத்தின் மகோன்னத இசைமைப்பாளர்

தேவராஜன் மாஸ்டரிடம் அறிமுகம் செய்து வைத்தவர் கே.ஜே.ஜேசுதாஸ் தான்.

காட்டுப்பூக்கள் படத்துக்காக தேவராஜன் மாஆடர் இசையில் ஜேசுதாஸ் பாடிய

மாணிக்க வீணையுமாய்

பாடகர் ஜெயச்சந்திரனுக்கு இளையராஜா கொடுத்த அதிமதுரம் - கானா பிரபா

மஞ்ஞூலும் ராத்ரி மாஞ்ஞு 

யாத்ரா மொழியோடே...

ஆற்றோரம் சூர்யன் எத்தி 
அக்னி விளக்கோடே....❤️


பாடகர் ஜெயச்சந்திரனுக்கு அவர் தம் தாய்மொழியாம் மலையாளத்தில் இசைஞானி இளையராஜா கொடுத்த ஆகச் சிறந்த பொக்கிஷப் பாடலாக இதை எப்போது கேட்டாலும் என் மனது மெச்சும்.

ஜெயேட்டனோடு இசைஞானி இளையராஜா கூட்டுச் சேர்ந்த வருஷம் 1977. "மஞ்ஞூலும்" பாடல் பிறந்தது 1997 இல்.
இளையராஜாவின் இசையில் ஜெயச்சந்திரனின் இசைப் பயணத்தின் முடிவிடத்தின் பாடல்களில் ஒன்று இது.

வேறொன்றும் வேண்டாம், படத்தின் கதையே தெரியாமல் இந்தப் பாடலை மட்டும் கேட்டுப் பாருங்கள்.
ஒரு பாசத்தின் தேடலை, அன்பின் பயணத்தை உருக்கும் குரலில் பாடியே நம்மை நெகிழ வைத்து விடுவார் ஜெயச்சந்திரன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மலையாளத்தின் பெரு நட்சத்திரம் மோகன்லால் நடித்த படமிது. நிறைவேறாத காதலின் சாட்சியாக, தன் தகப்பனைப் பழிவாங்கும் தனயனுக்கும், அவன் யாரென்றே அடையாளப்படாமல் பழகும் தந்தைக்குமான உணர்வுப் போராட்டம் இது.

தண்டவாளத்தில் தன் விழி வைத்துப் பயணிக்கும் கிழட்டு ரயிலின் தேடலோடு தொடங்கி, அந்த ஏமாற்ற விழிகளோடு மீண்டும் கிளம்பும்  "யாத்ரா மொழி"யின் முகவரிப் பாட்டு இது.

இப்போது இந்தப் பாடலின் சந்தத்துக்கு இசைஞானி கொடுத்த இன்னொரு ரயிலோசையைக் காது கொடுத்துக் கேட்டுப் பாருங்கள். பேரிரைச்சல் இல்லாத ஏகாந்தத் தொனியோடு பாடலில் கூட வரும் பின்னணி இசையாக, அங்கே தளர்வான நடை எழும்.

கதாசிரியரோ, இயக்குநரோ சொன்ன கதையைத் தனக்குள் உருவேற்றி, அதற்கு ஒரு உணர்வு ரீதியானதொரு இசையைக் கொடுக்கும் பிரம்மாவாக இசைஞானி பிரமிப்பைக் கொடுக்கும் இன்னொரு படைப்பாகவே இதையும் எடுத்துக் கொள்வேன்.

மலையாள சங்கீதத்தில் இசைஞானியோடு நீண்ட பயணம் பயணப்பட்ட கிரிஷ் புத்தன்சேரியின் மலையாள வரிகளை மொழிபெயர்த்துப் பார்த்தேன். ஆகச்சிறந்ததொரு திரை இலக்கியமாகப் பாடல் வரிகள் தேங்கி நிற்கின்றன.
இன்று அவரும் இல்லை, பாடிய ஜெயேட்டனும் இல்லை. ஆனால் அவர்கள் கொடுத்த உணர்வு அப்படியே தேயாமல் இருக்கிறது.

பதகளிப்பு அல்லது தவிப்பினை மொழி பெயத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் இதுவும். 


அந்தனிஜீவா நினைவுகள் ! ஏழு தசாப்த காலத்தின் கலகக்குரல் ஓய்ந்தது ! ! முருகபூபதி


படைப்பிலக்கியம், நாடகம், ஊடகம்,  இதழியல் பதிப்புத்துறை, அரசியல், தொழிற்சங்கம்  சமூகச்செயற்பாடு என தனது பொதுவாழ்வில் அகலக்கால் பதித்து, இயங்கிக்கொண்டிருந்த எமது நீண்ட கால நண்பர் அந்தனிஜீவா அவர்களுக்கு காலம் விடுதலை வழங்கியிருக்கிறது.

கடந்த சில வருடங்களாக அவர்   உடல்நலம் குன்றியிருந்தார்.  1944 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் அந்தனிஜீவா, தமது எண்பது வயது  நிறைவின் பின்னர் விடைபெற்றுள்ளார்.

1960 களில் இலக்கியப்பிரதிகள் எழுதத்தொடங்கிய அந்தனிஜீவா,  உடல்நலம் குன்றும் வரையில் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருந்தவர்.

1970 இற்குப்பின்னரே அந்தனிஜீவா, எனது இலக்கிய வட்டாரத்தில்


எனக்கு அறிமுகமானவர்.  எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள், பிரமுகர்கள் பலருடனும் தொடர்பிலிருந்தவர்.

நான் இவரை சந்தித்த காலப்பகுதியில் ( 1970 களில் ) லங்கா சமசமாஜக்கட்சியின் பணிமனையிலும் இயங்கிக்கொண்டிருந்தார்.  இடது சாரித் தோழர்களுடனும், முற்போக்கு  கலை, இலக்கியவாதிகளுடனும் அவருக்கு நெருக்கமான தோழமை இருந்தது.

சிறுகதை, கட்டுரை, கவிதை, விமர்சனம், கலை, இலக்கிய தொழிற்சங்க ஆளுமைகள் பற்றிய பதிவுகள் முதலானவற்றை எழுதியவாறு நாடகங்களும் எழுதி தயாரித்து இயக்கி மேடையேற்றியவர்.

மலைநாட்டு எழுத்தாளர் மன்றம்  மலையக மூத்த எழுத்தாளர்கள், என். எஸ். எம். இராமையா, இர. சிவலிங்கம், தெளிவத்தை ஜோசப் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டிருந்த காலப்பகுதியில். அந்தனிஜீவா , மலையக கலை, இலக்கிய பேரவை என்ற அமைப்பினையும் ஆரம்பித்து,  மாநாடுகளையும் இலக்கிய விழாக்களையும் நடத்திக்கொண்டிருந்தவர்.

கொழுந்து எனும் கலை, இலக்கிய காலாண்டு இதழையும் நீண்டகாலம் வெளியிட்டார்.   இவ்வதழின் ஊடாக சில இலக்கியப்போட்டிகளையும் நடத்தினார்.

நற்செயல்கள் செய்து வாழ்வாய்! --- அன்பு ஜெயா, சிட்னி (எண்சீர் கழி நெடிலடி ஆசிரிய மண்டிலம்)

 

இன்றுநீயும் புரிகின்ற வினைதனுக்கே ஓர்நாள்

    இருவினைக்கும் ஏற்றதொரு எதிர்வினையும் உண்டே!

தொன்றுதொட்டு முன்னோர்கள் உணர்த்திவரும் உண்மை,

    தொய்வதில்லை; தவிர்த்திடுவாய் தீச்செயல்கள் தன்னை;

நன்றுநன்று நீசெய்யும் நற்செயல்கள் என்றும்

    நல்வினையைக் கூட்டியுன்னை வாழ்விக்கும், உறுதி!

என்றுமுன்றன் ஊழ்வினைதான் உருத்துவந்தே ஊட்டும்

    என்றுணர்ந்து நற்செயலே செய்திடுவாய் நீயே!    (1)

 

நற்செயலைப் பெருக்கித்தீச் செயல்தவிர்த்தே வாழ

    நலம்பெறுவாய் நீயுமிந்த நானிலத்தில் என்றும்;

பெற்றசெல்வம் பகிர்ந்தளித்து வாழ்ந்திட்டால் இந்தப்

    பெருநிலத்தில் உன்வாழ்வும் சிறப்புடனே அமையும்;

பற்றுதனைப் பொருள்மீதில் வைக்காது வாழ்ந்தால்

    பயனடைவாய்ப் பேரின்பப் பெருவாழ்வால் நீயும்;

பெற்றிட்ட பிறப்பெல்லாம் பேரின்பம் தனையே

    பெற்றுவாழப் பிறைசூடன் அளித்திட்ட கொடையே!      (2)

 

கவிதை

 நிலை மண்டில ஆசிரியப்பா:

(நான்கு அளவடிகளுடன் ஆசிரியச் சீர்களை உள்ளடக்கி இயற்றப்பட்டுள்ளது.)



உன் அழகை பேரழகென்பேன்!


உன்னை ஒருநாள் ஓடையில் கண்டேன்
என்னை மேடையில் நீ பாரென்றாய்
தன்னழகும் தளிர் கொடியாய் திகழவே
அன்னமாய் மனதி்ல் அசைய மகிழ்ந்தேன்

பெண்ணே மண்ணில் நடந்து சென்றாலே
கண்ணே என்மனம் பொறுப்பது இலையே
பொன்னோ பூவோ தளிர்தான் உன்தாளோ
என்னே சொல்வேன் என்மனம் கலங்குதே

மேகத்தில் மறைந்து வெளிவரும் மதியாய்
தாகத்தை போக்கிடும் தண்ணிள நீராய்
மோகத்தில் என்னை மூழ்கிட வைத்தாய்
சோகத்தில் ஆழ்ந்தேன் உனை காணாதே

செவ்வானின் கீழே பகலவன் எழுவதும்
அவ்வானில் மறைய சந்திரன் தெரிவதும்
இவ்வாறே இங்கே இயற்கையும் இயங்க
அவ்வாறுன் அழகை பேரழகென்பேனே!








-சங்கர சுப்பிரமணியன்.

நின்றேனும் கொல்லும் தீங்கு (04)….. (திகில் தொடர்)


- சங்கர சுப்பிரமணியன்.


"நல்ல பொண்ணும்மா அதுஎந்த படுபாவியோ நம்ப 

வச்சுகெடுத்துட்டானாம்தற்கொலைங்கறதால 

பிரேதபரிசோதனைசெஞ்சாங்களாம்அப்பத்தான் 

தெரிஞ்சுதாம் அந்த பொண்ணு இரண்டு மாதம் 

கர்ப்பங்கறது"

 

அம்மாவும் தங்கையும் அடுத்த அறையில் இருந்து

பேசியது என்காதில் விழுந்ததுன்னால் அப்போ

ஊமையாய் அழத்தான் முடிந்ததுஅநியாயமாய் ஒரு 

பெண்ணைக் கெடுத்து அவள் சாவுக்கும் காரணமாகி

விட்டோமே என்று நானே என்னை வெறுக்க

ஆரம்பித்தேன்தற்கொலை செய்யலாமா என்று

எண்ணம் எழ என் நண்பன் மதிவாணனிடம் மனம்விட்டுநடந்ததையெல்லாம் சொல்லி அழுதேன்.

 

மதிவாணனும் நானும் சிறு வயதிலிருந்தே மிகவும் 

நெருங்கிய நண்பர்கள்ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரி 

வரை ஒன்றாகவேபடித்தோம்அவன் வீடுஎங்கள் வீடு 

மற்றும் ஜானுவின் சிநேகிதி வீடு எல்லாம் சிவாஜி 

நகர் சிவன்செட்டி கார்டன் தெருவில் அருகருகே 

இருந்தனமூன்று குடும்பங்களுமே உறவினர்கள் 

போல் பழகி வந்தோம்.

 

வருடங்கள் உருண்டோடினஎதிலும் ஒரு 

பிடிப்பில்லாமல் பித்து பிடித்தவன் போல் இருந்த 

என்னைப் பற்றி எனதுபெற்றோர் ஒன்றும் புரியாமல் 

திருமணம் செய்து வைத்தால்சரியாகும் என நினைத்து எனக்கு திருமணமும் செய்துவைத்தார்கள்திருமணம் கனவு போல் நடந்து முடிந்ததுப்போது தான் ஒரு 

நாள் வீட்டுக்கு வந்த மதிவாணன்,

 

"சிவாநான் ஆஸ்திரேலியா போகலாம் என முயன்று

வருகிறேன்நீயும் வருகிறாயா?" என்று கேட்டான்.