மரண அறிவித்தல்

.
                      திருமதி பிலோமினா அன்ரன்சாள்ஸ்வின்சன்

                                                     மறைவு - 22 .03. 2015

யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிலோமினா அன்ரன்சாள்ஸ்வின்சன் அவர்கள் 22-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.
அன்னார்,  திரு.திருமதி அன்ரனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,அன்ரன்சாள்ஸ்வின்சன் அவர்களின் அன்பு மனைவியும்,
மாலா டேவிட், காலஞ்சென்ற அலன் வின்சன்சாள்ஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற மாக்கிரட்ஜோட்ச், மரியதாஸ்(இலங்கை), பீற்றர் ஜேசுதாசன்(கனடா), ஞானம்மா இமானுவேல்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டேவிட் அந்தோணி அவர்களின் அன்பு மாமியும்,
வின்சன்பொனவென்சர், சுகந்தபொனவென்சர் ஆகியோரின் அன்பு மைத்துனியும், டிலன் அந்தோணி அவர்களின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திருப்பலி 28.03.2015 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு ST Gerards Catholic Church, 71 Gladstone Road, Dandenong VIC இல் கொடுக்கப்பட்டு

நல்லடக்கம் சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு   Springvale Botanical Cemetery, 600 Princes Highway, Springvale VIC 3171இல் இடம்பெறும் 

தகவல்
அன்ரன்சாள்ஸ் வின்சன்(கணவன்) 03 9792 9907
வின்சன்பொனவென்சர்  0421 890 110
டேவிட்                           0401 468 168
 

லீ: சிங்கப்பூரின் சிற்பி!



சிங்கப்பூர் வரலாற்றில், சிங்கப்பூர் என்ற சொல்லோடு பிரித்துப் பார்க்க முடியாததாக இருந்த இன்னொரு சொல் உதிர்ந்திருக்கிறது: லீ குவான் யூ. சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் சுதந்திரம் வாங்கித்தந்த காந்தியும் இவரே, சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திய நேருவும் இவரே!
உலக வரைபடத்தில் சின்னஞ் சிறிய புள்ளியாக இருக்கும் சிங்கப்பூரை, இன்று நிர்வாகம், தொழில்நுட்பம், வணிகம் என்று பல துறைகளிலும் உலக நாடுகள் வியக்கும் சாதனை நாடாக மாற்றியமைத்த மாயாஜாலக்காரராகவே உலகத் தலைவர்கள் இவரைப் பார்க்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுபட்டு, சிங்கப்பூர் என்ற சுதந்திர நாடு உருவான நாள்தொட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலாக லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சியே சிங்கப்பூரின் ஆளும் கட்சி. சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ, தொடர்ந்து 8 முறை பிரதமராக இருந்தவர். உலகின் மிக நீண்ட காலப் பிரதமர்!
லீயுடன் ஓர் உரையாடல்
 

மணி ஓசை - எம். ஜெயராமசர்மா ... மெல்பேண்

.

           மணி ஓசை கேட்டவுடன்
               மனமெல்லாம் மகிழ்கிறது
           துணி வெல்லாம் பிறக்கிறது
                 தூயநிலை வருகிறது

           மால்மருகன் கோவில் மணி
               மருந்தாக இருக்கிறது
           தோல்வி எலாம் தொலைகிறது
                 துவண்டநிலை போகிறது

           வேலவனின் கோவில் மணி
                வினையெல்லாம் போக்கிறது
           நால்வேதப் பொருளை எல்லாம்
                  நயமாகத் தருகிறது

விழுதல் என்பது எழுதலே - பகுதி 43

.
விழுதல் என்பது எழுதலே - பகுதி 43
எழுதுபவர் மதுவதனன் மௌனசாமி – டென்மார்க் 
இவரது அறிமுகம்
அடுத்த பகுதி 44 இல் பார்க்கலாம்.
கதை தொடர்கிறது.
சீலன் டொக்ரரிடம் போயிருந்தான். மொழிபெயர்ப்பாளர் இன்றியே டொக்ரருடன் ஆங்கிலத்தில் கதைத்தான். அவன் படித்த மருத்தவப் படிப்பு அவருடன் கதைப்பற்கு இலகுவான சந்தர்ப்பத்தை வழங்கியது. போனது தலையிடிக்குத்தான் என்றாலும் டொக்ரர் அவனிடம் நிறையக் கதைத்தார். அவனது பழைய வருத்தங்கள்இ குடும்பத்திலே இருக்கும் வருத்தங்கள் மற்றும் அவனது வாழ்க்கை முறை என்று நிறையவே கலந்தாலோசித்தார்.

ஐரோப்பிய வைத்தியர்கள் இலேசில் நாங்கள் எதிர்பார்க்கும் மருந்துகளை தந்துவிடமாட்டார்கள். நிறையக் கதைப்பார்கள். வருத்தம் தானாகவே மாறட்டும் என்ற நிலையைத்தான் கூடுதலாகத் தேர்ந்தெடுப்பார்கள். இவையெல்லாம் நிறையப்பேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறான் சீலன். மருத்துவப் படிப்பை தொடர்ந்த சீலனுக்கு மருத்துவ ரீதியாக இங்குள்ள வைத்தியர்களின் நடைமுறை சரியானதுதான் என்றும் தெரிந்திருந்தது. ஆனாலும் சிலசந்தர்ப்பங்களில் அம்முறை பிழைத்துப்போயும் இருக்கிறது என்று அறிந்திருக்கின்றான்.

"உந்த டொக்ரர்மார் வருத்தம் வந்து சாகப்போற கட்டத்திலதான் எல்லாத்தையும் கண்டுபிடிப்பாங்கள். உவங்களை நம்பக்கூடாது" என்று சிலர் சொல்லவும் கேட்டிருக்கின்றான்.

அதனால்தான் சீலனும் தனது ஞாபகத்தில் இருந்த தான் சம்மந்தப்பட்ட மருத்துவரீதியான பிரச்சினைகளை வைத்தியரிடம் சொன்னான். தலையிடி திடீரென்று வந்திருக்கிறதுஇ ஏதும் மூளையில் கட்டியாக இருக்குமோ என்றும் கவலைப்பட்டான்.
.

சிறுகதை - ஒரு மனிதன் பல கதைகள் - கே.எஸ்.சுதாகர்

.

மனோகரன் மாலை நேரங்களில்தான் அங்கு போவான். விரிவுரைகள் இல்லாத புதன், வியாழன் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவனுக்கு அங்கு வேலை காத்திருக்கும். பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு தனிமையில் இருக்கும். காரை கேற்றுக்குச் சமீபமாக நிறுத்திவிட்டு கொழுவியிருக்கும் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே போனால், முற்றத்திலே சாய்வணைக்கதிரையில் சரிந்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நியூமன் இருப்பார். நியூமன் (Robert Newman) ஒரு வெள்ளைக்காரன். கேற்றிலிருந்து வீட்டின் வாசல்வரை செல்லும் பாதையின் இருமருங்கிலும் அழகாக புல் வெட்டப்பட்டிருக்கும். சாய்வணைக்கதிரைக்குப் பக்கத்தில் ஒரு குட்டி மேசையும், இவனுக்கான கதிரையும் இருக்கும். மேசைக்குக்கீழே விரிக்கப்பட்டிருக்கும் பொலித்தீன் கடதாசி மீது சில தட்டுமுட்டுச் சாமான்களுடன் நாலைந்து புத்தகங்களும், அன்றைய புதினப்பத்திரிகையும் வாசிப்புக்காக இருக்கும்.

இன்று நியூமனைக் காணவில்லை. மனோகரனுக்கான கதிரை போடப்பட்டிருந்தது. தயங்கியபடியே அதற்கண்மையில் போய் நின்று, சுற்றுமுற்றும் பார்த்தான். வீட்டுக்கதவு திறந்து கொண்டது. நியூமன் வெளியே வந்தார். இவனுக்காகவே ஜன்னலிற்குள்லால் பார்த்துக் கொண்டு நின்றிருப்பார் போலும்.

இலங்கைச் செய்திகள்


ஐந்து மாணவர் கடத்தல் விவ­காரம்: கடற்­படை அதி­காரி ஒருவர் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது

19 ஆவது திருத்தத்திற்கு அங்கீகாரம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அமைச்சரவை பணிப்பு

ரவிராஜ் எம்.பி. கொலை: 3 கடற்­ப­டை­யினர் கைது

30 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை கட்டளை 53 வாக்குளால் நிறைவேற்றம்: கூட்டமைப்பு ஆதரவு

யாழில் நீர் அருந்திய பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உலகச் செய்திகள்


பாகிஸ்தானின் லாகூர் நகரிலுள்ள தேவாலயங்கள் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல்கள்; 14 பேர் பலி

நைஜீரிய கிராமத்தில் துப்பாக்கிதாரிகள் தாக்குதல்; 95 பேர் உயிரிழப்பு

ஆப்கானில் தலிபான் தற்கொலை குண்டுதாரி தாக்குதல்; 7 பேர் பலி; 40 பேர் காயம்





தமிழ் சினிமா


மகாபலிபுரம்


தமிழ் சினிமாவில் நண்பர்களின் கதை இதுவரை பல வந்துள்ளது. அந்த வகையில் இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மகாபலிபுரம்.
கதை
கருணா, ரமேஷ், கார்த்திக் ஆகியோர் டூரிஸ் கைடாக வேலை பார்த்து வருகிறார்கள். வெற்றி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வெற்றியும் அங்கனாவும் காதலித்து வர, இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், நண்பர்கள் இவர்களுக்கு திருமணம் செய்து வைத்து தனி வீட்டில் தங்க வைக்கிறார்கள்.
சிற்பம் செதுக்கும் தொழில் செய்து வரும் விநாயக், நாயகி விர்த்திகாவை பார்க்கிறார். பார்த்தவுடனே அவர் மீது காதல் கொள்ள, வழக்கம் போல் முதலில் விநாயக் காதலை மறுக்கும் விர்த்திகா, பின்னர் காதலை ஏற்றுக் கொள்கிறார்.
இந்நிலையில் நண்பர்கள் எல்லோரும் இண்டர்நெட்டில் படம் பார்க்கும் பொழுது, வெற்றியின் மனைவியான அங்கனாவின் ஆபாசப் படத்தை பார்க்கிறார்கள். இதைப் பார்த்து அதிர்ச்சியடையும் வெற்றி, வீட்டிற்குச் சென்று அங்கனாவை பார்க்கிறார். ஆனால் அங்கனாவோ வீட்டில் பிணமாக கிடக்கிறார். இதைப் பார்த்த வெற்றியும் மாடியில் இருந்து விழுந்து இறந்து விடுகிறார். இதனால் நண்பர்கள் மனவேதனை அடைகிறார்கள்.
அதன்பின்னர், கருணாகரன் கவுன்சிலராக வேண்டும் என்று துரையிடம் கேட்கிறார். வெளிநாட்டினருடன் இணைந்து போதை மருந்து தொழிலில் ஈடுபட்டு வரும் துரை, விநாயக்கின் காதலியான விர்த்திகாவை தன் வெளிநாட்டு நண்பர்களுக்கு விருந்தாக அழைத்து வரும்படியும் இல்லையெனில் கவுன்சிலர் பதவியை விநாயக்கிடம் கொடுப்பதாக கருணாகரனிடம் துரை கூறுகிறார்.
கவுன்சிலர் பதவிக்கு ஆசைப்பட்டு கருணாகரனும் விநாயக் காதலியான விர்த்திகாவிடம் பொய் சொல்லி துரையின் இடத்துக்கு அழைத்து வருகிறார். அதன்பின் அங்கு என்ன நடந்தது? நண்பர்களின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதை பல்வேறு திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.
க்ளாப்ஸ்
கருணா மற்றும் அவருடைய நண்பர்களாக வருபவர்களின் காமெடி நன்றாக உள்ளது. மேலும் கர்ணாவின் வில்லன் முகம் ரசிகர்களுக்கு புதிதாக உள்ளது. விர்த்திகா யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கே பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். ஒளிப்பதிவாளரும் தன் பங்கிற்கு மகாபலிபுரத்தை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார்.
பல்ப்ஸ்
திரைக்கதை சில இடங்களில் தடுமாறுகிறது. பார்த்து பழகி போன சில காட்சிகள்.
மொத்தத்தில் மகாபலிபுரத்திற்கு ஒரு முறை ட்ரீப் அடிக்கலாம்.
ரேட்டிங்-2.75/5
நன்றி  cineulagam