துர்க்கை அம்மன் ஆலய தீர்தோர்த்சவம் 10ம் நாள்

.
  துர்க்கை அம்மன் ஆலய 10ம் நாள் அலங்கார உற்சவம் தீர்தோர்த்சவ மாக திங்கட்கிழமை  பகல்  இடம் பெற்றது. தீர்த்த தடாகம் அமைக்கப்பட்டு பூக்களாலும் வாழை தோரணங்களாலும் அதை அலங்கரித்து அம்பாள்  தீர்த்தமாடிய காட்சி கண்கொள்ளா  காட்சியாக இருந்தது. கோவில் நிறைந்த பக்தர்களுடன் நாதஸ்வர இசை முழங்க துர்க்கை அம்மன்  வீதி உலா வந்த காட்சியும் கண்கொள்ளா  காட்சியாக இருந்தது. 

வேலை நாளாக இருந்தும் பக்தர்கள் நிறைந்த விழாவாக இருந்தது. இந்த தீர்த்த உற்சவத்தை காலை 11.30 மணியில் இருந்து 12.30 மணிவரை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடி அஞ்சல் செய்திருந்தது.




துர்க்கை அம்மன் ஆலய அலங்கார உற்சவம் 9ம் நாள்

.

துர்க்கை அம்மன் ஆலய 9ம் நாள் அலங்கார உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம் பெற்றது. கோவில் நிறைந்த பக்தர்களுடன் நாதஸ்வர இசை முழங்க துர்க்கை அம்மன்  வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளா  காட்சியாக இருந்தது.  


துர்க்கை அம்மன் ஆலய அலங்கார உற்சவம்  16.02.2013 சனிக்கிழமை ஆரம்பமானது. தொடர்ந்து 12 நாட்கள் இடம்பெறும் இந்த அலங்கார உற்சவம் 27.02.2013 புதன் கிழமை இடம்பெறும் வைரவசாந்தியூடன் நிறைவடைய உள்ளது. நாள்தோறும் இரவு 5மணிக்கு அம்பாளுக்கு அபிசேகமும் அதனைத் தொடர்ந்து 7 மணிக்கு பூசையூம் இடம்பெற்று நாதஸ்வர தவில் கச்சேரியூடன் அம்பாள் வீதிஉலாவரும் காட்சி இடம் பெறுகின்றது.




தமிழ் முழக்கம் வானொலியின் நிதி சேகரிப்பு 2013




தமிழ் முழக்கம் வானொலி  நேற்றைய தினம் 23.02.2013 சனிக்கிழமை இரவு 8.00 மணியில் இருந்து 10.00 மணிவரையான வழமையான ஒலிபரப்பு நேரத்தில் நிர்வாக செலவுகளுக்காக ஒரு நிதி சேகரிப்பு நிகழ்ச்சியை நடாத்தியது .இதில் அனைத்து தமிழ்முழக்க வானொலி அறிவிப்பாளர்களும் கலந்து கொண்டார்கள். தமிழ்முழக்க வானொலியின் இரண்டு கலையகங்களி லிருந்தும் அவு ஸ்ரேலிய  தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கலையகத்திலிருந்தும் ஒரே  வேளையில் மக்களோடு வானொலியூடாக  தொடர்பு கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



ஒரு கோடையின் கனவு


.



  
சித்தாந்தன் 

இன்னும் மீதமிருக்கும்
ஒரு கோடையின் கனவு
அந்தியின் நிழலுருக்களாய் அசைகின்றது

நடைவழியில் முகம் திருப்பிய
ஒரு முதியவனின் அகாலப் புன்னகை
தூக்கங்களில் மிதந்து வருகின்றது

'யாரோடும் யாருமில்லை'யென
யாரோ சுவரில் எழுதிய மகா வாக்கியங்கள்
ஞாபகக் காட்டில் புதராய் முளையிடுகின்றன

வேரற்ற கனவு மரத்தின்
இலைகளை உதிர்த்துப் பூக்களைச் சூடும்
சிறுமியின் புன்னகை முகம்
வாழ்வைப் பெரும் கதையாகச் சொல்கிறது

யாரும் உலாவாத நிராதர வெளியில்
இரண்டு பட்ஷிகள்
பசியின்தருணங்களை மேய்கின்றன

இன்னும் இன்னுமாய்
நீளும் பாலையின் எரியும் வர்ணத்தோடு
வாழ்க்கை
ஒரு கொடுங்கனவின்
மூன்று காலத்தோடு
ம்

Anbaalayam - Ilam Thendral 2013 02.03.2013


வானவில்




2013 ஆம் ஆண்டின் “வானவில்” இசை நடன நிகழ்ச்சி மார்ச் மாதம் 3ஆம் திகதி மாலை 5 மணிக்கு
Ringwood, George Wood Performing Art Centre ல் நடைபெறவுள்ளது.



உலகை உறைய வைத்த ஒளிப்படங்கள்!

.

உலகை உறைய வைத்த ஒளிப்படங்கள்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதான இளைய மகன் பாலச்சந்திரன், உயிருடன் பிடித்து கொல்லப்பட்டதாகப் புதிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளார் சனல் 4 தொலைக்காட்சியில் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வரும் இயக்குனர் கெல்லம் மக்ரே.
தமக்கு கிடைத்த நான்கு ஒளிப்படங்களில் மூன்றை, அவர் கடந்த 19ம் திகதி லண்டனில் இருந்து வெளியாகும் தி இன்டிபென்டன்ற் மற்றும் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு வெளியாகும் தி இந்து ஆகிய நாளிதழ்களில் வெளியிட்டுள்ளார்.
முதலிரு படங்களிலும், சுற்றிவர மண்மூடைகள் அடுக்கப்பட்டுள்ள பதுங்கு குழி ஒன்றினுள், பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் மரப்பலகை ஆசனம் ஒன்றின் மீது அமர்ந்துள்ள காட்சிகள் பதிவாகியுள்ளன.
அதில் ஒன்றில், கையில் தின்பண்டப் பொதி ஒன்றுடன் மிரட்சியுடன் வெறித்துப் பார்க்கும் காட்சியும், அவருக்கு முன்னே நிற்கும் இலங்கை இராணுவத்தைச் சோ்ந்த ஒருவரின் சீருடையின் ஒரு பகுதியும் அவரது ஒரு கையும் பதிவாகியுள்ளன.
கிட்டத்தட்ட அதையொத்த சூழலில் உள்ள அடுத்த ப்டத்தில், பாலச்சந்திரன் தனது கையில் இருந்த தின்பண்டப் பொதியில் இருந்து எதையோ எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் காட்சி உள்ளது.
இந்த இரண்டு படங்களிலும், அவரது உடலில் மேலாடை ஏதும் இல்லை. காற்சட்டை மட்டும் அணிந்துள்ளார். தோளில் ஒரு சாரம் போர்த்தியுள்ளார்.
அடுத்த படம், பாலச்சந்திரன் நெஞ்சில் நான்கு துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த நிலையில் இறந்து கிடக்கும் காட்சியைக் கொண்டது.
கரடு முரடான வெறும் நிலத்தில் கிடக்கும் அவரது உடலைச் சுற்றி, இரண்டு இராணுவச் சப்பாத்து அணிந்தவர்களினதும், சாதாரண செருப்பு அணிந்த இருவரினதும் பாதங்களின் சில பகுதி தென்படுகின்றன.
இன்னொருவரின் நிழல் பாலச்சந்திரனின் உடல் மீது தெரிகிறது.

சிட்னி முருகன் கோவிலில் கேஷிகா அமிர்தலிங்கத்தின் இன்னிசைக் கச்சேரி

.


வாழ்க்கை நிகழ்வுகள் ரத்னா ஸ்டோர்சும் நானும் ஜெயந்தி


.

நேற்று தனியாக டிநகர் சென்றிருந்தேன். எப்போதும் வீட்டிலிருந்து யாராவது உடன் வருவார்கள். நேற்று அனைவருக்கும் ஏதோ காரணத்திற்காக வரமுடியாத சூழ்நிலை. சரி நம்மளே போயிட்டு வந்திரலாம்னு போயிட்டேன்.

வீட்டிற்குத் தேவையான பாத்திரங்கள் கொஞ்சம் வாங்க வேண்டி இருந்தது. ரங்கநாதன் தெருவில் உள்ள ரத்னா ஸ்டோருக்குச் சென்றேன். நாங்க எப்பவும் அங்கேதான் பாத்திரங்கள் வாங்குவோம். கையில் ஒரு கட்டை பேக். வாங்க வேண்டியசாமான்களுக்கான லிஸ்ட். மணிபர்ஸ் எல்லாம் இருந்தன. லிஸ்ட்டைப் பார்த்து ஒவ்வொரு சாமானாக பார்த்து எடுத்துக்கொண்டிருந்தேன். தேவையான அளவு, பார்க்க நன்றாக இருக்கிறதா என்று தேடித்தேடி வாங்கிக்கொண்டிருந்தேன். எனக்கு கடையில் உள்ள ஒரு பெரியவர் உதவி செய்தார். அவரும் நானுமாக தேவையான பொருட்களையெல்லாம் வாங்கி முடித்தாயிற்று. இன்னொரு பொருள் நான்காவது மாடியில்தான் இருக்கிறது என்றார். நானும் நான்காவது மாடிக்குச் சென்றேன். அங்கே பொருளை வாங்கிவிட்டு பர்சைப் பார்த்தேன். கையில் பர்ஸ் இல்லை.

கீதா வகுப்புக்கள் (அத்தியாயம் 13 தொடக்கம் 18 வரை)



கீதா வகுப்புக்கள் (அத்தியாயம் 13 தொடக்கம் 18 வரை) ஆங்கிலத்தில் ஸ்ரீ வாசுதேவசர்யா அவர்களால் ஹெலன்ஸ்பேர்க் வெங்கடேசர் ஆலயத்தின் ஆதரவில் நடாத்தப்படும்.

இடம் : டாசி வீதி ஆரம்ப பாடசாலை டாசி வீதி வென்ற்வேர்த்வில் 2145

நேரம் : பிற்பகல் 3மணி தொடக்கம் பிற்பகல் 5.30மணி வரை

காலம்: மார்ச் மாதம் 3ம் 10ம் 17ம் ஏப்ரல் மாதம் 7ம் 14ம் 21ம் மே மாதம் 5ம் 12ம் 19ம் யூன் மாதம் 2ம் 9ம் 16ம் 30ம் யூலை மாதம் 7ம் 14ம் 21ம் ஓகஸ்ட் மாதம் 4ம் 11ம் திகதிகளில் நடைபெறும். 

அனுமதி இலவசம்.

வானொலி மாமாவின் குறளில் குறும்பு 55 சினங்காப்பது எங்கே!



ஞானா: ….ம்…..சினம் தீது…அது சரி. கோபப்பட்டால் Blood pressure   ஏறும். நாடி நரம்புகள் முறுக்கேறும். நெஞ்சு படபடக்கும். உயிருக்கே ஆபத்து வந்தாலும் வரும். ஆதனாலைதான் வள்ளுவப் பெருந்தகை வெகுளாமை எண்டு ஒரு அதிகாரமே எழுதியிருக்கிறார். ஆனால்…

அப்பா: என்ன ஞானா? வள்ளுவற்றை வெகுளாமை எண்ட அதிகாரத்திலை என்ன பிழை?

ஞானா: அதிலை அப்பா…. அதாவது வந்து கோபத்தை நாங்கள் எப்பபோதும் எந்தநிலையிலும் அடக்க வேணும்தானே.

அப்பா: உண்மைதான் ஞானா. அதிலை உனக்கேன் சந்தேகம்?

ஞானா: திருவள்ளுவர்…… “செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கினென் காவாக்கா லென்” எண்டெல்லே சொல்லியிருக்கிறார். அப்பிடி எண்டால் கோபத்தைக் காட்ட கூடிய இடத்திலை காட்டாதையுங்கோ மற்ற இடகங்களிலை கோபத்தைக் காட்டினாலும் சரி காட்டாவிட்டாலும் சரி எண்டேல்லோ சொல்லிறார்.

ரயில் பெண் - அ.முத்துலிங்கம் -

.


கனடாவில் அவனுக்கிருந்த முதல் பிரச்சினை அங்கே பனிக்காலம் ஒவ்வொரு வருடமும் வருவதுதான். அவன் மலிவான கோட்டும், மலிவான உள்ளங்கியும், மலிவான சப்பாத்தும் அணிந்திருந்தான். பாதாள ரயிலில் பிரயாணம் செய்தபோதும் அவன் உடம்பு நடுங்கியது. அவனுடைய அகதிக்கோரிக்கை வழக்கை வாதாடும் வழக்கறிஞரிடம் அவன் மூன்றாம் தடவையாகப் போகிறான். அவன் அவரிடம் எழுதிக் கொடுத்தது உண்மைக் கதை. அதை அவரால் நம்பமுடியவில்லை என்றார். அவனுடைய கதையை கிழித்தெறிந்துவிட்டு வழக்கறிஞரே ஒரு புதுக்கதை எழுதினார். அவருக்கு ஆதாரங்கள் தேவையாம். ஆகவே முன்கூட்டியே ஆதாரங்களை சேகரித்து வைத்துக்கொண்டு தன் கற்பனையை விரித்து அதற்கேற்ற மாதிரி புதுக்கதை தயாரித்தார். அதைத்தான் கோர்ட்டு நிராகரித்துவிட்டது. 
அவன் இறங்கவேண்டிய ஸ்டேசன் வருவதற்கு 20 நிமிடம் இருந்தபோது அந்தப் பெண் ஏறினாள். அவளைக் கண்டதும் அவன் கால்கள் உதறத் தொடங்கின. அவன் இருதயம் ரயில் சத்தத்தையும் மீறி அவன் காதுக்கு கிட்டவாக அடித்தது. குளிரில் கால்கள் நடுங்குகின்றன என முதலில் நினைத்தான். அவள், அவனைப் போலவே பொது நிறம் உள்ளவள். மிருதுவான தோலங்கியும், எந்தப் பனியையும் சமாளிக்கக்கூடிய பூட்சும் அணிந்திருந்தாள். ஒரு முறை கண்களை எறிந்து அவனைப் பார்த்தாள். பின்னர் தன் பையிலிருந்த ஒரு புத்தகத்தை கையிலே எடுத்து படிக்க ஆரம்பித்தாள். அது  பாடப் புத்தகம் போல இருந்தது. அடுத்து வந்த ஸ்டேசனில் ரயில் நிற்க அவள் இறங்கினாள். அவனுடைய நெஞ்சு நிற்கவில்லை, தொடர்ந்து படபடவென்று அடித்தது. அப்பொழுது தீர்மானம் செய்துகொண்டான். கனடாவில் தற்கொலை செய்வதென்றால் அது அவள் பயணிக்கும் பாதாள ரயிலுக்கு கீழேதான். 

தமிழ்த் தாத்தாவின் பிறந்த நாள் நினைவாக! : நிலவிலே மலர்ந்த முல்லை

.

பத்துப் பாட்டுக்குப் பட்ட பாடு இது!
நிலவிலே மலர்ந்த முல்லையை உ.வே.சா. விவரித்த விதம் இது!
உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்த நாள் நினைவாக இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது. பத்துப்பாட்டு ஏட்டுச் சுவடி தேடி நடையாய் நடந்து, திருநெல்வேலி மண்ணில் தாமிரபரணிக்கரையில், வேதம் தமிழ் செய்த மாறன் என்றும், திராவிட வேதம் படைத்த மாறன் என்றும் போற்றப்படும் சுவாமி நம்மாழ்வார் அவதரித்த மண்ணில் அந்தச் சுவடி கிடைக்கப் பெற்றதும், உ.வே.சா. அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவர் இதனை இந்தக் கட்டுரையில் விவரிக்கிறார்.
முல்லை மலரானது, நிலவு காயத் தொடங்குகையில் இதழ் விரித்து மலர்ச்சி காண்கிறது. இங்கும் அப்படியே! நிலவு தனது பட்டொளியால் நிலத்தைக் குளிர் ஒளியில் ஆழ்த்தியிருக்க, அந்த இரவு நேரத்தில் ஓலைச் சுவடியை எடுத்துப் படிக்கும்போது, முதல் எழுத்தே பத்துப் பாட்டில் ஒன்றான முல்லைப் பாட்டு உ.வே.சா. ஐயரின் கண்களில் தெரிகிறது. ஆர்வ மிகுதியால் எடுத்துப் படித்தவர், இந்தக் கட்டுரைக்கான தலைப்பையும் அவ்வாறே இருபொருள்படக் கொடுத்துள்ளார். நிலவில் மலர்ந்த முல்லைப் பாட்டு என்று!

ஹெலன்ஸ்பேர்க் கோவிலில் 1008 கலச அபிசேகம்





ஆழ்வார் திவ்விய பிரபந்தம் - பகுதி 3 - மதி



தாய் புழுதியளைந்த மேனியுடன் காணும் பொழுது பெரிதுவைப்பதும் மாணிக்கமே என் மணியே என அழைப்பதும் வாத்சல்ய பாவனை உச்சநிலையில் உள்ளம் உருகி நிற்பதைக் காட்டி நிற்கின்றது.

இளம் பராயத்திலிருந்தே பூஞ்செடிகள் தானே வளர்த்து பெருமாளுக்கு மாலைகள் தொடுத்து பூசாரியிடம் கொடுத்து தனி இன்பம் காண்பவர். பின்னர் பூந்தோட்டத்தைப் பெரிதாக்கி மேலும் அழகிய பூங்கன்று, செடிகளை வளர்த்தார். பெருமாளுக்குகந்த துளசி செடிகளையும் அதிகம் வளர்த்தார். ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலையில் பூக்கொய்யப்போயிருந்த சமயம் சிறிய குழந்தையின் குரல் அங்கு கேட்டது. குரல் கேட்கும் திசை நோக்கி விரைந்த பெரியாழ்வார் துளசிச்செடியில் பட்டுத்துணியினால் சுற்றப்பட்டிருந்த அழகிய ஒரு பெண் குழந்தையைக் கண்டு அன்போடு தூக்கியணைத்து பெற்றோர் யாராவது அங்கு நிற்கின்றனரா என எங்கும் பார்த்தார். ஒருவரும் தென்படவில்லை. அன்று ஆடிப்பூரம். குழந்தையை அன்போடு அணைத்துக் கொண்டு போய் தம் மனைவியாரிடம் கொடுத்தார். இறைவனைக் குழந்தையாகப் பாவனை பண்ணிப் பக்திபரவசத்தில் பாடும் ஆழ்வாருக்குப் பிள்ளைகளில்லை. இக்குழந்தை கிடைத்ததும் அத்தம்பதியினர் பெருமகிழ்வெய்தினர். குழந்தை பூமியிலிருந்து கிடைக்கப்பெற்றமையால் கோதை என நாமமிட்டனர். கோதையும் பெரியாழ்வார் எம்பெருமானைப் பக்தியோடு பாடும் பாடலகளையும் அவரைப்பற்றிய கதைகளையும் கேட்டு நாராணன் சிந்தையாகவே வளர்ந்தாள் கோபியர் கண்ணன் கதைகள் அவள் உள்ளத்தைக் கவர்ந்தன. அவள் தானும் கண்ணனைத்தான் மணப்பேனென்று கூறும் போதெல்லாம் அவரும் உடன் பாடாயிருந்தார். ஆனால் கொஞ்சம் வளர்ந்தபின் பெரியாழ்வாருக்குச் சோதனையாய் போயிற்று.

ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை’

.

‘ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை’ (கற்பனைப் படைப்பு- ச.சுவாமிநாதன்)
புலவர்கள் மாநாட்டுக்கு வருகை தந்த அனைவருக்கும் வணக்கம். என் பெயர் நக்கீரன். ‘நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று சிவ பெருமானையே கண்டித்தவன் நான். ‘சங்கு அறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்?’ என்று சிவனையே தட்டிக் கேட்டவன் நான். கவனமாக உண்மையை மட்டும் பேசுங்கள். இன்றைய தலைப்பு:
“ ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை ”:
1.சேக்கிழார்: என் பெயர் சேக்கிழார். நான் முதலில் பேசிவிடுகிறேன். நான் எழுதிய பெரிய புராணத்திலிருந்து ஒரு சில வரிகள்:
அளவு கூட உரைப்பரிதாயினும்
அளவிலாசை துரப்ப அறைகுவேன்
Though impossible to reach its limits
Insatiable love(desire) drives me to the task
2.கம்பன்: என் பெயர் கம்பன். நான் எழுதிய ராமாயணத்தில் சேக்கிழார் அய்யா சொன்னதையே சொல்லி இருக்கிறேன்:
ஆசைபற்றி அறையலுற்றேன் மற்றிக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ!
3.அப்பர் பெருமான் எழுந்தார். கருவில் இருந்தபோதே எனக்கு ஒரு ஆசை:
“கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு
உருகிற்றென் உள்ளமும்.........................”
4.என் பெயர் அருணகிரிநாதன். சுமார் 550 ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் தறுதலைக் காலியாகத் திரிந்தேன். வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்ய கோபுரத்தில் இருந்து குதித்தபோது முருகன் அருள் பெற்று திருப்புகழ் பாடினேன். இதோ ஆசை பற்றி:
புலையனான மாவீனன் வினையிலேகு மாபாதன்
பொறை இலாத கோபீகனந்---------- முழு மூடன்
புகழிலாத தாமீகன் அறிவிலாத காபோதி
பொறிகளோடி போய்வீழு------------- மதி சூதன்
நிலையிலாத கோமாளி கொடையிலாத ஊதாரி
நெறியிலாத வேமாளி—-------------  குலபாதன்
நினது தாளை நாடோறு மனதில் ஆசை வீடாமல்
நினயுமாறு நீமேவி---- யருள்வாயே
4444444

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்: உயிரோடு பிடிக்கப்பட்டு சுட்டுக்கொலை


.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்: உயிரோடு பிடிக்கப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளான்! - தெ இண்டிப்பெண்டண்ட் பத்திரிகை
balachandranமுள்ளிவாய்க்காலின் இறுதிநேரக் கொடூரக் காட்சிகளால் உலகமே அதிர்ச்சியுற்றிருக்கையில், இப்போது கிடைத்திருப்பவை இதயத்தை ஒருகணம் நிறுத்தி வைக்கக் கூடிய அதி கொடூரங்கள் நிறைந்த காட்சிகள் என The Independent  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு சந்தைப் பகுதியில் தொலைந்து போன சிறு குழந்தை போல் ஒரு மூலையில் அந்தச் சிறுவன் இருத்தி வைக்கப்பட்டுள்ளான். அவனுக்கு ஏதோ சிற்றுண்டி கொறிக்க வழங்கப்பட்டிருக்கின்றது. அவன் நிமிர்ந்து பார்க்கிறான். யாராவது தெரிந்த முகங்கள் தென்படாதா என்ற ஓர் ஏக்கம் அவன் விழிகளில்.

அந்தச் சிறுவன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் புதல்வன் பாலச்சந்திரன். 12 வயதுடைய சிறுவன். புதிய ஆதாரப் புகைப்படங்கள் ஒரு நெஞ்சை உருக்கும் கதையைச் சொல்கின்றது.

தமிழ் சினிமா

கடல் 

தேவதூதனுக்கும், சாத்தானுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் நுழையும் ஒரு இளைஞனின் வாழ்க்கை என்ன ஆனது என்பதே படத்தின் கதை.
பாதிரியார் பயிற்சி பள்ளிக்கு பாதிரியராக சேவை புரிய பயிற்சி எடுக்க வரும் அரவிந்த்சாமி, அந்த பள்ளியில் தன் குடும்ப வறுமை காரணமாக சற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் பாதிரியாராக பயிற்சி எடுத்து வரும் அர்ஜுனை சந்திக்கிறார்.
ஆரம்பம் முதலே இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.
இந்நிலையில், ஒரு பெண்ணுடன் அர்ஜுன் நெருக்கமாக இருப்பதை பார்த்துவிட்ட அரவிந்த்சாமி தலைமை பாதிரியாரிடம் அதை தெரிவித்து விடுகிறார்.
ஆத்திரத்தில் அரவிந்த் சாமியை கொன்றுவிட நினைக்கும் அர்ஜுன் பாவத்தின் வேதனையை அரவிந்த்சாமி அனுபவிக்க வேண்டும் என்றுகூறி அவரை விட்டுவிடுகிறார். தப்பு செய்ததற்கு பிரயாச்சித்தமாக அந்த பயிற்சி பள்ளியை விட்டு வெளியேறுகிறார் அர்ஜுன்.
சில வருடங்கள் கழிகிறது. நாகர்கோவில் அருகே ஒரு கடற்கரை கிராமத்தில் விலைமாது என்ற பட்டத்துடன் ஒரு பெண் இறந்து போகிறாள். அவளது குழந்தையை அந்த கிராமமே அனாதை, விலைமாது மகன் என்று கூறி உதாசீனப்படுத்துகிறது.
இந்நிலையில் அந்த கிராமத்தில் இருக்கும் ஆலயத்திற்கு பாதிரியராக வரும் அரவிந்த்சாமி, கடவுள் பற்று இல்லாத கிராம மக்களுக்கு கடவுள் நம்பிக்கை அளிக்கிறார்.
குப்பைக் கிடங்காக காட்சியளிக்கும் ஆலயத்தை சுத்தம்செய்து புனித இடமாக மாற்றுகிறார். சில நாட்களில் பாதிரியாரின் நடவடிக்கைகள் கிராம மக்களுக்கு பிடித்துப்போகவே அவரை சாமியாராக ஏற்றுக்கொள்கிறார்கள்.
அனாதையாக சுற்றித்திரியும் நாயகனுக்கும் முதலில் பாதிரியார் மீது கோபம் வருகிறது. அதன்பின் அரவிந்த்சாமி சில அறிவுரைகளை கூறும்போது அதை அவன் ஏற்று நல்லவனாக மாறுகிறான். பின், அரவிந்த்சாமியே அவனை மீன்பிடித் தொழிலில் சேர்த்துவிட்டு பெரியவனாக்குகிறார்.
பெரியவனாகும் நாயகன் கௌதம் கார்த்திக் எதேச்சையாக ஒரு பேருந்து பிரயாணத்தில் துளசியை சந்திக்க, பார்த்தவுடனே காதல் கொள்கிறார்.
அடுத்தடுத்த சந்திப்புகளில் இருவரும் நெருக்கமாக பழக, குழந்தைத் தனத்துடன் வெகுளியாக பேசும் துளசியின் பேச்சில் மயங்கும் கௌதம் அவளை ஒருதலையாக காதலிக்கிறான்.
ஒருநாள், கிராமத்துக் கடற்கரையில் குண்டு பாய்ந்து கிடக்கும் அர்ஜுனுக்கு, யாருக்கும் தெரியாமல் ஒரு பெண்ணுடன் இணைந்து அரவிந்த் சாமி சிகிச்சை செய்கிறார்.
ஆனால் உதவி செய்த அரவிந்த் சாமிக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி அவரை அவமானப்படுத்தி சிறைக்கு செல்ல வைக்கிறார் அர்ஜுன்.
ஆதரவாக இருந்த பாதிரியார் சிறைக்கு சென்றதற்கு கிராம மக்கள்தான் காரணம் என்று அவர்களிடம் சண்டைக்கு போகிறான் கௌதம் கார்த்திக். இறுதியில், அவனை அடித்து தூக்கிப் போடுகிறார்கள் கிராம மக்கள்.
அதன்பின், அர்ஜுன் முன் நிறுத்தப்படும் கௌதம் கார்த்திக் தனக்கு ஆதரவாக யாருமே இல்லாத பட்சத்தில் அர்ஜுனனிடமே சேருகிறான்.
பாவம் ஒன்றை மட்டுமே செய்யவேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட அர்ஜுனிடம் சேர்ந்த கார்த்திக்கும் தொடர்ந்து பாவங்கள் செய்கிறான். ஆனாலும், துளசியிடம் இவன் கொண்ட காதல், இவனை அந்த பாவத்திலிருந்து வெளியே வர துணிவு கொடுக்கிறது.
இறுதியில், அர்ஜுன் என்ற சாத்தானிடம் மாட்டிக்கொண்ட கௌதம் அதிலிருந்து விடுபட்டனா? ஜெயிலுக்கு போன அரவிந்த்சாமி என்ன ஆனார்? கௌதம்- துளசி காதல் என்னவாயிற்று என்பதே மீதிக் கதை.
நீண்ட இடைவெளிக்குப் பின்பு சினிமாவில் மறுபிரவேசம் எடுத்திருக்கும் அரவிந்த்சாமிக்கு, இந்த படத்தில் தன்னுடைய நடிப்பிற்கு தீனி போடுகிற கதாபாத்திரம்தான். அதையும் சரியாக, கனகச்சிதமாக செய்திருக்கிறார். இன்னும் சிரிப்பில் வசீகரத்தை அள்ளி வைத்திருக்கிறார்.
மேஜைக்காராக அர்ஜுன், பாவம் என்ற வழியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும் என்ற கதாபாத்திரம், கண்ணில் உக்கிரம், உதடுகளில் ஆக்ரோஷமான பேச்சு என்று மிரட்டியிருக்கிறார்.
அழகாக இருக்கும் கௌதம் கார்த்திக் காதல், சண்டை, ஆட்டம் என்று இளமை துடிப்புடன் மிடுக்கான தோற்றத்தில் இருந்தாலும் சுமாரான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மனவளர்ச்சி குன்றிய பெண்ணாக நடித்திருத்திருக்கும் துளசி நாயர், பேச்சில் குழந்தை தனம் காட்டும் இவரது நடிப்பு ரசிக்கவைக்கிறது. ஆனாலும், எதிர்பார்த்த அளவுக்கு நடிப்பில் கவனம் செலுத்தவில்லை என்று தோன்றுகிறது.
இயக்குனர் மணிரத்னம் படங்களிலேயே சற்று வித்தியாசமான படமாக இப்படம் வெளிவந்திருக்கிறது. வட்டார வழக்கு மொழியை படம் முழுவதும் நேர்த்தியாக கையாண்டு, கடைசிவரை கொண்டுபோய் கரை சேர்த்திருக்கிறார்.
ஆனால், இவருடைய படங்களுக்கே உரித்தான ஒரு வரி வசனங்கள், நெஞ்சைத் தொடும் காட்சிகள் இப்படத்தில் மிஸ்ஸிங். நீண்ட இடைவெளிக்குப் பின்பு தமிழில் நேரடியாக படம் எடுத்ததால், கொஞ்சம் திணறியிருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தவில்லை. ராஜீவன் ஒளிப்பதிவுதான் இப்படத்தின் மிகப்பெரிய பலம், படத்தின் கதையோடு நம்மை ஒன்ற வைக்கிறார்.
மீனவ கிராமம், பாழடைந்த ஆலயம் என்று எல்லாவற்றையும் தன் கமெரா கண்களால் அழகாக காட்டியிருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஏற்கெனவே பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக இருந்தன. ஆனால், அதை எப்படி காட்சிப்படுத்தப் போகிறார்கள் என்ற சந்தேகம் இருந்தது. அதை ஓரளவுக்கு நிறைவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக, ‘மூங்கில் தோட்டம்’, ‘ஏலே கீச்சான்’ ஆகிய பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் ரசனை.
மொத்தத்தில் கடல் அழகு, ஆழமில்லை.
நடிகர் : கௌதம்
நடிகை : துளசி நாயர்
இயக்குனர் : மணிரத்னம்
இசை : ஏ.ஆர்.ரகுமான்
ஓளிப்பதிவு : ராஜீவ் மேனன்
நன்றி விடுப்பு  

இலங்கைச் செய்திகள்




வடக்கில் காணிகள் சுவீகரிக்கப்படும்: ருவான் வணிகசூரிய

பாலச்சந்திரன் புகைப்பட எதிரொலி: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் மீது தாக்குதல்!

மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பாலச்சந்திரனின் விவகாரம் கொண்டு வரப்படும்

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை


வடக்கில் காணிகள் சுவீகரிக்கப்படும்: ருவான் வணி
இராணுவ முகாம்கள் நாட்டுக்கு அவசியம் என்பதால் முகாம்கள் அமைந்துள்ள காணிகள் கையகப்படுத்தப்படும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.