வரவேற்போம் வாருங்கள் ! - எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண்



தைபிறந்தால் வழிபிறக்கும் 
               தானென்று நாம்நினைப்போம்
        தைமகளும் சேர்ந்துநின்று
               சித்திரையை வரவேற்பாள்
         பொங்கலொடு கிளம்பிவரும் 
                புதுவாழ்வு தொடங்குதற்கு
         மங்கலமாய் சித்திரையும்
                 வந்துநிற்கும் வாசலிலே  ! 


         சித்திரை என்றவுடன் 
                அத்தனைபேர் மனங்களிலும் 
         புத்துணர்வு பொங்கிவரும் 
                புதுத்தெம்பு கூடவரும் 
         எத்தனையோ மங்கலங்கள்
                 எங்கள்வீட்டில் நிகழுமென 
          மொத்தமாய் அனைவருமே
                   முழுமனதாய் எண்ணிடுவார் !

அன்பாலயம் நடாத்திய இளம் தென்றல் 2018


.

அன்பாலயம் நடாத்திய இளம் தென்றல் 2018 சென்ற சனிக்கிழமை 07 04 2018 அன்று  Blacktown Bowman Hall இல் இடம் பெற்றது .  நீண்ட காலமாக ஈழ மக்களுக்கு உதவி வரும் அன்பாலயம் அமைப்பின் குழுவினர் வழமை போலவே இம்முறையும்  இந்நிகழ்வை சிறப்பாக நடாத்தினார்கள் .  குறிப்பிட்ட நேரத்திற்கு மகேஸ்வரன் பிரபாகரன் ஒலி வாங்கியோடு வந்து நிகழ்வை ஆரம்பித்து வைக்க ஈஸ்ட்வூட் பாடசாலை மாணவர்களின் தமிழ் மொழி வாழ்த்தோடு ஆரம்பமானது .

.


ஈழத்தவருக்குக்கிடைத்த பெருங் கெளரவம்


    எங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள்.
பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை
சைக்கிளிலும் போய்வருவோம்.
 யாழ் கல்விப் பணிமனையிலும், தீவகக் கல்விப் பணிமனையிலும் ஐயாவுடன்
ஒன்றாகவே வேலை செய்திருக்கிறோம்.அவர் அப்பொழுது ஆசிரிய ஆலோசக
ராயும் பின்னர் உதவிக் கல்விப் பணிப்பாளராயும் இருந்திருக்கிறார்.
  அவருடன் சேர்ந்து பாடசாலைகளுக்கு மேற்பார்வை செய்யும் பொருட்டுச்
செல்லுவதென்பது மிகவும் கலகலப்பாக இருக்கும். எந்த வேளையும் ஏதாவது
ஒரு விஷயத்தைச் சுவாரசியமாகச் சொல்லி எங்களையெல்லாம் உற்சாகப்
படுத்தியபடியே இருப்பார். அவர் இருக்கும் இடங்களெல்லாம் சிரிப்புக்கும்
மகிழ்ச்சிக்கும் பஞ்சமே இருக்காது. அதேவேளை அறிவுபூர்வமான விஷயங்
களையும் எமக்கெல்லாம் அள்ளி வழங்குவார்.
  பாடசாலைகளின் தமிழ்த் தினப் போட்டிகளை ஒழுங்கு படுத்துவதில் அவர்
மிகவும் வல்லவர். வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ்த்தினப் போட்டிகளை
நடத்துவதற்கு வடக்குக் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளாரால்
ஐயாவை நியமித்தது -  எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையாகவும் சொல்ல
முடியாத ஆனந்தமாயும் இருந்தது. ஐயாவின் தமிழ் ஆற்றலை நாங்கள் பல
இடங்களில் வியந்து பார்த்திருக்கிறோம்.

தமிழ் புத்தாண்டு விருது அறிவிப்பு

.
தமிழ் வளர்ச்சித் துறையின், 2017ம் ஆண்டுக்கான, தமிழ் புத்தாண்டு விருது பெறும் தமிழறிஞர்கள், தமிழ் அமைப்பு மற்றும் மென்பொருள் நிறுவனபெயர்களை, முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார். தலைமை செயலகத்தில், நாளை நடக்கும் விழாவில், விருதுகள் வழங்கப்பட உள்ளன.
உலக தமிழ் சங்க விருதுகள் : தமிழ் வளர்ச்சித் துறையின், 2017ம் ஆண்டுக்கான, தமிழ் புத்தாண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது போல, 2016, 2017ம் ஆண்டுகளுக்கான, உலகத்தமிழ் சங்க விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரம்:
இலக்கிய விருது ஆண்டியப்பன், சிங்கப்பூர்இலக்கண விருது பெஞ்சமின் லெபோ, பிரான்ஸ்மொழியியல் விருது சுபாஷினி, ஜெர்மனி
2017க்கான விருதுகள்
இலக்கிய விருது சந்திரிகா சுப்ரமணியன், ஆஸ்திரேலியாஇலக்கண விருது உல்ரிகே நிகோலஸ், ஜெர்மனிமொழியியல் விருது மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, ஆஸ்திரேலியா

சொல்லத்தவறிய கதைகள் -- அங்கம் 08 "அஸ்ஸலாமு அலைக்கும் - உங்கள்மீது சாந்தி உண்டாகட்டும்" " எல்லாப்புகழும் இறைவனுக்கே" - முருகபூபதி


சில வருடங்களுக்கு முன்னர்   உலக அரங்கிலும் சர்வதேச சினிமா அரங்கிலும் பிரபலமாக பேசப்பட்ட இரண்டு வசனங்களில் ஒன்று அமெரிக்க முன்னாள்  ஜனாதிபதி பராக் ஒபாமா கெய்ரோவில் உரையாற்றும்போது தொடக்கத்தில் சொன்ன ‘அஸ்ஸலாமு அலைக்கும்.’ மற்றது ‘ஸ்லம் மில்லியணர் டோக்’ திரைப்படத்தின் ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சொன்ன ‘ எல்லாப்புகழும் இறைவனுக்கே’.
 ரஹ்மான் தமிழில் அப்படிச்சொன்னதையும் ஒபாமா தனது வணக்கத்தை அரபு மொழியில் சொன்னதையும் கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பார்கள்.
 மதநல்லிணக்கத்தையும் தேசங்களுக்கிடையிலும் இனங்களுக்கு மத்தியிலும் புரிந்துணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் அமெரிக்காவின் முன்னாள்  ஜனாதிபதி அப்போது  இயங்கிக்கொண்டிருந்தமையால்,  கெய்ரோவுக்கு சென்ற சமயம் பலத்த கரகோசத்திற்கு மத்தியில் "அஸ்ஸலாமு அலைக்கும்" எனச் சொல்லிவிட்டு தனது உரையை ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.
லண்டன் பி.பி.சி. யில் அந்தக்கரவொலியையும் அவரது உரையையும் கேட்டிருக்கின்றேன்.  "எல்லாப்புகழும் இறைவனுக்கே"  என்ற ரஹ்மானின் இஸ்லாமிய மார்க்க வாசகமும் மனிதர்களை பண்படுத்தும் வார்த்தைப்பிரயோகமே.   இருவரதும் உரையின் தொடக்க வசனத்தைக்கேட்டதுமே நானும் பரவசப்பட்டேன்.
இலங்கைத்தமிழர்கள் உலகில் பல நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அவுஸ்திரேலிய ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் எம்மவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் விழாக்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளும் அந்தந்த நாட்டின் வெள்ளை இன அரசியல் மற்றும் தொழிற்சங்கப்பிரமுகர்கள் தமது உரையை ஆரம்பிக்கும் முன்னர் தமிழில் "வணக்கம்" என்று சொல்லிவிட்டுத்தான் ஆங்கிலத்தில் உரையைத்தொடங்குகிறார்கள்.
 அவர்கள் வணக்கம் என்றதும் எம்மவர்களின் கரகோசம் உச்சத்தில் ஒலிக்கும். சமீபத்தில் நான் வசிக்கும் மெல்பனில் நீண்ட காலமாக இயங்கும் பாரதி பள்ளியின் புதிய வளாகத்தின் தொடக்கவிழாவுக்கு வருகைதந்து அதனை அங்குரார்ப்பணம் செய்துவைத்த City of Whittle sea  பிரதேச துணைமேயர் செல்வி எமிலியா ஸ்டெர்ஜோவா  தனது உரையை தொடங்கும்போது கைகூப்பி " வணக்கம், எப்படி இருக்கிறீங்க?" என்றுதான் பேசினார். அங்கிருந்த குழந்தைகள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் புளகாங்கிதத்தால் சிரித்தவாறு கரகோசம் எழுப்பினர்.
அப்படித்தான் ஒபாமா கெய்ரோவில் அந்த பிரம்மாண்டமான மண்டபத்தில் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ சொன்னதும் கரகோசம் எழுந்தது.
 ஏ.ஆர். ரஹ்மான் தமிழில் "எல்லாப்புகழும் இறைவனுக்கே" என்றதும் தமிழர்கள், தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் உள்ளம் பூரித்தார்கள்.

சிட்னி சைவ மன்றம் வழங்கும் செழுந்தமிழ் திருமுறை பண்ணிசை அரங்கம் 16-17/04/2018





Devotional Music Programme at Sri Vishnu Shiva Mandir 20/04/2018








உலகச் செய்திகள்


அல்ஜீரிய விமான விபத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பலி

ஜப்பானில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!!

சிரியாவுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்க பயன்படுத்தவுள்ள ஆயுதங்கள் என்ன ? 




அல்ஜீரிய விமான விபத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பலி

11/04/2018 அல்ஜீரியாவின் தலைநகரில் இடம்பெற்ற விமான விபத்தில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அபயகரம் வழங்கும் 26வது வருட கலைநிகழ்ச்சி 21/04/2018








சிட்னி சைவ மன்றம் வழங்கும் தமிழ் புத்தாண்டு சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள் 22-24/04/2018






இலங்கைச் செய்திகள்

புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே புதுவருடம் ; புதுவருட வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி 

வளமான தேசத்தைக் கட்டியெழுப்பும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும் ; புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் 

வடக்கு ஆளுநர் மாற்றம் : 7 புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

ஜே.வி.பி.யின் மே தின கூட்டம் யாழ்ப்­பா­ணத்தில்

நந்திக்கடலிலிருந்து அகற்றப்பட்டது இராணுவ கண்காணிப்பு முகாம்

முள்ளிவாய்க்காலில் பெருமளவான ஆயுதங்கள் மீட்பு





புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே புதுவருடம் ; புதுவருட வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி 

14/04/2018 புதிய பார்வையும் புதிய நோக்கும் கொண்ட புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே புதுவருடம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா - சொல்லிவிடவா திரைவிமர்சனம்


படங்கள் பல தியேட்டர்களில் வந்து குவிகிறது. இந்த வாரம் வந்துள்ள மூன்று படங்களில் ஒன்று சொல்லிவிடவா. அர்ஜூன் இயக்கத்தில் வெளியான இப்படம் என்ன சொல்ல விரும்புகிறது என பார்க்கலாம்.

கதைக்களம்

படத்தின் ஹீரோ சந்தன் குமார் தமிழுக்கு புதுமுகம். இதில் இவரின் பெயர் சஞ்சய். பெரிய தொழிலதிபராக இருக்கும் இவர் விமானத்திற்காக காத்திருக்கிறார். அப்போது திடீரென பழைய நினைவுகள் அவருக்கு வருகிறது.
இவரின் அப்பாவாக மொட்டை ராஜேந்திரன். நண்பர்களாக பிளாக் பாண்டி மற்றும் சதீஷ். ஆரம்பத்தில் பத்திரிக்கை துறையில் இருக்கும் இவர் ஒரு கொலை தொடர்பான உண்மை சம்பவத்தை அம்பலமாக்கி பாராட்டை பெறுகிறார்.
இதே போல ஹீரோயின் ஐஸ்வர்யா (மது) ஒரு ஊடகத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இவருக்கு அப்பா, அம்மா இல்லை. சுஹாசினியின் பார்வையிலும், தாத்தாவின் வளர்ப்பிலும் இருக்கிறார். இவருக்கு தோழர்களாக போண்டா மணி மற்றும் யோகி பாபு.
சஞ்சய், மது ஒரு சின்ன விபத்தால் சந்திக்கிறார்கள். இருவருக்கும் தங்கள் வேலை சார்பாக கார்கில் செல்ல வேண்டிய சூழ்நிலை வருகிறது. இருவரும் தங்கள் நண்பர்களோடு வழிப்பயணத்தை தொடர ஹீரோ, ஹீரோயின் இருவரும் மீண்டும் இங்கே சந்திக்கிறார்கள்.
ஆனால் எங்கே செல்கிறோம் என விசயம் தெரிந்ததும் இருவரது நண்பர்களும் ஒரு விலகிச்செல்கிறார்கள். பின் தனியாக சஞ்சய், மது தங்கள் பயணத்தை தொடர்கிறார்கள்.
கார்கில் பகுதியில் ராணுவத்துறையில் நடக்கும் விசயங்களை பதிவு செய்கிறார்கள். நடந்து போகும் சில விசயங்கள் சொல்லாத காதல் ஒருபக்கம் இருவரின் மனதுக்குள்ளும். இந்நிலையில் ஒரு பெரும் ஆபத்து வர இருவரும் என்ன ஆனார்கள், காதலை சொன்னார்களா என்பது தான் கதை.

படத்தை பற்றிய அலசல்

படத்தின் ஹீரோ சந்தனுக்கு நல்ல தோற்றம். நடிப்பும், நடனமும் ஓகே ரகம் தான். ஆரம்பத்திலேயே சண்டை காட்சிகள். நல்ல முயற்சி. ஆனாலும் சில லாஜிக்கை மீறிய சண்டைகள்.
இருந்தாலும் ஹீரோ தமிழ் படத்துக்கு செட்டாவார் என்று சொல்கிறது. முன்பே கன்னடப்படங்களில் நடித்துள்ளார். அந்த அனுபவம் இப்போது அவருக்கு கைகொடுத்திருக்கிறது.
ஹீரோயின் ஐஸ்வர்யா, நடிகர் அர்ஜூனின் மகள். முன்பே பட்டத்து யானை படம் மூலம் வந்தார். அதன் பிறகு ஐந்து வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் வந்திருக்கிறார். அதுவும் தன் அப்பா இயக்கிய படத்தில். நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் அதீதமான வசனங்கள் கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது.
படத்தின் இயக்குனரும் நடிகருமான அர்ஜுன் ஒரு கேமியோ ரோலில் வருகிறார். விமானத்துறை அதிகாரியாக. அதிலும் ஒரு பாடல் இவருக்காகவே படத்தின் இடையில். பொருந்தும் படியாக அமைந்ததா என்றால் படக்குழுவை தான் கேட்கவேண்டும்.
மேலும் காமெடியன்கள் சதீஷ் சில இடங்களில் வந்தாலும் ஒரு பெரியளவில் காமெடிகள் இல்லை. ஆனாலும் யோகி பாபு இருந்தும் படத்தில் அவரை பயன்படுத்தாமல் விட்டார்களா இல்லை இவர் எடுத்துக்கொள்ளவில்லையா என சந்தேகம்.
மொட்டை ராஜேந்திரன் ஒரு அப்பாவாக நடித்திருக்கிறார். ஆனாலும் அபார்ட்மெண்ட் ஆண்ட்டிகளுடன் சேர்ந்து செய்யும் ரகளை கொஞ்சம் தூக்கல். அப்போது உள்ளே நுழைகிறார் மனோபாலா.
படத்தில் சில பதிவு செய்யப்பட்ட போர் காட்சிகள் மீண்டும் மீண்டும் வந்தது போல ஒரு ஃபீல்.

கிளாப்ஸ்

ராணுவ வீரர்களுக்காக இப்படம் எடுக்கப்பட்ட முயற்சியை பாராட்டலாம்.
இருக்கும் பாடல்களில் உயிரே உயிரே பாடல் மீண்டும் மீண்டும் நம்மை கேட்க தூண்டும்.

பல்பஸ்

வந்த ஜோரிலேயே அடுத்தடுத்து பாடல்கள் கொஞ்சம் ஆர்வத்தை குறைக்கிறது.
பட காட்சிகள் அமைப்பு, தொழில் நுட்ப விசயங்கள் என கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஹீரோயின் டையலாக்கில் கொஞ்சம் செண்டிமெண்ட்களை தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் சொல்லிவிடவா ஓகே தான். இன்னும் பிளான் செய்து பக்காவாக சொல்லியிருக்கலாம் அர்ஜுன் சார்.
நன்றி CineUlagam