பொலிவாக அமையும் அன்றோ ! - ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )

          
                     மகிழ்   வோடு   வாழுதற்கு 
image1.JPG                         வழிகள்  பல  இருக்கிறது 
                     அவை மனதில் எடுக்காமல்
                         அல்லல்  பட்டு  நிற்கின்றோம் 
                      கோபம் எனும் குணமதனை 
                            குறைத்து  நாம் வாழ்ந்தாலே 
                       குவலயத்தில் எம் வாழ்வு 
                               குதுகலமாய் அமையும் அன்றோ ! 

                     கோபமது  வந்து  விடின் 
                         குறை சொல்லத் தொடங்கிடுவோம்
                     கோபமது  மேல்  எழுந்தால்
                           கொலை கூடச் செய்திடுவோம் 
                     கோபம்  எனும்  நெருப்பாலே 
                            குடும்பம்  கூட  பொசுங்கிவிடும் 
                     ஆதலினால்  கோபம்  அதை 
                              அனைவருமே ஒதுக்கி வைப்போம் !

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர் வரிசை: ஆறு இதழ்களில் ஆசிரியராக பணியாற்றிய பத்திரிகை உலக ஜாம்பவான் அமரர் எஸ். டி. சிவநாயகம் - முருகபூபதி


இலங்கைத்  தமிழ்ப் பத்திரிகை உலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்பட்டவரும், பல புதிய தலைமுறை எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவரும், பல தமிழ் ஊடகவியலாளர்களின் ஞானத்தந்தையாக (God Father)  கருதப்பட்டவருமான (அமரர்) எஸ். டி. சிவநாயகம் 'கல்கி' கிருஷ்ணமூர்த்தியினால் விதந்து  பாராட்டப்பட்டவராவார்.
கிழக்கிலங்கையில் மட்டக்களப்பைச்சேர்ந்த இவரது ஊடகப்பணியும் சமயம் சார்ந்த சமூகப்பணிகளும் தலைநகரில்தான் விரிவடைந்தன. இவரது துணைவியார் கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர்.
சிவநாயகம் அவர்களை அவரது ஜிந்துப்பிட்டி இல்லத்திலும் தினபதி - சிந்தாமணி பணிமனையிலும் சந்தித்துப்பேசியிருக்கின்றேன்.
1948  இல் தினகரன் பத்திரிகையில் பணியாற்றத்தொடங்கிய ஈழத்தின் மூத்த பத்திரிகையாளரான சிவநாயகம்,  கொழும்பில் தந்தை செல்வநாயகம் ஆரம்பித்த சுதந்திரன், மற்றும் தமிழகத்தைச்சேர்ந்த  பெரி. சுப்பிரமணியம் செட்டியார் தொடக்கிய  வீரகேசரி ஆகியவற்றிலும்   ஆசிரியராக பணியாற்றியவர்.   1966 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி முதல் வெளியாகத்தொடங்கிய தினபதி தினசரியிலும் பிரதம ஆசிரியரானார்.
தமிழ்ப்பத்திரிகைத்துறையில் பழுத்த அனுபவம் மிக்க இவர், வெளியுலகிற்கு தன்னை பிரபல்யப்படுத்தாமல் அமைதிபேணியவர்.
எனினும்,  அந்த ஆழ்ந்த அமைதிக்குள் எரிமலைக்குரிய குணாம்சம் ஒளிர்ந்தது. முற்காலத்தில் வெளியாகும் தமிழ்த்திரைப்படங்களின் இயக்குநர்களின் பெயர்களும்  தற்காலம்போன்று  வெள்ளித்திரைகளில் தோன்றும். ஆனால், அவர்கள் இக்காலத்து இயக்குநர்கள் போன்று ரசிகர்கள் மத்தியில் திரையில் வலம்வந்து அறிமுகமாகமாட்டார்கள். முன்பிருந்தவர்கள் பின்னாலிருந்து  இயக்கிய உந்துசக்திகளாகத்தான் வாழ்ந்து மறைந்துபோனார்கள்.
இன்றைய தமிழ்த்திரையுலகின் இயக்குநர்கள் திரைகளில் தோன்றுவதுபோன்று தற்கால பத்திரிகை ஆசிரியர்களும் பொதுமேடைகளில் தோன்றும் கலாசாரம் வந்துவிட்டது.
ஆனால்,  தினபதி அதன் ஞாயிறு பதிப்பு  சிந்தாமணி ஆகியனவற்றின் பிரதம ஆசிரியர் சிவநாயகம் அவர்களை -  இவை வெளியான காலகட்டத்தில் பொதுமேடைகளில் காண்பது அபூர்வம்.
கிழக்கிலங்கையில்  பெரியார் ஈ.வே.ரா.வின் பகுத்தறிவுக்கொள்கைகளை பரப்பிய முன்னோடியாகவும் இவர் அறியப்படுகிறார்.  தமிழகத்தின் முதல்வர் அறிஞர் அண்ணாவுடன் பழகியதன் அனுபவங்களை  தொடர்கட்டுரையாக  எழுதியவர். எனினும் இறுதிக்காலத்தில் சத்திய சாயி பக்தராகவும் வாழ்ந்து, 22 ஏப்ரில் 2000 ஆம் திகதி மறைந்தார்.
புட்டபர்த்தியில் 1975 ஆம் ஆண்டு நடந்த உலக சாயி நிறுவனங்களின் மகா நாட்டிலும் கலந்துகொண்டிருக்கும் இவர், கொழும்பில் சத்திய சாயி பாபா மத்திய நிலையத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகள் தலைவராகவும் இருந்து, சாயிபாபா அறக்கட்டளையையும் உருவாக்கியவர்.

மெல்பனில் நடந்த சிறுகதை இலக்கியம் வாசிப்பு அனுபவப்பகிர்வு - ரஸஞானி


அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வாசிப்பு அனுபவப்பகிர்வு கடந்த ஞாயிறன்று மெல்பனில் நடைபெற்றது.
காலத்துக்குக்காலம் அவ்வப்போது  நடந்துவரும் வாசிப்பு அனுபவப்பகிர்வில் இம்முறை மூன்று சிறுகதை நூல்கள் பேசுபொருளாகின.
இலங்கையில் கிழக்குமாகாணத்தில் வதியும் எஸ். எல். எம் ஹனீபா எழுதிய அவளும் ஒரு பாற்கடல், பிரான்ஸில் வதியும் சாத்திரியின் அவலங்கள், சுவிட்சர்லாந்தில் வதியும் பார்த்திபனின் கதை ஆகிய சிறுகதைத்தொகுதிகள் தொடர்பாக நடேசன், சுமதி அருண் குமாரசாமி, முருகபூபதி ஆகியோர் தத்தம் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
நடேசன் எஸ்.எல். எம். ஹனீபாவின் புகழ்பெற்ற சிறுகதையான மக்கத்துச்சால்வை பற்றி குறிப்பிடும்போது இவ்வாறு தெரிவித்தார்:
"சிறுகதை வாழ்வின் ஒரு தருணத்தை காட்டுவது என்கிறார்கள். மேலும் ஒரு  உதாரணம் சொல்வதானால் காட்டில் ஒரு மின்னல் ஒளியில் நாம் காணும் தரிசனம் போன்றது .
ஹனீபா எழுதிய மக்கத்துச்சால்வை அவரது முத்திரைக்கதை,  மனித மனத்தின் அடிப்படை உணர்வு விசித்திரமானது.  பொறாமை மற்றும் அகங்காரத்துடன் எதிரியைப் போட்டியில் வெல்லவேண்டுமென்ற ஆசை எவருக்கும் வரலாம்! அதற்குச்  சிலர் நேர்மையான வழியை மட்டும் தேடும்போது பலர் நேர்மையற்ற பாதையிலும் செல்வார்கள்.  அதேவேளையில் வெல்லும்போதோ அல்லது நினைத்ததை அடையும்போதோ எதிரியின் மீது நன்மதிப்பும்  ஏற்படுகிறது. அப்படியான உயர்ந்த மனித உணர்வே இறுதியில் வெல்வதாக இந்தச் சிறுகதை படம் போட்டுக்காட்டுகிறது.
இந்தக்கதையின் களம் முஸ்லீம்கள் மத்தியில்  இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நிகழுகின்றது.  ஆனால்,  எந்தச் சமூகத்திலும் எந்தக் கலாச்சாரத்திலும் இந்தக்கதை பொருந்தக்கூடியது."
 பார்த்திபனின் கதை என்னும் தொகுப்பிலிருக்கும் சிறுகதைகள் பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தை தெரிவித்த முருகபூபதி பின்வருமாறு தெரிவித்தார்: 
"உருவம், உள்ளடக்கம், படைப்புமொழி, பாத்திர வார்ப்பு, காட்சி சித்திரிப்பு முதலான பல அம்சங்களை உள்ளடக்கியது சிறுகதை வடிவம். இலங்கையில் இந்த இலக்கியம் தோன்றிய காலத்தில், மறுமலர்ச்சிக்காலம்  பேசுபொருளானது.  மண்வாசனை - பிரதேச மொழிவழக்கு  உட்பட்ட தேசிய இலக்கியமும் அதன் பிறகு போர்க்கால இலக்கியம்  பற்றியும் பேசப்பட்டது.
போரினால்  மக்கள் புலம்பெயர்ந்ததும், அவர்கள் மத்தியிலிருந்த இலக்கியவாதிகளினால் புலம்பெயர்ந்தோர் இலக்கியமும் பின்னர் புகலிட இலக்கியமும் வரவாகியது.
வெளியுலக சுதந்திரம் - புகலிட வாழ்வுக்கோலங்கள், தாயகத்தின் நெருக்கடியிலிருந்து தப்பி ஓடுவதற்கு எத்தனிப்பவர்களின் கதைகள் யாவும் கருப்பொருளாகின.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயம் ஹெலென்ஸ்பேர்க் திருவிழா 12/09/2018 - 22/09/2018


நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 17 கப்ரா வண்டும் அஸ்பெஸ்டாஸ் கூரைத்தகடும் - ரஸஞானி


இந்த அங்கத்தை சற்று தயக்கத்துடன்தான் எழுதுகின்றேன். அதற்கு முன்னர் ஒரு குட்டிக்கதையை சொல்கின்றேன். ஒரு நாட்டில்  தேங்காய் எண்ணை உடல் நலத்திற்கு கேடுதரும். அதில் கொழுப்பு அதிகம். கொலஸ்ட்ரோல் நாடிகளில் படிந்து மாரடைப்பு வரும் என்று யாரோ ஒரு அதிபுத்திசாலி ஒரு பத்திரிகையில் எழுதிவிட்டார்.
அதனைப்படித்த மக்கள் தேங்காய் எண்ணையை தவிர்க்கத்தொடங்கினார்கள். அதனால் தேங்காய் உற்பத்தியாளர்களான தென்னந்தோட்ட உரிமையாளர்களின் வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டது. அவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்திவிட்டு ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
சில மருத்துவர்களைக்கொண்டு  , " தேங்காய் எண்ணையால் எதுவித பாதிப்பும் இல்லை. அது மக்களுக்கு உகந்தது. அதில் இன்ன இன்ன உயிர்ச்சத்துக்கள் இருக்கின்றன " என்று ஊடகங்களில் கட்டுரைகளையும் நேர்காணல்களையும் வரச்செய்தார்கள்.
மக்கள் எப்பொழுதும் ஊடகங்கள் சொல்வதை நம்புபவர்கள்தானே!?
மீண்டும் மக்கள் மத்தியில் தேங்காய் எண்ணைக்கு வரவேற்பு வந்தது!
களனி கங்கை தீரத்தில் அமைந்திருக்கும் பல தொழிற்சாலைகள் பற்றி முன்னைய அங்கங்களில் விபரித்திருந்தோம்.
சமகாலத்தில் கிழக்கு மக்களை ஒரு விலங்கு அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது!  நாளாந்தம் யானை தாக்கி மக்கள் காயப்பட்ட அல்லது கொல்லப்பட்ட செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. யானைகளின் நடமாட்டம் காடுகளில் மட்டுமல்ல கிராமங்கள், நகரங்களுக்குள்ளும் வந்துவிட்டது. அவை மக்களை அச்சுறுத்துகின்றன. தோட்டங்கள் வயல்களை குடியிருப்புகளை சேதப்படுத்துகின்றன.
ரயிலில் அடிபட்டும் யானைகள் இறக்கின்றன. யானைகளின் பெருக்கம் எங்கள் தேசத்தில் அதிகரித்துவிட்டதா? அவற்றுக்கும் கருத்தடை செய்யவேண்டி வருமோ தெரியவில்லை.!
இந்தப்பின்னணிகளுடன் பதவியிலிருக்கும்  நல்லாட்சி அரசில் இணைந்திருக்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் சின்னமும் யானைதான்.
கொழும்பு ஆமர்வீதியில் அமைந்துள்ள மஸ்கன்ஸ் அஸ்பெஸ்டஸ் உற்பத்திகளின் Trade Mark  உம் யானைதான்!  இதனாலும் இந்த அங்கத்தை யானைமுகன் பிள்ளையாரை  பிரார்த்தி அவர்  துணைகொண்டு சற்று அவதானமாக எழுதவேண்டியிருக்கிறது.

அழகின் மறுபெயர்...... பிச்சினிக்காடு இளங்கோ


ஆகாயத்தின் அருகில்
நட்சத்திரங்களை
அள்ளிக்குவிக்கும்
ஊற்று….

ஒளிமலர்களைப்
பருகிப்பார்த்து
துடிப்பின் லயம்
தட்ப வெப்ப நிலையாய்...

தண்ணீரிலும்
வெப்பம் தீண்டுவது;
ஆவியாய் முகம்காட்டுவது
உச்சரிப்பின் உச்சமாகும்                      

மெல்பேர்ன், சிட்னி தியாகி தீலீபனின் 31ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்


 


இலங்கைச் செய்திகள்


மோடியை சந்தித்த, மஹிந்த, நாமல்

 "அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும்"

வவுனியாவில் உலக தற்கொலை தினத்தில் பேரணியுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்வு

இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா

 விரும்பும் இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்க அனுமதி கொடுக்கும் தொல்லியல் திணைக்களம் ; சத்தியலிங்கம் 

சிவனடிபாதமலை பெயர் மாற்றம் ; மனோவின் அதிரடி நடவடிக்கைமோடியை சந்தித்த, மஹிந்த, நாமல்

12/09/2018 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

உலகச் செய்திகள்


அமெரிக்காவுக்கு எதிராக கிளர்ந்தெழுங்கள் ; அல் – கொய்தா தலைவர்

மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோலில் வந்தார் நவாஷ்

படகு கவிழ்ந்ததில் 100 பேர் பலி : லிபிய கடல் பகுதியில் துயரம்

நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு

புளோரன்ஸ் புயலில் கைக்குழந்தை தாய் உட்பட ஐவர் பலி!அமெரிக்காவுக்கு எதிராக கிளர்ந்தெழுங்கள் ; அல் – கொய்தா தலைவர்

14/09/2018 அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ராக மேலும் தீவி­ர­வாத தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தற்கு அல் –கொய்தா தீவி­ர­வாத குழுவின் தலைவர் அய்மான் அல்  ஸவாஹ்ரி அந்தத் தீவி­ர­வாத குழுவின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்ளார்.

சிட்னி சைவப் பாடசாலை தகவல் தினம் 16/09/2018


படங்கள் : தட்சி

சிட்னியில் சிலப்பதிகார விழா 22 & 23/09/2018


யூனியன் கல்லூரியின் 200 வருட வரலாறு - தங்க தாரகை - கதிர் பாலசுந்தரம் அவர்களின் புத்தக வெளியீடு - சிட்னி - 23/09/2018தமிழ் சினிமா - வஞ்சகர் உலகம் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் என்றாவது தான் வர்த்தகத்திற்கு அப்பாற்பட்ட படம் வரும். அப்படி தொடர்ந்து அறிமுக இயக்குனர்கள் சிலர் தரமான முயற்சிகளை சினிமாவில் எடுத்து வருகின்றனர், அந்த வகையில் அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள படம் வஞ்சகர் உலகம், இவை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே சாந்தனி கொலை செய்யப்படுகின்றார். இதை தொடர்ந்து அந்த கொலையை யார் செய்தார்கள் என்று போலிஸ் தேட ஆரம்பிக்கின்றது.

அதே நேரத்தில் பத்திரிகை துறையிலிருந்து இந்த கொலை குறித்து பெரிய விவாதம் நடந்து வருகின்றது, இந்த கொலையை யார் செய்தார்கள் என்று இரண்டு தரப்பும் மும்மரமாக தேட, அந்த கொலையை ஒருவர் செய்ததாக தெரிய வருகின்றது. அதோடு படத்தின் இடைவேளை.
இதற்கிடையில் ஒரு கேங்ஸ்டர் ஹெட் துரைராஜ் என்பவரை போலிஸ் தேட, அந்த குருப்பில் குருசோமசுந்தரம் இருக்க, இந்த இரண்டு கதைகளும் எப்படி ஒரு புள்ளியில் சந்திக்கின்றது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

குருசோமசுந்தரம் இவரை வாழ்த்த வார்த்தைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும், முதல் பாதியில் இவர் எதற்கு இந்த படத்தில் என்று நம்மை எண்ண வைத்து, இரண்டாம் பாதியில் மிரட்டி விடுகின்றார், அதிலும் திரையரங்கில் ஒரு காட்சி குரு எவ்வளவு பெரிய நடிகர் என்பதை நிரூபித்துவிடுகின்றார்.
அதை தொடர்ந்து சிபி கதாபாத்திரம் கவனிக்க வைக்கின்றது, முதல் படம் போலவே இல்லை, இப்படி ஒரு புதிய முயற்சி கொண்ட படத்தில் ஏன் அத்தனை செயற்கை தனமான பத்திரிகையாளர்கள், எந்த ஒரு இடத்திலும் டப்பிங் மேட்ச் ஆகவே இல்லை.
படத்தில் பலரும் பேசத்தயங்கும் சில விஷயங்களை இயக்குனர் மனோஜ் தைரியமாக பேசியுள்ளார், இவை கதைக்கு மிக முக்கியம் என்பதால் அதை சொல்ல முடியவில்லை, படத்தின் முதல் பாதி ஆரம்பித்த 10 நிமிடம் விறுவிறுப்பாக செல்ல அடுத்து இடைவேளை வரை நம் பொறுமையை மிகவும் சோதிக்கின்றது.
இரண்டாம் பாதி கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கின்றது, கேங்ஸ்டர் என்று ஒரு கதை தனியாக வர, அதில் குருசோமசுந்தரமே செம்ம ஸ்கோர் செய்கின்றார், அதிலும் அவர் கேங்ஸ்டராக மெல்ல வளர்ந்து வருவது போல் காட்டும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றது, தென்னிந்தியாவின் நவாஸுதின் சித்திக் என்றே இவரை சொல்லலாம்.
டெக்னிக்கல் விஷயங்கள் படத்தின் மிகப்பெரிய பலம் அதிலும் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு ஏற்றவாறு கலர் தேர்ந்தெடுத்தது புதிய முயற்சி, இவர்கள் எல்லோரையும் விட படத்தின் மறைமுக ஹீரோ இசையமைப்பாளர் சாம் தான், இவரின் பெஸ்ட் என்றே இதை சொல்லலாம்.

க்ளாப்ஸ்

குருசோமசுந்தரம் படத்தை ஒன் மேனாக தாங்கி செல்கின்றார்.
டெக்னிக்கல் விஷயங்கள் ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் சூப்பர்.
கிளைமேக்ஸ் டுவிஸ்ட் ஒவ்வொன்றாக தெரியும் காட்சி புதிய அனுபவத்தை தருகின்றது.

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி மிக மெதுவாக நகரும் திரைக்கதை.
ஒரு சிலர் குறிப்பாக அந்த பத்திரிகையாளரின் நடிப்பு மிக செயற்கைத்தனமாக உள்ளது.
ஜென்ரல் ஆடியன்ஸிற்கு படம் எளிதில் புரியுமா? என்று தெரியவில்லை.
மொத்தத்தில் புதிய முயற்சியை விரும்புவோர்கள், கண்டிப்பாக வஞ்சகர் உலகத்திற்கு விசிட் அடிக்கலாம். மற்றவர்களுக்கு?.
நன்றி  CineUlagam