மெல்பேர்ன் தமிழ் மகளீர் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ”மாலை சுவை அமுது” நிகழ்வு.



இந்நிகழ்வு June  6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரை Brentwood Community Youth Club, இல. .645 Ferntree Gully Road, Glen Waverley(Melway Ref: 71 D 8) இல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் எமது பாரம்பரிய உணவு வகைகளுடன், நாவிற்கு ருசியான தோசை, புட்டு, அப்பம், மலேசியன் நுாடில்ஸ், ரொட்டி, சிற்றுண்டி வகைகள், சூடான மற்றும் குளிர்பானங்களும் விற்பனை செய்யப்படும். இந்நிகழ்வின் மூலம் பெறப்படும் நிதி, கடந்த வருட போர் அனர்த்தங்களினால் பாதிப்புற்ற சிறுவர்களைப் வைத்து பராமரிக்கும் ”சிவன் அருள் இல்ல” நலன்புரி நிலைய கட்டிட நிதிக்காக பயன்படுத்தப்படும். தயவுசெய்து இந்நிகழ்வு பற்றிய விபரத்தை உங்கள் உறவினர், நண்பரகளோடு பகிர்ந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், நீங்களும் முழுக்குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டு உண்டு ரசிப்பதுடன், தாயகத்தில் மேற்கொள்ளப்படும் நல்ல ஒரு காரியத்திற்கும் உதவிடும்படி மகளீர் அமைப்பினரால் அன்புடன் கேட்டுக்கொள்ளப் படுகின்றீர்கள். நன்றி
                                                      மரண அறிவித்தல்

                                              திரு. சவரிமுத்து ஸ்ரனிஸ்லஸ்


                                      பிறப்பு 24.04.1945                இறப்பு: 31.05.2010

நாரந்தனையை பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட

              திரு சவரிமுத்து ஸ்ரனிஸ்லஸ் ( சுதுமாத்தையா)

           (உரிமையாளர் நவலங்கா ரெக்ஸ்ரைல் - நீர்கொழும்பு )

                              அவர்கள் 31.05.2010 அன்று காலமானார்

அன்னாரின் இறுதி ஆராதனைகள் 06.06.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை
3 மணிக்கு நடைபெற்று நல்லடக்கத்திற்காக நீர்கொழும்பு பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்
65, Grand St , Negombo

Tel: 031-2234300
சிட்னி தமிழ் அறிவகம்


SYDNEY TAMIL RESOURCE CENTRE INC
LOCATION: 54 THE CRESCENT, HOMEBUSH. PHONE (02) 9764 4122
POSTAL ADDRESS: P.O.BOX S420 HOMEBUSH NSW 2140
ABN No: 29 264 616 625

21.05.2010
அன்புடையீர்,
கொடிவார தினம் 2010
சிட்னி தமிழ் அறிவகம் கடந்த 14 வருடங்களாக யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட நிகழ்வை நினைவு கூர்ந்து வருவதை தாங்கள் அறிவீர்கள்.
ஈழத் தமிழர்களின் அறிவாலயமாக விளங்கிய யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை, இவ்வருடமும் நினைவு கூர்ந்து, கொடிவார நிகழ்வை நடாத்த எமது நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது. இந்நிகழ்வு ஜுன் மாதம் 5ம் திகதி சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு Homebush Primary School மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தாங்கள் இவ்விழாவிற்கு குடும்ப சமேதரராக வருகைதந்து ஞாபகார்த்த கொடிவிற்பனையிலும் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை நல்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த வைபவம் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:

காலம்: 05.06.2010, சனிக்கிழமை, மாலை 6:30 மணி

இடம்: Homebush Primary School

Rochester Street

Homebush

மேலும், மண்டப வாசலில் உங்களை வரவேற்க காத்திருக்கும் எமது நிர்வாகக் குழு உறுப்பினரிடம் உங்கள் வருகையை அறியத்தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றியுடன்
வீ.குணரஞ்சிதன்
தலைவர்
சிட்னி தமிழ் அறிவகம்

ஈழத்தமிழர் கழகம் நடாத்திய அதிர்ஷ்ட லாப சீட்டிழுப்பு ஞாயிறு மாலை இடம் பெற்றது அதன் முடிவுகள் பற்றி கழகச் செயலாளர் திரு ஈழலிங்கம் அறியதந்தவை.
வீட்டுக்கடன் வட்டி 8.6% ஆக உயரலாம்.

                                                                                        செய்தித் தொகுப்பு : கரு

அடுத்த ஒரு வருடத்தில் நாலு அல்லது ஐந்து தடவைகள் வட்டி வீதம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருட இறுதியில் தற்போதுள்ள 4.5 வீதம் 5.1 வீதமாகவும் அடுத்த ஜூன் மாதத்தில் 5.7 வீதமாகவம் உயர்த்தப்படலாம.
10ஆவது தமிழ் எழுத்தாளர்விழாவை முன்னிட்டு

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம்
நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப்போட்டி முடிவுகள் - 2010

போட்டிக்கான படைப்புகளை - இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, கனடா, மலேசியா, நோர்வே, ஜேர்மனி, சிங்கப்பூர், லிபியா, டென்மார்க், கட்டார், இத்தாலி, ஹொங்கொங் போன்ற நாடுகளிலிருந்தும் - இந்தோனேசியா சிறை, வவனியா இடைத்தங்கல் முகாம் ஆகியவற்றில் இருந்து அனுப்பியிருந்தார்கள். இந்தப் போட்டிக்கு 300 கவிதைகளும், 150 சிறுகதைகளுமாக மொத்தம் 450 படைப்புகள் வந்திருந்தன.
நாடு கடந்த தமிழீழ அரசவைக்கான ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமான செய்தி



                நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஆசனங்களுக்கு , சேரன் சிறிபாலன், 
                 பாலசிங்கம் பிரபாகரன்,  சஞ்சயன் குலசேகரம், தர்ஸன் குணசிங்கம், ஆகியோர்

நாடு கடந்த தமிழீழ அரசவைக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்யும் பொருட்டு ஆஸ்திரேலியாவில் நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது. இதன்பிரகாரம், நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஆசனங்களுக்கு சஞ்சயன் குலசேகரம், சேரன் சிறிபாலன், தர்ஸன் குணசிங்கம், பாலசிங்கம் பிரபாகரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இருபதுக்கு-20 அவுஸ்திரேலியா கிரிக்கட் அணியின் தலைவராக கிளார்க் மீண்டும் நியமனம்



இருபதுக்கு-20 அவுஸ்திரேலியா கிரிக்கட் அணியின் தலைவராக மைக்கல் கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜூலை இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இருபதுக்கு-20 உலகக் கிண்ணப் போட்டியின் போது அதிக ஓட்டங்களை பெறாமையும் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா தோல்வியடைந்தாலும் இவருக்கு எதிராக அணிக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மெல்பனில் நடந்த பத்தாவது தமிழ் எழுத்தாளர் விழா


                                                                                                       திரு லெ முருகபூபதி



அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தினால் பத்தாவது தமிழ் எழுத்தாளர் விழா மெல்பனில் கடந்த மேமாதம் 22 ஆம் திகதி முழுநாள் விழாவாக வெகு சிறப்பாக நடைபெற்றது. 2001 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுவரும் தமிழ் எழுத்தாளர்விழா இவ்வாண்டு பத்தாவது ஆண்டை நிறைவு செய்வதையிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன.
படித்து சுவைத்த மு.மேத்தாவின் கவிதை

தேசத்தைப் போலவே நம் வாழ்க்கையும் தெருவில் நிற்கிறது.


இந்த சுதந்திரத் திருநாளில்
 உன் நினைவுகளுக்கும் சேர்த்தே
அஞ்சலி செலுத்தி விடுகிறேன்.
என் அன்பே!
தேசத்தைப் போலவே
நம் வாழ்க்கையும்
இன்று
தெருவில் நிற்கிறது!

Isaiyal Kaithu Sey


சிட்னியில் ஜூன் மாதம் 5 ம் திகதி 6 மணிக்கு இசையால் கைது செய்




சிட்டுக்களின் தேன்துளிகள்


                                                        சாந்தினி புவனேந்திரராஜா - மெல்பேர்ண்



மே 8ஆம் தேதி மெல்பேர்ணில் ”சிட்டுக்களின் தேன்துளிகள்” என்ற சிறுவர் பாடல் தொகுப்பொன்று இறுவெட்டாக(CD)வெளியிடப்பட்டது. மெல்பேர்ண் இசை ஆசிரியை திருமதி. தவீனா வேந்தன் அவர்களால் வெளியிடப்பட்ட இந்த இறுவெட்டில், அவரதும், அவரது மாணவச்சிட்டுக்களினதும் தேன்குரலில் பாடப்பட்ட 14 சிறுவர் பாடல்கள் பதிவாகி உள்ளன.
நம்பிக்கை இன்னும் மீதமிருக்கிறதோ?


                                                                         வ.ஜ.ஜெ.ஜெயபாலன் கவிதை ஒன்று.


நம்பிக்கை

துணை பிரிந்த குயிலொன்றின்

சோகம் போல

மெல்ல மெல்ல

கசிகிறது ஆற்று வெள்ளம்.
பகவத் கீதை - கோபம்

ஹரே கிருஷ்ணா! அனைவருக்கும் வணக்கம். இன்று நம்முடைய தலைப்பு "சினம்" அதாவது "கோபம்". நமக்கு கோபம் எதனால் வருகிறது? அந்த கோபத்தால் எதாவது பலன் இருக்கிறதா? கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? இது குறித்து இன்று பகவத் கீதையின் கண்ணோட்டத்தில் ஆராய்வோம்.
WORLD SAIVA COUNCIL (AUSTRALIA) INC.
உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா
Postal Address: 6, Dudley Street, Auburn, NSW 2144, Tel: 612-96425406
email: sivainsydney@gmail.com

திருமுறை முற்றோதல்


06.06.10 ஞாயிற்றுக்கிழமை
உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்
உலக சைவப் பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையின் மாதாந்த திருமுறை முற்றோதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 06.06.10 காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. அன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை ஐந்தாம் திருமுறையிலுள்ள ஒரு பதிகத்திற்கு பொருள் கூறப்பட்டு பின்னர் ஐந்தாம் திருமுறை முப்பத்திநான்காவது பதிகம் தொடக்கம் திருமுறைப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.
அகம் தீண்டும் அரும்பு

                          
                                                                                  -கவிஞர் க. கணேசலிங்கம்


திறந்த வெளியினில் தென்றலில் நிலவினில்
தேன்மலர் அழகினில் தீந்தமிழில்
பிறந்த காலையின் மலர்ச்சியில் உளக்கடல்
பெருகிடும் கவிதைகள் அலைபுரளும்!
நாளை சொல்கிறேன்

                                                                    அ.முத்துலிங்கம் 

இணையம் வந்தபிறகு ஒரு வசதி உண்டு. ஒருவருக்கு வந்த மின்னஞ்சலை அவர் அப்படியே இன்னொருவருக்கு அனுப்பலாம். அவர் அதை இன்னொருவருக்கு அனுப்பலாம். இப்படி அது சங்கிலித் தொடர்போல முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகும். சில சமயம் நீங்கள் அனுப்பியது ஒரு சுற்றுமுடிந்து உங்களிடம் திரும்பி வருவதும் உண்டு. சமீபத்தில் அப்படி வந்த சுவாரஸ்யமான ஒன்று கீழே:
சிட்னி துறைமுக விபத்தில் கார் சாரதி பலி

சென்ற செவ்வாய் இரவு 8.40 மணியளவில் சிட்னி துறைமுகத்தில்  சென்று கொண்டிருந்த இவர் தனது காருடன் வீதியை விட்டு விலகி  கீழ் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற முடியவில்லை. அவருடைய கார் கிழக்கு நோக்கி பயணத்திய போது மேற்கு நோக்கிய பகுதிற்கூடாக சென்று நடைபாதை தடையையும் மீறி 4 மீற்றர் கீழே விழுந்து தண்ணீரில் மூழ்கியது. இவர் மொஸ்மன் இடத்தைச் சேர்ந்தவரும் 56 வயதை நிறைந்தவரும் என அறியப்படுகிறது.
Melburne  Tooronga  இரயில் நிலையத்தில் இரயில் பிள்ளையை மோதியது.

சென்ற திங்கட்கிழமை மெல்பேர்ன் நகரிலுள்ள ரூரொங்கா இரயில் நிலையத்தில் ஒரு பிள்ளையோடு பிள்ளையை கொண்டுசெல்லும் தள்ளுவண்டி (Pram) தண்டவாளத்தை நோக்கி உருண்டு போய் தண்டவாளத்தில் விழுந்து அங்கு வந்துகொண்டிருந்த இரயிலோடு மோதியது. இந்த இரயில் நிலையமும் மற்றய மெல்பேர்ன் இரயில் நிலையத்தைப் போல தண்டவாளத்தை நோக்கி சரிவாக இருந்தது. அதிர்ஷ்டவதமாக இந்த பிள்ளை சிறு காயங்களோடு தப்பியுள்ளது.
SydWest Multicultural Services Inc.,    Auburn Tamil Society
நியூ சவுத் வேல்ஸ் மாநில  சமூக ஒத்துழைப்புத் திட்டம்
(New South Wales Community Partners Program  (CPP))
பல்கலாசார மற்றும் பன்மொழி சமூகத்தினரை
முதியோர் கவனிப்பு சேவைகளுடன் தொடர்புபடுத்துதல்

(Connecting Culturally and Linguistically Diverse Communities to Aged Care Services)அவுஸ்திரேலிய அரசினது ‘உடல்நலம் மற்றும் மூப்படைவு திணைக்கள’த்தின் முயற்சி
(An initiative of the Australian Government Department of Health and Ageing)