மரண அறிவித்தல்

.
திருமதி அன்னபூரணி சுப்ரமணியம்


உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அன்னபூரணி சுப்ரமணியம் அவர்கள் 29. 4. 2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம்சென்ற அப்பாத்துரை (மருதனார்மடம் ல்லப்ப பைரவர் தேவஸ்தான பரிபாகர்) பொன்னம்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியும் காலம்சென்ற கந்தையா முத்துப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும் காலம்சென்ற சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான அன்னம்மா, அமிர்தலிங்கம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் , குல குலரஞ்சிதம் (Australia ), சிவக்குமார் (Srilanka) , கலாரஞ்சிதம் (Srilanka ) , ஜெய ரஞ்சிதம் (Australia ), பாலகுமார் (UK ), ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஹரிச்சந்திரன் (Australia ), காலம் சென்ற திரு மகேந்திரன், பரமேஸ்வரன் (Australia ), சிவசக்தி (UK ) ஆகியோரின் அன்பு மாமியும், வாணி செந்தூரன் (Canada ) ரமேஷ் நிஷா (Australia ),ஆதவன் நிலானி (UK ), நளினி மாறன் (Germany ), அகிலன் ஜவான் (Australia ), துளசி இராகுலராஜ் , வதனி துஷ்யந்தன் (Canada ), தட்சாயினி (UK ), அபிராமி (Australia ), சாரங்கன் (UK ), சாகித்தியன்ஆகியோரின் பாசமிகு பேத்தியும், ஆதித்தியன் ,அகரன் காருண்ணியன், அக்க்ஷயன் , ஆதிஷ் , ஆருஷன், பைரவி ஆலியா, ஜே , விதுரன் ஆகியோரின் ஆசை பூட்டியும் ஆவார்,

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தொடர்புகளுக்கு
குலரஞ்சிதம் (குலா ) +61 421 282 446
சிவக்குமார் (குமார்) +0094 776 690 234
கலாரஞ்சிதம் (கலா) +0094 770 052 083
ஜெயரஞ்சிதம் (ஜெயா) +61 420 520 799
பாலகுமார் (விஜி) +0044 7930 22 421

தகவல் குடும்பத்தினர்

மரண அறிவித்தல்

.
                                     திருமதி மகேஸ்வரி கனகரத்தினம்நெல்லியடியை பிறப்பிடமாகவும் வெஸ்ற்மீட்,  சிட்னி ஒஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி கனகரத்தினம் அவர்கள் 29.04.20 புதன் கிழமை இறைபதம் எய்தினார். அன்னார் காலம் சென்ற பொன்னையா லக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,  காலம் சென்ற முருகேசு கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும். சுமதி (கனடா), பாமதி (சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், விக்கினதாஸ்(கனடா), ரவீன் (சிட்னி) ஆகியோரின் அன்பு மாமியாரும், விபீஷ்  வினேஷ் , விலேஷ்,(கனடா),  உமேஷ், அபீனா (சிட்னி) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும், காலம் சென்றவர்களான சின்னத்துரை, பாக்கியம், சிவக்கொழுந்து ஆகியோரின் சகோதரியுமாவார். தற்போதைய சூழ்நிலைகளுக்கும், அரச கட்டுப்பாடுகளுக்கும் அமைவாக அன்னாரின் பூதவுடலுக்கான பார்வையிடலும், இறுதிக் கிரியைகளும் 05.05.20 செவ்வாய்கிழமை முற்பகல் 10.00 மணியிலிருந்து 11.00 வரை Liberty Funeral Parlour, 101 South Street, Granville, NSW 2142 எனும் முகவரியில் இடம் பெறும்.
தொடர்புகளுக்கு :
பாமதி (மகள்) : 0423 361 228
ரவீன் (மருமகன்) : 0422 355 645

கொவிட் 19 - சலனமற்று கொலைசெய்யும் தொற்றுநோய்


(நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் அவசரகால  வைத்திய  நிபுணர் ரிச்சாட் லெவித்தனால் வரையப்பட்ட கட்டுரை. தமிழில் பீட் சுஜாகரன்)

நான் கடந்த 30 வருடங்களாக அவசரகால மருத்துவம் பார்த்து வருகிறேன். 1994 ஆம் ஆண்டில் மனித உடலினுள் செயற்கை சுவாசக் குழாய்களை செலுத்தும் செயல்முறையை (Intubation) உருவாக்கி அதை கற்பித்துவருகிறேன். மனித சுவாச வழிமுறைகளைப்பற்றி உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்களுக்கு கடந்த இரு தசாப்தங்களாக கற்பித்தும் பயிற்சியளித்தும் வருகின்றேன்.

கடந்த பங்குனி மாதத்தின் இறுதிப்பகுதியில் நியூயோர்க் நகரில் கொவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கவே நான் பயிற்சி பெற்ற Bellevue வைத்தியசாலையில் தொண்டராக 10 நாட்கள் கடமையாற்றினேன். இந்த காலப்பகுதியில் தான் கொவிட் 19 வைரசால் உருவாக்கப்படும் கொடிய நிமோனியாவை நேரகாலத்துடன் கண்டுபிடிக்காமல் போவதை உணர்ந்தேன். இப்படி கண்டுபிடிக்கும் பட்சத்தில் நோயாளிகளை செயற்கை சுவாச இயந்திரம் பொருத்தாமலேயே உயிருடன் பாதுகாக்க முடியும் என்பதை கண்டுகொண்டேன்.

நியுகமிஸ்பியர் நகரத்திலிருந்து நியூயோர்க் நகரத்தினை நோக்கிய எனது நீண்ட பயணத்தின் போது Bronx நகரிலுள்ள எனது நண்பரான மருத்துவ நிபுணர் Nick Caputo வை தொடர்புகொண்டு,  அவர் எவ்வாறான சவால்களை எதிர் கொள்கிறார் என்பதையும் சுவாச வழி செயற்பாடுகள் எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்படுகிறது என்பதையும் அறிந்துகொண்டேன். இந்த வைரசை இதுவரை நான் அனுபவித்ததில்லை என எனது நண்பர் என்னிடம் கூறினார்.

ஒரு போரின் முன்ணனி நிலையில் Matina Jewell - செ .பாஸ்கரன்

.
Caught in the Crossfire - An Australian peacekeeper beyond the front-line.இரண்டு மாதங்களுக்கு முன்பு குயின்ஸ்லாந்து சென்றபோது ஒரு பெண் எழுத்தாளரை சந்திக்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. Caught in the crossfire என்ற புத்தகத்தை எழுதிய Matina Jewell. இவர் ஐக்கிய நாடுகள் சமாதனப் படையில் இருந்த ஒருவர். ஒரு பெண்ணாக நீண்டகாலம் இந்த சமாதனப் படையில் வேலை செய்துள்ளார் .ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இராணுவத்தில் பணிபுரிவதென்பது எப்படி இருக்கும் என்பது தெரியும் . அவருடைய இந்தப் புத்தகத்தில் அவர் கூறிய கதைகளை எல்லாம் கேட்கின்ற போது உண்மையிலேயே சில விடயங்கள் ஆச்சரியமாகவும் இவர்களைப் பற்றி பெருமை படக் கூடியதாகவும் இருக்கின்றது.

ஆஸ்திரேலிய நாட்டு இராணுவத்தில் இருந்து சமாதான படையோடு சேர்ந்து வேலை செய்வதற்காக மிகவும் முயற்சிகள் எடுக்கிறார், மிகவும் கஷ்டப்படுகிறார் இவருடைய வாழ்க்கை ஒரு பக்கம், ஒரு பெண்ணாக இருந்து கொண்டு ராணுவத்தில் எப்படி செயல்படுவது என்பது இன்னுமொரு பக்கம் , அவருடைய இளமைக் காதல் வாழ்க்கை போராட்டம் இப்படி எல்லாவற்றையும் இந்த புத்தகத்தில் தந்திருக்கின்றார். அதுமட்டுமல்ல இந்த புத்தகத்தில் இல்லாத பல விடயங்களைக் கூட அவர் என்னோடு பேசும்போது பகிர்ந்துகொண்டார்.

சாதாரணமாக இந்த சமாதான படைகள் ஒரு நாட்டுக்கு போகின்ற போது அங்கே என்ன நடக்கின்றது என்பதை எல்லாம் கண்கூடாக பிறநாடுகளில் பார்த்தவர்கள் நாங்கள், ஒரு பக்கச் சார்பாக இருக்கின்ற அதிகமான விடயங்களை கண்கூடாக கண்டு இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று கூட சில நேரங்களில் நாங்கள் எண்ணி இருக்கின்றோம், ஆனால் சில அதிகாரிகள் மிக நேர்மையாகவும் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டதையும் பார்க்கக் கூடியதாகவும் இருக்கும். சமாதான இராணுவமாக இருந்தால்கூட அவர்களுக்கு ஒரு பக்கம் இருக்கும் அல்லது அவர்களுடைய அதிகாரிகள் உடைய கட்டளை அல்லது அதிகாரிகளை திருப்திப்படுத்தல் என்பது போன்ற விஷயங்களுக்காக சில விடயங்களை அவர்கள் செய்வதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். அவருடன் பேசியபோதும் இந்த புத்தகத்தில் அவர் பதிந்துள்ளதைப் பார்க்கின்ற போதும் மிக மகிழ்ச்சி யாகத் கத்தான் இருக்கிறது.ஈழ மண் தந்த கலைஞர் ஏ.ரகுநாதன் பேசுகிறார் - கானா பிரபா


"நிர்மலா படம் திரையிட முன்னால் ஒரு பத்திரிகைக் காட்சி பாமன்கடை தியேட்டரில் பண்ணியிருந்தோம். அதற்கு நாம் எம் அரசியல் தலைவர்களை அழைத்திருந்தோம். அப்போது யூஎன்பி ஆட்சியில் இருந்தது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, டட்லி சேனநாயக்கா, திருமதி பண்டாரநாயக்கா, கொம்யூனிஸ்ட் தலைவர்கள் வந்திருந்தார்கள். ஆனால் அழைப்பு விடுத்திருந்த எம் தமிழ் எம்பிக்கள் யாரும் வரவில்லை. ராஜதுரை கடிதம் அனுப்பியிருந்தார், எனக்கு நேரமில்லை என்று. நினைத்துப் பாருங்கள் எவ்வளவு மனவேதனையாக இருக்கும் என்று.

திருமதி பண்டாரநாயக்கா என்னைக் கூப்பிட்டுக் கேட்டார் 
"நாங்கள் ஒரு தமிழ்ப்படத்தைத்தானே பார்க்கப் போகிறோம்?" என்று.


"ஓம்" என்றேன்


"தமிழ் எம்பிமாரைக் கூப்பிடவில்லையா?" என்று கேட்டார்.


நான் அப்போது அவகாசம் இருந்ததால், கொள்ளுப்பிட்டி சென்று செல்வநாயகம் அவர்களை அழைத்துக் கொண்டு தியேட்டருக்கு வந்தேன். பின்னர் திருமதி பொன்னம்பலமும் வந்து சேர்ந்தார்.
எங்கள் தமிழ்த்திரைப்படக்கலையை யாருமே ஊக்குவிக்கவில்லை, அதுதான் உண்மை.
எல்லாப் பத்திரிகைகளும் நம்பிக்கையூட்டும் படம் என்று எழுதிவிட்டன. அப்போது திரைப்பட விநியோகஸ்தர்களாக இருந்த நம் தமிழர்கள் இந்தியாவில் இருந்து அரசகட்டளை, பணமா பாசமா, நான் என்று நான்கு பெரும் வெள்ளிவிழாப்படங்களை ஒரு நாள் அவகாசத்தில் இறக்குமதி செய்து திரையிட்டு எங்கள் படத்தை ஓடவிடாமல் செய்தார்கள். இருந்தாலும் ஓரளவுக்கு எம் படத்தை ஓடச்செய்தவர்கள் அப்போது யாழ்ப்பாணத்தில் டாக்சி ஓட்டிக்கொண்டிருந்த சாதாரண மனிதர்களும், பள்ளிக்கூட ஆசிரியர்களும் தான் காப்பாற்றினார்கள். பள்ளிக்கூட ஆசிரியர்கள், இது எங்களுடைய படம் என்று சொல்லி குழந்தைகளை அழைத்து வந்து தியேட்டர்களை நிரப்பினார்கள். ஆனாலும் வர்த்தக ரீதியில் இந்தப் படம் எனக்குத் தோல்வியே."

அவுஸ்திரேலியாவில் காணோளி ஊடாக ( அமரர் ) கலைஞர் ரகுநாதன் நினைவுப்பகிர்வு ரஸஞானி


அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் கேசி தமிழ்மன்றத்தின் மூத்த பிரஜைகளின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 26 ஆம் திகதி மாலை 4. 00 மணி முதல் 5.00 மணிவரையில் காணொளி கலந்துரையாடல் சந்திப்பு  நடைபெற்றது.
இச்சந்திப்பில் மூத்த பிரஜைகள் அமைப்பினைச்சேர்ந்த 24 அங்கத்தவர்கள பங்குபற்றியிருந்தார்கள்.
அண்மைக்காலத்தில் தோன்றியிருக்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை உருவாக்கி ஆரோக்கியத்தை பேணவேண்டிய சூழ்நிலை தோன்றியிருப்பதனால், வழக்கமாக மண்டபத்தில்  நடைபெற்றுவந்த முதியோர் சந்திப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதையடுத்தே, இன்றைய நவீன தொழில் நுட்பத்தின் ஊடாக இத்தகைய சந்திப்புகள் ஒழுங்குசெய்யப்படுகின்றன.
வீடுகளுக்குள் முடங்கியிருப்பதனால், தனிமை ஏற்படுத்தும் மனஅழுத்தங்களையும் இத்தகைய காணோளி சந்திப்புகள் தவிர்ப்பதற்கு வழிசமைக்கும் என்பதை கவனத்தில் கொண்டிருக்கும் கேசி தமிழ் மன்றத்தின் முதியோர் அமைப்பு இந்த புதிய நடைமுறையை  அண்மைக்காலமாக  ஆரம்பித்துள்ளது. 
அண்மையில் பாரிஸ் மாநகரில் இந்த வைரஸின் தாக்கத்தினால் மரணித்த ஈழத்தின் மூத்த கலைஞர்                             ஏ. ரகுநாதனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த காணோளி நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
திருமதி மதுரா ராஜலிங்கம் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில்,  திரு. நவரட்ணம் வைத்திலிங்கம் அனைவரையும் வரவேற்று சுகநலம் விசாரித்தார்.
அதனையடுத்து ரகுநாதன் சம்பந்தப்பட்ட நேர்காணல் பதிவும் இக்காணோளியூடாக காண்பிக்கப்பட்டது.
முதியோர் அமைப்பின் வேண்டுகோளையடுத்து,  எழுத்தாளர் முருகபூபதி, இந்தச்சந்திப்பில் இணைந்து ரகுநாதனின் கலை உலகவாழ்வும் பணிகளும் பற்றி உரையாற்றினார்.
 “  மாணவப்பருவத்தில் 1947 ஆம் ஆண்டளவில் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் மேடையேறிய ரகுநாதன், கலை இலக்கிய ஆர்வத்தினால், கல்லூரியை விட்டு அகன்ற பின்னரும் கலைத்தாகம் கொண்டிருந்தார்.  “  எனத்  தெரிவித்த முருகபூபதி, தொடர்ந்தும் பேசுகையில்,  ரகுநாதனின் அந்த கலைத்தாகம் பாரிஸ் மாநகரில்  அவர் மறையும் வரையில் நீடித்திருந்தது.    மறையும் போது அவருக்கு 84 வயது எனவும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது:

இலங்கைச் செய்திகள்


பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள்; இராணுவத்துக்கு வழங்குவதை அரசு உடன் நிறுத்தவேண்டும்

கொரோனா விழிப்புணர்வும் பொருளாதார அபிவிருத்தியும்

16 நாட்களின் பின் மெனிங் சந்தை திறந்துவைப்பு

 "கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது"

கலைந்த பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களுக்கும் அழைப்பு

வடமராட்சி பொலிஸ் தாக்குதல்; காயமுற்றோருக்கு உணவு கொண்டு சென்ற பெண்கள் கைது

அரசியலமைப்பு பிரச்சினைக்கு அலரி மாளிகையில் கூடி பலன் இல்லை

மேல் மாகாணம், புத்தளத்தில் ஊரடங்கு மே 11 வரை நீடிப்பு

ஹட்டன் எபோஸ்லி தோட்டத்தில் தீ; 14 வீடுகள் தீக்கிரைபாடசாலைகள், கல்வி நிறுவனங்கள்; இராணுவத்துக்கு வழங்குவதை அரசு உடன் நிறுத்தவேண்டும்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்
கொரோனா தடுப்பு செயற்பாடுகளுக்காக பாடசாலைகளையும் கல்வி நிறுவனங்களையும் இராணுவத்தினருக்கு வழங்குவதை அரசு நிறுத்தவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுவீடசிக்ஸ்டி - பார்த்திபன் கனவு - சுந்தரதாஸ்

.


தமிழ் எழுத்தாளர்களுக்குள் சாகாவரம் பெற்ற எழுத்தாளராக திகழ்பவர் அமரர் கல்கி. 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அவரின் நாவல்கள் பல பதிப்புகளைக் கண்டு வாசகர்களை கவர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அவர் எழுதிய நாவலான பார்த்திபன் கனவு 1960இல் தயாரிக்கப்பட்டது.

கல்கியின் மறைவுக்குப் பிறகு உருவான இந்த படத்திற்கு வசனங்களை எழுதியவர் மற்றும் ஒரு பிரபல நாவலாசிரியர் விந்தன் ஆவார் கல்கி வார இதழில் சில காலம் பணியாற்றிய விந்தன் கதையினை உள்வாங்கிக்கொண்டு சிறந்த முறையில் வசனங்களை எழுதியிருந்தார். அதேபோல் பார்த்திபன் கனவு தொடராக வந்தபோது அதற்கு ஓவியங்களை வரைந்த மணியன் திரைப்படத்தின் ஓவிய வடிவமைப்பையும் அடிமையாக கையாண்டு இருந்தார்.

சோழ அரசனான பார்த்திபன் பல்லவ அரசனான மாமல்லருக்கு கப்பம் கட்ட மறுத்து போரிட்டு மடிகிறான் . மரணத்தருவாயில் தன் மகன் வீரனாக வளர்ந்து சுதந்திர சோழ அரசை நிலைநாட்ட வேண்டும் என்ற தன் கனவை சிவனடியார் ஒருவரிடம் கூற அவரும் அதற்கு உதவுவதாக வாக்களிக்கிறார். பார்த்திபன் மகன் விக்கிரமன் வளர்ந்து வீரனாகிறான் , அதேசமயம் இளவரசி குந்தவை மீது அவருக்கு காதல் மலர்கிறது. கடமையா காதலா என்ற நிலைக்கு உள்ளாகிறான் அவன் .

கல்கியின் இந்த கதை தொடராக வந்தபோது அதில் ஒரு மர்மத்தையும் வைத்திருந்தார் அவர் . பார்த்திபனுக்கு உதவுவதாக சொன்ன அந்த சிவனடியார் யார் என்பதுதான் அது, ஆனால் திரைப்படத்தில் அந்த மர்மத்தை பேண முடியவில்லை , இது படத்தின் விறுவிறுப்பை சற்றுக் குறைந்தது எனலாம்.


உலகச் செய்திகள்


நியூசிலாந்தில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

 'கொரோனாவை விட பட்டினியால் செத்துவிடுவோம்'

‘சீனாவுக்கு எதிராக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்’: டிரம்ப்

 கொரோனா அச்சம்; மேலும் 14 நாடுகளுக்கு தடை விதித்தது ஜப்பான்

70 இலட்சம் எதிர்பாரா கர்ப்பங்கள் உருவாகும் சாத்தியம்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன்- கேரி சைமண்ட்ஸ் ஜோடிக்கு ஆண் குழந்தை

கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து தயார்

கொரோனாவுக்கு எதிரான போரில் சீனா மிகப்பெரிய சாதனைநியூசிலாந்தில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

Wednesday, April 29, 2020 - 11:02am

நியூசிலாந்து முழுவதும் இதுவரை 1,500க்கும் குறைவானவர்களுக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதில்  80 சதவீதம் பேர் குணமடைந்துவிட்டனர். பாதிப்பால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேரறுக்க விஞ்ஞானம் வெளிச்சம் கொண்டுவரட்டும் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ....... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


        அறியாத சிறுவர்களை அனுசரணை யாக்கி 
        அரங்கேற முயல்கிறது அகோரமுடை கொரனோ 
        குணங்குறிகள் காணாமல் கொரனோவும் அவர்கள்
image1.JPG        ஊடாகப்  பரப்பிவிட  உவப்புடனே இருக்கு  
        வெளிசென்ற சிறிசெல்லாம் வீட்டுக்கு வருவார் 
        உள்நுழைந்த கொரனோவோவும் துள்ளிவர நினைக்கும்
        அறியாமல்  காவிகளாய் ஆகிவிடும் அவர்கள் 
        தெரியாமல் கொரனோவை கொடுத்திடுவார் பலர்க்கும் ! 

        சீனாவின் தயாரிப்பாய் ஆனதனால் கொரனோ 
        சிறுசுகளைத் துணையாக்க திட்டம் இட்டதாலே 
        யாருமே புரியாமல் தந்திரமாய் உள்ளே 
        பரவிவிடத் துடிக்கின்ற உருவெடுத்து இருக்கு 
        சிறுசுகளைத் தாக்காது எனப்புகன்றார் நிபுணர்
        எப்படியோ கொரனோவும் இதைத் தெரிந்துகொண்டு 
        நரியாகச் செயற்பட்டு நாட்டுக்குள் புகுந்து
        பெருவாரியாய் உயிரைப் பறித்துவிட  இருக்கு ! 

தமிழ் பா மாலை சூடி.. (கவிதை) வித்யாசாகர்!லகாள எழுத்தாகி எனையாளும் மொழியே

உனைபோற்றி வினைசெய்ய வரம் தாயென்
தமிழே, மனதாலும் நினைவாலும் ஒலியாக
எழுவாய், வரியாக வடிவாக உயிர்போல அமைவாய்!பலகாலம் கருவாக உயிராக சுமந்தேன், உளகாலம்
உனதாகி உன்னுள்ளே உயிர்ப்பேன், மறவாது
மருவாது வரையின்றி நிலைப்பாய், உன் மடிமீது
தமிழ்பேசி உயிர்தீர அமர்வேன்!அணைத்தாலும் மறுத்தாலும் மூப்பில்லை
யுனக்கு, மழைபோல வனம்போல இயல்பேயுன் சிறப்பு,
அரிதாகி வலிதாகி கடலோடுமிருப்பாய் மலையோடுமிருப்பாய்
பேசாதார் பேசுகையில் நீயே முதலாய் சிறப்பாய்!அதிகாலை மழைதானே மண் வாசம்
பரப்பும், நீ முதலாக பிறந்தாயே மொழிவாசம்
பரப்பு, தீநாக்கு சூடின்றி ஒளியெங்கும் நிரப்பு
உனை அறியாதார் அறிகையிலே அமிழ்தம்போல் இனிப்பு!


கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -10


வடபுலத்தின் கல்விப் பாரம்பரியத்தை  மேம்படுத்திய அமெரிக்க மிஷன்
1950 ஓகஸ்ட் மாசம் ஒரு நாள், அட்டமி, நவமி, ராகுகாலம் இல்லாதவேளை, சித்திரவேலாயுதர் கோயிலில் தேங்காய் சிதற உடைத்துக்கும்பிட்டபின், தெல்லிப்பழை நோக்கி என் பயணத்தை மேற்கொண்டேன். நாவற்குழியில் இருந்து தெல்லிப்பழைக்கு நேரே ரயிலிற் செல்லலாம். அதனால் பயணம் சௌகரியமாக அமைந்தது.
இடையிடையே மனசில் ஒரு சலனம் ஏற்பட்டபோதும் அதிபர் அருளானந்தம் தந்த கடிதம், சான்றிதழ் ஆண்டி மாஸ்டர் தந்த நம்பிக்கை எல்லாம் நெஞ்சிலே நம்பிக்கை சுடர் ஏற்றின. நெஞ்சச் சுரங்கப்பாதையின் மற்றைய நுனியில் தோன்றிய ஒளிக்கீற்றின் நம்பிக்கையுடன் நான் தெல்லிப்பழை ரயில் நிலையத்தில் இறங்கினேன்.
ரயில் நிலையத்துக்கும் யூனியன் கல்லூரிக்கும் இடையே ஐந்து நிமிட நடைத்தூரம்தான். அதிபர் துரைரத்தினத்தின் அலுவலகத்தில் அவரது செயலாளர் முருகேசு என்னை வரவேற்றார். அருளானந்தம் போதகர் தந்த கடிதத்தை அவர் மூலம் அதிபர் துரைரத்தினத்துக்கு அனுப்பினேன்.
அதைப்படித்தவுடனேயே  “ உள்ளே வருக  “  எனக்கிடைத்த அழைப்பு, என் மனசில் நம்பிக்கையைத் தந்தது. அடுத்த இரண்டு வாரங்களுள் நான் யூனியன் கல்லூரியில்  “ அம்பி மாஸ்டர்  “ஆனேன்.
யூனியன் கல்லூரி ஓரளவு கிராமியச்சூழலில் அமைந்த கல்லூரி. அதனால், நகரக் கல்லூரி யாழ்.  பரி. யோவான்  கல்லூரியிற் காணாத சில கோலங்களை அங்கு அவதானித்தேன். கட்டடத்திலும் சூழலிலும் மாணாக்கரிலும் மட்டுமல்ல, பாட நெறியிலுங்கூடச் சில வேறுபாடுகள் தெற்றெனப் புலனாயின.
மொழி, அறிவியல், கணிதம், வரலாறு போன்ற பாடங்களுடன் மரவேலை, காகிதம் தயாரித்தல், அச்சுக்கோர்த்தல், அச்சுப்பொறி இயக்குதல் போன்ற தொழில்சார் கல்வி நெறிகளும் அங்கு பாடவிதானத்தில் இருந்தன. மாணாக்கர் அவற்றைப்பயிலும் வசதிகள் இருந்தன. அச்சகமும் இருந்தது.
முதலில்  ‘ யூனியன் ‘ கல்லூரி என்ற பெயர் மட்டுமே எனக்கு வியப்பூட்டியது. பின்பு, தொழில்சார் கல்வி வசதிகளும் பாடவிதானமும் அந்தக்கல்லூரியின் பின்னணி பற்றி அறியும் ஆவலைத்தூண்டின. அதனால்,  ‘யூனியன் ‘  கல்லூரி உருவாகிய சுவையான வரலாற்றை அறியமுடிந்தது. எனவே, எனது கதையிலும் பார்க்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க மிஷனின் கதையை முதலில் தொட்டுக்காட்டுதல் மிகப்பொருத்தம் என நினக்கிறேன்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலே, அமெரிக்க – இலங்கை மிஷன் இலங்கைக்கு வந்தது. பிரித்தானியரின் குடியேற்ற நாடாக இலங்கை இருந்த அக்காலத்தில், கத்தோலிக்க, சி.எம். எஸ். , மெதடிஸ்ற் போன்ற கிறிஸ்தவ மிஷனரிமார் ஏலவே செயற்படத் துவங்கிவிட்டனர். ஆயினும், அமெரிக்க மிஷனின் வருகையை பிரித்தானிய ஆட்சியாளர் உள்ளுர விரும்பவில்லை.
அமெரிக்க – பிரித்தானிய உறவு கசந்திருந்த காலம் அது. எனினும்,  அமெரிக்க மிஷனரிகளைத் தடைசெய்யாமல் வரண்ட பிரதேசமான வட இலங்கைக்குச் செல்லுமாறு அரசு வற்புறுத்தியது. அதனாலேதான் அமெரிக்க மிஷன் வட இலங்கையிலே மட்டும் வேரூன்றியது. அதுவும் பின்னாளில் யாழ்ப்பாணம் குடாநாட்டுக்கு வரப்பிரசாதமாக  அமைந்தது எனலாம்.
எந்த மிஷனரி ஊழியரும் கிறிஸ்தவ மத போதனை செய்வதற்கே ஈழத்திற்கு வந்தனர். நாட்டின் பல பாகங்களிலும் அவர்கள் பணியாற்றினர். ஆயினும் வட இலங்கையிலே சமூக முன்னேற்றத்துக்கு அமெரிக்க மிஷனரிகள் ஆற்றிய பங்களிப்பு மிகவும் பாரியது.
கல்வி நிலையங்கள் நிறுவியும், சுகாதார நல்வாழ்வு பற்றிய அறிவூட்டலை  வளர்த்தும், மருத்துவ நிலையங்கள் நிறுவியும் பெண்களை கல்வியில் அக்கறை காண்பிக்கத்தூண்டியும், அச்சகம் நிறுவியும், செய்தித்தாள் வெளியிட்டும், பரவலாகச் சமுதாய முன்னேற்றத்திற்கு உழைத்த பெருமை அமெரிக்க மிஷனுக்குண்டு.
மற்றைய மிஷன்களைவிடப் பல்வேறு பரிமாணங்களில் அமெரிக்க மிஷனின் சேவை விசாலித்திருந்தது. அதற்கெல்லாம் மையமாக முதலில் அமைந்த ஊர்களில் முக்கியமானது தெல்லிப்பழை.
அமெரிக்க மிஷனின் முதலாவது தமிழ்ப்பாடசாலை 1816 ஆம் ஆண்டு அங்கு நிறுவப்பட்டது. அது இலவசக்கல்வி அளித்த தமிழ்ப்பாடசாலை. நாளடைவில் தமிழ் – ஆங்கிலம் ஆகிய இருமொழிப்பாடசாலையும் அங்கு நிறுவி, மொழிகளும் பயில வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. காலப்போக்கிலே, அவை இணைந்துதான்  ‘யூனியன்  ‘கல்லூரி எனப்பெயர் பெற்றது.
அமெரிக்க மிஷன் அச்சகம் 1820 இலே தெல்லிப்பழையில் நிறுவப்பட்டது. 1841 ஆம் ஆண்டிலே  உதயாரகை, Morning Star ஆகிய இரு செய்தித்தாள்களும் அங்கு பிரசுரமாயின.
பெண் கல்வி, தமிழ் – ஆங்கிலப்பாடசாலைகள், ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை போன்ற வசதிகளும் அங்குதான் முதலில் அமைந்தன. வட்டுக்கோட்டை , மானிப்பாய், பண்டத்தரிப்பு, உடுவில், வல்வெட்டி, அச்சுவேலி எனப் பல மிஷன் நிலையங்கள் உளவெனினும துவக்க வேலைகளுக்குத் தெல்லிப்பழையே மையமாக அமைந்தது.

கண்ணம்மா இந்த பனி கொட்டும் இரவினிலே .................

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 12 - கெத்து வாத்தியம் அல்லது ஜல்லரி­


கெத்து வாத்தியம் அல்லது ஜல்லரி­ தாளகருவி

அமைப்பு
வீணையைப் போலவே தோற்றம் கொண்டது கெத்து வாத்தியம். குடத்தின் அடிப்பகுதி, யாழின் அடிப்பகுதி இரண்டும் தரையில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு தட்டையாக அமைந்துள்ளன. சுருதியை மாற்றுவதற்கான குதிரை, இடப்புறத் தண்டியில் இடம்பெற்றுள்ளது. தண்டியில் மேளங்கள் இருக்காது. மேலே 4 வெள்ளி தந்திகள் (வேறு வேறு கன அளவுள்ளதாக) இழுத்து 4 பிரடைகளில் கட்டப்பட்டிருக்கும்.  மணிக்காய்களின் மூலம் துல்லியமாக இதில் சுருதி சேர்க்க முடியும். 25 மற்றும் 32 செ.மீ நீளமுள்ள இரண்டு மூங்கில் குச்சிகளால் இந்தத் தந்திகளைத் தட்டி இசைக்க வேண்டும். வீணையைப் போன்றே இதிலும் மணிக்காய்களின் மூலம் துல்லியமாக சுருதி சேர்க்கப்படும். இதில் மத்திய ஸ்தாயி சட்ஜம், அனுமந்திர ஸ்தாயி சட்ஜம், மத்திய ஸ்தாயி பஞ்சமம், தாரஸ்தாயி சட்ஜம் (அல்லது அனுமந்திர பஞ்சமம்) ஆகிய சுரங்கள் ஒலிக்கும்.
இடதுகைக் குச்சி சிறிது தட்டையாகவும், வலதுகைக் குச்சி சிறியதாகவும் இருக்கும். இக்குச்சிகளின் கைப்பிடிப் பகுதிகளில் பரல்களும் சலங்கைகளும் பொருத்தப்பட்ட வளையமைப்பு உண்டு. இவை சலங்கை மற்றும் வெண்கல நாதத்தை உருவாக்கும். வலதுகைக் குச்சியை குதிரைப்பகுதிக்கு அருகில் தட்டினால் விதம்விதமான ஜதிக்கோர்வைகள் உருவாகும். இதை வாசிக்க மிகுந்த சாமர்த்தியமும் புலமையும் தேவை.

குறிப்பு
பார்க்க நரம்புக்கருவியாகத் தோன்றினாலும், உண்மையில் இது தாளகருவி. மிருதங்கத்தில் வாசிக்கப்படும் அத்தனை சொற்கட்டுகளையும் இவ்வாத்தியத்தில் பிசிறின்றி வாசிக்க முடியும்.  இசையரங்கங்களிலும் பக்கவாத்தியமாக இசைக்கப்பட்டது. ஜல்லரி, ஜல்லி போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டது.
தஞ்சையை ஆண்ட மன்னர் ஒருவர் ஒருமுறை பயண இடைவெளியில் ஆவுடையார்கோவிலில் தங்க நேர்ந்தது. அம்மன்னரை மரியாதை நிமித்தமாக ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் ஒருவர் சந்தித்தார். அந்நிகழ்வில், தஞ்சை மன்னரோடு வந்திருந்த சேஷய்யா, குப்பையா, சுப்பையா சகோதரர்கள் இந்த வாத்தியத்தை இசைத்து மகிழ்வூட்டினார்கள். இதன் நாதத்திலும் வடிவத்திலும் வாசிக்கும் முறையிலும் மயங்கிப்போன சமஸ்தான மன்னர், ‘இக்கலைஞர்களையும், இந்த இசைக்கருவியையும் திருப்பெருந்துறை கோயிலுக்குக் கொடையாகத் தரவேண்டும்’ என்று தஞ்சை மன்னரிடம் கோரிக்கை விடுத்தார். தஞ்சை மன்னர் அக்கோரிக்கையை ஏற்று கொடையளித்தார். இன்று வரையிலும் சேஷய்யா சகோதரர்களின் பரம்பரையினரே கெத்துவாத்தியத்தை ஆவுடையார்கோவில் சிவயோக நாயகி சன்னிதியில் வாசிக்கிறார்கள். இவர்களுக்கு இறையிலி நில மானியமும் அளிக்கப்பட்டுள்ளது.

நல்லதோர் வீணை செய்தே (தன்னம்பிக்கை கட்டுரை) வித்யாசாகர்!


ந்த உலகமே இடிந்து மேலே விழும் செத்துப்போவோம் என்றாலும் சாகும்வரைப் போராடி தன்னைக் காத்துக்கொள்ளுமொரு துணிவு இந்த உயிரென்னும் கண்ணிற்குத் தெரியாத காற்றுப்பொருளிற்கு உண்டு. உடலெங்கும் நீரால் வாழும் வலிமையும்காற்றைக் கொண்டு பறக்கும் திறமையும்இவ்வுலகை ஒரு கைப்பேசிக்குள் அடக்கிய அறிவையும் கொண்டவர்கள் நாமெல்லோரும். பிறகெதற்கு இங்கே வாழ்வதற்கு பயம் 
பயம் இல்லாதவர்கள் பதுக்கிடல் தீதில்லையா பயமில்லாதவர்கள் மௌனித்திருத்தல் குற்றமில்லையா பயமற்றிருத்தல் என்பது அறிவோடு இயங்குவதன் வெளிப்பாடு. எப்போது நாம் எதிர்காலத்திற்கு வேண்டும் என்று எண்ணுகிறோமோஎதிர்காலத்திற்கென பதுக்கி வைக்கிறோமோஅப்போதே எதிர்காலத்தில் நான் எந்நிலை ஆவேனோ என்று பயந்த உணர்வையும் வெளிக்காட்டி விடுகிறோம்எதிர்காலம் நிகழ் காலத்தை விட முக்கியமில்லையே? பிறகெதற்கு எதிர்காலத்தைக் கண்டு பயம் ?கண்ணெதிரே உயிருக்கு துடிப்பவன், பசியில் செத்தவர் என பட்டியல் நீண்டிருக்க எனது எதிர்காலம் என்பது சுயநலத்தின் உச்சமில்லையாமுதலில்நான் நலம் என்றாலே என்னோடு உள்ளவர்கள் நலமா என்று பார்ப்பது தான் மானுட அறிவுஇல்லையா பிறருக்கென்றும் எண்ணி வாழ்வதன்றோ மனிதாபிமான சிந்தனை என்பதாகும் ?
விலங்குகளுக்குத்தான் தனது பசியொன்றே போராட்டம். பசியொன்றே வாழ்க்கை. இருந்தும் விலங்குகள் பல பிரமிக்கத்தக்க தனக்கேயான பல நற்பண்புகளோடு மிகச் சிறப்பாக வாழ்ந்துவருகிறது. நாம் தான்தானும் வாழாமல் பிறரையும் வாழவிடாது மொத்தத்தில் அழிந்து வருகிறோம்.

மழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 34 முருகபூபதி


ன்றைய பொழுதும் வழக்கம்போல் விடிந்தது. எல்லோருக்கும் முன்னர்  துயிலைக்கலைத்துவிடும் அபிதா, படுக்கையிலிருந்து எழாமலேயே யோசித்துக்கொண்டிருக்கிறாள்.
இந்த வைரஸ் தொற்று இன்னமும் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கப்போகிறது….?  அடிக்கடி நடைமுறைக்கு வரும் ஊரடங்கு உத்தரவு எப்போது முற்றாக நிறுத்தப்படும்..?
போர் உக்கிரமடைந்திருந்தபோது  பங்கருக்குள் முடங்கியிருந்த காலம் நினைவுக்கு வந்து  வருத்தியது. அதுபோன்று இன்றைய காலமும் எதிர்காலத்தில் நினைவுகளாக தொடரலாம்.
பதுங்கு குழியிலிருந்து  வெளியே சென்று குழந்தைக்கு பால்மா எடுத்துவரவும் முடியாமல், பாலிடப்பட வேண்டிய போத்தலில் தண்ணீரை வார்த்துக் கொடுத்து அதன் பசிபோக்குவதற்கு எத்தனித்த கொடுமை இன்று எவருக்கும் இல்லை. இவர்கள் இருப்பது பதுங்கு குழியல்ல. சட்டம்தான் முடங்கவைத்திருக்கிறது.
ஊரடங்கு தளர்த்தப்படும்போது, வெளியே வந்து தேவையானதை வாங்கிக்கொள்கிறார்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வீடு வீடாகச்சென்று உலர் உணவுப்பொருட்ளை விநியோகிக்கிறார்கள்.
நிகும்பலையில் கேஸ் சிலிண்டர்கள், மரக்கறிகள், அரிசி, மாவு, சீனி,  கோப்பி, தேயிலை, மீன்ரின், சோப்புகள் என்று ஏற்றிவரும் லொறிகள்  வந்து  வீதிகளில் நிற்கின்றன.
வீட்டுக்குள்ளிருந்து தொலைக்காட்சி பார்க்கிறார்கள். வாட்ஸ் அப்பில் மீம்ஸ் அனுப்புகிறார்கள். கைத்தொலைபேசியிலும் ஸ்கைப்பிலும் ஊர் வம்பு பேசுகிறார்கள். முகநூலில் நோண்டி நுங்கெடுக்கிறார்கள்.  புத்தகம் – பத்திரிகை படிக்கிறார்கள்.  நன்றாக உறங்கி சோம்பல் முறிக்கிறார்கள். நேற்று என்ன படம் பார்த்தீர்கள்..? என்று பரஸ்பரம் கேட்டவாறு அதன் கதை, முடிவு பற்றி விவாதிக்கிறார்கள்.

தாக சாந்தி - கன்பரா யோகன்


நடைபாதையின் அருகே நின்ற கம் மரத்தினருகே ஒரு வட்ட வடிவிலான பிளாஸ்டிக் தொட்டி வைக்கப்பட்டிருந்ததை கடந்த கோடை நாட்களில் கண்டேன். அதில் அரைவாசிக்குத்  தண்ணீர் ஊற்றப்பட்டிருந்தது. மரத்தில் ஒட்டப்பட்டிருந்த ஒரு கடதாசியில் எழுதப்பட்டிருந்த குறிப்பொன்று   இது நடை போகும் நாய்கள் குடிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது, இதை அகற்ற வேண்டாமென்று நாகரீகமாக சொல்லியது.
கார்களில் இருந்து பயணம் செய்தும், நாற்காலிகளில் நீண்ட நேரம் இருந்து வேலை செய்தும் வருபவர்கள்  உடற்பயிற்சிக்காக நடை போக அவர்களுடன் கூட நடக்க  வழித்துணையாக நாய்களும் வருகின்றன. அவைக்கும் நடை ஒரு தேவையான  உடற் பயிற்சிதான். வேடிக்கையாக மரத்தினடியில் வைக்கப்பட்டிருந்த நான் கண்ட தண்ணீர்த் தொட்டி நாய்களுக்கானதென்பது கால ஒட்டத்திலேற்பட்ட ஒரு புதுக் கோலம்தான்.
கோடை காலங்களில் கால் நடையாக நெடுந்தூரம் செல்லும் வழிப்போக்கர்களுக்காக தண்ணீர்த் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தை கண்டு வந்திருக்கிறோம். தண்ணீர்த் தொட்டிகள் மட்டுமல்ல , நடை பயணிகள் இளைப்பாறுவதற்காக , தங்கு மடங்களும், சத்திரங்களும் இருந்தன. கால ஒட்டத்தில் வாகனப் போக்குவரத்தில் ஏற்பட்ட வளர்ச்சிகளினால் நடைப் பயணங்கள் அருகிப் போய் இந்த மடங்களும், சத்திரங்களும் பாவனைக்கு உதவாமற் போய் விட்டன.