தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

வேற்றுமை தெரியா வெள்ளை மனமே !




மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 
























குழந்தைகள் இருந்தால் குதூகலம் நிறையும்
குதூகலம் குழந்தைகள் கூடவே வந்திடும்
கூடவே வந்தால் வீடெலாம் ஒளிரும்
வீடெலாம் ஒளிர்ந்தால் வேதனை ஓடிடும் 

வேதனை ஓடிட வைப்பது குழந்தையே
குழந்தையே குடும்பத்தின் மாபெரும் சொத்து
மாபெரும் சொத்து மகிழ்வினைப் பொழியும்
ஆனந்த மழையாய் ஆகியே இருக்கும் 

மழலையின் மழையில் நனைவது சுகமே
மழலையை மடியில் வைப்பதும் சுகமே
மழலையைக் கேட்டால் மனக்குறை பறக்கும்
மனக்குறை பறந்தால் வாழ்வது சிறக்கும்

கிளிக்கண்ணிகள் -- ( பழித்தறிவுறுத்தல்)

                                                                                                           









மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்கள் இயற்றியவை  

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,

வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!

வாய்ச் சொல்லில் வீரரடி.

 

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,

நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!

நாளில் மறப்பா ரடீ

 

சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்

அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே!

அகலிகளுக் கின்ப முண்டோ ?

 

கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற

பெண்களின் கூட்டமடீ! - கிளியே!

பேசிப் பயனென் னடீ

 

யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,

மந்திரத் தாலே யெங்கும் - கிளியே!

மாங்கனி வீழ்வ துண்டோ !

 

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்

செப்பித் திரிவா ரடீ! - கிளியே!

செய்வ தறியா ரடீ!

 

தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்

நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே!

நம்புத லற்றா ரடீ!

 

மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்

பேதைகள் போலு யிரைக் - கிளியே

பேணி யிருந்தா ரடீ!

 

தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய

ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே

அஞ்சிக் கிடந்தா ரடீ!

தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்-2…..சங்கர சுப்பிரமணியன்.


சீனவின் பீஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையத்தை விமானம் நெருங்கிக் கொண்டிருந்தது. வானிலிருந்து பார்க்கும்போது இதுவரை நான் பார்த்திராத பிரம்மாண்டமான நகரமாகத்தான் தெரிந்தது. பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையை பார்ப்பதுபோல் வைத்தகண் வாங்காமல் கழுத்து சுளுக்கும்வரை நான் பார்த்ததற்கு காரணம் வேறு.


வானில் இருந்து பார்க்கும்போது இரவு நேரத்தில் மின்னும் விளக்குகளுடன் ஒரு டிராகன் படுத்திருப்பதுபோல் தெரியுமாம். அப்படி வடிவமைத்திருக்கிறார்களாம். ஆனால் திருப்பதி கோவிலில் ஜருகண்டி கதையாகத்தான் அது முடிந்தது. ஒருவேளை விமானம் வெகு உயரத்தில் பறக்கும்போதே பார்த்திருக்க வேண்டுமோ? அல்லது விமானம் சீனாவைக் கடந்து டேக் ஆப் ஆகிசெல்லும் பொழுது தெரியுமோ ? தெரியவில்லை.

சரி, சீனாவை விட்டுக் கிளம்பும் போது பார்க்கலாம் என்று எண்ணினேன். விமானம் கிளம்பியது சீனாவின் டாக்ஸிங் பன்னாட்டு விமானத்தில் இருந்து. 17 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட இந் விமான நிலயத்தை பார்த்த பிரமிப்பில் மாம்பழம் போய் கத்த வந்தது டும் டும் கதையாக டிராகன் போய் இந்த விமான நிலையத்தின் நட்சத்திர வடிவமைப்பு டிராகனை மறக்கடித்தது.

பீஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலயத்தைப் பற்றிச் சொன்னேன் அல்லவா? விமானம் தரையிறங்கியதும் அதைப் பற்றிய வியப்பு இன்னும் அதிகமானது. இதைவிட வியப்படையக்கூடிய விமான நிலையத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டையாக என் அனுபவத்தை மட்டும் கூறுகிறேன். இதுவரை நான் பயணித்து தரை இறங்கிய விமனங்கள் ஓடுதளத்தில் நிற்காமல் ஓடி நிற்கவேண்டிய இடத்தில் பத்து நிமிடங்களில் வந்து நிற்கும்.

சிலசமயங்களில் ஓடுபாதையில் தடையேற்பட்டு ஓடாமல் நின்று

அதன் பின் நிற்கவேண்டிய இடத்தில் வந்தடைவதில் அதிக நேரம் எடுக்கலாம். ஆனால் விமானம் தரையிறங்கியதிலிருந்து எங்கும் நிற்காமல் ஓடுபாதையில் சென்றபடியே நிற்கும் இடத்தை வந்தடைய அரைமணி நேரமானதென்றால் சீனாவின் தலைநகர் பன்னாட்டு விமான நிலயத்தின் பரப்பளவை உங்கள் பார்வைக்கே விடுகிறேன்.

விமானத்திலிருந்து இறங்கியதும் விமானத்தில் இருந்தபோதும் கவனித்ததில் வேறு நாட்டவர்களின் எண்ணிக்கை என்பது மிக மிக குறைவே. விமானத்தில் இருந்து இறங்கியதும் சிம் கார்டு வாங்கவேண்டியிருந்தது. சில சீன நண்பர்களின் ஆலோசணையின்படி சீனாவில் சிம் கார்டு வாங்க முடிவு செய்தேன். நான் பயணித்த விமானம் டெர்மினல் மூன்றில் வந்தடைந்தது.

டெர்மினல் மூன்றில் உள்ள சைனா மொபைல்
கடை இரவு பதினொரு மணிவரை மட்டுமே திறந்திருக்கும். ஆதலால் அங்கு என்னால் சிம் கார்டு வாங்கமுடியவில்லை. டெர்மினல் இரண்டில் மட்டுமே இருபத்திநான்கு மணி நேரமும் சைனா மொபைல் திறந்திருக்கும். குடிவரவைக் கடந்து கரோசலில் பயணப்பொதிகளப் பெற கீழ்த்தளம் சென்று தொடர்வண்டியில் செல்லவேண்டும். தொடர்வண்டிக்காக காத்திருந்தபோது எப்படியாவது புகைப்படம் எடுக்கவேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை.

மாறுபட்ட ஹைக்கூவில் வேறுபட்ட ஒரு ஐ க்யூ!!

உடல் இந்த மண்ணுக்கு என்றான்

உயிர் இன்பத் தமிமிழுக்கு என்றான்
உடனிருந்து தீங்கையே செய்கிறான்

என்அம்மாவை அப்பாவை மாற்றுகிறான்
தன் பெற்றோராய் தப்பாய் சொல்கிறான்
பேரில்லாதோரை என் பெற்றோரென்றான்

தமிழர் வீரம் தமிழர் பண்பென்றான்
தமிழர் நாகரிகம் என்றும் புகழ்ந்தவனே
இன்று அதையே திருத்தவும் பார்க்கிறான்

என் கடவுளுக்கு வேறு பெயர் வைத்தான்
விரும்பியே திரைமறைவில் மகிழ்ந்தான்
என்கடவுளையே தன் கடவுள் என்கிறான்

கோயில் கொடியவர் கூடாரமென்றான்
அப்படிச் சொல்லியே வாழ்ந்து வந்தான்
இன்று கோயில் கோயிலாக போகிறான்

இலங்கைச் செய்திகள்

நாட்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் - சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

யாழில் சட்டவிரோத சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு - வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸ்

மாவீரர் நாள் நிகழ்வுகள் : முல்லைத்தீவில் முன்னேற்பாடுகள் ஆரம்பம்

19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு நடைபவனி  



நாட்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் - சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை 

Published By: Digital Desk 1

13 Nov, 2025 | 03:41 PM

நாட்டில் ஐந்து பேரில் ஒருவர் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இது நாட்டில் அதிகரித்துவரும் பொது சுகாதார கவலையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய கண் வைத்தியசாலையின் ஆலோசகர் கண் அறுவை சிகிச்சை நிபுணர் கபில பந்துதிலக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கண் நோய்களாலும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

உலகச் செய்திகள்

அமெரிக்காவில் 43 நாள் நீடித்த அரசு முடக்கம் முடிவு - சட்டமூலத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்

இராணுவ விமானம் மலையில் மோதி விபத்து - 20 பேர் உயிரிழப்பு

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் - ட்ரம்ப்

டெல்லியில் பதற்றம்: செங்கோட்டை அருகே  கார் வெடிப்பு - ஒருவர் பலி, பலர் காயம் ? உயிரிழப்பு அதிகரிக்கலாமென அச்சம்


டெல்லியில் பதற்றம்: செங்கோட்டை அருகே  கார் வெடிப்பு - ஒருவர் பலி, பலர் காயம் ? உயிரிழப்பு அதிகரிக்கலாமென அச்சம்


மெரிக்காவில் 43 நாள் நீடித்த அரசு முடக்கம் முடிவு - சட்டமூலத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப் 

13 Nov, 2025 | 05:56 PM

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிதி சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, 43 நாள் அமெரிக்க அரசு முடக்கம் முடிவுக்கு வந்துள்ளது. 

இதன்போது ட்ரம்ப் தெரிவிக்கையில், சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்காக நூற்றுக்கணக்கான பில்லின் டொலர்களைப் பறிக்கும் முயற்சியில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் கடந்த 43 நாட்களாக அமெரிக்க அரசாங்கத்தை முடக்கினர். இன்று மிரட்டி பணம் பறிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்றார். 

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

29-11- 2025  Sat: Australian Medical Aid Foundation proudly presents முத்தமிழ் மாலை

30-11-2025  Sunமாத்தளைசோமுவின்  100 சிறுகதைகள் நூல் வெளியீடு   ANTHONY CATHOLIC CHURCH-TOONGABBIE-4-00 pm to 6-30 pm.

14-12-2025  Sun: தமிழ் இலக்கிய கலை மன்றம் - திருக்குறள் போட்டிகள் -பரிசளிப்பு நிகழ்ச்சி- 5 PM   ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள  மண்டபம்

14-12-2025  Sunஸ்ரீ  துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டிக்கான பரிசளிப்பு  5:30 PM   ஸ்ரீ துர்க்கை அம்மன்ஆலய வளாகத்தில் அமைந்துள்ள  மண்டபம்

சுவாமி ஐயப்பன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டு தோறும் விரதம் இருந்து


சுவாமி ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு யாத்திரை செல்வது தொடர்ந்து இடம் பெற்று வருகிறது. அந்த வகையில் இவ்வாண்டும் கார்த்திகை முதல் தேதி மாலையிட்டு பக்தர்கள் தங்களின் விரதத்தை தொடங்குகிறார்கள். இவ்வாறு இலட்சக்கணக்கான பக்தர்களின் மனதில் குடியிருக்கும் ஐயப்ப சாமியின் மகிமையை உணர்த்தும் விதமாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் படம் ஒன்று தயாரானது. கலரில் தயாரான அப் படத்தின் பேர் சுவாமி ஐயப்பன் . படத்தை தயாரித்து, இயக்கியவர் மெரிலாண்ட் சுப்பிரமணியம். 



ஆரம்ப காலத்தில் இளைஞனான சுப்பிரமணியம் ஒரு கேனில்

பெட்ரோல் எடுத்துக் கொண்டு பிரதான வீதியில் நின்று , பெட்ரோல் இல்லாமல் நின்று விடும் வாகனங்களுக்கு சற்று கூடுதல் விலைக்கு பெட்ரோலை விற்று கொண்டிருந்தார். அதே போல் பஞ்சராகி வழியில் நின்று விடும் கார்களின் டயரையும் மாற்றிக் கொடுப்பார். ஒரு முறை ஒரு வெள்ளைக்காரரின் கார் பெற்றோல் இல்லாமல் வழியில் நின்று விட சுப்பிரமணியம் அவருக்கு பெற்றோல் கொடுத்து உதவியுள்ளார். அந்த வெள்ளைக்காரர் டன் லோப் டயர் கம்பெனியின் ஜெனரல் மானேஜர் என்று அறிந்து தன்னால் டயர் விற்று தர முடியும் என்றும் அவரிடம் கூறியுள்ளார்.வீதியில் நிற்கும் 18 வயது இளைஞனால் எப்படி டயர் விற்க முடியும் என்று அதிசயப்பட்ட வெள்ளைக்காரர் இரண்டு டயர்களை அவருக்கு அனுப்பி வைத்துள்ளார். 

 அவற்றை உடனடியாகவே சுப்பிரமணியம் விற்று பணத்தை அனுப்பி வைக்கவே , வெள்ளைக்காரர் அசந்து போய் சுப்ரமணியத்தையே தனது டயர் நிறுவனத்தின் முகவராக அந்த பிராந்தியத்துக்கு நியமித்து விட்டார். அதில் இருந்து முன்னேறிய சுப்பிரமணியம் பின்னர் மெரிலாண்ட்ஸ் ஸ்டுடியோவை உருவாக்கி, படத் தயாரிப்பில் இறங்கி , பல படங்களையும் இயக்கினார். இரண்டு தடவை திருவனந்தபுரம் மேயராகவும் பதவி வகித்தார்! இவர் தயாரித்த யானை வளர்த்த வானம்பாடி படம் வெற்றி பெற்றது. அதே போல் எம் ஜி ஆர், பத்மினி, வீரப்பா நடிப்பில் ராஜராஜன் படத்தையும் இவர் தயாரித்தார். அந்த வரிசையில் 1975ல் இவர் உருவாக்கிய படம் சுவாமி ஐயப்பன். 



வன்னியின் கண்ணீர் அமைப்புக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி 23/11/2025

 


மாத்தளை சோமுவின் நூல் வெளியீட்டு விழா 30.11.2025

 .



முத்தமிழ் மாலை 29/11/2025

 


தமிழ் மொழி /யாப்பு இலக்கண வகுப்புகள் (29/10/2025 முதல்)