அவுஸ்திரேலியாவின் நாடு கடந்த தமிழீழ அரசுப் பிரதிநிதிகளுக்கான வேட்புமனு தாக்கல்

.


அவுஸ்திரேலியாவில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான 10 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் நாளை 03 – 05 – 2010 தொடக்கம் 07 – 05 – 2010 வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. மாநில ரீதியாக தெரிவு செய்யப்படவுள்ள பிரதிநிதிகள் விபரம்: நியு சவுத் வேல்ஸ் 04இ விக்ரோரியா 03இ குயின்ஸ்லாந்து 01இ கான்பரா மற்றும் ரஸ்மேனியா 01இ வடக்கு தெற்கு மேற்கு மாநிலங்கள் 01. ஏனைய விபரங்கள் ஊடகங்கள் வாயிலாகவும் www.tgte-au.info என்ற இணையதளம் ஊடாகவும் பெற்றுக்கொள்ளமுடியும்.

அவுஸ்திரேலியா மெல்பேர்ன் மேதினப் பேரணி

.

அவுஸ்திரேலியாவின் விக்ரோரியா மாநிலத்தில் 02-05-2010 ஞாயிற்றுக்கிழமை மே நாள் பேரணி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அவுஸ்திரேலியாவின் ஏனைய பல்லின சமூகத்தினருடனும் தொழிலாளர் இணையங்களுடனும் இணைந்து அவுஸ்திரேலிய மெல்பேர்ன் தமிழ் சமூகத்தினரும் பங்குகொண்டனர்.சுழலும் தமிழ் உலகம் நூல்வெளியீட்டு விழா என் பார்வை

.
                                                                                                           கவிஞர் செ.பாஸ்கரன்.

சுழலும் தமிழ் உலகம் நூல்வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை ஹோம்புஸ் உயர் பாடசாலையில் இடம் பெற்றது. 5.30 மணிக்கு ஆரம்பமாகும்; என அழைப்பிதழில் போடப்பட்டிருந்தபோதும் 6.10 இற்கு நிகழ்ச்சி ஆரம்பமானது.


            நூலாசிரியர் சந்திரலேகாவிடம் வானொலி மாமா நா.மகேசன் பிரதி வாங்குகிறார்

இலங்கையைச் சேர்ந்த 75 பேர் படகில் இருந்து இறக்கப்பட்டனர்

.

 மலேசிய அரசு தங்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இரண்டு நாள்கள் படகில் இருந்து இறங்க மறுத்த இலங்கையைச் சேர்ந்த 75 பேர் மலேசிய போலீஸப்ரால் தரையிறக்கப்பட்டனர்.

பகவத் கீதை - ஹரி நாமம்

.


சென்ற வாரம் நாம் இந்த உடல் அல்ல, மாறாக நாம் ஒரு ஆத்மா என்று பார்த்தோம்.


தொழிலாளர் தினமான மே தினம்

.


தங்கள் உதிரத்தை வேர்வையாகச் சிந்தி உழைத்து மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள், 8 மணிநேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய உரிமையாக போராடிப் பெற்ற நாளே மே தினமாகும்!


தேவையான கோவை

.                                                                        
                 
                                                                                                     அ. முத்துலிங்கம்

மணி வேலுப்பிள்ளை ஒரு கதை சொன்னார். அவருக்கு தெரிந்தவர் ஒருவர் sound economy என்பதை 'சத்தமிடும் பொருளாதாரம்' என மொழிபெயர்த்தாராம். அதைக் கேட்டதும் எனக்கு சத்தமிட்டு அழவேண்டும் போல தோன்றியது. எனக்கு தெரிந்தவர் beforehand என்பதை முன்கை என்று மொழிபெயர்த்தார். இன்னொருவர் துணிந்து செக்கோவ் மேலேயே கைவைத்துவிட்டார். அவருடைய The Lady with the Dog சிறுகதையை 'சீமாட்டியுடன் கூடிய நாய்' என்று மொழிபெயர்த்தார். இவருடன் ஒப்பிடும்போது முதலாமவர் செய்த மொழிபெயர்ப்பு விருது பெறும் தகுதி கொண்டது.

சி.சிவசேகரத்தின் “கல்லெறி தூரம்” கவிதைத் தொகுதியின் உள் நுழைந்து

என்னிடம் மகிழ்ச்சியில்லை

என்னிடம் வார்த்தைகளில்லை

கண்ணீர் இல்லை

எனக்குள் இருக்கும் இதயம்

கல்லைப் போல

அதில் நம்பிக்கையும்

அச்சமும் பூசப்பட்டுள்ளது

நம்பிக்கையை கையிலெடுத்துப்

புறப்படுகிறேன் நான்

போர்க்குற்றநாள் மே 18

.
"வன்னிப் பேரவலத்தின் நினைவுகள் ஒவ்வொருவர் நெஞ்சையும் எரிய வைத்துக் கொண்டிருக்க, அதன் ஓராண்டு முடிவடையும் காலத்துள் நாம் வாழ்வது என்பது தாங்க முடியாத சோகமானது."

அபயகரம் நிகழ்வு என்பார்வையில்

 .

                                                                        நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்அபய கரம் ஆமாம் நாதியற்ற ஈழம் வாழ் குழந்தைகளின் நல்வாழ்வை மனதில் கொண்டு அந்த நிக்கற்ற சிறாருக்கு அபய கரம் கொடுக்கும் சேவை நிறுவகம் இது.

வருடா வருடம் கலை நிகழ்சிகளை நடத்தி அதன் மூலம் பெறும் பணத்தை ஈழத்திற்கு அனுப்பி சேவை செய்பவர்கள். இந்த வருடம் தமது 18 ஆவது ஆண்டாக இந்த கலை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இதன் இயக்குனராக இருந்து சமூகத் தொண்டு செய்யும் தம்பதியரை யாவரும் அறிவார்கள். பல சிவானந்தன்கள் எமது சமூகத்தில் இருப்பதால் இவர் அபயகரம் சிவானந்தன் எனவே அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் பின் ஒரு பெண் இருப்பதாக கூறுவார்கள் யாவரின் அன்பையும் பெற்ற பரமேஸ் சிவானந்தன் தான் அந்தப்பெண்.

சிட்னி திரைஅரங்குகளில் சுறா திரைப்பட காட்சி நேரம்

.

சிட்னி திரைஅரங்குகளில்   விஜெய் , தமனா , வடிவேலு மற்றும் பலர் நடித்த சுறா
திரைப்படம் கான்பிக்கப்பட்டுக் கொண்டிடுக்கிறது , காட்சி நேரம், திரை அரங்கு போன்ற விபரங்களை கீழே பார்க்கவும்மெல்பேர்ண் நாட்டுப்பற்றாளர் நாள்

.

அவுஸ்திரேலியாவின் விக்ரோரியா மாநிலத்தில் சென்ற  ஞாயிற்றுக்கிழமை 25 – 04 – 2010 அன்று நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.அமைதியும் இன்பமும்

.


                                  சித்தாந்தரத்தினம்,    கலாநிதி க. கணேசலிங்கம்

உலக வாழ்வில் இன்பத்தை நாடுவதும் துன்பத்தைத் தவிர்ப்பதும் மனித இயல்பாக உள்ளது. வாழும் காலத்தில் புகழ் செல்வம் போன்றவற்றைச் சேர்ப்பது முக்கியமானது, அதுவே இன்பம் பெறும் வழி என எண்ணிப் பலர் செயற்படுகின்றனர்.

வாழ்வை இன்பமயமாகக் கண்டு மகிழ்வது அல்லது துன்பத்தைக் கண்டு அமைதியற்றுத் துயருறுவது பலரின் பண்பாக இருக்கிறது. இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. ஆயினும் வாழுங்காலத்தில் அமைதியாகவும் இன்பமாகவும் வாழலாம். இதற்குச் சைவசமயம் வழிகாட்டுகிறது.

சிட்னி அறிவகம் நடாத்தும் வசந்தமாலை 2010

.


 சிட்னி தமிழ் அறிவகம் நீண்ட காலமாக சிட்னியில் இயங்கிவரும் அமைப்பு. தமிழ் மக்களுக்கு தேவையான புத்தகங்கள் பத்திரிகைகள் சஞ்சிகைகள் போன்றவற்றை வழங்கிக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாது. தமிழில் வெளிவரும் நூல்ககளை சேமித்து வைக்கும் ஒரு அறிவுக்கழஞ்சியமாக இருக்கின்றது. தமிழில் உயர் வகுப்பில் படித்து HSC பரீட்சைக்கு தோன்றும் மாணவர்கள் இந்த அறிவகத்தின் மூலம் மிகவும் பயனடைகின்றார்கள். சேவை அடிப்படையில் இதில் பலர் வேலை செய்வதன் மூலம் அறிவகம் தமிழ்மக்களின் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
வருடம் தோறும் இவ் அமைப்பால் மேற்கொள்ளப்படும் வசந்த மாலை 2010 என்ற நிகழ்ச்சி மே மாதம் 8ம் திகதி இடம் பெற இருக்கிறது.

இவ்வார செய்திகள்

                                                                               - செய்தித்தொகுப்பு  -கரு 

 xx முன்னாள் இலங்கை இராணுவ வீரர்களின் மீது அன்சாக் வண்டி மோதியது

 xx   நடைபாதை உடைந்து விழுந்ததில் மாணவர்கள் காயம்