மரண அறிவித்தல்


கைலாசநாத ஸர்மா  பாலசுப்பிரமணியன் (பாலா)

மலர்வு: 31. 10. 1956        –       உதிர்வு: 08.06.2021

சுதுமலை – யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும்  மட்டக்களப்பு மற்றும், சிட்னி - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட, பாலசுப்பிரமணியன் அவர்கள்[Former Biomedical Engineer] , செவ்வாய்க்கிழமை 08.06.2021 அன்று சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற கைலாசநாத ஸர்மா - அலமேலு அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பூர்ணாநந்தக் குருக்கள் - கங்கா சரோஜினி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஹேமலதா அவர்களின் அருமைக் கணவரும், சுகன்யா, நிஷேவிதா மற்றும் ப்ரணிதா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

துவேய்ன், அஷ்வின், ஆகியோரின் அன்பு மாமனாரும், தாஜ், தியா ஆகியோரின் பாசமிகு பெயரனாரும், தியாகநாதன், மகேஸ்வரன், ஜானகி, நந்தினி, திரிலோஜனன், கோவர்த்தனன், மற்றும் எழில்ராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் மறைவுச் செய்தியினை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் நிறைவுக் கிரியைகள் சார்ந்த விபரங்கள் 

அன்னாரின் பூதவுடல், பார்வைக்காகப் புதன்கிழமை, 09.06.2021  மாலை 3:30 மணி முதல் - மாலை 4:15 மணிவரை   South Chapel, Rookwood Crematorium (Memorial Avenue, Rookwood) இல் வைக்கப்படும் என்பதனையும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

The viewing will only be for 45 minutes for all family and friends. Due to covid-19 only immediate family will be allowed to proceed after this.

தகவல்: அஷ்வின்: | 0421 618 866  

மவுண்ட்றூயிட் தமிழ்ப் பாடசாலை - பேச்சுப்போட்டி 2021 - பரமபுத்திரன்

 .


மவுண்ட்றூயிட் தமிழ்ப் பாடசாலையின் 2021ம் ஆண்டுக்கான பேச்சுப்போட்டி கடந்த 29/05/2021 அன்று கொலிற்றன் பொதுப் பள்ளி (Colyton Public School) அரங்கில் பகல் ஒருமணிக்கு ஆரம்பித்து மாலை ஐந்து முப்பது மணிவரை  நடைபெற்றது. இந்நிகழ்விற்குப் பாடசாலை நிர்வாகத் தலைவர், உறுப்பினர்கள்,  அதிபர், ஆசிரியர்கள், உட்பட பெற்றோர்களும் பெருமளவில் வருகை தந்து சிறப்பித்தனர். பேச்சுப்போட்டிக்கான நடுவர்களாக அவுத்திரேலிய தமிழ்முரசு இலத்திரனியல் பத்திரிகை ஆசிரியர் செல்லையா பாஸ்கரன்,  முனைவர் வெங்கடேஷ் மகாதேவன், ஆசிரியர் கவிஜா விக்னேஸ்வரன்   ஆகியோர் செயற்பட்டனர்.


முகமறியா எதிரியிப்போ சவால்கொடுத்து நிற்கின்றான் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 




 காட்டுத்தீ வந்தது கடுமழையும் வந்தது
 நாட்டையே முடக்குதற்கு நஞ்சுமே வந்தது 

 விவசாய நிலம்நோக்கி விரைந்ததே பேரழிவு 
 எலியென்னும் பெயராலே எமனெனவே ஆகியது 

 கங்காரு நாடு கதிகலங்கி நின்றது
 கற்றவர்கள் வல்லுனர்கள் கைகாட்டி நின்றனர்
 அரசாங்கம் பலவழியில் அலைந்துலைந்து போனது
 ஆளரவ மில்லாமல் அனைத்தும் அரங்கேறியது 

 முடக்கநிலைக் கெதிராக முழக்கமிட்டார் பலபேர்கள்
 அடக்குதற்குக் காவல்துறை ஆங்காங்கே குவிந்தது 
 எதிர்க்கட்சி எதிர்ப்பதையே இயல்பாக எடுத்தது
 எல்லோரும் வீட்டுக்குள் இருக்கும் நிலையாகியது 

எங்கள் ஆடுகளம் - கவிஞர் வ ஐ ச ஜெயபாலன்

 .



சுவாரஷ்யம் குன்றாத முருகபூபதியின் ‘சொல்லத்தவறிய கதைகள்’ மல்லியப்புசந்தி திலகர் ( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் )



ஒவ்வொருவருக்குள்ளும் ‘சொல்ல மறந்த கதைகள்’ பல இருக்கும். ‘சொல்லவேண்டிய கதைகள்’ பலவும் இருக்கும். ‘சொல்லத்தவறிய கதைகள்’ கூட பல இருக்கும். இந்த மூன்று வகை கதைகளையும் ஒருவர் சொல்ல முனைந்துள்ளார்.

 

அவற்றைச் சொன்னது மட்டுமல்லாது , எழுத்தினாலான அந்தக் கதைகளைத் தொகுத்து நூல்களாக்கியுமுள்ளார். அதில் ஒரு நூல்தான் ‘சொல்லத்தவறிய கதைகள்’.

சொல்லத்தவறிய கதைகளின் சொந்தக்காரர் லெ.முருகபூபதி. தமிழ் இலக்கியபரப்பில் நன்கறிந்த பெயர். அவரது எழுத்தும் வாழ்வும் இலங்கையைக் கடந்து புலம் பெயர்ந்தும் செல்வது. நீர்கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட இந்திய வம்சாவளி


தமிழரான லெ.முருகபூபதி அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர்.

ஆனால், அதனைத் தனியே ஒரு தொழிலாக மாத்திரம் கொள்ளாது அதனையே வாழ்வாக்கிக் கொண்டவர். அந்த வாழ்வில் ஒர் அரசியல் அணிசார்ந்தும், ஓர் இலக்கிய முகாம் சார்ந்தும் தன்னை அடையாளப்படுத்தி அமைப்பாக்கச் செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவாறே பத்திரிகை துறையில் பணியாற்றியவர்.

 

 பத்திரிகையாளரான தான் நடுநிலைமையில் செயற்படுபவன் என போலியாக பக்கம் சாயாது, இலங்கை இடது சாரி அரசியல் இயக்கச் செயற்பாடுகளிலும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகளிலும் தன்னைப் பக்கம் சாய்த்து பத்திரிகைப்  பணி செய்தவர்.

வீரகேசரி பத்திரிகையில் நீண்டகாலமாக பணியாற்றியவர். முப்பது வருடங்களுக்கு மேலாக அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார். ஆனால்,  இப்போதும் இலங்கைக் கள நிலவரங்களை மிகுந்த அவதானத்துடன் கவனித்து வருபவர். எழுதியும் வருபவர்.

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் – 44 திருச்சியிலிருந்து சென்னைப் பயணத்தில் ஒரு அன்பர் ! வேகமாக இயங்கி, காணாமலே போய்விட்ட காவலூர் ஜெகநாதன் !! முருகபூபதி



திருச்சியில் எமது  இலக்கிய நண்பரும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளருமான பிரேம்ஜி ஞானசுந்தரனின் குடும்பத்தினரும் வந்து தங்கியிருப்பதை அறிந்து, அவர்களையும் சென்று பார்த்தேன்.

திருமதி கமலி ஞானா, கொழும்பில் கணவருடன் சோவியத் தூதுவராலயத்தின் தகவல் பிரிவில் தட்டச்சாளராக பணியாற்றியவர்.

இருவரும் எமது குடும்ப நண்பர்கள்.  கமலி, 1983 கலவர காலத்து கசப்பான அனுபவங்களைச் சொன்னார்.

 “  என்ன பூபதி…..  நீங்களும் அவரும் மற்றும் நண்பர்களும் தேசிய ஒருமைப்பாடு  மாநாடு எல்லாம் நடத்தினீர்களே…  சிங்கள கிராமங்களுக்கெல்லாம் சென்று இன ஐக்கியம் பற்றியெல்லாம் கருத்தரங்குகள் நடத்தினீர்களே…  இப்போது எங்களையெல்லாம் ஓட ஓட கலைத்துவிட்டாங்கள்… பார்த்தீங்களா…?   “ என்று வேதனையான புன்னகையுடன் சொன்னார்.

அன்று ஒருநாள்,  கிழக்கிலங்கை காகித ஆலைக்கூட்டுத்தாபனத் தலைவர் கே. சி. தங்கராசா என்னிடம் சொன்னதையே அவரிடமும் சொன்னேன்.

 “ கலவரங்கள் கலையும் மேகங்கள்தானே கமலி  அக்கா…? “ 

பேக் கிறவுண்ட் மியூசிக் ( சிறுகதை ) கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன்


" எடம் வந்திரிச்சி சார், பெல்லை அடிங்க.... யோவ், பஸ்ஸ நிறுத்தய்யா..... கவனம் சார் ... மெதுவா... மெதுவா.


அம்பிட்டு தூரம் இல்லீங்க.... நேரா போய் அங்க தெரியிற ஆலமரத்தடிக்கிட்ட  சோத்துக் கை பக்கம் திரும்பினா நம்ம வீடு சார் ..... பக்கத்தில் நான் சொன்ன விஜயா தியேட்டர்.

எங்க மாமாவுக்கு தியேட்டரில பெரிய வேல - அவருதான் படம் காட்டற புரஜெக்டர் மெசின ஓட்டறவர். அம்மாவோட தம்பி.... நல்ல மனுஷன்.. கழுத்தில தங்கமால போட்டு வெள்ள வேஷ்டி  வெள்ள சட்டை போட்டு சும்மா ராஜா மாதிரி தியேட்டர் முன்னால் நிக்கிறத பாக்கணுமே. பேரு தாஸ்..... சனங்க 'தாஸ் சார்' ன்னுதான் கூப்பிடுவாங்க. என்னா கூப்பிடறது?... அவர பேர் சொல்லி கூப்புட ஆருக்கு துணிவு வருமாம்?

அவரு கண்ணாலமே பண்ணிக்கல. எங்க ஊட்ல கடைசி

அறையிலதான்  அவருக்கு வாழ்க்கை. பகல் பன்னிரண்டுக்கு சாப்பிட்டுட்டு போனார்னா செக்கண்ட் ஷோ முடிஞ்சு நடுச்சாமம்தான் வீடு.

எங்க வீட்ட பாத்தீங்களா சார்? மூணு அறையும் மண்டபமும். பெரிசும் இல்ல சிறிசும் இல்லமுன் அறையில அம்மா - அப்பா, நடு அறை சாமி அறை. நமக்கு ஹால்லதான் படுக்கை படிப்பு எல்லாம். ஹால் மூலையில சன்னலுக்கு பக்கத்தில இருக்கிற லொடலொட மேசையில் குந்திக்கிட்டு படிக்கிறதா பாசாங்கு பண்ணுவேன்

"டேய் சின்னி, நீ ஒரே புள்ள. படிச்சி பெரிய ஆளா வரணும். மாமா பின்னால தியேட்டர், படம்ன்னு சுத்தாத தெரியிதா?. பள்ளி முடிஞ்சி தியேட்டர் பக்கம் போனா தோல உரிச்சிடுவேன்அப்படின்னு அப்பா ரொம்ப பக்குவமா சொல்லி வைப்பாரு.

நான் கேட்பேனா? போவேன், மாட்டிக்குவேன்..... சும்மா மொங்கி எடுத்துடுவாரு.

அம்மா ரொம்ப அன்பு. "சும்மா சும்மா அவன் தோள்ள குந்திகிட்டு.... அவன் படிப்பான்.... என்ன, மாமாவோடதானே இருக்கான். மத்த பசங்கள போல ஊர்சுத்தி, பீடி சிகரெட் புடிச்சிகிட்டா இருக்கான்?"

கூந்தல் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணே சர்.

எமது தலை யில் இருக்கும் கூந்தல ோ எம் அழகை மே ம்படுத்துவது. ஆனால் தலை முடி அழகூட்டுபவை மட்டுமல்ல. தலை முடி தலை யை மட்டும், ஏன் எமது மூளை யை யும் தட்ப வெ ப்பத்தில் இருந்து காப்பாற்றுகிறது. இந்த தலை முடியில் தான் எத்தனை வகை எத்தனை நிறம். எம் ப ோன்ற ோரது முடி கருமை யானது .ஆனால் ஐர ோப்பிய வெ ள்ளை நிறத்தவர் தலை முடி செ ம்பட்டை நிறத்தை க ொண்டது. ஆனால் சீன இனத்தவர் தலை முடி சிறிது கூட சுருண்டு காணப்படும். ஆனால் ஆப்பிரிக்க கருப்பு இனத்தவர் தலை முடி கருமை யாக சுருண்டு சுருண்டு சுருள் கம்பி ப ோல் காட்சியளிக்கும். இவற்றிற்கு காரணம் உண்டு. தலை யில் இருந்து கூந்தல் வெ ளியே றும் துவாரம் சிறியதாக இருந்தால் அதிலிருந்து வெ ளியாகும் ப ொழுது கூந்தல் வளர்ச்சிக்கு வளை ந்து நெ ளிந்து வருகிறது. இதுதான் சுருண்ட கூந்தலுக்கு காரணமாகின்றது. ஆனால் கூந்தல் வெ ளியே றும் துவாரம் பெ ரிதாக இருந்தால் கூந்தல் தங்கு தடை யின்றி வெ ளியே வருவதால் சுருள் அற்ற கூந்தல் வளர்கிறது. தலை யில் வளரும் கூந்தலுக்கும் எமது சமய சம்பிரதாயங்களுக்கு த ொடர்பு உண்டு. முகமதியர் தலை யில் உள்ள முடியை முற்றாக மழித்து தலை யில் த ொப்பி அணிய வே ண்டும் என்பது சமய வழக்கு. முகமதிய மதத்திற்கு எதிர்ப்பு தெ ரிவிக்கும் மதம் இந்தியாவில் த ோன்றிய சீக்கிய மத க ொள்கை யின்படி தலை யில் வளரும் கூந்தலை வெ ட்டக்கூடாது. ஆண்கள் முகச்சவரம் செ ய்து தாடி வளர்ப்பார்கள், ஆனால் தலை முடியை க ொண்டை யாக கட்டி அழகாக தலை ப்பாகை அணிவார்கள். பெ ரும்பாலான இந்து குடும்பங்களில் பிறந்த குழந்தை யின் தலை யில் இருக்கும் முதல் முடியை சம்பிரதாயமாக குலதெ ய்வ க ோயிலில் மழிப்பது சம்பிரதாயம். சில குடும்பங்களில் இது ஒரு விழாவாகவும் நடை பெ றுகிறது. பரந்து பட்ட இந்திய இந்துக்கள் மத்தியில் பல்வே று சமூகங்கள் பல்வே று சம்பிரதாயங்களை கடை ப்பிடிப்பது வழமை . சில சமூகத்தில் தந்தை யார் இறந்து விட்டால் சிரார்த்தம் முன் மகன்கள் தலை முடியை மழித்த விடுவதுண்டு. அதே ப ோன்று இறை பக்தியின் நிமித்தம் ஆண்டவனுக்கு ஆண்கள், பெ ண்கள் அழகிய கூந்தலை மழித்து காணிக்கை யாக செ லுத்தி பக்தி செ ய்வ ோரும் உண்டு. திருப்பதி வெ ங்கடாசலபதி க ோவிலில் தலை முடியை இறை ப ொருட்டு மழிப்பது பெ ரிய சம்பிரதாயமாகவே நடந்து வருகிறது. மற்ற எந்த க ோவில்களில் இல்லாத அளவு அதிகமான பக்தர்கள் திருப்பதி யாருக்கு தனது கூந்தலை சமர்ப்பிப்பது வழமை . இதற்கு காரணமாக ஒரு புராண கதை யும் உண்டு. திருப்பதி வெ ங்கடாசலபதியின் மறு பெ யர் பாலாஜி. பாலாஜிக்கும் மனை யாள் மகாலக்ஷ்மிக்கு சிறிய சச்சரவு. நம்ம வடுீ கள் ப ோல தான் புருஷன் ப ொண்டாட்டி சிறு சிறு சச்சரவு , உடனே க ோபம் க ொண்ட பாலாஜி மலை அடிவாரத்தில் அமர்ந்து விட்டார் , மனை யாளும் அவரை தே டி வரவில்லை . அவரை சுற்றி பாம்பு புற்று த ோன்றிவிட்டது அவர் 9இருந்த இடமே தெ ரியவில்லை அந்த வட்டாரத்தில் வாழ்ந்த ஒரு இடை யன் அந்த கரை யான் புற்றை ஒரு மண்வெ ட்டி க ொண்டு வெ ட்ட முற்பட்டுள்ளார். உள்ளே இருந்த பாலாஜியின் உடலில் இது பட்டு ரத்தம் பெ ருக ஆரம்பித்து விட்டது. உடனே பார்வதி அம்மை யார் த ோன்றி தனது அழகிய கூந்தலில் இருந்து ஒரு பகுதியை வெ ட்டி பாலாஜியின் வெ ட்டுண்ட இடத்திலே கட்டு ப ோட்டு இரத்தப் பெ ருக்கை நிறுத்திவிட்டாராம். உலக மாதா அன்பின் நிமித்தம் செ ய்த செ ய்கை யின் ஞாபகார்த்தமாக இன்றை ய பக்தர்கள் தமது கூந்தலை பாலாஜிக்கு அளித்து புளகாங்கிதம் அடை கின்றனர். அதனால் தான் வே று க ோவில்களில் காணாத அளவு பக்தக ோடிகள் திருப்பதி வெ ங்கடாசலபதிக்கு கூந்தலை காணிக்கை யாக செ லுத்துகின்றனர். இங்கு தினம் தினம் தலை யை மழிப்பவர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்துக்கும் அதிகம். இவ்வாறு வரும் பக்தர்களின் கூந்தலை மழிக்க ஆயிரம் ஆண் நாவிதர்கள் நாற்பத்தை ந்து பெ ண் நாவிதர்கள் நே ரம் மணித்தியாலம் கணித்து த ொழில் பார்க்கிறார்கள். இந்த கூந்தல் மழிக்கும் இடத்தின் பெ யர் கல்யாண கர்த்தா. இவ்வாறு மழிக்கப்பட்ட கூந்தல்கள் பல வகை . சில கிராமத்து பெ ண்கள் அக்கறை எடுத்து வளர்த்த நீண்ட கூந்தலை ஆண்டவனுக்கு அரப்பணிக்கிறார்கள். இவ்வாறு வெ ட்டப்படும் கூந்தலுக்கு மே ற்குலக நாடுகளில் அம ோக மவுசு உண்டு. ஆஸ்கார் பரிசு பெ ற்ற பிரபல க ொலிவூட் சினிமா நடிகை சமந்தா ம ோட்டன் ப ோன்ற பணம் படை த்த நாகரீக நாரி மணிகள் இத்தகை ய கூந்தலுக்கு நிறை ந்த பணம் க ொடுத்து வாங்குகிறார்கள் இதற்கு காரணம் இந்திய கிராம பெ ண்கள் தலை முடியை மிகுந்த கவனம் எடுத்து வளர்க்கிறார்கள். இவர்கள் எந்த வகை சாயம ோ, இரசாயன சவர்க்கார வகை கள் தமது தலை யில் ப ோட விரும்புவதில்லை . அவர்கள் தலை முடி எந்த இரசாயனமும் பாவிக்காது வளர்ந்தது. சிட்னியில் ஐம்பது முதல் அறுபது செ ன்டிமீட்டர் நீளமான இந்திய தலை முடியின் விலை ஆயிரம் முதல் ஆயிரத்து நானூறு ட ொலர் வரை விலை ப ோகிறது. இந்திய கிராம பெ ண்களின் நீண்ட கூந்தலுக்கு உலக சந்தை யில் மாசுபடாத, தூய்மை யான virgin hair என பெ யரிட்டுள்ளனர். இந்திய பெ ரும் கண்டத்தில் எண்பத்தை ந்து வதீமான ோர் வாழ்நாளிலே ஒரு தரமாவது தனது தலை முடியை மழிக்கிறார்கள். திருப்பதியில் மட்டும்மல்லாது வே று பல க ோயில்களில் இத்தகை ய முடியை இறக்கும் சம்பிரதாயம் உண்டு. ஆனால் இந்தியாவில் கூந்தலுக்கு குறை வே கிடை யாது. 2005ம் ஆண்டில் இந்திய கூந்தலை மே ற்கு நாடுகளுக்கு விற்பனை செ ய்ததால் பெ ற்ற பணம் 300 மில்லியன் டாலர். அறுபதுகளில் இந்திய கூந்தல் வியாபாரம் சர்வதே ச அரங்கில் பிரபலமாக இருந்தது. ஆனால் செ யற்கை முடி தயாரிப்புடன் அவை சரிவடை ந்து விட்டது. ஆனால் திரும்பவும் இயற்கை கூந்தலை யே ஐர ோப்பியர் விரும்புகிறார்கள். இயற்கை அழகுக்கு செ யற்கை ஈடாகுமா?. இந்தியாவில் பலதரப்பட்ட தலை முடி சே கரிக்கப்பட்டு சர்வதே ச அரங்கில் விலை ப ோகிறது. தலை யில் இருந்து உதிர்ந்து சீப்புடன் வரும் முடிwig.தயாரிக்கவும் ,ப ொம்மை களின் தலை முடியாகவும் பயன் பெ றுகிறது. தெ ன்க ொரிய நாடு ஆண்களின் வெ ட்டப்பட்ட சிறு தலை முடியை க ோட் தயாரிக்கும் ப ோது அதன் உள்ளே lining ஆக பயன்படுத்துகின்றனர். சிகை அலங்காரம் பின்பு பெ ருக்கி குப்பை கூடை யில் இருந்து பெ றப்படும் தலை முடியில் இருந்து மருந்து தயாரிக்கும் ஸ்தாபனங்கள் Amino Acid பெ ற்று , மருந்து தயாரிக்கிறார்கள். க ோவில்களிலும் சிகை அலங்கார நிலை யங்களில் இருந்தும் கழித்த தலை முடியிலிருந்து L.Eysteine எனப்படும் புரதம் பெ றப்படுகிறது. இந்த உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. எம் பெ ரியவர்கள் உண்ணும் உணவில் தலை முடியை கண்டால் மே லும் அதை உண்ணாது எழுந்து கை அலம்பி விடுவார்கள். இன்றை ய விஞ்ஞான யுகத்தில் தலை முடியே உணவாகிறதா?.

படித்ததில் நெஞ்சைத் தொட்டது.

.

சிங்கப்பூரில்,… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்,...


எங்களுக்கு சப்ளை செய்யும் பன்னாட்டு நிறுவனம் ஒன்று, பார்வையற்றவர்களுக்கு தொண்டு செய்யும் ஒரு நிறுவனத்துக்கு நிதி திரட்ட, ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஒரு வெள்ளிக்கிழமை நடக்க இருந்த அந்நிகழ்ச்சிக்கு, எனக்கும் அழைப்பு வந்திருந்தது.

அது ஒரு வாரக் கடைசி என்பதால், போகாமல் தட்டிக் கழிக்கவே முதலில் தோன்றியது! காரணம், நிச்சயம் அது உப்புச்சப்பில்லாமல், போர் அடிக்கும் என்ற எண்ணம் தான்.! அந்த வாரக் கடைசியை வேறு மாதிரி, ரிலாக்ஸ் செய்யலாமே, என்று தோன்றியது.

ஆனால், சிங்கப்பூரில் தனியாக வாழ்வதில், சிக்கலும் உண்டு.! நேரத்தை செலவு செய்ய என்ன செய்வது, என்று புரியாமல் போகும்! அந்தக் காரணத்தாலும், எல்லாவற்றுக்கும் செலவாகும் ஊரில்,.. அந்த நிகழ்ச்சிக்கு கட்டணம் எதுவும் இல்லை என்பதாலும், அழைப்பை ஏற்று, ஆன்லைனில் என் வருகையை உறுதி செய்தேன். கொஞ்சம் பொழுது போகும். கொஞ்சம் புது மனிதர்களையும் பார்க்கலாம்.! 

பல்வேறு துறைகளிலிருந்து, சுமார் 40 பேர் வந்திருந்தார்கள். சில இந்தியர்களும் கூட! தன்னிச்சையான ஒட்டுதலுடன், சிங்கப்பூரில் வாழ்க்கை பற்றி, அவர்களுடன் பேச்சுக் கொடுத்தேன்!

நிகழ்ச்சியில்,... முதலில், சிங்கப்பூரில், பார்வையற்றவர்களின் வாழ்க்கை பற்றிய ஒரு வீடியோ காண்பித்தார்கள். ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு எப்படி உதவி, அவர்கள் வாழ்க்கையை நிறைவானதாக ஆக்க முயல்கிறார்கள் என்பது பற்றி! அது ஒரு ஊக்கமும், எழுச்சியும் ஊட்டும்15 நிமிட, கண்திறப்புக் குறும்படம். அதில், பார்வை சரியாக உள்ள சாதாரணமானவர்களும், இந்தப் பார்வை அற்றவர்களுக்கு, எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல், எப்படியெல்லாம் தங்களால் ஆனதை செய்து, அவர்கள் வாழ்க்கையை இயல்பானதாக ஆக்க உதவுகிறார்கள் என்று, அழகாய் விவரித்திருந்தார்கள். பார்வையற்றவருக்கு உதவுவதில் கிடைக்கும் நிறைவையும்,  திருப்தியையும், வெளிச்சமிட்டுக் காட்டினார்கள்!

அஞ்சலிக்குறிப்பு எங்கள் குடும்ப உறுப்பினர் “ பிறாண்டி “ விடைபெற்றார் ! முருகபூபதி



கடந்த 2020 ஆம் ஆண்டுமுதல் தொடர்ந்து அஞ்சலிக்குறிப்புகள் எழுதிவிட்டேன். தொடர்ந்தும் எழுத நேர்ந்துள்ளது. அதனால்,                  “ கல்வெட்டு எழுத்தாளன்  “ என்ற பெயரையும் சிலர் எனக்குச் சூட்டியிருக்கிறார்கள்.

இந்தியா - இலங்கை சுதந்திரம்பெறுவதற்கு முற்பட்ட காலத்தைச்சேர்ந்தவர்கள்,  சுதந்திரத்திற்குப்பிற்பட்ட காலத்தைச்சேர்ந்தவர்கள், ஈழப்போருக்கு முற்பட்ட – பிற்பட்ட காலத்தைச்சேர்ந்தவர்கள் – இடம்பெயர்ந்த -  புலம்பெயர்ந்த காலத்தைச்சேர்ந்தவர்கள்பற்றியெல்லாம்  எழுதிவிட்டு, இந்த கொரோனோ காலத்தில் விடைபெற்றவர்கள் பற்றியும் அஞ்சலிக்குறிப்பு பதிவுகள் எழுதிவிட்டேன்.

இத்தகைய பதிவுகள்  இக்காலத்திலும் ஓயாது போலிருக்கிறது.

எப்படியோ மேலே குறிப்பிட்ட காலங்களும், அக்காலங்களில்   விடைபெறுவதற்கு முன்னர் அவர்களுடன் உறவாடிய கணங்களும்  நினைவில் தங்கியிருப்பதனால், அவர்கள் குறித்த இழப்பின் துயரத்தை கடந்து செல்வதற்கும் இந்த அஞ்சலிக்குறிப்பு எழுத்து வகை எனக்கு பெரிதும் உதவியிருக்கிறது.

இந்த அஞ்சலிக்குறிப்பு சற்று வித்தியாசமானது.

இதற்கும் ஒரு அஞ்சலிக்குறிப்பு தேவைதானா..? என்று எவரும் கேட்கலாம்.  ஆனால், இதுவும் தேவைதான் என்று உணரவைத்தது,  எங்கள் குடும்பத்தின் அந்த உறவு.

ஆஸ்திரேலியா ஹெலன்ஸ்பர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலய வருடாந்த திருஞானசம்பந்தர் குருபூசை விழா 30/05/2021 சிறப்புற நடைபெற்றது

 சிவயநம

ஆஸ்திரேலியா ஹெலன்ஸ்பர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலய வருடாந்த திருஞானசம்பந்தர் குருபூசை விழா 30/05/2021 சிறப்புற நடைபெற்றது.

காலை 8:30 மணி முதல் மதியம் 12:30 வரை சம்பந்தப்பெருமான் அருளிச்செய்த 40 பதிகங்கள்பன்னிரு திருமுறை பாடல்கள் பாராயணம்சிவாச்சாரியார்களால் சம்பந்தப்பெருமான் அஷ்டோத்திர சதநாமாவளி  தொடர்ந்து சம்பந்தர் உள்வீதி வலத்துடன் 1:30 மணிக்கு நிறைவுற்றது.

 


பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - நூற்றுக்கு நூறு - ச. சுந்தரதாஸ் - பகுதி 1

.

கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் திரையுலகில் அறிமுகமாகி பின்னர் இயக்குனர் ஆகி அத்துறையில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கியவர் கே பாலச்சந்தர். அவர் 1971ம் ஆண்டு இயக்கிய படம்தான் நூற்றுக்கு நூறு. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் ஜெய்சங்கர். வழக்கமான தனது ஆக்ஷன் படங்களில் இருந்து விலகி மாறுபட்ட பாத்திரத்தில் கல்லூரி பேராசிரியராக ஜெய்சங்கர் நடித்தார்.தன் படங்களில் வழமையாக கதாநாயகனாக நடிக்கும் ஜெமினி, முத்துராமன் இருவரையும் தவிர்த்து ஜெய்சங்கருக்கு இந்த வேடத்தை வழங்கியிருந்தார் பாலசந்தர். ஜெய்சங்கர் குறை வைக்காமல் தன் பாத்திரத்தை திறமையாக செய்திருந்தார்.

அண்மைகாலமாக கல்லூரி ஆசிரியர்கள், பிரபலமானவர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்திலும் கல்லூரிப் பேராசிரியரான பிரகாசுக்கு எதிராக இரண்டு மாணவிகளும் மற்றும் ஒரு பெண்ணும் பாலியல் ரீதியான புகார்களை சுமத்துகிறார்கள். கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி அடைகிறது. மாணவ மாணவிகள் பேராசிரியருக்கு ஆதரவாக அணிதிரள்கிறார்கள். இப்படி அமைந்த கதையில் புகார் சுமத்தும் பெண்களாக ஸ்ரீவித்தியா , ஜெயக்குமாரி, விஜயலலிதா ஆகியோர் நடித்தார்கள். ஸ்ரீவித்தியாவின் ஆரம்பகால படமான இதில் அவர் அழகாகவும் இளமையாகவும் காட்சி அளித்தார். கவர்ச்சி நடிகைகளான ஜெயக்குமாரி, விஜயலலிதா இருவருக்கும் மாறுபட்ட வேடம் . எப்போதாவது இப்படி கிடைக்கும் வாய்ப்பை விஜயலலிதா தவற விடவில்லை. தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருந்தார். அத்துடன் புத்தாண்டு பாடலாக இன்றும் ஒலிக்கும் நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் பாடலிலும் ஆடியிருந்தார். உங்களில் ஒருவன் நான் பாடல் மாணவர்களுக்கு உரம் ஊட்டும் பாடலாக அமைந்தது. வாலியின் பாடல்களுக்கு பாலச்சந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளர் டி குமார் இசையமைத்தார்.


இலங்கைச் செய்திகள்

 பலாலி சர்வதேச விமான நிலையம் விரைவில் அபிவிருத்தி

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்; குற்றவாளிகளுக்கு எதிராக விரைவில் வழக்குத் தாக்கல்

புதிய சட்டமா அதிபரின் அதிரடி நடவடிக்கை

சீரற்ற வானிலை; இதுவரை 14 பேர் மரணம்; 2 பேரை காணவில்லை

சஜித் தம்பதியினர் அடுத்த வாரம் வீடு திரும்புவர்


 பலாலி சர்வதேச விமான நிலையம் விரைவில் அபிவிருத்தி

இந்தியாவிடமிருந்து 300 மில். ரூபா பெற தீர்மானம்

யாழ். பலாலி சர்வதே விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபா நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உலகச் செய்திகள்

 மனிதனுக்கு முதல்முறையாக ‘எச்10என்3’ வைரஸ் தொற்று

பிரிட்டனில் அதிக வீரியமிக்க கொரோனா வேகமாக பரவல்

உலக நாடுகளுக்கு 80 மில். தடுப்பூசிகள் வழங்கும் USA

மெக்சிகோ விளைநிலத்தில் திடீரென்று உருவான பள்ளம்

கொரோனா ஆய்வுகூட கசிவு: பிரிட்டன் பேராசிரியர் கூற்று


மனிதனுக்கு முதல்முறையாக ‘எச்10என்3’ வைரஸ் தொற்று

‘எச்10என்3’ எனப்படும் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று சீனாவில் ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் தொற்றுனால் மனிதர் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

எனினும், இதனால் கொரோனா போன்ற பெருந்தொற்று பரவுவதற்கான அபாயம் மிகவும் குறைவு என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமுறைப் பாராயணம் - ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் - 13/06/2021