பத்தாம் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடர்



இறுதிப் போட்டி உலகக் கிண்ணத் துடுப்பாட்டம் இந்தியா வெற்றி!


1ம் அரையிறுதிப் போட்டி இலங்கை - நியூசிலாந்து -
இலங்கை இறுதிப் போட்டிக்கு தகுதி

2ம் அரையிறுதிப் போட்டி இந்தியா –  பாகிஸ்தான்
                                                  இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

                                                இறுதிப் போட்டி  இந்தியா வெற்றி!



இந்தியாவின் மும்பை நகரில் உள்ள வன்கடே மைதானத்தில் சனிக்கிழமை, 02 ஏப்ரல் 2011  ம் திகதி  இடம்பெற்ற உலக்கிண்ண துடுப்பாட்டப் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா தங்கக் கிண்ணத்தை வெற்றி பெற்றது. உலகக் கிண்ணத்தை இந்தியா வெல்வது இது இரண்டாவது முறையாகும்.நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிறீலங்கா முதலில் துடுப்பாட சம்மதித்தது. முதலில் துடுப்பாட ஆரம்பித்த சிறீலங்கா அணி 50 ஓவர்களின் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 274 ஓட்டங்களை எடுத்துள்ளது. இவற்றில் 12 ஓட்டங்கள் உதிரி ஓட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி 10 ஓவர்களிலும் சராசரியாக அதிக ஓட்டங்கள் பெறப்பட்டன.

மெல்பேர்ணில் சிலப்பதிகாரம் - சந்திரன்


மெல்பேர்ணில் புகழ் பூத்த நடனாலயா மாணவர்களின் வருடாந்த நடன நிகழ்வு கடந்த 26.02.11  ம்  திகதி  சனிக்கிழமை பேசன் (besan) மண்டபத்தில் நடைபெற்றது.

சரியாக 6.30 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் புஸ்பாங்சலியுடன் சிறுவர்களின் நடனம் ஆரம்பிக்கப்பட்டதும் என் போன்ற பெற்றோரின் மனம் படபடக்கத் தொடங்கியது

இலையுலர்ந்த காலத்தின் சலனம் - கவிதை -சித்தாந்தன்


.




நீங்கள் பேசத்துணியாத ஒரு சொல்லைக்
கண்டெடுத்திருக்கின்றேன்

பளிங்காய் ஒளிரும் காலத்தை
பிசைந்தாக்கிய இச்சொல்
உடைந்த வீடொன்றின்கூரைக்குள்
பறவைக் கூடாய் சிதைந்துகிடந்தது

சிட்னி முருகன் கோவிலில் நாதஸ்வர இசைக் கச்சேரி




.
.
சிட்னி முருகன்  கோவிலில் கல்வி கலாச்சார மண்டபத்தில் மார்ச் மாதம் 26 ம் திகதி சனிக்கிழமை நாதஸ்வர இசைக் கச்சேரி நடைபெற்றது. முருகன் கோவில் திருவிழாவிற்கு ஈழத்தில் இருந்து வருகை தந்திருந்த வாத்திய இசைக் கலைஞர்களின் பிரத்தியேக கச்சேரியாக இது அமைந்திருந்தது.

படப்பிடிப்பு : ஞானி


இசைக்கலைஞர் மிருதங்க வித்துவான் சந்தானகிருஸ்ணன் கெளரவிக்கப்பட்டார்.


.

அண்மையில் நடைபெற்ற சிட்னி கலாபவனத்தின் பத்தாவது ஆண்டு விழாவில் மிருதங்கக் கலைஞர் கலாபூசணம் ஆறுமுகம்பிள்ளை சந்தானகிருஸ்ணன் கலாதிலகம் எனும் பட்டம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

திருமதி சுகந்தி தயாசீலனின் சிட்னி கலாபவனம் கடந்த பத்துவருடங்களாக சிட்னி நகரில் நடன வகுப்புகளை நடாத்தி வருவதுடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அரங்க நிகழ்வுகளையும் நடாத்தி வருகிறது.

பவளவிழாக் காணும் பேராசிரியர் கலாநிதி பொ. பூலோகசிங்கம்

.
.
பவளவிழாக் காணும் பேராசிரியர் கலாநிதி பொ. பூலோகசிங்கம் அவர்கள் பல்லாண்டு வாழ தமிழ்முரசுஅவுஸ்ரேலியா வாழ்த்துகிறது .
ஆசிரியர்குழு 
  
கொழும்புகளனிபேராதனை ஆகிய பல்கலைக்கழகங்களிலே விரிவுரையாளராகப் பணியாற்றி தமிழ்த் துறைக்கு அரிய பல பங்களிப்பினைவழங்கித் தற்போது அவுஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரில் வாழும்பேராசிரியர் கலாநிதி பொபூலோகசிங்கம்அவரால் உருவாக்கப்பட்டமாணவர்களாலும் தமிழ்க்கல்விமான்கள் முதலானோராலும் இலகுவில்மறக்கப்பட முடியாத பெருமைக்குயவராகக் காணப்படுகின்றார்.பவளவிழாக்காலத்தின் போதான இந்நன்னாளில் அவர் குடும்ப சேமத்துடன்பல்லாண்டு வாழ வாழ்த்தும் பேற்றைப் பெற்றுள்ளோம்.

தண்ணீர்த் தாகம் - சிறுகதை

.
                                        ஆனந்தன்
பங்குனி மாதம் வெயில் மிகவும் காய்தலாக அடித்துக்கொண்டிருந்ததுறோட்டில்அவ்வளவு நடமாட்டமில்லைதூரத்தில் மாத்திரம் ஒருவன் குடை பிடித்துக் கொண்டுவியர்க்க விறுவிறுக்கத் தார் றோட்டில் அவசரமாய்ப் போய்க்கொண்டிருந்தான்.அதற்கப்பால் ஒரு கட்டைவண்டி 'கடா கடாஎன்று ஆடி ஆடி வந்து கொண்டிருந்தது.பன்னிரண்டு மணி வெளியே யாரும் தலை காட்டவில்லைபகல் முழுவதும்வெயிலிலே திரியும்நாய்கூட சுவரோத்தில் கிடந்த சிறு நிழலில் இளைத்துக்கொண்டிருந்ததுஅவ்வளவு உக்கிரமான வெயில்பலர் பகலுறக்கம் போட்டார்கள்.சிலர் புழுக்கம் தாளாமல் தவித்தார்கள்செட்டியார் புதினப் பத்திரிகையோடு தூங்கிவழிந்துகொண்டிருந்தார்.

துஷாரா கண்விழிப்பு : சந்தேக நபரை கண்டுபிடிக்க 50,000 யூரோ


.
துஷாரா கண்விழிப்பு : சந்தேக நபரை கண்டுபிடிக்க 50,000 யூரோ: லண்டன் காவற்துறை அறிவிப்பு
thuvarkaலண்டனில், நேற்று இடம்பெற்ற இரு  வன்முறைக்குழுக்களின் துப்பாக்கிச்சூடு தாக்குதலில், அகப்பட்டுக்கொண்ட ஐந்து வயது இலங்கை  தமிழ் சிறுமியான துஷாரா, ஆபத்தான  ஆபத்தான நிலையை தாண்டி, கண் விழித்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு இலண்டணின் Ilford நகரில் வசிக்கும் துஷாரா, தனது மாமாவை சந்தித்து பிறந்த நாள் பரிசு கொடுக்க சென்ற தனது உறவினரொருவருடன் சென்ற போது Stockwell நகரில் வைத்து, இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு இலக்கானார். அவருடைய மார்பு பகுதியில் குண்டு பாய்ந்துள்ளது. அழைத்துச்சென்ற 35 வயதான தமிழரான சீலன் என்பவரும் இதில் படுகாயமடைந்திருந்தார்.


இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துஷாரா ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டதாகவும், Chemically Induced Coma நிலையில் இருப்பதாகவும், தற்போது அவர் கண் விழித்துவிட்டதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.

தமிழின் முதல் பின்னணிப்பாட்டு -- அநாமிகன்





.
முதல் இரவல் குரல் என்று சொல்வது இன்னும் கூடுதல் பொருத்தமாயிருக்கும். இந்த ”இரவல் குரல்” என்னும் ட்ப்பிங் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால்,இன்றைய மும்பைக் கேரள அழகிகளின் முகவழகையும், ’அன்னமெனும்படி’ நடையழகையும், இடையழகையும் கலாரசிகர்கள் இழந்திருப்பார்கள். அந்தளவிற்கு இன்றைய தமிழ்த் திரையுலகம் ”இரவல் குரல்”களிலேயே ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்த ”இரவல் குரல்” என்னும் ட்ப்பிங் முறை தமிழுக்கு வந்ததை ஒரு ‘விபத்து’ என்றே சொல்ல வேண்டும்.

அவுஸ்திரேலியாச் செய்திகள்

.                                                                             
                                                                                                  செய்தித் தொகுப்பு : கரு 

1. மெல்பர்ன் நகரில் கடனட்டை மோசடிக்கும்பல் கைது! இலங்கையரும் உள்ளடக்கம்

2. சிட்னி ஒபனில் இந்து ஆலயத்தின் மீது தாக்குதல்

3. அவுஸ்திரேலிய புதிய கப்டன் கிளார்க்

1. மெல்பர்ன் நகரில் கடனட்டை மோசடிக்கும்பல் கைது! இலங்கையரும் உள்ளடக்கம்

இலங்கையர்களும் அங்கம் வகிக்கும் கடனட்டை மோசடிக் கும்பல் ஒன்று அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 56 பேரைக் கொண்ட பிரஸ்தாப பாரிய மோசடிக்கும்பலில் பிரித்தானியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் இருந்து சென்றிருப்பவர்களும் உள்ளடங்குவதாக அவுஸ்திரேலியப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்ச்சுடர் விபுலானந்தன் - கவிஞர் க. கணேசலிங்கம்

.

அருந்தமிழ்ப்பண் ணிசைமரபை ஆய்ந்தறிந்து
அரியபெரு யாழ்நூலைச் அளித்தசெம்மல்
பொருந்துகலை விஞ்ஞானம் தெரிந்தமேதை
பொதுநலனில் மனம்மகிழ்ந்த கர்மயோகி
திருந்துதமிழ் வளர்ஈழம் மீன்கள்பாடும்
தேனாடு மட்டுநகர் தந்தமைந்தன்
பெருந்துறவி யாய்வாழ்ந்தும் தமிழணங்கின்
பேரழகில் தனையிழந்த விபுலானந்தன்!

தமிழ் சினிமா

.
1. முத்துக்கு முத்தாக

2. சிங்கையில் ஒரு குருஷேத்திரம்

3. குள்ளநரி கூட்டம்


1. முத்துக்கு முத்தாக


தார் சாலையே கொதிக்கிற வெயில் காலத்தில்தான் தர்பூசணிக்கு மரியாதை! குடும்ப உறவுகள் கேள்விக்குறியாகி வரும் இந்த காலத்தில்தான் இதுபோன்ற படங்களுக்கு வரவேற்பும், வணக்கமும் தேவை! இதையெல்லாம் சொந்த பணத்தில் சொல்ல வந்திருக்கிறார் ராசு.மதுரவன் என்கிறபோது அக்கறையோடு இப்படத்தை அரவணைக்க தோன்றுகிறது.


நாட்டுப்பற்றாளர் நினைவுநாள்

.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் நிகழ்வு மெல்பேர்ண், ஸ்கோஸ்பி சென் யுட்ஸ் தேவாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில் கடந்த ஆண்டைப்போன்று இந்த ஆண்டும் தமிழ்த்திறன் போட்டிகளும் நடைபெறவுள்ளன. தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்படவிருக்கும் இத்தமிழ் திறன் போட்டி பற்றிய முழுமையான விபரங்கள் கீழே  தரப்பட்டுள்ளது. உரிய முறையில் இதற்கு உங்களாலால் முடிந்த முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

போட்டியில் பங்குபற்றக்கூடிய இளையோருக்கும், தமிழ் பாடசாலை இணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் ஏனைய செயற்பாட்டாளர்களுக்கும் போட்டிகள் பற்றிய இவ்விபரங்களை கொடுத்துதவி, பங்குபற்ற ஊக்கப்படுத்துங்கள்.

மெல்பேண் நாட்டுப்பற்றாளர்கள் நினைவுதின தமிழ்த்திறன் போட்டிகள் பற்றிய அறிவித்தல்

நாட்டுப்பற்றாளர்கள் நினைவு நாளை முன்னிட்டு மெல்பேணிலும் கடந்த ஆண்டைப் போன்று தமிழ்த்திறன் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஈழத்துத் தமிழ் இலக்கியம்


.

இலங்கைத் தமிழ இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி என்பன பற்றிக் குறிப்பிடும் போது, இலங்கையில் வெளிவந்தஆரம்ப்பகால பத்திரிகைகளான ‘ஈழகேசரி’மறுமலர்ச்சி’ இதழ்கள் பற்றிக் குறிப்பிடாமல் யாரும் எழுதுவதோ பேசுவதோ கிடையாது. அந்த இதழ்களில் எழுத ஆரம்பித்தவர்கள் பற்றி குறிப்பிடத் தவறுவதும் இல்லை. அந்தப் பத்திரிகைகள் குறித்தும்  அதில் எழுதியவர்கள் குறித்தும், இலங்கைத் தமிழிலக்கியத்தின செல்நெறியை முற்போக்குத் தடத்தில் வழிநடக்க வைத்ததில் பெரும் பங்காற்றிய மறைந்த பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள், தமது இளமைக் காலத்திலேயே (56 வருடங்களுக்கு முன்பு) மிகத் தெளிவாக ஆய்வு செய்து எழுதிய கட்டுரையை, இன்றைய இலக்கிய ஆர்வலர்கள் தெரிந்து கொள்வதற்காகக் கீழே தருகின் றோம்..இந்தக்
க.கைலாசபதி

உலகச் செய்திகள்




.

1 .  ஜப்பானின் அணு உலைகளிலிருந்து ஆபத்துமிக்க புளுட்டோனியம்
    வெளியேற்றம்
2    ஜப்பானின் அணு உலைகளிலிருந்து உயர்மட்ட கதிரியக்க செறிவுடைய நீர்
    கசிவு
3   லிபியாவில் அமெரிக்காவின் தலையீடு வரையறுக்கப்பட்டதாக இருக்கும்
    ஒபாமா தெரிவிப்பு

4. ஜப்பானிய கதிர்வீச்சு காரணமாக அமெரிக்காவில் பெய்த கதிர்வீச்சு மழை

5. ஜப்பானிய கதிர்வீச்சு இங்கிலாந்துக்கு பரவல்

1 . ஜப்பானின் அணு உலைகளிலிருந்து ஆபத்துமிக்க புளுட்டோனியம் வெளியேற்றம்
டோக்கியோ: பியுகுஷிமா அணு உலைகளிலிருந்து வெளியேறும் கதிரியக்கத்தின் அளவு அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள மண்ணில் புளுட்டோனியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1986 இல் உக்ரைனின் செர்னோபைல் அணுஉலை வெடிப்பின் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான அனர்த்தமாக பியுகுஷிமா அணு உலை வெடிப்பு உள்ள நிலையில் அதிலிருந்து வெளியேறும் கதிரியக்கக் கசிவின் அளவு அதிகரித்துள்ளதுடன் அங்குள்ள மண்ணில் புளுட்டோனிய செறிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ தேசிய அட்டை வழங்கும் நிகழ்வு

.
ஒஸ்றேலியாவில் தமிழீழ தேசிய அட்டை வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது


தமிழீழ தேசிய அட்டை வழங்கும் நிகழ்வு ஒஸ்றேலியாவின் மெல்பேணில் சிறப்பாக 26 மார்ச் 2011 சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சிறப்பழைப்பாளர்களாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமாகிய பேராசிரியர் செல்வநாதன், நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் ஆலோசகருமான கலாநிதி சிவேன் சீவநாயகம் ஆகியோருடன் ஒஸ்றேலிய தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பேராளர்கள் என பலரும் பங்கெடுத்திருந்தனர்.

பிரம்மாண்டமான இலவசம் வருகிறது உஷார்!

.
                                       ஓ பக்கங்கள்       - ஞாநி

எந்தக் கட்சியும் எந்தத் தலைவரும் ஒருபோதும் அறிவிக்காத ஒரு பிரம்மாண்டமான இலவசம் வாக்காளர்களான நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் இலவசக் கதிர்வீச்சு. அதற்கு ஆணவம் மிகுந்த ஜெயலலிதாவா, தியாகதீபம் வைகோவா, சூழ்ச்சிக்கார கருணாநிதியா அப்பாவியான வாக்காளர்களா என்றெல்லாம் பாரபட்சமே கிடையாது. எல்லோரையும் அழித்து விடும்.

தமிழ்நாட்டை அழிக்க வடக்கே கல்பாக்கத்திலும் தெற்கே கூடன்குளத்திலும் அமைந்துள்ள அணு உலைகளே போதுமானவை.

பெரும் விபத்துக்குள்ளான அணு உலையிலிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டோக்கியோவில் கதிரியக்க அளவு 20 மடங்கு அதிகமாகிவிட்டது. சென்னைக்கும் கல்பாக்கத்துக்கும் இடையில் வெறும் 80 கிலோமீட்டர்தான். சென்னையில் சுனாமி வந்தபோது கல்பாக்கம் உலையும் பாதிக்கப் பட்டது. பெரிய பாதிப்பு இல்லாததால் தப்பித்துக் கொண்டோம். ஜப்பான் உலைக்கு நேர்ந்தது போல இங்கே நேர்ந்தால் இப்போது இதை எழுத நானும் படிக்க நீங்களும் இருக்க மாட்டோம்.

மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

.
36. விழிப்பாக இருக்க

குழந்தைகள் தன்னலமற்ற அன்பு கொண்டவர்கள்! அவர்கள் கள்ளங்கபட மற்ற பார்வையாளர்கள். தங்களைவிட வயதில் மூத்தவர்களின் செயல்களை உற்று நோக்குகின்றார்கள். மேலும் அவர்கள், பள்ளிக்குச் சென்று பாடம் கற்பதற்கு முன்னர் வீட்டிலிருந்துதான் பாடங்களைக் கற்றுக் கொள்கின்றனர். எனவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் தாங்கள் நடக்கின்ற நடத்தையில் மிகமிக விழிப்பாக இருக்க வேண்டும்.
37. கஞ்சப் பேர்வழியின் கதை
ஒரு காலத்தில் அங்கே ஒரு கஞ்சப் பேர்வழி இருந்தான்: அவன் மழைவந்தால் ஒழுகின்ற ஒரு கூரை வீட்டில் குடியிருந்தான். மழைக் காலத்தில் கூரை வழியாகத் தண்ணீர் அவன் வசிக்கும் வீட்டினுள் கொட்டியது:

ஆனந்தபுர விடிவெள்ளிகள் ஞாபகார்த்த விளையாட்டு விழா




.

ஆனந்தபுரச் சமரில் வீரகாவியமான போராளிகள் மற்றும் தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் விதுசா ஆகியோர் ஞாபகார்த்த விளையாட்டு விழா சிட்னியில் எதிர்வரும் 10.04.2011 அன்று நடைபெற இருக்கிறது.







இலங்கைச் செய்திகள்




.

1. யாழில் பெண்களிடம் சேஷ்டைகளில் ஈடுபட்ட கும்பல் இராணுவத்தினரிடம் அகப்பட்டது

2. இராணுவத்தினருடன் முரண்பட்ட ஆசிரியர் அடித்துக் கொலை! யாழில் சம்பவம்!

3. யாழ். யுவதியை வல்லுறவுக்குட்படுத்திக் கொலைசெய்த இராணுவத்தினருக்கு மரண தண்டனை

4. புதிய துணைவேந்தராக வசந்தி  நியமனம் இந்தப் பதவியை ஏற்கும் முதல் பெண்
1. யாழில் பெண்களிடம் சேஷ்டைகளில் ஈடுபட்ட கும்பல் இராணுவத்தினரிடம் அகப்பட்டது

யாழ். நகரை அண்டிய பகுதியில் நீண்ட காலமாகப் பெண்களுடன் அங்கச் சேட்டைகளில் ஈடுபட்டு வந்த கும்பலொன்று இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேற்படி கும்பலில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பில் முடிந்ததனாலேயே இராணுவத்தினர் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது.