இங்கிலாந்திலிருந்து எழுத்தாளர் முல்லைஅமுதன் நீண்டகாலமாக வெளியிட்டுவரும் காற்றுவெளி இம்மாதம் ( 2020 ஆவணி ) மொழிபெயர்ப்பு சிறப்பிதழாக வெளியாகியுள்ளது.
இவ்விதழில் ( அமரர்கள் ) பெரி.சண்முகநாதன், எம்.எச்.எம்.ஷம்ஸ் ஆகியோர் மொழி பெயர்த்த துருக்கிய கவிதை (நஸீம் ஹிக்மத்/துருக்கி), சிங்கள கவிதை (பராக்கிரம கொடிதுவக்கு ) என்பனவற்றுடன்,
அ.தமிழ்ச்செல்வன்(கடவுள் என்று..) முனைவர்.ர.ரமேஷ் (சந்திரா மனோகரன்), வ.ந.கிரிதரன் (பிஷ் ஷெல்லி, கவிஞர்.பைரன்), லதா ராமகிருஷ்ணன்(அன்னா அக்மதோவா), ராஜி வாஞ்சி(பிரான்ஸிஸ் எலன் வாட்கின்ஸ் ஹார்பர்), பேராசிரியர். மலர்விழி. கே (மூட்னகூடு.சின்னச்சாமி/பா.தென்றல்),தமிழ்க்கிழவி(அஜித்.சீ.ஹேரத்/டீ.பிரீத்தி,எம்.கல்பனா,கூம்பியா,பேராசிரியர்.கிளார்க்),கோகிலவாணி தேவராஜா (லாரா ஃபெர்ஹஸ்/ அனிருத்தன் வாசுதேவன்),சுகிர்தா சண்முகநாதன்(ரேசா சைய்ச்சி/பேர்சிஸ்), முருகபூபதி ஆகியோரும் எழுதியுள்ளனர்.
மு.தயாளன் ( மாக்சிம்.கார்க்கி), மதுரா (Nichanor parra/ Miller Williams ), சாந்தா தத் (எம்.எஸ்.சூர்யநாராயணா),க.நவம்(’Things you didn’t do!’), ஆகியோரின் படைப்புக்களும் வெளிவந்துள்ளன.
பிறமொழி கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளும் இடம்பெற்றிருப்பதனால், முடிந்தவரையில் இதனை முழுமையான சிறப்பிதழாக்க முயன்றிருக்கும் ஆசிரியர் கவிஞர் சோபா அவர்கள் பாராட்டுக்குரியவர்.