ரமழானை பயனுள்ளதாக்குவோம்!

 Thursday, March 23, 2023 - 5:54pm

நாம் செய்யும் அனைத்துச் செயல்களும் நமது எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. நமது செயல்கள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படுவதற்கும் அதற்கு நன்மை கொடுக்கப்படுவதற்கும் எண்ணம் (நிய்யத்) தான் அடிப்படை. அதன் அடிப்படையில் ரமழானை நாம் பயனுள்ளதாக கழிப்பதற்கு நமது எண்ணத்தை சீராக்கிக் கொள்ள வேண்டும். கடந்த கால ரமழானை நாம் சரியான முறையில் பயன்படுத்தினோமா? அப்படி பயன்படுத்த தவறியிருந்தால் அதற்குக் காரணம் நிய்யத்தை நாம் சரியான முறையில் அமைத்துக் கொள்ளவில்லையென்பதுதான்.

நார்மாலை நாராயணன் - மெல்போர்ன் அறவேந்தன்

நந்தபுரி நாராயணன் கோவிலில் பெரிய திருவிழா. ஊரெல்லாம்


கூடி ஆண்டுக்கொருமுறை கொண்டாடும் அந்த விழாவில் பக்கத்து ஊர் மக்களும் இங்கு வந்து கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டு இயற்கையின் சதியால் வானம் பொய்த்தது. மழையின்றி வறண்ட விளைநிலங்கள், பல இன்னல்களைத் தந்தாலும், பூசையைக் குறையின்றிச் செவ்வனே செய்ய ஊரார் முடிவு செய்தனர்.

பூசைக்கு பூமாலையைத் தவிர எல்லாம் தயார். வறட்சியால் பூக்கள் இல்லாத நிலையில் பூமாலை வேறோர் ஊரிலிருந்து தருவிக்கப்பட்டது. அதுவும் ஒரே ஒரு மாலை. ரோசாவும், சம்பங்கியும் நெருக்கமாய்க் கட்டப்பட்டு, ஆளுயர மாலை நாரயணனை வெகுவாய் அலங்கரித்தது.

அதிகாலையே கூடிவிட்ட பக்தர்களின் கூட்டம், “அடடா!, மாலை என்ன அழகு?” என வியந்து பேசினர்.

மாலையில் கட்டப்பட்ட ரோஜாப் பூக்களும், சம்பங்கிப் பூக்களும் மிகவும் பெருமைப்பட்டன. “நம்மைப் பார்த்து பாராட்டாதவர்களே இல்லை, நம் அழகுக்கு இணை ஏது?” என்று பெருமைப்பட்டுக்கொண்டன. அவை இரண்டும் மாலை தொடுக்கப்பட்ட நாரைப் பார்த்து, “நாரே எங்களைப் பிணைத்திருக்கும் நீ எங்களால் மறைக்கப்பட்டு உள்ளே இருக்கிறாயே, எங்கள் அழகு உனக்கு வருமா?” என்று கூறி கிண்டலாய்ச் சிரித்தன. நாரும் தன் பங்கிற்கு, “என்னால் தானே நீங்கள் இருவரும் பிணைக்கப்பட்டிருக்கிறீர்கள், அதனால் மாலையின் அழகிற்கு எனக்கும் பங்குண்டு”, என்றது.

ரோஜாவும், சம்பங்கியும், “நீ என்ன சொன்னாலும் மாலையின் அழகிற்கு நாங்கள் மட்டும்தான் காரணம், ‘ரோஜாமாலை’, ‘சம்பங்கிமாலை’ என்று சொல்கிறார்களே தவிர ‘நார்மாலை’ என்று யாராவது சொல்கிறார்களா?” என்று நாரைப் பார்த்து ஏளனமாகப் பேசின.

“கடவுளே! இவர்கள் இருவரும் கேலி செய்வது உன் காதில் விழவில்லையா?” என்று நார் கண்ணீருடன் முறையிட்டது. அதற்குக் கடவுள், “உன் கடமையைச் செய், பலன் தானாகக் கிடைக்கும்” என்றார்.

காலையில் பூசை ஆரம்பித்த பின்பு, வரிசையில் வரும் பக்தர்களுக்கு அர்ச்சகர், அர்ச்சனை முடிந்ததும் சிறிது ரோஜாவையும், சம்பங்கியையும் மாலையிலிருந்து எடுத்துக் கொடுத்தார். மீண்டும் ரோஜாவும், சம்பங்கியும் நாரைப் பார்த்து, “பார்த்தாயா? எங்களை எப்படி பக்தியோடு மக்கள் பெற்றுச் செல்கிறார்கள். உனக்கு என்ன மரியாதை கிடைக்கிறது?” என பரிகாசம் செய்தன.

நார் மீண்டும் கவலையோடு, “இறைவா! காலையிலேயே என்னை இவர்கள் இப்படிக் கேலி செய்கின்றனரே? உமக்குப் புரியவில்லையா? நாள் முழுதும் இவர்கள் கேலிப் பேச்சை நான் எப்படித் தாங்குவேன்?” என்றது. அதைக் கேட்ட இறைவன், “நாரே முன்பு சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். நீ உன் கடமையைச் செய், பலனை எதிர்ப்பார்க்காதே!” என்றார்.

நேரமாக ஆக உச்சி நேர பூசைக்குள் மாலையில் இருந்த மலர்கள் யாவும் பறிக்கப்பட்டு மாலை வெறும் நாராகத் தொங்கியது.

அர்ச்சகர், வெகுநேரம் தாமதமாய் வந்த புகைப்படக்காரரைப் பார்த்து, “ஏம்பா காலையிலேயே வரக் கூடாதா? மாலையிலிருந்த பூக்களெல்லாம் போன பிறகு வந்தாயே! இப்போது பார், இங்கே ‘நார்மாலை நாராயணன்’ தான் இருக்கிறார்,” என்றார்.

டொக்டர் எம்.கே.முருகானந்தன் அகவை 75 இல்

 


என் பள்ளிப் பருவத்தில் நாளேடுகளில் வரி விளம்பரங்களைக் கூட விட்டு வைக்காமல் மேய்வேன்அப்போது ஆதர்ச எழுத்தாளர் செங்கை ஆழியான் தாண்டிஈழத்து எழுத்தாளர்கள் பலரை ஈழநாடுஈழமுரசுபின்னாளில் உதயன் என்று உள்ளூர் நாளேடுகள் எனக்கு அறிமுகப்படுத்திய காலத்தில்பத்திரிகையில் இவர் பெயரைப் பார்த்தே அதிசயத்ததுண்டு.

டொக்டர்எம்.கே.முருகானந்தன் என்று ஈழத்துப் பேச்சு வழக்கிலேயே தன்னுடைய தொழிலை அடையாளப்படுத்தியவர்

தாயாகப் போகும் உங்களுக்கு” என்ற தொடர் அப்போது அவரை எனக்கு அடையாளப்படுத்தியது.

 

இவ்விதம் நான் ஈழத்தில் இருந்த காலத்திலேயே அந்தச் சமூகத்தில் வைத்தியம் சார்ந்த விழிப்புணர்வுக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதியவர் என்ற அறிமுகம் கிட்டியதுஆனால் பல்லாண்டுகளுக்குப் பின்னர் டொக்டரை ஒரு சக வலைப்பதிவராகஅவரோடு எழுத்து வழியாகப் பழகும் வாய்ப்புக் கிடைக்கும் என்று எண்ணியிருக்கவில்லை.

தொழில் நுட்பத்தின் அடுத்த பரிமாணமாக வலைப்பதிவு உலகம் எழுந்த போது ஈழத்தில் இருந்து தீவிர வலைப்பதிவர்களாக இயங்கியவர்களில் டொக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களும் ஒருவர்வீரகேசரியில் இந்த வலைப்பதிவு உலகத்தில் ஈழத்துப் பதிவர்கள் என்று தனிப் பகிர்வையே எழுதிப் பகிர்ந்தும் இருக்கிறார்.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 58 எழுத்தாளர் – ஊடகம் – பதிப்பகம் - உறவும் ஊடலும் ! புத்திக்கொள்முதலைப் பெறும் படைப்பாளிகள் ! முருகபூபதி

 

எழுத்தாளர்களுக்கும்  ஊடகங்களுக்கும் பதிப்பகங்களுக்கும்


மத்தியில் ஊடலும் கூடலும் சர்வசாதாரணமாக நடக்கும்.

ஒரு எழுத்தாளர் எழுதி அனுப்புவதையெல்லாம் ஊடகங்கள்              ( பத்திரிகைகள் – இதழ்கள் ) வெளியிடவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதே அவற்றின் ஆசிரியர்களின் நிலைப்பாடு.

நான் இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கிய காலத்தில் ( 1970 களில் ) எழுதிய எத்தனையோ சிறுகதைகள், கட்டுரைகள் வீரகேசரியிலோ, தினகரனிலோ, சிந்தாமணியிலோ வெளியாகவில்லை. அதற்காக அந்த ஆசிரியர்களுடன் நான் கோபிக்கவும் இல்லை. முரண்படவும் இல்லை.

வீரகேசரி வாரவெளியீட்டுக்கு நான் அனுப்பிய நம்பிக்கைகள் நம்பிக்கையற்றன என்ற எனது  ஐந்தாவது சிறுகதையை வீரகேசரி வாரவெளியீட்டு ஆசிரியர் பொன். ராஜகோபால் பிரசுரிக்கவில்லை.

அதே சிறுகதையை மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா மல்லிகையில் பிரசுரித்தார். அச்சிறுகதையை வானொலி நாடகமாக நான் எழுதியபோது,  அதனை தனது சங்கநாதம் வானொலி நிகழ்ச்சியில் வி. என். மதியழகன் ஒலிபரப்பினார்.

இச்சிறுகதையும் இடம்பெற்ற எனது சுமையின் பங்காளிகள் கதைத் தொகுதிக்கு தேசிய சாகித்திய விருது கிடைத்தபோது எனது படத்துடன் வீரகேசரியில் முகப்பில் செய்தி வந்தது.

ஆசிரியர் பொன். ராஜகோபால் எனது கைபற்றிக்குலுக்கி வாழ்த்தும் தெரிவித்தார்.  எனது சிறுகதையை பிரசுரிக்காத தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன்,  விருது கிடைத்ததையறிந்து செய்தி வெளியிட்டதுடன், பிறிதொரு சந்தர்ப்பத்தில் தோளைத்தட்டி வாழ்த்துக்கூறினார்.

வீரகேசரியுடன் எனக்கு நெருக்கமான உறவு 1972 இல் ஏற்பட்டபின்னரும் எனது சிறுகதைகள் அதில் வெளியாகவில்லை. எனினும்,  1985 ஆம் ஆண்டு நான் அங்கே ஆசிரிய பீடத்தில் பணியாற்றியபோது சோவியத் நாட்டுக்கு சென்றிருந்தவேளையில்தான் எனது தேர்முட்டி என்ற சிறுகதை வாரவெளியீட்டில் பிரசுரமானது.

அச்சிறுகதை வெளியான  வீரகேசரி வாரவெளியீட்டின் பிரதியை மாஸ்கோவிலிருக்கும் இலங்கை தூதரகத்தின் நூலகத்தில்தான் காணநேர்ந்தது.

நூற்றாண்டுக்கு அப்பால் டி எம் எஸ் ! March 24 1923 - ச. சுந்தரதாஸ்

 .

படத்தில் நடிகர்களே தங்கள் சொந்தக் குரலில் பாடி, நடித்துக் கொண்டிருந்த காலத்தில் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் டீ எம் சௌந்தரராஜன். 1946ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண விஜயம் படம் மூலம் திரையுலக விஜயத்தை   ஆரம்பித்தவருக்கு திருப்பு முனையாக அமைந்த படம் 1954ல் வெளியான தூக்கு தூக்கி . இதில் சிவாஜிக்கு அவர் பாடிய பாடல்கள் அனைத்துமே அவரை புகழின் உச்சிக்கே தூக்கி விட்டன. தொடர்ந்து எம் ஜி ஆருக்கு அவர் மலைக்கள்ளன் படத்தில் பாடிய எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாடல் அவரின் இருப்பிடத்தை திரையுலகில் உறுதி செய்தது. அன்று புகழ் பெற்ற பின்னணிப் பாடகர்களா திகழ்ந்த சிதம்பரம் ஜெயராமன், திருச்சி லோகநாதன் இருவரையுமே இந்த மதுரைக்காரர் ஓரம் கட்டி விட்டார் என்று பலரும் வியந்தார்கள்.


டி எம் எஸ்ஸுக்கு முதலில் வாய்ப்பு கொடுத்து அறிமுகப்படுத்தியவர் இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடு. மலைக்கள்ளனில் எம் ஜி ஆருக்கு பாடும் முதல் வாய்ப்பையும் அவரே வழங்கினார். இசைமேதை ஜி ராமநாதன் தனக்கு தேவையான போது மட்டும் சௌந்தர்ராஜனை பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அவர் வசம் இருந்த  இசை சாம்ராஜ்யம் மெல்ல அவரை விட்டு நழுவி கே வி மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்றோரிடம் வந்த போது அவர்கள் டீ எம் எஸ்ஸை கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள் .


அதன் காரணமாக உச்சம் தொட்டார் டீ எம் எஸ் . வானத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும் சந்திரன் ஒருவனே என்பது போல் திரையில் எம் ஜி ஆர் , சிவாஜி, ஜெமினி, ன பல நட்சத்திரங்கள் இருந்த போதும் தனி நிலவாக பிரகாசித்தார் டி எம் எஸ்.

நெஞ்சின் ஆதங்கம் - பழனி குமார்

 .

ஆன்மீக உபதேசம் செய்தும்

ஆத்மாப் பற்றியும் பேசிவிட்டு
கற்பனை உலகிற்கு வழிகாட்டி
விற்பனை செய்ய வரவில்லை !

நம்பிக்கை உள்ளோர் நம்பிடுக
வாதிக்கும் மேடையில் கும்பிடுக!
போதிக்க வரவில்லை அடியேன்
நாத்திகன் என்றாலும் நான் !

பொய்யை மெய்யெனக் கூறாது
மெய்யை உலகறிய உரைப்பதே
கடமையெனக் கருதும் பலரில்
நானும் இருப்பேன் வரிசையில் !

மண்வெளியில் நடப்பவர் எல்லாம்
விண்வெளியில் கலப்பது இயற்கை !
சாதிப்பவரை தெரியாத இவ்வுலகம்
வேடமிடுபவர் வழியில் செல்கிறது !

வானவில்லில் நிறங்களின் வேறுபாடு
மனவெளியில் மனிதர்களில் மாறுபாடு !
வரலாற்றில் இல்லை சாதிப்பாகுபாடு
நெஞ்சில் மட்டுமேன் பாகுபாடு !

வசதி உள்ளவன் உயர்ந்தவன்
ஏழ்மையில் வாடுபவன் தாழ்ந்வன்
பிரித்தாளும் இதயம் உள்ளோர்
கரித்துக் கொட்டுவதும் ஏனோ !

குலமகள் ராதை - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 சென்ற நூற்றாண்டில் ஏராளமான நாவலாசிரியர்கள் பிரபலமாக


திகழ்ந்தார்கள்.அவர்கள் எழுதும் நாவல்கள் வாரா வாரம் சஞ்சிகைகளில் வெளியாகி பல்லாயிரக்கணக்கான வாசகர்களை கவர்ந்தன . அவ்வாறு வாசகர்களை கவர்ந்த எழுத்தாளர்களில் அகிலன் என்ற நாவலாசிரியரும் ஒருவர் .இவர் எழுதிய பல நாவல்களை வாசித்து மெய்மறந்த பலர் தங்கள் பிள்ளைகளுக்கு அகிலன் என்ற பெயரிட்டு மகிழ்ந்தார்கள் . இத்தனை ஆண்டுகள் கழித்தும் ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் என்ற பெயரில் ஒரு படம் வந்துள்ளது. இவ்வளவு கீர்த்திக்கு உள்ளான அகிலன் எழுதிய வாழ்வு எங்கே என்ற நாவலை ஸ்பைடர் பிலிம்ஸ் பட நிறுவனம் 1963ம் ஆண்டு படமாக தயாரித்தனர்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே அகிலனின் பாவை விளக்கு

நாவல் படமாகி வெற்றியை பெறாத போதும் அதே படத்துக்கு வசனம் எழுதிய ஏ பி நாகராஜன் அகிலனின் வாழ்வு எங்கே நாவலுக்கு திரை கதை வசனம் எழுதி டைரக்ட் செய்ய முன் வந்தார். படத்துக்கு குலமகள் ராதை என்ற பெயர் சூட்டப்பட்டது.

சந்திரன்,ராதை இருவரும் மனமொத்த காதலர்கள். ஆனால் ராதையின் அண்ணனும்,அண்ணியும் ஊர் பெரியவரான சம்பந்தமூர்த்தியுடன் சேர்ந்து அவர்களின் காதலை எதிர்க்கிறார்கள். சந்திரன் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவன் என்பது அவர்களின் வெறுப்புக்கு காரணம். இதனால் காதலர்கள் பழனிக்கு சென்று இரகசியமாக திருமணம் செய்து புது வாழ்வு தொடங்க தீர்மானிக்கிறார்கள். பயண ஏற்பாடுகளை செய்து விட்டு சந்திரன் காத்திருக்க வீட்டை விட்டு வெளியேற முடியாத வண்ணம் ராதை, அண்ணி அண்ணனால் தடுக்கப்படுகிறாள். இதனால் திருமண திட்டம் தடைப்படுகிறது.

ராதை வரவில்லை என்பதை அறிந்து சந்திரன் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைகிறான். அவளை அழைத்து வர அவள் வீட்டுக்கே செல்கிறான். ஆனால் ராதையோ சம்பந்தமூர்த்தியின் மிரட்டலுக்கு பயந்து அவனை அவமானப்படுத்தி விரட்டி விடுகிறாள். இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்படுகிறது. சந்திரன் ராதையை மறக்க எண்ணி சென்னைக்கு செல்கிறான். ராதையோ நிர்கதியாகி வாழ்வு எங்கே என்று ஏங்குகிறாள்!

படத்தில் சந்திரனாக சிவாஜியும், ராதையாக சரோஜாதேவியும் நடித்தார்கள். இவர்களுடன் தேவிகாவும் நடித்திருந்தார். இவர்கள் மூவரும் பெரும்பாலான காட்சிகளில் உணர்ச்சிகரமாகவே நடித்திருந்தார்கள். அதிலும் சரோஜாதேவி சோக ரசத்தை பிழிய சிவாஜி வெறுப்பை உமிழ்ப்பவராக நடித்திருந்தார். படத்தில் வில்லனாக வருபவர் பழம் பெரும் நடிகர் கே சாரங்கபாணி. நகைச்சுவை நடிகராக பார்த்து பழகிய அவரை வில்லனாக பார்ப்பது சங்கடமாக இருந்தது. மனைவிக்கு அடங்கிய கணவனாக டீ கே பகவதி நடிக்க, சோகமயமாக தாயாக கண்ணம்பா நடித்தார். சந்தியாவுக்கு வழக்கமான அடங்காபிடாரி வேடம். இவர்களுடன் ஏ பி நாகராஜன் குழாமை சேர்ந்த வி கே ராமசாமி, டீ என் சிவதாணு , பி டி சம்பந்தம்,மனோரமா,குண்டு கருப்பையா ஆகியோரும் நடித்திருந்தார்கள். நல்லவனாக நடிக்கும் வாய்ப்பு ஆர் எஸ் மனோகருக்கு கிட்டியது.

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்

அதிகாரம் 13 – பெண் சிலந்தி (peacock spider)

 அந்தச் சம்பவத்தை அறிந்த வான் மான் நூஜ்ஜின், ஒருநாள் நந்தனை


இரகசியமாக் கூப்பிட்டான். வான் மான் நூஜ்ஜின் இப்போது போனும் கையுமாகத் திரிகின்றான். வேலை செய்யும்போதும் ஒரு கையில் போன். சாப்பிடும்போதும் போன். சிறுநீர் கழிக்கும்போதும் ஒரு கையில் போன். அவனது போனில் ஆங்கில வார்த்தைகள் கிடையாது. தாய்மொழிக்கே முதலிடம். வியட்நாம் பாஷையில் ஃபேஸ்புக் துள்ளித் திரிந்தது. அவன் தனது போனைத் திறந்து ஒரு வீடியோக்கிளிப்பை நந்தனுக்குக் காண்பித்தான். அதில் புங் – நடப்பது, இருப்பது, ஓடுவது, சிரிப்பது போன்ற காட்சிகளைக் கொண்ட ஒரு கிளிப் ஆக இருந்தது. எப்பவோ களவாக அவளைப் பின் தொடர்ந்து எடுத்திருக்கின்றான் நூஜ்ஜின்.

 “ஐ லைக் புங்” என்றான் நூஜ்ஜின்.

 “ஏற்கனவே நீ இரண்டு பெண்டாட்டிக்காரன். மூண்டாவதும் கேட்குதோ? உதை மூடி வை. வீட்டை போகப் போறாய்” நந்தன் தனது மூக்கை சப்பையாக நசித்துக் காண்பித்தான்.

 ஓட்டமெடுத்தான் நூஜ்ஜின்.

 ஜோசுவாவின் மனைவி டிவோர்ஸ் கேட்டு நீதிமன்றத்திற்கு விண்ணப்பித்திருந்தாள். அவுஸ்திரேலியாவில் ஐம்பது வயதிற்கும் மேற்பட்டவர்கள் விவாகரத்து கேட்கும் விகிதம் அதிகரிக்க இந்தக் கூத்துகள் தான் காரணம்.

 ஜோசுவாவை வேலையைவிட்டு நீக்கியதற்காக புங் கவலை கொள்வது போல வெளியே காட்டிக் கொள்வதில்லை. உள் மனதில் இருக்கலாம். தன் மனதில் இப்படியான சலனத்தை விதைத்து, தன்னை இந்த ’மங்கி பிஸ்னஸ்’ இல் ஈடுபட வைத்தது ஆச்சிமாவின் லீலைகள் தான் என சொல்லித் திரிந்தாள் புங்.

 அதன்பின்னர் சில நாட்களுக்கு அவளின் மகிழ்ச்சி செயற்கைத் தனமானது போல தோன்றினாலும், போகப் போக அவள் பழைய நிலைக்கு மாறிவிட்டாள். துள்ளித் திரியத் தொடங்கிவிட்டாள்.

 “அவள் என்ன செய்தாலும், ஏது செய்தாலும் ஏன் அவளை எல்லோருக்கும் பிடிக்கின்றது?”

தமிழ் வளர்ச்சி மன்றம் முப்பெரும் விழா

 சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றம் ஆண்டு தோறும் நடத்தி வரும்


முப்பெரும் விழாவான ' தமிழ் மரபு தினம், தாய்மொழி தினம் மற்றும் திருவள்ளுவர் தினம் - இவற்றை இந்த ஆண்டு அனைத்துலக மகளிர் தினத்தோடு இணைத்து கொண்டாடியது.

இந்த விழாவில் அனைத்துலக மகளிர் தினத்தை ஒட்டி பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் சிங்கப்பூர் மலேசியா அமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து வந்த பல தமிழ் அறிஞர்கள் | வரதட்சணை ,துன்புறுத்தல், குடும்ப வன்முறை என்ற தலைப்பில் வட்டமேசை மாநாட்டையும், பின்னர் (திருக்குறளும் மகளிரும் ' என்ற தலைப்பிலும் நிகழ்வுகளை நடத்தினர்.

 தொடர்ந்து சங்க கால முதல் இந்த காலம் வரை தமிழ் பெண்கள் என்ற

தலைப்பில் இலக்கியங்கள் சார்ந்து ஒன்பது பேர் உரையாற்றினார்கள்

சிட்வெஸ்ட் பல் கலாச்சார அமைப்பு, வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகம் தவிர்த்து இவற்றோடு கொமன் வெல்த் வங்கி ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்கினார்கள்.

தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவு நாள் - 2023 – மெல்பேர்ண்


பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் மாமாங்-கேஸ்வரர் ஆலயமுன்றலில் 19-03-1988 முதல் 19-04-1988 வரையான முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 35-வதுஆண்டு நினைவுநாளும் தாயக விடுதலைப் போராட்டத்தில் பின்புலமாக உழைத்து சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்களையும் நினைவு கூருகின்ற நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் இவ்வாண்டும் விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ணில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

 

குடும்ப வாழ்வியலில் ஈடுபட்டிருந்தபோதும் இடர்மிகுந்த நெடிய தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் உறுதுணையாக உழைத்து உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர்களை நினைவு கூருவது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் தலையாய கடமையாகும்.

 

அவுஸ்திரேலியாவின் எம்மவருடன் கூடவே வாழ்ந்தவாறுதமிழ்த் தேசிய விடுதலைப் பயணத்தில் முன்னோடிகளாகத் திகழ்ந்துதமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் அதி உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்ட மாமனிதர் தில்லை ஜெயக்குமார்மாமனிதர் பேராசிரியர் எலியேசர் மற்றும் நாட்டுப்பற்றாளர் மகேஸ்வரன்மாமனிதர் பொன்.சத்தியநாதன்தமிழ்த்தேசியப்பற்றாளர் சண்முகம் சபேசன்தமிழ்த் தேசியப்பற்றாளர் சிங்கராசா ஆகியோர்களையும் இந்நாளில் நினைவுகூருவது இந் நிகழ்வின் சிறப்பான விடயமாகும்.

வாசிப்பு அனுபவம்: கவிஞர் அம்பியின் சொல்லாத கதைகள் சியாமளா யோகேஸ்வரன்


தான் மட்டுமே பொக்கிஷமாக வைத்து அவ்வப்போது திறந்து பார்த்த நினைவுப்
பெட்டகத்தை எமக்காகத் திறந்து விட்டிருக்கின்றார் கவிஞர் அம்பி அவர்கள். இந்நூலில் நான் ரசித்த பலவற்றில் இருந்து சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கின்றேன்.

அழகு நகராம் நாவற்குழி பற்றி, அன்புப் பெற்றோர் பற்றி, சிறு வயது அனுபவங்கள் பற்றி, தமிழும் சமயமும் அவரது உணர்விலும் உதிரத்திலும் இரண்டறக் கலக்க, அவர் வளர்ந்த சூழல் உதவிய விதம் பற்றியெல்லாம் அற்புதமான கவிதைகள் இழையோட கவிஞர் அம்பி அவர்கள் சொல்லாத கதைகளைச் சொல்லியிருக்கின்றார்.

நேர் வளர்ந்த கற்பகதருவும், தெங்குடன் வாழையும் கொண்ட


செழிப்பான ஊர் நாவற்குழி என்று வாசித்தபோது அங்கு நெடிதுயர்ந்து
நின்ற மரங்கள் மட்டும் என் மனக்கண்ணில் வந்து போகவில்லை. மாணாக்கர்களுக்கு நேர்ப்பாதையில் நடக்க வேண்டும் என்று ஒழுக்கத்தைப் போதித்த ஒரு நல்லாசிரியரும் தாமாகவே என் கண் முன் வந்து நின்றார்.

மண் வாசம் தூக்கலாக இருந்த அவரது ஊர் பற்றிய கவிதையில் எனைக் கவர்ந்தது  தேம்பாத தோட்டந்துரவும் சுவை தானிய வகையும்” என்ற வரிகள்.

இங்கு “தேம்பாத” என்ற ஒற்றை வரியில் எத்தனை பொருளை அடக்கியிருக்கின்றார்.  கவனிப்பாரின்றி, எந்தப் பயிரும் விளையாத மொட்டை நிலமாய், எந்த பலனையும் கொடுக்காத கட்டாந்தரையாய் இருக்கும் ஒரு தோட்டம்தான் தன்னிலை எண்ணித் தேம்பும். கவிஞர் அவர்களின் ஊரில் எந்தத் தோட்டமும் தேம்பவில்லை என்றால் என்ன பொருள்? எந்தத் தோட்டமுமே வெறுமையாக இல்லாமல் சுவையுள்ள தானியவகைகளால் நிறைந்திருக்கின்றன. வீட்டுத்தோட்டத்தில் தன்னிறைவு கண்ட ஒரு சமூகமொன்று அங்கு வாழ்ந்திருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிந்தது

தாளுண்ட நீரைத் தலையாலே தந்த தேங்காய், இளநீர், நுங்கு, புளி என்பவற்றால் அவரது வீட்டுத்தேவைகள் சுய நிறைவு கண்டன என்றால் அவரின் வீட்டு வளவு அத்தனை மரங்களாலும் எத்தகு சோலையாயும்  தோற்றம் பெற்றிருக்கும்?

கவிஞரின் படலையைத் திறந்தால் பருவகாலத்தை அப்படியே பிரதிபலிக்கும் வயல்வெளிகள் கண் முன்னே விரிகின்றன. கோடைகாலத்தில் காய்ந்து வறண்ட கோலம், மாரிகாலத்தில் வரப்புகளைத் தொட்டுத் ததும்பி நிற்கும் நீர், பருவகாலத்தில் கதிர் முற்றி நின்று அறுவடைக்காகக் காத்திருக்கும் நிறைமணிகள், பின்னர் குட்டிகளுடன் ஆடுகளும், கன்றுகளுடன் பசுக்களும், கடாக்களும், காளைகளுமாய் மேய்ந்து நிற்கும் காட்சி. “வரம்புகளை மேவிப் பாய்ந்து எல்லைகளை கடந்து எல்லோரின் வயல்களையும் இணைக்கும் வெள்ளம்” யாதும் ஊரே என்ற தமிழர் சால்பையும் தண்ணீரின் குற்றம் பார்க்காக் குணவியல்பையும் கூறி நின்றது.

அப்படியான வளம் நிறைந்த மண்ணில் பண்டிதரும் பாவலரும் ஏன் பாமரரும் கூட எந்தப் பிரிவினையும் இன்றி ஓரணியில் நின்று களனமைப்பார்கள் என்று தம் ஊரின் ஒற்றுமையையும் கோடிட்டுக் காட்ட அவர்  தவறவில்லை,

ஆடல் பயில் அலரிகள் அரும்பு நகையுடன் அதிகாலைக் கதிரவனை வரவேற்பார்களாம். காற்றுக்கு கனமில்லாத கிளையுடன் உள்ள அலரிகள் அசைந்த விதம் கவிஞருக்கு ஆடல் பயில்வது போன்று இருந்திருக்கின்றது

முதல் சந்திப்பு சகலகலா வித்தகர் கலாநிதி தம்பி ஐயா கலாமணி முருகபூபதி


நாடகம், கூத்து,   முதலானவற்றை ஏற்கனவே பார்த்திருந்தாலும்,  நான் பார்த்து ரசித்து வியந்த முதலாவது இசை நாடகம் கலாநிதி த. கலாமணியின் பூதத்தம்பிதான்.

வடமராட்சி பல கலை, இலக்கிய ஆளுமைகளை வரவாக்கிய பிரதேசம். அங்கே இசை நாடகக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவரான கலாமணியுடனான எனது நட்பு அவுஸ்திரேலியாவில்தான் நெருக்கமானது.   

மெல்பனில்  நாம் முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவை 2001 ஆம் ஆண்டு நடத்தியபோது  கலாமணியின் பூதத்தம்பி இசை நாடகமும் மேடையேறியது.  அந்த நாடகத்தின் இறுதிக்காட்சியைப் பார்த்த ரசிகர்கள் சிலர்  உணர்ச்சிவசப்பட்டதையும் கண்களை கசக்கிக்கொண்டதையும்   அருகிருந்து அவதானித்தேன்.  கலாமணிக்கு சிறந்த குரல் வளம்.


1999 களில் அவர் தனது பட்டமேற்படிப்பு ஆய்வுக்காக      சிட்னிக்கு வந்தார்.   நான் வசிப்பது  மெல்பன்.

அவர் குடும்பத்தை விட்டுப்பிரிந்து படிக்க வந்தார். மனைவி  பிள்ளைகளை விட்டுப்பிரிந்து வரும் துயரத்தை கடந்துவருதல் என்பது எத்தகைய   மனஉளைச்சல்   என்பதை  அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றேன்.

எனினும்,  தான் வந்தநோக்கத்தில்   கண்ணும்   கருத்துமாக இருந்து   அந்த இக்கட்டான காலகட்டத்தையும்  கடந்தவர்.  சிறிது காலத்தில் மனைவி மக்களை இங்கு அவர் அழைத்துக்கொண்டபின்பு    ஓரு குடும்பத்தலைவனாக  அவர்களின்   எதிர்காலம்   குறித்த   ஏக்கமும்   கவலையும் அவரது மனதில்  குடியேறியது.
யாழ்.  பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன்  இங்கே ஆய்வை முடித்துவிட்டால் திரும்பிச்சென்று அதே பல்கலைக்கழகத்தில் அவர் தனது பணிகளைத்தொடரவேண்டும்.   இங்கேயே குடியுரிமைபெற்று தங்கிவிட்டால்   பல்வேறு   பிரச்சினைகளுக்கு   ஆளாகவேண்டும்.


இங்குவந்த  அவரது பிள்ளைகள் மூவரும் ஆங்கில மொழிமூலம் கல்வியை தொடர்ந்தனர்.    மீண்டும்   திரும்பிச்செல்லும்போது அவர்களின் கல்வி சார்ந்த எதிர்காலத்திற்கு என்ன வழி?    ஏதும் சர்வதேச பாடசாலைகளை நாடவேண்டும்.   குடும்பத்திற்காக  -  ஒரு மனைவியின் தாயின் அன்றாடக் கடமைக்காக ஆசிரியப்பணியையும் ஊதியம் அற்ற விடுமுறையில் துறந்துவிட்டு வந்த நேசமும் பரிவும் மிக்க மனைவியின் தொழில்சார் எதிர்காலம்...? இப்படி பல கேள்விகளுடன் கலாமணி தமது ஆய்வுக்கல்வியை தொடர்ந்தார்.

அப்போது  கலாமணியின் முன்னே ஆச்சரியக்குறிகள் இருக்கவில்லை.   தொடர்ந்தும் கேள்விக் குறிகள்தான் பூதாகரமாக தோன்றிக்கொண்டிருந்தன.   அந்தக்கேள்விக்குறிகளையெல்லாம் தனது அமைதியான இயல்புகளினாலும் ஆற்றல்களினாலும் கடந்து வந்து ஆச்சரியக்குறிகள் ஆக்கினார்.   

சிக்கலான முடிச்சுகள் தோன்றினால் பிரச்சினைகள் உருவானால் முடிச்சுகளை அவிழ்ப்பதற்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிமுறைகளை பின்பற்றுவர். நண்பர் கலாமணி எவ்வாறு அத்தனை சோதனைகளையும் கடந்தார் என்பது சிதம்பர ரகசியம்.

உள்ளார்ந்த அவரது கலைத்தாகம் அவரை உளைச்சல்களிலிருந்து மீட்டெடுத்தது.  அவரை உடனிருந்து மீட்டபெருமை அவர் நேசித்த கலை இலக்கியத்திற்கு மட்டும் உரித்தானதல்ல. உடனிருந்த மனைவி மக்களையும் அந்தப்பெருமை சாரும்.

திருமதி கலாமணியிடம் நான் இப்படி வேடிக்கையாக சொல்வதுண்டு:- “ உங்களுக்கு மூன்று பிள்ளைகள் இல்லை. கலாமணியுடன் சேர்த்து நான்கு பிள்ளைகள்”