மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
ஈழத்து இலக்கிய உலகின் மூத்த படைப்பாளியும் மல்லிகை ஆசிரியருமான ( அமரர் ) டொமினிக் ஜீவா வின் 95 வது பிறந்த தினம் 27.06.2022 திங்கட் கிழமை. அன்றைய தினம் You tube நேரலையில் இலங்கை நேரம் காலை 7.00 மணிக்கு
இந்த வாரமும் தமிழகத்திலிருந்து நிவாரண உதவிகள் கப்பல் மார்க்கமாக கொழும்பு துறைமுகத்தை
வந்தடைந்துள்ளது.
அத்துடன், சுமார் நான்கு மணிநேரம் குறுகியகால அவசரப் பயணமாக வந்து திரும்பியிருக்கும் இந்திய வெளியுறவுத்துறை
செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவையும்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவையும் தனித்தனியாக சந்திந்து, “ இலங்கை எதிர்நோக்கியிருக்கும்
பாரிய பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்“ எனக்கூறியுள்ளனர்.
இவ்விடத்தில் பின்னோக்கிப்பார்த்து,
இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் ( இரண்டாம் பாகம் ) 19 ஆவது அங்கத்திற்குள்
பிரவேசிக்கின்றேன்.
அரசியல்வாதியும் வியாபாரியும் ஆதாயத்தை எதிர்பார்த்திருப்பார்கள். சமகால இலங்கை நெருக்கடியிலும் இதனை அவதானிக்க முடியும்.
இந்நாடகம் இலங்கையில் மட்டுமன்றி
தமிழர் புகலிட நாடுகளிலும் அரங்கேறியது.
இதன் கதை அனைவருக்கும் தெரிந்ததுதான். ஒற்றுமையே பலம்
அதில் ஒரு வசனம் வரும். “ தத்துவத்தை விட்டு விட்டு தப்ப வழிசொல்லு. “
சமகாலத்தில் காலிமுகத்
திடலில் நடந்துவரும் கோத்தா கோ கம போராட்டத்தில் நேரடியாக கலந்துகொண்ட அல்லது கலந்துகொள்ளாத பார்வையாளர்களாக
இருக்கும் அறிவுஜீவிகளும் அரசியல் விமர்சகர்களும்
கருத்தரங்குகள் நடத்தி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அத்துடன் இது தொடர்பாக மெய்நிகர் அரங்குகளும் நடக்கின்றன.
ஆனால், காலிமுகத்திற்கு அப்பால், மக்கள் தினம் தினம் அதிகாலையே எழுந்து எரிபொருள் பெறுவதற்காக வரிசையாக காத்திருக்கத் தொடங்குகிறார்கள். ஒரு குடும்பத்தின் தலைவன், காலையே சென்று அந்த வரிசையில் நின்றால், அவரது மனைவியோ, பிள்ளையோ அவருடைய பசியை போக்குவதற்காக உணவுப்பொதியுடன் அங்கு செல்கிறார்கள்.
பெருந்துறையிற் சிவபெருமான் அருளுதலும் பெருங்கருணைப் பெற்றி நோக்கிக்
கரைந்துகரைந் திருகண்ணீர் மழைவாரத் துரியநிலை கடந்து போந்து
திருந்து பெருஞ் சிவபோகக் கொழுந்தேறல் வாய்மடுத்துத் தேக்கிச் செம்மாந்
திருந்தருளும் பெருங்கீர்த்தி வாதவூரடிகளடி யிணைகள் போற்றி
(சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் – மாணிக்கவாசக சுவாமிகள் துதி)
3 ஜூலை 2022 ஞாயிறு
இடம்: சிவன் கோயில் வளாகம்.
காலை 8:30 மணி: நிருதி வலம்புரி கணபதிக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, தொடர்ந்து மாணிக்கவாசகர் சிலைக்கு அபிஷேகம்.
திருமுறை ஒன்று முதல் திருமுறை ஏழு வரை தேர்ந்தெடுக்கப்பட்ட செய்யுட்களை பாராயணம் செய்தல், அதைத் தொடர்ந்து திருவாசகம் முழுவதையும் பாராயணம் செய்தல் 658 பாசுரங்கள் திருமுறை ஒன்பது முதல் பன்னிரண்டு வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களுடன் நிறைவு பெறுகின்றன.
மதியம் 12:30 மணி - பிற்பகல் 01:00 மணி வரை.மதிய உணவு இடைவேளை .
நெருங்கிய நண்பனான இலங்கை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள ஒத்துழைப்பு வழங்கப்படும்
மாணவர் விசாவுக்கான விண்ணப்பங்களை விரைவாக சமர்ப்பிக்கவும்
யாழ்.- பாண்டிச்சேரி படகுச் சேவை பாதுகாப்பு அமைச்சு நேற்று அனுமதி
கையிருப்பில் வைத்திருக்கக் கூடிய வெளிநாட்டு நாணயம்: 15,000 இலிருந்து 10,000 டொலராக குறைப்பு
இலங்கை அகதிகளுக்காக தமிழகத்தில் வீட்டுத்திட்டம்
நெருங்கிய நண்பனான இலங்கை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள ஒத்துழைப்பு வழங்கப்படும்
இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு
நெருங்கிய நண்பராக ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு இந்திய அரசாங்கம் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவாத்ரா (Vinay Kwatra) தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் வேட்பாளரானது உக்ரைன்
ஆப்கான் பூகம்பம்: மீட்புக் குழு பாதிப்புற்ற பகுதிகளை அடைவதில் சிரமம்
உலகின் மிகப்பெரிய மிதக்கும் உணவு விடுதி கடலில் மூழ்கியது
ரஷ்யாவுக்கு ஆதரவை வழங்க சீனா தயக்கம்
ஐரோப்பாவுக்கு எரிவாயு: ரஷ்யா முழுமையாக நிறுத்தும் அச்சம்
வற்றிய நீரில் தோன்றிய 3,400 ஆண்டு பழைய நகர்
ஐரோப்பிய ஒன்றியத்தில் வேட்பாளரானது உக்ரைன்
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனும் மோல்டோவாவும் வேட்பாளர் என்ற நிலையில் சேர்ந்துகொள்ள, ஒன்றியத் தலைவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
அந்த முடிவைத் தனித்துவமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி பாராட்டினார்.
Thursday, June 23, 2022 - 2:20pm
தமிழ் சினிமா உலகில் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தை பற்றிய பேச்சுத்தான் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக அடிபடுகின்றது. காரணம் இப்படம் ஈட்டியுள்ள அபார வெற்றி ஆகும். தமிழ் சினிமாவில் வெற்றி முத்திரை பதித்து விட்டது விக்ரம்.வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த ரஜனியின் மார்க்ெகட்டையும் வெற்றி கொண்டு விட்டது விக்ரம்.
இப்படத்தின் மூலம் உலக நாயகன் என்பதை நிரூபித்து விட்டார் கமல். அவரது திறமைதான் இதற்குக் காரணம்.
முக்கியமாக கதை தரமாக இருந்தாலேயே ரசிகர்கள் படத்திற்கு பேராதரவு கொடுக்கிறார்கள். படம் வெளியாகி 3வாரங்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது, வசூலில் மட்டும் எந்தக் குறையுமே இல்லை. ரூ. 350கோடியை(இந்திய நாணயப் பெறுமதி) தாண்டி விக்ரம் படம் உலகம் முழுவதும் வசூல்- குவித்துக் கொண்டிருக்கின்றது. படத்தின் கதை, நீண்ட இடைவேளைக்குப் பிறகு கமல்ஹாசன் படம், விஜய் சேதுபதி, -ஃபகத் பாசில் போன்ற நடிகர்கள் படத்தில் இருப்பது என நிறைய விசேட அம்சங்கள் உள்ளதுவும் காரணங்களாகும்.
தமிழகம், கேரளா, ஆந்திரா, வட மாநிலம் என எல்லா இடங்களிலும் படத்திற்கு அமோக வரவேற்பு தான். 3வாரங்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 365கோடி வரை வசூலித்துள்ளது.
இந்த வாரத்திலும் படத்தின் வசூல் அதிகமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் அடுத்தது வாரத்தில் இருந்து குறைய வாய்ப்பு இருக்கிறது. காரணம் சில நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸிற்கு தயாராகி இருக்கின்றன. புதிதாகத் தயாரான சில படங்கள் விக்ரம் படத்தின் வசூலைப் பார்த்து தாமதமாகவே வெளியிடப்படுகின்றன. நன்றி தினகரன்