அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சீட்டிழுப்பு


.

அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சீட்டிழுப்பு ஞாயிறு மாலை 02 12 2012 Toongabbie Community Centre. Toongabbie யில் முப்பதற்கு மேற்பட்டவர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.
சமூக அங்கத்தவர்கள் ஜவரினால் சீட்டிழுப்பு மேற்கொள்ளப்பட்டது. உடனடியாக வெற்றிபெற்ற சீட்டுக்களைப் பெற்றவர்களை தொடர்புகொண்டு அவர்களது வெற்றிபற்றி அறிவிக்கப்பட்டது.
அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினர் சீட்டுக்களை வாங்கி  உதவியவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டார்கள்.

வெற்றிபெற்ற சீட்டுக்களின் விபரங்கள்

Prize
Ticket No
Details
1
1276
Two economy return air tickets from Sydney to Singapore
2
3008
Hamilton Island 3 night accommodation package for 2 adults at Coral Sea Room at the Reef View Hotel
3
3196
Panasonic 50" Full HD Plasma TV
4
3538
Canon Digital SLR Camera EOS 1100 including 18-55mm lens
5
4079
Portable Outdoor Area Heater plus Lunch for 4 at Blue Elephant Restaurant
6
2629
Braun Oral-B Triumph 5000 Wireless Smart Guide Electric Tooth Brush
7
2211
Braun Oral-B Triumph 5000 Wireless Smart Guide Electric Tooth Brush
8
4559
Uniden DECT 1535 +2 - DECT Digital Cordless Phone System
9
3470
Uniden DECT 1535 +2 - DECT Digital Cordless Phone System
10
4477
Uniden DECT 1535 +2 - DECT Digital Cordless Phone System


சிட்னியில் தமிழ் எழுத்தாளர் விழா 2013
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் வருடாந்தம் நடாத்தும் தமிழ் எழுத்தாளர் விழா அடுத்த ஆண்டு சிட்னியில் நடைபெறவிருக்கிறது.
எழுத்தாளர் விழா தொடர்பான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சங்கத்தின் தலைவர் திரு. பாடும்மீன் சு. சிறீகந்தராசா அவர்கள் தலைமையில் நடைபெறும்.  தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையோடு வேண்டுகிறோம்.
இடம்: ஹோம்புஷ் ஆண்கள் பாடசாலை – Bridge Road, Homebush
காலம்: 09.12.2012 ஞாயிறு காலை 10.00 மணி முதல் 12 மணி வரை.
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச்சங்கம்.

இனியவளே காத்திருப்பேன்
தமிழ்ச் சங்கமம்

நாம் அலைக்கும் பொட்டல்ல; அவளது உரிமை (கவிதை) வித்யாசாகர்!


.

வ்வொன்றாய் உதிர்கிறது நினைவுகள்
எடுத்துக் கோர்த்த இடத்தில் – இறுதியாய்
வந்துவிழுந்தது அவரின் மரணம்..
மரணம்; பெரிய மரணம்
இல்லாதுப் போவது மரணமா?
பிறகு ஈரமில்லாது திரிகிறார்களே நிறையப்பேர்
அவர்களென்ன பிணமா?
பிணமாகத் தான் தெரிந்தார்கள் அவர்கள்
அவரின் மரணத்திற்குப் பின் அவளின்
பொட்டழிக்கும் பூவறுக்கும் ஒரு நிரந்தர புன்னகையைப் பறிக்கும்
மனிதர்களிடம் ஈரமெங்கே யிருக்கும் ?
உடன்கட்டையை மட்டும் உதறிவிட்டு
இன்னும் உயிரோடு கொல்லும் விதவைக் கோலத்தை
பூணும் இரவொன்று உண்டு; அது ஒரு கொடூர இரவு
கணவன் போனதற்கு நிகராக
பூவும் பொட்டும் போகும் கணம்
இன்னொரு மரணமென்று எண்ணி
அவளுக்காக நானுமழுதேன்;
என் கண்ணீரும்
அவளின் கண்ணீரும் இன்றில்லாவிட்டாலென்ன
நாளையேனும் இச்சமூகத்தைச் சுடும்;
சுடட்டும் சுடட்டும்
சுட்டப்பின் தாலியறுப்பதை நிறுத்திக்கொள்ளட்டும் இச்சமூகம்
அதன்பின் -
விதவையில்லா மண்ணில் நடக்கும் அவள்
அவளுக்கு வேண்டாமெனில் அவளாகவே அன்று
பொட்டினைக் கலைத்துக்கொள்வாள்..
பூவை அறுத்துக்கொள்வாள்..
உயிரைக் கூட விட்டுமாய்ப்பாள்,
அது; அவளது உரிமை!!

ஹெலன்ஸ்பேர்க் சிறீ வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலில் விசேட குடமுழுக்கு விழா!

நிருதி வலம்புரி விநாயகப் பெருமான் முன்னிலையில்  அறுபத்து மூன்று நாயன்மார்கள் மற்றும் 9 தொகை அடியார்களுக்கு ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கும் திருக் குடமுழுக்கு விழா!

மேலே குறிப்பிட்ட திருவுருவச் சிலைகளுக்குத் திருக் குடமுழுக்கு விழா திருவருள் அருளால் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி கோலாகலமா நடைபெற்றது. 24ஆம் திகதி  இந்தச் திருவுருவச் சிலைகளுக்கு காலை 8மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட எண்ணெய்க் காப்பு நிகழ்ச்சியில் இந்துக்கள் பலர் பங்கேற்றி வழிபாடு செய்தார்கள். பத்தர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப காணிக்கை செலுத்தி வரிசையாக எண்ணெய் சாற்றியவண்ணம் காணப்பட்டார்கள் பத்தரிற் சிலர் திருமுறை ஓதியபடி காணப்பட்டனர். சனிக்கிழமை 24ஆம் திகதி மாலை சிவத்திரு நிர்மலேசுவரக் குருக்களுடன் ஆலய பிரதம சிவாச்சாரியார் சிவத்திரு சிவசண்முகக் குருக்கள் இணைந்து மறுநாட் கும்பாவிடேகத்திற்குத் தேவையான   கிரிகைகளை ஆரம்பித்து வைத்தார்கள்.

அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரின் மாவீரர் நாள் நிகழ்வுகள்

தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் மாவீரர் நாளான கடந்த செவ்வாய்க்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
ஸ்பிறிங்வேல் (Springvale) நகரமண்டபத்தில் 27-11-2012 அன்று நடைபெற்ற இந்த உணர்வெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் எண்ணூறுக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு மரியாதை செலுத்தினர்.

சிட்னியில் இலக்கிய சந்திப்பு

.

இலங்கைச் செய்திகள்

'கடன் தொல்லையே தற்கொலைக்கு காரணம்"? கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல்

விண்ணுக்கு ஏவப்பட்டது இலங்கையின் முதலாவது செயற்கைக்கோள்

 கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள் : படையினரால் அகற்றப்பட்டன

2009ல் ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த ஒஸ்லோ மேற்கொண்ட நகர்வுகளை பிரபாகரன் தடை செய்தார் என்கிறார் எல்.ரீ.ரீ.ஈ யின் முன்னாள் தலைவர் ‘கேபி (3)

பிரபாகரனின் குடும்பத்தை விமானம் மூலம் காப்பாற்றுவதற்கு நெடியவன் நிதியுதவி செய்யவில்லை. - எல்.ரீ.ரீ.ஈ யின் முன்னாள் தலைவர் ‘கேபி’ (4)

தொடரும் ஒரு தமிழ்ப் பலவீனம் குறித்து
செல்ஹெய்மின் கூற்றுக்களும் அதனையடியொற்றி மேலெழுந்திருக்கும் வாதங்களும் – சில குறிப்புக்கள்.
- யதீந்திரா
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்: பதற்றம் தொடர்கிறது

பொலிஸாரின் தாக்குதலில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில்

கடந்த காலத்தை நோக்கி அரசாங்கம் தமிழ் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றதா?

யாழ். பல்கலை விவகாரம்; அமெரிக்கா கரிசனை

சடங்கும் கலாசாரமும் - இந்திரா பார்த்தசாரதி

.

அண்மையில, அரசாங்கம், ஒரு சிற்றூர் கோயில் திருவிழா ஒட்டி நடக்க இருந்த எருதுச் சண்டையைத் தடை உத்தரவு போட்டு நிறுத்தி விட்டது. இதனால், மனம் தளராமல், அவ்விழா அன்று, ஆயிரம் கோழிகளை அக்கோயில் தெய்வமான முனியப்பனுக்குக் காணிக்கைக் கொடுக்கும் சடங்கை அந்தக் கிராமத்து மக்கள் நிகழ்த்தினார்கள் என்பது செய்தி.

எருதுச் சண்டை என்பதை சமயம் சார்ந்த ஒரு கலாசார வைபவமாக அவ்வூர் மக்கள் மக்களின் அடிமனத்தில் காலங்காலமாக நிழலாடிக் கொண்டிருக்கக் கூடும். அரசாங்கத் தடை அவர்களுடைய அக்கலாசார அடையாளத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாக அக்கிராமத்து மக்கள் நினைத்திருக்கலாம். கோழியைக் கொல்வதை யாரும் தடுக்க முடியாது. ஹிந்து முன்னணியினர் பசுவைக் கொல்வதற்குத் தான் ஆட்சேபணை தெரிவிக்கக் கூடும். மதத்தின் பேரில் நிகழும் மனிதக் கொலைகளைக். கோட்பாட்டு யுத்தமாகத்தான் பெரும்பாலான அரசியல் கட்சிகள் நினைக்கின்றன.கோழிக்கு ஆதரவாக இன்னும் எந்த அரசியல் கட்சியும் உருவாகவில்லை. அதனால்தான், தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வழியாக ஆயிரம் கோழிகளை முனியப்பனுக்குக் கடன் நேர்த்தியாகச் செலுத்தியிருக்கிறார்கள் அவ்வூர் மக்கள்.
தொல்குடிமக்கள் அடிமனத்தில் சடங்கு என்பது அவரள் கலாசாரத்தின் இன்றியமையாத அம்சம்,அடையாளம்.  இந்தத் தொல்குடிக் கலாசாரமே பிறகு உருவான ,ஹிந்து சமயத்தின் பல்வேறு விழாக்களின் அடிவேராகவும் இருக்கின்றது. அழகர் ஆறு கடப்பதை நிகழ்த்தாமல், மீனாட்சிக் கல்யாணம் நடைபெறுமா? மீனாட்சிக் கல்யாணத்தை தடை உத்தரவு போட்டு நிறுத்தி விட முடியுமா?
ஒருவகையில், பார்க்கப்போனால், இந்நிகழ்வுகள் அல்லது சடங்குகள் அக்காலத்திய நாடகங்கள்.
ஆகவே தங்கள் கலாசாரத்துக்கு விடுக்கப்பட்ட எந்தச் சவாலையும் மக்கள் அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
Nantri :indiraparthasarathy

வேலூருக்கு பெருமை சேர்த்த வெளி நாட்டு பெண்மணி!


.
ஐடா ஸ்கடர் என்ற பெண்ணின் பெற்றோர் மிஷனரிகளாக திண்டி வனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். ஐடா மட்டும் அமெரிக்காவில் படித்து கொண்டிருந்தார்.  ஐடாவிற்கு  20 வயது ஆகும்போது அவர் தாயார் சுகவீனம் அடைந்தார். அதை கேள்விப்பட்டு தன் தாயாரை காண 1890ம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி திண்டிவனத்திற்கு வந்தார். அமெரிக்காவின் சொகுசு வாழ்கை இந்தியாவில் ஐடா ஸ்கடருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் 1892ம் ஆண்டு வேலூருக்கு மாறுதலானார்கள்.

             அங்கு ஒரு இரவில், ஓர் இளம் மனிதன் இவர்களது வீட்டு கதவருகில் நின்று, பிரவசத்திற்காக துடித்து கொண்டிருக்கும் தனது 14 வயது மனைவிக்கு உதவுமாறு ஐடாவை கேட்டுகொண்டார். ஐடா, தன் தகப்பனாரான டாக்டர் ஜான் அவர்களை அழைத்து செல்லுமாறு தெரிவித்தாள். அவனோ ஒரு ஆண் டாக்டர் தன் மனைவிக்கு உதவி செய்ய நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு போய்விட்டான்.

' தானே கள்வன் ' - கி.வா.ஜகந்நாதன்


.
சல சலவென்று ஓடும் நீர்அதன் கரையிலே அவனும் அவளும் காதல் பூண்டார்கள்அங்கே ஒருவரும் இல்லாத தனிமையிலே அவ்விருவரும் இருந்தனர்ஆயினும் அவளுக்கு எல்லாம் நிரம்பியிருந்தது போலத் தோன்றியதுஇன்றோஅவள் தன் வீட்டில் தன் தாய் தந்தையரும் சுற்றத்தாரும்தோழியரும் சூழ இருக்கின்றாள்ஆனால் அவளுக்கு எல்லாம் சூன்யமாக இருக்கின்றது.

அவன் அவளைப் பிரிந்தான். 'சிலநாளே இந்தப் பிரிவுவிரைவில் வந்து உன்னை மணப்பேன்அதுவரையிலும் பொருத்திருஎன்று அவன் உறுதி மொழி கூறிப் பிரிந்தான்அவள் அவனை நம்பினாள்.உளமறியக் காதல் புரிந்தவன் மீண்டுவந்து உலகறிய மணம் புரிவானென்று ஆர்வத்தோடுகாத்திருந்தாள்.

காதலின்ப நினைவிலும் காதலனை எதிர்பார்க்கும் ஆர்வத்திலும் காலத்தைக்கழித்துக்கொண்டிருந்தாள்ஒரு கணம் போவது ஒரு யுகமாகத் தோற்றியதுபிரிவுத் துன்பத்தைப்பொறுத்திருந்தாள்அந்தத் துன்ப முடிவிலே இணையற்ற இன்பம் இருக்கிறதென்ற நினைவுஅதனைப் பொறுக்கும் மன வலியைத் தந்தது.

அவன் வரவில்லைஅவள் உள்ளத்தே சிறிது பயம் முளைக்கத் தொடங்கியதுஆனாலும் அன்புஅதை மறைத்ததுஅவளுடைய உயிர்த்தோழி அவளைத் தினமும் ஆயிரம் கேள்விகள்கேட்கிறாள்அவள் மேனியிலே வாட்டம் தோற்றுகின்றதுதோழி அது கண்டு, "ஏன் இப்படிவாடுகிறாய்?" என்று வினவு கிறாள்தன் உள்ளம்போலப் பழகும் அத்தோழிக்கு அந்தக் காதலிதனக்கு ஒரு காதலன் வாய்த்ததைச் சொல்லுகிறாள்.

அவன் தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதும்இன்னுரை பேசித் தலையளி செய்ததும்அளவளாவியதும், 'பிரியேன்பிரிந்தால் உயிர் விடுவேன்என்று சொல்லியதும்பிரிந்துவருவேனென்று உறுதி மொழி கூறியதும் - எல்லாம் சொல்கிறாள்.

அவர் சொன்னதில நான் ரசிச்ச ஓன்று: உஷா அன்பரசு

.

தென் கட்சி கோ.சுவாமி நாதன்  விஷயத்தை சொல்லிட்டு கடைசியில் சிரிக்கிற மாதிரி பண்ணிடுவாரு. அவர் சொன்னதில நான் ரசிச்ச ஓன்று:-

ஒரு எழுத்தாளர் தான்  எழுதி வச்சிட்டிருந்ததை எல்லாம் கொயர் கொயர் பேப்பரா அடுக்கி வச்சிகிட்டு கவலையா இருந்தாராம். அப்ப ஒரு ஆள்  சந்திக்க வந்திருக்கான். இவரை பார்த்து ஏன் இப்படி உம் முனு இருக்கிங்க? ன்னு கேட்டிருக்கான். அதுக்கு எழுத்தாளர் நான் எழுதரதை இந்த ஊடகங்கள் புரிஞ்சுக்கறதேயில்லை. இந்த பதிப்பாளர்களுக்கு   நல்ல எழுத்தை போட தெரியவில்லை.அப்படிதான் ஒரு புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் வெறுத்து போய் தான் எழுதினதை எல்லாம் பழைய பேப்பர்க்காரனுக்கு போட்டு விட்டாராம். அதுல ஒரு பேப்பர் மளிகை கடையில  பொட்டலம் மடிக்கப்பட்டு  ஒரு ஆள் கையில் கிடைச்சிருக்கு.  அவர் அதுல இருந்த எழுத்தை படிச்சி.. இத்தனை அருமையா எழுதர யார் அவர்…? னு மளிகை கடைக்காரரை விசாரிக்க அவர் பழைய பேப்பர்க் காரரை கை காட்ட மேட்டர் முடிந்தது. மிச்சமிருந்த பேப்பரை எல்லாம் வாங்கி புத்தகம் போட்டாராம். அதற்கப்புறம் அந்த ஆங்கில எழுத்தாளர் ஒஹோன்னு போயிட்டாருங்க என்றார். உடனே சந்திக்க வந்த ஆள் ,  “ கவலைப் படாதீங்க நீங்களும் ஓஹோன்னு ஆயிடுவிங்க அதுக்குதான் நான் இப்ப வந்திருக்கேன் என்றாராம். உடனே எழுத்தாளர் முகம் மலர்த்து , “ அப்படியா நீங்க எந்த பதிப்பகத்துலர்ந்து வந்திருக்கிங்க? “ என்றார். அதற்கு வந்தவர், “ நான் பதிப்பகத்திலர்ந்து வரலை… பழைய பேப்பர் கடையிலிருந்து வந்திருக்கேன்..!”  என்றார்.

உலகச் செய்திகள்


உலகின் மிகப்பெரிய கடைத்தொகுதி விரைவில் டுபாயில்!

சிரியாவில் கார் குண்டுத் தாக்குதல்: 34 பேர் பலி

சவூதியில் இருவருக்கு தலையை வெட்டி மரணதண்டனை

இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்: 7 பேருக்கு எகிப்தில் மரண தண்டனை

ஈரான் அறிமுகப்படுத்திய நீர்மூழ்கிகள் மற்றும் போர்க்கப்பல்

திரைக்கதை, வசனம் நானில்லை...

.
கிராமத்தில் சொந்தமாக செக்கு ஓட்டு தொழில் செய்து வருபவன் அய்யாவு. அம்சாயா என்ற தன் தங்கையைத் தவிர அவனுக்கு வேறு சொந்தபந்தம் இல்லை. கொஞ்சம் போல் பழகும் விசுவாசமான பணியாள் சன்னாசி மட்டும் உண்டு.

தன் தங்கை அம்சாயாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கும் வேளை, அய்யாவின் கிராமத்திற்கு அஞ்சலை என்ற ஒரு இளம் வயதுப் பெண் பெட்டிக்கடை குருவம்மா வீட்டிற்கு உறவுக்காரியாக வருகிறாள். முதலில் அஞ்சலையுடன் சின்னச் சின்ன சண்டைகள் பிடிக்கும் அய்யாவு, பின்னாளில் அஞ்சலை தாய்தந்தையற்ற அனாதை... வேறு போக்கிடம் இன்றி பெட்டிக்கடைக்காரியிடம் தஞ்சம் புகுந்ததை அறிந்து அவள்பால் அனுதாபம் கொண்டு அது காதலாக மலர, அதை தங்கை அம்சாயா கவனித்து விடுகிறாள். அவளுக்கும் அஞ்சலையின் குணா பாவங்கள் பிடித்துப் போகவே அவளே தன் அண்ணியாக வர ஆசைப்படுகிறாள்.

சங்கச் சுரங்கம் - 1 : ஓரிற்பிச்சை - சு.பசுபதி

.

கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் வந்திருந்த என் நண்பன் நம்பியை வீட்டுக்குள் வரவேற்றேன்.

தமிழ்ப் பாடல்கள் என்றால் நம்பிக்கு மிகவும் பிடிக்கும், மணிக்கணக்கில் என்னுடன் அவற்றைப் பற்றிப் பேசுவான்; கூடவே என் மனைவி கொடுத்துக் கொண்டே வரும் தின்பண்டங்களும் உள்ளே போய்க்கொண்டே இருக்கும். இப்படித்தான் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்துவிடுவான்.

காலணியைக் கழட்டிக்கொண்டே நம்பி சொன்னான்: " முதலில், என் தாக சாந்திக்காக... இந்தக்குளிருக்கு இதமாக.... ஏதாவது கொடு! பிறகு பேசலாம்" என்றான். நான் அவனை ஏற இறங்கப் பார்த்து, சிறிது தயங்கிப் பின்னர் சொன்னேன்: " நிச்சயமாய்த் தருகிறேன்! குறுந்தொகையில் ஒரு பாடல் உள்ளது. இப்படித்தான் பனிக்காலத்தில் வரும் 'அறிவர்'களுக்கு என்ன திரவம் கொடுக்கவேண்டும் என்று அது சொல்கிறது. அதைக் கொடுக்கட்டுமா?" என்றேன். நம்பியின் கண்கள் நூறு வாட் பல்புகள் போல் பிரகாசித்தன.

"பேஷ்! பேஷ்! அந்தக் காலத்துப் பானமா? அமர்க்களமாக இருக்குமே! கொண்டுவா! " என்றான். "சரி! சோபாவில் உட்கார். அந்தப் பாடலைச் சொல்கிறேன். அதற்குள் என் மனைவி உனக்கு அதைத் தயாரித்து கொண்டு வருவாள்" என்றேன். நான் அவனுக்குச் சொன்ன பாடலை உங்களுக்கும் சொல்கிறேன், சரியா?

"இனி அவன்.". இலங்கை தமிழ் சினிமா

விரைவில் திரையிடப்படவுள்ள " இனி அவன்.." நம்நாட்டுத் திரைப்படம்இலங்கை தமிழ் சினிமாவில் 29 ஆவது திரைப்படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் 'இனி அவன்'. இலங்கையின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் அசோக ஹந்தகம இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் அண்மையில் ஜப்பானில் இடம்பெற்ற டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சிறந்த திரைப்படமாக நடுவர் குழாமால் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு கான்ஸ் -2012 திரைப்பட விழா மற்றும் ரொரண்டோ திரைப்பட விழா -2012 உட்பட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இனி அவன் திரைப்படம் திரையிடப்பட்டு சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது.

முன்னாள் போராளி ஒருவர் சமூகத்துடன் இணையும் கதைக்கருவை மையமாக வைத்து உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்டிருக்கின்றது. அத்தோடு எதிர்வரும் டிசம்பர் மாத இறுதியில் இலங்கை முழுவதும் சிங்கள உபதலைப்புக்களோடு 25 இற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.

இந்தத்திரைப்படத்தில் தர்ஷன் தர்மராஜ், சுபாஷினி பாலசுப்ரமணியம், நிரஞ்சனி சண்முகராஜா, ராஜா கணேசன், கிங் ரட்ணம், மல்கம் மசாடோ, பெர்மினஸ், மகேஸ்வரி ரட்ணம் உட்பட நம்நாட்டுக் கலைஞர்கள் பலர் நடித்திருக்கின்றனர். மேலும், ஒளிப்பதிவு - சண்ண தேசபிரிய, இசை - கபில பூகல ஆராச்சி, ஆகியோர்களோடு உதவி இயக்குனர்களாக வதீஸ் வருணன் மற்றும் திருஞானம் தர்மலிங்கம் ஆகியோர் பணிபுரிந்திருக்கின்றனர்.

இயக்குனர் ஹந்தகம இதற்கு முன்னரும் "இவ்வழியால் வாருங்கள்" மற்றும் "கிழக்கு கரையின் அழைப்பு" என்ன இரு தொலைக்காட்சி நாடகங்களை தமிழில்; 2002 மற்றும் 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி