தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு
பாரதி பாட்டை பக்குவப் படுத்துவோம் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா
புரட்சிக்கும் பாரதி புதுமைக்கும் பாரதி
அயர்ச்சியை நாளும் அகற்றினான் பாரதி
துணிவுக்கும் பாரதி துடிப்புக் பாரதி
பணிவுக்கும் பாடினான் பக்திக்கும் பாடினான்
தமிழன்னை ஈன்ற தவப்புதல்வன் பாரதி
தமிழதனை அமுதமாய் கண்டவன் பாரதி
தமிழொன்றே பெருமை எனவுரைத்தான் பாரதி
தலைநிமிர வாழப் பலவுரைத்தான் பாரதி
பன்மொழிகள் கற்றான் பற்றினான் தமிழை
பக்தியை மனத்தில் இருத்தினான் பாரதி
கடவுளை நம்பினான் கண்ணியம் காத்தான்
கடமையைச் செய்யென கட்டளை இட்டான்
மீண்டும் தொடங்கும் மிடுக்கு!
……………பல்வைத்திய கலாநிதி பாரதி. இளமுருகனார்
வண்டமிழ் அறிஞர் வாழ்ந்த நவாலியில்
வரதன் என்னுமோர் வாலிபன் வாழ்ந்தான்
கண்டவர் மதித்திடக் கடமை உணர்வுடன்
கமம்செய விரும்பியோர் காணியும் தேடினான்
வறட்சி
கொண்ட தரிசு நிலத்தை
வாங்க முடிந்ததே பெரிதென நினைத்தான்
முயற்சி என்றும் திருவினை யாக்கும்
முதுமொழி நினைந்து செயற்பட விழைந்தான்
உணர்வுடனே செயற்பட்டு உதவிடுவோம் யாவர்க்கும் !
கவிதை - மெட்டு பழையது பாடல் புதியது!
-சங்கர சுப்பிரமணியன்.
“வழிநெடுக காட்டுமல்லி
பூபதி எழுத்துல ஒருவேகம்
இலக்கியமதிலே தனி மோகம்
இலக்கது ஒன்றே இவர் தாகம்
இலக்கியம் மலருது எழுதயில
இலக்கு தெரியுது படிக்கயிலே
பூபாளம் அதிகாலை ராகம்
பூபாளம் அதிகாலை ராகம்
பூபதி எழுத்தும் சிறப்பாகும்
எழுத்தே இங்கு கதசொல்லும்
எழுதுவதெல்லாம் மெய்யாகும்
பொய்யென எதுவும் அதிலில்ல
புரிந்தேன் நான் அத உண்மயில
பூபாளம் அதிகாலை ராகம்
ஒத்தூதலை ஏற்பதும் நம் கடனே(னோ)?
-சங்கர சுப்பிரமணியன்
இணைந்து ஊதினால் இசையது சிறப்பாகும்
நாதசுவரத்தை ஒருவர் முதன்மையாய் ஊதிட
ஒத்து ஊதற்கு ஒருவர் துணையாய் இருப்பார்
ஒத்தூதுவார் தனியாய் ஊதினால் நயமிராது
ஒத்தூதுவார் இல்லையெனிலும் சிறக்காது
ஒத்தூதலின் சிறப்பென்ன என்று கேட்டால்
ஒத்தூதல் கறியில் கறிவேப்பிலை போலாம்
துணையின் மதிப்பு துணையில் விளங்கிடும்
ஒத்தொலி மிகுந்தால் மொத்தமும் பழுதாகும்
பதமாய் ஒலிக்க இசையிலும் துள்ளல் மிகும்
ஒத்தை தனியாய் ஊதிட சிறப்பு சேர்ந்திடா
நட்புக்கு ஒரு ஏவி எம் சரவணன் - ச . சுந்தரதாஸ்
இல்லாமல் எல்லாத் துறையிலும் அவருக்கு நண்பர்கள் பரந்து இருந்தார்கள்.
சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025
.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க tamilmurasu1@gmail.com or paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்
07 - 03 - 2026 Sat: அபயகரம் வழங்கும் 34வது ஆண்டு நிதிசேகரிப்பு விழா
at 6 PM Bryan Brown Theatre, Bankstown NSW 2200
தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்- 5…..சங்கர சுப்பிரமணியன்.
அன்று பாதிநாள் சிம்கார்டு வாங்குவதிலேயே போய்விட்டதால் ஹுட்டால் போவதில் தடை ஏற்பட்டது. அதுசரி, என்ன அது ஹுட்டாங் அப்படி இப்படின்னு உடான்ஸ் விட்டுட்டிருக்க என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. அதனால் புதிர் போடாமல் விளக்கி விடுகிறேன். என்னதான் தொழில் நுட்பத்திலும் கட்டுமானத்திலும் அசுரவளர்ச்சி பெற்றிருந்தாலும் பழைய நிலையை மறக்கவில்லை.
இதயக்கனி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
சினிமாவிலும் , அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த
எம் ஜி ஆர் தனது விசுவாசியான ஆர் . எம் . வீரப்பனுக்கு கடைசியாக நடித்துக் கொடுத்த படம் இதயக்கனி. பல தயாரிப்பாளர்கள் எம் ஜி ஆரின் கால்ஷீட்டுக்கு தவமாய் தவம் கிடக்க குறுகிய காலத்துக்குள் இந்தப் படத்தை வீரப்பனுக்கு நடித்துக் கொடுத்து விட்டார் எம் . ஜி. ஆர்.
அதில் அவன் மனைவி லஷ்மி படமும் கொலைக்கு குற்றவாளி என்று சேர்க்கப்பட்டுள்ளது. கட்டிய மனைவியையே சந்தேகிக்கும் நிலை. ஆனால் மோகன் தன் கடமையை நிறைவேற்ற துணிகிறான். அதில் அவன் எதிர் நோக்கும் சவால்கள்தான் மீதி படம். எம் ஜி ஆரின் சினிமா, அரசியல் இமேஜ் அறிந்து அதனை வலுப்படுத்தும் விதத்தில் படத்தின் திரை கதை அமைக்கப்பட்டிருந்தது. படத்தில் இரட்டை வேடம் இல்லா விட்டாலும் கூட இரு வேறு கெட் அப்பில் தோன்றி கலக்குகிறார் எம் ஜி ஆர். இரண்டிலும் மேக்கப்பும் பிரமாதம். அதே போல் சண்டைக் காட்சிகளிலும் பின்னி எடுக்கிறார் வாத்தியார். அது மட்டுமன்றி கற்பழிப்பு காட்சியிலும் எம் ஜி ஆர் இதில் நடித்திருக்கிறார்.
உலகச் செய்திகள்
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியாவுக்கு வருகை – டெல்லியில் கடும் பாதுகாப்பு
இந்தோனேஷியாவில் பெரும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் வெள்ளப் பேரழிவு: பலியானோரின் எண்ணிக்கை 900ஐ கடந்தது ; நூற்றுக்கணக்கானோர் மாயம்!
கோவா தீ விபத்தில் 23 பேர் பலி : கடற்கரை விடுதி முழுவதும் எரிந்து நாசம்
எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.4,140 கோடி அபராதம்
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியாவுக்கு வருகை – டெல்லியில் கடும் பாதுகாப்பு
Published By: Vishnu
04 Dec, 2025 | 08:59 PM
புது டில்லியில் அமைந்துள்ள பாலம் விமானப்படை தளத்தில் அவரது விமானம் தரையிறங்கியதைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் அவரை உத்தியோகபூர்வமாக வரவேற்றனர். ரஷ்ய தலைவருக்கு இந்திய ஆயுதப்படைகளின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
புட்டின் – மோடி இடையிலான இந்த சந்திப்பில் : இருநாடுகளுக்கிடையேயான மூலோபாய கூட்டுறவு,
இலங்கைச் செய்திகள்
அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607ஆக உயர்வு ; 214 மாயம்!
டித்வா புயல் பாதிப்பு : இலங்கைக்கான உதவியை £1 மில்லியனாக உயர்த்திய ஐக்கிய இராச்சியம்
மலையக மார்க்கத்தில் 12 ரயில்கள் நிறுத்தி வைப்பு
4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு - தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்
இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நாடு திரும்பினர் !
அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607ஆக உயர்வு ; 214 மாயம்!
05 Dec, 2025 | 07:02 PM
நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று போன்ற அனர்த்தங்களில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், 214 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேநேரத்தில், நாடு முழுவதும் 586,464 குடும்பங்களைச் சேர்ந்த 2,082,195 பேர் வெள்ளப் பாதிப்பு, இடம்பெயர்வு மற்றும் சொத்து சேதங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
.jpeg)













