“வணக்கம் இலண்டனால் 2023ம் ஆண்டு செப்டெம்பர் 17ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட எழுத்தாளர் தாமரைச்செல்வியின் பொன்விழா மெய்நிகர் நிகழ்வில் எழுத்தாளர் சந்திரா இரவீந்திரன் ஆற்றிய பொன்விழாப் பேருரையின் முழுவடிவம்.”
இன்றைய தினம், தனது இலக்கிய வாழ்வில் பொன்விழாக்காணும்; இன்றைய விழா நாயகியான தாமரைச்செல்வி அவர்களுக்கும்,
மற்றும், இணையவழியாக இங்கே கூடியிருக்கும் அனைத்துப் பார்வையாளர்களுக்கும்,
மேலும் இங்கே தாமரைச்செல்வி அவர்களின் இலக்கியப்பணிக்கான இந்தப் பொன்விழாவில் வாழ்த்துரை வழங்க வந்திருக்கும்-
எண்பதுகளிலிருந்து எனக்கு அறிமுகமான, நான் அன்போடு ‘கோகிலாக்கா’ என்று அழைக்கும் எழுத்தாளர்- பேச்சாளர்- நாடகக்கலைஞர் எனப் பல்துறைகளில் மிளிரும் கோகிலா மகேந்திரன் அவர்களுக்கும்,
முன்னாள் வீரகேசரி நாளிதழின் துணையாசிரியராகப் பணியாற்றியவரும், ரஸஞானி என்ற பெயரில் வீரகேசரி இதழில் தொடர்ந்து எழுதி வந்தவருமான….எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லெ.முருகபூபதி அவர்களுக்கும்,
மற்றும், தமிழியல்துறை பேராசிரியரும். பதிப்பாசிரியரும், கட்டுரையாளரும், திறனாய்வாளரும், தமிழ் இலக்கியப்பரப்பில் காத்திரமான விமர்சகராகவும் இருக்கும் பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் அ.ராமசாமி அவர்களுக்கும்,
மற்றும், வன்னியில் ஒரு பேராட்சி இருந்த காலத்தில், பலராலும் பேசப்பட்டு வந்த ‘வெளிச்சம்’ என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும், தமிழீழத்தொலைக்காட்சியின் பணிப்பாளராகவும் இயங்கிய, பதின்னான்கு கவிதை நூல்களின் ஆசிரியரும், எழுத்தாளரும், கவிதைகளிற்காகப் பல விருதுகளைப் பெற்றவருமான- பேரன்புக்குரிய கவிஞர் கருணாகரன் அவர்களுக்கும்,
அண்மையில் ‘திரைகடல் தந்த திரவியம்’ என்ற பன்னாட்டு சிறுகதைத்தொகுப்பு நூலொன்றை வெளிக்கொண்டுவந்து, எமது ஞாபகத்தில் பதிந்துபோன முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஸ்மி அவர்களுக்கும்,
ஈழத்தின் அரங்கத்துறையில் முக்கிய பங்காற்றியவரும், நாடக ஆசிரியரும், சிறுகதை எழுத்தாளருமான மதிப்பிற்குரிய பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களுக்கும்,
மற்றும் மதிப்பிற்குரிய கலாநிதி க. ஸ்ரீகணேசன் அவர்களுக்கும்,
விமர்சகரும், கவிஞருமான… நட்புக்குரிய மாதவி சிவலீலன் அவர்களுக்கும்,
எண்பதுகளிலே ஈழத்துப் பத்திரிகைகள், மற்றும் வானொலி மெல்லிசைப்பாடல்களில் தன்னை முத்திரை பதித்துக்கொண்டவரும், கவிஞரும், எழுத்தாளருமான மண்டூர் அசோகா அவர்களுக்கும்,
மேலும், உலகமெல்லாம் பரந்து வாழும் திறமை மிக்க ஈழத்தமிழ் படைப்பாளிகளை இனம்கண்டு, அவர்களின் படைப்புகளையெல்லாம் உலகத்தமிழ் இலக்கியப்பரப்பில் அறிமுகப்படுத்தும், அரிய பணிகளை 40 ஆண்டுகளுக்கும் மேலாக செய்துகொண்டிருப்பவரும், ‘தமிழியல்’; வெளியீடுகள், ‘ருவான்’ வெளியீடுகள் எனத் தரம்மிக்க நூல்களைப் பதிப்பித்து வந்தவரும், ஈழத்தமிழ் இலக்கியப்பரப்பிற்கும்- தமிழ்நாட்டு இலக்கியப்பரப்பிற்கும்; ஒருபெரும் பாலமாக இருந்து, அரிய பணிகளை செய்துகொண்டிருப்பவரும், நூல்களை ஆராதிப்பவருமான பெருமதிப்பிற்குரிய நூலவர் பத்மநாபஐயர் அவர்களுக்கும்,
என் நெஞ்சார்ந்த வணக்கங்கள்!
தாமரைச்செல்வி அவர்களுடைய இந்த இலக்கியப்பொன்விழாவிலே, இத்தனை- ஆளுமைகளும் ஒன்றாகக் கூடியிருப்பதே, ஒரு பெரும் வரம் என்றுதான் சொல்லவேண்டும்.
ஒவ்வொருவரும் உலகின் வெவ்வேறு பாகங்களில், வெவ்வேறு நாடுகளில் வாழுபவர்கள். இவர்களனைவரும்… குறிப்பிட்ட இந்த நிகழ்விற்கான இணையமேடையிலே ஒன்றாக அமர்ந்திருப்பது என்பதே தாமரைச்செல்வி அவர்களுக்குக் கிடைத்த பல விருதுகளில் இன்னுமொரு சிறப்பு விருது என்று தான் நான் நினைக்கிறேன்.