மரண அறிவித்தல்

.
திரு நடராஜா நந்தகுமார்





நடராஜா நந்தகுமார் ( நந்தா) Principal advisor working for water NSW Australia அவர்கள் 23. 5. 2020 சிட்னியில் காலமானார் என்பதை மிகவும்
மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னார் Dr. நிரஞ்சலாவின்அன்புக் கணவரும் , சத்தியா, சிவா ஆகியோரின் அன்புத் தந்தையும் , கலட்டியை வாழ்விடமாகக் கொண்ட 
காலஞ்சென்றவர்களான திரு, திருமதி நடராஜா அவர்களின் அன்பு மகனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27 5 2020 புதன்கிழமை காலை 10 .15 மணியிலிருந்து 12 மணி வரை Palm Chapel, Macquarie Park crematorium North Ryde ல்
பார்வைக்காக வைக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றனர்.
மேலதிக தகவல்களுக்கு
திருமதி நிரஞ்சலா நந்தகுமார் (மனைவி) 61 411 204 432
தற்போதைய Covid 19 நிலைமைகளால் இறுதி மரியாதை செலுத்த விரும்புபவர்கள் கீழுள்ள இணையத்தை அழுத்துவதன் மூலம் நேரலையில் இறுதி யாத்திரையை பார்வையிடலாம் .

https://streaming.funeralsuite.com.au/e/uhwiolul Pin Number 3335


மலர் வளையங்களுக்கு பதிலாக நன்கொடை வழங்க விரும்புபவர்கள் கீழே உள்ள இணையத்தில் தொடர்பு கொண்டு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

https://www.mndtribute.com.au/page/RememberingNandaNandakumar


மருந்து கண்டுபிடிக்கும் முன்னரே கொரோனா அழிந்து போய் விடும்!




உலக சுகாதார அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி கரோல் சிகோரா நம்பிக்கை
மருந்து கண்டுபிடிக்கும் முன்பே கொரோனா வைரஸ் உலகில் இருந்து தானாகவே அழிந்து விடும் என்று உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி ஒருவர் கூறி உள்ளார். சீனாவில் உருவாகி பல்வேறு நாடுகளுக்கும் பரவிய பெருந்தொற்று நோயான கொரோனாவுக்கு உலகம் முழுவதும் சுமார் 3 இலட்சத்து 18 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள். சுமார் 48 இலட்சம் பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கடந்த 2002-ம் ஆண்டு உருவான ‘சார்ஸ்’ நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதேபோல் 2012-ம் ஆண்டில் மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகி பரவிய உயிர் இழப்பை ஏற்படுத்திய ‘மெர்ஸ்’ நோய்க்கும் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பல ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளும் பரிசோதனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஆனால் அவ்விரு நோய்களும் உலகில் பெரிதும் தணிந்து போய் விட்டன.
அந்த நோய்க் கிருமிகளைப் போலவே தற்போது உலகம் முழுவதும் பரவி இலட்சக்கணக்கான உயிர்ப்பலிகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவுக்கும் முடிவு கட்ட மருந்து இல்லை. ஆனால் சார்ஸ், மெர்ஸ் நோய்க் கிருமிகளை விட கொரோனா மிகவும் ஆபத்தானது என்பதால் அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

ஒரு புலியின் கதை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள் பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்ட தினம் ( 19-05-2009 )


( இக்கட்டுரையை   டி . பி.எஸ் .ஜெயராஜ்  பைனான்சியல் டைம்ஸ் இல்  எழுதியுள்ளார் )  
விடுதலைப்புலிகளின்தலைவரான வேலுப்பிள்ளை  பிரபாகரன் 11 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை ஆயுதப் படைகளுடன் போராடி 11 மே 2009 அன்று கொல்லப்பட்டார். வடஇலங்கையின் முல்லைத்தீவு  மாவட்டத்தில் நந்திக்கடல்  கரையில் புலிகள் இராணுவரீதியாக தோல்விகண்டதையடுத்து தெற்காசியாவின் மிக நீண்ட யுத்தம்  முடிவுக்கு வந்தது.
பிரபாகரன் இல்லை என்றாலும், புலிகள் நடத்திய நீண்ட யுத்தத்தின் அழிவுகளிலிருந்து இலங்கை தமிழ் மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. கோவீட் -19 தொற்றுநோய் மற்றும் நிலுவையாக இருந்துவரும்  அரசியலமைப்பு நெருக்கடி பற்றிய செய்திகளால் இலங்கை ஊடகங்கள் கவனத்தை குவித்திருக்கும் ஒரு காலகட்டத்தில் பல ஆண்டுகளாக தீவு தேசத்தின் அரசியல்-இராணுவ போக்கை நிர்ணயித்த ஒரு  மனிதனின் வாழ்க்கை மற்றும் காலகட்டத்தை  இந்த கட்டுரை மையமாகக் கொண்டுள்ளது. .
குடும்பம் மற்றும் குழந்தைப் பருவம்                                                                                                                                        
திருவேங்கடம் வேலுப்பிள்ளை  பிரபாகரன்  1954 நவம்பர்  26  இல் பிறந்தார்.  குடும்பத்தில் இரண்டு ஆண் பிள்ளைகளும்  இரண்டு பெண்பிள்ளைகளும். அவர் நான்கு குழந்தைகளில்  இளையவர் என்பதால், பிரபாகரனின் செல்லப் பெயர் “தம்பி” ஆனது. அந்த செல்லப் பெயர் “தம்பி” அவரது வாழ்நாள் முழுவதும் ஒட்டிக்கொண்டது.
பிரபாகரனின் தந்தை வீராசாமி திருவேங்கடம் வேலுப்பிள்ளை . பிரபாகரனின் தாயின் பெயர் பார்வதிபிள்ளை. அவரது இயற்பெயரும் வேலுப்பிள்ளை . அவர்களிருவரும் இயற்கையாக மரணமடைந்துவிட்டனர்.
பிரபாகரனின் குடும்பம் வடக்கு கடலோர நகரமான வல்வெட்டித்துறை  பகுதியைச் சேர்ந்தது. பொதுவாக வி.வி.டி என்று அது  குறிப்பிடப்படுகிறது. அவர்கள் “திருமேனி  குடும்பம்” அல்லது திருமேனி  குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறியப்பட்டனர். பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை .அரசாங்க எழுதுவினைஞர் சேவையில் சேர்ந்தார். இறுதியில் மாவட்ட நில அதிகாரியாக ஆனார். மறைந்த காமினி திசாநாயக்க காணி அமைச்சராக இருந்தபோது அவர் அரசாங்க சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் என்று நினைக்கிறேன்.
பிரபாகரனின்   தந்தை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டதால் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மட்டக்களப்பு என  வெவ்வேறு பாடசாலைகளில் அவர் கல்வி  பயின்றார்.  அவர் ஒரு முன்னுதாரணமான மாணவர் அல்ல. மேலும் அவர்  க.பொ.த சாதாரணதரத்தில் கூட தேர்ச்சி பெறவில்லை. இது அவர் புத்திசாலித்தனம்  இல்லாதவர் என்றோ அல்லது  அறிவுத்தேடலை கொண்டிருக்கவில்லையென்றோ அர்த்தப்படுத்த வில்லை. முறையான கல்வியைக் காட்டிலும் பிற விட யங்களில் பிரபாகரன் அதிக அக்கறை காட்டியதே இதற்கு காரணம். தெளிவான ஞாபக சக்தியும் ஆர்வமும் கொண்ட வாசகர்.

நீடித்தபோரில் வென்றவர் யார்…? தோற்றவர் யார்…? தளபதி கிட்டுவிடம் மாம்பழம் பெற்றவர்களும் ! யாழ்ப்பாணப் பெண்களிடம் அதிரசம் பெற்றவர்களும் ! சமாதானத்தை விரும்பிய செல்வன் பிரபாகரன் பாலச்சந்திரன் ! - முருகபூபதி



போர்க்காலம் கொடுமையானது. மனித உயிர் அழிவுகளையும் சொத்தழிவுகளையும் இடப்பெயர்வுகளையும் அகதிவாழ்வையும் அதிகபட்சமாக ஒப்பாரி அழுகுரல்களையும் வேதனை, விரக்தி, இயலாமை என்பவற்றையும் தன்னகம் கொண்டிருப்பது.


இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கா பிரதமராக பதவியிலிருந்தபோது வந்த  சமாதான காலத்தில்   ( 2001 -2005) போரின் கோர முகங்களை சந்தித்த ஈழ மக்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.

வெளிநாடுகளில் சுகபோகத்துடன் வாழ்ந்த ஆயுதத்தரகர்களும் ஆயுத வியாபாரிகளும் இலங்கையில் கொழும்பில்  சவப்பெட்டிகள் உற்பத்திசெய்த ஜயரட்ண, ஃபுளோரிஸ்ட்,  ரேமண்ட்,  பானி ரேமண்ட்  உட்பட பல சவப்பெட்டி முதலாளிகளும் மாத்திரம்தான் கவலையடைந்த காலப்பகுதி.


வியாபாரம் வீழ்ச்சி கண்டால் முதலாளிமாருக்கு நட்டம்தானே. அது எந்த வியாபாரமாகவும் இருந்தாலும் சரி.
அந்த சமாதான காலத்தில் கொழும்பிலிருந்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமது முஸ்லிம்காங்கிரஸ் அங்கத்தவர்கள் சிலருடன் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திக்கச்சென்றார்.

யாழ்ப்பாணத்திலிருந்து இருபத்திநான்கு மணிநேரத்தில், அங்கு நீண்ட காலம் வாழ்ந்த முஸ்லிம் மக்களை புலிகள் வெளியேற்றிய கசப்பான கறைபடிந்த நிகழ்வுகளை மறந்து, காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைச்சம்பவங்களையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டிராமல் புரிந்துணர்வை வளர்ப்பதற்காக பகை மறந்த தொடர்பாடலாக  முஸ்லிம் தலைவர்களின் அந்தப்பயணத்தை அவதானித்தோம்.

ஆருமே கொரனோவை பெரிதாக எண்ணவில்லை ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ...... மெல்பேண் .... அவுஸ்திரேலியா

     
        கொரனோவின் கூடவே வாழ்வென்று சொல்லுகிறார்
        கொரனோவோ விட்டகன்று போவதாய் தெரியவில்லை
        மரணித்தோர் பார்க்கையிலே மனக்கலக்க மாகிறது
        வாழவேண்டு மெனுமெண்ணம் மேலெழுந்து நிற்கிறது 

        கடைதிறக்கக் கட்டளைகள் விரைவாக வருகிறது
        கையுறைகள் முகக்கவசம் காணாமற் போகிறது
        அடைத்துவிட்ட தடையாவும் அகன்றுமே செல்கிறது
        ஆருமே கொரனோவை பெரிதாக எண்ணவில்லை 

        கடற்கரை உலாப்போக கைகோர்த்துப் போகின்றார்
        இடைவெளிகள் எனும்பேச்சோ காற்றோடு போயாச்சு
        கொண்டாட்டம் செய்வதற்கு போடுகிறார் திட்டமெலாம்
        கொரனோவை எதிரியாய் கொள்ளாமல் திரிகின்றார்

        பேருந்து தொடர்வண்டி தன்வழியில் போகிறது
        விமானமும் மேலெழும்ப விருப்பாமாய் காத்திருக்கு
        உருத்தெரியாக் கொரனோவை ஒருவருமே நினையாமல்
        உவப்புடனே தெருவெங்கும் ஓடியோடித் திரிகின்றார்

        அணையாத நெருப்பாக கொரனோவும் இருக்கிறது
        அரசியலோ அதன்மேலே ஆட்சிசெய்ய முனைகிறது 
        அகோரத்தை உணராமல் அனைத்தையுமே திறந்துவிடல்
        ஆட்டங்காண வைக்குமென சொல்லுகிறார் வல்லுனர்கள் 

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 15 – மகுடம்


மகுடம் – தோற்கருவி
அமைப்பு

தமிழ்நாட்டின் பறையை ஒத்த அமைப்புடையது மகுடம்
. பூவரசு, வேம்பு, மஞ்சணத்தி மரங்களில் ஏதேனும் ஒரு மரத்தின் கட்டையால்  வளைவு செய்து, பெண் எருமையின் ஈரப்பதம் நிறைந்த தோலை அந்த சட்டத்தில் வைத்து புளியங்கொட்டை பிசினால் ஒட்டவேண்டும். பின்னர் இழுத்துக்கட்டி சூரிய ஒளியில் ஒருநாள் முழுதும் வைத்திருக்க வேண்டும். இதுவே பாரம்பரிய மகுடம் செய்முறை.

நாதம் பொங்கும் இந்த இசைக்கருவி
, ஓசையின் அடிப்படையில் உச்சம், மந்தம் என இரு பெயர்களில் அழைக்கப்படும். உச்சத்தை ‘தொப்பி அல்லது இடந்தலை என்கிறார்கள். இது தொம் தொம் என்கிற ஒசையை தரவல்லது. சற்று பெரிய அளவு உள்ளது. கடினமான எருமைத் தோலால் செய்யப்படும். மென்மையான மந்த இசைக்குப் பெயர் வலந்தலை. அளவில் சிறியது. இதற்கு மென்மையான எருமைத்தோல் பயன்படுத்தப்படுகிறது.

நிறைத்திடுவேன் என் உள்ளமெலாம் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா

       
          அழமாட்டேன் இனி
          அழமாட்டேன் மண்ணில் விழமாட்டேன்
          தொழமாட்டேன் துயர்
          படமாட்டேன் அடி விழமாட்டேன் 

          உரையாற்றேன் வெற்று
          உரையாற்றேன் அவை தடுமாற 
          எழுதிடுவேன் கதை
          வெளியிடுவேன் தலை நிமிர்வாக 

          சொல்லிடுவேன் உரை
          சொல்லிடுவேன் புதுக் குறளாக 
          அள்ளிடுவேன் சுவை 
          அனைத்தையுமே தமிழ் அன்னையிடம் 

          உணர்ந்திடுவேன் தமிழ்
          பண்பாட்டை என் வாழ்வெல்லாம்
          நிமிர்ந்திடுவேன் தலை
          நிமிர்ந்திடுவேன் நில மீதினிலே

பேரில என்னகிடக்கு – சிறுகதை #ஈழத்தவர்_கதை_கேட்போம் - கானா பிரபா


பேரில என்ன கிடக்கு  சிறுகதை
எழுத்தாளர் தேவன்  யாழ்ப்பாணம்
ஒலிப்பகிர்வு  திரு திருநந்தகுமார்

வீடியோஸ்பதி வழியாக ஈழத்தவர் கதை கேட்போம் தொடரில் மூன்றாவது சிறுகதை ஒலிப்பகிர்வு இது.
ஈழத்தின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர் தேவன்  யாழ்ப்பாணம்,
இவரது இயற்பெயர் இளையப்பா மகாதேவா.
1944 ஆம் ஆண்டு ஆரம்பித்து 1982 ஆம் ஆண்டு வரை தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தவர்.
நாவலாசிரியர்கட்டுரையாளர்மொழி பெயர்ப்பாளர்நாடக இயக்குநர்பேச்சாளர் உள்ளிட்ட பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி.


பேரில் என்ன கிடக்கு என்ற சிறுகதை ஈழத்தில் நிலவுகின்ற சாதிப் பிரச்சனை, அதன் வழி எழும் மத மாற்றம் ஆகிய சமூகச் சிக்கலை எழுப்பி நிற்கின்றது. 1964 ஆம் ஆண்டில் சுதந்திரன் இதழில் வெளிவந்த இந்தச் சிறுகதையின் களத்தை இன்றைய சமூகத்திலும் நாம் முகம் கொடுப்பது குறிப்பிட வேண்டியது.

இந்தச் சிறுகதைக்கு இன்னொரு சிறப்புண்டு. தேவன்  யாழ்ப்பாணம் சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுதி நூலுருப் பெற உதவியவர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்கள்இவர் தேவன் அவர்களது மாணாக்கர்களில் ஒருவர்.  யாழ் இலக்கிய வட்டம் இதனை வெளியிட்டது.

இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருக்கும் “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால் நேசிக்கும் பண்பாளர் - முருகபூபதி


வுஸ்திரேலியாவுக்கு நான் புலம்பெயர்ந்து வந்தபின்னர் எனக்கு அறிமுகமாகி, நான் உறவாடி மகிழ்ந்தவர்களில் கலை, இலக்கியம், கல்வி, ஊடகம்  முதலான துறைகளிலும் மற்றும் சமூகப்பணிகளிலும்  ஈடுபட்ட பலரைப்பற்றி தொடர்ச்சியாக எழுதிவந்துள்ளேன்.

அந்த வரிசையில் தீவிரமான வாசிப்பு பயிற்சியிலிருப்பவர்கள் தொடர்பாக வாசகர் முற்றம் என்ற தலைப்பிலும் சிலரது வாசிப்பு அனுபவங்களை கேட்டு  எழுதி பதிவுசெய்து வந்துள்ளேன்.
அந்த வரிசையில் மெல்பனில் நீண்டகாலமாக என்னுடன்  உறவு பாராட்டிவரும்  நண்பர் சண்முகம் சபேசன் பற்றியும், அவரது  வாசிப்பு அனுபவங்களையும் பற்றியும்  விரிவாக  எழுதவேண்டும்  என்ற எண்ணத்திலிருந்தபோது,  இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தின் செறிவு குறையட்டும் சந்தித்துப்பேசுவோம் என்று சொன்னார்.

இன்னமும் அந்த வைரஸின் அச்சுறுத்தல் முடிவுக்கு வராமலிருக்கும் இக்காலப்பகுதியில்,  நண்பர் சபேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி செவிக்கு எட்டி மிகவும் வருந்தினேன்.
இச்செய்தியை முதலில் என்னுடன் பகிர்ந்து கொண்ட நண்பர்கள்      “ சுந்தர்  “ சுந்தரமூர்த்தி,  மற்றும் நடேசன் ஆகியோரைத் தொடர்ந்து சட்டத்தரணி ரவீந்திரன் மற்றும் எழுத்தாளர் பாடும்மீன் சிறிகந்தராசா ஆகியோருடனும் பரஸ்பரம் சபேசனின் உடல் நலம் பற்றி விசாரித்துக்கொண்டோம்.
சட்டத்தரணி ரவீந்திரன் அவர்கள் தமது மனைவியாரின் உறவு முறையிலும் சபேசனை நன்கு அறிந்தவர். அண்மைக்காலத்தில்  சமூக இடைவெளியை பேணல் வேண்டும் என்ற அறிவுறுத்தலினால்,  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சபேசனை நேரில் சென்று பார்க்கமுடியாத இக்கட்டான நிலையையும் கடக்க நேர்ந்துள்ளது.
எனினும் எங்கள் சட்டத்தரணி ரவி அண்ணன் அவர்கள் தமது புதல்வர் ஆரூரணை மருத்துவமனைக்கு அனுப்பி சபேசனின் உடல்  நலனை விசாரித்தறிந்து எம்முடன் தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -14 ஈழத்து பேனா மன்னர்கள் தொடரில்… என்னை விதந்து எழுதிய “ நடமாடும் நூலகம் “ இரசிகமணி கனகசெந்திநாதன்



யாழ்ப்பாணத்தில்  ஈழகேசரி என்ற பெயரில் ஒரு பத்திரிகை 1930 களில் வெளிவந்திருப்பது உங்களுக்குத் தெரியுமா..?  மூத்த தலைமுறையினர் அறிந்திருக்கக்கூடும். அதன் ஆசிரியராக இருந்தவர் நா. பொன்னையா என்ற அன்பர். குரும்பசிட்டியைச் சேர்ந்தவர்.  
1955 ஆம் ஆண்டில் ஒருநாள் எனது பெயருக்கு இரண்டு ஈழகேசரி பத்திரிகை பிரதிகள் தபாலில் வந்தன. வழக்கத்தில் அதில் நான் சிறுகதையோ அல்லது கவிதையோ எழுதியிருந்தால்தான் அவ்வாறு பிரதி அனுப்புவார்கள்.
ஆனால், அந்த வாரம் அவ்வாறு நான் அந்தப்பத்திரிகையில் எழுதியதாக  எனக்கு நினைவில் இல்லை. தற்செயலாக அதனை அனுப்பியிருக்கலாம் என எனது மனதை சமாதானஞ் செய்துகொண்டு, தபாலில் வந்த ஈழகேசரி பத்திரிகை பிரதிகளை பிரித்துப்பார்க்கின்றேன்.
அதில்  நான் கண்ட கட்டுரைகளில் ஒன்று என்னைப் பிரமிக்கச் செய்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு மீண்டும் வாசித்தேன்.
கரவைக்கவி கந்தப்பனார் என்னும் எழுத்தாளர்  “ஈழத்துப்பேனா மன்னர்கள்  “ என்ற தொடரில் தமது 39 ஆவது கட்டுரையை எழுதியிருந்தார். என்னைப்பற்றிய கட்டுரை அது. பேரார்வத்தோடு அக்கட்டுரையை  வாசித்தேன். அதில் இருந்தது இதோ ஒரு பகுதி:
       “ புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
                  பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
     மெத்த வளருது மேற்கே – அந்த
                மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
          சொல்லவுங் கூடுவதில்லை. – அதைச்
       சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழ் இனிச் சாகும் – அந்த
      மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்
 என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ !
         இந்த வசையெனக் கெய்திட லாமோ
  சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்
          செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !

பெண்குழந்தை - கார்த்திகா கணேசர்

.




  அண்மையில் கேட்ட செய்தி இது. இந்திய பெரிய நகரங்களான மும்பையிலும் டெல்லியிலும் குழந்தைகளின் பிறப்பு விகிதாச்சாரத்தில் ஆண் குழந்தைகளின் விகிதமே அதிகமாகவும் பெண்குழந்தைளின் விகிதம் குறைந்துமே காணப்படுகிறது. இதனால் வருங்காலத்தில் பெண்கள் பற்றாக்குறையால் சமூகம் பல பிரச்சனைகளை எதிர்நோக்கவேண்டிவரும். பெண் குழந்தைகளின் குறைந்த பிறப்புவிகிதம் இயற்கையாக ஏற்பட்டதா? இல்லை, தற்போதைய மருத்துவத்தில் குழந்தை உருவாகி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தை நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளதா என அறிய scanning மூலம் அறியும் பரிசோதனையில் குழந்தை ஆணா பெண்ணா எனவும் தெரியவரும். பெண் குழந்தை என தெரிய வந்ததும் பல பெற்றோர் பெண் குழந்தை வேண்டாம் என கருக்கலைப்பு செய்துவிடுகிறார்கள்.

  ஏன் பெண் குழந்தைகள் விரும்பப்படுவதில்லை? கவிஞர்களும் ஓவியர்களும் பெண்ணின் அழகை வர்ணிக்கிறார்கள். அழகான பெண்களின் படங்களை கவர்ச்சிகரமாக விளம்பரப் படுத்துகிறார்கள். அப்படி இருக்க, பெண்ணைப் பெற்றெடுக்க ஏன் தயக்கம்? சந்தேகமே இல்லாமல் வருங்காலத்திலே பெண்ணுக்குத் திருமணத்திற்காக சீதனம் என ஒரு பெரிய தொகையை கொடுக்கவேண்டும், அதற்காக பணம் சேர்த்து திருமணம் செய்து வைப்பது பெற்றோருக்கு ஒரு பெரிய பளுவே. அதில் இருந்து நழுவுவதற்கு வழி உண்டானால் அதைக் கையாள்வதற்கு பெற்றோர் ஆகப்போகிறவர் தயார். நான் சென்னையிலே வாழ்ந்த எண்பதுகளில் மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில் பெண் எழுச்சி இயக்கங்கள் இதை வெகுவாக சாடி ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என நடாத்தினார்கள். சில தனியார் மருத்துவமனைகள் கொட்டை எழுத்துகளில் விளம்பரங்கள் செய்தார்கள். நாளைலட்சமாக உருவாகப் போகும் பிரச்சனையை இன்று 1500 உடன் தீர்த்துவிடலாம். பெண் குழந்தை எனக் கண்டறிந்தால் இன்றே கருக்கலைப்பு செய்யுங்கள் போன்ற விளம்பரங்களும் காணப்பட்டன. பெண் எழுச்சி இயக்கங்களின் தூண்டுதல் காரணமாக மாநில அரசுகள் இத்தகைய விளம்பரங்களுக்குத் தடை விதித்தன.