மௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்

.

மௌனம் கலைகிறது..1 ..நடராஜா குருபரன்

மௌனம் கலைகிறது....1 - நடராஜா குருபரன்
வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அடைந்தவற்றையும் அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் மௌனமாகச் சுமந்து திரிந்தேன். நித்திய கண்டமென்றாலும் நீண்டு வாழக்கிடைத்த தவத்தால் மௌனம் கலைகிறேன்.
காலத்தடம் என் நினைவுகளுள் பதித்தவற்றை அதுவே மீண்டும் பறித்துக் கொள்வதற்குள் நினைவுகளைத் தூசிதட்டி பலவேளைகளில் சாம்பல்களையும் தட்டி எடுத்து உங்கள் முன் வைக்க வேண்டிய கடமையை ஒரு ஊடகவியலாளனாக உணர்கிறேன்..
எதைச் சொல்லலாம் எதனைச் சொல்லக் கூடாது என மறுகிக் குறுகிக் கிடந்த நாட்கள் போயின. எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்னும் அறிவின் தடத்தில் வந்து நிற்கிறேன்.
எங்கள் காலத்தின் மௌனம் கலைவது துகிலுரிவது போன்றது. துயர் களைவதற்கான முதல் நிலையாக கலையும் என் மௌனமும், உங்கள் ஆதரவு தொடரும் என்ற துணிவில் வெளிக்கிளம்பும் எதிர் வினைகளுக்காகவும்  நிமிர்கிறேன்.
வழமையான இளமைப்பருவத்தைத் தொலைத்து 80களில் தங்கள் இலட்சியப்பயணத்தைத் தொடங்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்களுள் ஒருவனாக விடுதலைப்போராட்டத்துள் இறங்கிய போது இத்தனை மௌனங்களைச் சுமக்க வேண்டியிருக்கும் என நினைத்திருக்கவில்லை. 
மூன்று தசாப்தங்கள்... ஒவ்வொரு தசாப்தமும் ஒவ்வொரு பரிமாணத்தை கொண்டதாக அமைந்தது ஒன்றும் அதிசயமல்ல.

எண்பதுகள் ( விடுதலை இயக்கங்களின் காலம்)

தமிழீழ மக்கள் விடுதலைக்கழகப் (PLOT) போராளியாக...
இயக்கங்களுக்கிடையிலான முரண்பாடுகளின் பலிக்கடாவாக மரணத்தின் விழிம்புகளைத் தொட்டவனாக...
தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (PLOT) உட்கட்சிப் போராட்டத்தில் ஒருவனாக...
விடுதலைப்புலிகளின் கைதியாக...
இந்திய இராணுவ ஆக்கிரமிப்பில் அகதியாக..
பல்கலைக்கழக மாணவனாக...

தொண்ணூறுகள் (தனிமனித வாழ்வும் இருப்புமான காலம்)

அச்சு ஊடக ஊடகவியலாளராக (சரிநிகர்)..
தனியார் கல்விநிலைய ஆசிரியராக..
அச்சக உரிமையாளராக..

இருபதாம்நூற்றாண்டு (முழு நேர ஊடகவியலாளனான காலம்)

சூரியன் FM இல் வானொலிச் செய்தியாளனாக..

2000 ஆண்டில் வானொலிச் செய்தியாளனாகிய எனக்கு, அக்காலப்பகுதியில் தொடங்கிய இலங்கைஅரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளின் செய்திசேகரிப்பாளனாகும் வாய்ப்புக்கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால் எனது முயற்சியினால் உருவான வாய்ப்பது.
* டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளின் மகாநாடு
* இலங்கைப் பிரதமர் றணில் விக்கிரமசிங்கவின் வெள்ளை மாளிகை விஜயம் 
* பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கான விஜயம் 

என்பவற்றின் போது செய்தி சேகரிப்பாளனாக இருந்தேன்.

2006ல் கொழும்பில் நான் 'இனம்தெரியாதோரால்' கடத்தப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த தொடர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக 2007ன் இறுதிப் பகுதியில் பிரித்தானியாவுக்குப் புலம்பெயர நேர்ந்தது. உடல் பெயர்ந்தபோதும் உள்ளம் பெயரவில்லை. இன்று உலகத் தமிழ் ஊடக வலையமைப்பின் (GLOBAL TAMIL MEDIA NET WORK) பணிப்பாளராக நமக்குத் தொழில் ஊடகமானது. 
இயக்க காலம், தனிமனித இருப்புக்கானகாலம், ஊடகக்காலம் என நீளும் கட்டங்களைத் தாண்டி வந்த என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பலதை விழுங்கவும் சிலதை மெல்லவும் ஒன்றிரண்டை மட்டுமே பேசவும் முடிந்தது. 
என்னுடையது மட்டுமல்ல கடந்த மூன்று தசாப்தத்தின் தமிழர் வாழ்வின் பல்வேறு கூறுகளைச் சேர்ந்த அனுபவங்களும் பேசப்படவேண்டும்.  தங்களுடைய மௌனங்களைக் கலைக்கத் துணிபவர்களுக்கு ஆதரவாக துணையாக என் நீண்ட மௌனமும் கலைகிறது... தொடராக நீள்கிறது...

(காலப்பொருத்தம் கருதி 2000 ஆண்டுக்குப் பின்னான அனுபவங்களில் தொடங்கிப்பின் எண்பது தொண்ணூறுகளுக்குச் செல்லலாம் என நினைக்கிறேன்)

இரண்டாயிரமாம் ஆண்டு (ஊடகக்காலம்)

2002ஆம் ஆண்டு இலங்கையின் அரசியலில் பல திருப்பங்களை ஏற்படுத்திய ஆண்டு.  இலங்கையின் இரண்டாம் குடியரசு யாப்பு உருவாக்கத்தின் பின் 22 வருட ஆட்சியில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஒரு கட்சியின் தலைவராகவும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்று பிரதமராக பிறிதொரு கட்சியின் தலைவரும் தெரிவு செய்யப்பட்ட ஒரு முக்கிய ஆண்டு.
இந்த ஆண்டில்தான் இலங்கையின் இரண்டு தசாப்தத்திற்கு மேலாக இடம்பெற்ற ஆயுத மோதல் நீண்டதொரு சமாதானத்திற்காக ஓய்வுக்கும் வந்தது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பிரதமராக இருந்த றணில் விக்கிரமசிங்கவும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் சமாதான உடன்படிக்கையில் கையொப்பம் இட்டதும் 2002ஆம் ஆண்டுதான். 
இந்த ஒப்பந்தத்துடன் நோர்வேயின் மத்தியஸ்த்தில் இலங்கைக்கு வெளியில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. இது இலங்கை அரசியலில் மட்டுமல்ல எனது வாழ்விலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. இலங்கையின் அரசியல் எல்லைக்குள் மட்டுமே குறுகி இருந்த என் பார்வை உலக அளவில் விரிவடைவதற்கும் ராஜதந்திர மட்டத்திலும், சர்வதேச ஊடக அமைப்புகள் மட்டத்திலும் பல்வேறு தொடர்புகள் கிடைப்பதற்கும் இந்தச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் அனைத்திலுமே செய்தியாளனாக கலந்து கொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது காரணமாகியது.
2000 ஆண்டில் சூரியன் FM இல் ஒரு வருட ஒப்பந்தத்தில் செய்தி ஆசிரியராக இணைந்ததுடன் என்வாழ்வு முன்னரை விடவும் சுவாரஸ்யமானதாகவும் சவால்கள் நிறைந்ததாகவும் மாறியது. விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசபடையினருக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் மக்களின் மனதில் நிலையான இடத்தைப் பிடித்திருந்த இலத்திரனியல் ஊடகமான சூரியன் FM இல் இணைந்தமை என் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஆகியது. ஏற்கனவே அச்சு ஊடகத்தில் பணியாற்றிய அனுபவம் இருந்த போதும் இலத்திரனியல் ஊடகப் பணியின் ஆரம்பம் ஒரு புதிய சவாலாகவே இருந்தது.
சூரியனில் இணைந்து 3 ஆவது நாள் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் தலைவரும் பிரபல சட்டத்தரணியுமான குமார் பொன்னம்பலம் வெள்ளவத்தை விவேகானந்த வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த செய்தி எனது நண்பரும் முச்சக்கர வண்டிச் சாரதியுமான காமினி மூலமாக எனது கையடக்கத் தொலைபேசிக்கு உடனடியாகவே வர திரு பொன்னம்பலம் அவர்கள் சுடப்பட்டு ஐந்து நிமிடங்களுக்குள் சூரியன் FM ல் அது உடனடிச் செய்தியாக ( Breaking News ) ஒலிபரப்பாகியது. இந்தச் செய்தி மூலமாகவே தமது தந்தை சுடப்பட்ட செய்தியை அவரது மகன் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் மகளும் மனைவியும் அறிந்தனர். 
இந்தச் சம்பவம் நான் வேலைக்குச் சேர்ந்து மூன்று நாட்களே ஆகியிருந்த போதும் சூரியன் FM நிறுவனம் என்மீது கவனம் கொள்வதற்கான காரணமாகவும் அமைந்தது. (சூரியக் குடும்பத்தின் வாழ்வுக் காலம் குறித்து எனது கடத்தலும் தொடர் உயிர் அச்சுறுத்தலும் என்ற தனியான ஒரு பதிவில் பார்ப்போம்.)

இது போன்ற பல முக்கிய செய்தி சேகரிப்புக்கள் உடனடிச் செய்திகள் காரணமாக ஒரு ஊடகவியலாளனாக எனது பெறுமானம் அதிகரித்தது. எண்பதுகளில் தொடங்கிய எனது அரசியல் வாழ்வு எனக்களித்த எல்லாவிதமான இழப்புக்களுக்கும் நித்திய கண்டங்களுக்கும் பிரதியுபகாரமாக எனக்கொன்றை விட்டுச்சென்றிந்தது. அதுதான் விலைமதிக்க முடியாத அரசியல் மற்றும் தனிமனிதத் தொடர்புகள்.
சமூகத்தின் சகல மட்டங்களிலும் எனக்கிருந்த இந்தத் தொடர்புகள் எனது ஊடகச் செயற்பாடுகளுக்கு வலுச்சேர்த்தன. இந்த வலு என்னை சூரியனுள் பொறுப்பும் கவனமும் நிறைந்த தமிழ்ச் செய்திப்பிரிவின் பொறுப்பாளர் என்ற உயர் நிலைக்கு இட்டுச்சென்றது. இதன்வழி அரசு-புலிகள் சமாதானப்பேச்சு வார்த்தைகளில் ஊடகவியலாளனாகக் கலந்துகொள்ளும் வாய்ப்புத்  தோன்றுகிறது.

2000ம் ஆண்டுகளில் எமது வானொலி நிறுவனம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒரு மெல்லியதான நெருக்கத்தைக் கொண்டிருந்தது. அந்த நெருக்கமும் ஐக்கியதேசியக் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் சிலருடன் எனக்கு இருந்த தொடர்பும்,  சமாதானப் பேச்சுக்கள் அனைத்திலும் செய்தியாளனாக கலந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தின. பிரதானமாக முன்னாள் பிரதமர் றணில் விக்கிரமசிங்கவின் அமரிக்க வெள்ளை மாளிகை விஜயம், பிரித்தானிய பிரதமர் ரொனிபிளையருடனான சந்திப்பு போன்றவற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிடைப்பதற்கு அவை முக்கிய காரணமாகின.
கூடவே 2003 நவம்பருக்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த மூன்று கட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் குறித்த செய்தி வழங்கல் மூலம் தமிழ்வானொலி கேட்போர் மத்தியில் ஒரு கவனிப்பை எமது வானொலியால் ஏற்படுத்த முடிந்தமையால் எமது நிறுவனமும் எனக்கு முழுமையான ஆதரவை வழங்கியது. 
இவையே வெள்ளை மாளிகைக்கு சென்ற றணிலின் பயணத்தில் நான் இணைந்து கொள்ளக் கிடைத்தமைக்கான பின்னணிகள்.
றணில் விக்கிரமசிங்கவின் அமரிக்க வெள்ளைமாளிகை விஜயமும் மறைக்கப்பட்ட உண்மைகளும் 
அண்மைய நாட்களில் விக்கிலீக்ஸில் ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் றணில் விக்கிரமசிங்க, அவரது முன்னைய அரசாங்கம், முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் முதலானோர் குறித்துப் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாகச் சமாதான காலத்தில் ஐக்கியதேசியக் கட்சி அரசாங்கத்தினதும் அதன் முக்கிய தலைவர்களதும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி வருகிறது. ஆனால் அமெரிக்க அரசாங்கத்திற்கும் அதன் உலகளாவிய தூதரகங்களுக்கும் இடையில் கேபிள் ஊடாக இடம்பெற்ற தகவல் பரிமாற்றங்களையே விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்துகிறது. அதற்கு அப்பாலும் நேரடியாக இடம்பெற்ற சந்திப்புக்கள் அதன்போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றிய அன்றைய காலத்தின் திடுக்கிடும் தகவல்கள் பற்றி அதிகம் வெளிவரவில்லை எனவே நினைக்கிறேன். அதனால் இப்போது பரபரப்பாக பேசப்படும் விடயங்களில் தொடங்கி பின்னோக்கிச் செல்லலாம் என நினைக்கிறேன்.
அன்று செய்தி சேகரிப்பிற்குச் சென்றவர்களில் ஒருவர் மூத்த முஸ்லீம் ஊடகவியலாளரான அமீன் மற்றயது நான். நாமிருவர் மட்டுமே தமிழ்பேசும் ஊடகவியலாளர்கள். சுட்டுக்கொல்லப்பட்ட லசந்தவிக்கிரமதுங்க உள்ளிட்ட பல சிங்கள ஊடகவியலாளர்களும் அன்று வந்திருந்தனர். அமீன் லேக்கவுஸில் பணிபுரிந்ததால் அவர்குறித்து எவரும் ஐயம் கொள்ள வில்லை. ஆனால் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் செய்தியாளராக கலந்துகொண்ட என் மீது சிங்கள ஊடகவியலாளர்கள் மத்தியில் சந்தேகம் இருந்தது. றணிலின் அமரிக்க விஜயம் குறித்து அங்கு மேற்கொள்ளப்பட்ட இரகசிய உடன்படிக்கைகள் குறித்து தகவல் வெளிச் சென்றால் சமாதானப் பேச்சில் தாக்கம் ஏற்படுத்தும் என அவர்கள் ஐயுற்றிருந்தார்கள். அதனால் பல முக்கிய சந்திப்புக்களுக்கு தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டனர்.
எனினும் பின்னர் அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் விடுதியில் வந்து உரையாடும் போது கசியும் விடயங்கள் மற்றும் முக்கிய தகவல்கள் மனதில் பதிவு செய்து கொள்ளக் கிடைத்தன. ஆயினும் அந்தப் பதிவுகைளை இப்படி தொடராக எழுத வேண்டும் என்ற நினைப்போ நோக்கமோ அன்று என்மனதில் இல்லாததனால் திகதி வாரியாகவோ அல்லது ஒளிப்படத் தொனுப்பாகவோ அவற்றை பேணத் தவறிவிட்ட துர்பாக்கியத்தை நினைக்கும் போது மனது வலிக்கிறது. என்றாலும் இயன்றவரை மனதுள் உறைந்திருக்கும் பழைய நினைவுகளை மீட்கிறேன்.
அந்த நினைவுகள்,  மௌனத்தை கலைக்கும் எனது அடுத்த பதிவில் 
மகிந்த ராஜபக்ஸ அன்றன்றே கொல்வார் றணில் நின்று கொல்வார்...!. என்பதாக தொடரும்.... 
நடராஜா குருபரன்

மௌனம் கலைகிறது....2 - நடராஜா குருபரன்


மகிந்த ராஜபக்ஸ அன்றன்றே கொல்வார் றணில் நின்று கொல்வார்.
மௌனம் கலைகிறது....2 - நடராஜா குருபரன்

ஏறத்தாழ 12 வருடங்களுக்குப் பின்னோக்கி உங்களை அழைத்துச் செல்கிறேன். மகிழ்ச்சியுடன் அல்ல வலி சுமந்த வேதனையோடு. காரணம் நீண்ட யுத்தத்தின் பின், பெருக்கெடுத்த ரத்தத்தின் பின் ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தை பலருக்கும் நின்மதிப் பெருமூச்சை கொடுத்தது. ஆனால் அது கானல் நீராக அமைதிக்குப் பிந்தைய சுனாமியாக மாறும் என பெரும்பான்மையோர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நிலவிய அமைதிக்குப் பின்னால் சம்பந்தப்பட்ட இருதரப்பினருமே திரைமறைவில் எதிர்மறையான செயற்பாடுகளையே மேற்கொண்டனர். அந்த வகையில் சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பித்ததோடு றணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் சர்வதேச காய்நகர்த்தல்களும் ஆரம்பித்திருந்தன. இந்த புதிய அத்தியாயத்தில் நானும் மெதுவாக உலகைநோக்கி ஒரு செய்தி சேகரிப்பாளனாக நகர்ந்தேன். அதில் மிகப் பிரதானமானது அமெரிக்க வெள்ளை மாளிகை விஜயம்.
 2001 டிசம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் றணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசிய முன்னணிக் கூட்டு 109 ஆசனங்களைப் பெற்றது. ஆட்சியில் இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் 77 ஆசனங்களையே பெற்றது. 
றணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசிய முன்னணி கூடவே முஸ்லீம் காங்கிரசின் 5 ஆசனங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 ஆசனங்கள் என  மேலதிக ஆதரவைப் பெற்றுக் கொண்டு இலங்கையின் சட்டவாக்க சபையான பாராளுமன்றத்தைக் கைப்பற்றியது. முன்னர் கூறிய படிக்கு இலங்கையின் வரலாற்றில் சனாதிபதி ஒரு கட்சியைச் சேர்ந்தவராக இருக்கையில் பாராளுமன்றம் இன்னொரு கட்சியின் ஆதிக்கத்தின் கீழ் வந்த நிலைமை தோன்றியது. 
 2002 பெப்ரவரியில் அரசாங்கத்தாலும் விடுதலைப் புலிகளாலும் யுத்தநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இலங்கையில் அமைதிக்கான ஆரம்பத்தை ஏற்படுத்திய பெருமையிலும் சட்டவாக்க அதிகாரத்தைக் கைப்பற்றிய மகிழ்வுடனும் றணில் தனது மாமனாரின் வழியைப் பின்பற்றத் தொடங்கினார். தனது திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் றணில் 2002 யூலையிலேயே உடனடியாக அமெரிக்கா பயணித்தார். அங்கு ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்சை சந்தித்ததோடு அந்நாட்டின் உயர் மட்ட அதிகாரிகளையும் சந்தித்து உரையாடினார். 
சிங்கப்பூர், தென் கொரியா போல் இலங்கையை மாற்றுவேன் எனக் கூறி அமெரிக்கா மற்றும் மேலைத்தேய சார்பு நிலை எடுத்துக்கொண்டு ஆசியாவில் குறிப்பாக தென்னாசியாவில் பலம்பொருந்திய வல்லரசாக இருந்த இந்தியாவை ஆட்சி செய்த உலகின் பலம் பொருந்திய சீமாட்டி என வர்ணிக்கப்பட்ட முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியையே பகைத்துக்கொண்டு சார்க் அமைப்பில் இருந்து கோலுன்றிப் பாய்ந்து ஆசியான் அமைப்பில் இணைய முற்பட்ட ஜே.ஆர் ஜேவர்த்தனா வழி மருமகன் றணிலும் அமெரிக்காவுடன் கைகோர்த்தார். 
இதுகுறித்து அமெரிக்க காங்கிரசிற்காக அந்நாட்டின் பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவரினால் தயாரிக்கப்பட்ட   அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.*1
1984 இற்குப் பிற்பாடு (18 வருடங்களின் பின்) அமெரிக்காவுக்கு மிக முக்கியமான விஜயத்தை மேற்கொண்ட இலங்கையின் முதல் தலைவர் றணில் என அமெரிக்கா அவருக்கு புகழ்மாலை அணிவித்தது.
இந்த விஜயத்தின் போது இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீள கட்டியெழுப்புவது என்ற முடிவுக்கு ஜோர்ஜ்புஸ் தலைமையிலான அமெரிக்க அரசாங்கமும் றணில் தலைமையிலான இலங்கை அரசாங்கமும் முடிவுக்கு வந்தன. 
அதன்படி பாதுகாப்பு, கல்வி, வர்த்தகம், நீதித்துறை மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்களுக்கு அமரிக்கா முழு உதவிகளையும் வழங்கும் எனத் தெரிவித்திருந்தது. 
உடனடியாகவே 2002 செப்டம்பர் மாதம் அமெரிக்க  இராஜாங்கத் திணைக்களத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் இணைப்பாளர் ரெயிலர் தலைமையில் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் விசேட ஆய்வுக் குழு ஒன்று இலங்கையில் தரையிறங்கியது.
இந்தக்குழு புலனாய்வு, சட்ட அமுலாக்கம், பயங்கரவாதத்திற்கு எதிரான சட்ட மற்றும் இராஜதந்திர முயற்சிகள் குறித்து எவ்வாறு இணைந்து செயற்படுவது என்பது பற்றி இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினருடன் விசேட கலந்துரையாடல்களை நடத்தியது.
முடிவில் 2003 ஜனவரிக்கும் மார்ச்சிற்கும் இடையில் இருநாடுகளும் இணைந்து ஆயுதப் பரிவர்த்தனை மற்றும் மருத்துவ உத்திகளில் கவனம் செலுத்துதல் உள்ளிட்ட ஒன்பது கூட்டு இராணுவப் பயிற்சிகளிலும் ஈடுபட்டன. 
"ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவிற்கு சார்பானவர்" என விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலை இங்கு நினைவு கூறலாம். இத் தகவல் நான் இங்கு குறிப்பிடும் விடயங்களுக்கு வலுச் சேர்ப்பதாக அமையும் என நினைக்கிறேன்.
1970 மற்றும் 1980 களில் இலங்கையை ஆட்சி செய்த ஜே.ஆர்.ஜயவர்தன அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வந்தார். ஜே.ஆரை இடதுசாரி தரப்பினர் யான்கீ என அழைத்தனர், யான்கீ என்றால் அமெரிக்கப் பிரஜை என்று பொருள். 
மாமனாரான முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவைப் போன்றே ரணிலும் அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதில் அதிக அக்கறை செலுத்துவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர். றணில் நீண்ட காலமாக அமெரிக்காவுடன் உறவுகளைப் பேணி வருவதாகவும், அது அவர்களது குடும்ப வழக்கம் எனவும் தூதரக அதிகாரிகள் விபரித்துள்ளனர்.
2003ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி அமெரிக்கத் தூதுவர் ஆஷ்லி வில்ஸ் அனுப்பி வைத்த குறிப்பில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
செல்வந்த வர்த்தகக் குடும்பத்தில் பிறந்த ரணில் விக்ரமசிங்க, சுதந்திரமான சந்தை நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டவர் எனவும், சோசலிச கொள்கைகளில் நம்பிக்கையற்றவர் எனவும் ஆஷ்லி வில்ஸ் விபரித்துள்ளார்.
மேலும் அமெரிக்க அரசியல் மற்றும் வரலாறு பற்றி ரணில் விக்ரமசிங்கவிற்கு தெளிவு காணப்படுகின்றது எனவும் அமெரிக்க சிவில் யுத்தம், அமெரிக்க இராணுவ வரலாறு மற்றும் அரசாங்க நிர்வாகம் போன்றவை தொடர்பில் கற்றறிந்து கொண்டுள்ளார் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்த சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம் குறிப்பாக அமெரிக்காவின் ஒத்துழைப்பு தேவை என்ற நிலைப்பாட்டில் ரணில் விக்ரமசிங்க இருந்தார் எனவும் அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
றணிலின் அமெரிக்க விசுவாசம் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரகத்தின் றணில் பற்றிய நற்சான்றிதழ்கள் பரிந்துரைகள் மற்றும் றணில் விக்கிரமசிங்கவின் முதலாவது விஜயத்தின்போது ஏற்பட்ட பரஸ்பர புரிந்துணர்வு என்பன காரணமாக 2003ல் விசேடமான விருந்தாளியாக அமெரிக்காவுக்கு மீண்டும் றணில் ஜோர்ஜ் புஸ்சினால் அழைக்கப்பட்டார். 
இவ்வாறானதொரு உறுதியான அடித்தளத்தை அமைத்துக்கொண்டே றணில் பிரபாகரனுடன் பேசத் தொடங்கியிருந்தார். 
இந்தப்பேச்சு வார்த்தைகள் ஆறுகட்டங்களைக் கொண்டிருந்தன. றணில் இரண்டாவது முறை அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டபோது ஏற்கனவே விடுதலைப்புலிகளுடனான 6 கட்டப்பேச்சு வார்த்தைகள் முடிவடைந்து விட்டிருந்தன என்பதையும் இங்கு நினைவு கூரவேண்டும். 
முதலாம் கட்டப் பேச்சுவார்த்தை
2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதியில் இருந்து 18ஆம் திகதிவரை தாய்லாந்தின் கடற்படை தளம் என்று வர்ணிக்கப்பட்ட சொன்பூரி நகரான பட்டாயாவில் நிகழ்ந்தது
இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை 
2002 அக்டோபர் 31ஆம் திகதியில் இருந்து நவம்பர் 02ஆம் திகதிவரை தாய்லாந்தின் நாக்கோம்பத்தோம் றோஸ்காடின் விடுதியில் இடம்பெற்றது. 
மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை
மத்தியஸ்த்த நாடான நோர்வேயின் ஒஸ்லோவில் சாஸ்பிளாஸா விடுதியில் 2002 டிசம்பர் 02ஆம் திகதியில் இருந்து 05ஆம் திகதிவரை இடம்பெற்றது. 
(இந்தக் கட்டத்தில் தான் கிழக்கின் சிம்மசொப்பனம் என வர்ணிக்கப்பட்ட கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளீதரனுக்கும் புலிகளின் தலைமைக்கும் இடையில் நீறுபபூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருந்த முரண்பாடுகள் வெளிக்கிளம்ப ஆரம்பித்தன. இவ்முரண்பாட்டில் றணிலின் அரசாங்கம் எவ்வாறு காய்களை நகர்த்தியது என்பது குறித்த திடுக்கிடும் தகவல்கள் இனிவரும் பகுதிகளில் விபரிக்கப்படும்)
நான்காம் கட்டப் பேச்சுவார்த்தை
2003 ஜனவரி 2ஆம் திகதியில் இருந்து 5ஆம் திகதி வரை மீண்டும் தாய்லாந்தின் நாக்கொம்பத்தோம் றோஸ்காடின் விடுதியில் இடம்பெற்றது.
ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தை
2003 பெப்ரவரி 07ஆம் திகதியில் இருந்து 8ஆம் திகதி வரை ஜேர்மனின் பேர்ளின் நகரில் அங்குள்ள நோர்வேத் தூதரகத்தில் இடம்பெற்றது.
ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தை 
2003 மார்ச் 18ஆம் திகதியில் இருந்து 21ஆம் திகதி வரை இணைத் தலைமை நாடுகளில் ஒன்றான யப்பானின் கொக்கனே நகரில் இடம்பெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் செய்தி சேகரிப்பாளனாக நான் கலந்து கொண்டிருந்தேன்.
ஒரு புறத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டு மறு புறத்தில் ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தின் தலைவர் றணில் விக்கிரமசிங்க புலிகளுக்கு எதிரான சர்வதேச வலைப்பின்னலை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
ஆறு கட்டப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த போது யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் இருதரப்பாலும் முன்வைக்கப்பட்ட நிலையில் புலிகள் குறித்து இராஜதந்திர ரீதியாக சர்வதேச அளவில் பாரிய எதிர்ப் பிரச்சாரங்களை மிக நுணுக்கமாக றணில் மேற்கொண்டார்.  அதன் ஒரு பகுதியாகவே றணிலின் இரண்டாம் கட்ட அமெரிக்க விஜயத்தின் போது அமெரிக்காவுடனான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த இடத்தில் அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலர் ஆமிரேஜ் குறிப்பிட்ட விடயம் கவனிக்கத்தக்கது.*2
1997ல் அமெரிக்கா சர்வதேசப் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் புலிகளை இணைத்தது. எனினும் 23 பெப்ரவரி 2003 ல் அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலர் ஆமிரேஜ் கூறும் பொழுது
"விடுதலைப்புலிகள் தமது கடந்தகாலப் பயங்கரவாத உத்திகளுக்கு அப்பால் நகர்ந்து தமது நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு,  ஒரு அரசியல் தீர்வுக்கும் சமாதானத்திற்குமான பற்றுறுதியுடன் செயற்படுவதற்கான விருப்பையும் நடத்தையும் வெளிப்படுத்தினால் வெளிநாட்டு பயங்கரவாத நிறுவனங்களின் பட்டியலில் இருந்து விடுதலை புலிகள் அமைப்பை அகற்றுவதனைப்பற்றி அமெரிக்கா நிச்சயமாகப் பரிசீலிக்கும்" என்றார். 
எனினும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் ஒரு அரசியல் தீர்வை முன்வைத்த பின்பே வன்முறைகளைக் கைவிட முடியும் எனக் கூறிய புலிகள் அமெரிக்காவினதும் சர்வதேச சமூகத்தினதும் அனைத்து அழைப்புகளையும் நிராகரித்து விட்டனர்.  இதேவேளை பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளின் ஊடாக புலிகளுக்குச் சொந்தமான ஏறத்தாள 4 பில்லியன் டொலர்கள் சர்வதேச அளவில் முடக்கப்பட்டன. இதனால் புலிகள் ஆயுதக் கொள்வனவு உள்ளிட்ட பல இராணுவ நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவைச் சந்தித்தனர்.  என ஆமிரேஜ் குறிப்பிட்டிருந்தார்
உதாரணத்திற்கு - ஆயுதப்போராட்டத்தில் நீண்ட அனுபவத்தைக் கொண்டிருந்த புலிகள் அரசியல் தளத்தில் தம்மீது விரிக்கப்பட்டிருந்த வலையை அறியவில்லை. மேலும் ஒன்ற‌ன் பின் ஒன்றாக புலிகளின் சர்வதேச இராணுவ வழங்கற்பாதைகள் அடைக்கப்பட்டு விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்ட‌ சமிக்கைகளையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சட்ட ரீதியான அதிகாரத்தைக் கொண்ட சர்வதேச அங்கீகாரத்தை கொண்ட அரசாங்கம் ஒன்றையும் ஆயுதம் தாங்கிப் போராடும் அமைப்பு ஒன்றையும் ஒரே தராசில் வைத்து சர்வதேசம் நோக்காது  என்ற யதார்த்தத்தைம் புலிகள் புரிந்திருக்க வேண்டும். மாறாக சமாதானகாலத்தில் மாற்றுக் கருத்துடையோரை இலக்கு வைத்து அவர்களை கொன்றொழித்தமை இணைத்தலைமை நாடுகள் எனக் கூறப்பட்ட நோர்வே, யப்பான், அமரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை பெரிதும் சீற்றம் கொள்ள வைத்தன. இது போன்று பலவிடயங்களை கூறமுடியும் எனினும் அவை சமாதானப் பேச்சுக்கள் குறித்து எழுதும் போது விரிவாக பார்க்கலாம்.
இதேவேளை புலிகளின் சமாதான கால நடவடிக்கைகளை மட்டும் உற்று நோக்கி புலிகள் தொடர்பான இவ்வாறான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்கவில்லை.  றணில் விக்கிரமசிங்கவின் நேரகாலமறிந்த இராஜதந்திரமும் இங்கு முக்கிய பங்காற்றியது.  
ஜோர்ஜ் புஷ் கொண்டுவந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போரென்ற புதிய உலக ஒழுங்குக்குள் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்ற  தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போரை ஒழிப்பதற்கான ஒளியைக்கண்ட இராசதந்திரம் றணிலிலுடையது. புலிகளின் சர்வதேச இராணுவ மற்றும் நிதி வலையமைப்புகளை ஒடுக்கிக் கொண்டு புலிகளைப் பேசுவார்த்தைப் பொறிக்குள் திட்டமிட்டு வீழ்த்திய அதி உச்ச ராஜதந்திரி றணில் விக்கிரமசிங்கவே. 
றணிலினால் வீழ்த்தப்பட்டு பொறிக்குள் சிக்கியிருந்த புலிகளையே மகிந்த சகோதரர்களும் சரத்பொன்சேகாவும் அழித்த பின்னர் சிங்களப்பேரினவாதத்தின் மன்னர்கள் என்ற பொன்முடிக்குச் சண்டையிட்டுக் கொண்டார்கள். அதில் மகிந்த மீண்டும் முடி சூட சரத்பொன் சேகா சிறை சென்றார்.
பாவம் றணில் தனது நாட்டுக்கும் பௌத்த பேரினவாதத்திற்கும், சிங்கள மக்களுக்கும் செய்த "சேவையை" அந்த மக்கள் புரிந்து கொள்ள அவகாசமோ சந்தர்ப்பமோ தரப்படவில்லை. 
 பொறிக்குள் வீழ்ந்த புலிகள் அதற்குள் இருந்து மீளவும் றணிலைப் பழிவாங்கவும் 2005 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்காமல் தடுத்தனர். அந்த நடவடிக்கை அவர்களை இன்னும் அதள பாதாளத்துள் தள்ள வழிவகுத்தது.
இலங்கையின் இனப்பிரச்சனையின் மூலகாரணமே இலங்கையில் பலமடைந்திருந்த சிங்களப் பேரினவாதமாகும். மகிந்தவின் பின்னால் திரண்டிருந்த சிங்களப் பேரினவாதத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கையாகவே விடுதலைப் புலிகளின் நிலப்பாடு அமைந்து விட்டது. சனாதிபதியாகும் ரணிலின் கனவு அழிந்தது மட்டுமல்ல மிதவாத சிங்களத் தேசியமும் மெல்ல பலம் அழிக்கப்பட்டு கடும்போக்கு சிங்களப் பேரினவாதம் அதிகாரத்துக்கு வந்த துரதிஷ்டமும் நிகழ்ந்தது.
 புலிகளை அழிப்பதில் ரணில் மற்றும் ராசபக்ஷ இருவருமே திடமாக இருந்தார்கள். ஆனால் இருவரினது வழிமுறைகள் வேறாக இருந்தன. ரணில் சர்வதேச நிலைமைகளைக் கணக்கெடுத்து ராசதந்திர நகர்வுகளை நகர்த்தி புலிகளின் உட்பகைகளுக்கு தூபமிட்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல புலிகளைப் பலவீனப்படுத்தி நின்றறுக்க முற்பட்டார். ராசபஷ்ச சகோதரர்களோ இந்தியாவின் ஆளும் கட்சியாகவிருந்த காங்கிரஸ் கட்சிக்கும் புலிகளுக்கும் இருந்த தீராப்பகை மற்றும் பிராந்தியத்தில் இருந்த சீன இந்திய முரண்பாடுகளின் தன்மைகளைப் புரிந்து கொண்டு கூண்டுக்குள் சிக்கி இருந்த புலியை அன்றே அறுக்க முடிவுசெய்து வெற்றியும் கண்டனர்.   விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே தனது மாவீரர் உரையில் சொன்னது போன்று மகிந்த "யதார்த்தவாதி".
மீண்டும் றணிலுக்கு வருவோம் புலிகளின் போராட்டத்திற்கெதிரான சர்வதேச வலைப்பின்னலை வலுப்படுத்தும் முக்கிய நோக்கத்தைக் கொண்டதாக றணிலின் 2003 நவம்பர் 3தொடக்கம் 5 வரையிலான இரண்டாம் கட்ட அமரிக்க விஜயம் அமைந்தது. இந்த விஜயத்தில் ஐக்கியதேசியக் கட்சிக்கு நெருக்கமான ஊடகவியலாளர்கள் முதலில் இணைக்கப்பட்டார்கள். சன்டே லீடர் லசந்த விக்கிரமதுங்க, ஸான் விஜயதுங்க, தினித், மற்றும் இன்னும் பல சிங்கள ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அமீன் லேக்கவுஸ் நிறுவனத்தின் தமிழ்ப் பிரிவின் முக்கியஸ்த்தராக இருந்ததனால் அழைக்கப்பட்டார்.  முழுச் செலவுகளையும் அரசாங்கமே  ஏற்றுக்கொண்டு தமக்குச் சார்பான ஊடகவியலாளர்களை அழைத்துச்சென்ற அந்த முதலாவது அழைப்பில் நான் சேர்க்கப்படவில்லை. எனினும் எனது தனிப்பட்ட தொடர்புகளின் ஊடாக ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தின் ஊடகப்பிரிவை அணுகியபோது, அமெரிக்க விசாவுக்கான பணம் மற்றும் தங்குவதற்கான விடுதி வசதி என்பன மட்டுமே அரசாங்கத்தால் தரப்படும் எனவும் பயணத்திற்கான ரிக்கற் செலவை எமது ஊடக நிறுவனமே பொறுப்பெடுக்க வேண்டும் எனவும் ஊடகப்பிரிவு கூறிவிட்டது. எனது நிறுவனமோ ஆறு கட்டப் பேச்சுவார்த்தைகளையும் அறிக்கையிடுவதற்கான அனுமதியையும் தொலைபேசிக் கட்டணச் செலவையும் மட்டுமே தருவதென்று தெளிவுபடுத்தியிருந்தது. இந்தப் பயணச் செலவை யார் தருவது...? கோட்டையில் இருந்து கொள்ளுப்பிட்டிக்குப் போவதைப் போன்றதா இந்தப்பயணங்கள்... ஆனாலும் நான் அதிகம் யோசிக்காமல் பயணச்செலவை நானே பொறுப்பெடுப்பதாகக் கூறிவிட்டேன். பயணச்செலவைப் பொறுப்பெடுத்ததால் வந்த துயரக்கதை வேறு.. அது முக்கியமல்ல. (வேண்டுமானால் அதன் சுவாரசியத்தையும் பின்வரும் தொடர்களில் பார்க்கலாம்.) புறப்படுவதற்கு இரண்டு நாட்கள் இருக்கையில் தான் கடவுச் சீட்டை அமெரிக்க தூதரகத்தில் ஒப்படைத்தேன். அமெரிக்க தூதரகமும் விரைவாகச் செயற்பட்டு பயண அனுமதியைத் தந்தது. 
முதலாவது பிரிவு ஊடகவியலாளர்கள் அப்போதைய பிரதமர் றணில் விக்கிரமசிங்கவுடன் ஏற்கனவே பயணமாகிவிட்டனர். நான் தனித்து விடப்பட்டிருந்தேன். ஆனால் வாசிங்டன் சென்று அங்கிருந்து அனைவரும் தங்கியிருக்கும் விடுதிக்கு செல்வதற்கான ஒழுங்கை இலங்கை வெளிநாட்டு அமைச்சினூடாக பிரதமரின் ஊடக இணைப்பாளர் செய்திருந்தார்.
வாசிங்டன் சென்று இறங்கியபோது அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகத்தில் இருந்து தூதரக வாகனச் சாரதி  வந்து என்னை அழைத்துச் சென்றார். அழைக்க வந்தவர் முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் டிரோன் பெனான்டோவின் துரத்து உறவினர் என பின்னர் உரையாடலில் தெரிந்துகொண்டேன். அவரது பார்வையில் நான் அரசாங்கத்தின் முக்கியஸ்த்தர் அதனால் விடுதி செல்லும் வரை அதற்குரிய மரியாதைகள் கிடைத்தன அவ்வளவுதான்.
இந்தக்காலக் கட்டத்தில்  அமரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக Devinda R. Subasinghe இருந்தார். அப்போது வெளிநாட்டு ராஜதந்திர சேவையில் இரண்டாம் நிலை அதிகாரியாகவும் தற்போது பிரசில்சிற்கான தூதராகவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாகவும்  இருக்கும் ரவிநாத் ஆரியசிங்கவும் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
றவிநாத் ஆரியசிங்கவுடன் குருபரன்
நான் சென்று சேர்ந்த அடுத்தநாள் முக்கிய சந்திப்புக்கள் தொடங்கின ஆனால் அவை குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கக் கூடாது என்ற "அன்புக்கட்டளை" பிறப்பிக்கப்பட்டது. அரசாங்கத்தின் ஊடகப் பிரிவு வழங்கும் செய்திகளையே நிறுவனங்களுக்கு அனுப்ப முடியும் எனவும் கூறப்பட்டது. சில சிங்கள ஊடகவியலாளர்கள் என்னைப் பார்த்து கிண்டல் செய்வார்கள் இங்கு நடப்பவற்றை குரு புலிகளுக்கு எப்படியாவது அனுப்பிவிடுவார் எனக் கூறுவார்கள்
இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின் முதன் முறையாக அமரிக்காவின் இராசதந்திர மற்றும் இராணுவப் பொருளாதார உள்ளக வட்டத்துள் இலங்கையை அனுமதிக்குமளவுக்கு  இந்த விஜயத்தின் போது அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்பட்டு உடன்பாடு எட்டப்பட்டது. 
"உள்ளக வட்டம்" என்ற பிரிவுக்குள் நுழைகின்ற நாடுகள் அமெரிக்காவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய நாடுகளாகவும் அவற்றின் தலைவர்கள் அமெரிக்காவின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். இவ்வந்தஸ்த்து சுதந்திர இலங்கையில் முதன் முதலில் றணில் விக்கிரமசிங்கவுக்கே கிடைத்தது. இந்த அங்கீகாரம் கிடைக்கப் பெற்ற நாடுகளுக்கே அமெரிக்கா நேரடி மற்றும்  மறைமுக இராணுவ உதவிகளை அதிகபட்ச அளவில் வழங்கும். இராணுவப் பயிற்சி, இராணுவத் தொழில் நுட்பம், புலனாய்வு, மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த விசேட பயிற்சிகள் ஆயுதத் தளபாட விற்பனை இராணுவ மேம்பாட்டுக்கான நேரடி பண உதவி என அனைத்து உதவிகளும் தேவைப்படும் பட்சத்தில் இந்த உள்ளக வட்டத்துள் உள்ள நாடுகளுக்கு வழங்கப்படும். 
அந்த வகையில் இவை தொடர்பான ஒப்பந்தங்களும் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி குறித்த பல ஒப்பந்தங்களும் றணிலின் இந்த விஜயத்தில் அமெரிக்காவில் கைச்சாத்தாகின. றணிலின் அமெரிக்க விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு இராணுவ ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே அமெரிக்கா முக்கியமான யுத்தக் கப்பல் ஒன்றை இலங்கைக்கு வழங்க இணங்கியிருந்தது. அதன்படி 2004 யூன் 24ஆம் திகதி இலங்கையின் கடற்படைத் தளபதி தயாசந்தகிரியிடம் அமரிக்கா உத்தியோகபூர்வமாக கையளித்தது. எனினும் கப்பல் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டதனால் 2005 பெப்ரவரி 19 ஆம் திகதியே இலங்கையை நோக்கி புறப்பட்டது.  றணில் உறுதியாக அமைத்த மேடை எந்த வகையில் மகிந்த சகோதரர்கள் நடனமாட உதவியது என்பதற்கு இது நல்லதோர் உதாரணம்.(*3)
Donation to Sri Lanka
The United States Coast Guard donated Courageous to Sri Lanka on June 24, 2004 and a departure ceremony was held February 19, 2005.She is currently serving the Sri Lankan Navy as P-621 SLNS Samudura.
 
  
USCGC Courageous (WMEC-622)
Career (USCG)
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6b/Ensign_of_the_United_States_Coast_Guard.svg/56px-Ensign_of_the_United_States_Coast_Guard.svg.png
Builder:
American Ship Building Company,Lorain, Ohio
Laid down:
14 March 1966
Launched:
18 March 1967
Commissioned:
19 April 1968
Decommissioned:
19 September 2001
Struck:
June 24, 2004
Fate:
Struck, for delivery to Sri Lanka asSamadura P-621.
இலங்கை அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த றணிலின் இந்த விஜயத்தின் போதே மிக முக்கிமான அதிர்ச்சி ஒன்றை றணிலுக்கு ஏற்படுத்திய்   முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா அவரை நிலைகுலையச் செய்தார்.
நாங்கள் அமரிக்கா சென்று இரண்டாவது அல்லது மூன்றாவது நாள் என நினைக்கிறேன் ஓர் அதிகாலைப் பொழுது எல்லோருடைய விடுதி அறைகளினதும் தொலைபேசிகள் அலறின. உடனடியாக பிரதமர் றணில் விக்ரமசிங்கவின் அறைக்கு வரும்படி கூறப்பட்டது. நாங்கள் மூன்றாவது மாடியில் தங்கியிருந்தோம். றணிலும் அவரது உதவியாளர்களும் இரண்டாவது மாடியில் தங்கியிருந்தனர். நாங்கள் விழுந்தடித்துச் சென்ற போது றணில் விக்கிரமசிங்க இரவு உடையில் நாற்காலியில் அமர்ந்திருந்தார். ஏனைய அமைச்சர்களான மிலிந்த மற்றும் ஜீ.எல் பீரிஸ் டிரோன் பெனான்டோ உள்ளிட்டவர்களும் அமர்ந்திருந்தனர். 
ஜே.வீபியின் கடுமையான அழுத்தத்தின் காரணமாக தனது அமைச்சரவையில் பிரதானமான தகவல் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சுக்களை சந்திரிக்கா பறித்தெடுத்து விட்டதாக றணில் அறிவித்தார்.*4
அது குறித்து ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கண்டன அறிக்கையை உடன் தயார் செய்து வழங்க உள்ளதாகவும் அதனை உடனடியாக அவரவர் ஊடக நிறுவனங்களுக்கு அறிவிக்கும்படியும் தெரிவித்தார்.
விடுதியில் தங்கியிருந்தவர்களிடையே ஒரு பதட்டம் தொற்றிக்கொண்டது. காரணம் ஆட்சிகள் மாறும்பொழுது அல்லது கவிழும் பொழுது ஆட்சியாளர்களுக்குக் குடைபிடிக்கும் தொண்டர்களின் தலைகளே முதலில் உருளத் தொடங்கும். சந்திரிகாவின் அதிகார ஆட்டத்தில் தங்கள் தலைகள் உருளக்கூடுமோ என்று அவர்கள் விழி பிதுங்கினர்.
இதே வேளையில் இரண்டாம் மாடியில் றணில், லசந்த விக்கிரமதுங்க, மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் சந்திரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிரான அறிக்கையை தயாரிப்பதில் ஈடுபட்டு இருந்தனர்.
லசந்தவே அந்த அறிக்கையை வடிவமைப்பதில் முன்னின்றார்.  இது இலங்கையின் இன்னொரு சாபக்கேட்டை தெளிவாக காட்டியது. ஊடகவியலாளர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடுபவர்களாகவும்,  அரச தலைவர்களின் செயற்பாடுகளில் தனிப்பட்ட முறையில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும், அரசியலின் முக்கிய இடங்களில் செல்வாக்கைக் கொண்டவர் களாகளாகவும்  இருப்பதனை புரிந்துகொள்ள முடிந்தது. கட்சி சார்ந்த ஊடகவியலாளனுக்கும் கட்சி சாரா ஊடகவியலாளனுக்கும் இடையில் இருக்க வேண்டிய வேற்பாடுகளும் ஊடகவியல் அறம் குறித்த கேள்விகளும் அன்று எனக்குள் எழுந்தன. சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழ்த்தேசியம் என்பதனை முன்னிலைப்படுத்தி செய்தி அறிகையிடலை மேற்கொண்ட தமிழ் ஊடகவியலாளர்கள் குறித்தும் இந்தக் கேள்விகள் என்னுள் இருந்தன. இவையாவும் இலங்கைக்கு உண்மையிலும் தேவைப்படுகிற கட்சி சாரா ஊடகவியல் இன்னும் பிரதான நீரோட்டத்தில் கனவாகவே இருக்கிறது என்பதனைப் புலப்படுத்துகின்றன. (இலங்கையின் ஊடகத்துறையை ஆக்கிரமித்திருந்த அரசியல் குறித்தும் அதன் சாபக்க்கேடு குறித்தும் பின்னர் தனியான பகுதியில் பார்ப்போம்)
ஒருவாறு அறிக்கை தயார் செய்யப்பட்டு அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டது. இங்கு இன்னுமொரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்தது. றணில் தனது உதவியாளரை அழைத்து உடனடியாக அமைச்சர் கருஜெயசூரியவுடன் தொடர்புகொள்ளும்படி கூறினார்.  கருஜெயசூரியவுடன் தொடர்பு கொண்டு பங்குச் சந்தையை உடனடியாக இறங்கு முகத்திற்கு நகர்த்துவதற்கான அறிவுறுத்தல்களை முதலீட்டாளர்களுக்கு வழங்கும்படி கட்டளையிட்டார். இதனர்த்தம் பங்குச் சந்தையின் அனேகமான பெரும் முதலீட்டாளர்கள் ஐக்கியதேசியக் கட்சியின் ஆதரவைப் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதே. மறுபுறத்தில் சந்திரிக்காவுக்கும் றணிலுக்குமிடையிலான அதிகாரப்போட்டிக்கு நாட்டின் பொருளாதாரத்தைப் பலிக்கடாவாக்குமளவுக்கு றணில் இறங்கியிருந்தார். அதிகாரப் போட்டியில் அரசியல் வாதிகள் அரசியல் அறத்தைக் கொன்று விடுவது உலகத்தில் ஒன்றும் புதிதில்லை
மறுநாள் தூதரக மட்ட அதிகாரிகள் மத்தியிலும் பீதி நிலவியதை அவதானிக்க முடிந்தது.  சந்திரிக்காவின் அதிரடியில் யார் யார் எல்லாம் வீடு செல்லப் போகிறோமோ தெரியாது என அவர்கள் புலம்பிக் கொண்டிருந்தார்கள். காரணம் அன்றும் சரி இன்றும் சரி இலங்கையின் முக்கியமான அதிகார மையங்களில் வீற்றிருப்பவர்களுள் அனேகமானவர்கள் அரசியல் ரீதியான நியமனங்களுக்கூடாக வந்தவர்களே தவிர வெளிநாட்டு சேவை மற்றும் சிவில் சேவை பரீட்சைகளில் சித்தி அடிப்படையிலோ அனுபவ அடிப்படையிலோ அல்ல தூதரக அதிகாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
 மிக உயர்ந்த எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் அமரிக்கா புறப்பட்ட றணிலை சந்திரிக்கா மேற்கொண்ட அதிர்ச்சி வைத்தியம் நிலைகுலைய வைத்தபோதும் அமெரிக்காவின் உள்வட்டத்துள் நுழைந்த பெருமிதத்துடனும் அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் முக்கியத்துவம் குறித்த மகிழ்வுகளுடனும் றணில்  இலங்கை திரும்பியிருந்தார்.
சர்வதேச வலைப்பின்னலை ஏற்படுத்திப் புலிகளை நாசூக்காக அதற்குள் மடக்கி வைத்த றணில் பிற்பாடு சனாதிபதிக்கனவு தகர்ந்து கட்சியும் பலமிழந்து சிதைந்து வரும் நிலையில் தனக்கு நேர்ந்த துர்ப்பாக்கியத்தை நினைத்தும் வேதனைப்பட்டிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
*1In July 2002, President Bush met with Sri Lankan PM Wickremesinghe at the White House and pledged U.S. support for peace and economic development in Sri Lanka. It was the first visit to Washington by a Sri Lankan leader since 1984. In Colombo in August, Deputy Secretary of State Armitage pledged to “re-energize” bilateral relations through increased cooperation in defense, education, commerce, justice, and human rights. In September, a U.S. defense assessment team was sent to examine the training needs of the Sri Lankan military, and State Department Coordinator for Counterterrorism Taylor went to Colombo to discuss ways to integrate “intelligence, law enforcement, legal and diplomatic efforts against terrorism.” The United States and Sri Lanka held their ninth consecutive joint military exercises from January-March 2003, with training focused on combined arms operations and medical techniques. (Report for Congress 2003)
Bilateral Relations
(*2)The U.S. State Department first designated the LTTE as a Foreign Terrorist Organization in 1997.23 In February 2003, Deputy Secretary of State Armitage reiterated that “if the LTTE can move beyond the terror tactics of the past and make a convincing case through its conduct and its actual actions that it is committed to a political solution and to peace, the United States will certainly consider removing the LTTE from the list of Foreign Terrorist Organizations, as well as any other terrorismrelated designations.” The LTTE continues to reject all calls that it renounce violence, saying it will do so only when “the aspirations of [the Tamil] people are met by a political settlement.”24 The global anti-terrorism campaign, which reportedly has resulted in the international withholding of roughly $4 billion from the LTTE and made it more difficult for the group to acquire weapons, has been cited as a likely factor in the rebel’s decision to enter into peace negotiations. (Report for Congress 2003)
(*3) US Admiral Thomas Collins hands over 
US Coast Guard Vessel “Courageous” to Sri Lanka Navy
Lanka Academic Report, 27 June 2004
"Commander of the Sri Lanka Navy, Vice Admiral Daya Sandagiri ended his visit to the US where the US transferred a 210 foot cutter to the Sri Lanka Navy. During his visit to the US Sandagiri met with Admiral Mike Mullen, Vice Chief of Naval Operations (VCNO) at the Pentagon where the discussions centered on bilateral interests pertaining to the interdiction of illegal arms trafficking, security of the seas and ports, and related naval issues. 
Admiral Mullen stated that Sri Lanka is extremely important in the global security arena due to its unique location in the Indian Ocean. Admiral Sandagiri thanked the VCNO for all assistance accorded to the Sri Lanka Navy, especially in field of training. 
This visit is considered a historic first by a Sri Lankan Armed Forces Commander to the Pentagon. Sandagiri also met with John Bolton, Under Secretary of State for Arms Control and International Security at the Department of State. During his meeting with Deputy Secretary of State Richard Armitage and Assistant Secretary of State for South Asia Ms Christina Rocca at the Department of State, Admiral Sandagiri thanked Armitage for the US decision to transfer the US Coast Guard Cutter to the Sri Lanka Navy to strengthen the country’s ability to protect its sovereignty and territorial integrity. In particular, the capability to interdict illegal arms shipments in a region increasingly was facing multiple threats."
" After handing over the US Coast Guard Vessel “Courageous” to the Sri Lankan Navy Commander Vice Admiral Daya Sandagiri, US Coast Guard Admiral Thomas Collins said that the vessel was now in the hands of ‘true professionals’. 
Speaking at the signing ceremony, which transferred the ownership to Sri Lanka, the US Admiral noted, “The Sri Lankan Navy’s capabilities would be enhanced by this latest acquisition”. He also said “this was an important step in the burgeoning relationship between the two countries”. 
Whilst wishing the Sri Lankan Navy “fair weather and happy tidings” Admiral Collins mentioned that the new Captain of the ship had an enviable task ahead. Sri Lanka Navy Commander Vice Admiral Daya Sandagiri accepted the transfer of the former US Coast Guard 210 foot Cutter “Courageous” at the US Coast Guard Headquarters in Washington DC yesterday. Sri Lankan Ambassador in Washington Devinda R. Subasinghe also attended the handing over ceremony."
*4 The BBC's Anna Horsbrugh-Porter, in the Sri Lankan capital Colombo, reports that most of the country is still in a state of shock over Tuesday's events.
With Prime Minister Ranil Wickramasinghe out of the country and due to meet US President George W Bush in Washington on Wednesday, she says President Kumaratunga appears to be acting quickly while the government is without its leader.
The prime minister, speaking in Washington, has accused the president of bringing Sri Lanka to the verge of "chaos and anarchy".
A cabinet spokesman said that although parliament had been suspended, the government was not in danger of losing its majority in the legislature.
"The government of Ranil Wickremesinghe continues to enjoy the confidence of the vast majority of members of parliament," he said. "We are firmly in control of parliament."
He added that a state of emergency had to be endorsed by parliament within 14 days. However, parliament has been suspended by Mrs Kumaratunga.
Peace talks 'to go ahead'
The state of emergency was imposed almost immediately after a news conference held by President Kumaratunga's chief adviser, Lakshman Kadirgamar.
Mr Kadirgamar said the president had suspended parliament and sacked the information, defence and interior ministers because of the worsening security situation in the country.
The move was not linked to the Tamil Tiger proposals for power-sharing, which were made public four days ago.

President Chandrika Kumaratunga
The president acted while the prime minister was out of the country

"The president has specifically asked me to state that the ceasefire agreement stands, and will stand and there is no question about it," said Mr Kadirgamar.
"The president has no intention of resuming or provoking the resumption of hostilities."
The ceasefire between the government and rebels was brokered by Norwegian mediators and signed in February 2002.
The Sri Lankan Government's chief peace negotiator said it would go ahead with direct talks with the Tamil Tigers despite the political crisis.
G L Peiris said arrangements were being made for a preliminary round of talks with the rebels later this month or early next month.
"There are no changes in our plans and we are going ahead to arrange that preliminary meeting," he told reporters.
'Great haste'
The Tamil Tigers have dropped a demand for independence in favour of regional autonomy.
But President Kumaratunga's Sri Lanka Freedom Party, which is the parliamentary opposition, had expressed concern about their proposals for a self-governing authority in the north-east of the country.
Sri Lankan Foreign Minister Tyronne Fernando told the BBC that Mrs Kumaratunga had misjudged the security situation.
"It appears that the president unfortunately has acted in great haste right at the time when the peace process is gaining momentum," he said.
The United States has warned that the political crisis could damage moves to end the civil war.
A State Department spokesman said Washington firmly supported the Sri Lankan Government's peace efforts, and urged the president and the prime minister to work together.
The European Union has also warned that the sackings could endanger progress in the peace process.
India has expressed "surprise" at the "sudden political developments" in its southern neighbour.
"We hope that the situation does not provoke a constitutional crisis which would impact on the political stability in Sri Lanka and on the ongoing peace process," said a Foreign Ministry spokesman in Delhi. 

மொனம் கலைகிறது - 3 - றணிலின் இராசதந்திரமும் கிழக்கின் உடைவும்:-


Bookmark and Share
நடராஜா குருபரன்
மௌனம் கலைகிறது - 3 - றணிலின் இராசதந்திரமும் கிழக்கின் உடைவும்:-

றணிலினது சனாதிபதியாகும் தனிப்பட்ட கனவு கலைந்தபோதும் அவரது இராச தந்திரம் எவ்வாறு விடுதலைப்புலிகளை ஒடுக்குவதிற் பங்காற்றியது என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.
 
சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குச் சமாந்தரமாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான சர்வதேச வலைப்பின்னலை விரிவாக்கும் நடவடிக்கைகளிலும் றணில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்ததை ஏற்கவே விபரித்திருந்தேன் அக்காலத்தில் றணில் தனது பணிக்கு துணையாக அமெரிக்காவுடன் அப்போது நெருக்கத்தை கொண்டிருந்தவரும் மேலைத்தேச அரசியற் பொருளாதார கொள்கைகளில் மிகுந்த ஈடுபாட்டைக் கொண்டிருந்தவருமான மிலிந்த மொறகொடவையும் இணைத்துக் கொண்டார்.
 
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்காவின் காலத்தில் விடுதலைப் புலிகளை சர்வதேச ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் வீழ்த்துவதில் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கண்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் விட்ட இடத்தில் இருந்து றணிலின் ராஜதந்திர நகர்வு ஆரம்பித்தது.
 
முதலில் சமாதான முயற்சிகளுக்கு பக்க பலமாக நின்ற இணைத் தலைமை நாடுகளையும் அவற்றுடன் முரண்டு பிடித்துக்கொண்டிருந்த இந்தியாவையும் தமது பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கைகளை றணில் சிறப்பாக மேற்கொண்டார்.
 
இந்த வகையில் நான் ஏற்கனவே விபரித்திருந்த றணிலின் அமெரிக்க விஜயங்களுக்கு ஒப்பானதாக  பிரித்தானியாவுக்கும் றணில் விக்கிரமசிங்க விஜயங்களை மேற்கொண்டார். 2002 -2003 இடைப்பட்ட காலத்தில்லவர் பிரித்தானியாவுக்கு இரண்டு விஜயங்களை மேற்கொண்டிருந்தார். 
 
பிரித்தானிய பிரதமர் ரொனி பிளயரை டவுனிங் ஸ்றீற் அலுவலகத்தில் றணீல் சந்தித்த ஒரு விஜயத்திலும் நான் செய்தியாளனாகக் கலந்து கொண்டிருந்தேன்.
 
 
(பிரித்தானியாவுக்கான இலங்கையின் தூதரக அதிகாரி மற்றும் அப்போதைய பிரதமரின் ஊடகப் பிரிவின் முக்கியஸ்த்தருடன் குருபரன்)
 
அமெரிக்க விஜயத்தைப் போன்றே பிரித்தானிய விஜயத்தின் போதும் பாதுகாப்பு, இராணுவ ஒத்துழைப்பு, அபிவிருத்தி என பல விடயங்கள் இருதரப்பாலும் பேசப்பட்டன. இதில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பிரிட்டிஷ் காவற்துறையினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. மெட்ரோ பொலிற்றன் காவற்துறை மற்றும் பிரித்தானியப் புலனாய்வுத்துறை ஆகியவற்றுடன் விசேட சந்திப்புகளும் கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன. முன்னர் அமெரிக்க விஜயத்தின் போது எவ்வாறு பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் ஊடக தரப்பினருக்குத் தெரியாது மறைக்கப்பட்டனவோ அதுபோன்றே இந்த விஜயத்தின்போதும் மேற்கொள்ளப்பட்ட பல இரகசிய உடன்படிக்கைகளும் சந்திப்புகளும் ஊடகவியலாளர்களுக்குத் தெரியாது மறைக்கப்பட்டன. பிரித்தானியக் காவற்துறையுடனான சந்திப்புக் குறித்து எனக்கும் தெரிய வந்ததனால் அவை குறித்து ஊடகங்களில் அறிக்கையிட வேண்டாம் எனக் கேட்கப்பட்டும் இருந்தோம்.
 
 
 21 டிசம்பர் (ஆண்டு) இந்திய விஜயம் ஒன்றையும் றணில் மேற்கொண்டிருந்தார். அப்போதைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய், துணைப்பிரதமர் அத்வானி, வெளிநாட்டமைச்சர் யஸ்வந்சின்கா, அருண்ஜெட்லி உள்ளிட்டவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார். பிரதமர் வாஜ்பாயுடனான சந்திப்பில் பாதுகாப்பு மற்றும் இருநாட்டு வர்த்தகம் தொடர்பில் றணில் உடன்பாடுகளை எட்டியிருந்தார். இது பற்றி டெல்லியில் இருந்து யு.கு.டீ கீழ்க்கண்டவாறு செய்தி வெளியிட்டு இருந்தது.
 
* PM meets Indian leaders> focus on trade and defence ties 
NEW DELHI> (AFP) - Prime Minister Ranil Wickremesinghe began a series of meetings with India's political leadership here yesterday> the first day of an official visit aimed at boosting defence and economic ties. 
 
First to arrive at the Prime Minister's hotel suite was Indian Foreign Minister Yashwant Sinha> who held talks with the Prime Minister for about 40 minutes. 
 
Sinha declined afterwards to divulge the contents of the discussions, merely saying they were part of the "ongoing process of consultations between India and Sri Lanka". 
 
Prime Minister, Wickremesinghe who arrived here late Sunday, then held a 45-minute meeting with Deputy Prime Minister Lal Krishna Advani before setting off for talks with Prime Minister Atal Behari Vajpayee. 
 
Wickremesinghe also met Commerce Minister Arun Jaitley. Today, the last day of his visit, he will hold talks with the civil aviation and petroleum ministers> as well as opposition leader Sonia Gandhi. 
 
Officials in Sri Lanka said at the weekend that the talks with Vajpayee would focus on a Comprehensive Economic Partnership Agreement to upgrade the free trade pact between the two South Asian neighbours. Sri Lanka was expected to request more training opportunities for its military personnel in prestigious Indian defence colleges, while New Delhi has offered to sell more military-related hardware to the island. 
 
Wickremesinghe's visit comes four days after Sinha attended a meeting in Colombo of a joint commission that reviews the entire gamut of bilateral relations. 
 
 
2002ல் கைச்சாத்தாகிய யுத்த நிறுத்த உடன்பாடு மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு  நோர்வே ஏற்பாட்டாளர் அந்தஸ்த்தில் இருக்க ஐரோப்பிய ஒன்றியம், யப்பான், அமெரிக்கா ஆகிய இணைத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தன. இந்தவகையில் இந்திய விஜயத்தின் பின் உடனடியாகவே 2002 டிசம்பர் 30 ஆம் திகதி றணில் யப்பானுக்கும் பயணமாகினார். 
 
றணில் சமாதானப்பேச்சுவார்த்தைகளுக்குச் சமாந்தரமாக  இணைத் தலைமை நாடுகளையும், அவற்றோடு முரண்டு பிடித்துக்கொண்டிருந்த இந்தியாவையும் இலாவகமாகக் கையாளும் இராசதந்திரத்தைக் கைப்பிடித்தார்.
 
அதே நேரம் உள்நாட்டில் விடுதலைப் புலிகள் தாமாகவே சமாதான முயற்சிகளுக்கு எதிரானவர்களாக மாறக்கூடிய  களச் சூழ்நிலைகளை உள் நாட்டில் றணில் உருவாக்கினார். 
 
விடுதலைப்புலிகள் மாற்றுக் கருத்தாளர்கள் மற்றும் மாற்றுத் தமிழ் அரசியற் கட்சிகளின் உறுப்பினர்கள் மீது நடத்தும் தாக்குதல்களைக் கண்டும் காணாது அனுமதித்து வந்தார். இதனால் தமிழ்த்தரப்புகளிடம் இருந்தே நாளாந்தம் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடுகள் செல்லுகின்ற நிலை உருவானது. சமாதானகாலத்தில் விடுதலைப்புலிகளால்  பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரும் சர்வதேச நாடுகளின் தூதரகங்களை நாடி அவர்களிடம் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்த முறைப்பாடுகளைத் தெரிவிக்கத் தொடங்கினார்கள். சமாதானத்தை உருவாக்க முயன்ற சர்வதேசத்திற்குத் தமிழ்த் தரப்பினர் மூலமே  புலிகள் வன்முறையாளர்கள் என்பதனை றணில் சொல் லி  வைத்தார். இது அவரது மாமனார் ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் இராச தந்திரத்திற்கு ஒப்பான நடவடிக்கையாகும். றணிலின் இராசதந்திரம் புலிகளை இந்திய ராணுவத்துடன் மோத வைத்து புலிகளையும் ஈழத்தமிழர்களையும் இந்தியாவின் நிரந்தர எதிரிகளாக்கிய ஜே. ஆரின் சாமர்த்தியத்திற்கு ஒப்பானது. 
 
சமாதான காலத்தில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் காரணமாகவும் இணைத்தலைமை நாடுகள் விடுதலைப்புலிகள் மீது அவநம்பிக்கை அடைந்திருந்தனர்.
 
மறுபுறம் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் நீறுபூத்த நெருப்பாக இருந்த முரண்பாடுகள் தொடர்பாகவும் றணில் கவனம் செலுத்தி எண்ணை வார்க்கத் தொடங்கினார். 
 
யுத்த நிறுத்த உடன்பாடு கைச்சாத்தாவதற்கு முன்பு இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினர் கிழக்கின் அப்போதைய சிம்ம சொப்பனம் எனக் கருதப்பட்ட கருணா அம்மானை கொல்வதற்கான திட்டங்களைப் பூர்த்தி செய்திருந்தனர். இதனை அப்போது சமாதானப் பேச்சில் கலந்து கொண்ட அரச தரப்பினருடன் தனிப்பட்ட வகையில் உரையாடும் போது அறிந்துகொண்டேன். (இது கருணாவுக்கும் தெரியும்) 2002 பெப்ரவரி இறுதிவாரத்தில் கொல்லப்பட இருந்த கருணாவின் விதி யுத்த நிறுத்த உடன்பாட்டால் மாற்றி அமைக்கப்பட்டது. யுத்த நிறுத்த உடன்பாடு காரணமாக அந்தத் திட்டத்தை உடனடியாகவே கைவிடும்படி றணில் விக்கிரமசிங்க கிழக்கின் அப்போதைய தளபதி சாந்தகோத்தாகொடவுக்கு உத்தரவிட்டு இருந்தார்.  ( இது குறித்து கருணாவுக்கும் இப்போதும் உயிருடன் இருக்கும் புலிகளின் தலைவர்களுக்குத் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.)
 
இந்த நிலையில் ஏற்கனவே 2001ன் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் பின் தலைமைக்கு தெரியாமல் தனது படையணியுடன் நடந்து மட்டக்களப்பிற்கு சென்ற கிழக்கின் தளபதியான கருணா அம்மானுக்கும் புலிகளின் தலைமைக்கும்; இடையில் ஏற்பட்டு இருந்த கருத்து முரண்பாடுகளைத் துல்லியமாக அறிந்து கொண்ட றணிலும் அவரின் நெருங்கிய உதவியாளர்களும் அதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர். ஆனால் துர்ப்பாக்கியம் இந்த முரண்பாட்டை தீர்த்து பலமான ஒற்றுமையை கட்டி எழுப்புவதில் புலிகள் தோல்வி அடைந்திருந்தனர்.
 
காரணம்;  புலிகளின் தலைமை கருணாவோடு தமக்கு இருந்த முரண்பாட்டை தீர்பதற்கு புலனாய்வின் ஊடான காய்நகர்த்தல்களையே மேற்கொண்டிருந்தனர். அதற்காக தம்மோடு இருந்த முரண்பாட்டைக் கருத்திற்கொண்டு சமாதான பேச்சிற்கு கருணாவை அனுப்பிவிட்டு அவர் வெளிநாட்டில் இருக்கும் வேளையில் அவருக்கும் கரிகாலனுக்கும் பதில் பானு, றமேஸ், கௌசல்யன் போன்ற தமக்கு நெருக்கமான தளபதிகளை கிழக்கில் பலம்பெறச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 
 
ஆனால் கிழக்கை ஏறத்தாள 15 வருடங்களாகத் தனது கிடுக்கிப் பிடியில் வைத்திருந்த கருணாவுக்கு இவை புரியாமலுமில்லை. சமாதானப் பேச்சிற்கு வெளிநாடுகளுக்குச் சென்றாலும் கூட கிழக்கின் கட்டுப்பாட்டைத் தனது கையடக்கத் தொலைபேசியில் வைத்தேயிருந்தார்.
 
இரண்டாவது தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக்காலத்தின் போது  கருணாவுக்கும் விடுதலைப்புலிகளின் தலைமைக்கும் இடையிலான விரிசல் இன்னும் வெளிப்படையாகத்தெரியத் தொடங்கியது.  
 
மூன்றாவது ஒஸ்லோப் பேச்சுவார்த்தையின் போது ஒருநாள் கருணாவோடு உரையாடும் போது எமது வானொலிக்கான சிறப்புப் பேட்டி ஒன்றைத் தருமாறு கேட்டிருந்தேன். (கருணா இதனை வாசித்தால் அவருக்கு ஞாபகம் வரக்கூடும்) அப்பொழுது அவர் சிரித்துக் கொண்டு கூறினார்: 'குருபரன் உங்கள் வானொலி பற்றி நிரம்பக் கேள்விப்பட்டிருக்கிறேன். நானும் கேட்டிருக்கிறேன். ஆனால் என்னை ஊடகங்களுக்கு செவ்வி கொடுக்க வேண்டாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். பாலா அண்ணையிடம் கேளுங்கள். அல்லது தமிழ்ச் செல்வனிடம் கேளுங்கள் எனச் சொன்னார். போர் நிலவிய காலத்தில் வீறு கொண்ட' தமிழ் இளைஞர்களின் ஆதர்ச புருஷனாகக் கருணா இருந்ததை எவரும் மறுக்க முடியாது. கருணாவின் பேட்டி எமது வானோலி நேயர்களை வேகுவாகக் கவர்ந்திருக்குமென்பதில் சந்தேகமற்றிருந்தேன். அதனால் அவரிடம் வற்புறுத்திக் கேட்டதன் பின்பு எமது உரையாடலின் பின்பு சிறு பேட்டி ஒன்றைத் தந்தேயிருந்தார். அது உடனடியாகவே தொலைபேசிவழியாக எமது வானொலியில் ஒலிபரப்பானது.  
 
இந்த உரையாடலின் பின்பு கருணா விரைவில் புலிகளில் இருந்து உடைந்து செல்லக்கூடும் என்ற என் எண்ணம் வலிமை அடைந்திருந்தது. இக்காலத்தில் அரசாங்க படைகளின் அப்போதைய கிழக்கின் தளபதியும் பின்னர் ராணுவத் தளபதியாக இருந்தவருமான சாந்தகோத்தாகொடவும் அரச தரப்பிற் பேச்சில் கலந்து கொண்டிருந்தார். 
 
மூன்றாவது ஒஸ்லோப் பேச்சுவார்த்தை என நினைக்கிறேன். அமைச்சர் மிலிந்த மொறகொட, கிழக்கின் படைத்தளபதி சாந்தகோத்தாகொட மற்றும் ஊடகவியலாளர்கள் சிலர் பேசிக் கொண்டிருந்தோம். அவ்வேளையிற் பலவிடயங்கள் பேசப்பட்ட போதும் உங்களுக்குப் பிடித்தமானவர் யார் என்ற கேள்வி ஒன்றுக்கு அரசாங்க அமைச்சர் மிலிந்த மொறகொடவும் கிழக்கின் தளபதி சாந்தகோத்தாகொடவும் கருணாதான் தமக்கு பிடித்தமானவர் எனப் பதிலளித்திருந்தனர். ஒருகாலத்தில் வன்னிக் களமுனையில் நேருக்கு நேர் மோதிய இருவரும் இப்போ ஒரே மேசையில் பேசுகிறோம். அவரிடம் இராணுவத்திறமைகள் மட்டுமே உண்டு என நினைத்தோம் ஆனால் அவரிடம் நல்ல அரசியல் சிந்தனையும் பார்வையும் ஆற்றலும் இருப்பது வியப்பாக உள்ளது. பேச்சுவார்த்தை மேசையிலும் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசுகிறார் எனக் கூறினார்கள்.
 
இந்த உரையாடலும் கருணா மெல்ல மெல்லப் புலிகளின் கூண்டில் இருந்து நகருகிறார் அல்லது நகர்த்தப்படுகிறார் என்பதனைத் தெளிவாக்கியது. ஓவ்வாரு பேச்சுவார்த்தகளின் போதும் அரசாங்கத் தரப்பினர் கருணாவுடன் தனியாக பேசுவதற்கு முயன்றனர் அல்லது பேசினர் என்பது உண்மையானது. இதனை இப்பொழுதும் கருணா மறுக்க மாட்டார் என நம்புகிறேன்.
 
இவை மட்டுமல்லாது மூன்றாவது பேச்சுவார்த்தையின் பின்பு கருணா வன்னி செல்வதனைத் தவிர்த்திருந்தார். ஓவ்வொரு தடவையும் கிழக்கிற்கு செல்லும் உலங்கு வானூர்தி அவரையும் அவரது உதவியாளர்களையும் நேரடியாகவே கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு அழைத்து வரும். பேச்சு வார்த்தை முடிந்ததும் கருணா குழுவினரை விமான நிலையத்தில் இருந்து மீண்டும் உலங்கு வானூர்தி மட்டக்களப்பிற்கு அழைத்துச் செல்லும்.
 
இவ்வாறு அரசாங்க மற்றும் இராணுவத் தரப்பினருடனான பயணங்களும் கருணா சாந்த கோத்தகொட மற்றும் மிலிந்த மொறகொட ஆகியோருக்கிடையில் நட்பு விரிவடைய வளர காரணமாயிருந்தன. 
 
இந்தவிடத்தில் சமாதான காலத்தில் விடுதலைப்புலிகளின் நிர்வாகம் நேரிடையாக அல்லது அவர்களின் அனுசரணையுடன் மேற்கொண்ட அபிவிருத்திப்பணிகளில் கிழக்குமாகாணம் புறக்கணிப்புக்களை எதிர் கொண்டிருந்தமையையும் கவனிக்க வேண்டும்.
 
சமாதான காலத்தில் வன்னியில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட சில அபிவிருத்திகள், ஆடம்பரவாழ்வு நோக்கிய நகர்வுகள் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு இருக்கவில்லை. இந்த ஏற்றத்தாழ்வுகளை அரச தரப்பினர் கருணாலுடனான தமது உரையாடல்களின் போது அவ்வப்போது சொல்லிப் பிரதேச வாதத்தை தூண்டும்  வேலைகளையும் சிறப்பாக மேற்கொண்டனர்.
 
இவை ஒருபுறமாக நடந்து கொண்டிருக்கும் போது மறு முனையில் விடுதலைப்புலிகளின் பொருட்கொள்வனவு மற்றும் வியாபாரச் செயற்பாடுகள் தொடர்பாக தராளவாதப் போக்கை றணில் கடைப்பிடித்தார். தாராளவாதம் என்று சொல்லும் போது வன்னிக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் தங்குதடையின்றி அனுப்பினார். சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளால் முன்மொழியப்பட்டவர்கள் அனைத்து வியாபார நடவடிக்கைகளிலும் இறங்கினர். கொக்கோகோலா, பால்மா வகைகள், உரவகைகள், வாகன உதிரிப் பாகங்கள், வாகனங்கள் எனப்பலவகையான, பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களின் நேரடி முகவர்களாகச் செயற்படத் தொடங்கினர். இதனால் சமாதான காலத்தில் வன்னிப்பகுதி ஒரு குட்டிச்சிங்கப்பூராக மாறியிருந்தது என பலரும் கூறத்தலைப்பட்டிருந்தனர். முக்கியமான வீதிகள் யாவும் 'கம்பள' வீதிகளாக மாறின. கொழும்பில் புதிதாக இறக்குமதி செய்யப்படும் புதிய ரக வாகனங்கள் வன்னியிற் புலிகளின் தளபதிகளிடமும் உடனே இருக்கும்.
 
கொழும்பில் இருக்கும் ஆடம்பர வீடுகளுக்கு ஈடான வீடுகளாக தளபதிகள் தங்கும் வீடுகள் மற்றும் அவர்களின் அலுவலகங்கள் மாற்றம் அடைந்தன. புலிகளின் 90 வீதமான அலுவலகங்களிற் பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர் உபயோகத்திற்கு வந்தது. மென்பானங்கள் தாராளமாக கிடைத்தன. புலிகளின் பொறுப்பாளர்களின் அலுவலகங்களில் நவீன மடிக்கணணிகள் பெருமளவுக்கிருந்தன. பணம் கரைபுரண்டோடியது. காரணம் வன்னிக்குச் செல்லும் பொருட்களுக்கும் வன்னியைத் தாண்டி யாழ் செல்லும் பொருட்களுக்கும் புலிகள் விதித்த வரி மூலம் பெருமளவான பணத்தைப் பெற்றுக் கொண்டிருந்தனர். 
 
இவற்றை நான் இங்கு சொல்வதற்காரணம் அரசியல் ரீதியானது. என்னேனில் ஜே.வீ.பீ உள்ளிட்ட இலங்கையின் கடும் போக்காளர்கள் பலர் றணிலின் இந்தத் தாராளவாதத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தபோதும் றணிலின் இந்தத் தாராளவாதம் 2002ற்கு பின்பு  புலிப்போராளிகளிடம் குறிப்பாக படைத் தலைவர்களிடம் முன்பிருந்த போராடும் உணர்வை மழுங்கடிப்பதில் பங்காற்றியது. பல தளபதிகள் திருமணவாழ்வில் நுழைந்திருந்தனர் பெற்றோராகியிருந்தனர். ஒரு தசாப்தத்திற்கு மேற்பட்ட காட்டு வாழ்க்கை திடீரென சகல சௌபாக்கியங்களும் நிறைந்த நகர வாழ்வாக மாறிய போது அதனை எதிர்கொள்ளும் அரசியல் ரீதியான அறிவூட்டல்களோ அல்லது முன்னேற்பாடுகளோ  புலிகளிடம் இருந்திருக்கவில்லை.
 
யுத்தகாலத்தில் கிழக்கு எப்படி மிகவும் பின்தங்கியிருந்ததோ அதே நிலைமைதான் சமாதான காலத்திலும் இருந்தது. வீதிகள் குன்றும் குழியுமாக இருக்க வன்னி வீதிகள் கம்பளத்தரைகளாக மாறி இருந்தன.
 
இங்கே மிக முக்கியமான பதிவொன்றைச் செய்தாக வேண்டும். சுனாமிப் பேரலையின் பின்பு கனேடியத் தேசிய வானொலி ஒன்றின் செய்தியாளரை வடக்கு கிழக்கிற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பொன்று ஏற்பட்டது. ஒருவாரப் பயணம். முதலில் வடக்கிற்கு சென்றோம் அங்கே அனர்த்த கால அவசர சேவைப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதற்கான பாரிய அலுவலகம் ஒன்று கட்டப்பட்டு நவீன மடிக்கணனிகள் மூலம் தரவுகள் பதியப்பட்டு ஒரு அரசாங்கம் எப்படிச் செயற்படுமோ அந்தத்தரத்திற்கு புலிகள் செயற்பட்டார்கள்.
 
ஆனால் கிழக்கின் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் மிக வசதியற்ற நிலைமைகளிலேயே பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.  சம்பூரில் புலிகளின் அலுவலகத்தில் இருந்த திருமலைத் தளபதி சொர்ணம் மற்றும் எழிலன் ஆகியோருடன் உரையாடும் போது குறிப்பாக சொர்ணத்துடனான உரையாடலின் போது இந்த நிலைமை குறித்து அவர் மிகவும் வேதனையுடன் காணப்பட்டார்.
 
குறிப்பாக சொர்ணத்துடன் உரையாடும் போது 'வளங்கள் சரியாகப் பகிரப்படாமை என்ற பிரச்சனை வெளியில் மட்டும் அல்ல புலிகளிடமும் இருக்கிறது. இதனைச் சீர்செய்ய முயற்சிக்கிறோம் என்ன செய்வது கிழக்கின் நிலமை இவ்வாறாகத்தான் தொடர்கிறது' எனக் கூறினார். 'இது எனது தனிப்பட்ட கருத்து ஊடகச்செய்தியிடலுக்கு அல்ல' எனவும் அவர் கூறினார். திரு பதுமன் அவர்களுக்குப் பின் நியமிக்கப்பட்ட  சொர்ணமும் அவர்களூம் கூடச் அதிருப்திகளைத் தன்னகத்தே கொண்டிருந்தார் என்பதனை அவரது உரையாடல் புலப்படுத்தியிருந்தது.
 
இதற்கு இன்னும் ஒரு உதாரணத்தை இங்கு சொல்லலாம். திருமலையின் மூதூர் சம்பூர் பகுதியின் உட்கிராமம் ஒன்றின் ஊடாக செல்லும் போது மிகவும் பின்தங்கிய பகுதியின் ஊடாக ஒரு பெண் தனது சிறு குழந்தையை இடுப்பில் சுமந்தபடி ஒரு பொதியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை எமது வாகனத்தில் ஏற்றினோம் அவருடன் உரையாடுகையில் அவர் கூறினார் கிரமத்தில் இருந்து சிறு நகரத்தில் இருக்கும் சிறு வைத்தியசாலைக்கு செல்வதென்றாலோ அல்லது பொருட்களை பெறுவதற்கு செல்வதென்றாலோ 5 கிலோமீற்றர் தூரம் நடக்க வேண்டும்.  போக்குவரத்து எதுவும் இல்லை என்றார். ஆனால் சமாதான காலத்தில் இப்படியான ஒரு சூழலை வன்னயின் எந்தக் கிராமத்திலும் பார்க்க முடியாது. கல்வி சுகாதாரம், மருத்துவம் சமூக முன்னேற்றம், அபிவிருத்தி என்னபன யுத்தகாலத்தில் எப்படி இருந்தனவோ அதே நிலைதான் சமாதானம் நிலவிய 3வருடகாலத்திலும் நிலவின.
 
சமாதான காலத்தில் திடீரெனெ ஊதிப்பருத்த வன்னியின் நிலமைகளுக்கு ஈடாக கிழக்கின் நிலமைகளை முன்னேற்றுவதற்கு விடுதலைப்புலிகள் அமைப்பு ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுத்திருந்ததாக என்னால் அந்தக்காலத்தில் உணர முடியவில்லை. கிழக்கு தொடர்பாக அவர்கள் அக்கறையற்றிருந்தனரோ என்ற ஆழமான கேள்விக்கும் கருணாவின் பிளவுக்கான சூழ்நிலைகளுக்கும் தொடர்புகள் உள்ளன. 
 
கருணா புலிகளுடன் கொண்டிருந்த முரண்பாட்டிற்கு தனது தவறுகளை மறைப்பதற்கு, காட்டு வாழ்வில் இருந்து நகர வாழ்வுக்கு தன்னை மாற்றுவதற்கு பிரதேச வாதம் என்ற ஒரு அரசியல் முலாத்தை பூச இந்த நிலமைகள் வழிவகுத்தனவேனவும் கூறலாம். இது பற்றி கருணாவின் பிளவின் பின் எமது வானொலி செய்தியில் ஒலிபரப்பான கருணா தரப்பினரின் அறிக்கை ஒன்றில் அடிக் குறிப்பாக 20 வருடம் புலிகளின் தலைமை குறித்தும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் அலட்டிக் கொள்ளாத கருணாவுக்கு இப்போதுதானா தவறுகளாக தெரிகிறது என கேள்வி எழுப்பி இருந்தேன். அன்று மாலை தொலைபேசியில் இணைந்து கொண்ட மார்க்கன் என்ற தளபதி 'அண்ணை புலிகள் மட்டும் தான் கொழும்புக்கு வந்து சுடுவார்கள் என நினைக்காதீர்கள் நாமும் கொழும்பு வந்து சுடுவோம்' என மிரட்டினார்.
 
இவ்வாறான சூழலிலேயே பிரதேசவாதம் என்பதனைக் கையிலெடுத்த கருணா தனக்கென தனியான சாம்ராஜ்யத்தைக் கிழக்கில் உருவாக்கியிருந்தார். வன்னியில் இருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகளை அவர் 2002ன் பின் ஏற்றதாக எனக்கு தெரியவில்லை. பணச் சேகரிப்பு ஆட்திரட்டல் உள்ளிட்ட யாவுமே கருணாவின் கட்டுப்பாட்டுள் வந்தது. பேச்சுவார்த்தை காலத்தில் அரசாங்கப் படைத்தரப்போடு ஏற்பட்ட நெருக்கமும் அரச தரப்பினரோடு ஏற்பட்ட புரிந்துணர்வும் அவரது தற்துணிச்சலை இன்னும் அதிகரித்தன. இதன் பின்னான அதிர்ச்சிதரும் விடயங்கள் அடுத்த பாகத்தில் தொடரும்
 
தொடரும்