.
                                                மரண அறிவித்தல்

                     
                            பொன்னுத்துரை புவிராஜேந்திரன் காலமானார்வவுனியாவை சேர்ந்த பொன்னுத்துரை புவி ராஜேந்திரன்  30.08 2010 திங்கட்கிழமை காலமானார்

இவர் காலம் சென்றவர்களான பொன்னுத்துரை,  வனதலஷ்மி தம்பதியினரின் அன்பு மகனும் , புவனராணி ஜெயபாலேந்திரா  ,  புவனேந்திரன் , இந்திராணி மகாலிங்கம் , உமா  நாதன்  , மோகனா ஈஸ்வரமூர்த்தி
 ( கனடா) ,  டாக்டர் கலா  ஜீவகுமார் (ஒஸ்ரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் , காலம் சென்ற ஜெயபாலேந்திரா,  காலம் சென்ற மகாலிங்கம் ,  நாதன்   , ஈஸ்வரமூர்த்தி  சிவா  (கனடா),   ஜீவகுமார் (சிட்னி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்  ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரிகைகள்  புதன் கிழமை ( ௦௦௦௦௦௦01.09 .2010 )  மாலை வவுனியாவில்  இடம்பெறும் . இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்புகளுக்கு       திருமதி ஜெயபாலேந்திரன் வவுனியா  24 2222519 ,  
                                ஜீவகுமார் சிட்னி   9614 3404 / 0425 269 850

அவுஸ்திரேலியா தேர்தல் 2010

.
அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு 76 பாரளுமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுவதால் 3 சுயேட்சை உறுப்பினர்கள் எந்தப்பிரதான கட்சிக்கு ஆதரவளிக்கிறார்களோ அந்தக்கட்சியே அடுத்த 3 வருடங்களுக்கு ஆட்சி புரியும்.


இதுவரை கிடைக்கப்பெற்ற வாக்கு விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

ஆண்கள் அறிக ! - கவிதை - தாமரை

காதல் சொல்லும் கணத்தில்கூட
முதல் காதலிக்கான கவிதை
வாசிக்கபடுகிறது.

கல்யாணத்துக்கு நெருங்கும்
பழுத்த காதலிகளிடம்
இன்னும் வயதுக்கு வராத
உங்கள் தங்கையின்
திருமணத்தைப்பற்றிப் பதறுகிறீர்கள்...

உங்களை நம்பி ஓடி வந்து
மாலை மாற்றிக்கொண்டவளிடம்
'என் அம்மாவைவிட்டு
வந்துவிட்டேனே' என்று
புலம்புகிறீர்கள்....

அடுப்படியில் வெந்து விறுவிறுக்க
மனைவி தயாரித்த மணத்தக்காளிக் குழம்பை
உறிஞ்சிக்கொண்டே,
'என் அம்மா வைத்தால்
ஊரே மணக்கும்' என்கிறீர்கள்...

இந்தியாவின் முதலாவது 'டெப்லட்' கணினி

'ஒலிவ் டெலிகொம்' என்பது இந்தியாவில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனமாகும்.
'ஒலிவ் ஸிப்புக்' எனப்படும் இந்தியாவின் முதலாவது 3ஜி தொழிநுட்பத்துடன் கூடிய ' நெட் புக்' மற்றும் 'ஒலிவ் விஸ்' எனப்படும் இந்தியாவின் முதலாவது 3 'சிம்'களைக் கொண்டு இயங்கக் கூடிய கையடக்கத் தொலைபேசி என்பன இதன் முக்கிய தயாரிப்புக்களாகும்.

இந்நிலையில் அந்நிறுவனம் இந்தியாவின் முதல் 3.5 ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் 'டெப்லட்' ரக கணினியை அண்மையில் அறிமுகம் செய்தது. கையடக்கத் தொலைபேசியாகவும் உபயோகிக்க முடியுமென்பதே அதன் சிறப்பம்சமாகும்.

செல்வச்சந்நிதி முருகனைச் சந்தித்தேன்

.                                                                                                   கானா பிரபா 

அரிவரியில் சமயபாடத்தில் இருந்து என் க.பொ.த உயர்தரவகுப்பில் இந்து நாகரீகத்தை ஒரு பாடமாக எடுத்தது வரை செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் பற்றிப் படித்தும் கேள்விப்பட்டும், ஏன் எமது யாழ்ப்பாணத்து மண்ணில் இருந்தும் கூட என் வாழ்நாளில் சென்றிராத கோயில் இது. நான் இந்த ஆலயத்துக்கு இத்தனை ஆண்டுகாலமாகப் போகாததற்குக் காரணம் "ஷெல்"வச் சந்நிதியாக இருந்ததே ஆகும். இம்முறை என் தாயகப்பயணத்தில் கண்டிப்பாகச் செல்வச் சந்நிதியானைக் கண்டு தரிசிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தேன். கூடவே செல்வச் சந்நிதி ஆலயத்தின் மகோற்சவ காலம் கூட இது என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரு ஓட்டோவைப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து கொள்கிறேன். இணுவிலில் இருந்து செல்வச் சந்நிதி ஆலயம் சென்று திரும்ப 1100 ரூபா என்கிறார் ஓட்டோ நண்பர்.முதல் பிடில் -சிறுகதை -

.
                                                                                                                                - ந.பிச்சமூர்த்தி

நடு நிசி, ஒரு சின்னக்குரல் - குழந்தை கத்துவது போல, ஒரு நீண்ட எதிர் குரல் - சமாதானம் சொல்லுவது போல, சின்னக் குரல் பழுத்து வேதனை அடைந்தது. எதிர் குரல் ஏங்கிக் கனிந்து ஓலமாயிற்று. தெருவாசிகளின் தூக்கம் கலைந்தது. ஒவ்வொருவராக எழுந்து மாடியிலிருந்து இருளில் கூர்ந்து பார்த்தனர். முதலில் ஒருவர் கண்ணிலும் ஒன்றும் படவில்லை. அதனால் திகிலை விளைவிக்கும் அந்த ஓலம் மட்டும் நிதானமாய் போகப் போக உயர்ந்து கொண்டு போயிற்று. கடைசியில் அந்த குற்றவாளிகள் தட்டப்பட்டார்கள். இரு காதலர்கள்! ஒரு வீட்டின் கூரையின்மேல் உட்கார்ந்து காதலியைக் கூவி அழைத்துக் கொண்டிருந்தது ஆண் பூனை. நாலு அடி தூரத்தில் ஒரு ஜன்னலின் உட்புறத்திலிருந்து பெண் பூனை ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தது. அந்தக் காதலர்களுக்கு இனிப்பான அந்த சல்லாபம், தெருவாசிகளுக்கு கர்ண கொடூரமாய் இருந்தது.

பண்ணும் பரதமும் 3

.
கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் அவுஸ்திரேலிய கிளையினரால் பண்ணும் பரதமும் 3 என்னும் பல் சுவைக் கலை நிகழ்வு  நடாத்தப்படவுள்ளது

நான் மகான் அல்ல: திரைப்பட விமர்சனம்

.
கதவுக்கு பின்னால் 'ஹால்' இருந்தால் பரவாயில்லை, ஒரு மயானம் இருந்தால்? அப்படிதான் இருக்கிறது ரகளையான முன்பாதியும், ராட்சசத்தனமான பின்பாதியும்.
இரண்டையும் பூட்டி சவாரி செய்த விதத்தில் சூப்பர் ஜாக்கியாக செயல்பட்டிருக்கிறார் டைரக்டர் சுசீந்திரன்.

டீன் ஏஜ் பையன் கார்த்தி, அந்த வயசில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறார் நிம்மதியாக! கஷ்டப்படாமலே காஜல் அகர்வாலை கவிழ்த்துப்போடும் அவரது 'சைட்'டாலஜியை ரசித்துக் கொண்டிருக்கும்போதே, கத்தியை தீட்டிக் கொண்டு வருகிறது இரண்டாம் பாதி. ஒரு நண்பனை போல பழகும் அப்பாவை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் கார்த்தி, அழுது புலம்புவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அப்பாவை கொன்றவர்களை பழி தீர்க்க புறப்படுகிறார். வேதனை என்னவென்றால் யார் கொலையாளிகள் என்பதையே அவர் இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு மர்ம நாவலின் அடுத்தடுத்த பக்கங்கள் போல விறுவிறுப்பாக நகர்கிறது படம். க்ளைமாக்ஸ்...? நாமெல்லாம் எதிர்பார்த்ததுதான். ஆனால் அந்த நிமிடம், நமது விரல் நகமெல்லாம் காலி!

என் கணவர் - திருமதி. செல்லம்மாள் பாரதி

.
"..திருமதி. செல்லம்மாள் பாரதி கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்?.."  
(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்" என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்... விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.

'ஸ்கைப்'புக்கு போட்டியாக 'கூகுள்'

.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தேடல் பொறி நிறுவனமான கூகுள், கணினியிலிருந்து தொலைபேசிக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் (பிசி டூ போன்) சேவையை  புதன்கிழமை ஆரம்பித்தது.
ஜீ-மெயில் எனப்படும் கூகுளின் மின்னஞ்சல் கணக்கினை பேணுவதன் மூலம், அதனூடாக எந்தவொரு தொலைபேசிக்கும் இந் அழைப்பினை மேற்கொள்ள முடியும். கூகுளின் வொயிஸ் சேவைப் பாவனையாளர்கள் தங்கள் வொயிஸ் கணக்கினை ஜீ-மெயிலுடன் இணைப்பதன் மூலம் இவ்வசதியை பெறமுடியும்.

பிரானா 3 D தமிழிலும் வருகிறது - சினிமா செய்திகள் -

.
*அற்புதமான படைப்பான பிரானா 3 D தமிழிலும்
*இந்திரா காந்தி வேடத்தில் ப்ரியங்கா சோப்ரா


மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுகிறது. இதில் அவரது அரசியல் பணிகள், பிரதமராக தேர்வானது, உலக தலைவர்களுடனான சந்திப்புகள், இந்தியாவுக்காக அவர் போட்ட புதிய திட்டங்கள் போன்றவை காட்சிகளாக்கப்படுகின்றன.
இறுதியில் பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் படத்தில் இடம் பெறுகிறது. இந்த படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான கிருஷ்ணா ஷா இப்படத்தை தயாரிக்கிறார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி  வேடத்தில் நடிக்கிறார் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா

அர்த்தமுள்ள திருமணம்


.


திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான திருப்பத்தை உருவாக்கும் சடங்காகக் கருதப்படுகிறது. திருமணம் என்ற தமிழ்ச் சொல்லே மிக உயர்ந்த பொருளை உள்ளடக்கியது.

திரு என்பது கண்டார் வியக்கும் தெய்வத் தன்மை என்ற பொருளைக் கொண்டது. இன்னார்க்கு இன்னார் என்பது தெய்வத்தின் செயலாகக் கருதப்படுகிறது.

புலப்படாமல் அரும்பாக மறைந்திருந்த தெய்வத்தின் பங்கு மலர்ந்து இன்னார்க்கு இன்னார் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கும் போது அங்கே தெய்வீக மணம் கமழ்கிறது.

புராதன இலங்கையில் பௌத்த பிக்குகளும் பௌத்த சங்கமும் - பாகம் 02 -சாந்தினி அருளானந்தம் யாழ் பல்கலைக்கழகம்

.

பொதுவாக பண்டைய காலத்தில் சமயத் தலைவர்கள் அரசர்களுடைய அவையிலே பல்வேறு நிலைகளிலும் செல்வாக்குப் பெற்றிருந்தனர்
அநுராதபுர இராசதானியில் பிராமணர்கள் ஆசிரியர்களாகவும், ஆலோசகர்களாகவும், சமயக்கடமைகளை ஆற்றுவோராகவும் பணிபுரிந்தமைக்கு பாளி இலக்கியங்களில் பல சான்றுகள் காணப்படுகின்றன.

உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா - திருமுறை முற்றோதல் 05.09.2010 ஞாயிற்றுக்கிழமை

உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்
உலக சைவப் பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையின் மாதாந்த திருமுறை முற்றோதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 05.09.2010 காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. அன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை ஐந்தாம் திருமுறையிலுள்ள “மாசில் வீணையும்” எனத் தொடங்கும் பதிகத்திற்கு பொருள் கூறப்பட்டு பின்னர் ஐந்தாம் திருமுறை எண்பத்திமூன்றாவது பதிகம் (திருநாகைக்காரோணம்) தொடக்கம் திருமுறைப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.

சிவநேயச்செல்வர்கள் அனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து எமது வாழ்நாளில் பன்னிரு திருமுறைகளிலும் உள்ள 18இ000 இற்கு மேற்பட்ட பாடல்களையும் ஓதி வழிபட்டு திருவருள் பெறுமாறு உலக சைவப் பேரவையின் அவுஸ்திரேலியாக் கிளை கேட்டுக்கொள்கின்றது.

இடம்: ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலை (Cnr Burlington Rd & Rochester St)

நேரம்: 05.09.10 ஞாயிற்றுக்கிழமை

காலை 9.15 முதல் 10.15 வரை

பதிகப் பொருள் விளக்கம்

பொதுப் பதிகம் (90); - திரு மா அருச்சுனமணி அவர்கள்

காலை 10.30 முதல் 12.30 வரை

திருமுறை முற்றோதல்;;

மேலதிக விபரங்களுக்கு:

திரு க சபாநாதன் Tel: 96427767

திரு சி சிவஞானசுந்தரம் Tel: 96425406

திரு மா அருச்சுனமணி Tel: 87460635

யாதும் ஊரே யாவரும் கேளீர் தீதும் நன்றும் பிறர்தர வாரா - முருகபூபதி (அமைப்பாளர், சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு)

.
இலங்கையில் அடுத்த ஆண்டு (2011) நாம் நடத்தவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக ஏற்கனவே பல இதழ்களிலும் (அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில்) இணையத்தளங்களிலும் மலர்களிலும் எழுதியிருப்பதுடன் தமிழ்நாடு Zee Tamil  தொலைக்காட்சியிலும் தொலைபேசி ஊடாக விரிவாக பேசியிருக்கின்றேன். தமிழக ஜூனியர் விகடனும் எனது கருத்தை கேட்டு பதிவுசெய்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு 1987 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து வந்த காலம் முதல் மூலையிலே சோம்பிக்கிடக்காமல் தொடர்ந்தும் கலை, இலக்கியப்பணிகளிலும் இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கும் அகதிகளுக்கும் உதவும் மனிதாபிமானப்பணிகளிலும் அயராமல் ஈடுபட்டுவருகின்றேன்.

இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் - பாகம் 03

.


தமிழர் குடியேற்றம்

இலங்கையில் பழைய கற்காலம், குறுணிக் கற்காலம் என்பவற்றைச் சேர்ந்த பண்பாடுகளே மிகவும் புராதனமானவை.
பழைய கற்காலத்து மக்கள் தமது அன்றாடத் தேவைகளுக்குக் கல்லினால் அமைந்த கருவிகளைப் பயன்படுத்தினார்கள். பல்லாயிரம் ஆண்டுகள் இவர்கள் இலங்கையில் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.


நல்லூர் கந்தன் ஆலய பத்தாம் திருவிழா


.வரலாற்றுப் புகழ் மிக்க நல்லுர்ர்க் கந்தன் ஆலய பத்தாம் திருவிழாவாகிய செவ்வாயக் கிழமை மாலை நடை பெற்ற திருமஞ்சத் திருவிழாவில் பெரும் எண்ணிக்கையான அடியவர்கள் கலந்து கொண்டார்கள் .இத்துடன் தெனினிலங்கையில் இருந்த வருகை தந்த சுற்றுலாப் பயணிகள்கள் இரண்டாயிரத்திற்க்கும் மேற்பட்டவர்களும் கலந்து கொண்டார்கள்.

“கிருஷ்ண ஜயந்தி”.
ஹரே கிருஷ்ணா! மீண்டும் இந்த வாரம் உங்களை சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி. கடந்த சில வாரங்களாக பல  பாகவதர்களின்  கதைகளை அனுபவித்து வந்தோம். எல்லா பாகவதர்களின் சிந்தனையை ஈர்த்த அந்த பகவானின் அவதார  காரணத்தையும், பெருமையையும்  நாம் அனுபவிக்கவேண்டாமோ?

நல்லைக் கந்தன் பெருந்திருவிழா

.

கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைக் கந்தன் பெருந்திருவிழா 15-08-2010ம் திகதி முற் பகல் 10மணிக்கு கொடி யேற்றத்துடன் பக்திபூர்வமாக ஆரம்ப மாகியது.
காலை 8.30 மணிக்கு வசந்தமண்டப பூசை சிறப்புற இடம் பெற்றது. பெருந்திரலான பத்த அடியார்கள் ஆலயத்தின் உள்ளும் வெளியம் காணப்பட்டனர்.

மக்களை கவர்ந்த என் கண்கள் மக்களுக்கே- ஐஸ்வர்யாராய்

ஐஸ்வர்யாராய் அழகுக்கு அழகு சேர்ப்பது அவரது கண்கள். “50 கிலோ தாஜ்மகால்” என்பதில் இருந்து அங்குலம் அங்குலமாக ஐஸ்வர்யாராயை கவிஞர்கள் வர்ணிப்பதற்கு அவரது நீல விழிகளின் கவர்ச்சி காரணமாய் அமைந்தது. அந்த கண்களை இறந்ததற்கு பிறகு தானம் செய்ய முடிவு செய்துள்ளார்.

மக்கள் மத்தியில் கண்தானம் செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதைச் செய்கிறாராம்.

மருத்துவப் பயன்கள் நிறைந்த பேரீச்சம் பழம்

.


இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.