.
இலங்கையிலிருந்து வெளிவரும் சிற்றிதழ்களின் ஆயுள் மிகக் குறைவு என்பது கசப்பானஉண்மையே.திட்டமிடப்படாமையினாலும், நிறுவனமயப்படுத்தாமையினாலும் இலங்கையில்சிற்றிதழ்களினால் நீண்ட தூரம் பயணிக்கமுடியவில்லை.பிரபல்யமான சில நிறுவனங்கள்அவ்வவ்போது சில சிற்றிதழ்களை வெளியிட்டன.தகுதியான ஆசிரியரும்,ஆசிரியபீடமும்,இல்லாமையால் அவையும் கால ஓட்டத்தில் மறைந்து போயின.இதே வேளை பிரபல எழுத்தாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டசிற்றிதழ்களும் கால ஓட்டத்தில் மூழ்கிவிட்டன.
உதயதாரகையுடன் 1841ஆம் ஆண்டு இலங்கையின் பத்திரிகைத் துறை ஆரம்பமானது.கலை,இலக்கியம்,சமூகம்,மருத்துவம்,விஞ்ஞானம்,அரசியல், நகைச்சுவை,இசை, விவசாயம்,சிறுவர்,வானொலி ஆகிய துறைகளை முன்னிலைப்படுத்தி பல சஞ்சிகைகள் வெளிவந்தன.இன்றும் சுமார் 15 சஞ்சிகைகள் வெளிவருகின்றன.48 வருட காலம் தனி நபர் சாதனையாக வெளிவந்த மல்லிகை தடுமாறிக் கொண்டிருக்கிறது.தாயகம், ஞானம்,ஜீவநதி ஆகியன இன்று வெளிவருகின்றன.யாத்ரா, நீங்களும் எழுதலாம் ஆகிய சஞ்சிகைகள் கவிஞர்களின் அபிலாஷையைப் பூர்த்தி செய்கின்றன.