நீரில் ஒரு தாமரை..! - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

.

தாகம் தீர்(க்)கின்ற 
சிவப்புத் துளி 
நீரில் ஒரு தாமரை போல !

நோண்ட 
நோண்ட 
வளர்கிறது ,
மகிழ்கிறது 
என் கரத்தின் நகம் !

உன் நிறை சுமை தான் 
அதனால் 
விண்ணைத்  தொடாத மண்ணாய் 
மண்ணைத் தொடாத விண்ணாய் 
என் 
நாட்டில் பொருட்களின் விலை வாசி

இலங்கை மாணவர் கல்வி நிதியம் கடந்துள்ள மைல்கல்

.
 மெல்பனில்  
  இலங்கை   மாணவர்  கல்வி  நிதியம்  கடந்துள்ள   மைல்கல்
இலங்கையில்   போரில்  பாதிப்புற்ற  மாணவர்களுக்கு  உதவிய  அமைப்பின்   வெள்ளிவிழா.



இலங்கையில்   நீடித்த   உள்நாட்டுப்போரில்   பெரிதும்  பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ்மாணவர்களின்  கல்வி   வளர்ச்சிக்கு  1988  ஆம்   ஆண்டு முதல்   அவுஸ்திரேலியாவிலிருந்து   உதவி   வரும்  இலங்கை மாணவர்   கல்வி   நிதியத்தின்  25   வருட   நிறைவு   வெள்ளிவிழா கடந்த  6  ஆம்  திகதி    சனிக்கிழமை   மெல்பனில்   Noble Park Community Centre  மண்டபத்தில்  வெகுசிறப்பாக  நடைபெற்றது.
நிதியத்தின்    நடப்பாண்டு    தலைவி   திருமதி  அருண். விஜயராணியின்    தலைமையில்   நடைபெற்ற    இவ்விழாவில் நிதியத்தின்   நீண்ட   கால   உறுப்பினர்கள் -   முன்னாள்  தலைவர்கள் மற்றும்    வெள்ளிவிழாவுக்கு   ஆதரவு    வழங்கிய   வர்த்தக ஸ்தாபனங்களின்    இயக்குநர்கள்   உட்பட    பெருமளவு   மக்கள் வருகைதந்தனர்.
நிதியத்தின்   ஸ்தாபகர்    திரு. லெ. முருகபூபதி   -  கடந்த காலத்தலைவர்கள்   சட்டத்தரணி    ரவீந்திரன்  -   பட்டயக்கணக்காளர்  ஆ. வே. முருகையா  -   திருவாளர்கள்    இராஜரட்ணம்   சிவநாதன்  -  ஆவூரான்   சந்திரன்  -  திருமதி   புவனா    இராஜரட்னம்   -   டொக்டர் நடேசன்  -   டொக்டர்   சந்திரானந்த்  -   டொக்டர்  மதிவதனி  சந்திரானந்த்    ஆகியோர்   மங்கள   விளக்கேற்றி   நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தனர்.

சிட்னி முருகன் வைரவர் அபிஷேகம்

.

சங்க இலக்கியத் தூறல் -- அன்பு ஜெயா சிட்னி

.
மருந்தறிந்தவன் நோய்தீர்க்க மறுப்பானோ……?


காதலனின் பிரிவினால் தவிக்கின்ற காதலி தன் செயலற்ற நிலையை எண்ணித் தனக்குள்ளே புழுங்குகின்றாள். இதைக் கண்ணுற்ற அவள் தோழி தலைவியின் இந்தப் பிரிவாற்றாமையைப் போக்க வேண்டி தலைவனைச் சந்தித்துத் தலைவி மற்ற பொருள்களையும் உயிரினங்களையும் அழைத்து அவற்றால் பேசவும்,  கேட்கவும் முடியும் என்று நினைத்துக்கொண்டு அவற்றிடம் தன் வருத்தத்தின் உச்சத்தில் பலவாறு புலம்புகின்ற அவல நிலையை எடுத்துக் கூறுகின்றாள்.
---
தலைவியின் புலம்பல்
“உலகத்து உயிர்களெல்லாம் தம் வாழ்நாளின் இறுதியில் இறந்து, மறபடியும் பிறந்து, பல பிறவிகள் எடுத்து, உலக முடிவு காலத்தில் (ஊழி) தம்மைப் படைத்த இறைவனிடம் சென்று ஒடுங்குகின்றன. அதன் பின் பேரிருள் சூழும். அதுபோலப் பகல் நேரத்தில் தன்னுடைய ஒளியினால் இவ்வுலகத்தை வாழ்வித்த சூரியன், அந்நாளின் முடிவில் தன் ஒளிக்கதிர்களைத் தன்னுள்ளே அடக்கிக்கொண்டு மலைகளிடையே மறைந்திடுவான். அப்போது எங்கும் இருள் சூழும். நல்ல நெறியுடன் ஆட்சி செய்த மன்னனுக்குப்பின் அவனுக்கு நேர்மாறான, வலிமையற்ற ஓர் அரசனின் ஆட்சிக்காலம் வருவதுபோல, அந்த இருளுக்கும் பகலுக்கும் எல்லையாக இருக்கும் மாலை நேரம் வந்துசேரும். அந்த மாலை நேரம்தான் எனக்கு எவ்வளவு துன்பத்தைத் தருகின்றது.”

இலங்கைச் செய்திகள்


பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்

சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் மாணிக்­க­வா­சகர் கால­மானார்

பாப்பரசர் பிரான்சிஸ் 2015-01-13 அன்று இலங்கை விஜயம்!


பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்

08/09/2014 மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்களான பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் மீது மொனராகலை கெட்டிய பிரதேசத்தில் வைத்து தாக்குதல்மேற்கொண்டு அதில் ஒரு மாணவனை கடத்திச் சென்று கடுமையாக தாக்கப்பட்டு பின்பு விடுதலை செய்யப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக  கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று காலை 6.30 மணியளவில் இலக்கத் தகடு இல்லாத டிபென்டர்  வாகனத்தில் வந்த இனந்தெரியாத சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக  கபே அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது .

நன்றி வீரகேசரி




சொல்லவேண்டிய கதைகள் - முருகபூபதி

.
இயற்கை   தந்துள்ள  கொடைகளை  இலக்கியத்திற்கும்    பயன்படுத்துவோம்

  
  நாடுகளுக்கும்    மனிதர்களுக்கும்   இனங்களுக்கும்     மொழிகளுக்கும் வரலாறு    இருப்பதுபோன்று    இயற்கை   தந்த  கொடைகளான    தாவரங்கள் மற்றும்    மரங்கள்  செடி   கொடி    மலர்களுக்கும்    அவற்றின்  அழகை  நாம் ரசிக்கும்   பூங்காக்களுக்கும்    வரலாறுகள்    இருக்கின்றன.
உலகநாடுகளில்   பெருநகரங்களில்    எங்காவது    ஒரு    புறநகர்    பிரதேசத்தில்    தாவரவியல்   பூங்காக்களை    பார்த்திருப்பீர்கள்.   தாவரவியல் ஆராய்ச்சியில்    ஈடுபடும்    மாணவர்களுக்கும்   அந்தத்துறை பேராசிரியர்கள்   விரிவுரையாளர்கள்   சுற்றுச்சூழல்    குறித்து அக்கறை  செலுத்தும்    சமூக  நலன்   விரும்பிகள்    யாவரும்    பூங்காக்களை   நேசிப்பது இயல்பு.
எம்மவர்கள்   இலங்கையில்   பெரும்பாலும்    விடுமுறைக்கால உலாத்தலுக்கும்    தங்கள்   குழந்தைகளுக்கு    வேடிக்கை காட்டுவதற்காகவும்    பூங்காக்களுக்கு   செல்வார்கள்.
கொழும்பிலிருக்கும்    விஹாரமாதேவி  பூங்கா,    நுவரேலியாவிலிருக்கும்  ஹக்கல பூங்கா,   ( இந்தப்பிரதேசத்தில்தான்   இராவணன்   சீதையை சிறைவைத்த   அசோகவனம் 


துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் நேற்று இடம் பெற்ற சமய அறிவுப்போட்டி

.
.

சிட்னி துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் நேற்று இடம் பெற்ற சமய அறிவுப்போட்டியில் கலந்து கொண்டவர்களில் பாலர் பிரிவினர் 

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவை - டி.எஸ்.உமாராணி

.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கம் இன்றியமையாதது. எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதுடன், சாப்பிட்ட பின் செய்யும் விஷயங்களும் உடல்நலனைப் பாதிக்கும். அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, சாப்பிட்ட பின் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன?
#சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும். பல சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் புற்றுநோய் ஏற்பட எந்த அளவு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டோ, அவ்வளவு பெரிய தீமை இது.
#உணவு சாப்பிட்ட உடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது, அது கெடுதல். அது காற்றை வயிற்றுக்குள் அனுப்பி, வயிறு உப்புசத்துக்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு பழத்தைச் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி, 2 மணி நேரத்துக்குப் பின்னர் பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

சங்க இலக்கியக் காட்சிகள் 23- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.



சிறுகுடி என்கின்ற ஊரைச் சேர்ந்தவன் அருமன் என்பவன். அவனது ஊரிலேயுள்ள வீடுகளிலே உணவு சமைப்பதற்கான அடுக்களையை அடுத்து, உணவு பரிமாறுவதற்கான பகுதியொன்று தனியாக இருக்கும். உயரம் குறைந்த கட்டையான கால்களைக் கொண்டு அவை அமைக்கப்பட்டிருக்கும். தெய்வத்திற்கு உணவுபடைப்பதும் அங்கேதான். விருந்தினர்களுக்கு உணவு பரிமாறுவதும் அங்கேதான். அந்தப்பகுதியைச்சுற்றி எப்பொழுதும் காகங்கள் கூட்டமாக இருப்பது வழக்கம். கருணைக்கிழங்கிலே கறி சமைத்து, செந்நெல் குற்றி எடுக்கப்பட்ட அரிசியிலே வெண்சோறு ஆக்கி இரண்டையும் கலந்து இறைவனுக்குப் படைப்பார்கள். அவற்றை உண்ணுவதற்காக வருகின்ற காகங்கள்தான் அங்கே கூட்டமாக இருக்கும். உணவு படைக்கப்பட்டதும் அதனை உண்ணவந்த காகம் ஒன்று இன்னமும் இறகு முற்றாத தனது குஞ்சையும் அணைத்துக்கொண்டு, அதுவரை அங்கே வந்து சேராத தனது சுற்றத்தவரைக் கூவியழைக்கும். அத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற பழமையான வீடுகளைக் கொண்ட அருமனின் ஊரான சிறுகுடி மிகவும் அழகானது.

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸூக்கு வாழ்நாள் சாதனைக்காக சிறப்பு விருது:

.

பிரபல பின்னணி பாடகரும், கர்நாடக இசை வல்லுனருமான கே.ஜே. யேசுதாஸூக்கு கேரள அரசு சார்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டது. யேசுதாஸின் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்பட்ட இந்த விருதானது ரூ. 1 லட்சம் ரொக்கமும், பட்டயமும் உள்ளடக்கியதாகும். திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் இந்த விருதை முதல்வர் உம்மன் சாண்டி வழங்கினார்.
  
விருதை பெற்ற பிறகு யேசுதாஸ் பேசுகையில், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். இந்த விழாவில் மாநில கலாசார துறை அமைச்சர் கே.சி. ஜோசப், எதிர்க்கட்சி தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

nantri seithy.com

சிட்னி முருகன் கார்த்திகை 14.09 .2014

.

புலம்பெயர்ந்த நாடுகளில் சமயம்

               .
    புலம்பெயர்ந்த நாடுகளில் சமயம் கற்பித்தலில் கையாளப்படும்
                   கையாளப்படவேண்டிய அணுகு முறைகள்

                              [ எம்.ஜெயராமசர்மா B.A (Hons) Dip. in Edu , Dip. in Soc , M.Phil Edu ,SLEAS ]
                                                     (   முன்னாள் கல்விப்பணிப்பாளர் )

  "  சமயம் " என்றால் என்ன?" மதம் " என்றால் என்ன? என்பதை நாங்கள் நன்றாக அறிந்துவைத்துக் கொள்ள வேண்டும்.இவை இரண்டும் ஒன்றா அல்லது இரண்டுமே வேறா என்பதே எம்மில் பலருக்கும் தெரியாத பொழுது எமது பிள்ளைகளுக்கு எப்படி இதனைப் பற்றி விளக்கிச்சொல்லமுடியும்.இக்காலத்தில் வளருகின்ற பிள்ளைகள் எம்மைப் போன்றவர்கள் அல்லர் என்பதை நம்மில் பலரும் தெரிந்துகொள்ளுவது  இல்லை. அவர்களது சிந்தனைகளும், செயற்பாடுகளும் வித்தியாசமானதாக இருக்கும். நாங்கள் வளர்ந்த சூழல் வேறு.நாங்கள் படித்த சூழல் வேறு.எங்களைச் சுற்றியிருந்த சூழலும் வேறு. அப்படியான சூழலில் இருந்து வந்த வளர்ந்தவர்களான நாங்கள் ....   எங்கள் பிள்ளைகளை எங்களைப்போல அவர்கள் நடக்கவில்லையே என்று மனக் குழப்பம் அடைதல் கூடாது.                                                                     
   சமயம் என்பது நல்ல வழியைக்காட்டுவது. மதம் என்று அதற்கு இன்னுமொருபெயர்.   மனிதனிடம் காணப்படுகின்ற ஆணவம் என்கின்ற மதத்தை இல்லாமல் செய்ய உதவுவ தால் ஒரு காரணப்பெயராக இப்படி அழைத்தனர்.நான் என்னும் தன்முனைப்பு வாழ்க்      கையில் இருக்குமானால் எவ்வளவு வரமும் உரமும் இருந்தும் அவை யாவும் விழலுக் கு- இறைத்த நீர்போலவே ஆகிவிடும்.ஆகவே தன்முனைப்பு அற்ற நல்ல பாதை அமை யுமானால் அதுவே மனித வாழ்வில் கிடைக்கும் நல்ல சமயமாக அமையும்.இப்படிநல்ல வாய்ப்பே சமயமானது. எனவே வேறு பெயர்களும் வேறு காரணங்களும் அடிப்படை    யாக அமைந்த பொழுதிலும் " சமயமும் " மதம் ' ஒன்றேதான் என்பதை நாமும் தெரிந்      திருப்பதோடு நமது பிள்ளைகளுக்கும் விளக்கி நிற்கவேண்டும்.
   வெளிநாட்டில் பல்வேறுவிதமான கலாசாரச் சூழல்களில் நாமே திக்கித்திணறுகின் றோம்.நாங்களே இப்படி என்றால் எங்களின் பிள்ளைகள் என்னதான் செய்வார்கள்.? இப்ப டியான சூழலில் வாழும் நாங்கள் சமயத்தை எப்படி அணுக வேண்டும் என்பது மிகவும் இலகுவான ஒரு காரியமல்ல.


வ.ரா. எனும் இலக்கிய சித்தாந்தி

.

மனிதன் தெய்வத்தன்மை அடைய முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். தெய்வத்தன்மை மனிதனுக்குள்ளே இருக்கிறது. அதை சோபிக்கச் செய்வது தான் இலக்கியத்தின் கடமையாகும். அதற்கான முறைகளிலே தான் எழுத்தைச் சித்திரித்துக் கொண்டு போக வேண்டும். அற்ப விஷயங்களையும் சில்லறைத் தகராறுகளையும் பற்றி எழுத்தில் எதிர்பார்ப்பது, இலக்கியத்தை புண்படுத்துவதாகும்..'
இதுதான் 'மணிக்கொடி' மூலவர்களில் ஒருவரும், பாரதியின் தனிப்பெரும் சீடர்களில் ஒருவராகவும் விளங்கிய வ.ரா என்றழைக்கப்பட்ட வ.ராமசாமியின் இலக்கிய சித்தாந்தமாகும்.
தஞ்சை மாவட்டம் திருவையாறுக்கு அருகிலுள்ள திருப்பழனம் கிராமத்தைச் சேர்ந்த வைணவக் குடும்பமொன்றில் செப்டம்பர் 17,1889-ம் ஆண்டு பிறந்தார் வ.ரா. 1905-ல் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் நுழைந்த போதே, இந்திய தேசிய விடுதலை இயக்கத்தால் ஈர்க்கப் பெற்றார். பிரபல தேசபக்தர் கொடியாலம் ரங்கசாமி ஐயங்காரின் தொடர்பால், 1910-ல் பாண்டிச்சேரி சென்று, அங்கிருந்த அரவிந்தரையும், பாரதியையும் சந்தித்தபோது அவரது வயது 21.

உலகச் செய்திகள்


எரிமலையினுள் 1200 அடி வரை இறங்கி ஆபத்தான முறையில் செல்பி எடுத்த நடிகர்!

எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 2300 பேர் உயிரிழப்பு



எரிமலையினுள் 1200 அடி வரை இறங்கி ஆபத்தான முறையில் செல்பி எடுத்த நடிகர்!


எரிமலையினுள் 1200 அடிவரை இறங்கி கனடா நடிகர் ஒருவர் செல்பி புகைப்படம் எடுத்து சாகசம் புரிந்துள்ளார்.

கனடாவில் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரான என்கிரி பிளனட், என்ற தொடரில் நடிக்கும் ஜோர்ஜ் கௌரோயுனிஸ் என்ற நடிகரை தெரியாதவர்கள் யாரும் இல்லை. அந்தளவுக்கு  இதுவரை நடிப்பில் புகழ் பெற்று வந்த அவர், தற்போது சாகச நிகழ்ச்சி ஒன்றில் ஈடுபட்டு உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுள்ளார்.

வனுவாட்டு என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு எரிமலையில் உள்ளே சென்று தன்னைத்தானே செல்பி புகைப்படம் எடுத்துள்ளார். நன்றி வீரகேசரி 


பாஞ்சாலியின் புலம்பல் - ஒரு அரிசோனன்

 .

நான்தான் பாஞ்சால நாட்டின் இளவரசியான பாஞ்சாலி; துருபத மன்னனின் மகளான திரௌபதி; கருப்பாக இருப்பதாலும், கார்மேக வண்ணனான கண்ணனால் உடன்பிறப்பாக ஏற்கொண்டதாலும், கிருஷ்ணை என்றும் அழைக்கப்பட்டவள்.
பெண்மையைப் போற்றும் பெருந்தகையாளர்களே!
நீங்கள் ஏன் என் பக்கம் பேசுவதில்லை?
ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா என்று பேசும் உங்கள் கூற்றை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்று, ஐந்து கணவர்களைக் கொண்டேனே, அதை ஏன் நீங்கள் பாராட்டிப் பேசுவதில்லை? ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்த பல மாமன்னர்களைப் புகழும் நீங்கள், என்னை மட்டும் விலைமகளைப் போல ஏன் பார்க்கிறீர்கள்?
பல்லாயிரக்கான வீரர்களைப் போரில் புறம் கண்டு, அவர்தம் தலைகளை ஒருவன் சீவி எறிந்தால் பாராட்டும் நீங்கள், அதே மாவீரன் காரணமின்றி ஒருவர் தலையைச் சீவினால், அதைக் கொலை என்றுதானே கூறுவீர்கள்! ஆக, அங்கு வெவ்வேறு அளவுகோலைத்தானே எடுக்கிறீர்கள்!

தமிழ் சினிமா - பொறியாளன்





வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றிக்கு பிறகு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள படம் பொறியாளன்.

உதயம் என்.எச்.4 படத்தின் இயக்குநர் மணிமாறன் கதை திரைக்கதை வசனத்தில் அறிமுக இயக்குனர் தாணுகுமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர் ஹரிஷ் கல்யாண், ஆனந்தி.இடம் வாங்கும்போது மிகவும் கவனமாக விசாரித்து வாங்கவேண்டும் என்பதை கூறும் படம்தான் படத்தின் கரு.கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் ஹரிஷ் கல்யாண் சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்க விரும்புகிறான். இதற்காக கந்துவட்டி நபரிடம் வேலைபார்க்கும் நண்பன் அந்த நபர் ஜெயிலுக்கு போன சமயத்தில் வசூலில் இருந்து இரண்டு கோடி ரூபாயை ஹரீஷ்ஷுடம் கொடுக்கிறார்.சாஸ்திரி என்பவரிடம் இடத்தை வாங்கி கட்டிடம் கட்டி விற்க முடிவு செய்யும் போது தான் அந்த இடத்தில் பேரில் வழக்கு இருக்கிறது என்பதும் தான் ஏமாற்றப்பட்டதும் தெரியவருகிறது.



அந்த நேரம் பார்த்து பெயிலில் வெளியே வரும் கந்து வட்டி ஆசாமிக்கு விஷயம் தெரிந்து பணத்தை கேட்டு டார்ச்சர் செய்கிறான். இந்த பிரச்சனையில் இருந்து மீண்டாரா இல்லையா என்பதே மீதி கதை.படத்தின் முதல் பாதி ஹரிஷ் கல்யாண், ஆனந்தி காதல், கந்து வட்டி ஆசாமியின் அடாவடிகள் என நகருகிறது. இரண்டாவது பாதியில் சாஸ்திரியை தேடிக் கொண்டிருப்பது சம்பந்தப்பட்ட காட்சிகளே அதிகம் நிறைந்திருக்கின்றன. சிந்து சமவெளி படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் நடிப்பில் கொஞ்சம் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஆனந்தி என்னும் புதுமுகம். 




பிரபுசாலமனின் கயல் படத்தின் நாயகியாவார்.இவரது விழிகளும் சிரிப்பும் இனி தமிழ் சினிமா ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்கப் போகிறது. மயில்சாமி, நரேன் சில காட்சிகளில் தலைகாட்டுகிறார்கள். பிரபுவாக நடித்திருக்கும் நடிகரும் நன்றாகவே தனது கேரக்டரில் நடித்திருக்கிறார். கந்து வட்டி ஆசாமியாக வரும் வில்லன் மிரட்டுகிறார்.ஜோன்ஸ் இசையில் ஜிவி பிரகாஷ் பாடிய பாடலும் கானா பாலா பாடிய பாடலும் ரசிக்க வைக்கிறது. 



பின்னணி இசையிலும் தன் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார் ஜோன்ஸ். ஒளிப்பதிவோடு நில்லாமல் ஒரு காட்சியில் தலைகாட்டிவிட்டும் போகிறார் வேல்ராஜ்.கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் மணிமாறன். நல்ல த்ரில்லர் படங்களுக்குரிய கதைகளத்துடன் இயக்கியிருக்கிறார் தாணுகுமார்.இரண்டாவது பாதி திரைக்கதை காட்சியமைப்பில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை அதிகப்படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கக் கூடும்.மொத்தத்தில் பொறியாளன் கட்டிவிட்டான் கோட்டை. நன்றி cineulaga