மரண அறிவித்தல்

.
    திரு .மயில்வாகனம் சிவகுரு கந்தசாமி
மறைவு 22.12.2016


முல்லைதீவை பிறப்பிடமாகவும், யாழ்பாணம் பிறவுண் வீதி, சிட்னி அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சிவகுரு கந்தசாமி அவர்கள் 22.12.2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார் காலம் சென்ற சிவகுரு அன்னம்மா தம்பதியரின் செல்லப் புதல்வரும், காலம் சென்ற மகேஸ்வரி,  சொர்ணலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும், காலம் சென்ற விஜயலக்ஷ்மியின் அன்பு கண்வரும்,
காலம் சென்றவர்களான  துரைசிங்கம், குகதாசன், பரமநாயகி, மற்றும் கலாநிதி கணேசன்(இலங்கை), ஜெயலக்ஷ்மி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வைத்தியகலாநிதி அமலகுகன்(கனடா), விஜயகுகன்(கனடா), கிரிதரகுகன்(கனடா), உருத்திரகுகன்(கனடா), றேணுகா (சிட்னி வைத்தியகலாநிதி மேனகா (சிட்னி), ஆகியோரின் தந்தையும்,
கனடாவைச் சேர்ந்த தவ ரஞ்சிதம், றேணுகா,, ரோகினி, சவுந்தரா சிட்னியைச் சேர்ந்த கருணாகரன், கிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனடாவை சேர்ந்த பிரதீபன், வைத்தியகலாநிதி பிரவீன், வைத்தியகலாநிதி நிஷாதரி, புருஷோத்தமன், ஜனோஷன், துஷான், மயூரி, ரமணா, லக்கி, சிட்னியைச் சேர்ந்த ஹரேஷன், சகாணா, நிர்த்தனன், அம்ரித்தா ஆகியோரின் அன்பு பாட்டனாரும்
வேத்தின் பூட்டனாரும் ஆவர்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 26.12.2016 திங்கட்கிழமை           101 south street Granville  இல் அமைந்துள்ள கிரான்வில் லிபேட்டி பாலரில் 10.30 மணி தொடக்கம் 12 மணிவரை வைக்கப்பட்டு பின்னர் 28.12.2016 புதன் கிழமை ரூக்வுட் மயானத்தின் South Chapel லில்10.30  மணிக்கு கிரிகைகளின் பின்னர் தஹனம் செய்யபடும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றார்கள் .

மேலதிக தகவல்களுக்கு   
றேணுகா கருணாகரன் (சிட்னி )  6706 7434, 0435850033
மேனகா கிருஷ்ணன் (சிட்னி) 0435870430
விஜயகுகன் (கனடா), 416 564 5505 

கண்ணன் -- என் சேவகன்- பாரதியார் கவிதை

.
கண்ணன் -- என் சேவகன்

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம்மறப்பார்;
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
‘ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை’ யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற் பூதம் வந்ததென்பார்;
5

பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறு செய்வார்;
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தியெலாம் ஊரம் பலத்துரைப்பார்;
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்.
10

சேவகரால் பட்ட சிரமமிக உண்டு, கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்,
எங்கிருந்தோ வந்தான், ‘இடைச்சாதி நான்’ என்றான்;
“மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களைநான் காத்திடுவேன்;
15

ஓபன் தமிழர் கழக நத்தார் விழா

.
ஓபன் தமிழர் கழகத்தின்  நத்தார் விழா நிகழ்வுகள் 

இலங்கையில் பாரதி அங்கம் -03 - By முருகபூபதி

.
பத்து ரூபா செலவில் திருமணம் செய்துகொண்ட பாரதியின் பக்தர் 
இலங்கையில்  பாரதியின் புகழ் பரப்பிய முன்னோடிகள் மூவர்

அண்மையில்   இந்தியாவில்   ஆயிரம்  ரூபா,  ஐநூறு  ரூபா நாணயத்தாள்  மாற்றப்பட்ட  விவகாரம்  இன்னமும் சூடுபிடித்திருக்கிறது. 
அந்தத்தேசம்  இவ்வாறு  அமளியில்  ஆர்ப்பரிப்பதற்கு      முன்னர்  தென்னிந்திய  மாநிலமான  கர்நாடகாவில்  ஒரு  முன்னாள்  அமைச்சரும்   சுரங்க  அதிபருமான ஜனார்த்தன  ரெட்டி  என்பவரின்  மகளுடைய  திருமணம்  74 மில்லியன் டொலர்கள் செலவில்   நடந்தேறியிருக்கிறது.
இதன்  இந்திய -  இலங்கை  நாணயப்பெறுமதியை  வாசகர்கள் ஊகித்து தெரிந்துகொள்ளமுடியும்.
அதே  இந்தியாவில்  கடந்த  நூற்றாண்டில்  ஒரு  தமிழ்த்தலைவரின் திருமணம்  பத்து ரூபாவில் நடந்திருக்கிறது.  அவர்  இந்திய அரசியலில்  மதிப்பிற்குரிய  இடதுசாரித் தோழராகவும் முற்போக்கு எழுத்தாளராகவும்  பத்திரிகை  ஆசிரியராகவும்   தமிழக  சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.   

வெற்றிச்செல்வியின் "ஆறிப்போன காயங்களின் வலி" - கானா பிரபா

.

புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடையவும் சனக்கூட்டத்தில் இருந்து விலகி அந்த ரயில் நிலையத்தில் நின்று கொண்டு முழுதையும் படித்து முடித்தது மூன்று மணி நேரத்துக்கு முன்புதான்.
சிட்னியில் மழை கனத்துப் பெய்து கொண்டிருக்கிறது. நேற்றுக் கொளுத்திய உச்சபட்ச வெயிலுக்கு எதிர்மாறாகக் குமுறிக் கொட்டிய அந்த மழைதான் இந்த நூலில் வெற்றிச்செல்வி கொணர்ந்த உணர்வின் வெளிப்பாடோ எனத் தோன்றியது.

அந்த மழைக் கதகதப்போடு என் கண்ணீரும் சேர்ந்து கொள்ள இலக்கியா இருக்கும் பிள்ளைப் பராமரிப்பு நிலையம் நோக்கி நடந்தேன். எதிர்ப்படுபவருக்கு நான் அழுது கொண்டே பயணித்ததைக் கண்டுணர நியாயமில்லை. அப்படிப்பட்டாலும் ஏதோ காலநிலை மாறுதலால் சளி பிடித்த முகம் என்று நினைத்திருக்கக் கூடும். இங்கே நான் எழுதிக் கொண்டு வரும் இந்த உணர்வின் பிரதிபலிப்பைக் கொச்சையாகக் கூட பார்க்கலாம். ஆனால் எனது பலமும் பலவீனமும் அதுதான். அதனால் தானோ என்னமோ 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போர் என்று  முடிவு கட்டப்பட்ட பின்னர் வெளிவந்த, இறுதிப் போர் அனுபவங்களை நூலுருவாக்கிய படைப்புகளை வாங்கி வைத்திருந்தாலும் அவற்றைப் படிக்கக் கூடிய மன ஓர்மம் என்னுள் ஏற்படுத்தப்படவில்லை.

இலங்கைச் செய்திகள்


அச்சத்திலும் சந்தோசத்திலும் மக்கள் : 32 வருடங்களின் பின்னர் வவுனியாவில் நிகழ்ந்த சம்பவம்

புனர்வாழ்வளிக்கப்பட்ட மற்றுமொரு முன்னாள் போராளி மரணம்

புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு செலவிடப்பட்ட தொகை தெரியுமா ? மரணமடைந்த பொதுமக்கள், புலிகள், இந்திய அமைதிப் படையினரின் எண்ணிக்கை தெரியுமா? : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மேனன்

ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி. கொலை : பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு.!

கொழும்பு கதிர்காம  வீதியை மறித்து ஹம்பாந்தோட்டை மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டு.மங்களராம விகாராதிபதி பிணையில் விடுதலை.!

ஊடகவியலாளரை  தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம்

எமில் காந்தனுக்கு பிடியாணை

துறைமுக ஊழியர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் கைவிடப்பட்டது.!

மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மலேஷியாவில் ஆர்ப்பாட்டம் ; முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்கிறது மலேஷிய அரசு

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் வேனில் பயணித்த 10 பேர் மரணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேசிய மன்னரை சந்தித்தார்

நாமல் ராஜபக்ஷ நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜர்



நதியைத் தேடிச் சென்ற கடல் - உமா வரதராஜன்

.


2014 சென்னை புத்தக கண்காட்சியை ஒட்டிய ஒரு தினம் .வெயில் மங்கத் தொடங்கும்  நேரம் மெரீனா கடற்கரை சாலை நடைபாதையில் சென்று  கொண்டிருந்தேன்.இயல்புடன் இருந்த சாலையில் திடீரென பரபரப்பு சூழ்ந்து கொண்டது  . நிறை மாத கர்ப்பிணிகளை நினைவூட்டிக் கொண்டிருந்த  போக்குவரத்துப் பொலிஸ்காரர்கள்  மிகவும் உஷார்  நிலையுடன்  ஓடியாடி மக்களுடையதும் ,வாகனங்களினதும்  நகர்வுகளைக்  கட்டுப் படுத்திக்  கொண்டிருந்தார்கள் .அதைத்  தொடர்ந்து ஓரிரு  நிமிடங்களுக்குள் முகப்பு  விளக்குகளை  ஒளிர விட்டபடி வாகனங்களின்  அணியொன்று  சாலையைக்  கடந்து சென்றது . வாகனங்களிலிருந்து  முளைத்த  மரக்கிளைகள் போல் கறுப்பு சீருடையணிந்த ,துப்பாக்கியேந்திய காவலர்கள்  [Black  cats ] வாகனங்களில்  முன்னேயும் பின்னேயும்  செல்ல  நடுவில்  சென்ற  வாகனமொன்றில்  தமிழ்நாட்டின்  முதலமைச்சர்  செல்வி  ஜெயலலிதா  புன்னகை ததும்பும்  வட்டமுகத்துடன் ,   இரு  விரல்களை  உயர்த்திக்  காட்டிய படி கடந்து  சென்றார். சாந்தம் ததும்பும் முகம். மிடுக்கு . அவர் அமர்ந்திருந்த  வாகனத்தின் உட்புறம் மிகவும் பிரகாசத்துடன்  ஒளிர்ந்து  கொண்டிருந்ததற்கு  வாகன விளக்குகள்  மட்டுமல்லாமல் ஜெயலலிதாவின் நிறமும் ,தோற்றமும்  கூட காரணங்களாக  இருந்திருக்கலாம் . அங்கு குழுமி  நின்ற  மக்களைப் போல  ஓர் உணர்வின்  உந்துதலில் நானும் கையசைத்தேன் .'ஆயிரத்தில் ஒருவனி'லிருந்து  உங்களை அறிவேன் 'என்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின்  கையசைப்புக்குள் என்னுடையதும் அடங்கும்  .

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி த.கலாமணி எழுதிய 'தெளிதல்', 'எம்மவர்கள்', 'பூதத்தம்பி இசை நாடகம்' ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா  செவ்வாய்க்கிழமை(13) யாழ். கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதிமுதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்றது.
ஜீவநதி வெளியீட்டகத்தின் வெளியீடாக அமைந்த இம் மூன்று நூல்களுக்குமான வெளியீட்டுரையை மூத்த எழுத்தாளர் சாகித்யரத்னா தெணியான் நிகழ்த்தினார்.
தெளிதல்' நூலுக்கான நயப்புரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணாவும், 'எம்மவர்கள்' நூலுக்கான நயப்புரையை ஓய்வுபெற்ற வங்கியாளர் எழுத்தாளர் கொற்றை பி.கிருஷ்ணானந்தனும், 'பூதத்தம்பி' இசைநாடக நூலுக்கான நயப்புரையை யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் கே.ஆர். கமலநாதனும் ஆற்றினர்.

தமிழ்முரசு வாசகர்களுக்கு எமது நத்தார் தின வாழ்த்துக்கள்

.

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள்  புனித நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
இன்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்னர் பெத்லகேம் நகரில் மாட்டுத்தொழுவத்தில் யேசுபிரான் இதேபோன்ற ஒரு தினம் பிறந்தார்.
இந்த தினத்தை நினைவு கூறும் விதமாகவே உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

சசிகலாவுக்கும், அஜீத்துக்கும் சரியான போட்டி...

.

2016ம் ஆண்டு நிறைவடைந்து 2017ம் ஆண்டு புது வருடம் பிறக்கப் போகிறது. தற்போது 2017ஆம் ஆண்டுக்கான காலண்டர்கள் அச்சடிக்கும் பணி நடைப்பெற்று வருகின்றது. மேலும் காலண்டர் மற்றும் டைரி விற்பனைகளும் தற்போது ஜோராக நடந்து வருகிறது.


அரசியல் கட்சியினர் தங்களுக்குப் பிடித்த தலைவர்களின் படங்களை அச்சிட்டு வருகின்றனர். 2017ம் ஆண்டு புத்தாண்டு காலண்டர்களின் வடிவமைப்பில் கூட சசிகலாவை முன் நிறுத்தி தாயாரிக்க சொல்லி கடைகளில் ஆர்டர் அளித்து வருகின்றனர் அதிமுகவினர். ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்களுக்கு கொடுத்த ஆர்டர்களை கேன்சல் செய்தும் விட்டனர் அதிமுகவினர்.

உலகச் செய்திகள்


சென்னையில் கோர தாண்டவமாடும் 'வர்தா' : கார்கள் பறந்தன, பலமாடி கட்டிடங்களின் கண்ணா சரிந்து விழுந்தன ( காணொளி இணைப்பு)

வர்தாவின் தாக்கம் : 9 பேர் பலி, 40 பேர் காயம், 3,384 மரங்கள், 3,400 மின்கம்பங்கள் பலத்த காற்றில் விழுந்தன

சீரமைப்பு பணிகள் தீவிரம் : முதல்வர் ஓ.பி.எஸ். நேரில் சந்தித்து ஆறுதல்

16 வருடங்களுக்கு முன்னர் உயில் எழுதினாரா ஜெயலலிதா.?

மிகையில் கோர்பச்சோவ்: பேரரசை இழந்த மனிதர்  - பி.பி.சி

இந்தோனேசியாவில் விமான விபத்து : 13 பேர் பலி


மாவிடிக்கும் இயந்திரம் கண்டுபிடித்த மாணவிக்கு வெள்ளிப் பதக்கம் !!


15542044_1196461623778287_6408914019364064742_n

.
கொழும்பு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் போது தரம் 06 இல் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் புவனேசராசா நகுமி என்ற மாணவியினது மாவிடிக்கும் இயந்திரம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தினால் நடத்தப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான புத்தாக்கப் போட்டியிலே இன்று(16) தேசிய மட்டத்தில் மட்டக்களப்பு-கல்குடா கல்வி வலயத்தைச் சேர்ந்த செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.
வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற இம்மாணவியை வித்தியாலய அதிபர் க.சிவலிங்கராஜா வாழ்த்தியதோடு அம்மாணவியை தயார்படுத்திய ஆசிரியை தயாமதி பிரேம்குமாருக்குப் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
பாடசாலை ரீதியாக விண்ணப்பித்ததன் அடிப்படையில் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவான குறித்த மாணவி இறுதிப் போட்டியில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
அத்துடன் கடந்த வருடம் நடைபெற்ற புத்தாக்க போட்டியிலும் இப்பாடசாலையின் தரம் 9 இல் கல்வி கற்ற மாணவன் ஜீவரெத்தினம் பிரதீபன் நீரூற்றும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தமைக்காக தேசிய மட்டத்தில் 5 ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சிகள்

.

                   அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் அடுத்துவரும் நிகழ்ச்சிகள் பற்றிய தகவலை  அறியத்தருகின்றோம்.
அனைத்துலகப்  பெண்கள்  தின விழா
 11-03-2017 சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையில்
பிரஸ்டன் நகர மண்டபம், Gower Street, Preston, Victoria 3072.
17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா
06-05-2017 சனிக்கிழமை  5.00 மணி முதல் இரவு 9.00 மணிவரையில்
Stirling  Theological college Auditorium 
 44-60 Jacksons Road,  Mulgrave , Victoria - 3170
இந்நிகழ்ச்சிகளில்  கலந்து  சிறப்பிக்குமாறு   தங்களை  அன்புடன் அழைக்கின்றோம்.
முருகபூபதி  (தலைவர்)   நடேசன்   (செயலாளர் )   தெய்வீகன் ( நிதிச்செயலாளர்)
0416 62 57  66                                  0452 63 19 54                                      0433 00 26 21
                      அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கியக்கலைச்சங்கம்
                                    ATLAS Email: atlas25012016@gmail.com

முல்லை மண் தந்த இலக்கிய ஆளுமை கலாநிதி முல்லைமணி காலமானார்

.


பண்டார வன்னியன் நாடகத்தை எழுதியவரும் வன்னி மண்ணின் சரித்திரத்தை தன் எழுத்துக்களில் வடித்தவருமான கலாநிதி முல்லைமணி நேற்று காலமானார்.  முல்லைமணி என்ற புனைபெயரில் பல்வேறு படைப்புக்களை எழுதிய கலாநிதி வே. சுப்பிரமணியம் எழுத்துலகில் நாடகம், சிறுகதை, நாவல், கவிதை, வரலாற்று ஆய்வுகள், இலக்கிய திறனாய்வு என பல்வேறு துறைகளில் தனது புலமையை ஆழமாக பதித்தவர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளையில் பிறந்தவர் முல்லைமணி. இலங்கை பல்கலைக்கழக தமிழில் சிறப்பு கலைமாணி பட்டம் பெற்றவர். இவரது கலை இலக்கிய ஆய்வுப்பணிகளை அங்கீகரித்து 2005இல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி  பட்டம் வழங்கி கௌரவித்தது.

சுகுமாரனுக்கு இயல் விருது 2016

.


தமிழ் இலக்கியத் தோட்டம் ஆண்டுதோறும் இயல் விருதை அளித்துவருகிறது. 2016-ம் ஆண்டுக்கான விருது கவிஞர் சுகுமாரனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுகுமாரன், 1957-ல், கோயம்புத்தூரில் பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். குங்குமம், குமுதம் போன்ற தமிழ் வார இதழ்களிலும் சன், சூர்யா தொலைக்காட்சிகளிலும் பணிபுரிந்திருக்கிறார். தற்போது ‘காலச்சுவடு’ இதழின் பொறுப்பாசிரியராக உள்ளார்.
இவர் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதுவதுடன் மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகிறார். இயல் விருதைப் பெறும் 18-வது தமிழ் ஆளுமை இவர். சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜார்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ். பொன்னுத்துரை, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், சு. தியோடர் பாஸ்கரன், ஜெயமோகன், டொமினிக் ஜீவா, ஆர். மயூரநாதன் ஆகியோர் இவ்விருதைப் பெற்றிருக்கிறார்கள்.
சுகுமாரனின் ‘கோடைக்காலக் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு பரவலான கவனம் பெற்றது. ‘வெல்லிங்டன்’ என்னும் நாவலை எழுதியுள்ளார். மலையாள இலக்கியத்தின் ஆளுமைகளான வைக்கம் முகம்மது பஷீர், சச்சிதானந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன், சக்கரியா போன்றவர்களின் படைப்புகளை சுகுமாரன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ‘அஸீஸ் பே சம்பவம்’, ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’, ‘பட்டு’ ஆகியவை இவரது மொழிபெயர்ப்பில் குறிப்பிடத்தக்கவை. 2,500 டாலர் பணப் பரிசும் கேடயமும் கொண்டது ‘இயல் விருது’. விருது வழங்கும் விழா டொரொண்டோவில், 2017 ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது.

தமிழ் சினிமா


மாவீரன் கிட்டு 

தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு என ஒரு பேவரட் கூட்டணி இருக்கும். அப்படி ஒரு கூட்டணி தான் விஷ்ணு-சுசீந்திரன். ஏற்கனவே வெண்ணிலா கபடி குழு, ஜீவா என்ற தரமான படங்களை தந்த இந்த கூட்டணி ஹாட்ரிக் அடிக்க இந்த முறை மாவீரன் கிட்டுவில் களம் இறங்கியுள்ளது, ஹாட்ரிக் அடித்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

Maaveeran Kittu
மேல் ஜாதி, கீழ் ஜாதி என பிரிவினை உச்சத்தில் இருந்த 80களில் படம் தொடங்குகின்றது. ஊரில் கீழ் ஜாதியை சார்ந்த ஒருவர் இறந்தால், ஊருக்குள் கொண்டு வரக்கூடாது என கூற, பார்த்திபன் இதை எதிர்த்து போராடுகிறார்.

இந்நிலையில் விஷ்ணு கீழ் ஜாதியை சார்ந்தவராக இருந்து படிப்பில் சிறந்து விளங்கி, மாவட்ட கலெக்டர் ஆகவேண்டும் என்று எண்ணுகின்றார்.
ஆனால், வேண்டுமென்றே இவரை ஒரு கொலை வழக்கில் ஒரு சிலர் சதியால் கைது செய்ய, பின் ஜாமினில் வெளியே வருகிறார். அதை தொடர்ந்து போலிஸான ஹரிஸ் உத்தமன், விஷ்ணுவை ஒரு பிரச்சனையில் ஜெயிலில் கொண்டு சென்று அடித்துவிடுகிறார்.
இதன் பிறகு விஷ்ணு மாயமாகிறார், அவர் எங்கு இருக்கிறார் என்று ஊரே தேட ஆரம்பிக்கின்றது. பார்த்திபனும் இனி அமைதியாக இருந்தால் வேலைக்கு ஆகாது, தன் போராட்டத்தை தொடங்க, இறுதியில் கிட்டு கிடைத்தாரா? பார்த்திபன் போராட்டம் வெற்றி பெற்றதா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

மாவீரன் கிட்டு பெயருக்கு ஏற்றார் போலவே மிகவும் கம்பீரமான கதாபாத்திரம் தான் விஷ்ணுவிற்கு. ஆரம்பத்தில் கதைக்குள் வர கொஞ்சம் தடுமாறினாலும் போக, போக எளிமையான நடிப்பால் கவர்ந்து இழுக்கின்றார்.
படத்தின் முதல் ஹீரோ என்றே சொல்லிவிடலாம் பார்த்திபனை. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அவர் பேசும் வசனங்கள் விசில் பறக்கின்றது, ‘அடிக்க அடிக்க வாங்கிக்கொள்கின்றோம், திருப்பி அடித்தால் திமிருன்னு சொல்றீங்க’, ’சட்டம் விரோதமா செயல்பட கூடாதுன்னு சொல்றீங்க, ஆனா, இங்கே சட்டம் எங்களுக்கு விரோதமா இருக்கு’ போன்ற வசனம் கவர்கின்றது.
படம் 80 களில் நடப்பது போல் உள்ளது. அதற்கான காட்சியமைப்பில் ரசிக்கவும் வைத்துள்ளார்கள். குறிப்பாக எம்.ஜி.ஆர் இறந்த தகவலை கூறுவது, காமராஜரால் தான் கல்வி தமிழகத்தில் பரவியது என பல காட்சிகள் ரசிக்க வைக்கின்றது. ஜாதி வெறி ஒரு மனிதனை எத்தனை கொடூரமாக மாற்றுகின்றது என்பதை ஒரு பெரியவர் தன் மகளை கொல்லும் காட்சி நெஞ்சை உறைய வைக்கின்றது.
புரட்சி, போராட்டம் என படம் டாக்குமெண்ட்ரி பீல் கொடுக்குமோ என பலரும் நினைத்த நிலையில் முடிந்த அளவிற்கு கமர்ஷியலாக அனைத்து ஆடியன்ஸையும் திருப்திப்படுத்த முயற்சி செய்துள்ளனர். இருந்தாலும் இரண்டாம் பாதியில் பாடல்கள் தேவை தானா?
டி.இமான் பாடல்களை விட பின்னணி இசையில் கலக்கியுள்ளார். அதிலும் கிளைமேக்ஸில் வரும் இசை உருக வைக்கின்றது. ஒளிப்பதிவும் நம்மை 80களில் அழைத்து செல்கின்றது.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம், பார்த்திபன், விஷ்ணுவின் யதார்த்தமான நடிப்பு.
கிளைமேக்ஸ் மற்றும் இணைவோம் இணைவோம் பாடல்களை படமாக்கிய விதம்.

பல்ப்ஸ்

சூரி எதற்கு இந்த படத்தில், ஒரு வேளை பெயர் வாங்கிக்கொடுத்த இயக்குனர் என்பதால் நடித்தாரா?
இரண்டாம் பாதியில் புரட்சி வெடிக்கும் சமயத்தில் காதல் பாடல் தேவையா?

Direction:
Music:
நன்றி  cineulagam 

‘உயிரோடிருந்த போது புகழ்மொழியைச் சொல்ல முடியவில்லை’ – வைரமுத்து இரங்கல்!


Image result for jayalalitha

.


சென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தின் முற்றுப்புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில் தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று காட்டியவர் வென்று காட்டியவர் தன் போராட்டத்தை முடித்துக்கொண்டுவிட்டார். மாண்டியா மாவட்டம் மேல்கோட்டையில் பிறந்தவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தன் நீண்ட வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார்.”
“அவர் செய்த சாதனைகள் இன்னொரு பெண்ணால் எட்டமுடியாதவை. ஒரு கலையரசி புவியரசி ஆக முடியுமென்றது ஒரு சாதனை. ஒரு நட்சத்திரம் நிலவாக நீண்டது ஒரு சாதனை. திராவிட இயக்கத்தின் ஒரு கிளையின்மீது ஒரு பிராமணப் பெண்மணி பேராதிக்கம் செலுத்தியது ஒரு சாதனை. கலையுலகில் ‘அம்மு’ என்று அறியப்பட்டவர், அரசியல் உலகில் ‘அம்மா’ என்று விளிக்கப்பட்டது ஒரு சாதனை. தமிழ்நாட்டிலிருந்து ஒரு ‘பிரதமர் வேட்பாளர்’ என்று தன்னைப் பிம்பப்படுத்தியது பெருஞ்சாதனை.”
“போராட்டங்களால் சூழப்பட்டது அவரது வாழ்வு. ஆனால் எந்த நிலையிலும் அவர் தன் கர்வப்பெருமையைக் கரைத்துக்கொண்டதில்லை. மழையில் நனைந்தாலும் சாயம்போகாத கிளியின் சிறகைப்போல இழிவுகளுக்கு மத்தியிலும் அவர்தன் இயல்புகளை மாற்றிக்கொண்டதில்லை.”

செல்வி வைஷாலி யோகராஜாவின் இசைக் கச்சேரிகள் - திருமதி மாலதி சிவசீலன்

.


அண்மையில் இலங்கையிலிருந்து வருகைதந்த செல்வி வைஷாலி யோகராஜா அவர்கள் சிட்னியில் இரண்டு கர்நாடக இசை கச்சேரிகளை வழங்கினார்.
செல்வி வைஷாலி சிறுவயதிலிருந்தே கர்நாடக இசையை பயின்று வருகிறார். இவர் இலங்கையில் பல விருதுகளையும், பாரட்டுக்களையும் பெற்றுள்ளார். குறிப்பாக 2014ம் ஆண்டுககான 'ஜீனியா சுப்பர் ஸ்டார்' விருதினையும், 2015ம், 2016ம் ஆண்டுக்கான 'Best Solo Singer' என்ற ஜனாதிபதி விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (4/12/2016) அன்று திரு திருமதி கேதீஸ்வரனின் யோகராஜனின் இல்லத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட செல்வி வைஷாலி யோகராஜனின்  கர்நாடக இசைக் கச்சேரிக்கு சங்கீத ஆசிரியையான என்னையும் அழைத்திருந்ததின் பேரில் அங்கு சென்றிருந்தேன். அங்கு சங்கீத ஆர்வலர்களும், பிரியர்களும், ஆசிரியர்களும் வந்திருந்தார்கள். ஒரு பதின்மூன்று வயதுச் சிறுமியின் இசைக் கச்சேரியா? என்ற கேள்வுடன் தான் நான் அங்கு சென்றிருந்தேன். இரண்டு வீணைகளும், ஒரு தம்புராவும் அலங்கரித்த ஒரு மேடை ஒழுங்கில் பக்கவாத்தியக் கலைஞர்களான திரு கிராந்தி கிரன் முடிகொண்டா அவர்கள் வயலினுடனும், திரு  சந்தானக்கிருஷ்ணன் சிவசங்கரி அவர்கள் மிருதங்கத்துடனும் அமர்திருக்க, பாவாடை சட்டையுடன் அவைக்கு வணக்கம் சொல்லி வைஷாலி அவர்கள் 'ஹம் கணபதே' என்ற ஹரிகேச நல்லூர் முத்தையா கிருதியை அந்தச் சிறுமி அவைக்காற்றிய முறையில் இது இந்த வயதுக்குரிய ஆற்றல் அல்ல என்பதையும், அதற்கு மேலாக தெய்வத்தின் ஆசி பெற்ற ஒரு 'ஞானக்குழந்தை' இவர் என்பதை புரிந்து கொண்டேன். அதன் பின் 'கற்பக மனோகரா' என்ற பாபநாசம் சிவனின் மலையமாருத கிருதியைப் பாடி முழு சபையையும் தன் இனிய குரலினால் கட்டிப் போட்டார்.


அம்மாவிற்கு கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதா ?

.

இலங்கைச் செய்திகள்


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி யாழ்நகரில் கடையடைப்பு

அம்மாவின் மறைவுக்கு மலையகத்தில் அஞ்சலி...! 

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி வடமாகாண சபைக் கொடிஅரைக்கம்பத்தில் ; முதல்வர் சீ.வி. இரங்கல்

தமிழக முதல்வரின் மறைவுக்கு ஜனாதிபதி அனுதாபம்

மறைந்த தமிழக முதலமைச்சருக்கு வடக்கு மாகாண சபையில் அஞ்சலி

ஊவா மாகாண பதில் முதலமைச்சராக செந்தில் தொண்டமான் பதவியேற்பு

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு வாபஸ்

த.தே.கூ. வின் மீதான தாக்குதல் சம்பவம் : மூவருக்கு மரணத் தண்டனை

உப்பளங்கள் தனியார் மயமாக்குவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

கருணா அம்மானுக்கு பிணை.!

யாழ்.பல்கலை மாணவர்கள் மோதல் ; வழக்கு விசாரணை முடிவு

வவுனியா தினச்சந்தையில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி நிகழ்வு.!

வவுனியாவில் நடு வீதியில் அமர்ந்த பெண் பொலிஸாரால் அதிரடியாக கைது

வவுனியாவில் காணாமல்போனோரின் உறவினர்கள்  ஆர்ப்பாட்டம்

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு சங்கிலி பேரணி

பெண்கள் மற்றும் சிறுவர் உரிமையை பாதுகாப்போம் ; ஹட்டனில் கவனயீர்ப்பு பேரணி

 கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கு கவனயீர்ப்புக்கு போராட்டம்

கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரி கையெழுத்து வேட்டை


புரிதலும் பகிர்தலும் --அருண். விஜயராணி நேர்காணல் -

.
 " ஒரு  பெண்  குழந்தையைப்  படிப்பித்தலே  ஒரு நாடு  செய்யக்கூடிய   சிறந்த  மூலதனம்"
" நம் மரபு பற்றி  நமக்கே  ஒரு  பெருமை  இருக்க  வேண்டும் "


( இலங்கையில் வெளியாகும் ஞானம் மாத இதழின் ஆசிரியர் தி. ஞானசேகரனுக்கு 1999 இல் அருண். விஜயராணி வழங்கிய நேர்காணல். புரிதலும் பகிர்தலும் நேர்காணல் தொகுப்பில் வெளியானது. 16-03-1954 ஆம் திகதி இலங்கையில் உரும்பராயில் பிறந்த விஜயராணி செல்வத்துரை  இலக்கியவாதியானதன்  பின்னர், அருணகிரி அவர்களை மணந்து  அருண். விஜயராணி என்ற பெயரில் எழுதிவந்தவர். கடந்த 13-12- 2015 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் மறைந்தார்.
அவரது ஓராண்டு நினைவு அஞ்சலி காலத்தில் இந்த நேர்காணலும் பதிவாகிறது. )

கேள்வி:   இலங்கையிலும்  இங்கிலாந்திலும்  வாழ்ந்து  தற்போது அவுஸ்திரேலியாவில்  குடியேறியிருக்கிறீர்கள்.  இம்மூன்று நாடுகளிலும்  தங்கள் வாழ்வு அனுபவங்கள் எழுத்தாளர் என்ற நிலைமையில்  எவ்வாறு அமைந்துள்ளன ?
பதில்:   "  இலங்கை  விஜயராணியே  நான்  ரசிக்கும்  எழுத்தாளர்.  கன்னிப் பெண்ணாக  இருந்து  படைத்த  படைப்புகள்  தைரியமானவை.  போலித்தனம்   இல்லாதவை.   யாருக்கும்  பயப்படாமல்  எழுதிய  எழுத்துக்கள்.    திரும்பிய  பக்கம்  எல்லாம்  இலக்கியம்  பேச  மனிதர்கள் இருந்தார்கள்.   கருத்துச்  சுதந்திரம்  இருந்தது.   (சில  அரசாங்கக் கட்டுப்பாடுகளைத்   தவிர)   மாற்றுக்  கருத்துக்கள்  பலவற்றை  பகிர்ந்து கொள்ளக்கூடிய   சந்தர்ப்பங்களும்,    அவற்றை  முன்வைக்க  மாறுபட்ட கருத்துடைய   பல  பத்திரிகைகள்,  சஞ்சிகைகள்,  வானொலி, தொலைக்காட்சி   என்று  அங்கு  ஓர்  இலக்கிய  உலகமே  இருந்தது.   எனவே நாம்   சுழல  விரும்பாத  உலகத்தை  ஒதுக்கி  விட்டு  இலக்கிய  உலகில் மூழ்கித்   திளைக்க   அது   வசதியாக   அமைந்தது.


மறைந்த நடிகர் சோவைப் பற்றி சிவகுமார்

.

கவி விதை - 20 - அன்பின் நிறம் வெள்ளை --- விழி மைந்தன் --

.


அமைதியான  அந்த  ஊரிலே அமைதியான மனிதர்களுக்குள்ளும் அமைதியானவளாக அவள்  இருந்தாள்.

அவளுடைய பிறப்பு உலகத்தில் என்ன, அந்த ஊரிலேயே, ஏன்  அவள் வீட்டிலேயே  ஒரு சம்பவமாகக் கருதப் படவில்லை.  ஆறு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்  சகோதரர்களில் நட்ட நடுவில் பிறந்தவள் அவள். அவளுடைய பிறந்த  நாளை யாரும் கொண்டாடவில்லை. அவளுடைய ஆத்தையோ அப்புவோ அவளுக்குச் செல்வத்தையோ கல்வியையோ இம்மியளவும்  வைத்து விட்டுப் போகவில்லை.


அந்த நாட்டை வெளியிலிருந்து தாக்கிய வியாதிகளுக்கோ, அல்லது உள்ளிருந்து அரித்த புற்று நோய்களுக்கோ அந்த ஊரும் விதிவிலக்கல்ல. அந்த ஊருக்குத்  தலைவரென  இருந்த சிதம்பரம்பிள்ளை வாத்தியார் வெட்டுக்கொத்துகளுக்குப்  போகாதவர். நல்ல மனிதர் என்று கூடச் சொல்லலாம்.  ஆனால் அவர் பழைமை வாதி. தனிப்பட்ட ரீதியில் யாருக்கும்  துன்பம் செய்யாதவர் ஆனாலும்,  பாட்டன்  முப்பாட்டன் காலத்தில் இருந்து  வருகின்ற வழக்கங்கள் யாருக்கும் துன்பம் தருகின்றனவா என்று யோசிப்பதற்கும்  அவர் போகவில்லை.

துக்ளக் சோ சகாப்தம் நிறைவடைந்தது -முருகபூபதி

.
அரசியல்  தலைவர்களினால்  ஏற்கவும்  இழக்கவும் முடியாத  தனித்துவம்  மிக்க  துக்ளக் சோ
நாடகத்தில் -   திரைப்படத்தில் -   இதழியலில்  அங்கதச்சுவையை   இயல்பாக  இழையவிட்டவரின் சகாப்தம்  நிறைவடைந்தது

                                                                           

" நான் ஒரு பத்திரிகை தொடங்கப்போகின்றேன். நீங்களும் ஆதரவு தரவேண்டும்."  என்று  35 வயதுள்ள  அவர்,  நடிகர்திலகம் சிவாஜிகணேசனிடம்  கேட்கிறார்.
நகைச்சுவை நாடகங்களிலும் சில திரைப்படங்களிலும் அறிமுகமாகியிருந்த அவர்,  சட்டமும் படித்திருந்தார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். சில வர்த்தக நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும்  விளங்கினார். எதனையும் தர்க்கரீதியில்   விவாதிக்கும் திறமையும் அவருக்கிருந்தது. இவ்வளவு ஆற்றலும்  இருந்தும்,  எதற்காக பத்திரிகையும் நடத்தி வீணாக  நட்டப்படவேண்டும் என்ற நல்லெண்ணத்தின்  அடிப்படையிலேயே சிவாஜி  அவருக்கு  புத்திமதி  சொன்னார்.
" உனக்கு நடிப்பைத்தவிர வேறும்  ஒரு  நல்ல  தொழில் தெரியும்.  நீ பத்திரிகை  நடத்தினால் அது எப்படி இருக்கும் தெரியுமா...? கள் அருந்திய குரங்கை  தேனீக்கள் கொட்டினால் அது என்ன பாடுபடுமோ அப்படித்தான்  இருக்கும்  உனது பத்திரிகையும்" என்றார் சிவாஜி.
ஆனால்,  இதனைக்கேட்ட  அவர்  தனது  யோசனையை கைவிடவில்லை. 1970 ஆம் ஆண்டு பிறந்ததும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தில் தனது பத்திரிகையின் முதல் இதழை வெளியிட்டார். நாற்பத்தாறு ஆண்டுகளையும் கடந்து இன்றும் வெளியாகிறது அந்த இதழ்.
அதன் பெயர் துக்ளக்.


தமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச்சென்றது என்ன?



.

சிதம்பரம் பக்கத்திலுள்ள கொடியம்பாளையம் ஒரு தீவு கிராமம். அரசுசார் எந்தத் தேவைக்கும் கொள்ளிடம் ஆற்றைக் கடக்க வேண்டும். தேர்தல் சமயத்தில் நானும் நண்பர் முருகேசனும் அங்கு சென்றிருந்தோம். நல்ல பசி. “டீ குடிக்கலாமா?” என்றார் முருகேசன். போனோம். ஒரு மூதாட்டி நடத்தும் டீக்கடை அது. அவருடைய தோழிகள்போல மேலும் ஐந்தாறு மூதாட்டிகள் அங்கு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வயது எண்பது, தொண்ணூறு இருக்கும். அரசாங்கத்தின் செயல்பாடு, அதிமுக ஆட்சியைப் பற்றி முருகேசன் மெல்ல அவர்கள் வாயைக் கிளறினார். கடும் அதிருப்தியான வார்த்தைகள் வெளிவந்தன.
“சரி, இந்த முறை யாருக்கு ஓட்டுப் போடப்போகிறீர்கள்?” என்றார். “ரெட்டலைக்குத்தான்” என்றார்கள். முருகேசன் திகைத்துவிட்டார். “ஏம்மா, இந்நேரமும் அரசாங்கத்தை அவ்ளோ திட்டினீங்க; இப்போ திரும்பவும் அந்தம்மாவுக்கே ஓட்டுப்போடுறேன்றீங்க?” என்றவரிடம், “ஆயிரம் இருந்தாலும் அம்மா கட்சியில்ல?” என்றார்கள். வாக்கியத்துக்கு வாக்கியம் அம்மா, அம்மா, அம்மா. “ஏம்மா, உங்களுக்கெல்லாம் அந்தம்மாவோட அம்மா வயசு இருக்கும்போல இருக்கே, எப்படி அவங்களை நீங்க அம்மான்னு சொல்றீங்க?” என்றார் முருகேசன். ஒரு ஆயா சொன்னார், “நாங்கல்லாம் அம்மா அப்பா இல்லாத பிள்ளைகளா, அவோ அம்மான்னு இருக்காவோளா, ஏத்துக்கிட்டோம். தாய், தகப்பனில்லா எங்களுக்கு அவக அம்மாவா இருக்காங்க!”
ஜெயலலிதா இறந்த செய்தி அதிகாரபூர்வமாக வந்த இரவில் வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அந்நேரத்திற்குக் கணினியை இயக்க ஆரம்பித்த வெளிச்சத்தில் விழித்த என் மகள், “என்னப்பா?” என்றாள். செய்தியைச் சொன்னேன். அடுத்த கணம் ஓவென்று அழ ஆரம்பித்தாள். பள்ளிச் சிறுமி. இதுவரை ஜெயலலிதாவைப் பற்றி அவள் ஒரு வார்த்தை பேசி நான் பார்த்ததில்லை.

கடற் கள்ளன் - எச்.ஏ. அஸீஸ்

.

உற்றுப் பார்த்திருப்பாய்
உன் கூர் விழிப் பார்வை
வியாபிக்கும்
எல்லாப் பரப்பினையும்
ஒரு மரத்தின் உச்சியிலிருந்து
கடற்கரையின்
புதர்களில் மறைந்து
ஒரு பாறை விளிம்பில்
தரித்து நின்று
எல்லாப் பரப்பினையும்
உற்றுப் பார்த்திருப்பாய்
ஒரு பறவை
கால் கடுக்கக் காத்திருந்து
நோட்டமிட்டு
வட்டமிட்டு
பறந்து களைத்து
கண்டெடுக்கும் இரையொன்றை
கொத்தி அது கிளம்புகையில்
என்ன எதிர்பார்ப்பு
காத்திருக்கும் குஞ்சுகளுக்கு
கறி கொண்டு விரைகிறதோ
அவ்வேளை நீ பார்த்து
அப்படியே ஒரு உந்தில்
மின்னலெனப் பறந்து
மிரட்டி வழி மறிக்க
என்ன செய்யும் அப்பறவை
ஏவுகணை வேகத்தில்
எகிறி நீ விரட்டுவதை
எங்கணம் அது பொறுக்கும்
உயரத்தில் காற்றிடையே
பயந்து குடல் நடுங்கி
பரிதவிக்கும் பறவை அதன்
வாய்  நழுவி  விழும் இரையை
பற்றி நீ பிடிப்பாய்
பட்டென மறைந்திடுவாய்
வானத்தில் வழிப்பறியா
ஒரு வகையான பகற்கொள்ளை
கடற் கள்ளனே
நீ வாழும் விதம் புதிதல்ல
சில மனிதருக்கு

நீயா நானா கோபிநாத் தாக்கப்பட்டார்

.
தமிழக முதல்வர் செலவே ஜெயலலிதாவின் மரண நிகழ்வில் மக்கள் நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் மேற்கொண்ட தடியடி பிரயோகத்தில்  விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத் அவர்களும் அகப்பட்டுக் கொண்டு தாக்கப்படும் காட்ச்சியை  கீழே காணலாம் . இவருக்கே இந்த நிலை என்றால் அப்பாவி ஜனங்கள் எப்பாடு பட்டிருப்பார்கள் ?




மு.சடாட்சரனின் படைப்புகள், யதார்த்த உலகின் அநுபவ சுவடுகள்

.


திரு.திருமதி முருகேசு கனகம்மா தம்பதியினரின் புதல்வரான சடாட்சரன்(1940.05.06) கல்முனையை பிறப்பிடமாகக் கொண்டவர்.1959 இல் சுதந்திரன் பத்திரிகையில் வெளியான பாரதி யார் எனும் கவிதையுடன் தனது கவிதைப் பயணத்தை ஆரம்பித்து 1960 களில் கவிஞர் நீலாவணன்,மருதூர்க்கொத்தன்,நூஃமான் ஆகியோரோடு கைகோர்த்து கல்முனைப் பிரதேச தழிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார்

ஈழத்து நவீன கவிதை முன்னோடிகளுள் முக்கியமானவரும் தம்மைத் தொடர்ந்து வந்த கவிஞர் குழாத்தினை இனங்கண்டு ஊக்கப்படுத்திய கவிஞர் நீலாவணனின் பண்ணையிலே உருவானவரே கவிஞர் மு.சாடாட்சரன் ஆவார்.கிழக்கிலங்கை தமிழ் மக்கள் மத்தியில் 1960 களில் இருந்து எழுத்தாளராகவும்,கவிஞராகவும்,சிறுகதையாசிரியராகவும் அறியப்படுகிறார்.பாதை புதிது எனும் கவிதைத் தொகுதியையும் மேட்டுநிலம் எனும் சிறுகதைத் தொகுதியையும் நூலுருவாக்கியுள்ளார் என்றால் மிகையாகாது.

உலகச் செய்திகள்


முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்தார் : அப்பலோ வைத்தியசாலை உறுதி செய்தது : தமிழகத்தில் பெரும் பதற்றம்

ஜெயலலிதா உடலுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கதறி அழுது அஞ்சலி

ஜெயலலிதாவின் பூதவுடலுக்கு மோடி அஞ்சலி

பச்சைப் பட்டு சேலையணிந்து மெரீனா கடற்கரையில் மீளாத் துயில் கொண்ட தங்கத்தாரகை ஜெயலலிதா : 'மக்களால் நான், மக்களுக்காகவே நான்" - மொளனித்தது ஒரு சகாப்தத்தின் குரல்

நியூஸிலாந்து பிரதமர் திடீரென பதவி விலகல்

இத்தாலியின் பிரதமர் பதவி விலகினார்

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் : 25 பேர் பலி

 47 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியது

மறைந்த ஜெயலலிதா முகத்தில் 4 கரும்புள்ளிகள்: வைரலாகும் புகைப்படம் : தொடரும் மர்மம்

48 பேர் பலியான பாகிஸ்தான் விமானம் விபத்திற்கான காரணம் வெளியானது

மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி காலமானார்

கால்பந்து மைதானத்திற்கு அருகாமையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி

சென்னை முழுதும் திடீர் மாற்றம் : காரணம் என்ன.?


இலங்கையில் பாரதி (அங்கம் 02) - முருகபூபதி

.
பாரதியின்  ஈழத்து  ஞானகுரு !  -  யார்  இந்த  யாழ்ப்பாணத்துச்சாமி ...?
அருளம்பலம்  சாமியா...? ஆறுமுகம் சாமியா...?



பிரிட்டிஷாரின்  அடக்கு முறையினால்         புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்த பாரதிக்கு,  இங்கும்   பல நண்பர்கள் கிடைத்தார்கள்.
அவர்களில் கிருஷ்ணமாச்சாரியார்  என்னும்   இயற்பெயர்கொண்ட குவளைக்கண்ணன்  முக்கியமானவர்.  இவர்தான் பின்னாளில் 1921 செப்டெம்பர்  மாதம்  பாரதியை  திருவல்லிக்கேணி  பார்த்தசாரதி கோயிலில்  இருந்த  மதம்  பிடித்த  யானையிடமிருந்து காப்பாற்றியவர்.
மனைவி  செல்லம்மா  அயல்வீட்டிலிருந்து  கடனாக  வாங்கிவந்த அரிசியையும் " காக்கை  குருவி  எங்கள் ஜாதி "  என்று  பாடி காகங்களுக்கு  அள்ளித்தூவிய  இரக்கமுள்ள  பாரதி,  கோயில் யானைக்கு  வாழைப்பழமும் தேங்காயும் கொடுத்தது  ஆச்சரியமில்லை.
காகம்  குருவிகளுக்கு  மதம்  பிடிக்காது.  பாரதியை  அவை கொத்தவில்லை.  அந்தக்கோயில்  யானைக்கு  மதம் பிடித்திருந்தது பாரதிக்குத்  தெரிய நியாயம்  இல்லை.
குவளைக்கண்ணன்  கண்ணிமைக்கும்  நேரத்தில்  அங்கு  குதித்து அவரை  காப்பாற்றினாலும், அதன்  பின்னர்  அந்த  அதிர்ச்சியிலிருந்து மீளாமலேயே வயிற்றுவலி  கண்டு  அதே  செப்டம்பர்  மாதம்  பாரதி  மறைந்தார்.
 இறுதியாத்திரையில்  சென்ற  விரல் விட்டு எண்ணத்தக்க மனிதர்களில்  தேம்பித் தேம்பி  அழுதுகொண்டு  வந்த  குவளைக்கண்ணன்,  புதுவையிலிருந்து   சென்னை வரையில் பாரதியின்  நெருக்கமான  நண்பராகவிருந்தார்.


கிழக்கிலங்கையின் மூத்த மகா கலைஞன் நீலாவணன் - பாக்கியராஜா மோகனதாஸ்

.


கிழக்கிலங்கையின் கல்முனையின் அருகேயுள்ள பெரியநீலாவணை எனும் பழம்பதியில் 1931.06.31 அன்று கேசகப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்த கே.சின்னத்துரை தனது நாற்பத்தைந்து வருட காலத்திற்குள் தமிழ் இலக்கியவுலகில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பெற்றுள்ளார் என்பதை அவரது படைப்புகளுக்கூடாகவும் இலக்கிய ஆர்வலர்களுக்கூடாகவும்,நண்பர்களுக்கூடாகவும் அறியமுடியும்.கவிஞர் இ.முருகையனுக்கு(1935.04.23)முற்பட்டவராகவும்,து.உருத்திரமூர்த்திக்கு(1927) காலத்தால் பிற்பட்டவராகவும் விளங்குகின்றார். 
இருபது வருட கால இலக்கிய வாழ்வில் நூற்றுக்கணக்கான கவிதைகளும் பல கட்டுரைகளும் புனைகதைகளும் மூன்று பா நாடகங்களும் வேளாண்மை எனும் குறுங் காவியமும் நீலாவணனின் இலக்கியஇ கவித்துவ ஆளுமையை வெளிப்படுத்துவதாகவுள்ளது.நீலாவணன் தான் வாழ்ந்த காலத்திற்குள் ஒரு நூலையேனும் வெளிக்கொணர்வதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கவில்லை என்பதை உறவினர்களாலும் இலக்கிய ஆர்வலர்களாலும்  அறியக்கூடியதாகவுள்ளது.எனினும் நீலாவணனின் இலக்கிய ஆர்வல நண்பர்களான கவிஞர் எம்.ஏ.நுஃமான் அவர்களாலும் பிரபல சிறுகதை எழுத்தாளர் வ.அ.இரசரெத்தினத்தின் முயற்சியாலும் நூலுருப்பெற்றன.

ஓலமிட்டு அழுகின்றோம் ! எம். ஜெயராமசர்மா ... மெல்பேண்

.

      ஜெயமென்னும் பெயர்கொண்டு 
       ஜெயித்துவந்த ஜெயாவம்மா
       ஜெயாமுதல்வர் பதவியுடன்
       ஜீவனையே கொடுத்துவிட்டார்
       ஜெகமதனில் ஜெயிப்பதற்கு
       ஜெயலலிதா ஆகிநின்றார்
       ஜெயித்துவிட்டார் உள்ளமெலாம்
       ஜெயாவம்மா வாழுகிறார் !
        துணிவுகொண்ட பெண்ணானார்
        துயர்பலவும் தான்கண்டார்
        தனிமையிலே தவித்தாலும்
        தமிழ்நாட்டை நினைத்துநின்றார் 
        அமுதான தமிழோடு
        ஆங்கிலமும் பேசிநின்றார்
        அதிமுகாவினது ஆணிவேராய்
        அவர் இருந்தார் !
        அஞ்சாமல் ஆட்சிசெய்த
        அம்மாவைக் காண்பதெப்போ
        அவருடைய துணிவான
        அழகுதமிழ் கேட்பதெப்போ 
         புன்சிரிப்பு பூத்துநிற்கும்
         பூமுகத்தைக காண்பதெப்போ 
         புகழ்பூத்த பெண்மணியே
         உனைக்காணா அழுகின்றோம் !
         ஆளுமைமிக்க அரசியல் தலைவியே
         ஆரையும்துணிவுடன் அணுகியே நின்றனை
          போரிடும்வல்லமை உறுதியாய் கொண்டனை 
          காலனைவென்றிடும்  வல்லமை இழந்ததேன் !
           உன்முகத்தைக் காணாமல் உள்ளமெலாம் அழுகுதம்மா
           உன்னுழைப்பை உரமாக்கி உயரமெலாம் உயர்ந்தாயே
           என்னினிய தமிழ்மக்கள் எனவெங்கும் குரல்கொடுத்தாய்
           உன்னினிய குரல்கேளா ஓலமிட்டு ழுகின்றோம் !