ரகுநாதனுடன் இன்னிசை மாலை

கலை ஒலி மாலை 2011 ATBC என் பார்வையில் -சேரன் இளங்கோ.

.


வில் வளைவதும், வேங்கை பதுங்குவதும் பணிந்ததாக அர்த்தம் அல்ல. இதற்கு ஒத்தவகையில் பாகம் 1, பாகம் 2 என்று, இரண்டாகப் பிரித்து ATBC யின் கலை ஒலி மாலை 2011 நிகழ்ச்சியில் இரண்டு உன்னத கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள்ஓரே மேடையில் நடைபெற்றன. இடம்:
Mt St Benedict Girls High School, Pennants Hills.
பாகம் 1 – நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் அவர்களின் நெறியாழ்கையோடு, மக்கள் தொகை நிரம்பி வழிந்த மண்டபத்தில், அவரது நாட்டியப்பள்ளி மாணவர்களால் அற்புதமாக நடாத்தப்பட்ட “கடலோரம்” நாட்டிய நாடகம். திருமதி கார்த்திகா கணேசரைப் பற்றி இங்கே அறிமுகம் செய்ய வேண்டிய தேவை அதிகம் கிடையாது.

ABC தொலைக்காட்சியில் ”இலங்கையின் கொலைக்களங்கள்”

.

அவுஸ்திரேலிய ABC தொலைக்காட்சியில், 4  Corners நிகழ்ச்சியில் ஜூலை மாதம்  4 ம் திகதி  திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்கு சனல்4 தொலைக்காட்சியில் ஒலிபரப்பான ”இலங்கையின் கொலைக்களங்கள்” விபரணத் தொகுப்பின் அவுஸ்திரேலிய மறு-ஒளிபரப்பு.இடம் பெற உள்ளது.

எலும்புக்கூட்டு ராஜ்ஜியங்கள் - கவிதை -எம்.ரிஷான் ஷெரீப்

.


காற்றினைப் போல்
எங்கள் வாழ்க்கை,
ஓரிலக்கில்லாமலும்...
அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டும்...!

ஓடும் நதியினைப் போல்
எங்கள் பயணம்,
ஓரிடத்தில் தரித்திருக்க முடியாமலும்...
திக்குதிசையின்றி பாய்ந்தோடிக்கொண்டும்...!

வானவில்லினைப் போல்
எங்கள் சந்தோஷம்,
நிலைத்து நிற்காமலும்...
உடனே கலைந்து போவதாயும்...!

அப்பல்லோ ‘சுந்தா’ சுந்தரலிங்கம் நினைவுகள்


.
அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி ஜோன்ஸனால் பாராட்டப்பட்டவர்

                                                                                                                  முருகபூபதி


 “ நீ ஒரு Prism போன்றவன். உனக்குள் உன்னிடத்துப் பல திறன்கள் பல பண்புகள் ஒன்று திரண்டு ஒவ்வொன்றும் தத்தம் தனித்துவத்துடனும், அதேவேளையில் ஓர் ஒருங்கிணைவுடனும் உள்ளன. அதனால் உன் மீது (மற்றவர்களின்) ஒளிபட, நீ உன்னுள் இருக்கும் கதிர்களை வீசி ஜொலிக்கிறாய். வேண்டுவோர் வேண்டுவதே ஈயும் தன்மை உன்னுடைய அடிப்படைப்பண்பு. எவரையும் நண்பனாக வைக்கும் திறனும், ஒருமுறை நண்பன் ஆனவனைச் சீவியகால நண்பனாக வைத்திருக்கும் சால்பும் உன்னுடையவை. இதனால் உண்மையான நீ யார்? என்று நாங்கள் சர்ச்சித்ததுண்டு.”- இவ்வாறு சுந்தாவைப்பற்றி எழுதியிருப்பவர். பேராசிரியர் கா.சிவத்தம்பி.
 பேராசிரியரின் கூற்றில் உள்ள உண்மைத்தொனியை சுந்தாவுடன் நெருங்கிப்பழகியவர்களினால் மாத்திரமே புரிந்துகொள்;ள முடியும்.

மெல்லுகின்றவாய்க்கு அவலாகும் அபலைப் பெண்கள் !

.
தென்னிலங்கையில் தொழில் வாய்ப்பைக் காட்டி தமிழ் பெண்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக வெளிவந்த செய்தி : மெல்லுகின்றவாய்க்கு அவலாகும் அபலைப் பெண்கள் !
                                                                                                              - நமது யாழ் நிருபர்
படம் - மருதானையில் பொலிசாரால் இளம் பெண்கள் விடுவிக்கப்பட்ட விடுதி
வடக்கு கிழக்கைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 9 பெண்கள் கொழும்பில் மருதானைப்பகுதியிலிருந்த விடுதியொன்றில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பரிதாபச் செய்தி இவ்வார யாழ் பத்திரிகைகளில் பிரதான செய்தியாக வெளிவந்திருந்தது. இவர்களுள் 8 பெண்கள் 16-24 வயதிற்குட்பட்டவர்களெனவும் அவர்களுள் இருவர் 18 வயதிற்குக் குறைந்தவர்களெனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிப்பதாக பத்திரிகைகள் தெரிவித்திருந்தன.

வித்துவான் வேந்தனாரின் நூல்கள் வெளியீட்டு விழா

மெல்பேனில் வித்துவான் வேந்தனாரின் நூல்கள் வெளியீட்டு விழா 
௦10௦.07.2011 ஞாயிற்றுக்கிழமை 


இலங்கை இந்திய செய்திகள்இலங்கைப் பிரச்சினைகளில் அவசரம் காட்ட முடியாது! இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பு


[ புதன்கிழமை, 29 யூன் 2011]

இலங்கைப் பிரச்சினைகளில் அவசரம் காட்ட முடியாதெனவும் மிகுந்த கவனத்துடனும் பொறுமையுடன்தான் எதையும் அணுக வேண்டும் எனவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் இன்று அவர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாகிஸ்தான்- சீனா- பங்களாதேஷ் ஆகிய அண்டை நாடுகளுடனும் அவ்வாறான போக்கினை கடைப்பிடிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த பிரதமர்- ராகுல் காந்தி பிரதமராக எந்த தடையும்- சிக்கலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பென்டகன், செனட் இணைய தளங்களுக்குள் ஊடுருவிய 19 வயது இளைஞன் கைது

.

அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன், உளவுப் பிரிவான சி. ஐ. ஏ. உட்பட சர்வதேச அளவில் முக்கிய இணையத் தளங்களுக்குள் ஊடுருவிய குற்றச்சாட்டில் பிரிட்டனின் 19 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். கடந்த மே 7ஆம் திகதி தொடக்கம் சர்வதேச அளவில் முக்கிய இணைய தளங்களுக்குள் ஊடுருவி தகவல் சேகரித்தது மற்றும் அதனை முடக்கிய சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பி வந்தது. இதில் அமெரிக்க உளவு அமைப்பான சி. ஐ. ஏ. மற்றும் பிரித்தானிய உளவு அமைப்பான சொகா இணையத்தளங்கள் தாக்கப்பட்டன. தவிர அமெரிக்க செனட் சபையின் இணையத் தளம், பென்டகன் தளம் ஆகியவைக்குள் ஊடுருவி தகவல்கள் பெறப்பட்டிருந்தன. இதுதவிர, பொக்ஸ் செய்திச் சேவை, ஜப்பான் சோனி மியூசிக் போன்ற இணைய தளங்களுக்குள்ளும் ஊடுருவல் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு இணையத் தளங்களை குழப்புவோர் தம்மை ‘லுல்ஸ் செகியுரிட்டி’ என அடையாளப்படுத்தியிருந்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

.

(பேராசிரியர் தி. வேல்நம்பி, தலைவர், கணக்கியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)

இலங்கை பல்கலைக்கழகத்தின் ஆரம்பம்19 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியில் பிரித்தானியக் குடியாட்சியில் இருந்த இலங்கையில் ஆரம்ப இடைநிலைப் பாடசாலைகள் சிறப்பான அபிவிருத்தியை அடைந்திருந்த போதிலும் பிரித்தானியா இந்தியாவைப் போன்று பல்கலைக்கழகங்கள் எதுவும் இருந்திருக்கவில்லை. இக்காலப்பகுதியில் இலங்கைத் தீவின் சிறந்த இடைநிலைப் பாடசாலையானது கொழும்பை முக்கியமாக கொண்டு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.1859 ஆம் ஆண்டின் முன்னர் அமைக்கப்பட்டிருந்த இராணியின் கல்லூரி ஆனது கல்கத்தாப் பல்கலைக்கழகத்தின் இணைந்த பல்கலைக்கல்லூரியாக இருந்தது. இது பின்னர் றோயல் கல்லூரி எனப் பெயரிடப்பட்டது. இது முதலில் மற்றிக்குலேசனுக்கு பின்னைய கல்வியை வழங்கியதுடன் இலண்டன் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு வெளிவாரிப் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார் படுத்தியது.


பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா அருளிய இளைஞர்களுக்கான அறிவுரைகள்

.
பாகம் 5

விரயம்:

அதே போலவே பணத்தை வீணாக்காதீர்கள். சில மாணவர்கள், ஹோட்டலில் சாப்பிடுவதிலும், சீட்டு விளையாடுவதிலும், சூதாடுவதிலும் பணத்தை விரயம் செய்கிறார்கள். பணத்தை வீண் செலவு செய்வது மிகத்தீமையானது. உங்கள் வேலையை நீங்களே செய்யுங்கள். யாரிடமும் நீங்கள் சார்ந்திருக்காதீர்கள். நேரம் கிடைக்கும் போது உங்கள் துணிகளை நீங்களே துவைத்துக் கொள்ளுங்கள். நீங்களே துவைக்க முடியும்போது இதற்காக துணி வெளுப்பவரிடம் தரவேண்டிய அவசியம் ஏன்? உங்கள் தந்தையின் பணத்தை விரயம் செய்ய உங்களுக்கு உரிமையில்லை.

காலம்தான் கடவுள். அதனால் தான் இறைவனை ‘காலய நமஹ’ கால காலாய நமஹ, காலதர்ப்ப தமனாய நமஹ, காலாதீதாயநமஹ’ எனப் போற்றுகிறோம். காலத்தை விரயம் செய்வது வாழ்க்கையை வீணாக்குவதற்குச் சமம். உலகியல் சௌகரியங்களுக்காக உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். அதற்குப் பதில் இறைவன் நாமத்தைச் சொல்லி அதன் இனிமையில் தெய்வீகத்தை உணருங்கள்.

Where do you come from -கவிஞர் ஆவூரான்.எங்கிருந்தோ
எங்கிருந்து
வந்தோம் நாங்கள்
எங்கு போவோம்-இனி
எங்கு போவோம்

எழுதா விதியின் பயணம்-இங்கே
எழுதித் தொடர்கிறதே
எதிலிகளாய் தமிழன் வாழ்வு
தெருவில் கிடக்கிறதே

நான் ஒரு பூஜ்ஜியம் - சிறுகதை - சூர்யா


.


சத்தியமாக சங்கோஜமாகத்தான் இருந்தது. அந்த கடனை திருப்பிக் கொடுத்துவிடுவேன் என்று நம்பி இந்த ஊரில் அவன் அழைந்து கொண்டிருப்பதை பார்க்கும்பொழுது. ஒரு கடன் கொடுத்தவன் தனக்கு ஏற்பட்ட மனச்சோர்வை போக்கிக் கொள்வதற்காக ஒரு மனோதத்துவ நிபுணரை அணுகுவானேயானால், அவனுக்கு அந்த மருத்துவரால் உணர்த்தப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவெனில், கடன் வாங்கிய ஒருவன் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்ட பொழுதும் கொடுக்காமல் இருக்கிறான் என்றால் அவனிடம் அவ்வளவு பணம் இல்லை என்பதுதான். அவனைத் தேடி வீனாக அழைய வேண்டியதன் அவசியம் என்ன. மாதவன் நல்லவன்தான் அவனுக்கு தேவையைய் இருந்தது அந்த 50 ஆயிரம் ரூபாய். ஆனால் நான் 50 ஆயிரம் ரூபாயை மொத்தமாக பார்த்தது என் வாழ்வில் ஒரே ஒரு முறைதான். அது மாதவன் என்னை நம்பி சிரித்தபடி உரிமையோடு எனக்கு கடன் கொடுத்த பொழுதுதான்.

உலகச் செய்திகள்

காபூலில் ஐந்து நட்சத்திர விடுதியில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்: 14 பேர் பலி(காணொளி29/06/2011
 ஆப்கான் தலைநகரான காபூலில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற மனித வெடிகுண்டுத் தாக்குதல்களில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.


பிரபல ஐந்து நட்சத்திர விடுதி வலையமைப்பான இண்டர் கொண்டினன்டலின் காபூலில் அமைந்துள்ள விடுதியே இத்தீவிரவாதத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

தற்கொலை அங்கிகளுடன் விடுதிக்குள் நுழைந்த சுமார் 6 தலிபான்கள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு ரோமாபுரியில் வாழ்ந்த மார்கஸ் டுல்லியஸ் சிசரோ (Marcus 
Tullius Cicero) (
கி.மு106 –43) ஒரு மிகச்சிறந்த பேச்சாளர்வக்கீல்அரசியலறிஞர்எழுத்தாளர்கவிஞர்தத்துவஞானி மற்றும் விமரிசகர். அவர் அன்றைய மனிதர்களின் ஆறு தவறுகளை முட்டாள்தனமானவை என்று கூறியிருக்கிறார். கால ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்கள் வந்து விட்ட போதும் மனிதனிடத்தில் இருந்து இந்த தவறுகள் அகற்றப்படவில்லை. இன்றும் இன்றைய மனிதர்களிடத்திலும் நாம் அந்த தவறுகளைப் பார்க்க முடிகிறது என்பது வருத்தத்திற்குரியது தான். 

Marcus Tullius Cicero

தமிழ் சினிமா

180
”180” படத்தின் இயக்குனர் ஜெயந்திரா 500 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியிருக்கிறாராம்.

இந்த படத்தை பார்த்தாலும் ஏதோ ஒரு இரண்டரை மணிநேர விளம்பரப் படத்தை பார்த்தது போலத்தான் இருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளுக்கும் ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்.

அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வரும் சித்தார்த், ஆறுமாதம் தான் இங்கு இருப்பேன் என்று ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார். அந்த வீட்டின் ஆறு மாத வாடகை தொகையை மொத்தமாக கொடுக்கிறார். அதேபோல அந்த வீட்டின் உரிமையாளரின் பைக்கை வாடகைக்கு எடுக்கும் சித்தார்த், அந்த தொகையையும் ஆறு மாதத்திற்கு சேர்த்து மொத்தமாக கொடுக்கிறார். இப்படி எதை எடுத்தாலும் ஆறு மாதம் தான் என்று சொல்லி கொண்டு, சுண்டல் விற்பது, இஸ்திரி போடுபவருக்கு உதவுவது, பேப்பர் போடும் சிறுவர்களை படிக்க வைக்க முயற்சி செய்வது என்று ரொம்பவே சந்தோஷமாக சுற்றி வருகிறார்.

போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக கடும் தொனியில் அமெரிக்கா கருத்து சுயாதீன விசாரணைக்கு மீண்டும் வலியுறுத்தல்

Thursday, 30 June 2011
obamaலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தனது நிலைப்பாட்டை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கடுமையாக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கா, போர்க் குற்றச்சாட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கையெடுப்பதற்குத் தேவையானவற்றை இலங்கை மேற்கொள்ள வேண்டுமென எச்சரித்துள்ளது.

இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு மின்னஞ்சல் மூலம் பதிலளித்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பெண் பேச்சாளர் விக்டோரியா நூலான்ட் கூறுகையில்;