உயர்தர வகுப்பு சோதனையில் சாதனை ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் அவுஸ்திரேலியா - செ .பாஸ்கரன்

 .

https://www.youtube.com/watch?v=X76qYA2axoc



மாண்புடை மார்கழி மனமதில் இருத்துவோம் !



















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா 



மார்கழி என்பது மனநிறை மாதம் 
மாதவன் மலரடி போற்றிடும் மாதம் 
கோதையும் தமிழைக் கொட்டிய மாதம் 
குவலயம் குளிர்மையாய் ஆகிடும் மாதம் 

வாசகர் ஈசனைப் பாடிய மாதம் 
மகேசனை மங்கையர் போற்றிடும் மாதம் 
பூவெலாம் பனித்துகள் அமர்ந்திடு மாதம்
புவியினைத் தேவரும் விரும்பிடு மாதம் 

வைகறை யாவரும் விழித்திடும் காலம்
மனமெலாம் இறையினை இருத்திடு காலம் 
பொய்யெனும் மாயைப் போக்கிட இறையினை
மெய் யடியார்கள் வேண்டிய காலம் 

சமூக ஆர்வலர்- பதிப்பாளர் “ மாத்தளை செல்வா “ என்ற எச். எச். விக்கிரமசிங்கா முருகபூபதி


இலங்கையின் மத்திய பகுதியிலிருக்கும் மாத்தளை நகரம் வரலாற்றில் கவனத்திற்குரியது.  சமகாலத்தில் மலையகம் 200 என்னும் தொனிப்பொருளில் கருத்தரங்குகள், மாநாடுகளில் பேசுபொருளாக விளங்குவதும் மாத்தளைதான்.

200 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து  கப்பல் மார்க்கமாக அழைத்துவரப்பட்ட இந்தியத்தமிழர்கள், தலைமன்னாரிலிருந்து கால் நடையாகச் சென்றனர்.  அவர்கள்  முதலில் தங்கவிடப்பட்ட பிரதேசம் மாத்தளை.

இந்த வரலாற்றுச்செய்திக்கு ஆதாரமாகத்  திகழ்வது அங்கு


எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்.  1983 கலவர காலத்தில் இங்கிருந்த தேர்களையும் கயவர்கள் எரித்தார்கள்.

ஒரு காலத்தில் மாத்தளை நகரசபையின் தலைவராக விளங்கியவரும், எலிசபெத் மகாராணி இலங்கை வந்தவேளையில் அவரது கையை குலுக்கி வரவேற்றவரும், பிரித்தானியாவின் ஆளுகைக்குள் இலங்கை இருந்தபோது, அந்த ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கிளர்ச்சி செய்த வீர புறான் அப்புவுக்கு நினைவுச்சின்னம் எழுப்பியவருமான பெரியார் தம்பிராஜா  அய்யாவையும் அந்தக்கயவர் கூட்டம்  உயிரோடு எரித்தது.  

இவ்வாறு தீக்குளித்த சீதையாக புனர்ஜன்மம் எடுத்த பூமியான  மாத்தளை,  பல எழுத்தாளர்களையும் சமூக நலப்பணியாளர்களையும் எமக்கு வரவாக்கியிருக்கிறது.

அவர்களில் சிலர் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். நாடக திரைப்பட கலைஞர் மாத்தளை கார்த்திகேசு, எழுத்தாளர்கள் மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன், ஏ.பி. வி. கோமஸ், மலரன்பன்.  இவர்களின் வரிசையில் மாத்தளை செல்வா என நாம் அழைக்கும் எச். எச். விக்கிரமசிங்கா.

1970 களில் எனக்கு வீரகேசரியுடன் தொடர்பு ஏற்பட்ட காலத்தில் அங்கே விநியோகப்பிரிவில் இவர் பணியாற்றிய காலத்தில் அறிமுகமானார்.

நான் 1972 இல் வீரகேசரி நீர்கொழும்பு பிரதேச நிருபராக இயங்கியபோது, அங்கு அடிக்கடி செல்லநேர்ந்த வேளைகளில் முதல் முதலில் சந்தித்தேன். 1973 இல் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் மாநாடு அட்டனில் நடந்தபோதுதான் எமக்கிடையே நட்புறவு மலர்ந்தது. இவ்விழாவுக்கு  இந்தியாவிலிருந்து பொதுவுடமைக்கட்சியின் தோழர் பாலதண்டாயுதமும் வந்திருந்தார். கோகிலம் சுப்பையாவின் தூரத்துப்பச்சை நாவலும் வெளியிடப்பட்டது.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 88 வாசிப்பதற்கு வயது எல்லை இல்லை ! இலக்கியப் படைப்புகளின் தலைப்பில் பெயர்களை உருவுதல் குறித்த செய்திகள் !! முருகபூபதி


எனது எழுத்தும் வாழ்க்கையும் தொடரை படித்துவரும் பிரியத்திற்குரிய வாசகர்களுக்கு வணக்கம்.

கடந்த 87 ஆவது அங்கத்தில்,  பெண்களின் ஆளுமைப்பண்புகள், அவர்களின் கணவர்மாரின் ஆளுமைகளினால் மறைக்கப்பட்டுவிடுவதையும் மறக்கப்படுவதையும்  தொனிப்பொருளாகக்கொண்டு எழுதியிருந்தேன்.

அவுஸ்திரேலியா உட்பட உலகில் பல நாடுகளிலிருந்தும் பலர் எனது வாட்ஸ் அப் ஊடாக தொடர்புகொண்டு கருத்துக்களை சொன்னார்கள்.  சிலர் மின்னஞ்சலில் தமது அனுபவங்களைச்  சொன்னார்கள். அவர்களில் பெண்களும் இடம்பெற்றனர்.

எனது அந்தப்பதிவை படித்திருக்கும் பாரிஸில் வதியும் இளம்


ஓவியக்கலைஞரும் மொழிபெயர்ப்பாளரும் தேர்ந்த வாசகியுமான செல்வி சந்திரிக்கா எனக்கு எழுதிய மின்னஞ்சல் மடலை, அவரது அனுமதியுடன் இங்கே பதிவேற்றுகின்றேன்.

 அன்புள்ள ஐயா வணக்கம்.  உங்கள் எழுத்தும் வாழ்க்கையும்                 ( இரண்டாம் பாகம் )  87 ஆம் அங்கத்தை  வாசித்தபோது,  நான் சந்தித்த  சில விடயங்கள் எனது  நினைவில் வந்தன.  அதனை  உங்களிடம் பகிரலாம் என விரும்புகிறேன்.

நான்  வசிக்கும் பாரிஸில் பல்கலைக் கழகத்திற்கு முதலாம் ஆண்டு  சென்றபோது , எனக்கு அருகில் இருந்த ஒரு பெண் கொஞ்சம் வயது கூடிய தோற்றத்தில் காணப்பட்டார்.

அவரிடம்  என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு  கதைக்க ஆரம்பித்தேன். அவரது  சற்று முதிர்ந்த தோற்றம் என்னை சில வினாக்களுக்குள்ளாக்கியது. அவரின் வாழ்க்கை பற்றி வினவினேன்.

அவர் இவ்வாறு கூறினார் :   உயர்தர படிப்பு முடிந்த பின்னர்  வேலை செய்யவேண்டிய கட்டாயம் இருந்ததாகவும்,  அத்துடன் திருமணமும் முடித்து விட்டதாலும் என்னால் மேலும் படிப்பை தெடரமுடியாமல் போனது. பின்னர் எனது  மகளை வளர்ப்பதில் எனது  காலம் சென்றுவிட்டது , இப்போது எனது  மளுக்கு 19 வயது .  தற்போது அவளும் என்னுடன் சட்டம் பயில வந்துள்ளாள்.  “

இவ்வாறு சொல்லிவிட்டு,  சற்றுத்  திரும்பி தனது  மகளை எனக்கு காண்பித்தார். அந்தப்பிள்ளையும் என்னைப்பார்த்து புன்னகைத்தது.

 எனக்கு இந்தச்சம்பவம்  புதிய அனுபவம்  ஐயா.  எங்கள் தாய்நாடான இலங்கையில் நான் வாழ்ந்த காலத்தில், என்னைச் சூழ்ந்திருந்த எவரும் இவ்வாறு வயதுமூப்பின் பின்னரும்,  திருமணத்தின் பிறகும் , பிள்ளைகள் பெற்றதையடுத்தும்   படிப்பை ஆரம்பித்ததாக நான் கேள்விப் படவில்லை.

ஆனால், நான் புகலிடம் பெற்று வாழும் பாரிஸில் அன்று நான் கண்ட காட்சியும் சந்தித்த அனுபவமும்  எனக்கு ஆச்சரியம்  தந்தது . அதன் பின்னரே,  இங்கே  வயது கூடியவர்களும்  கல்வியைத்  தொடருவதைப்  பார்த்தேன். 

Vanni Hope நீர் வாழ்வு திட்டம் பூர்வீக குடும்பங்கள் மட்டக்களப்பு மாவட்டம்

 "இன்று ஒருவர் புன்னகைக்க காரணம்"



மீண்டும் ஒருமுறை, இலங்கையில் உள்ள ஏழ்மையான சமூகங்களில் உள்ள தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்குச் சேவை செய்ய எங்களுக்கு உதவியதற்கு நன்றி.

முதற்கட்டமாக, காந்தி இல்லம் நியூசிலாந்து தமிழ் அறக்கட்டளையின் அனுசரணையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய கதிரவெளி பிரதேசத்தில் வாழும் பழங்குடியின மக்களின் நலனுக்காக 10 குடும்பங்களுக்கு குழாய் கிணறுகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பின்தங்கிய கிராமமான கதிரவெளியில் புதூர் கிராமம் நீண்டகாலமாக பல பழங்குடியினர் வாழ்ந்த கிராமமாகும்.

இந்தியாவை அணுகுதல்

 December 16, 2023


இந்து மாமன்றம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கின்றது.
ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தலையீடு செய்யுமாறும் தமிழ், முஸ்லிம் கட்சிகளை அழைத்து பேசுமாறும் கோரியிருக்கின்றது.
முஸ்லிம் கட்சிகளை எதற்காக அழைக்க வேண்டும் – மேலும் முஸ்லிம் கட்சிகள் இந்தியாவிடம் எப்போதாவது உதவியை கோரியிருக்கின்றனவா? இதற்கான பதிலை இந்து மாமன்றம்தான் வழங்க வேண்டும்.
ஆளுக்கொரு கடிதம் அனுப்பும் முயற்சிகள் பயனற்றவை.
ஏற்கனவே, மக்கள் முறைப்பாட்டுக்கான வடக்கு – கிழக்கு சிவில் சமூகம் இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கின்றது.
வடக்கு, கிழக்கின் முன்னணி புத்திஜீவிகள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் எனப் பலரும் – குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கின்றனர்.
ஏற்கனவே, கட்சிகள் அனுப்பிய கடிதங்கள் மூலம் குழப்பங்கள் ஏற்படலாம் – என்னும் நிலையில்தான் குறித்த சிவில் சமூக முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
தமிழ் கட்சிகளை புதுடில்லி அழைக்காமல் இருப்பதற்கு காரணங்கள் உண்டு.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஏழை விவசாயிகளுக்கான நன்னீர் மீன்பிடித் திட்டம் வாழ்வாதாரம் இலங்கை புதுப்பிப்பு நவம்பர் 2023 YouTube வீடியோக்கள்

 "இன்று ஒருவர் புன்னகைக்க காரணம்"

வன்னி நம்பிக்கை நிலையான அபிவிருத்தி திட்டம் உள்நாட்டு மீன்பிடி கலககேனி குளம் திருகோணமலை நவம்பர் 2023



வன்னி நம்பிக்கை நிலையான அபிவிருத்தி திட்டம் உள்நாட்டு மீன்பிடி இலகந்தை குளம் திருகோணமலை நவம்பர் 2023


பொன்னூஞ்சல் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்


 ஆகாயப் பந்தலிலே ஊர் கோலம் போகுதம்மா என்ற பாடலை 50 வருடங்களுக்கு முன் படம் வெளிவந்த போது கேட்டு ரசிக்காத திரைப் பட ரசிகர்கள் இருக்க மாட்டார்கள் எனலாம். இலங்கை வானொலியில் தினம் தோறும் ஒலித்த இந்த பாடல் தமிழகத்திலும், இலங்கையிலும் அந்தளவு பிரபலமடைந்து இன்றும் திரைப் பிரியர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. அந்தளவுக்கு பிரபலமான இந்த பாடல் இடம் பெற்ற படம்தான் பொன்னூஞ்சல்.


கோமதிசங்கர் பிக்சர்ஸ் சார்பில் நெல்லை மாவட்டம் சங்கரன்

கோயிலை சேர்ந்த பெரும் தொழிலதிபரான கே எஸ் குத்தாலிங்கம் படத்தை தயாரித்தார். சிவாஜியின் நண்பரான இவர் செல்வந்தராக விளங்கிய காரணத்தினால் எவரிடமும் கடன் வாங்காமல் தன் சொந்த செலவிலேயே படத்தை தயாரித்தார். சிவாஜியின் ஒத்துழைப்போடு படம் துரித கதியில் தயாரானது. ஆனாலும் என்ன காரணத்தாலோ படம் கருப்பு வெள்ளைப் படமாகவே உருவானது.

கிராமத்தை சுற்றி வட்டமிட்டு உருண்டு புரண்டு காதலிக்கிறது ஒரு காதல் ஜோடி. முத்து, வள்ளி என்ற இந்த ஜோடியின் காதலுக்கு எதிராக வருகிறான் பொன்னன். வள்ளியின் தந்தையும், முத்துவின் தந்தையும் வீண் அகம்பாவத்தினாலும் , வறட்டு பிடிவாதத்தால் கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க காதலர்கள் நொறுங்கிப் போய் விடுகிறார்கள். பொன்னனின் சதித் திட்டத்தால் மைனர் மாணிக்கம் வள்ளியின் கணவனாகிறான். ஆனால் மணவறையில் அவனின் சாதி வழக்கப் படி அவனின் சகோதரி முறையிலானவள் மாணிக்கம் சார்பில் வள்ளி கழுத்தில் தாலி கட்டுகிறாள்! பொன்னனின் தொடர் சதியால் மாணிக்கம் வள்ளியை தீண்டாமல் , விலைமாதுவின் மடியில் விழுந்து கிடக்கிறான். முத்து, வள்ளி ஒன்று சேர்ந்தார்களா, மாணிக்கத்தின் கதி என்ன, பொன்னனின் சதி வெற்றி பெற்றதா என்பதுதான் படத்தின் மீதி கதை.

“இலக்கியவெளி” இதழின் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு

 உரையாளர்கள்:

 

கலாநிதி பார்வதி கந்தசாமி

 


அரசியல் சீர்குலைவை சரி செய்வதே முதன்மையானது

 December 13, 2023


உலகத் தமிழர் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களின் முயற்சியை பல்வேறு புலம்பெயர் அமைப்புகளும் விமர்சித்திருக்கின்றன.

அவர்கள் புலம் பெயர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பௌத்த பிக்குகளுடன் இணைந்து பிரகடனமொன்றை வெளியிட்டிருப்பதை பெரும்பான்மையான புலம்பெயர் சமூகம் வரவேற்றதாகத் தெரியவில்லை.
தென்னிலங்கையை பொறுத்தவரையில் புலம் பெயர் சமூகத்தோடு அரசாங்கம் உரையாடி வருவதான ஒரு தோற்றம் ஏற்பட் டிருக்கின்றது.
உலகத் தமிழர் பேரவையினர் இலங்கையில் தங்கியிருக்கும் சூழலில் சமத்துவம் மற்றும் நீதிக்கான அமெரிக்க அரசின் விசேட பிரதிநிதியான – டீசிரி கோமியர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என்ற செய்தியும் வெளியாகியிருகின்றது.
இதேவேளை, தமிழத் தேசிய அரசியல் பரப்பின் பிரதான கூட்டணியான தமிழத் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ரெலோ, ”தனிநபர்கள் தமிழ் மக்களின் அரசியல் விவகாரங்களை கையாள முற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது’, என்று தெரிவித்திருக்கின்றது.
இதிலுள்ள அடிப்படையான பிரச்னை வேறு.
அதாவது, தமிழ் மக்களின் அரசியலை எவர் வேண்டுமனாலும் கையாளலாம் என்னும் நிலைமை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைமைகள் இருக்கின்றபோதும் அவர்கள் மத்தியில் ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்கள் இல்லை – தென்னிலங்கையோடு விடயங்களை கூட்டாகக் கலந்துரையாடும் போக்கு இல்லை.

பிரான்ஸ் புகலிடத்தில் இளம் ஓவியர் சந்திரிக்கா தேர்ந்த வாசகராகவும் வலம் வருபவர் முருகபூபதி


கடந்த ஓகஸ்ட் மாதம் பாரிஸ் மாநகருக்கு சென்றிருந்தபோது, அங்கே சில கலை, இலக்கியவாதிகளையும் சந்தித்தேன்.

அவர்களில் ஒருவர் செல்வி சந்திரிக்கா அரசரட்ணம்.

இவரது பூர்வீகம் வடபுலத்தில் மானிப்பாய்.  ஆறுமாதக் குழந்தையாக  இருக்கும்போது தனது தாயை இழந்திருக்கிறார்.

இவர் தனது தாயரை எவ்வாறு பறிகொடுத்தார்..? என்பதை இவரது தாய்மாமனாரான எழுத்தாளர் அருந்ததி ( அருள் இரத்தினம் ) எழுதியிருக்கும் ஆண்பால் உலகம் என்ற நாவலைப்  படித்து தெரிந்துகொள்ள முடியும்.

பல உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கும் அந்த நாவல் அதிர்ச்சியூட்டும் பல சம்பவங்களைச்  சொல்கிறது.

இந்த நாவல் தமிழில் மட்டுமன்றி, ஆங்கிலத்திலும் வெளியாகியிருக்கிறது.

இரண்டு நூல்களுக்கும் முகப்பு ஓவியம் வரைந்திருப்பவர்தான் செல்வி சந்திரிக்கா.

கடந்த 2010 ஆம் ஆண்டிற்குப்பின்னர் பாரிஸ் மாநகரை புகலிடமாக்கியிருப்பவர்.  ஓவியம் வரைவதில் ஆற்றல் மிக்க சந்திரிக்காவின் ஓவியக்கண்காட்சிகள் பாரிஸில் நடந்துள்ளன.

இவரது குழந்தைப்பருவத்தில் பெற்றதாய் எரியூட்டிக்கொல்லப்பட்டதையடுத்து, அம்மம்மாவின் பராமரிப்பில் வளர்ந்தவர். இவருடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூவர்.

தாயின் அரவணைப்பினை குழந்தைப்பருவத்தில் இழந்திருக்கும் சந்திரிக்காவுக்கு ஆதர்சமாகத் திகழ்ந்திருப்பவர் அம்மம்மா சிவபாக்கியம்.

தமிழர் தாயகம் இலங்கையில் எரிந்து கொண்டிருக்கும் போது உலகத் தமிழர் பேரவை பிடில் வாசிக்கின்றதா?

 தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வொன்றை நோக்கமாகக் கொண்டு செயற்படும் பல அமைப்புகள் மத்தியில் குளோபல் தமிழ் ஃபோரம் (GTFஎனப்படும் உலகத் தமிழர் பேரவை  (..பே) வெவ்வேறு புத்த அமைப்புக்களைச் சேர்ந்த மூத்த புத்த பிக்குகள் கொண்ட இலங்கைக்கான “சிறந்த இலங்கை சங்க மன்றத்தை” சந்தித்ததானது, பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.


பிரித்தானியர்களிடமிருந்து இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான கடந்த 75 வருடங்களாக தமிழர்கள் படிப்படியாக தங்களுக்கு உரித்தான அனைத்தையும் இழந்து வருகின்றனர். சுதந்திரத்திற்குப் பின்னரான அரசியல் வரலாற்றில் பௌத்த மதகுருமார்களின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. இதன் காரணமாகவே தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு காணும் பொருட்டு தமிழ் மற்றும் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் நடைமுறைப்படுத்தாமல் இரத்து செய்யப்பட்டன.


இலங்கைத் தீவில் வரலாற்று ரீதியாக தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சுழற்சி மற்றும் இனப்படுகொலைக்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளன. யார் ஆட்சிக்கு வந்தாலும் சிறிலங்கா அரசானதுநாட்டை ஒற்றை இன, ஒரு மொழி, மற்றும் ஒற்றை மத (mono ethnic, mono lingual, mono religious) சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதே  ஆட்சியாளர்கள் கொள்கையாக கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் உ..பே உடனான சந்திப்பின் பின்னர் பௌத்த மதகுருமார்கள் வெளியிட்ட பிரகடனத்தில் இலங்கையின் பன்முகத்தன்மையை ஏற்றுக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளதானது  தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் திகைப்பையும் உருவாக்கியுள்ளது. இந்தச் சந்திப்பு தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் அரசியல் யுக்தி கொண்டதா என தமிழ் சமூகம் சந்தேகம் கொள்கின்றது.


எந்தவித கலந்தாலோசனையும் இல்லாமல் ரகசியமாக வைக்கப்பட்ட இமயமலைப்  பிரகடனம்தமிழ் மக்களது எரியும் பிரச்சினைக்கு எண்ணை ஊற்றுவதாக உள்ளது. 'இமயமலைப் பிரகடனம்பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து பொதுவெளிக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். இந்தச் சந்திப்புக்கு முன்னர் இந்த விடயம் தமிழர் தரப்பில் எவருடனும் ஆலோசிக்கப்படாமல் திரைமறைவில் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இலங்கைச் செய்திகள்

பூநகரியில் 20,000 ஏக்கரில் புதிய மின் உற்பத்தி திட்டம் 

பிரான்ஸில் திருவள்ளுவர் சிலை திறந்து வைத்த கிழக்கு ஆளுநர்

இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதி

தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைக்கும் முயற்சியுடன்  மலையக மக்களின் வாழ்வு மேம்பாட்டுக்கு முழு ஆதரவு

இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் புதிய தொழிநுட்ப பல்கலைக்கழகம்

குற்றச்செயல்களை புரிந்த பலர் கொழும்பில் தலைமறைவு கொழும்பில் சகல இன, மத மக்களுக்கும் பொலிஸ் பதிவு

தாமரை கோபுரத்தில் சுழலும் உணவகம் நேற்று முதல் மக்கள் பானைக்கு


பூநகரியில் 20,000 ஏக்கரில் புதிய மின் உற்பத்தி திட்டம் 

நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

December 13, 2023 9:30 am 

கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரியில் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உலகச் செய்திகள்

அமெரிக்காவுடனான முறுகலுக்கு மத்தியிலும் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்

காசாவில் தொடரும் தாக்குல் இடையே இஸ்ரேல் தனிப்படும் நிலை அதிகரிப்பு

ஜோ பைடன் – வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையில் சந்திப்பு

இஸ்ரேலின் பயங்கர தாக்குதலிடையே காசாவில் பட்டினி பாதிப்பும் அதிகரிப்பு

5,000 இஸ்ரேலிய படையினர் காயம், பலர் ஊனம்; இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரிக்கை

போர் நிறுத்தத்தை கொண்டுவர குட்டரஸ் முயற்சி

அமெரிக்காவின் ‘வீட்டோ’வை அடுத்து தெற்கு காசாவில் தாக்குதல்கள் தீவிரம்


அமெரிக்காவுடனான முறுகலுக்கு மத்தியிலும் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்

December 15, 2023 6:05 am 

மழையால் பலஸ்தீனர்களுக்கு மேலும் நெருக்கடி

காசா போரில் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும்படி அமெரிக்கா தனது கூட்டாளியான இஸ்ரேலை வலியுறுத்தி வரும் சூழலில் இரு தரப்புக்கும் இடையில் முறுகல் அதிகரித்து வருகின்றபோதும் காசா மீதான இஸ்ரேலின் உக்கிரத் தாக்குதல்கள் நேற்றைய (14) தினத்திலும் நீடித்தது. அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் ஜெரூசலத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் நிலையிலேயே விரிசல் அதிகரித்துள்ளது.

திருவெம்பாவை விரதம்

 


ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் (SVT) - திருவெம்பாவை திருவிழா & ஆருத்ரா தரிசனம் டிசம்பர் 18, 2023 திங்கட்கிழமை முதல் 27 டிசம்பர் 2023 புதன்கிழமை வரை

SRI VENKATESWARA TEMPLE(SVT)

1 Temple Road, Helensburgh, Sydney, NSW – 2508, Australia























ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றேநம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்சித்தம் களிகூர நீரொருகால் ஓவாநெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்துஅணையாள் விண்ணோரைத் தான் பணியாள்பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடிஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.



திருவெம்பாவை:

மாணிக்கவாசகரின் படைப்பான ‘திருவெம்பாவை’, இருபது பாடல்களின் தொகுப்பாகும், அதில் அவர் சிவபெருமானைப் போற்றும் ‘பாவை நோன்பு’க்குப் பின் ஒரு பெண்ணாக தன்னைக் கற்பனை செய்து கொண்டார்.

திருவெம்பாவை பாடல்கள் திருமணமாகாத இளம் பெண்களிடையே ஒரு பழங்கால பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும், அங்கு அவர்கள் மார்கழியின் அதிகாலையில் விளக்குகளை ஏற்றி, சிவபெருமானைப் புகழ்ந்து பாடல்களைப் பாடுவார்கள். திருவெம்பாவையின் 20 பாசுரங்கள் தினமும் பாராயணம் செய்யப்படுகிறது. இத்தகைய சடங்குகள் பெண்களுக்கு செழிப்பையும் பொருத்தமான கணவனையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.


தினசரி நிகழ்ச்சி:

காலை 08.00 மணி: திருவெம்பாவை பாராயணம்.

காலை 09.00 மணி: ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரருக்கு (சிவன்) அபிஷேகம்.


அஜித் – அர்ஜூன் இணையும் இரண்டாவது படம்!

 December 15, 2023


தல’அஜித்தின் புதிய படமான ‘விடாமுயற்சி’யில் நடிகர் அர்ஜூன் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. அர்ஜூனின் விசிறி ஒருவர் வெளியிட்ட புகைப்படத்தில், விடாமுயற்சி படத்தில் அர்ஜூனின் தோற்றமும் வெளியாகியிருக்கிறது. இது, அஜித் – அர்ஜூன் இணையும் இரண்டாவது படம். ஏற்கனவே இருவரும் ‘மங்காத்தா’வில் இணைந்து நடித்திருந்தனர்.

லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள், தற்போது அஸர்பை ஜானில் நடைபெற்று வருகின்றன.

மர்மம் மற்றும் திகில் காட்சிகள் கொண்ட படங்களை இயக்குவதில் பேர்போன மகிழ்திருமேனியின் இயக்கத்தில், அஜித் நடித்து வருவது, தல ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். அவருடன் ரெஜினா கெஸ்ஸேண்ட்ரா, பிரியா பவானிஷங்கர், ஆரவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இவர்களுடன், சஞ்சய் தத், அருண் விஜய் ஆகியோரும் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளபோதும், அவை படக் குழுவினரால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.   நன்றி ஈழநாடு