விஷ்ணு பிரசாத் கவிதைகள்

.

குனான் போஷ்போரா அல்லது கவி முஹமத் அலியின் சுயசரிதையிலிருந்து ஒரு பகுதி

அலி
அன்று பத்து வயதுச் சிறுவன் நீ
என்னைப் பார்த்துக் கதறி அழுது கொண்டே
விலகிச் செல்வதை மாடி ஜன்னல் வழியே
என்னால் பார்க்க முடிந்தது
உன்னையும் என் அப்பாவையும்
மூன்று சகோதரர்களையும்
விசாரணை என்ற பெயரில்
அழைத்துச் சென்றார்கள்
உங்களை மட்டுல்ல
குனான் மற்றும் போஷ்போரா பகுதியின்
அனைத்து ஆண்களையும்
அந்த இரவில் விரட்டிச் சென்றார்கள்
அலி
22 வருடங்கள் கழிந்தன
உனக்குத் தெரியுமே
நமக்கு நீதிகிடைக்கவில்லை
அப்படியொன்றும் நடக்கவே இல்லையென்று
இந்திய அரசும் ஊடகங்களும்
உலகத்துக்குச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றன
எல்லா விசாரணைகளையும் கைவிட்டாயிற்று
அது ஒரு கட்டுக்கதை என்று அறிவித்தாயிற்று.
அலி
அந்த இரவில் இந்திய ராணுவம்
ஆண்களையெல்லாம் இழுத்துச் சென்ற பிறகு
நள்ளிரவில் திரும்பிவந்தது
வீடுகளிலிருந்து

சத்யா இளங்கோ முதல் இடத்தை தட்டிக் கொண்டுள்ளார் -

.
சிட்னியில் நன்கு அறிமுகமான திரைப்பட இயக்குனர் இளங்கோ அவர்களின் மகன் சத்யா இளங்கோவும் மகளான சிவானி இளங்கோவும் BBX Voice Talent Competition என்ற பாடல் போட்டியில் பங்கு பற்றி வென்றிருக்கிறார்கள். 12 பிள்ளைகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் சத்யா முதல் இடத்தை தட்டிக் கொண்டுள்ளார் .எமது சமூகத்திற்குள் மாத்திரம் நிற்காது பிற சமூகத்துடனும் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவரை தமிழ்முரசு வாழ்த்துகிறது.
அவரது பாடலை கீழே பார்க்கலாம் . 




செ .பாஸ்கரன் 

வால்மீகி தந்த இராமாயணம்


ஆச்சாரியார் ஸ்ரீ சச்சிதானந்த சாயி அவர்கள். ஓன்பது நாட்கள் இராமாயண காவியத்தை போக்கம்ஹில்ஸில்  (St Josheph's Baulkham Hills Centre for Reflective Centre) அமைந்துள்ள மண்டபத்தில் காலை வேளையில் கடந்த ஏப்ரல் மாதம் மகிமை வாய்ந்த மக்களைப் பற்றியும் அவர்கள் சாதனைகள் பற்றியும் கூறி எல்லோரையும் ஆன்மீக சாதனைபுரிய வழிவகுத்துத் தந்துள்ளார். 


சனாதன தர்மத்திற்கு ஆதாரம் வேதங்கள். வேதங்கள் மனிதனால் ஆக்கப்பட்டவை அல்ல. பரப்பிரம்மத்தினால் உணர்த்தப்பெற்று ரிஷிகள் மூலம் வெளிவந்தவையே வேதங்கள். சப்தரிஷிகளால் உணர்த்தப் பெற்று நீண்டகாலம் தவஞ் செய்து உடம்பை புற்றுமூட அதைநீக்கி வெளிவந்தவர்கள்தான் வால்மீகி ரிஷி. இராமயணத்தைத் தந்த வால்மீகி ரிஷிதான் ஆதிகவி. இந்ந இராமாயணமும் ஒரு ரிஷியினால் தரப்பட்டதனால் இதுவும் ஒரு வேதம்தான்.

என்றும் ஞானநிஷ்டையும், தவவலிமையும், சொல் வன்மையும் மிக்க நாரதமுனி வால்மீகி முனிவரின் ஐயங்களைத் தெளிவு படுத்தப் போலும் அவர்முன் தோன்றினார். வியாச பகவானின் மன விசனத்தைப் போக்க அங்கு தோன்றி பாகவதத்தைப்பாட உந்து சக்தியாயமைந்தவர் நாரதமுனிவர். இங்கும், நாரதமுனிவரைக் கண்டதும் வால்மீகி முனிவர் அன்று (அவரது காலத்தில்) யாராவது சர்வகுண சம்பன்னனாகவும், மிகுந்த பராக்கிரமமுள்ளவனாகவும்,

திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
காலம்   பாதுகாக்கவேண்டிய   பொக்கிஷம்    நூலகர்  நடராஜா   செல்வராஜா

                                             
நீர்கொழும்பில் கடற்கரை   வீதியில் விஜயரத்தினம்   இந்து   மத்திய   கல்லூரி    அமைந்துள்ளது.  அந்தக்கல்விச்சாலை   அந்த  ஊர்  தமிழ்மக்களுக்கு   ஒரு   கலங்கரை விளக்கம்.   இந்த   ஆண்டு  (2014)  அக்கல்லூரி   தனது   அறுபது   வயதை நிறைவுசெய்யும்    வேளையில்    அங்கே   தனது   ஆரம்பக் கல்வியை பெற்றுக்கொண்ட    எமது   இனிய   நண்பர்    லண்டனில்    வதியும் நூலகர்    -  தமிழ்   ஆய்வாளர்   நடராஜா   செல்வராஜா    அவர்களுக்கும்   மணிவிழா  வருகிறது.
 கடற்கரை   வீதியில் செபஸ்தியார்   தேவாலயத்தை   கடந்து  சென்றால்   வலதுபுறம்    லக்ஷ்மன்   ஒழுங்கை   என்ற   சிறிய    பாதை  ஒல்லாந்தரின்    புத்தள   வெட்டு   வாய்க்காலை    நோக்கிச்செல்கிறது.
அந்த வீதியில்   1960   களில்   ஒரு    இல்லம்.   அதன்   பெயர்   தமிழகம்.
யாராவது   நம்புவார்களா?
அந்த   வீட்டில்   ஐந்து   ராஜாக்கள்    வாழ்ந்தனர்.   அவர்கள்   மன்னர்கள் அல்ல.    தமிழையும்   தமிழ்த்தேசியத்தையும்   நேசித்த    சாதாரண மனிதர்கள்.    அந்தக்குடும்பத்தின்   தலைவர்   தந்தை   ஓவர்ஸியர் நடராஜா.    தலைமகன்    சிவராஜா.    அவரையடுத்து    விக்னராஜா, ஸ்ரீஸ்கந்தராஜா,    செல்வராஜா.
 விஜயரத்தினம்   இந்து  மத்திய  கல்லூரி   விவேகானந்தா வித்தியாலயம்    என்ற   பெயருடன்   இயங்கிய   காலத்தில் என்னுடன்  படித்தவர்   ஸ்ரீஸ்கந்தராஜா.   விக்னராஜா   அங்கே சிறிதுகாலம்    படித்துவிட்டு    கொழும்புக்குச்  சென்றுவிட்டதாக அறிகின்றேன்.
சிவராஜா   எமது   பாடசாலைக்கு    அவ்வப்பொழுது    வந்து   தொண்டர்    ஆசிரியராக   எமக்கு    ஆங்கில   வகுப்பு   எடுத்துள்ளார்.

மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் தமிழ் அரங்கம் 29 06 14

.
அவுஸ்திரேலியாவில்   மேற்கு  மாநில   மாநகரமான   பேர்த்தில்  எதிர்வரும்  29  ஆம்  திகதி (29-06-2014)  ஞாயிற்றுக்கிழமை   மாலை  5..30  மணிக்கு தமிழ் அரங்கம்    நிகழ்ச்சி   நடைபெறவிருக்கிறது.
பேர்த்தில்    இயங்கும்    மேற்கு   அவுஸ்திரேலியா   தமிழ்ச்சங்கத்தின் தலைவர்     திரு. அருண். அண்ணாத்துரை    பேர்த்  பாலமுருகன் தேவஸ்தானத்தின்    தலைவர்   திரு. ஜெயசீலன்     ஆகியோரின்    ஏற்பாட்டில்  பாலமுருகன்    தேவஸ்தான    மண்டபத்தில்    தமிழ் அரங்கு   நிகழ்ச்சி  நடைபெறவுள்ளது.
மெல்பனில்    வதியும்   எழுத்தாளர்   திரு. லெ. முருகபூபதி   வாழ்வு அனுபவமும்  படைப்பு   இலக்கியமும்    என்ற   தலைப்பிலும்    கவிஞர்    திரு. எம். ஜெயராம  சர்மா    நாங்களும்    தமிழும்    என்ற    தலைப்பிலும்  தமிழ் நூலகம்    அமைப்பின்    இணைப்பாளர்களில்   ஒருவரான    திரு. கோபி. கோபிநாத்    வலைப்பூக்களும்    இணையத்தளங்களும்   என்ற    தலைப்பிலும்   உரையாற்றுவார்கள்.
தமிழ்   அரங்கம்   நிகழ்ச்சியில்   கலந்துகொள்ளும்      இலக்கிய  அன்பர்களின்   அனுபவப் பகிர்வும்    கலந்துரையாடலும்   இடம்பெறும்.

                             ---0----

உலகச் செய்திகள்


ஈராக்கில் தொடர்ந்து முன்னேறும் தீவிரவாதிகள்; 40 இந்தியர்கள் கடத்தல்

மலேசிய கடற்கரைக்கு அப்பால் இரு படகுகள் மூழ்கி விபத்து - 35 பேரைக் காணவில்லை

சீனாவில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பில் 13 பேருக்கு மரண தண்டனை

===========================================================
ஈராக்கில் தொடர்ந்து முன்னேறும் தீவிரவாதிகள்; 40 இந்தியர்கள் கடத்தல்

19/06/2014  ஈராக்கின் வடக்குப் பிராந்தியத்தில் பெரும் பகுதியை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர வா­திகள் தலை­மை­யி­லான சுன்னிப் போரா­ ளிகள் கைப்பற்றியுள்ளனர். அங்கு அரசுப் படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் ஏரா ளமானோர் கொல்லப்பட்டனர்.




குழந்தைகளின் முதல் நண்பன்: வாண்டுமாமா

.

குழந்தை எழுத்தாளர் வாண்டு மாமா உடல்நலக்குறைவு காரணமாக தன்னுடைய 90-வது வயதில் சென்னையில் வியாழக்கிழமை இரவு காலமானார்.
புகழ்பெற்ற தமிழ் சிறுவர் இலக்கிய படைப்பாளிகளில் மறக்க முடியாத பெயர் வாண்டுமாமா. இன்றைய குழந்தைகளின் குழந்தைப் பருவத்தை கணினியும், தொலைக்காட்சி பெட்டிகளும் களவாடிக்கொள்கின்றன. ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு வாண்டுமாமாவின் படைப்புகள்தான் அன்றைய குழந்தைகளின் மிட்டாய் உலகம். தன்னுடைய சித்திரக் கதைகளின் வழியாக குழந்தைகளின் மனதில் விதவிதமான வண்ணக் காட்சிகளை விரிய வைத்தவர்.
அவரது ஓநாய் கோட்டை, அதிசய நாய், ஷீலாவைக் காணோம், மேஜிக் மாலினி, மந்திரச் சலங்கை, துப்பறியும் புலி போன்ற படைப்புகள் குழந்தைகளுக்குள் திருவிழாவை நிகழ்த்தும் ஆற்றல் பெற்றவை. தாத்தா பாட்டிகளிடம், அம்மா அத்தைகளிடம் கதை கேட்டு, அந்த மாய உலகம் தங்களுக்குள் சுழற்றும் ரங்க ராட்டினங்களில் பயணிக்கும் குழந்தைகளுக்கு, அந்த நாட்களில் வாண்டுமாமாவின் படைப்புகள் எல்லாம் தித்திப்பு அலையடிக்கும் சர்க்கரைக் கடல்.

கண்ணதாசன்

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: கண்ணதாசன்


முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக விளங்குவது நமது தொன்மையான தமிழ்மொழி. காலந்தோறும் ஆற்றல் மிகு கவிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் தோன்றி, தமிழின் இளமைப் பொலிவை காத்து வந்துள்ளனர். அவர்களில் முக்கியமான இடம் வகித்து, வெள்ளித்திரையிலும் மெல்லிய தமிழை வாழவைக்க முடியும் என்று நிரூபித்தவர் கவியரசர் கண்ணதாசன் ‘கவியரசு’ எனப் போற்றப்பட்டவர்.
தமக்கெனத் தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டவர். அரசியலிலும் ஆன்மிகத்திலும் அவர் வாழ்வில் நேர்ந்த மாற்றங்களுக்கேற்ப, அவர் சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் நேர்ந்தன; அவற்றையொட்டி அவர் கவிதையும் முரண்பாடுகளைக் கண்டு வளர்ந்தது. தமிழ் வழங்கும் இடங்களில் எல்லாம் அவரைச் சிறப்பாகத் திகழ வைத்தவை அவர் எழுதிய ஆயிரக்கணக்கான திரைப்பாடல்களே.

காற்றின் கலை - தனித்திருந்து செய்த தவம் -பி. ரவிகுமார்

.

  சுந்தராம்பாள் ஒவ்வொரு பாட்டுப் பாடும்போதும் அழுதுகொண்டேயிருக்கிறார்.
சுந்தராம்பாளின் பாட்டை முதன் முதலாக எப்போது கேட்டேன் என்பது நினைவில்லை. ஆனால் நினைவு பின்னோக்கிப் பின்னோக்கிச் செல்லும்போது நான் ஸ்ரீநிவாசன் என்ற நபரிடம் போய்ச் சேருகிறேன். ஸ்ரீநிவாசன் சுந்தராம்பாளின் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த அந்தப் பழைய நாட்களுக்குப் போய்ச் சேருகிறேன்.

எங்களுடைய உறவினரான ஸ்ரீநிவாசன் அந்தக் காலத்தில் எப்போதாவது வீட்டுக்கு வருவார். இரண்டோ மூன்றோ நாட்கள் எங்களுடன் தங்குவார். ஸ்ரீநிவாசனை நாங்கள் பாகவதர் என்றுதான் அழைப்போம். கொஞ்சம் சங்கீதம் கற்றுக்கொண்டிருந்தார் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். எம்.கே.தியாகராஜ பாகவதர்இ பி.யூ. சின்னப்பாஇ கே.பி. சுந்தராம்பாள் ஆகியவர்களின் பாட்டுகளை ஸ்ரீநிவாசன் பாடுவார்.

மனப்பிறழ்வுக்கு ஆளான பாகவதர் இளம் பருவத்தில் என்றோ ஊரைவிட்டுப் போயிருந்தார்.

கடலின் அக்கரை போனவர்களின் கனவுகள் ஆயிரம்

.

                                 
 ஒருநாள்    குளிர்   காலைப்பொழுது.    மெல்பன்   நகரிலிருந்து  விமான   நிலையத்திற்கு   பிரிஸ்பேர்ண்  சென்ற  மனைவியை அழைத்துவருவதற்காக   பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றேன்.   மனைவி   பிரிஸ்பேர்ணிலிருந்து மெல்பனுக்கு  புறப்படுவதற்கு   முன்னர்   எனது  கைத்தொலைபேசி இலக்கத்திற்கு   தொடர்புகொண்டாள்.
தான்   விமானம்   ஏறிவிட்டதாக   தகவல்  சொன்னாள்.  நானும் மெல்பன்  விமான  நிலையத்திற்கு  வந்துகொண்டிருப்பதாக  சொன்னேன்.
இந்த  உரையாடல்  சில   கணங்களில்   முடிந்து  எனது கைத்தொலைபேசியை  அணைத்தபொழுது  எனக்கு  முன்னாலிருந்த ஒரு   பத்து வயதுச்சிறுமி   என்னைப்பார்த்து   நீங்கள்  தமிழா? எனக்கேட்டாள்.  நான்  திடுக்கிட்டுவிட்டேன்.   முகத்தில்   புன்னகையை   உதிரவிட்டவாறு   ஓம்  என்றேன்.    
அவள்  அருகில்  சுமார்   ஏழுவயது   மதிக்கத்தக்க  ஒரு  சிறுவன்தான்  அதற்குப்பதில்   சொல்லுமாப்போல்   நாங்களும்   தமிழ்தான்  என்று கீச்சுக்குரலில்   சொன்னான்.
அந்தக்குழந்தைகளுக்கு  என்னுடன்  உரையாடவேண்டும் போலிருந்ததை  அவர்களின்   பரவசமான  முகம்  காண்பித்தது.
எனக்கு  ஓரளவு  புரிந்துவிட்டது.

இலங்கைச் செய்திகள்


பள்ளிவாசல், வீடுகள் மீது தாக்குதல்: தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பு

மத்தள விமான நிலையத்திலிருந்து பயணிப்போருக்கு விசேட சலுகை

இலங்கையின் நிலைமைகள் குறித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கவலை

பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கோரி அளுத்கமவில் ஆர்ப்பாட்டம்

அளுத்கம பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி : இருந்தவருக்கு பதவி உயர்வாம்!

முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து யாழ். பல்கலையில் கண்டனப் பேரணி

அளுத்கம சம்பவத்தை கண்டித்து யாழிலும் ஹர்த்தால்

வட்டரெக விஜித்த தேரரின் அந்தரங்க உறுப்பை வெட்ட முயற்சி


பள்ளிவாசல், வீடுகள் மீது தாக்குதல்: தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பு

15/06/2014  அளுத்கம, தர்ஹா நகரில் அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.




தர்ஹா நகரில் உள்ள பள்ளிவாசல் மற்றும் வீடுகள் மீது தாக்குதுல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தர்கா நகர் றிஸ்கி ஹாட்வெயாருக்கு தீ வைக்கப்பட்டள்ளதாகம் தெரிவிக்கப்படுகின்றது.
தர்ஹா நகரில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதனையடுத்தே  நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைபிரயோகம் மேற்கொண்டிருந்ததோடு ஊரடங்கு சட்டத்தையும் பிறப்பித்துள்ளனர்.நன்றி வீரகேசரி 



இந்திய கலைஞர் லாவண்யா ஆனந்த் வழங்கும் தேவ நிருத்தியம்

.
இந்தியாவின் பிரபல பரதக் கலைஞர் லாவண்யா ஆனந்த் வரும் 29 ஆம் தேதி வெண்ட்வெர்த்வில் ,ரெட் கம் அரங்கில்  நடன நிகழ்ச்சி வழங்க இருக்கிறார்நிகழ்ச்சிக்குநாட்டியாஞ்சலி ஆஸ்திரேலியா ஒழுங்கு செய்துள்ளது.
பிரபல நடன குரு வழுவூர் ராமைய்யா பிள்ளையின் நடன பாணியை பின் பற்றி வரும் லாவண்யா ஆனந்த் எஸ் கே ராஜரத்னம் பிள்ளைகலாநிதி நாராயணன்,கே ஜே சரசாஆகியோரின் மாணவியாவார்நடனக் கலையின் பாரம்பரியம் முரண்படாமல் புதியபாணிகளினை அறிமுகப்படுத்துவதில் லாவண்யாவின் பல ஆண்டுகால நடனப் பயிற்சியும்ஆர்வமும் கைகொடுப்பது பாராட்டு பெற்றது.

மிச்சமிருக்கும் ஒரு கவிதை -கவிதா முரளிதரன்

.
எனது வேசித் தொழிலில்
ஒரு ஆணுடைய பணத்தை
ஏற்றுக்கொண்ட பிறகு
இரண்டாவது ஆணினுடையதை
ஏற்றுக்கொள்ளலாகாது ஐயா.
மீறினால்
என்னை நிர்வாணமாக நிறுத்தி
கொல்வார்கள் ஐயா.
மேலும் கேடு கெட்டவர்களோடு
நான் உடனுறைந்தால்
சிவந்த, சூடேறிய கத்தி கொண்டு
எனது மூக்கையும் காதையும் அறுப்பார்கள் ஐயா.
மாட்டேன், முடியாது.
உங்களை அறிந்த பிறகு
அதைச் செய்ய மாட்டேன்.
கட்டுகளற்ற சிவனே,
என் சொல் உண்டு.
கவிதையை எழுதியவர் கன்னடப் பெண் கவிஞர் சூலே சங்கவா. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னடக் கவிஞரான சூலே சங்கவா எழுதியதில் மிச்சமிருப்பது இந்த ஒரு கவிதை மட்டுமே. 

தமிழ் சினிமா


உன் சமையலறையில்     




இயக்குனரான பிரகாஷ்ராஜ்ஜின் அடுத்த படைப்பு தான் உன் சமையலறையில். சினிமாவால் பல பேர் இங்கு வாழ்கின்றனர், ஆனால் ஒரு சிலர் மட்டுமே சினிமாவை வாழ வைக்க வேண்டும் என இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு கலைஞன் தான் பிரகாஷ்ராஜ்.படத்தயாரிப்பாக இருந்தாலும் சரி, படத்தை இயக்குவதாக இருந்தாலும் சரி தரமான படத்தை தான் தருவேன் என்று பிடிவாதமாக இருப்பவர் பிரகாஷ்ராஜ்.தோனி என்ற சமுக அக்கறை கொண்ட படத்தை இயக்கிய பிறகு மலையாளத்தில் அனைவராலும் பாராட்டப்பெற்ற சால்ட் & பெப்பர் என்ற படத்தை ரீமேக்காக தமிழில் இயக்கியிருக்கிறார்.
படத்தின் கதை

ஆர்க்கியாலஜி ஆய்வாளாரான பிரகாஷ்ராஜும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான சினேகாவும் திருமண வயதை கடந்தும் திருமணம் செய்யாமலே வாழ்ந்து வருகின்றனர்.ஒரு நாள் சினேகா சாப்பாடு ஆர்டர் செய்ய ஹோட்டலுக்கு போன் செய்வதற்கு பதில் பிரகாஷ்ராஜுக்கு தவறுதலாக போன் செய்வதன் மூலம் ஒரு குட்டி கலாட்டா ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையாக திட்டிக்கொள்கின்றனர்.ஒரு சில நாட்களில் தன் தவறை உணரும் சினேகா தனது தோழியின் ஆலோசனைப்படி பிரகாஷ்ராஜிடம் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்க, வழக்கம் போல் எல்லா தமிழ் சினிமாவிலும் வருவது போல் இருவருக்குமிடையே காதல் ஆரம்பித்து விடுகிறது.போனிலேயே எத்தனை நாள் தான் பேசுவது, ஒரு நாள் இருவரும் நேரில் பார்க்கலாம் என்று முடிவு செய்து போகும் இடத்தில் தான் இருவருக்கும் ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து இவர்கள் காதல் என்ன ஆகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர், நடிகைகள்

படத்தின் மிகப்பெரிய பலமே பிரகாஷ்ராஜ் தான், அவர் ஒரு தேர்ந்த நடிகர் என்பதால் வழக்கம் போல் நன்றாகவே நடித்துள்ளார். சினேகாவும் தனக்கு கொடுத்த ரோலை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.

பலம்

இவர்கள் எல்லோரையும் தாண்டி படத்திற்கு உயிராக இருப்பது இளையராஜாவின் பின்னணி இசை தான், காற்றில் கலைந்த மேகம் போல் நம் மனதையும் மெல்ல கலைத்து செல்கிறது ராஜாவின் இசை.

பலவீனம்

ஆனால் படத்தின் திரைக்கதையில் தான் பெரிய ஓட்டை, மலையாளத்தில் அது தான் பலமாக இருந்தது, இங்கு இதுவே பிரகாஷ்ராஜுக்கு வில்லன் ஆனது.அதிலும் அந்த இளம் ஜோடிகளின் காதல் நம்மை மிகவும் சோதிக்கிறது. பாமர ரசிகனுக்கு பிடிக்குமா என்பது சந்தேகம் தான். ஏ சென்டர் ரசிகர்களை கொஞ்சம் திருப்திப்படுத்தலாம்.

உன் சமையலறையில் - உயர்தர உணவை விரும்புவோர் மட்டும் ருசிக்கலாம். - 














நன்றி cineulagam