சிட்னி தமிழ் அறிவகம் நடாத்திய கொடிதினம் 2012
.
கு கருணாசலதேவா
யாழ் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட தினத்தை நினைவு கூர்வதற்காக சிட்னி தமிழ் அறிவகம் சென்ற சனிக்கிழமை யூன் மாதம் 2ம் திகதி ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலையில் மாலை 6.30 மணிக்கு கொடிதினத்தை நடாத்தினார்கள்.
திரு திருமதி இராஜமுத்தையா அவர்களால் மங்கள விளக்கேற்றப்பட்டு ஹோம்புஷ் தமிழ்க்கல்வி நிலைய மாணவர்களால் தமிழ்மொழி வாழ்த்தும் தேசிய கீதமும் இசைக்கப்பட்டன.
ஒரு நிமிட மௌன அஞ்சலிக்குப் பின்னர் தலைவர் திரு ஸ்ரீகணேஸ்வரன் வரவேற்புரையை நிகழ்த்தினார். திருமதி சாயிபிரியா பாலாவின் மாணவர்களுடைய நடன நிகழ்ச்சியை தொடர்ந்து கிளிநோச்சியிலுள்ள ஒரு கிராமத்தின் கல்வி மற்றும் அன்றாட வாழ்க்கையின் கஷ்டங்களைப்பற்றி செல்விகள் அபரானாவும் நிவேதாவும் விபரமாக விளங்கப்படுத்தினார்கள்.
திரு திருமதி இராஜமுத்தையா அவர்களால் மங்கள விளக்கேற்றப்பட்டு ஹோம்புஷ் தமிழ்க்கல்வி நிலைய மாணவர்களால் தமிழ்மொழி வாழ்த்தும் தேசிய கீதமும் இசைக்கப்பட்டன.
ஒரு நிமிட மௌன அஞ்சலிக்குப் பின்னர் தலைவர் திரு ஸ்ரீகணேஸ்வரன் வரவேற்புரையை நிகழ்த்தினார். திருமதி சாயிபிரியா பாலாவின் மாணவர்களுடைய நடன நிகழ்ச்சியை தொடர்ந்து கிளிநோச்சியிலுள்ள ஒரு கிராமத்தின் கல்வி மற்றும் அன்றாட வாழ்க்கையின் கஷ்டங்களைப்பற்றி செல்விகள் அபரானாவும் நிவேதாவும் விபரமாக விளங்கப்படுத்தினார்கள்.
இலங்கைச் செய்திகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கவனத்திற்கு...
இலங்கை எதிர்நோக்கும் உண்மையான சவால்
முற்றுமுழுதாக சர்வதேச சமூகத்தை நம்பி...
கூட்டமைப்பு முன்னாள் எம்.பி. சந்திரகாந்தன் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிப்பு “கிறிஸ் பூதம் வழக்கு விசாரணை தொடர்பாக”
தமிழ் அரசியல் கைதிகளை விடுவியுங்கள் வெலிக்கடை சிறைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
மீள்குடியேறும் மக்களுக்கான நிரந்தர வாழ்வாதார உதவிகளை அவுஸ்திரேலியா தொடர்ந்து வழங்கும் யாழ்.வந்துள்ள அந்நாட்டு தூதுவர் உறுதி
குடாநாட்டில் கடத்தல் உட்பட குற்றச் செயல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்துங்கள் வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை
உன்னிச்சை அணைக்கட்டின் கீழ் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கவனத்திற்கு...
Monday, 28 May 2012
தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கான வழிவகைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் விடுத்திருந்த அறிக்கை நாட்டில் அரசியல் நிலைவரங்களைப் பொறுத்தவரை தற்போதைய சூழ்நிலையில் மிகவும் முக்கிய கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதொன்று என்பதில் சந்தேகமில்லை.
அதிசயப் பெண்மணி ஹெலன் கெல்லர்
.
புகழ்பெற்ற பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய ஹெலன் கெல்லர் என்னும் பெண்மணியிடம் அதிசயிப்பதற்கு ஒன்றுமில்லை, அவரும் இயல்பான மாந்தராக இருந்திருந்தால்! ஆனால் கண்பார்வையற்ற, கேட்கவும் பேசவும் இயலாத ஒரு மாற்றுத் திறனாளி என்பதை அறிந்தால் எத்தனை வியப்பு உண்டாகிறது.அத்தகைய வியக்கத்தக்கப் பெண்மணியின் நினைவு நாளில் அவரைப் பற்றிய இக்கட்டுரையைப் பதித்து அவர் பெருமையை நினைவுகூர்வதில் மிகவும் மகிழ்கிறேன்.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள துஸ்கும்பியாவில் 1880ஆம் வருடம் ஜூன் 27ஆம் நாள் பிறந்த ஹெலன் ஆடம்ஸ் கெல்லருக்குப் பிறவியில் குறைகளேதுமில்லை. பதினெட்டு மாதக் குழந்தையாயிருக்கும்போது ஏற்பட்ட மூளைக்காய்ச்சலால் தம் பார்வையை, பேசும், கேட்கும் திறனை இழந்தவரை, தம் வாழ்நாளின் இறுதிவரை அயராது அடுத்தவருக்காகப் பாடுபடத் தூண்டியது அவருடைய மனோதிடமாகும். அதற்கு உறுதுணையாயிருந்தவர் அவருக்கு வாய்க்கப்பெற்ற அற்புத ஆசிரியராவார்.
இலங்கையில் தலைசிறந்த தமிழ் நாவல்கள்.....? முருகபூபதி
.
பேராசிரியர் க. கைலாசபதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் முதல் தலைவராக நியமனம் பெற்றதையடுத்து, அவர் 1976 ஆம் ஆண்டு இலக்கிய உலகிற்கும் இலக்கிய மாணவர்களுக்கும் பயனுள்ள ஆய்வரங்கொன்றை இரண்டு நாட்களுக்கு பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்திருந்தார். தமிழகத்திலிருந்து அசோகமித்திரனும் அழைக்கப்பட்டிருந்தார்.
பேராசிரியர் க. கைலாசபதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் முதல் தலைவராக நியமனம் பெற்றதையடுத்து, அவர் 1976 ஆம் ஆண்டு இலக்கிய உலகிற்கும் இலக்கிய மாணவர்களுக்கும் பயனுள்ள ஆய்வரங்கொன்றை இரண்டு நாட்களுக்கு பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்திருந்தார். தமிழகத்திலிருந்து அசோகமித்திரனும் அழைக்கப்பட்டிருந்தார்.
குறிப்பிட்ட 1976 ஆம் ஆண்டு தமிழ் நாவல் நூற்றாண்டுக்காலமாகும். பல முன்னோடி நாவலாசிரியர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியிருந்த தமிழ்நாடு, இந்த நூற்றாண்டுக்காலத்தை ஏனோ மறந்துவிட்டிருந்தது. இத்தனைக்கும் தனது வாழ்நாள் பூராகவும் தன்னை ஒரு எழுத்தாளன் என்று நிறுவிவரும் கலைஞர் தமிழக அரசில் அப்போது முதல்வராக பதவியிலிருந்தார்.
ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா
.
சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்
-மகாகவி
Welcome to delegates of Bharathi International
நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஓட்டலின் வாயிலில் ஆடின. தலைப்பாகைக்காரரின் படம் கீழே துடித்துக் கொண்டிருந்தது. அருகே பல வர்ணக் கொடிகள் சஞ்சலித்துக் கொண்டிருந்தன. டாக்டர் நல்லுசாமி கண்ணாடிக் கதவைத் திறப்பதற்கு முன் சேவகன் திறந்து புன்னகைத்தான். உள்ளே குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்கில் கம்பளத்தில் தமிழறிஞர்கள் நிறைந்திருந்தார்கள். புதுக்கவிஞர் கேக் கடித்துக்கொண்டிருந்தார். சாகித்திய அகாதமி சிகரெட்பற்றவைத்துக் கொண்டிருந்தார். பரிபாடல் சோபாவில் உட்கார்ந்து கொண்டு தொடை மேல் காகிதம் வைத்துக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். உரையாடலில் தமிழ் உலவியது.
"தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்களில்லை. உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டு, தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்..."
"இதைச் சொன்னது யாரு, சொல்லுங்க பார்க்கலாம்?"
"பேரறிஞர் அண்ணாங்களா?"
"இல்லைங்க. பார்ப்பனரான சுப்பிரமணிய பாரதி. `காற்று’ன்னு வசன கவிதை படிச்சுப் பாருங்க"
"அவரு எல்லாவிதத்திலும் புரட்சியாளருங்க, ஆயிரத்துத் தொளாயிரத்துப் பத்து இருபதுகளில் ஒரு பார்ப்பனர் இந்த மாதிரி சொல்றதுக்கு எத்தனை தைரியம் வேணும்"
டாக்டர் நல்லுசாமி அவர்களை அணுக "வாங்க, வாங்க, வாழ்த்துக்கள்."
"எதுக்கு?" என்றார் டாக்டர்.
"அ. தெரியாத மாதிரி கேக்கறிங்க."
"உண்மையிலேயே தெரியாதுங்க"
"பாரதி பல்கலைக் கழகத்துக்கு உங்களைத்தான் துணைவேந்தராப் போடப் போறாங்களாம்."
"ஓ. அதுவா? எத்தனையோ பேர்களில் என் பேரும் இருக்குது."
"இல்ல. நீங்கதான்னு சொல்றாங்க. அமைச்சர் உங்களைக் கவனிக்கத்தான் இன்னிக்கு உங்க கூட்டத்துக்கே வராருன்னு சொல்றாங்க"
"சேச்சே. அமைச்சருக்கு பாரதி மேல அப்படி ஒரு ஈடுபாடுங்க"
"உங்களை விட்டாப் பொருத்தமா வேற யாருங்க...?"
"எதோ பார்க்கலாம். அதெல்லாம் அவ்வளவு சுலபமில்லைங்க. அரசியல் வேற கலக்குது.." டாக்டர் நல்லுசாமி அவர்களை விட்டு விலக..
"வள்ளுவர் சொல்லிக்காரு-
`மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்`னு.
சம்பந்தன் அவர்களின் தலையாய கடமை - தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்
.
உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு இலங்கைத் தமிழ் மக்கள் தங்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயமொன்றைக் கொண்டிருக்கவில்லை. தங்களது பிரச்சினைகள் தொடர்பில் பயனுறுதியுடைய முறையில் குரல்கொடுக்கவல்ல அரசியல் பிரதிநிதிகள் தங்கள் மத்தியில் இல்லையென்ற கவலை தமிழ் மக்களுக்கு இருந்தது. எஞ்சியிருக்கக் கூடிய தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கூட இதை ஏற்றுக்கொண்டவர்களாகவே காணப்பட்டனர். மீண்டும் ஜனநாயக ரீதியான செயன்முறைகளில் தமிழ் மக்களை ஈடுபட வைப்பதற்கு நம்பிக்கையூட்டக்கூடிய தந்திரோபாயங்களை வகுத்துச் செயற்பட வேண்டிய சவாலை தமிழ்க் கட்சிகள் எதிர்நோக்கி நின்றன.
இந்தச் சவாலுக்கு தனித்தனியாக நின்று கட்சி அரசியல் குரோதங்களை வெளிக்காட்டுவதன் மூலமாக ஒருபோதுமே முகம் கொடுக்க முடியாது. அதனால் கடந்த கால உரிமைப் போராட்டங்களின் அனுபவங்களிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் கசப்பானதும் கனதியானதுமான பாடங்களை அடிப்படையாகக் கொண்டு சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்கள் வேண்டிநிற்பதற்கேற்ற முறையில் எதிர்காலத்திற்கான அரசியல் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் ஐக்கியப்பட்ட முறையில் வகுக்கத் தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்றே தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயற்படக்கூடிய அரசியல் விவேகமும் தொலை நோக்கும் அத் தலைவர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை.
உலகச் செய்திகள்
.
நவநீதம்பிள்ளையின் இரண்டாவது பதவிக்காலம்
சிரிய இராணுவத்தின் வெறியாட்டம்: குழந்தைகள் உட்பட 92 பேர் பலி
இத்தாலியில் நிலநடுக்கம்
கொன்சர் வேட்டிவ் கட்சி தலைமையகத்துக்கு பார்சலில் வந்த மனிதக் கால்
நைஜீரியாவில் வன்முறை: 45 பேர் பலி
கட்டாரில் இடம்பெற்ற தீ விபத்தில் 19 பேர் பலி
போர்க்குற்றவாளி சார்ள்ஸ் டெய்லருக்கு 50 வருட சிறை
நவநீதம்பிள்ளையின் இரண்டாவது பதவிக்காலம்
Monday, 28 May 2012 20:05
நவநீதம்பிள்ளையின் இரண்டாவது பதவிக்காலம்
சிரிய இராணுவத்தின் வெறியாட்டம்: குழந்தைகள் உட்பட 92 பேர் பலி
இத்தாலியில் நிலநடுக்கம்
கொன்சர் வேட்டிவ் கட்சி தலைமையகத்துக்கு பார்சலில் வந்த மனிதக் கால்
நைஜீரியாவில் வன்முறை: 45 பேர் பலி
கட்டாரில் இடம்பெற்ற தீ விபத்தில் 19 பேர் பலி
போர்க்குற்றவாளி சார்ள்ஸ் டெய்லருக்கு 50 வருட சிறை
நவநீதம்பிள்ளையின் இரண்டாவது பதவிக்காலம்
Monday, 28 May 2012 20:05
ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கு இரண்டாவது பதவிக்கால நீடிப்பு அரைமனதுடன் வழங்கப்பட்டிருப்பதாக தென்படுகிறது. தென்னாபிரிக்காவின் முன்னாள் நீதிபதியாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் பணிபுரிந்த நவநீதம்பிள்ளை 2008 செப்டெம்பரில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டிருந்த அவரின் முதலாவது பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மேலும் இரு ஆண்டுகளுக்கு அவரின் சேவைக்காலத்தை நீடிக்க ஐ.நா. பொதுச் சபை அங்கீகரித்துள்ளது.
இணைய ஒழுங்கமைப்புக்கு ஐ.நா. ராடார் அவசியமா?
.
இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளிலும் கூட பொருளாதார, சமூக, கலாசார முறைமைகளை மீளக்கட்டமைப்பதற்கான வலுவான சக்தியாக இணையம் (இன்ரர்நெற்) இன்று வியாபகமெடுத்து வருகின்ற நிலையில் இதனை அரசாங்க மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச அமைப்பான ஐ.நா. சபையூடாகவும் ஒழுங்கமைப்புக்கு உட்படுத்த வேண்டுமென்ற பிரேரணைகள் முன்வைக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.
இந்த இணையமானது மிகவும் அனுகூலமான தொடர்பு ஊடகமென்பதை பெரும்பாலானவர்கள் உணர்ந்து கொள்ள முடிகின்றது. கல்விமான்கள், தொழில்நுட்பவியலாளர்கள், பாரிய வர்த்தகத்துறையிலிருந்து சவாலை எதிர்நோக்கும் சிறிய மற்றும் புதிதாக வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்போர் இந்த இணையத்தால் ஆரம்பத்தில் பாரியளவு நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. இப்போது அந்தக் கட்டத்தை உலகம் தாண்டிச் சென்று விட்டது. இலட்சோப இலட்சம் டிஜிட்டல் பரப்பு வலைப்பின்னல் கட்டுமானத்தை ஒழுங்கமைவான சில பரப்புகளினூடாக (கூகுள், பேஸ்புக், டுவிட்டர், அமேசன் போன்ற இணையத்தளங்கள்) இன்று நாம் பயன்படுத்துகின்றோம். ஆனால், இணையத்தின் திட்டங்கள் ஒரு சில பாரிய இணையத்தளங்களுடன் பிணைப்புகளைக் கொண்டதாகவே உருவாகிவருவதாகவும் பொதுமக்களுக்கான வெளிப்படைத்தன்மை காணப்படாத நிலைமை மேலோங்கி வருவதாகவும் மாற்றுக்கருத்துகள் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
வானொலி மாமா நா.மகேசனின் குறளில் குறும்பு 36 மரண தண்டனை
.
சுந்தரி : (பத்திரிகை வாசிக்கிறாள்) வங்கியில் கொள்ளை அடித்த இருவருக்கு மரண தண்டனை…… வேணும். சரியான தண்டனைதான். இந்தக் காலத்திலை கொலை, களவு, கொள்ளை எல்லாம் கூடிப்போச்சு. உப்பிடித் தண்டனை குடுத்தால்தான் உதுகள் அடங்கும்.
ஞானா : என்ன அம்மா…. ஆருக்குத் தண்டனை?
சுந்தரி : வங்கியிலை கௌ;ளை அடிச்ச இரண்டு பேருக்கு மரண தண்டனை எண்டு இந்தப் பேப்பறிலை போட்டிருக்கு.
ஞானா : இதென்ன அநியாயம். வங்கியைக் கொள்ளை அடிச்சதுக்கு மரணதண்டனையோ? அதுகும் இந்தக் காலத்திலையோ?
சுநதரி : அதிலை என்ன பிழையெண்டு கேக்கிறன்? நீ திருக்குறள் ஆராயிற உனக்குத் தெரியாதே? திருவள்ளுவரே உப்பிடித்தான் தண்டனை குடுக்க வேணும் எண்டு குறளிலை சொல்லியிருக்கிறார். நான் முன்னை படிச்ச ஞாபகம். குறள்தான் தெரியேல்லை.
தமிழ் சினிமா
உருமி
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் பிரித்விராஜ், பிரபுதேவா, ஆர்யா, வித்யா பாலன், ஜெனிலியா, நித்யா மேனன் என நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ள உருமி இந்திய வரலாற்றின் திரைக்கதை ஆகும்.
நாயகன் பிரித்விராஜ் ஒரு பப் ஒன்றை நடத்தி வருகின்றனர். அவரது நண்பராக வருகிறார் பிரபுதேவா.
கடனில் இருக்கும் பிரித்விராஜிற்கு கேரளாவில் சொந்தமாக ஒரு இடம் இருக்கிறது. இதனை வெளிநாட்டைச் சேர்ந்த கொர்ப்பரேட் நிறுவனம் விலைக்கு வாங்க வருகிறது.
கடன் பிரச்சினையில் அதை விற்று விடும் எண்ணத்தில் இருக்கும் பிருதிவிராஜ், கேரளாவில் அவருக்கு சொந்தமாக உள்ள கண்ணாடிக்காடு என்ற இடத்திற்கு வருகிறார்.
அந்த இடத்தில் வித்யாபாலன் அப்பகுதி மக்களுக்காக பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த இடத்தை விற்க வேண்டுமெனில் இங்குள்ள ஆதிவாசி மக்களுக்கு பதில் சொல்லிவிட்டு, இடத்தை விற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்.
ஆதிவாசிகளிடம் செல்லும் பிரித்விராஜிடம் குகைகால மனிதனாக வரும் ஆர்யா, பிரித்விராஜின் மூதாதையர்கள் யார்? அந்த இடத்தின் பெருமை என்ன? என்பதை அவருக்கு விளக்குகிறார். அப்போது தொடங்குகிறது 15-ம் நூற்றாண்டுக் கதை.
போர்ச்சுகீசியர்கள் வருகை: இந்தியாவை கண்டு பிடிக்க வரும் வாஸ்கோடகாமா, அரைபடி மிளகை வாங்க வந்து இந்திய நாட்டை அடிமை படுத்துகிறான். நாட்டை மீட்கும் முயற்சியில் பிரித்விராஜின் தந்தையாக வரும் ஆர்யா முதலாவது ஆளாக உயிரை விடுகிறார்.
வாஸ்கோடகாமா கடல்பகுதியில் வரும்போது ஹஜ் பயணம் செய்துவிட்டு நாடு திரும்பும் 400 முஸ்லீம்களை கொன்று விடுகிறான். இவர்களில் ஒரு பெண்மணி அவர்களிடம் உள்ள நகைகளை சிறுவனாக இருக்கும் பிரித்விராஜின் கையில் கொடுத்து விட்டு நாட்டை காப்பாற்றும் படி சொல்லி விட்டு இறந்து போகிறார்.
அனாதையாக நிற்கும் சிறுவன் பிரித்விராஜ், சிறுவயது பிரபுதேவாவின் வீட்டில் வளர்கிறார். அந்நகைகளை உருக்கி உருமி என்ற ஆயுதத்தை செய்கிறார். (தமிழில் 'சுருள் வாள்' எனப்படும் இந்த ஆயுதம் முஸ்லீம்கள் பயன்படுத்திய ஆயுதமாகும். அவர்கள் அந்த ஆயுதத்திற்கு வைத்திருக்கும் பெயர் உருமி.)
காலச்சக்கரம் சுழல, 22 வருடங்களுக்கு பிறகு வீரனாக வளர்ந்து நிற்கிறார் பிரித்விராஜ். அப்போது வாஸ்கோடகாமாவும், அவரது மகனும் சேரநாட்டில் அட்டகாசம் செய்கின்றனர். சிரக்கல் மன்னனின் மகளான நித்யா மேனனை வாஸ்கோடகாமாவின் கூட்டம் சுற்றி வளைக்க, பிரித்விராஜும் பிரபுதேவாவும் காப்பாற்றுகிறார்கள்.
வாஸ்கோடகாமா கூட்டத்தை நாட்டை விட்டு விரட்டும் முயற்சியில் சிரக்கல் மன்னன் முயற்சிக்கிறார். ஆனால் அவரது அமைச்சனாக வரும் தளபதி சேனாச்சேரியும், மன்னின் மகனான பானுவிக்கிரமனும் வாஸ்கோடகாமாவிற்கு ரகசியமாக உதவி செய்கின்றனர்.
தன்மகளை கைப்பற்ற நினைத்த வாஸ்கோடகாமாவின் மகனை சிறைப்பிடித்து கொண்டு வரும் பொறுப்பை பிரித்விராஜிடம் கொடுக்கிறார் சிரக்கல் மன்னன். கூடவே அவரது படையினரில் 5 பேரையும் அனுப்புகிறார்.
பிரித்விராஜும் பிரபுதேவாவும் தங்களது திறமையால் வாஸ்கோடகாமாவின் மகனை சிறைபிடித்து வருகின்றனர். கூட வந்தோர் அரக்கலில் இருக்கும் முஸ்லிம் பெண்களான ஜெனிலியா கூட்டத்தை சிறைபிடித்து வருகின்றனர்.
பிரித்விராஜின் திறைமையை பாராட்டும் அரசர், அவருக்கும் பிரபுதேவாவிற்கும் தளபதி பொறுப்பை அளித்து வாஸ்கோடகாமாவை அழிக்க சொல்கிறார். இதனிடையே நித்யா மேனனுக்கும் பிரபுதேவாவிற்கும் காதல் மலர்கிறது. பிரித்விராஜிற்கும் ஜெனிலியாவிற்கும் காதல் மலர்கிறது.
சிரக்கல் அரசனின் மகனும், அமைச்சனும் செய்கின்ற சதியால் வாஸ்கோடகாமாவின் மகன் தப்பிச் செல்கிறான். சிரக்கல் மன்னன் கொல்லப்படுகிறார். அரசனின் ஆதரவற்று இருக்கும் பிரித்விராஜும், பிரபுதேவாவும் வாஸ்கோடகாமா கூட்டத்தை விரட்டி அடித்தார்களா இல்லையா என்பதை சொல்லி படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் சிவன்.
15-ம் நூற்றாண்டின் உறைவாள் எனப்படும் உருமியின் கதைக்களத்தை எடுத்து அதை திறம்பட கையாண்ட இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு பலத்த கைத்தட்டல்களைக் கொடுக்கலாம்.
நிகழ் காலத்தில் வரும் பிருத்விராஜ், நித்யா மேனன், பிரபுதேவா, ஜெனிலியா, வித்யா பாலன் ஆகியோர்களில் வித்யா பாலன் தனித்து தெரிகிறார். ஆனால் வரலாற்று காலத்தில் மற்ற நால்வரும் ஜொலிக்கிறார்கள்.
சேரநாட்டு தளபதி சேதிராயனாக வரும் ஆர்யா நடிப்பிலும், வீரத்திலும் மிரட்டி இருக்கிறார். தனது மகனுக்கு ஒரு வீரத்தந்தையாக மிளிர்கிறார். குகை கால மனிதன் தண்டப்பனாக வரும் ஆர்யாவின் சங்கத் தமிழ் இனிக்கிறது.
சேதிராயன் மகன் கேளுராயனாக வரும் பிருதிவிராஜ்தான் இப்படத்தின் நாயகன். வீரனுக்கேற்ற உடல்வாகு, தேர்ந்த போர் பயிற்சி, தந்தையின் வாக்கை காக்கும் தனயன், தாய் நாட்டை காக்கும் வீரன் என நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார்.
இவரது நண்பன் வவாலியாக வரும் பிரபுதேவா சில இடங்களில் சிரிப்பு காட்ட உதவினாலும், கதையோட்டத்தில் தன் பங்கை திறம்பட செய்திருக்கிறார். தீ துப்பி என்பதை துப்பாக்கி என்று திருத்தி சொல்லும் காட்சியில் கலகலப்பூட்டுகிறார். இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு இருவரும் இலக்கணமாய் இருக்கின்றனர்.
அரக்கல் ஆயிஷாவாக வரும் ஜெனிலியா நடிப்பில் மட்டுமின்றி களறி மற்றும் சண்டை காட்சிகளில் சூப்பராக நடித்திருக்கிறார் என்பதை விட, ஆயிஷாவாகவே வாழ்ந்திருக்கிறார். சிரக்கல் பாலாவாக வரும் நித்யா மேனன் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
அரவாணி அமைச்சர் சேனாச்சேரியாக வரும் ஜெகதீஷ் ஸ்ரீகுமாரின் நடிப்பில் வில்லனுக்கேற்ற நரித்தனம் தெரிகிறது. பானு விக்கிரமனாக வரும் அன்கூரின் நடிப்பு கச்சிதம். வாஸ்கோடகாமாவாக வரும் ராபினை விட, அவரது மகன் எஸ்தாலியோ காமாவாக வரும் அலெக்ஸின் நடிப்பு அசத்தல் ரகம்.
சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும், தீபக் தேவின் இசையும், ஸ்ரீகர் பிரசாத்தின் நேர்த்தியான படத்தொகுப்பும் நம் கண்முன்னே அக்காலகட்டத்தை உயிரோடு உலவ விட்டிருக்கிறது. வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் நிறைவாக இருக்கின்றன.
இப்படத்தில் சொல்லப்பட வேண்டிய முக்கிய விடயம் தமிழில் கூர்தீட்டப்பட்டுள்ள வசனங்கள். ''தாயின் மார்பில் குத்தி நிற்கும் தூக்கு மேடைகளை தகர்த்தெறிவோம்'' என்று பிரித்விராஜ் சொல்லும் இடத்தில் சபாஷ் போட வைக்கிறார் வசனகர்த்தா சசிகுமரன்.
போருக்கு செல்லும் பிரித்விராஜ், ஜெனிலியாவை அங்கேயே இருக்கும் படி சொல்லும் போது, ''பலமற்றவள் பெண் அப்படித்தானே'' என்பார் ஜெனிலியா. ''பலம் கொடுப்பதே பெண்தான். இன்று உன் வயிற்றிலிருக்கும் என் மகனை நீ காத்தால், நாளை ஆயிரம் போராளிகளை உருவாக்கும் தாய்மார்களுக்கு என் மகன் காவலிருப்பான். அதனால்தான் உனை இங்கே இருக்கச் சொல்கிறேன்'' என்று சொல்லும் இடத்தில் நம்மையும் அறியாமல் கைத்தட்டி விடுவோம்.
''போருக்கு சென்று திரும்பி வருவீர்களா'' என்று ஜெனிலியா கேட்கும் போது ''என் உயிருக்குள் உயிராய் இரு பெண்ணே... எனக்காக உன் உயிரோடு திரும்பி வருவேன்'' என்று பிரிதிவிராஜ் சொல்லும் இடத்தில் வீரத்தினூடே காதலும் கலந்துறவாடும் என்பதை கத்தி பிடித்தாற் போல் காட்டியிருக்கும் வசனம் அசத்தல்.
படத்தில் அத்தனை கேரக்டர்களும் சங்கத் தமிழில் உரையாடும் காட்சிகள் கண்ணுக்கும் காதுக்கும் விருந்து படைத்திருக்கிறது. இப்படி ஒரு வரலாற்று காலப் படத்தை கொடுத்தமைக்காக சந்தோஷ் சிவனுக்கு பல விருதுகள் கொடுத்து பாராட்ட வேண்டும்.
பதினைந்தாம் நூற்றாண்டு உறைவாளான உருமி... ரசிகர்களை உறைய வைத்து அசரவைக்கும் என்பதில் ஐயமில்லை.
நடிகர்கள்: பிரித்விராஜ், ஆர்யா, பிரபுதேவா
நடிகைகள்: ஜெனிலியா, வித்யா பாலன், நித்யா மேனன்,
ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்
இசை: தீபக் தேவ்
இயக்கம்: சந்தோஷ் சிவன்
nantri viduppu
Subscribe to:
Posts (Atom)