மடியில் வந்திருந்தாள் வேட்கை தீராதவள் ….


.


மடியில் வந்திருந்தாள் வேட்கை தீராதவள் ….

மடியில் வந்தமர்ந்தாள்
வேட்கை தீராதவள்.
அங்கலைந்து இங்கலைந்து
சிமிட்டிச் சிறு விழிகளால்
நோட்டமிட்டு
நாசியால் மோப்பமிட்டு
ஓ குரூப்பான்
எனக்கேற்றவன் இவனேயென
ஈற்றில் முடிவெடுத்து
தாகமடக்க
தொடைமீது வந்தமர்ந்தாள்.
தவித்தேன் நான்

மோகத்தில் தவித்தவளை
ஆலிங்கனம் செய்யவும்
முத்தத்தில் மூழ்கிடவும்
கூடிக் களித்திடவும்
முடியாது தவித்தேன்.

நவராத்திரி 2012 - செ பாஸ்கரன்


.


நவராத்திரி அக்டோபர் 16ம்  திகதி  செவ்வாய் கிழமை முதல் அக்டோபர் 24ம்  திகதி  புதன் கிழமை  வரை  இடம் பெறுகின்றது . விஜயதசமி  அக்டோபர் 24ம்  திகதி  புதன் கிழமை இடம் பெறுகின்றது . 

நவம் என்றால் ஒன்பது என்று ஒரு பொருள் உண்டு. சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் புரட்டாசி மாதம் வளர் பிறை பிரதமை முதல் 9 நாள் நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.......

மகாகவி பாரதி சக்தியை  பற்றி இப்படி பாடுகிறான் 

மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்! 
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே! 
ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே! 
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே.

சக்தி என்று அவன் கூறும்போது முப்பெரும் தேவியரையும் சேர்த்தே கூறுகின்றான் .

மகாகவி பாரதி சரஸ்வதியைப்  பற்றி இப்படி பாடுகிறான் 

வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள் 
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள் 
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய் 
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே

மகாகவி பாரதி லச்மியைப் பற்றி  பாடும்போது இப்படி பாடுகிறான் 

பொன்னரசி நாரணனார் தேவி, புகழரசி 
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள் 
அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள், ஸ்ரீதேவி 
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே

அவன் பார்வதியைப் பற்றி ப பாடும்போது இப்படி பாடுகிறான் 

மலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள் 
உலையிலே யூதி உலகக் கனல் வளர்ப்பாள் 
நிலையில் உயர்த்திடுவாள், நேரே அவள் பாதம் 
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே

சொல்லமறந்த கதைகள் -14, -- 15

.
கண்ணுக்குள் ஒரு சகோதரி
முருகபூபதி – அவுஸ்திரேலியா
 இலங்கையில் முதலாவது ஆயுதக்கிளர்ச்சி சிங்கள இளைஞர்களினால் 1971 ஆம் ஆண்டு நடந்தது. அந்தக்கிளர்ச்சி, ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை பலிகொண்டதுடன் அந்த கிளர்ச்சியின் சூத்திரதாரிகளான ரோகண விஜேவீர, லயனல் போப்பகே, உபதிஸ்ஸ கமநாயக்கா, லொக்கு அத்துல, பொடி அத்துல, தர்மசேகர, மகிந்தவிஜேசேகர போன்ற மக்கள் விடுதலை முன்னணி தலைவர்கள் கைதாகியதுடன் முடிவுக்கு வந்தது பற்றி ஏற்கனவே இந்தத்தொடரில் ஒரு அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
 கைதான அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற இயக்கத்தின் பணிமனையாக செயற்பட்ட கொழும்பு கொம்பனித்தெரு மலேவீதியில் அமைந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தில்தான் இயக்கத்தின் சுவரொட்டிகள் எழுதும் வேலைகளும் நடந்துகொண்டிருந்தன.
 கொழும்பிலும் அதன் சுற்றுப்பிரதேசங்களிலும் நடந்த பிரசாரக்கூட்டங்களுக்காக தமிழில் சுவரொட்டிகளை எழுதும் பணியிலும் ஈடுபட்டேன். கூடுதலாக சிவப்பு மையே சுவரொட்டிகளுக்கு பயன்படுத்தப்பட்டது.  ஒருநாள் சுவரொட்டிகளை எழுதிக்கொண்டிருக்கும்போது மைத்துளி ஒரு கண்ணில் விழுந்துவிட்டது.  கண்களை கழுவி சுத்தப்படுத்தினாலும் கண்ணெரிவு குறையவில்லை. கண்கள் சிவந்ததுதான் மிச்சம்.


உலகச் செய்திகள்

ஒஸ்லோவில் இலங்கைத் தாய்மாரின் சாகும்வரை உண்ணாவிரதத்திற்கு வெற்றி : டொம் தேவாலயத்தின் உத்தரவாதத்தையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது


அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள் தம்மிடம் உள்ளதாக வடகொரியா எச்சரிக்கை

இஸ்ரேலுக்குள் பிரவேசித்த ஆளற்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது


சீனாவில் பாரிய மண் சரிவு: 18 மாணவர்கள் புதையுண்டனர்

வெனிசூலா ஜனாதிபதித் தேர்தலில் ஹூகோ சாவிஸ் வெற்றி

 தலிபான்களுக்கு எதிராகக் குரல்கொடுத்த 14 வயதான சிறுமி மீது துப்பாக்கிச் சூடு

 நைஜீரியாவில் படையினரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 30 பொதுமக்கள் பலி

மண்டேலாவின் நாட்கள் --எஸ். ராமகிருஷ்ணன்


.

நெல்சன் மண்டேலா ராபின் தீவுச் சிறைச்சாலையில் இருந்த போது அவருக்கும் சிறையின் தணிக்கை அதிகாரியாக இருந்த ஜேம்ஸ் கிரிகோரி என்ற வெள்ளைகாரருக்குமான நட்பை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட Goodbye Bafana என்ற படத்தைப் பார்த்தேன்,
வழக்கமான ஹாலிவுட் படங்களில் ஒன்று தான் இதுவும் என்பது  போலத் துவங்கி மெல்லப் படம் என்னை முழுமையாக உள் இழுத்துக் கொண்டது
நெல்சன் மண்டேலா பற்றி இரண்டு படங்களை முன்பாக பார்த்திருக்கிறேன்  ஒன்று மண்டேலா என்ற டாகுமெண்டரி, மற்றொன்று மார்கன் ப்ரீமென் நடித்தInvictus, கிளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கியது, ரக்பி விளையாட்டு போட்டியை பற்றிய இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நெல்சன் மண்டேலா இடம்பெற்றிருந்தார்,
மேலும் Long Walk to Freedom என்ற மண்டேலாவின் சுயசரிதையை வாசித்திருந்த காரணத்தால் இப்படத்தில் இடம்பெறும் நிகழ்வுகள், அதன்பின்புல அரசியல், நிறவெறிக் கொடுமை போன்றவற்றை  எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடிந்தது,

இலங்கைச் செய்திகள்


யாழில் 9 மாதங்களில் 19 கொலை 32 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள்

முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்க நடவடிக்கை 

 கடைசிவரை போராடவேண்டும் ௭ன பிரபாகரன் தீர்மானித்தமை வரலாற்றுத்தவறு: ௭ரிக்சொல்ஹெய்ம்

 கொழும்பில் சட்டத்தரணிகள் சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்

ஏனைய துறைகளைப் போல் நீதித்துறையையும் அடக்கியாள அரசு முயற்சிக்கின்றது: சட்டத்தரணி ரத்தினவேல்

வடக்கின் 252 கி.மீ. தண்டவாளத்தை இந்தியா புனரமைக்கிறதுஜெயகாந்தனுடன் ஒரு நேர்காணல்


பொய் காரணங்களை சொல்லியோ அல்லது இது சமூகப் பிரச்சினை எனச்கூறி மற்றவரின் சுதந்திரத்தில் நீங்கள் தலையிட முடியாது.
பரிசுபெற்ற தமிழ் எழுத்தாளர் ஜேகே எனப்படும் ஜெயகாந்தனுடன் ஒரு நேர்காணல்
-   எஸ்.துரைராஜ்
jeyakanthanஆறு தசாப்தங்களுக்கு மேலான தனது இலக்கியப் பணியில் ஜேகே என்று நண்பர்களாலும் மற்றும் தோழர்களாலும் அழைக்கப்படும் தனபாண்டியன் ஜெயகாந்தன்,சமூக அநீதிகளுக்கும் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிராக தனது பேனாவை திறம்படக் கையாண்டதுக்காக பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.
ஒரு ஈடற்ற பேச்சாளர்,திரைப்படத் தயாரிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்,திறமையான பத்திரிகையாளர்,மிகச் சிறந்த எழுத்தாளர் என்று இருந்தபோதும், செயற்பாட்டுக்கு அஞ்சாதவராக இருந்தார், உலக மட்டத்தில் ஜனநாயகத்தை நேசிப்பவர்கள், சமாதானம், சமத்துவம் என்பனவற்றை முன்னேற்றுவதற்காக உழைப்பவர்களுடன் கைகோர்த்துக்கொள்ள அவர் ஒருபோதும் தயங்கியதில்லை.
அது அரசியலோ அல்லது கலாச்சாரமோ எந்த அரங்கமானாலும் அவர் தனது கருத்துக்களை மிகவும் நேர்மையுடனும் மற்றும் இணையற்ற தீரத்துடனும் வெளிப்படுத்தினார்.பரிசுகளும் பாராட்டுகளும் அவரை தேடி வந்தன.அவற்றிடையே ஜனாதிபதி விருது,சாகித்ய அகாதமி விருது,மற்றும் நட்புறவுகள்,சோவியத் தேச நேரு விருது,ரஷ்ய கூட்டமைப்பின் நட்புறவு ஆணை மற்றும் பத்மபூஷண் என்பனவும் அடங்கும்.

“எங்களுக்கு சொந்தமானது என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை……”


சமீபத்தில் ஸ்ரீலங்காவின் வடபகுதியில் மீள்குடியேற்றத்துக்காக திரும்பியிருக்கும் நிலமற்ற உள்ளக இடம் பெயர்ந்தவர்களின்(ஐ.டி.பி) பரிதாப நிலை
மரிஸ்ஸா டீ சில்வா மற்றும் நிக்கலோ இம்மானுவல் ஆகியோர் எழுதுவது.
சமீபத்தில் புதுமாத்தளனுக்கு திரும்பி வந்தவர்கள்
menikfarm-1“புதுக்குடியிருப்பின் தூசி நிறைந்த செம்மண் சாலையில் நீங்கள் வேகமாக வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது, ஒரு காலத்தில் இங்குள்ள மக்களுக்கு சொந்தமாக இருந்தவைகளான, ஒன்றின் மேல் ஒன்றாக குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டிருக்கும் துருப்பிடித்த வாகனங்களைக் கடந்து, தரையில் பரப்பி வைத்திருக்கும், சட்டி பானைகள், சீலை சட்டைகள், செருப்புகள், மற்றும் தட்டுகள் என்பனவற்றையும் கடந்து, வீதியின் இரு மருங்கிலும் யுத்தத்தினால் சீரழிக்கப்பட்ட வீடுகளின் சுவர்களை, துப்பாக்கி ரவைகளும், உலோகக் குண்டுத் துகழ்களும் சிதறித் துழைத்திருக்கும் காட்சியை காணும்போது, நம்மை சுற்றியுள்ள காற்றில் கலந்திருக்கும் ஆழமான சோகமும் மற்றும் நம்பிக்கையற்ற தன்மையும் உங்கள் உள்ளத்தில் ஊடுருவுவதை உங்களால் தவிர்க்க முடியாது”
அரசாங்கத்தை பொறுத்தமட்டில் மெனிக்பாம் மூடப்பட்டு அங்கு இருந்தவர்கள் எல்லோரும் மீளக் குடியமர்த்தப்பட்டு விட்டார்கள்.

புகலிடக் கோரிக்கையாளர்களை மானூஸ் தீவுகளுக்கு அனுப்பம் நடவடிக்கை 2012-10-08

புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தவர்களை பப்புவா நியூகினியின் மானூஸ் தீவுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு, குடியகல்வுத்துறை அமைச்சர் கிறிஸ் பொவன் தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்களை மற்றைய தீவுகளுக்கு அனுப்பவது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் கிறிஸ் பொவன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.


வேனிற்காலங்களின் இளவரசி -Ayyanar Viswanath

.வேனிற் காலங்களின் இளவரசி

அடுக்குச் செம்பருத்திப் பூவை

வருடிப் போகிறாள்

வெண்மஞ்சளாய் கிளைப்பூத்து

செம்மஞ்சளாய் மண்பூத்து நிற்கும்

வேம்பூவைத் தழுவி

முத்தமிடுகிறாள்

நெருங்குவதற்கு முன்பே புங்கை

அடர்த்தியாய் பூச்சொறிந்ததை

புன்னகையோடு ஏற்றுக் கொள்கிறாள்

மழை நனைய

மலர்தலைத் தள்ளிப்போட்டிருக்கும்

பன்னீர் மரத்தை

செல்லமாய் கோபித்து நகர்கிறாள்

பெண்களின் பிறப்புறுப்புகள் தொடர்பில் உதவியாளருக்கு எழுத்து வடிவ செய்தியை அனுப்பிய ஆஸி சபாநாயகர் பதவி விலகல்

.
                 பெண்களின் பிறப்புறுப்புகள் தொடர்பில் மிகவும் ஆபாசமான எழுத்து வடிவ செய்திகளை தனது முன்னாள் 
உதவியாளருக்கு அனுப்பி வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளான அவுஸ்திரேலிய பாராளுமன்ற சபாநாயகர் பீற்றர் சிலிப்பர் செவ்வாய்க்கிழமை பதவி விலகியுள்ளார்.

62 வயதான பீற்றர் சிலிப்பர் பெண்களின் உடலியல் தொடர்பில் தனது மோசமான கண்ணோட்டத்தை மேற்படி எழுத்து வடிவ செய்திகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தனது முன்னாள் உதவியாளரான ஜேம்ஸ் அஷ்பிக்கு அனுப்பி வைத்த மேற்படி ஆபாச எழுத்து வடிவ செய்திகள் அம்பலமானதையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.

தமிழ் சினிமா

இங்கிலீஷ் விங்கிலீஷ்

கணவர், இரண்டு குழந்தைகளுடன் ஸ்ரீதேவி. அதிகம் படிக்காத இவர் லட்டு செய்வதில் கைதேர்ந்தவர். இரண்டு குழந்தைகளும் நன்கு இங்கிலீஷ் பேசக்கூடியவர்கள்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள், அம்மாவுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது என்பதால் மிகவும் அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறார். இது ஸ்ரீதேவியின் மனதை மிகவும் புண்படுத்துகிறது.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் அக்கா மகளுக்கு அமெரிக்காவில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. எனவே ஸ்ரீதேவி திருமணத்திற்காக தனியாக அமெரிக்கா செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இங்கிலீஷ் தெரியாததால் விமானத்தில் தண்ணீர் கேட்பதற்குக்கூட முடியாத நிலையில் தவிக்கிறார். பக்கத்து சீட்டில் பயணிக்கும் அஜீத் அவருக்கு உதவுகிறார். விமானத்தில் இருந்து வெளியே வரும் வரை உதவுகிறார்.
பிறகு தனது சகோதரி வீட்டில் தங்கும் ஸ்ரீதேவி தனியாக கடைக்குச் செல்கிறார். அங்கு தனக்கு வேண்டிய உணவை வாங்க முயல்கிறார்.
ஆங்கிலம் தெரியாததால் அவமானப்படுகிறார். மனம் நொந்துபோன இவர் அமெரிக்காவில் 4 வாரங்களில் ஆங்கிலம் கற்றுத்தரும் பயிற்சி பள்ளியில் சேர்ந்து தன் கணவர் மற்றும் குழந்தைகள் அமெரிக்காவிற்கு வருவதற்குள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்குகிறார்.
அவர் ஆங்கிலம் கற்றுக்கொண்டாரா, தன் மரியாதையை மகளிடம் இருந்து பெற்றுக்கொண்டாரா? என்பதே கதை.
15 வருடங்களுக்குப் பிறகு வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் ஸ்ரீதேவி நடிப்பில் பளிச்சிடுகிறார். குடும்பப்பெண் கதாபாத்திரத்தில் மிகவும் அழகாக பொருந்தியிருக்கிறார்.
ஆங்கிலம் தெரியாமல் மற்றவர்கள் சொல்வதை புரிந்து கொள்ள முயற்சிப்பதும், தனக்கு வேண்டியதை சொல்ல முடியாமல் தவிப்பதும் என கை தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதேவி.
5 நிமிடங்கள் மட்டுமே வரும் அஜீத், அவரின் கதாபாத்திரத்தை மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக அவர் பேசும் வசனங்கள் நம்பிக்கையூட்டும் வகையில் இருக்கிறது.
வெள்ளைக்காரர்களை பார்த்து நாம் பயப்படக்கூடாது, அவர்கள் நம்மைப் பார்த்து கவலைப்படக்கூடிய காலம் வந்து விட்டது என்பது போன்ற வசனங்கள் சிறப்புக்குரியவை.
ஸ்ரீதேவியின் அக்காவின் இளைய மகளாக வரும் ப்ரியா ஆனந்த் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஸ்ரீதேவியின் கணவராக வரும் அதில் ஹூஸைன், நண்பராக வரும் மேதி, இங்கிலீஷ் டியூஷன் டேவிட், பாகிஸ்தானிய இளைஞன் என அனைவருமே தங்களது கதாபாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் பெற்றோர்கள் படிக்கவில்லை என்றாலும் தனது பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும். நாகரீக உலகத்தில் அவர்களும் பளிச்சிட வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள்.
அவர்களை, பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு ஏற்றாற்போல் பெற்றோர்களும் மாறவேண்டும் என்பதை மிகவும் யதார்த்தமான கதையில் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் பெண் இயக்குனர் கௌரி ஷிண்டேவை பாராட்டியே ஆகவேண்டும்.
நடிகர்: அதில் ஹுசைன், ஷிவான்ஸ் கோட்டியா, மேதி.
நடிகை: ஸ்ரீதேவி, ப்ரியா ஆனந்த், நவிகா கோட்டியா.
இயக்குனர்: கௌரி ஷிண்டே.
இசை: அமித்திரி தேவி.
ஒளிப்பதிவு: லஷ்மன் உடேகர்.
நன்றி விடுப்பு