குறைகளைவோம் வாருங்கள் ! - மகாதேவஐயர் ..... ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


image1.JPG         காதலித்துக் கைபிடித்து கல்யாணம்  செய்துநின்று 
         கருவளரக் காரணமாய்  காதலினைப் பரிசாக்கி 
         பிள்ளைதனைப் பெற்றெடுத்து பெருவிருந்து கொடுத்தாலும்
         வேறொருபால் மனம்நாடல் விளையாட்டாய் அமைகிறதே  ! 

         நம்பிவந்த பெண்ணவளை நம்பவைத்து நம்பவைத்து
         நயவுரைகள் சொல்லியவள் நரம்பெல்லாம் உணர்வேற்றி 
         இவ்வுலகில் நீயின்றேல் என்றுமே வாழேனென்று 
         பொய்யுரைத்து பொய்யுரைத்து போக்குகின்றார் பலரிப்போ ! 

             காவியத்து நாயகர்கள் காதலுரை பகர்வதுவும் 
             காவியத்து நாயகிகள் கண்ணீரில் மிதப்பதுவும் 
             காவியத்தில் கண்டுவிட்டு காவியத்தை பாராட்டி
             காவியத்தை வியந்தெழுதி காட்டிடுவோம் புலமைதனை ! 

             வெள்ளித்திரை நாயகர்கள் விதம்விதமாய் ஏமாற்றி
             கள்ளத்தனம் செய்வதையும் கண்கொட்டா பார்த்துநிற்போம் 
             உள்ளமதில் அவர்நடிப்பை உவந்தேற்றி பாராட்டி
             கள்ளத்தனம் காட்டியதை கருத்தைவிட்டே அகற்றிநிற்போம் ! 

யாழ் பல்கலைகழக பட்டதாரிகள் சங்கத்தின், அரங்காடல் 2019 - குலன் விசாகுலன்


கடந்த சனிக்கிழமை 22 ஆனி 2019,  5.30 மணி இனிய மாலைப்பொழுதில் Silverwaterல் உள்ள  பஹாய் (Bhai Centre  ) மண்டபத்தில், யாழ் பல்கலைகழக   பட்டதாரிகள் சங்கத்தின்,  அரங்காடல் 2019 அரங்கேறியது  . நிகழ்ச்சி அனுசரணையாளர்கள் குமரசிறி தம்பதிகள்,Dr பரன் தம்பதிகளுடன், தலைவர்  நாகேந்திரம் தம்பதிகள்   குத்துவிளக்கை ஏற்றி   நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.அதனை தொடர்ந்து.தமிழ்மொழி வாழ்த்தும் ஆஸ்திரேலிய தேசிய கீதமும் இசைக்கப்பட விழாவுக்கு வருகை தந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
முதல் நிகழ்வாக கோகுலதர்ஷன்  கர்நாடக சங்கீத அகாடமியின் மாணவமாணவிகள் புல்லாங்குழல் இசையை ஏனைய பக்க வாத்தியங்களுடன் வழங்கினர். அவர்கள் இசைத்த பாடல்கள் அனைத்தும் ஜனரஞ்சிதமான  சங்கீத ராகங்களுடன்  மனதுக்கு இதமாக இருந்தது. ஏறத்தாழ நாற்பத்தைந்து நிமிடங்கள் அவர்களுடைய இசை வெள்ளத்தில் சபையினர் மூழ்கிகிடந்தனர். புல்லாங்குழல் இசைக் கச்சேரியின் முடிவில், கோகுலதர்ஷன்  சங்கீத அகாடமியின் அசிரியை ஸ்ரீமதி திலகா ஜெயானந்தனை இந்நிகழ்வின்  பிரதான அனுசரணையாளர்களில் ஒருவரும், ஆஸ்திரேலிய யாழ் பல்கலைகழக   பட்டதாரிகள் சங்கத்தின் முதல் தலைவருமான டாகடர் பரன் சிதம்பரகுமார் தம்பதிகள் இவர்களை   கௌரவித்தனர்,   

சிட்னி இசை விழா 2019 – நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.
சிட்னி இசை விழா வருடாவருடம், மகாராணியாரது பிறந்த தினத்தை ஒட்டி வரும் 3 நாள் விடுமுறையில் யூன் மாதம் நடைபெறுவது. கடந்த 13 வருடங்களாக தவறாது பார்த்து வரும் ரசிகர்களில் நானும் ஒருத்தி. இசை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்ச்சி. 

இது 20 துக்கும் அதிகமான தேர்ந்த கர்நாடக கலைஞர்கள் சிட்னிக்கு வருகை தந்து, அந்த மூன்று நாட்களும் காலை தொடக்கம் மாலை வரை தினம் தினம் வேறுபட்ட கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடந்த வண்ணமே இருக்கும். இதை கேட்டு இரசிக்க மண்டபம் நிறைந்த கூட்டம், இசையிலே தம்மை மறந்து இரசிப்பார்கள். இது பொப் இசையல்ல. சுப்பர் சிங்கர்களவு அல்ல. சுத்த கர்நாடக இசை.  பாரம்பரிய தூய சாஸ்தீரிய சங்கீதம். அதன் சக்திதான் மக்கள் மனங்களை தன்பால் கவர்ந்து 3 நாட்கள் மக்களை கட்டுண்ட நாதமாக தன்னை மறந்து இரசிக்க வைத்தது. நாதத்தால் இறையை அடைய வரம். ஆம் பிசகற்ற சாஸ்திரீய இசை தெய்வீக சக்தியை உணரவைத்தது. அந்த உணர்வை பெற அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளின் இருந்து மட்டுமல்ல கடல்கடந்து New Zealandயில் இருந்தும் இரசிகர்கள் கூட்டம் வருவது வழமை. 

முதல் நாள் இசை நிகழ்வு இளம் கலைஞன் இரா மகிருஷ்ணமூர்த்தியது. அவசரமாக வீடு வரவேண்டியிருந்தது. தேர்ந்த இசைக்கலைஞர் 'பாவலன்' ஏனக்கா போறீங்கள் பிரமாதமாக பாடக்கூடிய இளைஞன் அல்லவா என்றார். மாலை கச்சேரிக்கு போனதும் பலரும் ஆகா எப்படி அருமையான இசை என ஒருவர். தமிழிலே பல பாடல்களை பாடி அசத்தினார் என ஒருவர் கூற கேட்டேன்.  கலிபோனியாவிலே பிறந்து வளர்ந்த பையன் கர்னாடக இசையால் கவரப்பட்டு தன் பட்டப்படிப்பு முடிந்ததும் முளு நேர இசை  கலைஞாகிவிட்டான். இசையின் சிகரம் என விளங்கும் "MUSIC ACADEMY' என்ற வித்துவ சபையில் சிறந்த இசை கலைஞர் என்ற விருதை 2016 இல் பெற்று விட்டார். இரா மகிருஷ்ணமூர்த்தி.

ஸ்ரத்பீல்ட் (Strathfield) MP ஜோடி மக்கேவுடன் பேட்டி கண்டவர் - உஷா ஜவகார்

Ms Jodi Leyanne MCKAY, MPA(Syd), GAICD MP

Member Photo
Member of the Legislative Assembly
Member for Strathfield
Shadow Minister for Transport, and Shadow Minister for Roads, Maritime and Freight
Member of the Australian Labor Party

1 நீங்கள் எந்த ஊரில் எந்த நாட்டில் பிறந்தீர்கள்?

நான் கிளவுஸ்டர் (Gloucester) என்ற சிறு நகரில் பிறந்து வளர்ந்தேன்.  கிளவுஸ்டர் என்ற ஊர்  NSW மாநிலத்தில்  உள்ளது. ஏறக்குறைய 2500 பேர் மட்டுமே வாழ்கிறார்கள்.

2 உங்களது பெற்றொரின் பெயர் என்ன?
அவர்கள் எந்த நாட்டில் பிறந்தார்கள்?

என் தந்தையில் பெயர் புஷ் ( Bush )
என் தாயாரின் பெயர் கொலின் ( Coleen )
அவர்கள் அவுஸ்திரேலியாவில் தான் பிறந்தார்கள்.

3 உங்களுக்கு எத்தனை சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள்.

எனக்கு ஒரு சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள்.

4 உங்களது ஆரம்பகால கல்வியை எந்தப் பாடசாலையில் கற்றீர்கள்?

கிளவுஸ்டர் ஆரம்ப பாடசாலையில் ( primary ) ஆரம்ப கல்வியைப் பயின்றேன்.

5 உங்களது உயர்தர கல்வியை எங்கு கற்றீர்கள்?

கிளவுஸ்டர் உயர் தர பாடசாலையில் (high ) உயர் கல்வியைக் கற்றேன்.

6 உங்கள் டிகிரியை எந்த பல்கலைகழகத்தில் படித்து முடித்தீர்கள்?

யுனிவர்சிட்டி ஒஃப் சிட்னியில் Masters in Public Administration ஐ பெற்றேன்.

7 உங்களது குடும்பம்  மகள் பற்றி கூறுங்களேன்!

பதினெட்டு வயதில் எனக்கு ஒரு அழகான பெறா மகள் ( step daughter ) இருக்கிறாள். அவள் இப்போது யுனிவர்சிட்டியில் படித்து வருகிறாள்.

8 உங்களது சிறுவயது முதலே உங்களுக்கு அரசியல் ஆர்வம் இருந்ததா? ஏதாவது அரசியல் கூட்டங்களுக்கு உங்கள் பெற்றோருடன் சென்றிருக்கறீர்களா?

என் சிறு வயதில்  எனக்கு அரசியல் ஆர்வம் இருக்கவில்லை. ஜேர்னலிஸ்ட் ( Journalist ) ஆக வர விரும்பினேன்.  அதன்படியே ஜேர்னலிஸ்ட் ஆகி  NBN தொலைகாட்சியிலும் வானொலி ஒன்றிலும் வேலை பார்த்தேன்.

பாண் புராணமும் மணி மாமா பேக்கரியும் - கானா பிரபா

“அவங்கள் கல்லைச் சாப்பிடுறாங்கள் 
இடைக்கிடை இரத்தத்தைக் குடிக்கிறாங்கள்”
வெள்ளைக்காரர் இலங்கையின் கரையோரப் பகுதியைக் கைப்பற்றிய போது வேவு பார்த்த ஈழத்துச் சிப்பாய் ஒருவன் தன் அரசனிடம் வந்து இவ்வாறு சொன்னானாம். அவன் கல் என்று குறிப்பிட்டது பாணை, இரத்தம் என்றது மதுவை.

ஈழத்தில் பாண் என்ற சொல்லைக் காவி வந்தது இந்த நாட்டை முற்றுகையிட்ட ஒல்லாந்தர் தான். இதுவொரு திசைச்சொல். பாண் என்று ஈழத்தில் அழைக்கப்படுவது தமிழகத்தில் ரொட்டி என்றும் பிரெட் என்றும் புழங்குகிறது. பணிஸ் என்று நாம் அழைப்பது அங்கே பன்.

விடுதலைப்புலிகள் ஆட்சிக்காலத்தில் பேக்கறி என்ற சொல் கழற்றப்பட்டு “வெதுப்பகம்” ஆனது.


நம்மூரில் தேசிய உணவாகப் பாண் ஐ அங்கீகரித்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. இடியப்பம், புட்டு போன்ற உணவுவகைகளைப் பலகாரம் என்போம்.

இவற்றைக் காலையில் ஆக்கிச் சாப்பிடுமளவுக்கு நேரம் கிட்டுவதில்லை. தோசை, அப்பம் போன்றவற்றை ஆக்க இன்னும் நேரம் பிடிக்கும். 
இவற்றைப் பலகாரம் என்னும் பொதுப் பெயரில் அழைப்போம். அதுவும் அப்பத்துக்கு மாவைப் புளிக்க வைக்க மாணிக்கனிடம் கள் வாங்கி வைத்துத் தயார்படுத்த வேண்டும். அது ஒரு பெரிய வேலை என்பதால் வார இறுதிக்கோ, விடுமுறை நாட்களுக்கோ இல்லாவிட்டால் வெளியார் யாரும் விருந்தினராக வரும் நாட்களுக்கோ ஆன தின்பண்டம் ஆக்கி விட்டோம்.

காலை அரக்கப் பரக்க வெளிக்கிட்டுப் பள்ளிக்கூடம் போறவை ஒரு பக்கம், வேலைக்குப் போறவை ஒரு பக்கம் என்றிருக்க, எண்பதுக்குப் பின்னான யாழ்ப்பாணக் கலாசாரமும் குடும்பத்தில் ஆணும், பெண்ணுமாக வேலைக்குப் போக வேண்டிய சூழலுக்கு மாறி விட்டது. இந்த நிலையில் ஆபத்பாந்தவனாகக் கைக் கொடுப்பது இந்தப் பாண் தான்.

இலங்கை அரசின் வரவு செலவுத் திட்டத்தில் பாணின் விலை முக்கிய சக்தியாக இருப்பதை வைத்தே அதன் பயனீட்டுப் பெறுமதியை உய்த்துணரலாம். பாணின் விலை ஒரு ரூபா கூடினாலும் குய்யோ முறையோ என்பார்கள். சந்திரிகா ஆட்சிக்காலத்தில் பாணின் விலையை இரண்டு ரூபா ஆக்குவேன் என்றெல்லாம் அதிரடித் தேர்தல் வாக்குறுதி எல்லாம் கொடுத்தார்.

ஒரு இலக்கியனின் பருதிப்பார்வை - அங்கம் - 04 ( பகுதி - 02)


மலையக  இலக்கியத்தில்  தெளிவத்தை ஜோசப்பின் வகிபாகம்
துன்பக்கேணியில் உழன்ற மலையக தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வை இரத்தமும் சதையுமாக பதிவுசெய்தவர்
                                                                              முருகபூபதி


தமிழில் சிறுகதை இலக்கியத்தின் மூலவர் .வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரசமரம்,  கு..ராஜகோபலனின் சிறிது வெளிச்சம் முதலான சிறுகதைகளையும் இந்த தொடரில்தான் அன்றைய இளம் தலைமுறை படைப்பாளிகள் படித்துத்தெரிந்துகொண்டார்கள்.
 தமிழக, ஈழத்து படைப்பாளிகள் பலரது சிறுகதைகளை மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் தேடி எடுத்து அந்தத் தொடரில் பதிவுசெய்து வந்தார். அதற்காக கொழும்பில் தேசிய சுவடிகள் திணைக்களத்தில் இவர் செலவிட்ட நேரம் அதிகம். பெறுமதியானது.
 இலக்கியத்தில் பல முகங்கள் இருப்பது போன்று பல முகாம்களும் இயங்குகின்றன. ஆனால்,  எந்த முகாமுடனும் முரண்பாடுகொள்ளாமல், தனது கருத்தை தெளிவாகவே முன்வைப்பார். அதனால் அனைவராலும் பெரிதும் விரும்பப்படும் இலக்கியவாதி.
 மலையக இலக்கியவாதிகள் மாத்திரமன்றி முழு தமிழ் இலக்கிய உலகமுமே இவரை காலம் பூராவும் நன்றி சொல்லிக்கொண்டிருக்கவேண்டிய அளப்பரிய பணியையும் மேற்கொண்டவர்.
 மலையகச்சிறுகதைகள், உழைக்கப்பிறந்தவர்கள் ஆகிய கதைத்தொகுப்புகளை துரைவி பதிப்பகத்திற்காக உருவாக்கிக்கொடுத்தவர். அமரர் துரை.விஸ்வநாதனும் இந்தப்பணியினால் இலக்கிய உலகில் விதந்து பேசப்பட்டவர்.  தெளிவத்தை ஜோசப்பின் வாழ்வே ஒரு இலக்கிய வரலாறுதான்.
மிகவும் பெறுமதிவாய்ந்த இந்த இலக்கியவாதியை மலையக அரசியல் கட்சிகளோ தொழிற்சங்க அமைப்புகளோ தகுந்த முறையில் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்ற மனக்குறை எனக்கு நீண்ட காலமாகவே இருந்திருக்கிறது. கண்களுக்கு அருகில் இருக்கும் கண்ணிமைகள் கண்களுக்குத்தெரிவதில்லை.
தெளிவத்தைக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தபின்னர் கொழும்பில் நடந்த பாராட்டுவிழாவில், தெளிவத்தையை வைத்து கதை வசனம் எழுதி புதிய காற்று திரைப்படம் எடுத்த வி. பி. கணேசனின் மகன் மனோ கணேசன் பாரட்டுரை வழங்கியபோது இந்தப்பதிவின் தொடக்கத்தில் வரும் அந்தத் திரைப்படத்தின் காட்சியைத்தான் குறிப்பிட்டுப்பேசியதுடன்,  மலையக மக்களின் அந்த லயன் குடியிருப்பு அவல வாழ்க்கைக்கு இன்னமும் முற்றுப்புள்ளி இடப்படவில்லை என்றார்.
 துன்பக்கேணியில் உழன்ற மலையக தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வை இரத்தமும் சதையுமாக பதிவுசெய்தவர்களின் வரிசையில் தெளிவத்தைஜோசப்பும் ஒருவர்.

தொடறும் தவறுகள்..!


19/06/2019 தமிழ் அர­சியல் ஓர் இக்­கட்­டான நிலை­மைக்குள் பிர­வே­சித்­தி­ருக்­கின்­றது. இந்த நிலை­மையில் இருந்து அது எவ்­வாறு வெளி­வரப் போகின்­றது என்­பதும், பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கும், அர­சியல் ரீதி­யான அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் ஆளா­கி­யுள்ள தமிழ் மக்­களை எவ்­வாறு அது வழி­ந­டத்தப் போகின்­றது என்­பதும் சிந்­த­னைக்­கு­ரி­யது. 
நல்­லாட்சி அர­சாங்கம் வாய்ப்­பேச்சில் தனது வீரத்தைக் காட்­டி­ய­தே­யொ­ழிய, காரி­யத்தில் எத­னையும் சாதிக்­க­வில்லை. எதேச்­ச­தி­கா­ரத்தை ஒழித்­துக்­கட்டி, ஜன­நா­ய­கத்துக்குப் புத்­து­யி­ர­ளித்து, பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­போ­வ­தாக நல்­லாட்சி அரச தலை­வர்கள் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தனர். ஆனால், காலப் போக்கில் அந்த உறு­தி­மொ­ழி­களை அவர்கள் காற்றில் பறக்­க­விட்­டனர். 
தம்மை ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் இருத்­திய நாட்டு மக்­களின் மன­ம­றிந்து அவர்­களின் தேவை­களைப் பூர்த்தி செய்து நல்­லாட்சி புரி­வ­தற்கு மாறாக மனம் போன­போக்கில் ஆட்சி செலுத்­தி­ய­தையே இந்த ஆட்­சி­யா­ளர்­களின் 4 வருட காலத்தில் மக்கள் அனு­ப­வ­மாகப் பெற்­றி­ருக்­கின்­றார்கள்.
தமிழ் மக்­களைப் பொறுத்­த­மட்டில், யுத்­தத்தை வெற்­றி­க­ர­மாக முடி­வுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் இரா­ணுவ ஆட்­சி­யி­லேயே ஆர்வம் காட்­டி­யி­ருந்­தது. யுத்­தத்தின் பின்னர் அர­சியல் தீர்வு காண்­ப­திலும், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­திலும் அக்­கறை காட்­டவே இல்லை. 

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணம் 2019


7 ஆவது முறையாகவும் இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்!

11 ஆயிரம் ஓட்டங்களை கடந்து கோலி சாதனை!              

மே.இ.தீவுகளை துவம்சம் செய்த வங்கப்புயல் !

மேற்கிந்தியத்தீவுகளை நிலைகுலைய வைத்த பங்களாதேஷ் இணைப்பாட்டம்

150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து

நேற்றைய ஆட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட பல சரித்திரங்கள்!

நிதானமாக ஆடி 241 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்கா

வெளியேறும் நிலையில் தென்னாபிரிக்கா!

பங்களாதேஷின் பந்துகளை தவிடுபொடியாக்கிய ஆஸி

இறுதி வரை போராடிய முஷ்பிகுர் !

மீண்டும் சொதப்பலாக ஆடி முடித்த இலங்கை!

பந்து வீச்சில் மிரள வைத்த இலங்கை!

இலங்கை அணிக்கு முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டு

சமியின் ஹெட்ரிக்கின் உதவியுடன் போராடி ஆப்கானை வென்றது இந்தியா



7 ஆவது முறையாகவும் இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்!

17/06/2019 பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 89 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. 

நம்பிக் கெட்ட சூழல்


18/06/2019 நிபந்­த­னை­யற்ற ஆத­ரவின் மூலம் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மை­யினால் பொத்திப் பொத்தி பாது­காக்­கப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்கம், அர­சியல் தீர்­வையும் காண­வில்லை. தமிழ் மக்­களின் ஏனைய பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கும் முன்­வ­ர­வில்லை. 
ஏற்­க­னவே தமிழ் மக்­களை உள்­ளாக்­கி­யி­ருந்த இந்த நிலைமை, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையை மனக்­க­சப்­புக்கும் வெறுப்­புக்கும் ஆளாக்கி இருக்­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தை நம்பிக் கெட்ட சூழலில் இருந்து எவ்­வாறு வெளி­வ­ரு­வது என்று கூட்­ட­மைப்பின் தலைமை தத்­த­ளித்துக் கொண்­டி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது.  


இந்த நிலையில் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கை வருகை கூட்­ட­மைப்­புக்கு ஒரு நம்­பிக்கை ஒளியைத் தந்­துள்­ள­தையும் அவ­தா­னிக்க முடி­கின்­றது.
யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த பின்னர் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கண்­டி­ருக்க வேண்­டிய மகிந்த ராஜ­பக்ச அரசு யுத்த வெற்றி மோகத்தில் திளைத்து, இரா­ணு­வத்தை முதன்­மைப்­ப­டுத்தி, எதேச்­ச­தி­காரப் போக்கில் பய­ணித்­தி­ருந்­தது. இரா­ணுவ மயப்­ப­டுத்­தப்­பட்ட அந்த ஆட்­சிக்கு முடி­வு­கட்டி, ஜன­நா­ய­கத்தைப் பாது­காத்து, புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தின் மூலம் அர­சியல் தீர்வு காண்­ப­தற்­காகக் கொண்டு வரப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்­கமும் தமிழ் மக்­களை ஏமாற்­றி­விட்­டது என்று தமிழ் ­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமைக் கட்­சி­யா­கிய தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய மாவை சேனா­தி­ராஜா குறிப்­பிட்­டுள்ளார். 

இலங்கைச் செய்திகள்


வீட்டுக்குள் புகுந்த வாள் வெட்டு கும்பல் வீட்டைச் சேதப்படுத்திவிட்டு தப்பியோட்டம்

நடந்து சென்றவர் மீது வாள்வெட்டு

வவுனியா செட்டிப்புலவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை புதிய வகுப்பறைக்கட்டடம் மாணவர்களிடம் கையளிப்பு

பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி கல்முனையில் ஆர்ப்பாட்டம்

மீண்டும் அமைச்சுக்களை பொறுப்பேற்றுக்கொண்ட ஹலீம், ஹாசிம்

மலை­ய­கத்தில் நவீன் வழங்கிவைத்த வீட்டு அனு­ம­திப்­பத்­திரங்களிற்கு திகாம்­பரம் கடும் எதிர்ப்பு

யாழில் அதிகரித்துள்ள வன்முறை சம்பவங்கள் ; இதுவரை 11 பேர் கைது

இலங்கை தாக்குதல்கள் குறித்து ரஸ்யா புதிய தகவல்

கிளிநொச்சியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்



வீட்டுக்குள் புகுந்த வாள் வெட்டு கும்பல் வீட்டைச் சேதப்படுத்திவிட்டு தப்பியோட்டம்

17/06/2019 கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் குண்டை வீசியும் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.

உலகச் செய்திகள்


சுட்டெரிக்கும் வெயில்,மூளைக்காய்ச்சல் காரணமாக 284 பேர் பலி

நீதிமன்றத்தில் மரணமான எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி

10 இலட்சம் பேர் கூடியிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு:கனடாவில் சம்பவம் - காணொளி இணைப்பு

தற்கொலை குண்டுத் தாக்குதலில் 30ற்கும் மேற்பட்டோர் பலி, பலர் காயம்: நைஜீரியாவில் சம்பவம்

நியூஸிலாந்து துப்பாக்கி சூடு: காணொளியை பகிர்ந்த நபருக்கு  சிறை தண்டனை

ஈரானின் ஏவுகணைகளால் கப்பல்களை தாக்கமுடியும்- முக்கிய தளபதி

நியூஸிலாந்து செல்ல முயன்று 243 பேருடன் காணாமல் போன இந்திய படகு: இந்திய அரசை 

விமானத்தை சுட்டு வீழ்தியதால் ஈரான் பெறும் தவரை செய்துவிட்டது : ட்ரம்ப்

ஈரான் மீது உடனடி தாக்குதலிற்கு உத்தரவிட்ட டிரம்ப்-பின்னர் நடந்தது என்ன?

ஈரான் மீதான தாக்குதலை இறுதி நேரத்தில் ஏன் நிறுத்தினேன் ? டிரம்ப் விளக்கம்

வடகொரியா சென்றடைந்த சீன ஜனாதிபதி! 

நியூசிலாந்து மசூதித் தாக்குதல் எதிரொலி ; மக்களிடம் இருந்து துப்பாக்கிகள் களைவு



சுட்டெரிக்கும் வெயில்,மூளைக்காய்ச்சல் காரணமாக 284 பேர் பலி

18/06/2019 இந்தியாவில் பீகார் மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் மூளைக்காய்ச்சல் காரணமாக 284 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவின் பல மாநிலங்களில், தென்மேற்கு பருவ மழை தொடங்கி மழை பெய்து வரும் நிலையில் அதற்கு நேர் மாறாக வட மாநிலங்களில் வெயில் கடுமையாகி இருக்கிறது.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதுவரை 184 பேர் பலியாகி உள்ளனர். இதில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 113 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் வைத்தியவாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் அதிகபட்சமாக அவுரங்காபாத் மாவட்டத்தில் மட்டும் 36 பேரும் கயா மாவட்டத்தில் 28 பேரும் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் முதியோர் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பீகாரை கடந்த ஒரு மாதமாக மூளைக்காய்ச்சலும் கடுமையாகத் தாக்கி வருகிறது.
இந்நிலையில் முசாபர்பூரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 66 குழந்தைகள், மூளைக்காய்ச்சலால்

அப்பாவின் நினைவுகள்


"தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்! தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்!"
                                                                                                     முருகபூபதி
அப்பொழுது எனக்கு ஐந்து வயதிருக்கும். 1956  ஆம் ஆண்டு. எனது பெயரில் " முருகன் லொட்ஜ்" என்ற சைவஹோட்டலை நீர்கொழும்பு பிரதான ( பஸாரில்) வீதியில்  நடத்திக்கொண்டிருந்த அப்பா லெட்சுமணன்,  பரோபகரா  இயல்புகளினாலும் எவரையும்  முன்யோசனையின்றி நம்பிவிடுவதனாலும்,  இரக்கசிந்தனையினாலும் ,  பொறுப்புணர்ச்சி குறைந்தைமையாலும் நட்டப்பட்டு,  அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டின் உறுதியை வைத்து கடன் பெற்று, அதனையும் மீட்க வழிதெரியாது,  கொழும்பிலிருந்த ஒரு கம்பனியில் வெளியூர் விற்பனைப் பிரதிநிதியாகி மலையகப்பக்கத்திற்கு கம்பனி வாகனத்தில் சென்றிருந்தார்.
ஒரு நாள் இரவு யாரோ சிலர் காரில் வந்து இறங்கினார்கள். அப்பாவுக்கு கடன் கொடுத்தவர்கள்தான் வந்துவிட்டார்கள் என நினைத்து  அம்மா கலங்கிவிட்டார்கள்.
வந்தவர் பெயர் ரகுநாதன் என்றும் அவர், தமிழ்நாட்டிலிருந்து அப்பாவைத்தேடி வந்துள்ளார் என்பதையும் பின்னர்தான் தெரிந்துகொண்டேன். வந்தவர் வீட்டின் சுவரில் மாட்டப்பட்டிருந்த அப்பா - அம்மா திருமணமான புதிதில் எடுத்துக்கொண்ட படத்தைப்பார்த்துவிட்டு,                " இவரைப்பார்த்து எத்தனை வருஷமாச்சு. இலங்கை வருவதை உறவினர்களிடம் சொன்னதும், இந்த ஊருக்குப்போய் இவரையும் பார்த்துவிட்டு வரச்சொன்னார்கள். அதுதான் வந்தேன்." என்றார்.
அம்மா, " நீங்கள் யார்? அவர் வெளியூர் போயிருக்கார். எப்போ வருவார் என்பது தெரியாது." என்றார்.

தமிழ் சினிமா - நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைவிமர்சனம்


சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இன்று இளம் தலைமுறையினர் பலருக்கும் இருக்கிறது. சாதாரண பின்புலனில் இருந்து வந்தவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிட்டுவதில் தான் சிக்கில். அவர்களில் சிலர் அண்மைகாலமாக Youtube, TV என கலக்கி வருகிறார்கள். அவர்களின் புது முயற்சியாக வந்துள்ள படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. சரி வாருங்கள் நாமும் படத்துடன் சேர்ந்து ஓடுவோம்..

கதைக்களம்

படத்தின் ஹீரோ ரியோ ராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் இருவரும் நண்பர்கள். Youtube ல் சாதிக்க வேண்டும் என அதுவே கதி என சுற்றி வருகிறார்கள். அவர்களின் ஆசை நிறைவேண்டும் என அவர்களின் அண்ணன் சுட்டி அரவிந்த் தன்னால் ஆன தியாகங்களை செய்கிறார்.
ஒரு நாள் திடீரென இரு மாணவிகளுக்கு நடந்த கொடுமையை கண்டு இவர்கள் அதிர்ச்சியுறுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு புறம் பிராங்க் மூலம் ராதா ரவியிடம் அறிமுகமாகிறார்கள்.
ரியோவுக்கு ஹீரோயின் ஷிரினும் ஒரு இடத்தில் அறிமுகமாகிறார். இந்நிலையில் ஒரு நாள் பெரும் சம்பவத்தால் ரியோ மற்றும் விக்னேஷ் இருவரும் அனைத்து சானல்களிலும் பிரேக்கிங் செய்தியாக மாறுகிறார்கள்.
அருகில் இருப்பவர்களுக்கு என்ன நடந்தாலும் நமக்கு என்ன கவலை என சுயநலமாக இருப்பவர்கள் மத்தியில் கொலை சம்பவத்தை தடுக்க முயற்சி செய்கையில் இருவரின் உயிருக்கும் ஆபத்து, யார் அந்த கொலைகாரன், அவனின் நோக்கம் என்ன, சமூகம் என்ன செய்தது என்பதே இந்த கதை.

படத்தை பற்றிய அலசல்

முதலில் இப்படத்தை தயாரித்துள்ள நடிகர் சிவகார்திகேயனுக்கு நன்றி சொல்ல வேண்டும். தான் வந்த இடத்திலிருந்து சினிமாவில் சாதிக்கவேண்டும் என போராடுபவர்களுக்கு இப்படத்தின் மூலம் ஒரு வாய்ப்பினை உருவாக்கி தந்துள்ளார். கமர்சியல் விசயங்களுக்காக யோசிக்கும் இப்போதைய சூழ்நிலையில் தைரியமாக புது முயற்சியுடன் படம் தயாரித்து கொடுத்திருக்கிறார்.
டிவி, சீரியல் என கலக்கி வந்த ரியோவுக்கு இப்படம் சினிமாவில் நல்ல ஒரு ஓப்பனிங்காக அமையும். சீரியல் ஓகே. சினிமாவில் தன்னை ஹீரோவாக காட்டி திறமையை நிரூபிப்பாரா என படத்தில் தொடக்கத்தில் கேட்க வைத்த அவர் இறுதியில் நிறைவேற்றிவிட்டார் என படம் பார்ப்பவர்களின் மனம் சொல்லும்.
ஆர்.ஜே.விக்னேஷ் கலாய்ப்பதில் கெட்டிக்காரர். இப்படத்தில் அவர் செய்யும் லூட்டி அவரின் ரசிகர்களை திருப்திப்படுத்தும். ஹீரோவுக்கு இணையாக அவரும் இன்னொரு ஹீரோ போல தன்னை வெளிப்படுத்தி சிம்பிளான காமெடி ரோல் பிளே செய்துள்ளார். ஒரு நடிகராக அடுத்து தன்னை இப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
பத்திரிக்கை, ஊடக துறையில் இருக்கும் இக்கட்டான சூழ்நிலைகள், அந்த பத்திரிக்கை ஊடகத்தால் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற தற்போதைய நிலையையும் Youtube சர்ச்சை பிரபலம் ராதா ரவி காட்டுகிறார்.
அரசியல் வாதியாக நாஞ்சில் சம்பத்தை உள்ளே கூட்டி வந்துவிட்டார்கள். சொல்லவா வேண்டும். அவர் அரசியல் அவலங்களை அள்ளி அவிழ்த்து விடுகிறார்.
ஹீரோயின் ஷிரின் பத்திரிக்கை நிரூபராக நடிகையாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கான முக்கியத்துவமும், காட்சிகளும் படத்தில் குறைவு. ஆனாலும் நடிப்பில் நிறைவு. வாழ்த்துக்கள்..
இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இப்படத்தின் மூலம் இக்காலத்து இளம் தலைமுறைகளின் நாடிதுடிப்புகளை கொண்டு அரசியல் சர்ச்சையில் சிக்கிய சிலரை படத்தின் மூலம் பிரதிபலித்து படம் பார்த்தவர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
மயில்சாமி, பிஜிலி ரமேஷ், Youtube பிரபலங்கள் என சிலரை இங்கே காணமுடிகிறது. காட்சிகள் என ஒளிப்பதிவாளர் தெளிவாக படத்தை கொண்டு செல்கிறார்.
ஷாபிர் இசையில் பாடல்கள் இதயங்களை இம்பிரஷ் செய்யும்.

கிளாப்ஸ்

ஹீரோ ரியோவுக்கு நல்ல ஓப்பனிங். வாய்ப்புகள் அடுத்தடுத்து அமையும்.
சுற்றி தவறு நடந்தால் தட்டி தைரியமாக தட்டி கேட்க வேண்டும் என்ற சோசியல் மெசேஜ்.
பல அவலங்களை காமெடி சிரிப்புடன் படங்களில் பளிச்சிட்ட விதம்.

பல்பஸ்

இன்னும் கதைக்களம் சற்று அழுத்தமாக இருந்திருக்கலாம் என ஒரு ஃபீல்.
மொத்தத்தில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஒரு ரியல் எண்டர்டெயின் மெண்ட். ஃபன் ஃபில்.
நன்றி  CineUlagam