இணையில்லா வரகவியே எங்களது அருணகிரி !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்   
 மெல்பேண் .... அவுஸ்திரேலியா 




கந்தருக்கு அலங்காரம் 

கந்தருக்கு அனுபூதி

கந்தருக்கு அந்தாதி

தந்துநின்றார் அருணகிரி

வேலவனின் வாகனத்தை

வேலவனின் கொடியதனை

வேலவனின் வேலதனை

விருத்தமாய்  எமக்களித்தார்  ! 

 

தாளமொடு தமிழ்பாட

ஆழநிறை சொல்லமைத்து

நீளமுள்ள கவிதைகளாய்

நெக்கருக  உவந்தளித்தார்

செந்திலவன் திருவடியை

சந்ததும் நினைப்பதற்கு

சந்தமதைத் தமிழாக்கி

தந்துநின்றார் அருணகிரி  !

 

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 22 தமிழகப் பயணத்தில் சந்தித்த கலை, இலக்கிய ஆளுமைகள் ! தொடர்பாடல் உருவாக்கிய இலக்கியப் பெருவட்டம் ! ! முருகபூபதி


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தையும் ஆரம்பித்து  தாமரை இதழையும்   தொடக்கியவர்  தோழர் ஜீவானந்தம்.  ஒரு காலத்தில் தலைமறைவாக இலங்கை வந்து தங்கியிருந்தவர். இவரது அறிமுகத்தின் பின்னர்தான் யாழ்ப்பாணத்தில்  டொமினிக் என்பவர் டொமினிக்ஜீவா என்று தனது பெயரை மாற்றினார்.  காலப்போக்கில் தாமரை இதழின் சாயலில் மல்லிகை இதழையும் ஆரம்பித்து, மல்லிகை ஜீவா எனவும் அறியப்பட்டார்.

மகாகவி பாரதியின் புகழை இலங்கையில் பரப்பிய முன்னோடியாகவும் திகழ்ந்தவர்தான் ஜீவானந்தம்.  

1990 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் கலை இலக்கியப் பெருமன்றத்தின்


மாநாடு சென்னையில் சோவியத் கலாசார நிலையத்தில் ஏற்பாடாகியிருந்தது.

எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சர்வதேச செயலாளர், நண்பர் ராஜஶ்ரீகாந்தன் அம்மாநாட்டுக்கு செல்லுமாறு எனக்கு அழைப்பு அனுப்பியிருந்தார்.

இலங்கையிலிருந்து மல்லிகை ஜீவாவும் வரவிருப்பதாக தொலைபேசி ஊடாகவும் சொன்னார். அவ்வேளையில் மல்லிகை 25 ஆவது ஆண்டு மலர் வெளியாகியிருந்தது. அந்த மலரை தமிழகத்தில் அறிமுகப்படுத்தவேண்டிய தேவையும் இருந்தது.


நான் அந்த ஆண்டு மார்ச் மாதமே சென்னைக்கு சிங்கப்பூர் வழியாக புறப்பட்டேன்.  சட்டத்தரணி ரவீந்திரன் அண்ணன், குடிவரவுத் திணைக்களத்திடம்  ஒரு மாத காலம்
Re-entry visa  அனுமதி பெற்றுத்தந்தார்.

சிங்கப்பூரில் பொறியிலாளர் சற்குணராஜா தம்பதியர்  வீட்டில் தங்கினேன்.  இவர்கள் பிற்காலத்தில் எனது உறவினர்களானது தனிக்கதை. விதி யாரையும் கைவிடாது. உடன்வரும். அல்லது வீட்டுத்துரத்தும். அதுதான் விதி.

திருமதி பத்மினி சற்குணராஜாவின் தம்பி விக்னேஸ்வரன் அப்போது சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார்.  அத்துடன் தி.நகரில் கண்ணதாசன் பதிப்பகத்தில் பகுதி நேரமாக பணியாற்றினார்.  1984 ஆம் ஆண்டும் நான் சென்னை சென்றபோது விக்னேஸ்வரனுடைய தொடர்பினால்தான் கவியரசு கண்ணதாசனின் குடும்பத்தினருடன் எனக்கு நட்புறவு ஏற்பட்டது.

திருக்குறள் போட்டி மற்றும் ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சைவ சமய அறிவுப்போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி 17/07/2022

 சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் நடாத்திய திருக்குறள் மனனப்  போட்டிகளுக்கான  பரிசளிப்பு நிகழ்ச்சியும்  மற்றும் ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சைவ சமய அறிவுப்போட்டிகளுக்கான  பரிசளிப்பு நிகழ்ச்சியும்  சிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில்   ஜூலை மாதம் 17ம் திகதி  ஞாயிற்றுக்கிழமை    மாலை 5.30 மணிக்கு  நடைபெற்றது.  

படப்பிடிப்பு : முத்தரசு 

 



நிறைவேற்று அதிகாரத்தின் நிறவேறாத ஆசை ! அவதானி

“ கோத்தா கோ    என்ற கோஷம்  “ கோத்தா பிஸ்ஸா    என மாறிய


காட்சியை கடந்த ஒன்பதாம் திகதி பார்த்தோம்.

 “ கோ  “ என்று சொல்லப்பட்ட ஆங்கிலச் சொல்லின் அர்த்தம்               “ போ  “ !    “ பிஸ்ஸா  “ என்ற  சிங்களச் சொல்லின் அர்த்தம் பைத்தியக்காரன்.

இந்த அவலத்தை  இதுவரையில் இலங்கை வரலாற்றில் சந்தித்த ஒரே ஒரு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷதான் என்பதற்கு இருவேறு அபிப்பிராயங்கள் இல்லை.

இறுதியாக அவர் நாடாளுமன்றத்திற்கு அழையா விருந்தாளியாகச் சென்றபோதே ,  அங்கிருந்த எதிர்க்கட்சியினர்  கோத்தா கோ என்று தொடர்ந்து கோஷம் எழுப்பியதையடுத்து, எழுந்து சென்றவர், அச்சமயத்திலாவது,  தனது எதிர்காலம் குறித்து சிந்தித்திருக்கவேண்டும்.

காலிமுகத்திடலில் அமைதியாகத்தான் எழுச்சிகொண்ட மக்கள்


போராட்டம் நடத்தினார்கள்.  அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் அத்தகைய போராட்டங்களை மக்கள் ஒருங்கிணைத்திருந்தார்கள்.   அவற்றையெல்லாம் கிஞ்சித்தேனும் கவனத்தில் கொள்ளாமல், தனது வசம் நிறைவேற்று அதிகாரமும் பொலிஸ் உட்பட முப்படைகளும் இருக்கிறது எனவும் நினைத்தவாறு, துப்பாக்கியையும், பெட்டன் பொல்லுகளையும்  கண்ணீர்ப் புகையையும் தண்ணீர்த் தாரையையும் வைத்துக்கொண்டு மக்களை அடக்கிவிடலாம் எனவும்  நம்பிக்கொண்டிருந்தவர்,  துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி ஒளித்துக்கொண்டு,  “ தான் பதவி விலகத்தயார்  “ என்றார்.  மிகவும் தாமதமாகவே தனது பதவி விலகல் கடிதத்தையும் வெளிநாடு ஒன்றிலிருந்து, அங்குள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக சபாநாயகருக்கு அனுப்பினார்.  

குறிப்பிட்ட தாமதம் கூட பல சந்தேகங்களை எழுப்புகிறது.  தனது சகோதரர்களை காப்பாற்றுவதற்காக சட்டத்தின் ஓட்டைகளை தனது நம்பிக்கைக்குரிய சட்டத்தரணிகள் மூலம் ஆராய்ந்திருக்கவேண்டும்.  இரத்தபாசம் எதனையும் செய்யும்.

ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை    “ பிஸ்ஸா  “ எனச்சொல்லியிருக்கிறார்கள்.  அப்படியாயின் அவர் தனக்கு 69 இலட்சம் மக்கள் ஆணையைத் தந்திருக்கிறார்கள் என்று இறுமாப்புடன் சொன்னாரே….?! அம்மக்கள்  “ பிஸ்ஸா  “ வா…?

இல்லை,  இல்லை நாம் தெளிவுடன்தான் இருக்கின்றோம் என்று நிரூபித்துவிட்டனர் போராட்டத்தில் எழுச்சிகொண்டு ஈடுபட்ட மக்கள்.

இற்றைக்கு 39 வருடங்களுக்கு முன்னர் 1983 ஆம் ஆண்டு இதே ஜூலை மாதம் தலைநகரத்தில் நடந்த எரியூட்டல், சூறையாடல், படுகொலை செய்தல் முதலான காட்சிகள் அரங்கேறின.

ஜூலை 13 இல் 71 வயது பிறந்த தினத்தை கொண்டாடும் எமது ஊடக சகோதரன் முருகபூபதி அண்ணனுடன் முதல் சந்திப்பு ! கிண்ணையடி பாண்டியன் ( கட்டுரை ஆசிரியர் தினகரன் )


முருகபூபதி அண்ணனை நான் முதன் முதலாக சந்தித்த போது அவருக்கு வயது 35, எனது வயது 25. அச்சந்திப்பு நடந்தது 1986 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதி. வீரகேசரி பத்திரிகை அலுவலகத்தில் நான் இணைந்து கொண்ட போது, முதலில் பயிற்சி பெறுவதற்காக மூன்று மாத காலம் ஒப்புநோக்காளர் பிரிவுக்கு நியமிக்கப்பட்டேன். முருகபூபதி அண்ணன் அப்போது ஆசிரிய பீடத்தில் பணியிலிருந்தார். பின்னர் ஆசிரிய பீடத்துக்கு வந்து விட்டேன்.

ஆசிரிய பீடமும், ஒப்புநோக்காளர் பிரிவும் அருகருகே அமைந்திருந்தன. அவையிரண்டும் மிக நெருக்கமான பிரிவுகள் மாத்திரமன்றி அவையிரண்டில் பணியாற்றியோரும் கூட நெருக்கமான நட்புறவுடனேயே இருந்தனர்.

மட்டக்களப்பில் யுத்தசூழல் நிலவிய காலத்தில் சுமார் ஐந்து


வருடங்களாக எங்கும் வெளியேறாமல் உயிரச்சத்தில் வாழ்ந்த பின்னர், அவசரமாகக் கொழும்பு வந்து வீரகேசரியில் முதன் முதலாக பணியில் இணைந்து கொண்ட போது, என்னைக் கவர்ந்த முதலாவது மனிதராக அண்ணன் முருகபூபதி இருந்தார். அதற்கு இரு காரணங்கள் இருந்தன.

  அவரது கனிவான பேச்சு முதலாவது காரணம். அவரது வசீகரத் தோற்றம் இரண்டாவது காரணம். வெள்ளை வெளேரென்ற தோற்றம், எப்போதும் நட்புறவான புன்னகை கலந்த முகம், சுறுசுறுப்பாகவே எந்நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் தனித்துவம்.

  இவ்வாறெல்லாம் அவரைப் பற்றிச் சொல்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளன. அவர் எவருடனும் முரண்பட்டதாகவோ, கடுமையான சொல் பயன்படுத்தியதாகவோ எனக்கு நினைவில்லை.

 அன்றைய பிரபலமான பத்திரிகைக்குள் கடமைக்குச் சென்ற வேளையில்,  எனக்குள் சங்கோஜமும், தயக்கமும், அச்சமும் அதிகம் குடிகொண்டிருந்தன. 'இத்தனை பெரிய பத்திரிகைக்கு நான் தகுதியானவனா?' என்ற வினாவும் எனக்குள் இருந்தது.

சிட்னி துர்க்கை அம்மன் ஆலயத்தில் தேர்த் திருவிழா 31/07/2022


துர்க்கா> லஷ்மி> சரஸ்வதி
ஆகிய முப்பெருந்தேவிகளும் அமைந்த அருள்மிகு சிட்னி  துர்க்கை அம்மன் ஆலயத்தில் அம்பிகையின் விசேஷ நாட்களான ஆடிச்செவ்வாய் வெகு விமர்சையாக கொண்டாட அம்பிகை அருள்கூடியுள்ளது. 19.07.2022> 26.07.2022> 02.08.2022> 09.08.2022> 16.08.2022 ஆகிய செவ்வாய் கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் அலங்கார ஊர்வலமும் நடைபெற உள்ளது.

 இவ்வுலகில் உள்ள தீய சக்திகளை அழித்து மக்களின்


குறைகளை நீக்குவதற்காக சக்தி வடிவான அம்பிகை அவதரித்த நாளாக போற்றப்படும் விசேட நாளான திரு ஆடிப்பூரம் ஜூலை 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை; ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்தில் காலை 09:00 மணி முதல் விஷேட பூஜை;களுடன் தேர்த் திருவிழா நடைபெற திருவருள் கூடியுள்ளது.

இந்த விசேட ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஜூலை; 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை; 05.30 முதல் விசேட கலச பூஜையும் 108 பால்குட அபிஷேகமும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட மாதம் 05 ஆம் திகதி வரலஷ்மி விரதத்தை முன்னிட்டு மாலை 05.00 மணி முதல் விசேட ஹோமங்கள்> அபிஷேகங்கள் தீப ஆராதனைகள் பக்தர்களுக்காக ஒழுங்குகள் செய்ய திருவருள் கூடியுள்ளது.


வரலஷ்மி விரத நாளில் துர்க்கை அம்மன் கோவிலில் வரலஷ்மி விரத நூலும்> அம்மனுக்கு சாத்திய வளையல்களும் வழங்கப்பட உள்ளன. அத்துடன் பூஜைகளை தொடர்ந்து மாலை 07.30க்கு 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளன. அவ்வமயம் கன்னி பெண்களும்> சுமங்கலிப் பெண்களும்> மற்றும் பக்தகோடிகள்> அம்மனடியார்கள்> மெய்யன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அம்பாளின் அருளை பெற்று வளமான வாழ்விற்கும்> சுபிட்சமான வாழ்விற்கும் பிரார்த்தித்து இலட்சுமி கடாச்சமும் பெற வேண்டுகிறோம்.

ஆடிமாதம் அமங்கல மாதமல்ல அம்மனின் மாதமாகும் !


மகாதேவ ஐயர் ஜெ
யராமசர்மா                                         
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்                              
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

     பனிரெண்டு மாதங்களும் வருகின்றன. போகின்றன. சில


மாதங்
களை சிறப்பென்றும் சிலவற்றை ஒதுக்கிப் பார்ப்பதும் இயல்பாகி விட்டது. ஆனால் அப்படி ஒதுக்க வேண்டியது  - மனத்தில் எழுகின்ற ஒரு வித மயக்கம் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. எல்லா மாதங்களும் ஏதோ ஒரு விதத்தில் சிறப்புக்க ளைத் தன்னகத்தே கொண்டு தான் வருகின்றன.மார்கழியைப் பீடை பிடித்த மாதம் என்கிறோம். புரட்டா சியையும் ஒரு பக்கம் தள்ளியே வைக்கிறோம் .ஆடியை மங்கலம் அற்ற மாதம் என்கிறோம். பங்குனியை,  சித்திரையைதையைஆவணியைக் கொண்டாடி வரவேற்கிறோம்.இப்படி நோக்குவது எங்களிடம் இய ல்பாகி விட்ட நிலையில் மங்கலம் இல்லா மாதமாக எடுத்துக் கொள்ளும் ஆடி எங்களை நாடி வருகிறது ! வருகின்ற ஆடியை விட்டு விட்டு விலகத்தான் எங்களால் முடியுமா முடியவே முடியாது ! நாடிவரும் ஆடி பற்றி பார்ப்போமா வாருங்கள் !

    ஆடி என்றவுடன் - ஆடிச்செவ்வாய்ஆடி


வெள்ளி
ஆடிப்பூரம்ஆடிக்கார்த்திகைஆடித்தபசுஆடிப் பெருக்குஆடி அமாவாசைஆடி பெளர்ணமி என்று இறை வழிபாட்டுடன் இணைந்ததாக ஆடி மாதம் முழுவதும் அமைந்திருப்பதை நாமனைவரும் மனமிருத்த வேண்டியது அவசியம். ஆடி மாதத்தை அம்மனின் மாதம் என்பதையும் அகமிருத்தல் மிகவும் அவசியமேயாகும்.அப்படி இருக்க ஆடியை நாடாமல் ஒதுக்கிப் பார்ப்பது முறையா ?

  மார்கழியில் திருவெம்பாவை வருகிறது. ஆண்டாளின் திருப்பாவையும் மணி வாசகரின் திருவெம்பா வையும் மார்கழியில் கோவில்களில் பக்தி சிரத்தையுடன் பாடப்படுகிறது. வைணவர்களும் சைவர்களும் கொண்டாடும் மாதமாய் மார்கழி இருக்கிறது. மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணனே சொல்லுவதுதையும்  கருத்திருத்த வேண்டும். புரட்டாசியில் நவராத்திரி வருகிறது. கலைகளைப் போற்றும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.சமயமும் கலைகளும் சங்கமிக்கும் மாதமாய் புரட்டாசி விளங்குகி றது.ஆடி,புரட்டாசிமார்கழி இறைவழிபாட்டுக்குரிய மாதங்களாகும். அப்படி என்றால் மற்றைய மாதங்கள் இறை வழிபாட்டுக்கு ஏற்றன அல்லவா என்று வினா எழுகிறதல்லவா ஆடிபுரட்டாசி மார்கழி மாதங்க ளில் மங்கலமான நிகழ்வுகளான - வீடு குடுபுகுதல்திருமணம்திருமண நிச்சயார்த்தம்காது குத்தல்எதை யும் செய்வதில்லை. காரணம் - இம்மாதங்கள் தேவர்களுக்கு உரிய மாதங்கள்.மனிதர்களுக்கும் அவர்களின் இன்பங் களுக்கும் உரிய மாதங்கள் அல்ல என்பதுதான் காரணம்.

வருடாந்திர சாமுஹிக் ஸ்ரீ மஹாலக்ஷ்மி பூஜை - ஞாயிற்றுக்கிழமை 31 ஜூலை 2022 சாமுஹிக வரலக்ஷ்மி விரதம்

 



செல்வம், அதிர்ஷ்டம், கருவுறுதல் மற்றும் ஐஸ்வர்யத்தின் தெய்வமான ஸ்ரீ மஹாலக்ஷ்மி, பொருள் நிறைவு மற்றும் மனநிறைவுக்கான வாக்குறுதியைக் கொண்டுள்ளார். பூதேவி, பூமி தெய்வமாக, அவள் வாழ்க்கையை வளர்க்கிறாள், ஸ்ரீதேவி, அதிர்ஷ்ட தெய்வமாக, தன்னை வணங்குபவர்களுக்கு நல்வாழ்வையும் செழிப்பையும் தருகிறாள். ஸ்ரீ மஹாலக்ஷ்மி பூஜை புனிதமான ஷ்ராவண மாதமான "ஆடி"யில் செய்யப்படுவதற்கு உகந்தது. இந்த ஆண்டு 31 ஜூலை 2022 ஞாயிற்றுக்கிழமை அதைக் கொண்டாடுகிறோம்.

இலங்கைச் செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இராஜினாமா; சபாநாயகர் உத்தியோகபூர்வ அறிவிப்பு

ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம்

புதன்கிழமை புதிய ஜனாதிபதி தெரிவு; இன்று விசேட பாராளுமன்ற அமர்வு

கோட்டாபய ராஜபக்‌ஷ வெளியேறியதில் இந்தியாவுக்கு எந்த பங்கும் இல்லை


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இராஜினாமா; சபாநாயகர் உத்தியோகபூர்வ அறிவிப்பு

- பாராளுமன்றம் நாளை கூடும்; 7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி
- ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து தரப்பினரிடம் கோரிக்கை
- அதுவரை பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் இராஜினாமா கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாகவும் அதற்கமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நேற்று (14) முதல் அமுலாகும் வகையில் சட்ட ரீதியாக தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

உலகச் செய்திகள்

இந்தியாவில் தொழில் தொடங்கும் பிரெஞ்சு விமான தயாரிப்பு நிறுவனம்

சூடுபிடிக்கிறது பிரிட்டனின் புதிய பிரதமருக்கான போட்டி

உலகளவில் விமானங்களின் கட்டணங்கள் அதிகரிக்கும்

ஈரானை சமாளிக்க இஸ்ரேலுடன் அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்

பாகிஸ்தானில் அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி

உக்ரைன் மீதான ரஷ்ய போர்: உலக பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்


இந்தியாவில் தொழில் தொடங்கும் பிரெஞ்சு விமான தயாரிப்பு நிறுவனம்

உயர் பிரெஞ்சு அதிகாரியுடன் ராஜ்நாத்சிங் பேச்சு

பிரெஞ்சு விமான இயந்திரம் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்தியாவில் விமான இயந்திர பராமரிப்பு பழுதுபார்ப்பு தொழிற்சாலைகளை நிறுவும் வகையில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.

மெல்பனில் ஷோபா சக்தியின் புதிய நூல் அறிமுகமும் கருத்தாடலும்


பிரான்ஸில் வதியும் பிரபல எழுத்தாளரும்  நாடக, திரைப்பட கலைஞருமான ஷோபா சக்தி,  இம்மாதம் மெல்பனுக்கு வருகை தருகின்றார்.

அவருடனான சந்திப்பும் கதையாடலும் இம்மாதம் ( ஜூலை )  23 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5-30 மணிக்கு மெல்பனில் வேர்மன் தெற்கு சமூக இல்லத்தில் ( Vermont South Learning Centre - 1 Karo bran Drive, Vermont South VIC 3133. ) நடைபெறும்.

ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், ஷோபாசக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக் அறிமுகப்படுத்தப்படும்.

கலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.




சாய் பல்லவியின் 'கார்கி'

 Saturday, July 16, 2022 - 12:04pm

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை, அது தொடர்பான வழக்கு, பின்புலத்தை மையமாகக் கொண்டு அழுத்தமான திரைக்கதையால் தாக்கம் தரும் படைப்பு தான் 'கார்கி'.

பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் கார்கி (சாய்பல்லவி). அவரது அப்பா பிரம்மானந்தா (ஆர்.எஸ். சிவாஜி), அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட, அதில் பிரம்மானந்தாவின் பெயரும் சேர்க்கப்படுகிறது.

தனது தந்தை குற்றவாளியில்லை என கூறி சட்டப் போராட்டத்தில் இறங்கும் மகள் கார்கி இறுதியில் வென்றாளா? உண்மையான குற்றவாளி யார் என்பதை சமரசமின்றி வலுவான திரைக்கையுடன் சொல்லும் படைப்புதான் 'கார்கி'.

சந்தேகமேயில்லாமல் சமகால சினிமாவின் மிகச் சிறந்த நடிகருக்கான இடத்தை ஆக்கிரமித்திருக்கிறார் சாய் பல்லவி. மென்சோகத்தை சுமந்தபடி, திக்குத்தெரியாத காட்டில் சிக்கித்தவிக்கும் மானைப்போல, தந்தையை மீட்க திசையறிமால் ஓடுகிறார். அவரைவிட அந்தக் கதாபாத்திரத்தை யாரும் சிறப்பாக செய்துவிட முடியாது என சவால் விடும் அளவிற்கு நடிப்பின் மூலம் நியாயம் சேர்த்திருக்கிறார்.

அடுத்தாக காளிவெங்கட்டை குறிப்பிட்டாகவேண்டும். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு இந்தப் படத்தின் மூலமாக ஓர் அழுத்தமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. டைமிங்கில் கவுன்ட்டர் டையலாக் கொடுப்பது, பயத்துடன் வாதாடுவது, திக்கிப் பேசுவது, சாய் பல்லவியின் திட்டுகளை அப்பாவியான முகபாவனைகள் மூலம் சமாளிப்பது என நடிப்பில் நயம் சேர்க்கிறார். தவிர, ஜெயப்பிரகாஷ், சரவணன், ஐஸ்வர்ய லக்‌ஷ்மி, கவிதாலயா கிருஷ்ணன், லிவிங்க்ஸ்டன் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் ஏனோ தானோ என எழுதப்படாமல் தேவைக்கேற்ப எழுதப்பட்டுள்ளதால் அதையொட்டிய அவர்களின் நடிப்பும் கவனம் பெறுகிறது.

ஹரிஹரன் ராஜூவுடன் இணைந்து எழுதியும், படத்தை தனியாக இயக்கியும் இருக்கிறார் கௌதம் ராமசந்திரன். படம் தொடங்கியதிலிருந்து எந்த சமரசத்துக்குள்ளும் தன்னை ஆட்படுத்திக்கொள்ளாமல் நேரடியாக கதைக்குள் நுழையும் போக்கே படத்தின் சூட்டை பார்வையாளர்களுக்கு பரிமாறிவிடுகிறது. மகளாக சாய் பல்லவியின் போராட்டம் தொடங்கியதிலிருந்து கண்களை திரையிலிருந்து விலக்க முடியாத படி பார்த்துக் கொள்கிறது திரைக்கதை. காதல் இருக்கிறது என்றபோதிலும், அது வந்து போகிறதே தவிர, அதற்காக காதல் பாடல்களை வைத்தோ, ஓவர் டோஸ் கொடுத்த பார்ப்பவர்களை சோதிக்காத வகையில் இயக்குநருக்கு நன்றிகள். படம் நிறைய விஷயங்களை பேச முயற்சிக்கிறது.

குற்றவாளி என நீதிமன்றம் அறிவிக்கப்படதாதற்கு முன்பாகவே ஒருவர் பொதுசமூகத்தால் குற்றவாளிக்குண்டில் நிறுப்படுகிறார். அப்படி பொது சமூகம் தீர்மானிக்கும் ஒருவரின் குடும்பம் எப்படியெல்லாம் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படும் என்பதை அண்மையில் வெளியான மாதவனின் 'ராக்கெட்ரி நம்பி விளைவு' படத்தில் பார்த்தோம். அதேபோன்றதொரு குடும்பத்தின் பாதிப்பை இந்தப் படமும் உணர்த்துகிறது. இதுபோல பொது சமூகத்தால் ஒருவர் குற்றவாளியாக்கப்பட முக்கிய மூல காரணமாக ஊடகங்கள் இருப்பதை படம் தோலுரிக்கிறது. 'சொல்ல விரும்புறது நியூஸ் இல்ல.. நடந்தத சொல்றது நியூஸ்' என அழுத்தமான வசனங்கள் மூலம் ஜர்னலிசத்தின் தற்போதைய நிலை குறித்து படம் பேசுகிறது.

நீதிபதியாக திருநங்கை நியமிக்கப்பட்டு, அதற்கான காரணமாக 'ஆணின் ஆணவமும் பெண்ணின் வலியும் எனக்குத் தெரியும், எனவே, இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்க நான் சரியான நபர்" என விளக்கும் காட்சி மாஸ்டர் ஸ்ட்ரோக். படத்தின் மிகப் பெரிய பலம், நீண்ட வசனங்கள் மூலமாக காட்சிகளை கடத்தாமல், வசந்த் கோவிந்தாவின் வயலின் மூலம் காட்சிகளை கடத்தியிருப்பது திரைமொழியின் ஆற்றலை கூட்டுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் முகத்தை காட்டாமல் வைத்திருந்தது, காவல் அதிகாரிக்கு பென்னிக்ஸ் ஜெயராஜ் என பெயரிட்டிருப்பது, சாய் பல்லவியையும் ஒரு விக்டிமாக காட்டியிருந்த விதம், ஆழமான வசனங்கள், இலவச சட்ட ஆலோசனை மையம் பயனற்று இருப்பது, குற்றவாளி மீதான முன்முடிவுகள் என காட்சிக்கு காட்சி கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். அதேபோல, தன் கணவர் சிறையிலிருக்கும்போது மனைவி ஒருவர் எந்தவித பதற்றமும் இல்லாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வழக்கறிஞர் திக்கிப் பேசுபவராக காட்சிப்படுத்தி, அதை ஒரு டெம்ப்ளேட்டாக மாற்றியிருப்பது அயற்சியைத் தருகிறது.

முன்பு கூறியது போலவே, வசனங்களுக்கான இடத்தில் நிரம்பிக்கொள்ளும் கோவிந்த் வசந்தாவின் பிண்ணனி இசை சிறந்த காட்சிமொழியை கடத்த உதவியிருக்கிறது. ஸ்ரையந்தி, பிரேம்கிருஷ்ணா அக்காட்டு இருவரின் ஒளிப்பதிவில் வரும் ப்ரேம்கள் காட்சியின் தரத்தை கூட்டுகின்றன. ஷபீக் முகமது அலியின் ஷார்ப் கட்டிங்குகளை படத்தில் நன்றாக உணர முடிகிறது.

மொத்தத்தில் ஆழமான விஷயங்களை அழுத்தமான திரைக்கதையுடன் சொல்லியிருக்கும் விதத்தில் கண்டிப்பாக 'கார்கி' படத்தை தவறாமல் பார்க்கலாம். (இந்து)   நன்றி தினகரன்