மரண அறிவித்தல்

.
                                    திரு.விஸ்வலிங்கம் பாலேந்திரன்

maraivu 12.07.2016

வவுனியாவை சேர்ந்தவரும் சிட்னியில் வசித்து வந்தவரும், இலங்கை தொலைபேசி தொடர்பு கொழும்பு அலுவலகத்தில்
பணி புரிந்தவருமான  திரு.விஸ்வலிங்கம் பாலேந்திரன் அவர்கள் 12.07.2016 இல் காலமானார்.

இவர் காலம் சென்ற நாகேஸ்வரி அவர்களின்அன்புக் கணவரும் ,
இந்து சிவகுமார் (சிட்னி ), தேவராஜன்பாலேந்திரன் (சிட்னி) ஆகியோரின்அன்புத் தந்தையாரும் ,சிவகுமார் , டிவீனா (Devina) ஆகியோரின்அன்பு மாமனாரும்,

பாஸ்கர் , ரவி , அனுஷா , திவ்யா , ஈஷா , ஜெய் (Jay )ஆகியோரின் பாட்டனும் ஆவார்

அன்னாரின் ஈமக்கிரிகைகள் 13.07.2016 (நாளை )  12.30 மணிக்கு Minchinbury மயானத்தில்நடைபெறும் என்பதை உற்றார் உறவினர்
 நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்துடன்அறியத்தருகிறோம்.

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

(02) 9629 1921
Inthu - 0405 188 311
Rajan -0438 478 728


மரண அறிவித்தல்

.
திரு பரமசாமி பத்மநாதன் 
(Retired, Civil Engineer Mahaveli Development Board Sri-Lanka, 
Project Engineer Dept of Water and Drainage Canberra).

                                                              
தோற்றம் 24.12.1949                -       மறைவு - 8.07.2016

காரைநகர் பொன்னம்பலம் வீதியைப் பிறப்பிடமாகவும்  சிட்னி (10 Murray Road, Merrylands NSW 2160). வசிப்பிடமாகவும் கொண்ட திரு பரமசாமி,பத்மநாதன், 8.07.2016 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பரமசாமிஅன்னமுத்து தம்பதிகளின்அன்புமகனும்காலஞ்சென்றவர்களான செல்லத்துரைதெய்வானை தம்பதிகளின்அன்பு மருமகனும்கணேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்சயந்தன் (சிட்னி),உமா (சிட்னிஆகியோரின் பாசமிகு தந்தையும்கீர்த்திகா (சிட்னிஅவர்களின்அன்புமிகு மாமனாரும்,
பஞ்சாட்சரம் (சிட்னி), காலஞ்சென்ற பரமேஸ்வரிசிவகெங்கை (யாழ்ப்பாணம்),கனகேஸ்வரி (சிட்னிஆகியோரின் அன்புச்சகோதரரும்காலஞ்சென்ற ஜெயசோதி(யாழ்ப்பாணம்), கலைவாணி (சிட்னி), தம்பிப்பிள்ளை (யாழ்ப்பாணம்வனதேவா(சிட்னி)  ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13.07.2016 புதன்கிழமை அன்று லிட்கம் ருக்வூட்மயானத்தில் அமைந்துள்ள ஈஸ்ட் சப்பலில் 11.15 மணியிலிருந்து 2.00 மணி வரை நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்இவ்வறிவித்தலை உற்றார்உறவினர்,  நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார்,  உறவினர்நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறுதாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இறுதிக்கிரியைகள்  - 13.07.2016 புதன்கிழமை 11.15 மணியில்  இருந்து                                                                             Lidcombe Rookwood Cemetery, East chapel இல் நடைபெறும்.

தொடர்புகளுக்கு:

சயந்தன்:  0421 569 934 

பஞ்சாட்சரம் - 0434 006 841  


                 

துரும்பு - ருத்ரா

.
வாழ்க்கை என்றால் என்ன‌
என்று கேட்டால்
கடவுளைக்காட்டுகிறீர்கள்.
கடவுளைக்காட்டுங்கள்
என்றால்
வாழ்ந்து பார் என்கிறீர்கள்.
முட்டி மோதி
கடைசி மைல்கல்லில்
ரத்தம் வழிந்த போது
சத்தம் வந்தது
உள்ளேயிருந்து.
இதயத்துடிப்பின் ஒலியில்
கேட்டது தானே
முதல் மொழி.
அதன் சொல் ஜனனம் என்றால்
அதன் அர்த்தம் மரணம் என்றார்கள்.
மனிதனா?இறைவனா?

Karthik Show


"ஏமாற்றத்துடன் விடைபெற்றிருக்கும் செங்கை ஆழியான் "- முருகபூபதி

.
"  தொகுப்புகள்  பெறுமதிவாய்ந்தவை  என்பதை  யாவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.   சற்றுநேரம்  சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு   தொகுப்பிற்குப்  பலமணிநேரத்தை  செலவிடவில்லை. வருடக்கணக்கில்   செலவிட்டம்.   உதாரணமாக  பழைய பத்திரிகைகள்,   சஞ்சிகைகளைத் தேடிப்பெற்று  அதனைப்பிரதி எடுத்து   அவற்றில்  சிறந்ததை  தெரிவுசெய்து  பின்னர்,   பதிப்பித்தல், பதிப்புச்செலவு,   அதனை  விற்பனை  செய்தல்,  களஞ்சியப்படுத்தல்   அப்படிப்பல   இடர்களைக் கூறலாம்.
குடும்பத்தில்  பிள்ளைகள்,  ஏன் நான்   கூடக்கூறியுள்ளேன்.   இதற்கு  செலவிடும்  நேரத்தில்  பல  நாவல்கள்  எழுதியிருக்கலாம்.  செலவிடும் பணத்தை   உங்கள்  பல  நாவல்களை  மீளவும்  பதிப்பிக்கலாமென கூறியுள்ளோம்.

.
ஷோபாசக்தி

கலையின் முக்கியமான அம்சம், வெளிப்பாடுதான்; கருத்தன்று. அதி அற்புதமான கருத்துகளை அரிய கண்டுபிடிப்பு போல் அநேக மேதைகள் என்றைக்கோ எழுதிவைத்துச் சென்றுவிட்டனர். ஆனால் அவற்றைக் கலையாக வெளிப்படுத்தும் விதத்தில் கிறங்கடிக்கிறான் கலைஞன். இனி பிறக்கப்போகும் எவருக்கும் அகண்டாகாரமாய்த் திறந்து கிடக்கும் வெளி அது.
ஷோபாசக்தி, தமது கதைகளில் அரசியல்தான் பேசுகிறார். அவர் பேசும் அரசியலைக் கடுமையாக மறுப்போர்கூட அவர் கதைகளின் கலைத் தரத்தை மறுக்க சிரமப்படுவார்கள். வாசகனின் பார்வைத் திறனுக்கேற்ப, பல அடுக்குகளைக் கொண்ட கதைகளே, பெரிய எழுத்து என இலக்கியவாதிகளால் கொண்டாடப்படுகின்றன.
ஷோபாசக்தியின் ‘வெள்ளிக்கிழமை’ என்ற கதையில் கதையென்று பெரிதாக எதுவும் இல்லை. ஒன்றுக்கொன்று நேரடியாய்த் தொடர்பற்ற சம்பவங்களை அடுக்குகிறார். அதன் மூலம், ஒரு தேசத்தின் அவலக் கதையை இன்னொரு தேசத்தில் வைத்து, சொல்கிற விதத்தில் தேசங்களின் எல்லைகளைக் கலைத்து ஒட்டுமொத்த மானுடத்துக்கான கலையாக்கிவிடுகிறார்.

நாநலம் - நானிலம் இன்புறும் சொல்லாடற் களத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்!

.
இனித்தமுடையவர்க்கு, வணக்கம்.
இராமன் அருள், ஆஞ்சனேயன் கருணை, கம்பன் ஆசி அனைத்தும் ஒன்றுகூட,
இவ்வாண்டில், கழகம் தனது பத்தாவது அகவைக்குள் பாதம் பதிக்கின்றது.
இயலும் இசையும் சார்ந்தபல நிகழ்வுகளை அரங்கேற்றியிருந்தோம்.
இதுவரையும் தாங்களளித்த பேராதரவாலேயே இவைகைகூடின.
இனியும் தங்களின் அன்பு தொடரவேண்டும் என்பது எம் அவா.
இவ்வருடத்திலிருந்து புதியதோர் நிகழ்வும் இணைகின்றது.
இகத்தில் பெருஞ்செல்வம் நாவன்மை என்கிறது குறள்,
இனிதாய் ஏற்று நாநலம் என்று பெயரிட்டுள்ளோம்.
இது உங்கள் அன்பு இளவல்களின் இயல் விழா!
இமையோரும் அறிஞரும் மகிழ்ந்து போற்றும்
இயற்றமிழ் வித்தகமிலங்கும் தலைமையில்,
இறைவிகள் ஐவர் இனிக்கப் பேசுவர்,
இன்புற்று மகிழ இரசனை மிகுந்த
இளைஞரும் இல்லறத்தாரும்,                                                
இன்முகப்பெரியரும் வருக!
இனிதே அழைத்தோம்,                                          
இன்சொல் மாந்த,
இசைந்து வாரீர்!
இன்பமேசூழ்க
இங்ஙனம்,

       -கம்பன் கழகத்தார்-


பெருமாள் முருகனுக்கு மாத்திரமின்றி கருத்துச்சுதந்திரத்திற்கும் கிடைத்த வெற்றி முருகபூபதி


படைப்பாளிகளின்    கருத்துச்சுதந்திரத்திற்கு  சாவு மணி அடிக்கும்     இந்துத்துவா    பிற்போக்குவாதிகள்
                                                           
( தமிழ்நாட்டில் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவலின் தடையை  உயர் நீதிமன்றம்  நீக்கியுள்ளது. மாதொரு பாகனுக்கு மாத்திரமின்றி  கருத்துச்சுதந்திரத்திற்கும் கிடைத்த வெற்றி இது. தடை அழுத்தத்தினால்  தான் மரணித்துவிட்டதாகச்சொன்ன பெருமாள்முருகன் ஊரைவிட்டும்  சென்றார். இனி அவர் உயிர்த்தெழும் காலம்  கனிந்துள்ளது.
இந்நாவல்    மீதான சர்ச்சை வெளியானபொழுது நான் எழுதிய நீண்ட கட்டுரையை மீண்டும் இங்கு பதிவுசெய்கின்றேன். இதனை எழுதியபின்னர்தான்   மாதொருபாகன்   நாவல்  படிக்கும் சந்தர்ப்பம்  எனக்குக்கிடைத்தது. (முருகபூபதி)

இலங்கைச் செய்திகள்


மனி­த­குலம் மீதான அன்பை வெளிப்படுத்தும் ஈகைத் திருநாள் : ஜனாதிபதி

இந்த ஆண்டு இறுதிக்குள் எட்கா உடன்பாடு : இலங்கை - இந்தியா இணக்கம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் தினம் அனுஷ்டிப்பு

60 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா யாழில் மீட்பு

யாழ் - வல்லை பகுதியில் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு

தமிழ் தேசிய கீத விவகாரம் : செம்டம்பர் முதலாம் திகதி  மனுவின் விசாரணை

யோசித பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்.!

ஜோர்ஜ் மாஸ்டர் விடுதலையானார் ; தயா மாஸ்டரின் வழக்கு ஒத்திவைப்பு

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர் வெட்டிப் படுகொலை  : மூதூரில் பயங்கரம், மூவர் கைது

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மோதல் ; மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள  முஸ்லிம்களை குடியமர்த்த  செயலணி : 21663 வீடுகளுடன்  அரசியல் உரிமையும் உறுதிபடுத்தப்படும்

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ; தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்.!

 பெரும்பான்மையினத்தவர்களால் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர்  தாக்கப்பட்டு பலி

 'கடைக்குச் சென்ற போது இராணுவத்தினர் சுடத் தொடங்கினர்" : பெண் ஒருவர் வாக்குமூலம்

 சீனா இலங்கையை இந்து சமுத்திரத்தின் கேந்திரமாக்கும்

இலங்கைக்கான சீனாவின் ஒத்துழைப்புகள் தொடரும்

மட்டு. விமான நிலையத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி

 குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு செல்கிறார் ரணில்!

ஒரு கூர்வாளின் நிழலும் சாத்தானின் மதமாற்றமும்

,
நேற்று மதியம் தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ வாசித்துக்கொண்டிருந்தேன். தமிழினி விடுதலையாகியிருந்தார் அப்போது. அப்போது எனது வீட்டிற்கு யாரோ நடந்துவரும் ஒலி கேட்டது. மனது மகிழ்ந்தது. நம்மிடம்தான் யாரும் வருவதில்லையே. வருவது யாராக இருக்கும் என்று நினைத்தபோது, அழைப்ப மணியும் அடித்தது.

கதவைத் திறந்தேன். இரண்டு வெள்ளைக்காரர்கள் நின்றிருந்தார்கள். பெரிய கம்பனி ஒன்றின் முக்கியஸ்தர்கள்போன்று உடையணிந்திருந்தார்கள்.

‘வணக்கம், நீங்கள் நோர்வேஜியன் நாட்டு மொழிபேசுவீர்களா’ என்று கேட்டார்கள்.

‘ஆம்’

‘உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துப்போக வந்திருக்கிறோம்’ என்றதும் வெளியே எட்டிப்பார்த்தேன். வந்தவர்கள் எருமையிலா வந்திருக்கிறார்கள் என்று. அப்படி எததையும் காணக்கிடைக்கிவில்லை. அவர்கள் கையில் பாசக்கயிறும் இருக்கவில்லை.

எனது அமைதி அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கவேண்டும். பையைத்திறந்து ஒரு புத்தகத்தை எடுத்தார்கள். அதில் சொர்க்கத்திற்கான வழி இருப்பதாகக் கூறப்பட்டது எனக்கு.

வி.கே. டி பாலன் ஒரு சுப்பர் ஸ்டார்

.

சமூகத்தின் மிகமிக ஏழ்மையான குடும்பம். எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. அந்தக் கிராமத்தில் அடிமைகளைப்போல் தொழில் செய்துவந்த முன்னோர்கள் வழியைப் பின்பற்ற அவருக்கு மனம் இல்லை. வேறு தொழிலும் தெரியாது. அங்கே வாழப் பிடிக்காமல் வித்-அவுட் டிக்கெட்டில் ரயிலேறி, 1981 ஜனவரி 26-ல் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
சென்னையில் யாரையுமே அவருக்குத் தெரியாது. பிளாட்பாரம்தான் அவரது வீடு ஆனது. கையில் காசு கிடையாது. எழும்பூரைச் சுற்றி உள்ள ஹோட்டல்கள், ட்ராவல் ஏஜென்ஸிகளில் வேலை கேட்டார். கிடைக்கவில்லை. ‘யாருடைய அறிமுகமாவது இல்லாமல் வேலை தர முடியாது’ என்று துரத்திவிட்டர்கள். தோல்விமேல் தோல்வி. பசியுடன் எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், பிக்பாக்கெட்காரர்கள் என விளிம்புநிலை மனிதர்களுடன் படுத்துக்கொண்டிருந்தார்.
ஒருநாள் இரவு பசி மயக்கத்தில் எழும்பூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் படுத்திருந்தபோது படாரென்று ஓர் அடி விழுந்தது. எழுந்து பார்த்தால், அங்கே படுத்திருந்தவர்களை எல்லாம் சந்தேக கேஸ் போடுவதற்காக போலீஸ்காரர்கள் சுற்றிவளைத்துக் கொண்டிருந்தனர். அடுத்து ஜெயிலுக்குப் போகப்போவது நிச்சயமானது. அவர், சடாரென்று ஓட்டம்பிடித்தார். போலீஸ்காரர் ஒருவர் துரத்தினார். போலீஸ்காரரால் அந்த இளைஞரைப் பிடிக்க முடியவில்லை.

சிறு பொறி - தீபச்செல்வன்

.

மதிற் கரைகளில் குருதி கசியும் நாட்களில் 
திரும்ப முடியாமற் போகலாம் என
எண்ணுபவனின் கால் தடம்

மரணம் சைக்கிளின் 
பின்கரியலில் ஏறியமர்ந்த தெருக்களில்
உள் உறிஞ்சிய பெருமூச்சு

நெஞ்சறைகளுக்குள் எழுதியெழுதி 
தனை அழித்த நாட்களில் 
நிராகரிக்கப்பட்டவனின் முனகல்

தன் தாய் மண்ணில் இறங்கி விளையாட
அடம்பிடிக்கும் குழந்தை போலோரு 
கவிஞனின் குரல்

அதிகாரத்தை எதிர்த்தமையால்
கொலைப்பட்டியலில் இடப்பட்டவனின் 
இரகசிய முகம்

உலகச் செய்திகள்


சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலை குண்டு தாக்குதல்

நியூயோர்க் நகரில் குண்டுவெடிப்பு

டாக்காவில் தாக்குதல் நடத்தியவர்களில் புகைப்படங்கள் வெளியீடு

மதினாவில் முகமது நபி பள்ளிவாசல் அருகே தற்கொலைக் குண்டு தாக்குதல்

மதினாவில் தற்கொலைக் குண்டு தாக்குதல் ; 4 பேர் பலி

புவி வெப்பமயமானதால் நீர்மட்டம் உயர்வு: பசிபிக் கடலில் மூழ்கிய 5 தீவுகள்

 டாக்காவில் ஈதுல் பித்ர் தொழுகையில் குண்டு வெடிப்பு 

இலட்சக்கணக்கானோர் பங்கேற்ற ஓரின சேர்க்கையாளர் பேரணி

சீனாவில் வெள்ள பெருக்கு ; 180 பேர் பலி

பிரபல கால்பந்து வீரர்கள் படுகொலை

அமெரிக்க பொலிஸாரால் கறுப்பினத்தவர் சுட்டுக்கொலை ; உயிர் பிரியும் நேரத்தில் வீடியோ எடுத்த தோழி ( காணொளி இணைப்பு )

பொலிஸிற்கு எதிராக நடைபெற்ற பேரணி துப்பாக்கிச்சூடு: 4 பொலிஸ் பலி (வீடியோ இணைப்பு)

தாய்வான் புகையிரத நிலையத்தில் குண்டுவெடிப்பு: 24 பேர் காயம் (வீடியோ இணைப்பு)

பெண்கள், சிறுவர்கள் உட்பட 40 பேர் கழுத்தறுத்து படுகொலை

பாக்தாத்தில் பள்ளிவாசல் அருகே தீவிரவாதிகள் தாக்குதல்:30 பேர் பலி 

கிளிமாஞ்சாரோ மலைக்கனி மாஞ்சாரோ

.
உலகம் அழகிய போர்வையினால் போர்த்தப்பட்டுள்ளது, இங்கு விசித்திரமான, அதிசயமான பல இடங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் நாம் காணாவிட்டாலும் கலைஞர்களின், கவிஞ்ஞர்களின் மனக்கண்ணில் படத்தவறுவதில்லை. 

எடுததுக்காட்டாக சங்கரின் 'எந்திரன்' படப்பாடலில் வருகின்ற 'கிளிமாஞ்சாரோ' மிகவும் அழகிய அதிசயமான, மிகப் பெரிய நகரும் பனிமலை. அது இற்றைக்கு 10,000 ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்றுப்பதிவுகளை கொண்ட பழமைவாய்ந்த ஒன்றாகும். 

இது எங்கு அமைந்திருக்கின்றதென்றால், புவிமத்திய கோட்டுக்கு அண்மையில், தான்சான்யா மற்றும் கென்யாவின் தேசிய பூங்காவாக வெண்ணிற வானத்தை உருக்கி வார்த்த பளிங்கு கண்ணாடிபோல் அழகாகக் காட்சி தருகின்றது. அதனால்தான் கவிப்பேரசு ஐஸ்வரிராய்கே ஐஸ் வைச்சிட்டாராக்கும். இதில் இன்னொரு விடயம் என்னவெனில் ஆதியும் இல்லாமல் அந்தமும் இல்லாமல் இருக்கும் இப்பனிமலை மெது மெதுவாக நகரும் தன்மையுடையது. இதன் உச்சியில் ஏறுகின்றவர்களுக்கு அந்த உணர்வினை அறியக்கூடியதாக இருக்கிறதாம்.

பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்--BY Saravana Prabu

.

பண்சு மந்தமறை நாட ரும்பொருள் பதஞ்சு மந்தமுடி யார்மனம்
புண்சு மந்ததுயர் தீர வந்தபரி நகரி ளாயடவி போனபின்
விண்சு மந்தசுர நதியெ னப்பெருகு வித்த வையையிது விடையவன்
மண்சு மந்துதிரு மேனி மேலடி வடுச்சு மந்தகதை யோதுவாம்.


கருங்க டற்றிரை யிடைக்கி டந்துகழல் கலமெ னக்கன முகடளாய்
வரும்பு னற்பரவை யுட்கி டந்துநகர் மறுகி யுட்கமற வேலினான்
ஒருங்க மைச்சரை விளித்து நீர்கரை சுமந்தொ துக்கிவரு மோதநீர்ப்
பொருங்க தத்தினை யடக்கு வீரென வமைச்சருந் தொழுது போயினார்.

விதைத்ததைநாம் காத்துநிற்போம் !எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண்

.
          ஆங்கிலத்தில் கற்றாலும்
          ஆன்மீகம் அகம்நிறைத்தார்
          அறிவுடனே ஆன்மீகம்
          அவருரைத்து நின்றாரே
           தன்குருவை சோதித்து
           தன்னுணர்வை அவர்வளர்த்தார்
           தன்குருவின் ஆசியினால்
           தரணியெங்கும் ஒளியானார் !

            ஈரமதைக் கொண்டிருந்தும்
            வீரமுடன் செயற்பட்டார்
            ஊரெல்லாம் அவர்வார்த்தை
            உத்வேகம் ஊட்டியதே
            பாரினிலே புரட்சியுடன்
            பலகருத்தை அவர்பகர்ந்தார்
            பார்வையெலாம் பலநோக்கில்
            பாய்ந்துமே சென்றதுவே !

நாடக விழா : பண்பாட்டை வளர்த்தெடுக்கும் நாடகங்கள்

.
சிகப்புக் கண்ணாடி காட்சி

கடந்த மே மாத இறுதியில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூரிலுள்ள தூய நெஞ்சக்கல்லூரி வளாகத்தில், ‘மாற்று நாடக இயக்கம்’ சார்பில் நான்கு நாட்கள் நாடக விழா நடத்தப்பட்டது. இதில் ஏழு நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன, தமிழ்நாட்டு ஆட்டக் கலையான தப்பாட்டம், பஞ்சாபியர்களின் மரபான குர்பானி இசை நிகழ்வுகளும் நடந்தேறின.

பேராசிரியர் சே.ராமானுஜத்தால் உருவாக்கப்பட்டு நெறியாள்கை செய்யப்பட்ட ‘பெத்தண்ணசாமி தாலாட்டு’ தஞ்சை அரங்கஸ்ரீ குழுவினரால் அவருடைய மகள் கிரிஜா ராமானுஜம் மேற்பார்வையில் மேடையேற்றப்பட்டது. இப்சனின் ‘பீர் ஜிண்ட்’ நாடகத்தில் வரும் பீர் ஜிண்ட் பாத்திரத்தையும் மகாபாரதத்தின் துரியோதனனையும் ஒப்பிட்டுக் கதையாடுகிற நாடகமிது. ஒயிலாக்கம் செய்யப்பட்ட ஒரு பாணியில் நிகழ்த்தப்பட்டதென இதைச் சொல்லலாம்.

இளங்கதிர்

.

கல்விப்புலம் சார்ந்த வெளியீடுகளில் பல்கலைக்கழகங்களின் ஊடாக வெளிவருகின்ற இதழ்களுக்கு தனித்துவமாக வரவேற்பு எப்போதுமே உண்டு.  ஆய்விதழ்களாகவும், பருவ இதழ்களாகவும் பல்கலைக்கழகங்கள் செய்யும் வெளியீடுகள் பற்றிய பரிச்சயம் எம்மில் பலருக்கு நிச்சயமாக இருக்கும்.  இந்த வகையில் 1948 ஆம் ஆண்டு முதல் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் சங்கத்தால் வெளியிடப்படும் “இளங்கதிர்”என்கிற ஆண்டுமலர் “தமிழ் இலக்கியம் பண்பாடு ஆகியவற்றை வளர்ப்பதையும், தமிழறிவைப் பரப்புவதையும் கலை ஆக்கங்களை ஊக்குவிப்பதையும் பிரதான நோக்கமாகக்கொண்டு இச்சஞ்சிகை வெளியிடப்படுகின்றது” எனும் நோக்குடன் வெளியாகின்றது. 

தமிழ் சினிமா


மெட்ரோ

மெட்ரோ ( வீடியோ உள்ளே ) - Cineulagam
படம் வருவதற்கு முன்பே பலரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு படம்மெட்ரோ. சென்ஸார் போர்டே படத்தை ரிலிஸ் செய்யக்கூடாது, இந்த காட்சியை கட் செய்யுங்கள், அந்த காட்சியை கட் செய்யுங்கள் எனக் கூறியது. இப்படி பல தடைகளை மீறி இன்று உலகம் முழுவதும் இப்படம் வெளிவந்துள்ளது.
ஒரு சில இயக்குனர்கள் நல்ல படம் இயக்கியும் வெளியே தெரியாமல் இருப்பார்கள். அந்த வகையில் விதார்த் நடித்த ஆள் படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணா தான் இந்த மெட்ரோ படத்தின் இயக்குனர்.

கதைக்களம்

ஆசைப்படுவதில் தவறில்லை, பேராசைப்படுவது ஒருவனை இத்தனை மோசமான உலகத்திற்கு அழைத்து செல்கிறது என்பதே மையக்கரு. அழகான குடும்பத்தில் சிரிஷ் இருக்க, இவருடைய தம்பிக்கு சொகுசு வாழ்க்கை வாழ ஆசை வருகிறது.
இருப்பதை வைத்து நிம்மதியாக வாழ் என்று அப்பா, அம்மா, அண்ணன் எவ்வளவோ அறிவுரை கூறினாலும், கேட்காமல் பைக், ஐ போன் வாங்குவதற்காக தன் நண்பனின் மூலம் நகை பறிக்கும் வேலையில் ஈடுப்படுகிறார்.
தனக்கு தேவையான அத்தனை பணமும் வர, ஒரு கட்டத்தில் பணத்திற்காக தன் சொந்த அம்மாவையே கொலை செய்கிறார். இதன் பின் சிரிஷ் தன் தம்பி தான் கொலைக்காரன் என்று தெரியாமல் இந்த கும்பலை பிடிக்க புறப்பட, என்ன ஆகின்றது என்பதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக கூறியிருக்கின்றார் ஆனந்த கிருஷ்ணா.

படத்தை பற்றிய அலசல்

படத்தின், முதல் ஹீரோ திரைக்கதை தான் அதைவிட இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காகவே ஆனந்த் கிருஷ்ணாவிற்கு ஒரு பாராட்டு. சென்னை போன்ற மெட்ரோ சிட்டிகளில் நடக்கும் வழிப்பறிகளை கண்முன் கொண்டு வந்துள்ளார்.
ஒரு மாணவன் எப்படி பணத்திற்காக இத்தனை குற்றங்களை எல்லாம் செய்கிறான் என்பதையும் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர். அதிலும் செயின் பறிப்பு எப்படி நடக்கின்றது என்பதை இத்தனை ஆழமாக வேறு எந்த படத்திலும் கூறியது இல்லை என்றே கூறலாம்.
இப்படத்திற்கு சென்ஸார் பல தடைகள் விதித்ததாக கூறுகிறார்கள், உண்மையாகவே இப்படத்தை பார்த்த பிறகு பல பெண்கள் விழிப்புணர்வுடன் தான் இருப்பார்கள். ஏனெனில் பெண்கள் எப்படி வெளியே வந்தால் செயின் பறிப்பு நடக்கும் என்பதை மிகவும் டீட்டெயிலாக கூறியுள்ளனர்.
நாம் பார்க்காத ஓர் உலகத்தில் டார்ச் அடித்து வெளிச்சத்துடன் வெளியே காட்டியுள்ளார் இயக்குனர். இதற்கு முன் இப்படி ஒரு இருண்ட உலகத்தை காட்டியது பொல்லாதவன் படமாக தான் இருக்கும். ஆனால், பல இடங்களில் குறும்படம் பார்ப்பது போலவே ஒரு எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
இது கண்டிப்பாக நடித்த நடிகர்கள் தான் காரணம் என்று கூறலாம், ஹீரோ அவருடைய தம்பி இருவருமே யதார்த்தத்தை மீறி நடித்துள்ளது கொஞ்சம் செயற்கை தனமாக உள்ளது. பாபிசிம்ஹா எப்போது இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார் என்று தெரியவில்லை, ஏனெனில் படத்தின் ஆரம்பத்தில் பெரிய பில்டெப்புடன் மிரட்டினாலும் கிளைமேக்ஸில் கிச்சுகிச்சு மூட்டி செல்கிறார்.

க்ளாப்ஸ்

படத்தின் திரைக்கதை, ஆரம்பத்திலிருந்து இறுதி வரை ஒரு பதட்டத்துடனே நம்மை உட்கார வைக்கின்றது.
படத்தின் வசனம் ‘ஒரு பையனின் ஆசையை நிறைவேற்றுவது அப்பாவின் கடமை, பேராசையை இல்லை’ திருடனாக இருந்தாலும் பேராசை வரக்கூடாது போன்ற வசனங்கள் கவணிக்க வைக்கின்றது.
ஜோஹனின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும் பின்னணியில் மிரட்டுகிறார். படத்திற்கு மற்றொரு பலம் சேர்ப்பது உதயகுமாரின் ஒளிப்பதிவு, அதிலும் கிளைமேக்ஸில் அந்த இரவில் நடக்கும் காட்சியை லைவ்வாக பார்ப்பது போல் இருந்தது.
அட செண்ட்ராயன் அனைத்து கதைக்களத்திலும் கலக்குகிறார், காமெடி, சோகம் என அனைத்திலும் செம்ம ஸ்கோர் செய்கிறார்.

பல்ப்ஸ்

இன்னும் கொஞ்சம் யதார்த்தமாக ஒரு சில கதாபாத்திரங்கள் நடித்திருக்கலாம்.
அம்மாவை கொலைசெய்த ஹீரோவின் தம்பியின் கைரேகையை எடுக்கிறார்கள், ஆனால் அதுப்பற்றி எந்த ஒரு தகவலும் வராதது லாஜிக் மீறல்.
மொத்தத்தில் மெட்ரோ போன்ற ஹைஃபை சிட்டிகளின் மற்றொரு இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியதற்காகவே கண்டிப்பாக இந்த மெட்ரோவை பார்க்கலாம்.

ரேட்டிங்- 3/5 

நன்றி   cineulagam