ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்களுக்கு கல்வி மந்திரியின் சான்றிதள்கள்

 .


NSW Community Languages Schools இனால் 05.09.2011 இல் நடாத்தப்பட்ட Minister’s Award for Excellence in Student Achievement 2011 நிகழ்ச்சியில் ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்களான செல்வி அபிராமி ரவீந்திரன் மேற்பிரிவில் Commended Award இனையும், செல்வி கேசவி விக்னராஜா கீழ்பிரிவில் Highly Commended Award இனையும் பெற்றுள்ளார்கள். இவர்கள் 2010ம் ஆண்டின் சிறந்தமாணவர்களாக ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தில் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


அகங்களும் முகங்களும் -சு .வில்வரெத்தினம்

.


வெடிகள் சிதறும் ஒலிகள்
வேடிக்கை தெருவெல்லாம்
என்ன வெளியே?
எட்டிப் பார்த்தேன்.

தேர்தல் வெற்றித் திருவிழா ஊர்வலம்

நம்மவர்,
மேளங்கொட்டுறார், குதிக்கிறார், விழுகிறார்.
கோஷம் போடுவார்
நடுவே
கோடியுடுத்த மாப்பிள்ளையாக
மா.அ. சபைத் தலைவர் வருகிறார்
மாலை மரியாதையுடன்.

வெட்கம் கெட்டவர்கள்!
வேற்றோர் இட்ட நெருப்பின்
வெக்கை தணிந்து இன்னும்
சாம்பல் அள்ளவில்லை.
தூர்ந்து போன தேசத்தை
தூக்கி நிறுத்தத் தோள் கொடுப்பாரில்லை.
அதற்குள்
தேர்தல் வெற்றி ஊர்வலம் வருகிறார்.

MEALS READY - சிறந்த மலையாள குறும் படம் -

.
வாழ்கையின் உண்மையான அர்த்தம் காதல்.வறுமையில் கூட அந்த காதல் செத்துவிடாது வாழ்ந்துகொண்டுதான் இருக்கும் . வாழ்வில் வறுமை இருக்கலாம் எங்கோ ஒரு மூலையில் பசுமையும் இருக்கத்தான் செய்யும்.
  நிதுணா நெவில் தினேஷ்சின் ஒரு அருமையான குறும்படம். என் நெஞ்சை தொட்ட இந்த குறும் படத்தை நீங்களும் பாருங்கள் உங்கள் எண்ணங்களையும் பதிவு செய்யுங்கள் 
செ.பாஸ்கரன் 

மாத்தளை சோமுவின் வியக்கவைக்கும் தமிழர் காதல்

.

இலங்கைச் செய்திகள்


* நாவாந்துறை சம்பவம்; பிரேரணைக்கு சபையில் அனுமதி மறுப்பு அரச தரப்புடன் விநாயகமூர்த்தி வாதம்

boat* அவுஸ்திரேலியாவிற்கு படகில் செல்ல முயற்சித்த 44 பேர் கைது கல்முனைக் கடலில் பிடிபட்டனர்





*   எப்படியிருந்த யாழ்ப்பாணம் இப்படியாகிவிட்டது  பெற்றோரிடையே விழிப்பு அவசியம்
jaffna1105-1









* யுத்த சூனிய பிரதேசத்தில் நிகழ்ந்த கொலைகளை இந்தியா, அமெரிக்கா செய்மதியில் பார்த்தன: விக்கிலீக்ஸ்

flee-25








* நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது, ஈபிடிபியின் வலிமையை எதிர்கொண்டேன். பல்கலைக்கழக மாணவர்களை நான் சந்திப்பதை அவர்கள் தடுத்தனர்  - ரொபட் பிளெக்

ஒளிந்திருந்த இராணுவ வீரர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு





தீலீபனின் கனவு

.


சுற்றி நின்று
நாம் அழுதோம்
தீ நூரவில்லை
தீலீபன் வைத்த தீ
இன்னும் அணையவில்லை

ஆங்காங்கே எரிகிறது
ஆரும் கேட்கவில்லை
ஆகாயம் கூட இப்படி
அழுததில்லை

தியாகி தீலீபன் நினைவு அஞ்சலி நிகழ்வுகள்



அகதிகள் பரிமாற்ற உடன்படிக்கைக்கு புத்துயிரளிக்க அவுஸ்திரேலியா திட்டம்

.
Tuesday, 13 September 2011

கன்பேரா: மலேசியாவுக்கு அகதிகளை அனுப்பும் உடன்படிக்கைக்கு புத்துயிரளிக்க தமது அரசு திட்டமிட்டிருப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் கூறியுள்ளார்.

அகதிகள் பரிமாற்ற உடன்படிக்கைக்கு அனுமதி அளிக்கும் வகையிலான குடியேற்ற சட்ட மூலச் சீர்த்திருத்தங்களுக்கு தனது தொழிற்கட்சியின் ஆதரவை பெற்றுள்ள நிலையிலேயே கிலார்ட் இவ்வாறு கூறியுள்ளார்.

மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 9


.
                                                                                         பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


அத்தியாயம் 9

செய்தியனுப்பல்

அறுவடைக் காலம். கணவன் அருவி வெட்டுக்காக வெளியூருக்குச் சென்றுவிட்டான். வேலை முடிந்தபின்தான் வீடு திரும்புவான். அதற்கு எத்தனை நாட்களாகும் என்று சொல்லமுடியாது. வீட்டிலே பெண்பிள்ளையொன்று வயதுக்கு வந்துவிட்டது. தாயானவள் தனது கணவனுக்கு அதுபற்றிச் செய்தியனுப்ப நினைக்கிறாள். அதே ஊருக்கு செல்லுகின்ற ஆதம்லெப்பை என்கின்ற பழக்கமுள்ள முஸ்லிம் ஆள் ஒருவரிடம் பின்வருமாறு சொல்லியனுப்புகிறாள்.

ஆதம் காக்கா ஆதம் காக்கா
அவரக் கண்டாச் சொல்லிடுங்க
பூவரசங் கன்னியொன்று
பூமலர்ந்து போச்சுதெண்டு

அக்ரஹாரத்துப் பூனை - ஜெயகாந்தன்


இவ்வாண்டின் பிரபஞ்ச அழகியாக அங்கோலாவின் கறுப்பின பெண் தெரிவு

.
13/9/2011

நடப்பு ஆண்டின் பிரபஞ்ச அழகி மகுடத்தை அங்கோலா நாட்டைச் சேர்ந்த லைலா லோபஸ் வென்றார்.

பிரேசில் நாட்டில் சா பாவ்லோ நகரில் நடைபெற்ற பிரபஞ்ச அழகியைத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான இறுதிச் சுற்றில் சீனா, பிலிப்பைன்ஸ், உக்ரைம், அங்கோலா, ஆஸ்திரேலியா , பிரான்ஸ், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 10 நாட்டு அழகிகள் தேர்வாகினர்.

என் இனிய தமிழ் மக்களே! கலைஞர்,எம்ஜிஆர், அம்மா விசுவாசிகளே............. சிந்திப்பீர்..................


உலகச் செய்திகள்


* லண்டன் கலவரத்திற்குக் காரணமான டுக்கனின் உடலுக்கு பலர் இறுதி அஞ்சலி

* கென்ய தீ விபத்தில் 80 பேர் உடல் கருகி பலி

தன்சானியா படகு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக உயர்வு

* பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கில் 141 பேர் பலி 4 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு

* ஆப்கானில் 20 மணித்தியாலங்களாக நீடித்த மோதல் நிறைவு

*   அமெரிக்காவில் வறுமை அதிகரிப்பு



லண்டன் கலவரத்திற்குக் காரணமான டுக்கனின் உடலுக்கு பலர் இறுதி அஞ்சலி
Friday, 09 September 2011

லண்டனில் அண்மையில் இடம்பெற்ற கலவரங்களுக்குக் காரணமானவரெனக் கூறப்படும் மார்க் டுக்கனின் இறுதிக் கிரியைகள் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

எப்போ தணியும்

.
கூடு சுமந்து ஊரும்
நத்தைகள் போல்-உன்
நினைவு சுமந்து நகரும்-என்
இதயக்கூடு

நத்தை ஊர்ந்த சுவடுகளும்-என்
இதயம் சுமந்த வடுகளும்
இன்னும் ஈரத்துடனே

தீராத போர் உன்னை
தின்று தீர்த்த போதும்
சுனாமி வந்து உன்னை
சுருட்டி அள்ளிய போதும்

இன்னும் நிமிர்ந்து விட- நீ
நிதானத்துடன் எழுவது
ஆறுதல் என்றாலும்-இப்போ
பூதமென்றும் கீறீஸ் மாஜமென்று
வதைபடுத்தும் வல்லாண்மை-என்று
தணியும் எம்மை எதிர்ப்போரின் தாகம்

ஒரே முகம் ஒரே நிறம்
பாசைகளும் ஆசைகளும்
வேறு வேறாக்கி –ஏன்
பிரிதானோ இறைவன்
பிரிந்து வாழ மட்டுமேன்
விரும்பாமல் சிதை படுத்துகிறான்.

தாகம் தணித்து
எல்லோரும் சமமென
மேலை நாட்டவர் போல்
எப்போது மனிதம் சுமப்பமோ
அதுவரையும்........
கூடு சுமந்து ஊரும்
நத்தைகள் போல்.

கவிஞர் ஆவூரான்.

தமிழ் சினிமா

.
*  கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படத்தில் அறிமுக நடிகைகள்

*பாலச்சந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கௌரவித்த ஜனாதிபதி நடிகர் தனுஷ்,நடிகை சரண்யாவுக்கும் விருதுகள் 


கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படத்தில் அறிமுக நடிகைகள்


இளமை, இனிமை நிறைந்த காதல் கதை உள்ள 'கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு 'நடிகைகள்' பட்டாளம் அறிமுகமாகிறது.

பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்தவர்களை இப்படத்திற்காக இணைத்துள்ளார் டைரக்டர் வெங்கி.

படத்தின் நாயகி அதிதி புது டெல்லி மாடலிங் பெண் தொலைகாட்சி சேனலில் யோகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்.



கலைகளில் ஆர்வம் கொண்டவர் 'கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்' படத்தின் நாயகி பிரியங்காவாக அறிமுகமாகிறார்.

இவருடன் ஹெச்சிஎல் டெக்னாலஜியில் ஹெச் ஆர் டெபுடி மேனேஜராக பணிபுரியும் சுபாஷினி நடிக்கிறார். பல குறும்படங்களில் முக்கிய வேடங்களில் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர் நாயகியின் தோழி ஸ்ம்ருதியாக அறிமுகமாகிறார்.



ஃபேஷன் டிசைனர்-டான்சர் ஆர்த்தி டாண்டன் நாயகனின் தோழி ஆர்த்தியாக அறிமுகமாகிறார். விஷுவல் கம்யுனிகேசன் மாணவி பிரபல டைரக்டர் அரவிந்தராஜின் மகள் மகா கீர்த்தி நாயகனின் சிநேகிதியாக நடிக்கிறார்.

லக்ஷ்மி ப்ரியா என்பவர் இப்படத்தில் டாக்டராக நடிக்கிறார், நாயகனின் தங்கை சம்யுக்தாவாக கல்லூரி மாணவி சம்யுக்தா நடிக்கிறார்.



நாயகியின் தங்கையாக பள்ளி மாணவி திவ்யா நடிக்கிறார். ஆங்கில ஆசிரியை ஷோஃபியா டாக்டராக அறிமுகமாகிறார் என்று 'கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்' படத்தில் அறிமுகமாகும் நடிகைகளை பற்றி இயக்குனர் வெங்கி தெரிவித்துள்ளார்.







நன்றி வீரகேசரி



பாலச்சந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கௌரவித்த ஜனாதிபதி நடிகர் தனுஷ்,நடிகை சரண்யாவுக்கும் விருதுகள் .


Monday, 12 September 2011

திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த தாதா சாகேப் பால்கே விருதினை இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டேல் வழங்கினார். சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷûம் சிறந்த நடிகைக்கான விருதை நடிகை சரண்யாவும் பெற்றனர்.

58 ஆவது தேசிய விருதுகள் வழங்கும் விழா சனிக்கிழமை டில்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நடந்தது. ஜனாதிபதி பிரதீபா பட்டேல் தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார். தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி முன்னிலை வகித்தார். முதன் முறையாக இந்த ஆண்டுதான் தமிழ் மற்றும் மலையாள படங்கள் அதிகளவில் விருதுகளை அள்ளின.

திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான "தாதா சாகேப் பால்கே விருது' தமிழ்ப்பட உலகில் இயக்குநர் சிகரம் என்று அழைக்கப்படும் கே.பாலச்சந்தருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு பிரதீபா பட்டேல் விருதை வழங்கினார்.

சினிமா வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட மூத்த சினிமாக் கலைஞருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. தங்கத்தாமரையும் ரூ.10 இலட்சம் ரொக்கமும் விருதும் சால்வையும் அடங்கியது இந்தப் பரிசு.

இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது 2 பேருக்கு வழங்கப்பட்டது. "ஆடுகளம்' தமிழ்ப் படத்தில் நடித்த தனுஷ், "ஆதாமிண்டே மகன் அபு' என்ற மலையாளப் படத்தில் நடித்த சலீம்குமார் ஆகியோர் இந்த விருதுகளைப் பெற்றனர்.

சிறந்த நடிகைக்கான விருது "தென்மேற்குப் பருவக்காற்று' தமிழ்ப் படத்தில் நடித்த சரண்யாவுக்கும் பாபு பாண்ட் பாஜா என்ற மராத்தி படத்தில் நடித்த மிட்டாலே ஜக்தாப் வரத்கர் என்ற நடிகைக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது.

கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான விருதைப் பெற்றார். தென் மேற்குப் பருவக்காற்று சினிமாவில் "கள்ளிக்காட்டு தாயே' என்று அவர் எழுதிய பாட்டுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

"தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கிய சீனு இராமசாமி சிறந்த தமிழ்ப் படத் தயாரிப்பாளருக்கான விருதையும் "மைனா' படத்தில் நடித்த இயக்குநரும் நடிகருமான தம்பி இராமையா சிறந்த துணை நடிகருக்கான விருதையும் நடிகை சுகுமாரி சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றனர்.

"ஆடுகளம்' தமிழ்ப்படம் மொத்தம் 6 விருதுகளை அள்ளியது. சிறந்த நடிகர் தனுஷ் தவிர சிறந்த இயக்குநர் (டைரக்டர் வெற்றி மாறன்), சிறந்த திரைக்கதை (டைரக்டர் வெற்றிமாறன்),சிறந்த நடன இயக்குநர் (வி.தினேஷ்குமார்),சிறந்த படத்தொகுப்பு (டி.இ.கிஷோர்),சிறப்புப் பரிசு (இலங்கை நடிகர் ஜெயபாலன்) ஆகிய விருதுகள் இந்தப் படத்துக்கு வழங்கப்பட்டன. அதேபோல் "ஆதாமிண்டே மகன் அபு' மலையாளப்படம் 4 விருதுகளைப் பெற்றது. சிறந்த நடிகருக்கான விருது (சலீம்குமார்) தவிர, சிறந்த திரைப்படம்,சிறந்த ஒளிப்பதிவாளர் (மது அம்பட்), சிறந்த இசையமைப்பாளர் (ஐசக் தாமஸ்) ஆகிய விருதுகளும் இந்தப் படத்துக்கு வழங்கப்பட்டன.

சிறந்த உடையலங்காரம் (ஜெயன்), சிறந்த விஷûவல் எஃபெக்ட்ஸ் (ஸ்ரீனிவாசன் மோகன்) ஆகிய விருதுகள் ரஜினி நடித்த "எந்திரன்' படத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.ஜெயனும் ஸ்ரீனிவாசனும் இந்த விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

தட்ஸ்தமிழ்
நன்றி தினக்குரல்