தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு
நந்திக்கடலே நீ சொல்லம்மா - சித்தி கிருஷ்ணா
பதினாறு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
பதறுது நெஞ்சம் .
முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர் புகுந்தனர் தஞ்சம் .
தஞ்சம் என வந்த தமிழனின் உயிர்ப் பயணம் இங்கே முடிந்ததுவோ?
தாயின் கருவறை கூடப் பாதுகாப்புத் தந்ததில்லை அன்று,
உடல்கள் சிதைந்த கோரம் மறக்க முடியவில்லை இன்று.
வந்தாரை வாழ வைக்கும் எம் மண்ணில்,
சொந்தங்கள் மடிந்தது யார் செய்த பாவமோ.
ஓயாத அழுகுரல் இன்னும் கேட்கிறதே
இது யார் செய்த சாபமோ.
உறவுகளின் ஒலங்கள் ஒலிக்குது நெஞ்சின் ஆழத்தில்.
நீதியெனும் சொல் வெறும் கானல் நீரானதோ?
எம் கண்ணீருக்கு யார் பதில் சொல்வது.
இயற்கையே இனியும் கண் திறவாயோ.
இந்தத் துயரம் இறந்த காலத்தின் சோகம் மட்டுமா?
செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் சிறப்புப் பேட்டி 2025 - சவால்களும் சாதனைகளும்
செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தற்பொழுது சிட்னிக்கு வருகை தந்துள்ளார்.
நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக அவர் வழங்கியிருந்த செவ்வியில் சமூகப் பணிகளில் அண்மைய இலக்குகள் மற்றும், சவால்களும் சாதனைகளுமாகப் பேசுகிறார்.
மற்றவர் இகழ்ந்திட வாழாதே! – அன்பு ஜெயா
பா வகை: வஞ்சி மண்டிலம்.
நன்றே
செய்துநீ நானிலம்
என்றும்
போற்றிட வாழ்ந்திடு!
நன்றும்,
நலிந்தவர் நலம்பெற
இன்றே
செய்திடல் ஏற்றமே! (1)
கல்விப்
பணிதனைக் கள்ளமாய்
செல்வம்
கொழித்திடச் செய்வதோ?!
கல்விப்
பசியினைக் கலைந்திட
நல்ல
வழிதனில் நடத்துவீர்! (2)
கள்தான் உடல்நலம் காக்குமோ
கள்ளும் உன்னுளம் கலைத்திடும்
கள்ளாம் அரக்கனைக் காண்கையில்
உள்ளத் திலவனை ஒழித்திடு!
(3)
என்னவென்று சொல்வது!
பின்னையிட்ட தீ - சிறுகதை - கே.எஸ்.சுதாகர்
சிவநாயகத்திற்குப் பசி வயிற்றைக் குடைந்தது. இரவுச் சாப்பாடு முடிவடைந்துவிட்டதா என அறிவதற்காக, மகள் வெண்ணிலாவைக் கூப்பிட்டார். வெண்ணிலா கிணற்றடியில் தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தாள். இதுவரை காலமும் தண்ணீர் அள்ளுவதற்கு துலாக்கொடியை நம்பி இருந்த அவளுக்கு, அன்றுதான் ‘உவாட்டர் பம்ப்’ பூட்டியிருந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து இரவு வேளைகளில் முற்றத்து தென்னை மரங்களுக்கு மேலால் மாவிட்டபுரம் விரையும் ‘ஷெல்’லைப் போல சீறிக்கொண்டு தொட்டிக்குள் பாய்ந்தது நீர்.
“அம்மா அப்பாவைக் குளிக்க வார்க்க, தோட்டத்திற்கு நீரிறைக்க எல்லாத்திற்கும் சுகம். சுகந்தன் அண்ணாவிற்கு எவ்வளவு நல்ல மனசு.”
வேலை கிடைத்த முதல் மூன்று மாதங்களிலேயே கடனை அடைத்துவிட்டான். பிறகு வந்த சம்பளக்காசில் அம்மாவிற்கும் வெண்ணிலாவிற்கும் உடுப்பு எடுத்துக் கொடுத்திருந்தான். இப்ப ‘பம்ப்’ ஒன்றும் வாங்கிவிட்டான்.
“தம்பி பரதன்! வெண்ணிலா கிணற்றடியிலை உடுப்புத் தோச்சுக் கொண்டிருப்பாள். அப்பா கூப்பிடுகிறார். ஒருக்கால் வந்திட்டுப் போகச் சொல்லு” – அம்மா.
வேலிக்கு அப்பால் நின்ற ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்த பரதன், தாயாரின் குரல் கேட்டவுடன் பாய்ந்து ஓடி மாமரமொன்றிற்குப் பின்னால் ஒளிந்து கொண்டதை வெண்ணிலா கண்டுகொண்டாள்.
பின் மாமரத்தினின்றும் வெளிப்பட்டு அருகே இருந்த தூர்ந்து போன பதுங்கு குழிக்குள் இறங்கிக் கொண்டான். கடந்த ஆறேழு மாதமாகப் பதுங்கு குழிகள் கவனிப்பாரற்றுக் கிடந்தன.
கொஞ்ச நாட்களாகப் பரதனின் போக்கு, தங்கை வெண்ணிலாவுக்கு விசித்திரமாகவே தெரிந்தது.
சாந்தி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்
படத்துக்கு படம் சிவாஜி நடித்தாலே போதும் படத்தின் வெற்றி
ஊர்ஜிதமாகும் என்ற நம்பிக்கையில் படங்களை இயக்கிக் கொண்டிருந்த பீம்சிங் அதே பார்முலாவை பின்பற்றி இயக்கிய படம்தான் சாந்தி. அறுபதாண்டுகளுக்கு முன்னர் 1965ம் வருடம் வெளிவந்த இந்தப் படத்தின் கதை விசித்திரமானது, முடிவு அநர்த்தமானது!
அவனை பெண் பார்க்க மதுரைக்கு அழைத்துப் போகிறாள். செல்வச் செழிப்பில் வாழும் சாந்தியை அவர்கள் சென்று பார்த்த போது தான் அவள் பார்வையற்றவள் என்பது தெரிய வருகிறது. அதே சமயம் அவளின் தோழி மல்லிகா மீது சந்தானத்துக்கு நாட்டம் உண்டாகிறது. இதனிடையே சாந்தியைப் பற்றி கேள்விப்படும் ராமுவின் மாமா பரமசிவம் பிள்ளை அவளின் சொத்துக்கு ஆசைப் பட்டு , அவள் பார்வையற்றவள் என்பதை மறைத்து அவளை தன் தம்பி மகன் ராமுவுக்கு கட்டி வைத்து விடுகிறார். சாந்தியின் நிலையறிந்து அதிர்ச்சியடையும் ராமு திருமணத்தறே அவளை விட்டு நீங்கி போய் விடுகிறான். அவனைத் தேடித் செல்லும் சந்தானம் அவனை சமாதானம் செய்து சாந்தியிடம் அழைத்து செல்ல முனைகிறான். இதனிடையே ஏற்படும் விபத்தில் ராமு இறந்து விட , அந்த அதிர்ச்சிகரமான செய்தியை சாந்தியிடம் சொல்லாமல் அவளின் கண் பார்வை ஆப்ரேஷன் முடியும் வரை அவளின் கணவன் ராமுவாக நடிக்கும் படி பரமசிவம் சந்தானத்தை வற்புறுத்துகிறார் . சந்தானமும் வேறு வழியின்றி உடன் படுகிறான். சாந்திக்கு கண் பார்வை கிடைக்கிறது. அதே சமயம் இறந்து விட்டதாக நம்பப் படும் ராமுவும் உயிரோடு திரும்புகிறான். அப்படி என்றால் அவனும் சாந்தியும் சேர வேண்டியது தானே ! அதுதான் இல்லை, அதன் பின் இயக்குனர் வேறு விதமாக படத்தை நகர்த்துகிறார்.
சாதனையின் நாயகி பேரா. முனைவர். மரியதெரசா
அன்னை தெரசா அரும்பணிகள் பலசெய்தார்.மரியதெரசா மாண்பு நிறை தமிழ் சுமந்து பணிசெய்ய எண் ணுகிறார். காரைக்காலில் 1955 ம்
முக்கால் அடி கொண்டது வள்ளுவம். ஆனால் அது பெரும் பொக்கிஷமாய் மிளிர்கிறது. குறு முனியாக இருப்பவர் அகஸ்தியர். அகஸ்தியர் இறைவனிடமே தமிழ் கற்றார் என்பது ஆன்றோர் வாக்கு .தமிழின் கரு வூலமாய் அகஸ்தியரை அறிவுலகம் போற்றும் நிலையும் இருக்கிறது. உருவத்தால் குறளாயும் குறு முனி யாயும் விளங்கும் முனைவர் பேராசிரியர் மரியதெரசா தனக்குப் பின்னால் நீண்டதோர் வரிசையில் பல பட்டங்களை இணைத்து கற்றலில் உயர் நிலை எய்தி ஒளிவிட்டு பிரகாசித்து நிற்கிறார் எனலாம். எம்.ஏ , பி.எச்டி தமிழ் , எம்.ஏ , பி.எட் , ஹிந்
மலையக மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா - இலங்கை மாணவர் கல்வி நிதியம் உதவி
அவுஸ்ரேலியாவிலிருந்து கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி, அண்மையில் மலையக மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
கல்வி நிதியத்தின் மலையக
தொடர்பாளர் அமைப்பான மலையக சமூக அபிவிருத்தி நிறுவனத்தின்
(Plantation Community Development Organization) கண்காணிப்பில் இவ்வுதவி வழங்கப்பட்டுவருகிறது.
நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிபெறும் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் தாய்மாரும், கலந்துகொண்டனர்.
அமைப்பின் உறுப்பினர் திரு. மு.துவாகரன் மற்றும் ஆலோசகர்
திரு.ஏ.ஜெயசீலன் பாடசாலைகளின் அதிபர்கள் ,
ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கடந்த காலங்களில் இந்நிதியத்தின் நிதியுதவியினை பெற்ற மாணவர் பலர் தரம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளில் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்று உயர்கல்வியினை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கான சவால்
Published By: Digital Desk 2
11 May, 2025 | 03:12 PM
-கபில்
வடக்கு, கிழக்கில் ஒரு பலப்பரீட்சை நடந்து முடிந்திருக்கிறது.
உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுகின்ற இந்த பலப்பரீட்சை, தமிழ்த் தேசியக் கட்சிகள் எதிர் பேரினவாத கட்சிகள் என்ற போட்டியை எட்டியிருந்தது.
தமிழ்த் தேசிய கட்சிகள் நான்கு முக்கியமான அணிகளாக போட்டியிட்டிருந்தாலும் அவற்றுக்கிடையில் இருந்த போட்டியை விட, தேசிய மக்கள் சக்தியுடனான போட்டிக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்துக்குள், தமிழ்க் கட்சிகளை இல்லாமல் செய்து விட்டு, அந்த இடத்தை தான் நிரப்பிக் கொள்ள வேண்டும் என்ற வெறித்தனத்துடன் தேசிய மக்கள் சக்தி செயற்பட்டிருந்தது.
அது தமிழ்க் கட்சிகளை பதற்றத்துக்கு உள்ளாக்கியது என்பதில் சந்தேகம் இல்லை.
அதனால், உள்ளூராட்சி தேர்தல் தமிழ்க் கட்சிகளுக்கு ஒரு கௌரவப் பிரச்சினையாக மாத்திரமன்றி, தமிழ்த் தேசிய அரசியலின் இருப்புக்கான பலப்பரீட்சையாகவும் மாறியது.
அதனால் தான், தமிழ்க் கட்சிகளுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான நேரடி பலப்பரீட்சையாக இந்தத் தேர்தல் மாற்றம் பெற்றது.
இந்த பலப்பரீட்சையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களின் பலத்தை நிரூபித்திருக்கின்றன.
பாகிஸ்தானின் பாதையில் சீனாவைப் பின்தொடர்கிறதா இலங்கை?
08 May, 2025 | 10:40 AM
(லியோ நிரோஷ தர்ஷன்)
சர்வதேச அளவில் சீனாவின் பரந்த விரிவாக்கம், பெரும்பாலும் ஒரு பாதை ஒரு மண்டலம் முன்முயற்சி போன்ற திட்டங்கள் மூலம், பரஸ்பர நன்மை தரும் பொருளாதார ஒத்துழைப்பாகவே விவரிக்கப்படுகிறது. ஆனால், அதன் பின்னணியில் உள்ள நெருக்கடியான நுட்பங்கள் குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டிய சூழல் இலங்கை போன்ற நாடுகளுக்கு உள்ளது. இந்தச் சூழ்நிலையில் பாக்கிஸ்தான் சிறந்ததொரு முன்னுதாரணமாக திகழ்கிறது.
சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் மூலம் சீனாவுடன் ஆழமாக இணைந்த பாக்கிஸ்தான், ஆரம்பத்தில் பொருளாதார வளங்களை எதிர்பார்த்தது. ஆனால், இதன் விளைவாக நிலவும் கடன் சுமை, உள்ளடங்கிய சமூகமறுப்பு, மேலும் சீனாவின் பாதுகாப்பு உள்ளடக்கங்களின் விரிவாக்கம் ஆகியவை அந்த நாட்டின் முழுமையான இறையாண்மை மற்றும் மக்கள் நலனில் கேள்விக்குறிகளை எழுப்புகின்றன. இலங்கையிலும் இதே மாதிரியான நிலை உருவாகும் அபாயம் உள்ளதா? என்ற கேள்வி நேர்மையாக எழுப்ப வேண்டியுள்ளது. ஏனெனில் பலூசிஸ்தானில் சீன முதலீடுகள், அபிவிருத்திக்கு பதிலாக மக்கள் எதிர்ப்புகளுக்கு காரணமாகியுள்ளன.
பாகிஸ்தானில், குறிப்பாக இயற்கை வளங்களில் செழிப்புடைய பலூசிஸ்தான் மாகாணத்தில், சீன முதலீடுகள் பெரும் கலகக்குரலாக உருவெடுத்துள்ளன. வலுவான வளர்ச்சி என்ற முன்மொழிவுடன் கொண்டுவரப்பட்ட சீன-பாக்கிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டங்கள், குவாடர் துறைமுகம் உள்ளிட்ட தளங்களில் முற்றிலும் மாறுபட்ட யதார்த்தத்தை உருவாக்கியுள்ளன. பலூச் இன மக்களிடம் இருந்து வரும் எதிர்ப்புகளின் பிரகாரம், இந்தப் பெரிய திட்டங்களில் உள்ளூர் சமூகங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025
.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க tamilmurasu1@gmail.com or paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்
24-05- 2025 Sat: தமிழ் வளர்த்த சான்றோர் விழா - அருள்மிகு சிட்னி முருகன் கோயில் கலாசார மண்டபம் - மாலை 4.45 மணி
25-05- 2025 Sun: திருக்குறள் மனனப் போட்டி – சிட்னி துர்க்கை அம்மன் கோயில் - தமிழர் மண்டபம் - முற்பகல் 9.00 மணி
25-05- 2025 Sun: சமய அறிவுத் திறன் போட்டியும், திருமுறை ஒப்புவித்தல் போட்டியும் -சிட்னி துர்க்கை அம்மன் கோயில் - தமிழர் மண்டபம் - முற்பகல் 11.00 மணி
07-06- 2025 Sat: சிட்னி இசை விழா - Riverside Theatre, Paramatta
08-06- 2025 Sun: சிட்னி இசை விழா - Riverside Theatre, Paramatta
15-06- 2025 Sun : சைவமன்றம் வழங்கும் இசை நடன நிகழ்வு
25-06- 2025 Sat: ETA presents Charity Night 2025 - Dinner Dance - Roselea Community Centre, Carlingford
27-09- 2025 Sat: சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி at The Bryan Brown Hall, Bankstown 6pm.:'
இலங்கைச் செய்திகள்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைப்பு!
யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது அமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு!
வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களால் 2.46 பில்லியன் டொலர்கள் அந்நிய செலாவணி
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்ணீர் சிந்திய கண்கள் மூடிகொண்டிருக்கின்றன; சர்வதேசம் பதிலளிக்குமா? - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி
தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும் - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ்
ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்களின் அமைதி வழிப் போராட்டத்தை அடக்க நிர்வாகம் நடவடிக்கை - தொழிலாளர்கள் கவலை
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைப்பு!
13 May, 2025 | 03:33 PM
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாள் இன்று (13) பல பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கிளிநொச்சி பஸ் தரிப்பு நிலையத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
உலகச் செய்திகள்
'உங்களால் உதவமுடியுமா? நாங்கள் காசாவிற்குள் மரணித்துக்கொண்டிருக்கின்றோம்" பிபிசி செய்தியாளருக்கு வந்த வட்ஸ் அப் தகவல்
கனடா வெளியுறவு அமைச்சரான தமிழக பெண் ; பகவத் கீதையில் பதவி பிரமாணம்..யார் இந்த அனிதா ஆனந்த்?
இஸ்ரேலுடன் சிரியா சுமூகமான உறவுகளை ஏற்படுத்தவேண்டும் - சிரிய ஜனாதிபதியிடம் டிரம்ப் வேண்டுகோள்
அமெரிக்கா - சவூதி அரேபியா இடையில் 142 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்து
கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி
'உங்களால் உதவமுடியுமா? நாங்கள் காசாவிற்குள் மரணித்துக்கொண்டிருக்கின்றோம்" பிபிசி செய்தியாளருக்கு வந்த வட்ஸ் அப் தகவல்
Published By: Rajeeban
15 May, 2025 | 01:43 PM
உங்களால் உதவமுடியுமா நாங்கள் காசாவிற்குள் மரணித்துக்கொண்டிருக்கின்றோம் என்ற வட்ஸ்அப் செய்தியொன்று கடந்த வாரம் தனக்கு அனுப்பப்பட்டதாக பிபிசியின்செய்தியாளர் அலைஸ் ஹடி தெரிவித்துள்ளார்
அவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது.
'உங்களால் எனக்கு உதவமுடியுமா?நாங்கள் காசாவில் வசிக்கின்றோம் உள்ளே மரணித்துக்கொண்டிருக்கின்றோம்நானும் எனது பிள்ளைகளும் ஏனைய சிறுவர்களும் மிக மோசமான மனிதாபிமான நிலையில் இருக்கின்றோம்"
திருக்குறள் மனனப் போட்டி – 25/05/2025
சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் பெருமையுடன் நடாத்தும் வருடாந்த திருக்குறள் மனனப் போட்டிகள் மே மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் முற்பகல் 9.00 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.
போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் வயது வரம்பும்
பிரிவுகள் |
பிறந்த திகதி விபரம் |
பாலர் ஆரம்ப பிரிவு |
01.08.2020 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள் |
பாலர் பிரிவு |
01.08.2018 க்கும் 31.07.2020 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
கீழ்ப்பிரிவு |
01.08.2016 க்கும் 31.07.2018 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
மத்தியபிரிவு |
01.08.2013 க்கும் 31.07.2016 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
மேற்பிரிவு |
01.08.2010 க்கும் 31.07.2013 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
அதிமேற்பிரிவு |
01.08.2006 க்கும் 31.07.2010 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
பங்குபற்றுவர்களின் முழுப்பெயர் மற்றும் பிறந்த திகதி ஆகிய விபரங்களை மின்னஞ்சல் மூலமாக
மே மாதம் 24ம் திகதிக்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக tikmsydney@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் போட்டிக்கான விதிமுறைகள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்