உன்னோடு நீ - கவிதை

.  


பெருங்கிளையின் சிறுமுனையில்
ஒற்றைக் குயில் மணிக்கணக்காய்

தேன்மலர்களின் நடுவே
ஊஞ்சலாடிக் கரணமடித்துக்
கூவிக் கொண்டிருந்தது கொஞ்சலாய்

ரசித்தபடி தனித்திருந்த முதியவரின்
இதழ்கடையோரம் பூத்து வழிந்தது
எதற்கோ புன்முறுவல்


தத்துவத்தின் தார்ப்பரியமும் தைப்பொங்கல் வாழ்த்துக்களும்

.

                                                                                 யசோதா.பத்மநாதன்

தமிழன் வாழ்வை வாழ்வாங்கு வாழ்ந்தது மாத்திரமல்ல பிரபஞ்சத்தின் ரகசியம் பற்றிய தேடலுக்கும் தன் வாழ் நாளில் இடம் ஒதுக்கி இருந்திருக்கிறான்.உலகம் பஞ்சபூதங்களால் ஆனது என்பதைக் கண்டறிந்தது மாத்திரமல்லாது;உடலும் அவ்வண்ணமே பஞ்சபூதங்களால் ஆனது என்பதை கண்டறிந்து சொன்னதன் காலம் தொல்காப்பியரின் காலமாகும்.மனதைக் கனக்க வைக்கும் வெள்ளக் காட்சிகள்

மனதைக் கனக்க வைக்கும் வெள்ளக் காட்சிகள்மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் 3723 குடும்பங்களைச் சேர்ந்த 14,239 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாடசாலை மற்றும் பொது இடங்களில் தங்கியிருப்பதாக மூதூர் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. இம்மக்கள் 28 முகாம்களில் தங்கியுள்ளனர்.எனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்


.;
எனது இலங்கைப் பயணம் -பகுதி 7


பாடசாலை சென்று காரை நிறுத்திவிட்டு அதிபரின் அறையை கோக்கி சென்றோம். அங்கே உப அதிபருடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது. இரண்டு இராணவத்தினர் பாடசாலைக்குள் வந்தார்கள் எமது வாகனத்தின் சாரதியை அழைத்து கதைத்தார்கள் பின் உதவி அதிபர் சென்று உரையாடிவிட்டு வந்தார் எங்களைப்பற்றிய விபரங்கள் கேட்டார்களாம் அதன் பின் எம்மோடு எதுவும் கதைக்காமலே சென்று விட்டார்கள். 300 பிள்ளைகள் படிக்கின்றார்கள் என்று அறிந்தேன். கீழ் வகுப்பொன்றில் வெள்ளை உடைகள் அணிந்த குழந்தைகள் தரையில் அமர்ந்திருந்தார்கள் அவர்களின் அருகே புத்தகப்பைகள் இருக்கின்றது நிலத்தில் கொப்பியை வைத்து எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்.

இருபதாவது ஆண்டாக பொங்கல் விழா-யாழ். எஸ்.பாஸ்கர்

.

இருபதாவது ஆண்டாகத் தைத்திருநாளுக்கு விழா எடுக்கிறது விக்ரோறியத் தமிழ்க் கலாச்சாரக் கழகம் என்ற  சாந்தினி புவனேந்திரராஜாவின் கட்டுரைக்கு பதிலாக வந்த குறிப்பை இங்கு தருகின்றோம்  

இருபதாவது ஆண்டாக பொங்கல் விழாவைக் கொண்டாடுகிறது விக்ரோறிய கலாசாரக்கழகம் என்ற இந்தச் சிறுகட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி விக்ரோறிய தமிழ் கலாசாரக் கழகத்தினரால் இவ்வருடம் கொண்டாடப்படுவது இருபதாவது பொங்கல்விழா அல்ல. உண்மையில் அது 18 ஆவதாகும்.
விக்ரோறிய தமிழ்கலாசாரக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதே 1993 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலேதான். 1994 ஆம் ஆண்டுதான் முதன்முதலாக அந்தக் கழகத்தினரால் பொங்கல்விழா ஆரம்பிக்கப்பட்டிருக்க முடியும். எனவே இவ்வாண்டு நடைபெறுவது 18 ஆவது பொங்கல்விழாவே. கட்டுரையாளர் இருபதாவது பொங்கல்விழா என்று பத்திரிகை மற்றும் இணையத்தளங்களில் எழுதுவது தவறானது மட்டுமல்ல குறிப்பிட்ட கழகத்தினரின் வரலாற்றையும் திரிபுபடுத்துவதுமாகும்.

“எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் கணவன்

.
ஒரு காலத்தில கண்ணதாசன் ஒரு பாடல் எழுத வருகிறார் என்றால் இசையமைப்பாளர், படத்தின் இயக்குநர் எல்லாம் எழுந்து நிற்பார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு இணையாக தனக்கென்று ஒரு மரியாதை கலந்த பயத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார் கவியரசர் கண்ணதாசன். ஒரு நாள் கண்ணதாசனை பாத காணிக்கை படத்தில் ஒரு பாடல் ரெக்கார்டிங்குக்கு கூப்பிட்டார்கள். கண்ணதாசன் வந்து உட்கார்ந்து பாடல் எழுத வேண்டிய சூழலைக் கேட்டார். அந்தக் காலத்தில் பாடல் எழுதிய பிறகுதான் ட்யூனை இசையமைப்பாளர் போடுவார். ஆகவே பொறுமையாக  பாடலின் சூழலைக்  கேட்டுவிட்டு கவிஞர் சொன்னார் :

சிட்னி முருகன் ஆலயத்தில் தை பொங்கல்

.
.

தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது!

.

                                                                                       நாஞ்சில்நாடன்

ஒரு புதுப் படம் வெளியானால், முதல் ஏழு நாட்கள் இருக்கையை நிரப்புபவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தானாம். உணர்ச்சிவசப்படுவதும் போராடுவதும்தான் இளைய தலைமுறையின் இயல்பே. ஆனால், இன்றோ எது நடந்தாலும் ஈரத்தில் ஊறிக்கிடக்கும் எருமையைப்போல இருக்கிறான் இளைஞன். எல்லோருக்குமே படிக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, எந்தக் குறிக்கோளும் இருப்பதாகத் தெரியவில்லை!''

ஈழத்தமிழர் கழகம் நடாத்தும் இராப்போசன விருந்து


ஈழத்தமிழர் கழகம் நடாத்தும் இராப்போசன விருந்து
23 ம் திகதி ஜனவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை


உறவியல் - மஷூக் ரஹ்மான்

.

நண்பர்களுக்கு தினமும் குட் மார்னிங் ஃ குட் நைட் SMS… நம் வீட்டாருக்கு?

சின்ன விஷயம்தான்! அதிகம் பழக்கமாகி விடுவதாலோ என்னவோ… நெருங்கிய உறவுகளிடம் பெரிய தூரத்தை ஏற்படுத்தி விடுகிறோம். ஒரே பணியிடத்திலோ அல்லது பேருந்திலோ சந்திக்கும் யாரோ நபர்களுடன் அதிகம் நெருக்கமாகும் நாம்… எப்படி ஒரே வீட்டில் இருக்கும் உறவுகளிடம்; இடைவெளி ஏற்படுத்துகிறோம் அல்லது இடைவெளி ஏற்பட்டதாக உணர்கிறோம்?

என்ன, பதில் யோசிச்சீங்களா?

அவுஸ்திரேலிய செய்திகள்

.
அவுஸ்திரேலிய குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் மீண்டும் வெள்ளப் பெருக்கு; ஒருவர் பலி

குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் புதிதாக இடம்பெற்ற வெள்ளத்தில் குறைந்தது
ஒருவர் பலியானதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.

மாநில தலைநகர் பிறிஸ்பேனின் மேற்கே யுள்ள தூவூம்பா நகரில் திடீரென பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந் நகரில் கார்களிலும் வீட்டுக் கூரைகளின் மீதும் வெளியேறமு டி யாத நிலையிலுள்ள மக்களை மீட்கும் பணி யில் மீட்புப் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பொங்கல் விழா ஏன் கொண்டாடவேண்டும் ?தந்தைபெரியார்

.


பொங்கல்’ என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை.  இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும்.
இது தமிழனுக்கே உரியதாகும்.

வாழ்வாங்கு வாழ்ந்தவர் ஜேசுரத்தினம் ..!

.
- -முல்லைஅமுதன்- 


இளவாலை என்றதுமே கல்வியாளர்கள் நினைவுக்கு வருகிறார்கள் .. இளவாலை.அமுது, தாசிசியஸ், ஜேசுரத்தினம்(1931-2010) அவர்களோடு பலரும் சேர்வர். இனம் காணப்பட்ட கலைஞர்களுள் ஜேசுரத்தினம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இளவாலை என்றதுமே கல்வியாளர்கள் நினைவுக்கு வருகிறார்கள் .. இளவாலை.அமுது, தாசிசியஸ், ஜேசுரத்தினம்(1931-2010) அவர்களோடு பலரும் சேர்வர். இனம் காணப்பட்ட கலைஞர்களுள் ஜேசுரத்தினம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அந்தக் காலத்தில் நம்மிடையே பேசப்பட்ட ஹாஷ்ய நாடகங்கள் கலைஞர்களையும் இனம் காண வைத்தன. புளுகர் பொன்னையா, புளுகர் பொன்னம்பலம், அடங்காப்பிடாரி, வெளிக்கிடடி விசுவமடுவுக்கு, இண்டைக்குச் சமைக்காதே, சந்தியில் நில்லாதே, அண்ணை றைட் என அந்தக் காலத்து நகைச் சுவை நாடகங்களை தந்திருந்த நமது கலைஞர்கள் சில சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் சொல்லி வந்துள்ளதை மறுக்கமுடியாது. 


மட்டு. மாவட்டம் வெள்ளப்பெருக்கும்

.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத் தொகை 5 இலட்சத்து 96 ஆயிரத்து 317 ஆகும். இதில் 11ஆம் திகதி காலை தெவிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 5 இலட்சத்து 5358 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் நில மட்டத்துக்கு நீர் உயர்ந்துள்ளதால் எஞ்சியுள்ள 96 ஆயிரம் பேரையும் பாதிக்கப்பட்டவர்களாகவே கொள்ளல் வேண்டும். ஆனைப்பந்தி போன்ற ஓரு இடங்கள் இந்த நிலமட்ட நீர் உயர்வுக்கு விதிவிலக்காக இருக்கலாம்.

உலகச் செய்திகள்

.
*தெருவோரம் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தவரை, வாழ்க்கையின் உச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது ஒரு 97 செக்கன் கொண்ட ஒரு யூடியூப் வீடியோ.

* ஈரானுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 78 பேர் உயிரிழந்தனர்.


ஈரானுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 78 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு (உள்ளூர் நேரப்படி இரவு 7.45 மணி) இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விமானத்தில் 11 விமான பணியாளர்கள் இருந்தனர்.


தமிழ்சினிமா

1. தென்மேற்கு பருவக்காற்று

2. பொங்கலுக்கு வருமா காவலன்?

3. நடிகை தற்கொலை...


1. தென்மேற்கு பருவக்காற்று

 ஆட்டாம் புழுக்கைகளும், காட்டாமணக்குகளும் மலிந்து கிடக்கும் தமிழ்சினிமாவில் நேர்மையாகவும், கூர்மையாகவும் ஒரு படம்! கூடல் நகரில் கோட்டை விட்டாலும், தென்மேற்கை மட்டுமல்ல, தமிழ் பேசும் அத்தனை ஊரையும் தன் வசப்படுத்தியிருக்கிறார் சீனு ராமசாமி. நமது அதிகபட்ச வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். 'இந்த படத்தை ஓட வைங்க மக்களே...'

பொங்கலோ பொங்கல்! -காவிரிமைந்தன்

.

அதிகாலைத் துயிலெழுந்து
ஏருழவன் நடப்பதனால்
பயிர்களெனும் உணவதுவும்
பாருக்குக் கிடைக்கிறது!

நீச்சல்வீரன் வல்வை ஆனந்தனின் மகன் கூகுளின் இந்தியப்பிரிவு உபதலைவர்.

.

பல கின்னஸ் சாதனைகளை படைத்து, இறுதியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்க முற்பட்டவேளை அந்த சாதனையிலேயே வீரமரணத்தை தழுவிய நீச்சல் வீரன் வல்வை ஆனந்தனின் மகனான குமார் ஆனந்தன் தனது தந்தையைப்போல சாதனையான பதவி ஒன்றில் இடம்பெற்று இவ்வார செய்திகளில் முக்கிய இடம் பிடித்துள்ளார்.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இந்தியாவிற்கான முன்னாள் முகாமைத்துவ இயக்குனரான ராஜன் ஆனந்தன் கூகுளின் இந்திய விற்பனை மற்றும் இயக்கங்களுக்கான உப தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குமார் ஆனந்தன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தவர் என்பதுடன் பல கின்னஸ் சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார்.
கூகுளானது இந்தியாவில் சுமார் 2000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவை வேகமாக வளர்ந்து வரும் ஒரு முக்கிய நாடாக இந்தியா கருதுகின்றது. இந்தியாவின் இணையப்பாவனையாளர்களின் விதம் வருடாந்தம் 50% ஆக வளர்ந்து வருகின்றது.
கூகுளில் இணைவதற்கு முன்னர் ராஜன் ஆனந்தன் மைக்ரோசொப்ட், டெல் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய தந்தையாரின் சகோதரி ரங்கா குச்சுப்பிடி நடனத்தில் பெயர்பெற்ற கலைஞராக திகழ்பவர். தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு குச்சுப்பிடி நடனத்தை கற்பித்த சிறந்த நடனக் கலைஞராவார்.

தைப்பூசம்

.