கணையாளி போடுவோம் கையின் விரலுக்கே. -வானொலி மாமா நா. மகேசன்-




திங்கள் விடியத் திறப்பேன் கணணியை
மங்களமாக விரியும் தமிழ்முரசு வலையில்
இணையத் தளத்தின் இனிய முரசு
கணைகள் பாயும் கலக்கும் செய்திகள்
படங்கள் பலநிறம் படிக்கச் சுருக்கம்
குடத்துள் விளக்கைக் கொணரும் வெளியில்
கிறுக்கன் கிறுக்குவான் கிறுக்கல் பலவிதம்
பொறுக்கலாம் பலபல புத்தி மதிகள்
நாலு ஆண்டு நம்ப முடியலை
காலச் சக்கரக் கண்ணாடி போன்று
இந்தக் காலத்து எழில் எழுத்தெல்லாம்
தந்து நிற்கும் தமிழ்முரசு அவஸ்திரேலியா
வாழ்க வாழ்க வளர்க பல்லாண்டு
சூழ்க சூழ்க சுடச்சுட எழுத்துகள்
இயக்குநர் குழுவுக்கு எங்கள் பாராட்டு
தயக்கம் இன்றித் தமிழை வளர்க்கும்
இணையத் தளத்தின் இனிய முரசுக்குக்
கணையாளி போடுவோம் கையின் விரலுக்கே.

தமிழ்மொழிபோல் வாழ்க



முத்தமிழின் சுவை மணக்கும் மூதறிஞர் பலர் வழங்கும்
எத்தனையோ துறைசார்ந்த எண்ணங்கள் நிறைந்திருக்கும்
வித்தகர்கள் வீசுகின்ற விவாதங்கள் கனல்பறக்கும்
தத்திநடை பயிலிளவல் சகலருக்கும் களம் அமைக்கும்
கொத்துமலர் போலவண்ணக் கோலம்பல கொண்டிருக்கும்;
புத்தம் புதுப்பூவாய் திங்கள்தோறும் இதழ்விரிக்கும்
கத்தும் கடல்தாண்டிக் கண்டமெல்லாம் தமிழ் பரப்பும்
அத்தனைக்கும் “தமிழ்முரசை” அன்போடு வாழ்த்துகின்றேன்.


தமிழினத் திற்கறிவூட்டும் தக்கதொரு சுடராக
தமிழ் மொழியின் சிறப்புணர்த்தும் தளராத விளக்காக
அமுதெனவே தமிழ்பருகும் ஆர்வலர்க்கு விருந்தாக
தமதறிவை, அனுபவத்தைத் தரணிக்குப் பயனாக்கும்
தமிழாய்ந்த பெரியோர்க்குத் தக்கதொரு வடிகாலாய்
அமைவுற்று நான்காவ தாண்டினிலே நடைபயின்று
இணையத்தில் வருகின்ற இன்னிதழே! தமிழ்முரசே!
எமதன்னைத் தமிழ்போல என்றென்றும் வாழியவே!!


பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


பெறிமாவில் தபசு கால யாத்திரை - சோனா பிறின்ஸ்




வழமை போன்று இவ்வருடமும் பெறிமாவில் உள்ள மரியன்னையின் தேவாலயத்தில் சிட்னித் தமிழ்க் கத்தோலிக்க ஒன்றியத்தினர் 17-3-2013 அன்று தபசு கால யாத்திரையை மேற்கொண்டனர் . காலை 10;30ற்கு வழிபாடுகள் ஆரம்பமாகின . முதலில் திருச்சிலுவைப் பாதையும் இதொடர்ந்து திருப்பலிப் பூசையும் இஅதனைத் தொடர்ந்து திருச்செபமாலைப் பவனியும் இநிறைவாக திவ்விய நற்கருணை ஆசீர்வாதமும் இடம் பெற்றன .தேவதையின் பரிந்துரையால் தேவமைந்தனின் அருளாசியைப் பெற ஆலயம் நிரம்ப திரளான மக்கள் கலந்து கொண்டார்கள் .

சிலுவைப் பாதையில் இயேசுவின் பாடுகளை மிகவும் உணர்வு பூர்வமாக நடித்துக் காட்டியிருந்தார்கள் .பெருமளவிலான இளைஞர்கள் அதில் ஆர்வத்தோடு நடித்து பக்தர்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்தார்கள் . யேசுவிற்கு மரணத் தீர்ப்பு வழங்கிவிட்டு கைகளைக் கழுவிக்கொண்டு இநழுவும் பாத்திரமான பிலாத்து அரசனின் பாத்திரத்தில் அந்தனி சாந்தகுமார் சேவியர் திறம்பட நடித்தார்

 .

சாட்சியின் மீதி? த. அகிலன்

.









‘சிலுவை யேசுவைச் சிலந்தி சூழ்ந்தது
பிள்ளையார் பலிபீடத்தில் களிம்பு படர்ந்தது
மாமர ஊஞ்சல்கள் இற்று வீழ்ந்தன
சருகடர்ந்த முற்றத்தில் பாம்புகள் ஊர்ந்தன’

சுமார் பத்து வருடங்களிற்கு முன்பு, நான் கருணாகரனைச் சந்தித்த முதலாவது நாள். கருணாகரன் இடம்பெயர்ந்திருந்த அகதி வாழ்வின் கூடாரத்தில் வைத்து “ஹம்சத்வனி”யின்  இந்த வரிகளை என்னிடம் சொன்னார். ஏதோ சின்னப்பெடியன் முதல் கவிதையை அவர் ஆசிரியராக இருந்த பத்திரிகைக்கு அனுப்பிவிட்டேன் என்ற காரணத்தினால்  அதையெல்லாம் மதித்து தன்னைச் சந்திக்கச் சொல்லியனுப்பி, சந்தித்த வேளையில் கவிதை குறித்தும், வாசிப்பின் திசைகள் குறித்த அறிமுகங்களையும் கொடுத்து, நிறையப் புத்தகங்களைத் தந்து, இலக்கிய நண்பர்களை அறிமுகப்படுத்தி இப்படியாக அன்றிலிருந்து என்னுடைய வாழ்வின் மிகமுக்கியமான மனிதராக கருணாகரன் இருக்கிறார்.

உண்மையில் நான் இந்தக்கணம் மிகவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன். என்னை இந்தத் தொகுப்புக் குறித்துப் பேச அழைத்தமைக்காக கருணாகரனுக்கும் மெலிஞ்சி முத்தனுக்கும் என்னுடைய நன்றிகள். கவிஞர் கருணாகரனுக்கும் எனக்குமான உறவு ஒரு எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் உள்ள உறவு மாத்திரமல்ல. சக படைப்பாளிகளுக்கிடையிலான உறவும் கூட அல்ல. மகனுக்கும் தந்தைக்கும் போல, இரண்டு மெய்யான நண்பர்களுக்கிடையிலானதைப்போல, அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையிலானதைப் போன்ற ஒரு உறவு. இந்தத் தொகுப்பை படித்து முடித்ததும் கருணாகரனுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். ‘அண்ணை நீங்கள் என்னுடைய வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத பாத்திரம். பல நேரங்களில் பேரன்பையும் சில நேரங்களில் எரிச்சலையும் வரவழைக்கிற பாத்திரம்’ என்று. கருணாகரனிடம் மாத்திரம் தான் அன்பையும், எரிச்சலையும் வெளிப்படையாகவே காட்டலாம். அவர் எல்லோரையும் பேதமற்று நேசிக்கிற மனிதர்.

நாலாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் உங்கள் முரசு


.
4வது ஆண்டில் காலடி வைக்கும் அவுஸ்ரேலிய மக்களின் வார இதழ் தமிழ்முரசுஒஸ்ரேலியா . com

இன்று நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும்
தமிழ்முரசு ஒஸ்ரேலியா முடிந்த வாரமான மூன்றாம் ஆண்டின் இறுதிவாரத்தில் நான்காயிரம் வாசகர்களின் பார்வையில் பட்டிருக்கின்றது என்பதை பார்த்தபோது பெருமகிழ்வாக இருந்தது. இந்த மகிழ்வின் காரணம் நாம் ஆரம்பித்த நோக்கம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது
அதனால்தான் ஒரு வாரத்தில் நான்காயிரம் வாசகர்களை பெற்றிருக்கிறது.
என்பதுதான்.
நாம் இதை ஆரம்பிக்கும்போது தமிழும் கலாசாரமும் அரசியலும் இலங்கையோடு நின்றுவிடவில்லை புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திற்கும் இருக்கின்றது அது பற்றியும் பேசப்படவேண்டும் அது பற்றியும் பகிரப்படவேண்டும். அவைபற்றி அறிய இங்குள்ள மக்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள் அவர்களுக்கான ஒரு பத்திரிகையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை முன்வைத்தபோது பலர் ஊக்குவித்தார்கள். நண்பர் கருணாசலதேவா, திருமதி மதுரா மகோதேவ், திரு சிவராசா போன்றோர் ஆவலோடு இணைந்துகொண்டார்கள் அத்தோடு இது எந்தப்பக்கமும் சாராத ஒரு பத்திரிகையாக இருக்கவேண்டும் பத்திரிகா தர்மத்திற்கு உட்பட்டு எழுதப்படும் எந்தவிடயமும் தடையின்றி பதிவுசெய்யப்பட வேண்டும் என்ற முடிவு முன்வைக்கப்பட்டு இன்றுவரை அது கடைப்பிடிக்கப்பட்டுக்கொண்டும் வருகின்றது. இருந்தாலும் சிலர் அழைத்து இந்தவிடயம் போடவில்லை உங்களுக்கு பிடிக்காது என்பதாலா என்று கேட்டும் இருந்தார்கள் அதற்கான எமது மறுமொழி எழுதி அனுப்புங்கள் போடுவோம் அது தகவலாகவோ கட்டுரையாகவோ விமர்சனமாகவோ இருக்கலாம் எல்லாவற்றையும் நாங்களே எழுதவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள் எங்களுக்கு கிடைக்கும் நேரத்துக்குள் எம்மால் முடிந்தவற்றை தருவோம் ஒவ்வொருவரும் பங்களியுங்கள்அது ஆரோக்கியமாக இருக்கும்.
ஆசிரியர்குழுவில் உள்ளவர்களைவிட எமது புகைப்பட கலைஞர்களாக பங்காற்றி வருபவர்கள் திரு ஞானி; திரு ராஜன் , திரு சோதிராஜா இவர்களோடு ஞானம் ஆட்ஸ் ஞானம் ஜயா அவரகள்.

அழி றப்பர் - எஸ் சக்திவேல்



நாலைந்து நாட்களாக மண்டை பிளக்கும் வெயில். மத்தியான வெயிலில் சன சந்தடி குறைந்துவிட்டது. சின்னப் பெடி பெட்டைகளுக்கு மட்டும் வெயில் என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. புதிதாக விழுந்த கமுக மடல் ஒன்று அவர்களிடம் அகப்பட்டுவிட்டது. கமுகம் மடலை இழுத்துக் கொண்டு இரண்டு பொடிசுகள், மடலின் அடிப்பகுதியில் மூன்றுபேர் நெருக்கியடித்துக் கொண்டு இருந்தார்கள். "பீப் பீப்" என்று சத்தமிட்டுக் கொண்டு கற்பனைக் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.ஒருவன் மட்டும் வேலிக்கரையில் நிழலில் நின்றுகொண்டு பூவரசம் இலையிற் செய்த குழலை ஆனந்தமயமாக ஊதிக்கொண்டிருந்தான். அவன் பாவனைகளும் அங்க சேஷ்டைகளும் முந்தநாள் அம்மன் கோவிற்திருவிழாவில் நாதஸ்வரம் வாசித்த வித்துவானை ஞாபகப்படுத்தியது. திடீரென வாயில் இருந்த பீப்பீக் குழலை எறிந்துவிட்டு மேளக்காரனாக மாறி விட்டான்.

"அட நாசமறுவானே வேலியை ஏண்டா தட்டுறாய்?" என்று வேலிக்கு அந்தப் புறமிருந்து கோபமான ஒரு குரல் கேட்டது. இவன் பாய்ந்து விழுந்து ஓடினாலும், அந்த அவசரத்திலும் வேலிக் கதியால்களில் இருந்து இரண்டு மூன்று கிளுவங் கொப்புகளை முறித்தெறிய மறக்கவில்லை. அந்த வீட்டிலிருந்த கிழவி கோபத்தோடு வெளியே வந்து இன்னொரு சிறுவனுக்கு திட்டத் தொடங்க அவன் தன்பங்குக்கு "ஆச்சி, பூச்சி, மதவாச்சிக் கோச்சி" என்று எதுகை மோனையுடன் நெளித்துக் காட்டி விட்டு ஓடத்தொடங்கினான். கிழவி 'தூய' செம்மொழியில் திட்டத் தொடங்கியது. அவா சொன்ன வசனங்களின் உண்மை அர்த்தம் புரிய அவனுக்கு இன்னும் பத்துப் பன்னிரண்டு வருடங்கள் கழியவேண்டியிருக்கும். தாய் மொழியில் கிழவிக்கு இருக்கும் புலமை அப்படி.

தமிழ் முரசு மூன்றாம் ஆண்டு நிறைவினை ஒட்டி‏- யசோதா

.
புதினத்துளிகளாலான கலைப்பண்பாடு
எழுத்தும் படமும்: யசோதா.பத்மநாதன்

காந்த அலைகளில் நிலைபெறும் புதிய வாழ்வியல்


சமய அனுபவம், கலை அனுபவம் என்னும் இரண்டும் ஒரே அனுபவத்திற்கு இடப்பட்ட இரு பெயர்களாகும்” என்றார் கலாயோகி. ஆனந்தகுமாரசாமி.( Dance of Shiva – p35 – 36)

கலையும் கைத்தொழிலும் எல்லா தேசங்களிலும் அவ் அவ் நாடுகளிற்குரிய சிறப்பியல்புகளோடு திகழ்வன. அக் காலத்தில் நம் தேசத்தில் எப்பொருளும் காட்சிப்பொருளாகச் செய்யப்பட்டதன்று. எல்லாப் பொருள்களும் தினசரி வாழ்க்கையில் உபயோகிக்கவே செய்யப்பட்டன. ஒவ்வொரு பொருளிலும் உபயோகத்தன்மையும் அழகும் ஒன்றுபட்டு விளங்கின. கைவினைஞர்கள் ஒழுக்கமான வாழ்க்கையாலும் சிற்பநூல் புலமையாலும் சமயப்பற்றினாலும் பண்படுத்தப்பட்ட தமது உள்ளங்களில் தாம் எழுதிக் கண்ட அழகு பொருந்திய உருவங்களையே வெளிப்பொருள்களில் அமைத்து மகிழ்ந்தனர். அக்கால கைவினைஞர் தாம் அமைக்கும் வடிவங்களுடன் தம்மை ஒன்றுபடுத்தி நின்றே அவற்றைத் திறம்பட அமைத்தனர் என்பது கலைக்கண் கொண்டு அப் பொருள்களைக் கண்ணுறுவோருக்கு நன்கு புலனாகும்.

உலகச் செய்திகள்

போருக்குத் தயார்!: அமெரிக்கா மீது வடகொரியா எந்நேரமும் தாக்கலாம்?


சவூதியில் ஸ்கைப் உட்பட இணைய சேவைகளுக்கு தடை


கிளர்ச்சியாளர் வசமிருந்த முக்கிய நகர் சிரிய துருப்புகளிடம் வீழ்ந்தது
மியன்மார் இனக்கலவரத்தால் மேலும் 3 நகரங்களில் ஊரடங்கு

===================================================================

போருக்குத் தயார்!: அமெரிக்கா மீது வடகொரியா எந்நேரமும் தாக்கலாம்?


26/03/2013 வடகொரியா தனது ஆட்டிலறி மற்றும் நீண்ட, குறுந்தூர ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் எனவே எந்நேரத்திலும் அமெரிக்க இலக்குகளை தாக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தை உஷார் நிலைக்கு கொண்டுவரும் படி அந்நாட்டின் இராணுவ உயர் பீடத்திலிருந்து கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
http://www.virakesari.lk/image_article/potd-north-korea-2_2519720b.jpg
ஆசியாவில் உள்ள அமெரிக்க இலக்குகள், தென்கொரியா, அமெரிக்கா மற்றும் அதன் இராணுவத்தளங்களான குஹாம், ஹவாய் மீது தாக்குதல் நடத்தும் பொருட்டு  வடகொரியா தனது ஏவுகணைகளை தயாராக வைத்துள்ளதாக  உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.


வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு – 58 திருவை வைத்துக்கொள்வோம்.

.


ஞானா: அப்பா…..அப்பா…..எங்கடை ஆக்களின்ரை பெயர்களைச் சொல்லேக்கை திரு. திருமதி அடைமொழி வைச்சுச் சொல்லிறது ஏனப்பா?

அப்பா: அதுவந்து ஞானா….ஒரு மரியாதைக்குச் சொல்லிறது. அதாவது ஆக்களைப் பெருமைப் படுத்தச் சொல்லிற வழக்கம் எண்டுதான் நான் நினைகிறன்.

ஞானா: அப்பிடி எண்டால் அப்பா…எங்கடை ஆக்களிலை கனபேருக்கு இந்த அடைமொழி பொருந்தாதெல்லே.

சுந்தரி: அதெப்பிடி நீசொல்லுவாய் ஞானா?

அப்பா: வாரும் சுந்தரி….இன்டைக்கு நீர்தான் இவள் பிள்ளை ஞானாவின்ரை குறும்பக்குப் பதில் சொல்ல வேணும்.

ஞானா: ஆர்சொன்னாலும் எனக்கு பறவாயில்லை. எங்கடை ஆக்கள் மட்டுமில்லை உலகத்திலை உள்ள கனபேருக்கு இந்தத் திரு எண்ட அடைமொழி பொருந்தாது எண்டு திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 121வது ஜனன தினம்




முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 121வது ஜனன தினம்  27.03.2013 புதன்கிழமை

அதனையொட்டி இவ்வாய்வுக் கட்டுரை பிரசுரமாகிறது.
சுவாமி விபுலானந்தர் எப்போது பிறந்தார்?
ஆய்வுக்கட்டுரை

அகிலம் போற்றும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் காரைதீவு மண்ணில் பிறந்து 121 வருடங்களாகின்றன. கிட்டத்தட்ட நூற்றுஇருபது வருடங்களைக் கடந்த ஒரு பெருமகனின் பிறந்த நாளை துல்லியமாக அறியமுடியாத எமது வரலாற்று ஆய்வாள்hகள் எப்படி பல நூறு அல்லது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறுகளை அறிவார்கள்?;. இது உண்மையுள்ள ஆய்வாள்hகளின் வினாவாகும். இதற்கு விடையளிப்பதே இதன் நோக்கமாகும்.

சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றி இதுவரை வந்த நூற்றுக்கணக்கான நூல்களில் அவரது பிறப்பு பற்றி தமிழ் திகதி தொடர்பில் எந்தவொரு மாறுபாடான தகவலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
அதாவது சுவாமிகள் 1892 கர வருடம் பங்குனித்திங்கள் 16ஆந் திகதி, ஞாயிற்றுக்கிழமை உதயத்தில் ப+ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை
இந்த தமிழ் திகதிக்கான ஆங்கிலத்திகதியை பெறுவதில் பலர் தவறுவிட்டிருக்கின்றார்கள். இம்மண்ணிலிருந்து வெளிவந்த அடிகளார் படிவமலர் கூட தவறு விட்டிருக்கிறது. அதில் அடிகளார் 26,27,28,29ஆந் திகதிகளில் பிறந்ததாக வௌ;வேறு கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் நான்கு தினங்களில் பிறக்க முடியுமா? இல்லை.
சுவாமிகளின் நூற்றாண்டை ஒட்டி என்னால் தொகுக்கப்பட்ட அடிகளார் நினைவாலய மலரில் சரியான திகதி தொடர்ந்து பேணப்பட்டு வந்தமை இவ்வண் சுட்டிக்காட்டப்படுதல் 
பொருத்தமாகும்.
இலங்கையில் முதன்முதல் வாக்கிய பஞ்சாங்கம் வெளிவந்த ஆண்டு 1892 ஆகும். யாழ்ப்பாணம் கொக்குவிலை சேர்ந்த சந். இரகுநாதையவர்களால் கணிக்கப்பட்டது. அதே ஆண்டிலேதான் சுவாமி விபுலானந்தரும் பிறந்தார்.

மகாஜனக் கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் செய்தி



தகவல் பெட்டகங்களாய் இரண்டு தமிழ் நூல்கள்

அறிவியல் தகவல்களையும் சரித்திரப் பதிவுகளையும் இலக்கியமாய்க் குழைத்தெடுத்துத் தமிழில் படைக்கப்பட்டிருக்கும் இரண்டு தமிழ் நூல்களின் அறிமுக விழா மார்ச் மாதம் பதினாறாம் திகதியன்று சிட்னியில் நடைபெற்றது. முன்னைநாள் மகாஜனக் கல்லூரி அதிபரும் தற்போது கனடாவில் வதிபவருமான திரு பொ கனகசபாபதி அவர்கள் எழுதிய 'எம்மை வாழ வைத்தவர்கள்' மற்றும் 'மரம் மாந்தர் மிருகம்' என்ற நூல்களின் அறிமுகம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைநகர் பிராந்தியக் கிளையினரால் ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரப் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்து திருமணச் சடங்கின்போது அறுகரிசியிடல்









மங்கல நிகழ்வுகளில் அட்சதை தூவி வாழ்த்தும் வழக்கம் நம்மவரிடையே காணப்படுகின்றது. அட்சதை என்றால் குற்றப்படாததும், பழுதுபடாததுமான (நுனி முறியாத) அரிசி, மஞ்சட் பொடி, மலர்கள் என்பவற்றைச் சேர்த்த கலவை என்பர். அட்சதை என்ற வடமொழிச் சொல்லை ‘அறுகரிசி’ எனவும் அழைக்கின்றனர்.
கன்னிகா தானம், தாலிகட்டுதல், ஆசீர்வாதம் ஆகிய முக்கிய நிகழ்வுகளின் போது அட்சதை இட்டு வாழ்த்துவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. எனினும், ஆசீர்வாதத்தின் போதே பலரும் அட்சதை தூவி வாழ்த்துவதற்கான சந்தர்ப்பத்தைப் பெறுகின்றனர். முழுமைத்துவத்தின் குறியீடாக அட்சதை அமைகின்றது. அரிசியில் உள்ள முனை சந்ததி விருத்தியைக் குறிக்கின்றது. முழுப் பச்சை அரிசி செழிப்பிற்கான குறியீடு ஆகும். மஞ்சள் மங்கலத்தின் வெளிப்பாடு. அறுகு வம்ச விருத்தியின் குறியீடு. ஆனால், தற்காலத்தில் அழகுக்கு முதன்மை வழங்க வேண்டும் என்பதற்காக வெள்ளை அரிசிக்கு மஞ்சள் நிறச் சாயம் பூசி அட்சதையாகப் பயன்படுத்தும் பரிதாப நிலையையும் சில திருமணச் சடங்குகளில் காணமுடிகின்றது.

சங்க காலத்தில்...
திருமண நடைமுறைகள் காலத்திற்குக் காலம் வேறுபட்டு வந்தாலும் சங்க காலத்தில் நெல்லும் மலரும் தூவி ஆசீர்வதிக்கும் நடைமுறை காணப்பட்டிருக்கின்றது. தற்போது எம்மவர் திருமணங்களில் தாலி கட்டுதலே முக்கிய நிகழ்வு. சங்க காலத் திருமணங்களில் தலைவன், தலைவியின் கூந்தலில் பூச்சூடுதலே முக்கிய நிகழ்வு. இதன்பின் வாழ்த்து நடைபெறும்.

இலங்கைச் செய்திகள்


'சிங்களவர்களே விழிப்பாக இருப்போம்' கண்டியில் துண்டுபிரசுரங்கள்

ஆஸி. செல்ல முயற்சித்த 40 சிறுவர்கள் உட்பட 97 பேர் கைது

இலங்கையர் மீதான வன்முறைகள் அதிகரித்தால் இங்குள்ள தமிழகத்தவர்களை விரட்டியடிப்போம்

காலத்தை இழுத்தடிக்கும் தந்திரமாக இருக்கக்கூடாது

வன்னித் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுமா?



=======================================================================

'சிங்களவர்களே விழிப்பாக இருப்போம்' கண்டியில் துண்டுபிரசுரங்கள்


27/03/2013 கண்டி, மடவளை மற்றும் வத்துகாமம் பகுதிகளில் 'சிங்களவர்களே விழிப்பாக இருப்போம்' என்ற தலைப்பில் துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

'சிங்கள தேசத்தின் உண்மையான உரிமையாளர்கள்' என்ற அமைப்பு (சிங்களயே செபே உரிமக்காரயோ) இந்த துண்டு பிரசுரங்களை வழங்கியுள்ளது. அதன் விபரம் வருமாறு,

சிங்களவர்களே விழிப்பாக இருப்போம்!

தமிழ் சினிமா

onbadhula-guru-poster
"இளைய தளபதி விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார், இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் "ஒன்பதுல குரு".வினய், சத்யன், அரவிந்த் ஆகாஷ், சாம்ஸ், பிரேம்ஜி ஐவரும் கல்லூரி நண்பர்கள். கல்லூரி காலம் முடிந்து இந்த ஐவரில் வினயக்கு ஒரு குண்டு பெண்ணுடன் கட்டாய திருமணமும், சத்யனுக்கு வசதியான வீட்டோடு மருமகன் எனும் அடிமை வாழ்க்கையும், அரவிந்த் ஆகாஷ்க்கு காதல் திருமணம் என்றாலும் கசக்கும் திருமணவாழ்க்கையாகவும் அமைந்து விட, மூவரும் இல்லற வாழ்க்கையை வெறுத்து மீண்டும் பேச்சுலர் ஆகும் முடிவோடு வீட்டை விட்டு பெங்களூர் ஓடுகின்றனர். போகும்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும் தங்கள் நண்பன் சாம்ஸையும் கூட்டிக் கொண்டு, பெங்களூருவில் காஸ்ட்லியான கள்ளக்காதல் வாழ்க்கை நடத்தும் பிரேம்ஜியின் தயவில் ஜாகையும், வேலையும் தேடிக்கொண்டு ஜாலி வாழ்க்கை வாழ்கின்றனர்.
Onbadhula-Guru-First-Lookஇவர்களின் ஜாலி புத்தியை தெரிந்து கொண்டு அழகி லட்சுமிராய், நால்வரையும் மிரட்டி கடத்தி கோடிக்கணக்கில் பணம் பறிக்கிறார். அவரிடமிருந்து தப்பித்தால் போதுமென்று எஸ்கேப் ஆகும் நால்வரும், இல்லறமே இனிய அறம் என்று மீண்டும் தங்களது மனைவிமார்களைத் தேடி வருவதே "ஒன்பதுல குரு படத்தின் ஒட்டுமொத்த கதை! இந்த ஐந்தாறு வரிக் கதையை காமெடியாக எடுக்கிறேன் பேர்வழி... என ஆங்காங்கே கடித்தாலும், பெருவாரியாக சிரிக்கும் படியும், ரசிக்கும்படியும் எடுத்து ஜெயித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பி.டி.செல்வகுமார் என்பது ஆறுதல்!
வினய், சத்யன், அரவிந்த், சாம்ஸ், பி‌ரேம்ஜி ஐவருக்குமே சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மெய்யாலுமே ஹீரோ வினய்க்கு ‌பெரிய மனசுதாங்க... அந்த குண்டுப்பெண் கீதாசிங் ஜோடியாக நடிக்க சம்மதித்தற்காகவும், மேற்படி ஐவரில் ஒருவராக நடித்ததற்காகவும் வினய்யை பாராட்டலாம்!
பெங்களூர் அழகி சஞ்ஜனவாக வரும் லட்சுமிராய்யும், குமுது டீச்சராக வரும் சோனாவும், கவர்ச்சி ப்ளஸ். ஆனால் லட்சுமிராய் திடீரென்று நால்வரிடமும் துப்பாக்கியை காட்டி மிரட்டுவது நம்பமுடியாத ஹம்பக்! கீதாசிங், கார்த்திகாஷெட்டி, ரூபாஸ்ரீ மூவரும் ஓ.கே. சத்யனின் மாமியாராக மாஜி நாயகி மந்த்ராவா ஓவரப்பா!
"கேவின் இசையில் எக்கச்சக்க பழைய பாடல்கள் இப்படத்தின் கதையில் சிட்சுவேஷனுக்காக என்றாலும் டூமச்! சாரி, பெட்டர்லக் நெக்ஸ்ட்டைம்! செல்லதுரையின் ஒளிப்பதிவும், கே.எஸ்.ரவிக்குமார், டி.பி.கஜேந்திரன் உள்ளிட்ட இயக்குநர்களின் பங்களிப்பும் படத்தின் பெரும்பலம்!
பி.டி.செல்வகுமாரின் எழுத்து, இயக்கத்தில் கோர்வையாக கதை சொல்லப்படாவிட்டாலும், "ஒன்பதுல குரு", ஒன்பதுல குருவாக இல்லாவிட்டாலும் ஏழ‌ரைச்சனியாக இல்லாதது ஆறுதல்!
நன்றி தினக்குரல்