நியூசிலாந்தில் பாரிய நில நடுக்கம்

.
.
நியூசிலாந்தின் மூன்றாவது பெரிய நகரமான கிறைஸ்சேர்ச் நகரில் சனிக்கிழமை அதிகாலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.  சுமார் 7 தொடக்கம் 7.4 ரிக்டர் அளவுகளில் இந்த அதிர்வு பதிவாகியுள்ளது.  இந்த அதிர்வினால் பல கட்டடங்கள் இடிந்து நாசமாகியுள்ளதோடு ஒரு சிலர் பாரிய காயங்களுக்கும் உளளாகியிருக்கின்றனர்


அகிலன் கவிதை

.


.

துவக்குகளின் நிழல்களிலிருந்து
  தப்பித்தேயாக வேண்டும்



அவனைத் துவக்குகள்
ஒரு நாள் மறித்தன
அவனுக்காக தாங்கள் காத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லின
அவன் புத்தகங்களும்
அதையேதான் சொன்னதாய்ச் சொன்னான்
தங்களைப் பற்றியும்
புத்தகங்கள் இருப்பதாய் துவக்குகள் சொல்லின
என் எட்டாம் வகுப்பு புத்தகத்தில்
உங்களைப் பற்றி இல்லையே என்றான் அவன்..
‘சரி சரி போ போ’
அவனை அனுமதித்தன துவக்குகள்

புராதன இலங்கையில் பௌத்த பிக்குகளும் பௌத்த சங்கமும் - பாகம் 03 - சாந்தினி அருளானந்தம் யாழ் பல்கலைக்கழகம்

.

பௌத்தர்களின் வழிபாட்டு மையமாக தூபிகளும், விகாரைகளும் விளங்குகின்றன. சிறப்பாகத் தூபி வழிபாட்டு இடமாகவும், விகாரை பௌத்த துறவிகள் தங்குகின்ற இடமாகவும், கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் மையமாகவும் காணப்படுகின்றது.


நல்லூர் கந்தன் ஆலய 15ம் திருவிழா

.



]

மறைமலையடிகளார் மாண்பு



 .  
                                                மா.க ஈழவேந்தன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் - இலங்கை

னித்தமிழ் இயங்கங் கண்ட தந்தை மறைமலை அடிகள்... தமிழக மண்ணில் 15-07-1876; விண்ணில் - 15-09-1950.
   
15-09-1909ல் அறிஞர் அண்ணா தோன்றினார். 15-09-1950ல் மறைமலை அடிகள் மறைந்தார்.  இவ்விரு பெருமக்களின் தோற்றமும் மறைவும் செப்டம்பர் 15ல் நடைபெற்றுள்ளதால் இந்நாள் பெருமை பெற்ற நாளாக விளங்குகின்றது. எனவே மறைந்தமலை அடிகளைப்பற்றி இதே நாளில் பிறந்த அறிஞர் அண்ணா கூறுவதை முதலில் நினைத்துப்பார்த்து மகிழ்வு கூறுவோமாக:

காதலனும்..சந்தேகக் காதலியும்...கொஞ்சி விளையாடும் தமிழ்

.
சந்தேகம் ...தன்னைத்தானே நம்பாதது சந்தேகம்..அதுவும்..காதலன்பால்..காதலிக்கு வந்துவிட்டால்...

தன்னைத்தவிர அவனை வேறு யாரும் ஏறெடுத்துப் பார்க்கக்கூடாது என்ற 'பொசசிவ்னஸ்' உள்ள காதலியாய் விட்டால்..அவனது நிலை திண்டாட்டம்தான்..

காதலனை பெண்களெல்லாம் கண்ணால் கண்டு ரசிக்கின்றனர்..அவன் பரந்த மார்பை கண்களாலேயே உண்கின்றனர்..இதை காதலி பார்த்துவிட்டாள்..கோபம் தலைக்கேறுகிறது..காதலனைப் பார்த்து..இனி நான் உன்னைத் தழுவ மாட்டேன்..நீ கற்பு நெறி கெட்டவன் என்கிறாள்..அவனிடம் ஊடல் கொள்கிறாள்.

விக்ரோரியா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிப்பு

.

15 வருடங்களில் ஏற்படாத அடை மழையினால் கிறெஸ்விக் குலுனெஸ் பலெனியா போன்ற இடங்களில்  வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  200க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.





நான்கு குமாரர்கள்

      .
                              
ஹரே கிருஷ்ணா! மீண்டும் இந்த வாரம் உங்களை சந்திப்பதில்  மிக்க மகிழ்ச்சி.
சென்ற வாரம் பகவானின்  திரு அவதார சிறப்பை பார்த்தோம், இந்த வாரம்  அவர் பக்தரும்  பிரஹ்மாவின் மைந்தர்களான 4 குமாரர்கள் பற்றி காண்போம்.
ஆதியில் உலகம் உருவாகும் போது பிரஹ்மா நிறைய குழந்தைகளை சிருஷ்டி செய்தார். அவர்களை உலகில் மக்கள் தொகையை பெருக்க கட்டளை  இட்டார். 

பிரதமர் ஜூலியா கில்லார்ட் ஸ்தி ரமான அரசாங்கமொன்றை ஸ்தாபிக்கும் சாத்தியமுள்ளதாக தெவித்தார்.

.


பிரதமர் ஜூலியா கில்லார்ட்டுக்கு ஆதரவளிக்க 4 சுயேட்சை பாராளுமன்ற உறப்பினர்களில் ஒருவரான அன்ட் வில்கி முன்வந்துள்ளார்.


தஸ்மானியாவின் டெனிஸன் பிராந்தியத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினரான அன்ட் வில்கி,  ஜூலியா கில்லார்ட்டின் தொழிற் கட்சியானது ஸ்திரமான அரசாங்கமொன்றை ஸ்தாபிக்கும் சாத் தியமுள்ளதாக தெவித்தார்.



இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் - பாகம் 04

.


நாகர்களுக்கும் தென்னிந்தியாவில் வழங்கி இலங்கையிற் பரவிய பெரும் கற்படைப் பண்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று கருதப்படுகிறது. இலங்கை வரலாற்றில் பெரும் கற்படைக் காலப் பண்பாடு பரவியதன் விளைவாக நாகரீக வளர்ச்சி ஆரம்பமாகியது.


இந்தப் பண்பாட்டின் செல்வாக்கு கிறிஸ்துவுக்கு முன் 5ஆம் நூற்றாண்டளவில் ஏற்பட்டது எனக்கருதலாம். பெரும் கற்படைக் கால பண்பாடு என்பது தென்னிந்தியாவில் கி.மு. ஆயிரமாம் ஆண்டளவில் ஆரம்பமாகிப் பரவியதொன்றாகும்.


சந்திரமுகி பாகம்-2-ல் தல அஜீத் நடிக்கிறார்


.


அஜீத்தும் ரஜினியும் மிக நெருக்கமானவர்கள் என்பது திரையுலகத்திற்கு மட்டுமல்ல, சாதாரண ரசிகர்களுக்குகூட தெரியும். ரஜினி சொன்னால் அஜீத் கேட்பார், அது எதுவாக இருந்தாலும்!

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய திருவிழா நிறைவு

.
வரலாற்றுப் புகழ் மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்  23-08-2010ம்  திகதி காலை 5 புஸ்கரணி தீர்த்தக்கேணியில் 8.45; மணிக்கு இடம் பெற்றது. இந் நிகழ்வில் யாழ குடாநாட்டின பல பகுதிகளில் இருந்தும் அடியவாகள் கலந்து கொண்டார்கள் வைரவர் பொங்கலுடன் வருடாந்த திருவிழா நிகழ்வுகள் நிறைவு பெற்றன.


இலங்கை அகதிகள் வரவு குறைந்தது

.
 இலங்கையிலிருந்து குடியுரிமை கோரி, அவுஸ்திரேலியா வரும் அகதிகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து மாதங்களாகக் கணிசமான அளவு குறைந்துள்ளது. எனவே குடியுரிமை கோரும் அகதிகளின் விண்ணப்பங்களைப் பரீசீலனை செய்வதை நிறுத்துவதற்கு முடிவெடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 9ஆம் திகதியிலிருந்து அவுஸ்திரேலியாவை வந்தடைந்த 49 படகுகளில் மூன்று படகுகள் இலங்கையிலிருந்து வந்தவை. இது குறித்த பரீசீலனை ஜூலை மாதம் தொடங்கியது. இதன் பிறகு இலங்கையிலிருந்து எந்தப் படகும் அவுஸ்திரேலியா வரவில்லை.