கடிகாரத்திலிருந்து உதிரும் காலம் - கவிதை


.

ஆடையின் நூலிழைகளைக்
காற்றசைத்துப் பார்க்கும் காலம்
பட்டுத் தெறிக்கும் வெளிச்சப் புள்ளியில்
துளித் துளியாய் திணறும்

ஓவியம் தீட்டும்
தூரத்து மின்னல்
ஆகாயம் கிழித்துக் குமுறிட
அதிவேக விலங்கொன்றென
மழை கொட்டும் பொழுதொன்றில்
வனாந்தரங்களைத் திசைமாற்றவென
எத்தனிக்கும் அதே காற்று

செட்டைகளைத் தூக்கி நகரும்
வண்ணத்துப் பூச்சிக்கு
ஏரி முழுவதும் குடித்திடும் தாகம்

ஷோபா ஜெயமோகனின் இசை அரங்கம் என் பார்வையில் .....


                                    கலா ஜீவகுமார் 

ஷோபா ஜெயமோகனின் இசை அரங்கேற்றம் சென்ற சனிக் கிழமை 10 /03 /12  Hill centre இல் இடம் பெற்றது. அந் நிகழ்விற்கு செல்லும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது . இசையை முறையாகப் பயிலா விட்டாலும் இசையை ரசிக்கும் ஓர் ரசிகையாக இந்த விமர்சனத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
Hill centre இற்கு அருகில் இருந்த காரணத்தால் மாலை 6 மணிக்கே வீட்டில் இருந்து புறப்பட்டு 6 . 15 இற்கு மண்டபத்தினுள் நுழையும் போதே மண்டபம் முற்று முழுதாக மக்கள் திரளால் நிறைந்து காணப்பட்டது. 

மகளிர் தினம் = களியாட்டவிழா - செ .பாஸ்கரன்


.
101 வது மகளிர் தினம் சென்றவாரம் உலகமெல்லாம் கொண்டாடப்பட்டது. பல வடிவங்களையும் பல பரிமாணங்களையும் பெற்று இன்று அமரிக்காவின் ஆசீர்வாதத்துடன் ஒரு களியாட்ட விழாவாக இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட வேலை நேரத்திற்காகவும் பெண்களின் உரிமைக்காகவும் ஒரு சில பெண்கள் வீதியில் இறங்கி போராட தொடங்கிய முதற்புள்ளி தொடர்ந்து உலகமெல்லாம் உள்ள போராட்ட குணம்கொண்ட பெண்களால் தொடரப்பட்டது. அதற்கான பலன்களும் நிட்சயமாக மேற்கத்தைய நாடுகளில் அந்தப் பெண்களுக்கு கிடைக்கப்பெற்றது மறுக்கப்பட முடியாத உண்மை.

பெண்: சில சந்தேகங்கள், சில கேள்விகள் - மணிமேகலா


    .
     பெண்: சில சந்தேகங்கள்இ சில கேள்விகள் – தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்!


இங்குள்ள தொலைக்காட்சியில் சில காலங்களுக்கு முன்னால் ஒரு விளம்பரம் ஒன்று ஒளிபரப்பாயிற்று.2,3 வயதளவான பெண் குழந்தை ஒன்று சுயாதீனமாகத் தாயின் அறைக்குச் சென்று முக ஒப்பனைப் பொருட்களைப் பார்த்து தேர்ந்தெடுத்து தன்னை ஒப்பனை செய்து கொள்கிறது.சம வயதான காரை வைத்து விளையாடிக்கொண்டிருந்த பையன் அவளைப் பார்த்து விட்டு இயல்பாக அவனது கார் கைநழுவிப் போக அப்பெண்குழந்தையைப் பார்த்துக் கொண்டு நிற்கிறது.முதல் காதல் என்ற படி முடிகிறது முக ஒப்பனை ஒன்றுக்கான விளம்பரம்.

மதுரகீதம் 2012 -17th Mar

.

யுத்தத்தில் காணாமற் போன மற்றொன்று


.
- கருணாகரன்
mullivaikal-1யாரின் மீதும் நம்பிக்கை வைக்க முடியாத காலமொன்று எங்களின் வாழ்வில் வந்திருந்தது. அப்பொழுது நண்பர்கள் சந்தேகிக்கப்பட்டனர். அல்லது நம்புவதற்கு கடினமான ஒரு நிலையில் தெரிந்தனர். நண்பர்களிடம் நான் சந்தேகத்துக்குரியவனாக இருந்தேன். நானும் நண்பர்களைச் சந்தேகித்தேன். அயலவர்கள் ஒருவரையொருவர் சந்தேகித்தனர். அண்ணன் தம்பியைச் சந்தேகித்தான். தம்பி அண்ணனைச் சந்தேகித்தான். அக்காவைச் சந்தேகித்தாள் தங்கை. பெற்றோரைப் பிள்ளைகளும் பிள்ளைகளைப் பெற்றோரும் சந்தேகித்தார்கள். இந்த நிலை வளர்ந்து சனங்கள் இயக்கத்தைச் சந்தேகித்தனர். இயக்கம் சனங்களைச் சந்தேகித்தது. இறுதியில் இயக்கமே இயக்கத்தைச் சந்தேகித்தது. (போராளிகளே போராளிகளைச் சந்தேகித்தனர்). இப்படி எல்லோரையும் சந்தேகிக்கும் விதி ஒரு மாபெரும் வலையாக அப்பொழுது எல்லோரின் மீதும் விழுந்திருந்தது.
இது வெட்கந்தான். ஆனால், அன்றைய சூழலில் இதுதான் நிலைமை.

இசை வேள்வி 17 .03.12 Sat

.உலகச் செய்திகள்

ஆப்கானில் பனிப்பாறைகள் சரிந்து வீழந்ததில் 42 பேர் உயிரிழப்பு; பலரைக் காணவில்லை


உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி வீட்டுக் கதவில் பிடியாணை ஒட்டப்பட்டுள்ளது


ரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புட்டின் வெற்றி


சர்வாதிகாரி பஷார் அல் அஸாத் வீழ்ச்சியடைவார்: ஒபாமா


ஆப்கானில் பனிப்பாறைகள் சரிந்து வீழந்ததில் 42 பேர் உயிரிழப்பு; பலரைக் காணவில்லை

Thursday, 08 March 2012
ஆப்கானிஸ்தானிலுள்ள படகஸானின் வட, கிழக்கு மாகாணத்தில் பனிப்பாறை சரிந்து வீழ்ந்ததில் 42 பேர் பலியாகியுள்ள அதேவேளை பலர் காணாமல் போயுள்ளனர். தாஜிகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்தது. ஷிகே மாவட்டத்திலுள்ள கிராமத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடையலாம் என அச்சம் கொண்டுள்ளதாக ஆளுநர் அலுவலகப் பேச்சாளர் பி.பி.சிக்கு தெரிவித்தார்.

சிட்னியில் நூல் வெளியீட்டு விழா 18.03.12 Sun


.


பாடும்மீன் சு ஸ்ரீகந்தராசாவின்

சங்ககாலங்களும்

சங்க இலக்கியங்களும்


SANKAM PERIOD
AND
SANKAM LITERATURE

செஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்

உரைச்சித்திரம் (இறுவெட்டு)

வெளியீடு

துர்க்கை அம்மன் கோயிலில் புனித தீர்த்தத் திருவிழா!


 

 .                        
துர்க்கை அம்மன் கோயிலில் நடந்தேறிய மாசி மகம் புனித தீர்த்தத் திருவிழா!

                      வைத்தியகலாநிதி இளமுருகனார் பாரதி.

சோதிடப்படி 11 ஆம் இராசியாகிய கும்பராசியில் சூரியபகவான் சஞ்சாரஞ்செய்யும் மாதம் மாசிமாதம். இந்த மாதத்தில் கும்பராசியின் எதிர் இராசியாகிய சிங்கராசியில் (சூரியனுடைய வீட்டில்) சந்திரன் சஞ்சாரஞ்செய்யும் நட்சத்திரங்கள் மகம் பூரம் உத்திரம்(முற்பகுதி); ஆவனவாகும். சந்திரனைவைத்துச் சூரியன் திருஸ்டிக்கும் காலம் பூரணை நாள்களாகக் கருதப்படுகின்றன.
இதில் பிரதானமாக மகம் நட்சத்திரம் என்பது துர்க்கைக்கு உரிய சிறந்த நட்சத்திரமாகக் கருதப்படுவதால் மாசி மகம் உலகிலுள்ள எல்லா அம்மன்கோயில்களிலும் முக்கியமாகத் துர்க்கையம்மன் கோயில்களிலும் விசேட தீர்த்தத் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
சிட்;னி – “றீஜன் பார்க்”கில் எழுந்தருளியிருக்கும் சிறீ துர்க்கை அம்மன் கோயில் மகோற்சவம் சென்ற மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை மிகவுஞ் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்ததை எல்லோரும் அறிவீர்கள். மார்ச் மாதம் 7ஆம் திகதி புதன்கிழமை மாசி மகம் புனித தீர்த்தத் திருவிழா அம்மன் திருவருளால் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.


சைவ மன்றம் வழங்கும் பரதநாட்டியம் 18 Mar 2012


நன்றி. வணக்கம். -சிறுகதை - கே.எஸ்.சுதாகர் -

.

மெல்பேர்ணில் தமிழ்ப்பாடசாலைகள் களை கட்டத் தொடங்கின. இந்தத் தடவை பேச்சுப்போட்டிக்குரிய விடயதானத்தை மாணவர்களும் பெற்றோரும் தெரிவு செய்யலாம் என்று நிர்வாகத்தினர் சொல்லியிருந்தார்கள். இந்த மாற்றம் மோகனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஒவ்வொரு தடவையும் பாரதியார், திருவள்ளுவர், நாவலர் என்று நிர்வாகம் எழுதிக் கொடுத்ததை - மாணவர்கள் ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ எழுதி ஒப்புவிப்பார்கள். ஒவ்வொரு வருடமும் இரண்டாவது அல்லது மூன்றாவதாக வரும் மகனை இந்தத்தடவை முதல் ஸ்தானத்திற்கு உயர்த்தி விடலாம். புரட்சிகரமான வசனங்களாக எழுதி புழுதி கிழப்பிவிட வேண்டும். எழுத்தும் இயக்கமும் - மோகன்; பேச்சு விமேஷ் என்றாள் மனைவி வேணி.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்வைத்தது அமெரிக்கா

.


8/3/2012

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா நேற்று அதிகாரபூர்வமாக முன்வைத்துள்ளது.

இந்தத் தீர்மானத்தில்:

1. இலங்கை அரசு நடத்திய விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்.

2. அதற்கான திட்டம் மற்றும் கால அட்டவணையைக் கூற வேண்டும்.

3. ஐ.நா. மனித உரிமை ஆணையம் இதனைக் கண்காணித்து, ஐ.நா மனித உரிமைக்குழுவின் 22 ஆவது கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கை அரசு நடத்திய விசாரணைக் குழுவின் விசாரணை முழுமையானது அல்ல என்கிற கவலையையும் இந்தத் தீர்மானம் உள்ளடக்கியதாக இருக்கிறது.
நன்றி வீரகேசரி

இலங்கைச் செய்திகள்

.
நெடுந்தீவில் மாணவி படுகொலை; அரசியல் பிரமுகர் கைது : மக்கள் ஆர்ப்பாட்டம்!


யாழ்ப்பாணத்தில் பாலியல் ரீதியாக சிறுவர்கள் துஷ்பிரயோகம் அதிகரிப்பு


'பெண்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்' : மகளிர் தின சிறப்புக் கட்டுரை


தமிழ்க் கூட்டமைப்பினை பிளவுபடுத்தி உறுப்பினர்களை உள்வாங்க அரசு முயற்சி

நெடுந்தீவில் பாடசாலை மாணவி ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் அரசியல் பிரமுகர் ஒருவர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நெடுந்தீவில் பருவமடையாத மேற்படி பாடசாலை மாணவியைக் கொடூரமாகப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சிட்னியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா மகா சமாதி ஒராண்டு நினைவு தினம்
மனப்பூங்கா - நிகழ்வு பற்றிய பார்வை - யசோ

 .


25.02.2012 அன்று மாலை வேளை பரமற்ரா பூங்காவில் இலக்கியம் பேச பகிர கூடுவதாக ஏற்பாடு.எனக்குத் தெரிந்த மிகச் சிறு நண்பர் கூட்டத்துக்கு மட்டும் அழைப்பிதழை அனுப்பி இருந்தேன்.

இப்படி ஒரு நிகழ்ச்சியைச் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆவல்.The poet என்ற திரைப்படத்தை SBS தொலைக்காட்சியில் பார்த்ததில் முளைவிட்ட இந்த ஆசை சிங்கப்பூர் எழுத்தாளர் மாநாட்டுக்குப் போன போதும் மலேஷிய நண்பர் தியாக.ரமேஷ் அனுப்பி வைக்கும் அழைப்பிதழ்களைப் பார்க்கும் போதும் மெல்ல மெல்ல வளர்ந்து ஒரு கட்டுப்படுத்த முடியா ஆசையாய் மேல் கிளர்ந்து அதனைப் புதுவருடத்தில் இருந்து அமுல்படுத்துவதாக எனக்குள் தீர்மானமாயிற்று.

மெய்நிகர் யாழ்ப்பாணம் - முப்பரிமான பார்வையில் பாடசாலைகள் மற்றும் கோவில்கள்

http://www.jaffna360.com/

Jaffna 360 எனும் ஓர் அரிய முன்னெடுப்பு அற்புதமான நினைவுகளை மீட்டு, மெய்சிலிர்க்க வைக்கின்ற காலத்தின் பதிவென்றே கூறலாம். காலம் என்றால் என்ன? காலத்தை அளக்க முடியுமா? பரிமாணங்கள் உண்டா? இல்லை, இல்லவே இல்லை. கடந்த காலம் மீண்டும் வராது என்பதை தவிர காலம் பற்றி யாதும் கூறமுடியாது. அந்தக்காலத்தின் நினைவுப் பதிவுகளை மெய்நிகர் உலாவாக உங்களுக்கு வீட்டில் இருந்தபடியே பார்ப்பதற்கு வழி சமைக்கின்றது இந்த Jaffna 360.

இது வடமராட்சி,தென்மராட்சி, வலிகாமம் மற்றும் தீவகம் எனும் பிரிவின் கீழ் கோவில்கள்,பாடசாலைகள்,இயற்கை வனப்புகள்,கலாச்சார நினைவுகள் என பல காட்சிகளை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை அள்ளி வழங்குகிறது. எமது மக்கள் தாய் நாட்டைவிட வெளிநாடுகளிலேயே அதிகம் வாழ்கின்றனர். அதில் எத்தனையோ பேர் தமது இடங்களை பார்க்க முடியாமல் நினைவுகளை பெட்டகத்தில் மூடி படுகின்ற வேதனையும் பரிமாணங்கள் அற்றது. இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு எமது தேசத்தின், உங்கள் வாழ்வின் நினைவுச் சின்னங்களை தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியினூடு நேரில் பார்ப்பது போன்ற மெய்நிகர் அனுபவத்தை அள்ளி தருகின்றது Jaffna 360.

பட்டம் விட்ட வயல்வெளி, படித்த நல்ல பள்ளிக்கூடம்
தேரிழுத்த கோயிலடி, சைக்கிள் ஓடின மண் புழுதித்தெரு
பக்கத்து ஊர்ச்சந்தை, பாலத்தடி, சந்திக்கடை
பார்த்து அவள் சிரிச்ச பக்கத்து குச்சொழுங்கை

ஊரை விட்டு வந்த பின்னும் உள்ளம் விட்டு போகவில்லை
போட்டுவர ஆசைதான், நிலைமை இன்னும் தேறவில்லை
நேரில போய் நிற்பதுபோல் மெய்நிகராய் கண்டிடலாம்
ஊர்ப்பக்கம் போறதெண்டால் இனி பக்கத்தை பாருங்கள்

Tamil speakers get a chance to sharpen their money skills.

சிட்னியில் சொல்வேந்தர் சுகிசிவம் -24 March Sat

.
.


உலக பணக்காரர்கள் வரிசையில் 19-வது இடத்தில் முகேஷ் அம்பானி


.
Millioner
முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல், அசிம் பிரேம்ஜி, சாவித்ரி ஜின்டால், இந்து ஜெயின்)
நியூயார்க், மார்ச் 8: உலக பணக்காரர்கள் வரிசையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி 19-வது இடத்தில் உள்ளார். மெக்ஸிகோவைச் சேர்ந்த 72 வயதான தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம், தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 6,900 கோடி டாலர்களாகும். இந்திய மதிப்பில் இவரது சொத்து மதிப்பு ரூ. 3.45 லட்சம் கோடியாகும்.
 மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 6,100 கோடி டாலராகும். வாரன் பஃபெட் 4,400 கோடி டாலருடன் அடுத்த இடத்தில் உள்ளார்.
 உலகின் பெரும் பணக்காரர்களைப் பட்டியலிடும் ஃபோர்ப்ஸ் இதழில் உலக பணக்காரர்கள் அவர்களின் சொத்து மதிப்பு அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 1,226 கோடீஸ்வரர்களின் பட்டியலை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இதழ் வெளியானபோது இடம்பெற்ற பணக்காரர்களில் 140 பேர் இப்போது பட்டியலில் இடம்பெறவில்லை. பட்டியலில் இடம்பெற்றுள்ள கோடீஸ்வரர்களின் சராசரி சொத்து மதிப்பு 370 கோடி டாலராக உள்ளது.

Invites Tamil Community Members


அவுஸ்திரேலியாவில் வெள்ளப் பெருக்கு மக்களை இடம் பெயருமாறு உத்தரவு

 Tuesday, 06 March 2012

 australia_floods_தென்கிழக்கு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் நியு சவுத் வேஸ்விலுள்ள வக்கா வக்கா நகரில் இருக்கும் 9000 இற்கும் மேற்பட்டவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு கட்டளை இடப்பட்டுள்ளது. முரும்பிட்கி ஆற்றின் நீர்மட்டம் 10.9 மீற்றராக உயர்வடைந்துள்ளமையினால் நகர் வெள்ளத்தினுள் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா

.
தமிழ் சினிமாவுக்கு 5 தேசிய விருதுகள்
ஏ.எம். றிஷாத்
தமிழ் சினிமாவின் போக்கு தற்போது சிறந்த நிலையில் சென்று கொண்டிருப்பதை சென்ற ஆண்டைப் போலவே இம்முறையும் தேசிய விருதுகளை அள்ளி நிரூபித்துள்ளது.

அழகர்சாமியின் குதிரை, வாகை சூட வா, ஆரண்ய காண்டம் ஆகிய மூன்று படங்களும் சேர்த்து 5 தேசிய விருதுகளை குவித்து தமிழ்சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.

சிறந்த மாநில மொழிப் படத்துக்கான விருதினை விமல், இனியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளியான வாகை சூட வா படத்திற்கு கிடைத்தது. சிறந்த பொழுதுபோக்குப் படமாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான அழகர்சாமியின் குதிரை பெற்றதுடன் இப்படத்தின் நாயகன் அப்புக்குட்டிக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்தது.