இறையின் நினைப்பை இருத்து மனத்தில் !

 



 
















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …  அவுஸ்திரேலியா 



சினமதை அடக்கு சிறந்திடும் வாழ்வு
மனதை ஒடுக்கு மகிழ்ச்சியும் பெருகும்
தனமதை நாடிநீ ஓடா நில்லு
மனமதில் அமைதி மலர்வதைக் காண்பாய்

அறவழி இருப்பதை அகமதில் அமர்த்து
மறவழி செல்லா மனமதைத் திருப்பு
கறையுடை அனைத்தையும் களைந்துமே நில்லு
நிறையுனை அடைவதாய் நீயே உணர்வாய்

இன்சொல் என்றுமே இன்பமே நல்கும்
வன்சொல் என்பது வன்முறை காட்டும்
நன்செய் நிலமே நற்பயிர்க் குதவும்
நாளும் பொழுதும் நல்லதை நாடு

உதவும் எண்ணம் உயர்வினை அளிக்கும்
உதவா உள்ளம் ஒழிந்தே போகும்
அன்பு என்றுமே ஆனந்தம் அளிக்கும்
அளித்தால் அதுவே பேரின்ப மாகும் 

உருமாறும் உண்மைகள்!



 -சங்கர சுப்பிரமணியன்.





லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் ஜேலன் டாசன் என்ற பத்தொன்பது வயது கருப்பினச் சிறுவன் 2022 A6 மாடல் ஆடி காரைத் திருடினான் என்று குற்றம் சாட்டப்பட்டு நீதிவான் வால்டர் கிரேசன் முன் நிறுத்தப்பட்டிருந்தான்.

ஆனால் அந்த குற்றம் பொய்யாக சித்தரிக்கப்பட்டு தன் மீது போடப்பட்ட வீண்பழி என்பதை வழக்கறிஞர் உதவியின்றி தானாகவே வாதாடி தான் குற்றமற்றவன் என்பதை நிரூபித்தான்.

எங்கிருந்து அவனுக்கு அநீதியின் முகத்திரையை கிழிக்கும் மனவலிமையும் தன்னம்பிக்கையும் வந்தது? காரணம் அவனது தாயார். அவர் இருபது ஆண்டுகளாக வழக்கறிஞரிடம் உதவியாளராக பணி புரிபவர். அவர் தினமும் வழக்குகளில் சந்தித்த பல்வேறு அனுபவங்களை ஜேலனிடம் கூறுவார்.

இதனால் அரசு வழக்கறிஞர் எப்படி வாதிடுவார் அதற்கு எதிரணி வக்கீல் எப்படி
பதில் கொடுப்பார். வழக்குகள் எப்படி திசை திருப்பப்படும் சாட்சிகள் சரிவர இல்லாவிட்டால் எப்படி வழக்கு வலுவின்றி தோல்வியடையும் என்ற விபரங்கள் அனைத்தும் ஜேலனுக்கு ஒரு வழக்கறிஞரை விட நன்றாகவே தெரியும். இதுவே அவனை வழக்கில் வெற்றிபெற வைத்தது.

கீழேயுள்ள கதையை நான் எழுதக் காரணம் நான் படித்தறிந்த மேற்குறிப்பிட்ட அந்ந
வினோத வழக்குதான். உண்மை எவ்வாறு உருமாறி உலகை நம்ப வைக்கிறது என்பதை இப்புனைவு நம்மை நன்றாய்ப்
புரியவைக்கும்.

கீழ் நீதிமன்றத்தில் சக்கையனின் வழக்கில் கொடும்நாட்டுக்கு நாடுகடத்த வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ததால்
அந்த வழக்கு பெரிய பரபரப்புடன் உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த கொடும்நாடு என்பது நரகத்தைப் போன்றது. நரகத்தில் எண்ணெய்க் கொப்பரைகளில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருப்பதுபோல் இங்கு வேறுவிதமான ஏற்பாடுகள் இருக்கும்.

நீதிமன்றத்தில் வழக்கைப் பற்றி பார்வையாளர்கள் பல்வேறு கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்த படியால் நீதிமன்றம் சந்தையாக மாறியிருந்தது.

வீர அபிமன்யு - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 மகாபாரதத்தில் அபிமன்யு, வத்சலா காதல் மிகவும் பிரசித்தமானது.


இந்தக் காதலை அடிப்படையாகக் கொண்டு மூன்று முறை அபிமன்யு கதை தமிழில் படமானது. 1940களில் ஜுபிடர் தயாரிப்பில் அபிமன்யு படமாகி வெற்றி கண்டது. தொடர்ந்து 1950களில் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மாயா பஸார் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது. 1960களில் இதே அபிமன்யு, வத்சலா காதலும் , அபிமன்யுவின் வீரமும், வீர அபிமன்யு என்ற பேரில் படமானது.


முதல் அபிமன்யுவின் யூ ஆர் ஜீவரத்தினம், குமரேசன் ஜோடியாக

நடிக்க , எம் ஜி ஆர் அர்ச்சுனனாக நடித்தார். இரண்டாவதில் ஜெமினி, சாவித்திரி ஜோடியாக நடிக்க, எஸ் வி ரங்காராவ் கடோஜ்கஜானாக நடித்தார். மூன்றாவதில் ஏவி எம் ராஜன், காஞ்சனா ஜோடி சேர்ந்தார்கள். மாயா பஸாரில் அபிமன்யுவாக நடித்த ஜெமினி இதில் கிருஷ்ணராக நடித்தார். படத்தில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் இரண்டு ஹீரோக்களை கொண்ட படமாக வீர அபிமன்யு அமைந்தது.

அபிமன்யுவை வயிற்றில் சுமந்த படி அரைத் தூக்கத்தில் கதை கேட்கிறாள் அர்ச்சுனன் மனைவி சுபத்திரை. போர் நடக்கும் போது பத்ம வியூகத்தை உடைத்துக் கொண்டு அதனுள் நுழைந்து போரிடுவது எப்படி என்பதை அர்ச்சுனன் சொல்ல தாயின் கர்ப்பத்தில் இருக்கும் அபிமன்யு அதனை கேட்டு உம் கொட்டுகிறான் . உள்ளே நுழைந்த பத்ம வியூகத்தில் இருந்து வெளியேறுவது எவ்வாறு என்பதை அர்ச்சுனன் சொல்லத் தொடங்க திடீரென அங்கு வரும் கிருஷ்ணா பகவான் இடையூறு செய்து அவ்வாறு சொல்வதை தடுத்து விடுகிறார். அபிமன்யு வளர்ந்து உத்திரையை சந்தித்து இருவரும் காதலில் மூழ்குகிறார்கள் . கல்யாணமும் நடை பெறுகிறது. அஞ்ஞான வாசம் முடித்து நாடு திரும்பும் பாண்டவர் தங்களுக்கு ஐந்து கிராமங்களையாவது தருமாறு கேட்டு கிருஷ்ணரை கௌரவர்களிடம் தூது அனுப்புகிறார்கள். கிருஷ்ணா தூது தோல்வியில் முடிகிறது. பாண்டவர், கௌரவர்களிடையே குருஷேத்திர போர் வெடிக்கிறது. போரில் புயல் என கலந்து கொள்ளும் அபிமன்யு பத்ம வியூகத்துக்குள் ஊடுருவிச் சென்று போரிடுகிறான். ஆனால் பத்ம வியூகத்தை தகர்த்து வெளியேறும் வித்தை அவனுக்குத் தெரியாமல் போகிறது. எதிரிகளால் சூழப்படுகிறான் அவன்.

இலங்கைச் செய்திகள்

 யாழில் 22 கட்சிகளும் 13 சுயேட்சைகளும் நிராகரிப்பு

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கு ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் கட்டளை அதிகாரி பாராட்டு

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம் இனரீதியானதல்ல - அமைச்சர் உபாலி பன்னிலகே

யாழில் அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கை!

கருணா - பிள்ளையான் மீண்டும் இணைவு !

அமைச்சர் எங்களை கொழும்பிற்கு அழைத்து விகாரை விவகாரத்திற்கு தீர்வை விரைவில் முன்வைப்பதாக தெரிவிக்கின்றார் - ஆனால்இங்கே புதிய கட்டிடத்தை திறக்கின்றனர் - தமிழ் மக்கள் உண்மையை புரிந்துகொள்ளவேண்டும் - தையிட்டிகாணி உரிமையாளர்


யாழில் 22 கட்சிகளும் 13 சுயேட்சைகளும் நிராகரிப்பு

21 Mar, 2025 | 09:37 AM

யாழ்ப்பாணத்தில், 22 கட்சிகளுடையதும் , 13 சுயேட்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். 

யாழ். மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (20) ஊடகவியலாளர்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக 148 கட்சிகளும் 27 சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தி இருந்தனர். அவற்றில் 136 கட்சிகளும், 23 சுயேட்சை குழுக்களும் நியமன பத்திரத்தை தாக்கல் செய்தனர். 

உலகச் செய்திகள்

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க தயார் - உக்ரைன் ஜனாதிபதியிடம் டிரம்ப்

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள் - பிள்ளைகளின் உடல்களை சுமந்தபடி மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்" - காசாவில் மீண்டும் பெரும் அவலம்

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது குறித்து ஆராய்கின்றார் டிரம்ப்

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ - உலகின் மிகவும் மும்முரமான ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது.

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை பலவந்தமாக அகற்றிய பொலிஸார் - கூடாரங்கள் இடித்தழிப்பு

 பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் : உடல்நிலை நிலை எவ்வாறு உள்ளது..? 



உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க தயார் - உக்ரைன் ஜனாதிபதியிடம் டிரம்ப் 

Published By: Rajeeban

20 Mar, 2025 | 11:26 AM
image

உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கியுடன் ஒரு மணிநேரம் நல்லதொரு தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இலக்கியவெளி நடத்தும் “பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்களுடன் இணையவழிச் சந்திப்பும், அல்பெர் கமுயின் 'அயலான்' தமிழ் மொழி பெயர்ப்பு நாவல் குறித்த உரையாடலும்”


நாள்:
         சனிக்கிழமை 29-03-2025    

நேரம்:     

 இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30      

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

 வழி:  ZOOM

 Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

ஒருங்கிணைப்பு:  பேராசிரியர் க. பஞ்சாங்கம்


பேச்சாளர்கள்:

பேராசிரியர்  சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர்

பேராசிரியர்  ப.விவேகானந்ததாசன்

பேராசிரியர்  பா.இரவிக்குமார்


மேலதிக விபரங்களுக்கு: அகில்  சாம்பசிவம் -  001416-822-6316



அபயகரம் வழங்கும் 33வது ஆண்டு நிதி திரட்டும் நிகழ்வு 29/03/2025