அமர்ந்துவிட்டாய் உள்ளமெலாம் பாரதியே ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


               வறுமையிலே  உழன்றாலும் 
                   பெறுமதியாய்   கவிபடைத்தாய் 
               அறிவுறுத்தும் ஆவேசம்
                      அதுவேயுன் கவியாச்சே 
                  துணிவுடனே கருத்துரைத்தாய்
                       துவிண்டுவிடா உளங்கொண்டாய்
              புவிமீது வந்ததனால்
                       பொங்கிற்றே உணர்ச்சிவெள்ளம் !

                  பலமொழிகள் நீகற்றாய் 
                        பற்றுதலோ தமிழின்பால் 
                  தேமதுரத் தமிழென்று
                         தீர்க்கமாய் நீமொழிந்தாய் 
                   காதலுடன் தமிழணைத்தாய்
                           கற்கண்டாய் கவிதைதந்தாய்
                    ஆதலால் பாரதியே 
                         அமர்ந்துவிட்டாய் உள்ளமெலாம் ! 

                 பாப்பாக்குப்  பாட்டுரைத்தாய் 
                     படிப்பினைகள் அதில்நுழைத்தாய் 
                சாப்பாடு தனைறந்தாய்
                       சந்தமொடு சிந்துதந்தாய் 
                 ஏய்ப்பாரை எண்ணியெண்ணி
                        எறிகணையாய் கவிசொன்னாய்
                  ஆர்த்தெழுந்த உன்பாட்டால்
                          அனைவருமே விழித்தெழுந்தார் ! 

               பாஞ்சாலி சபதத்தால் 
                  பலவற்றை காட்டிநின்றாய்
              பதராக  இருப்பாரை 
                     விதையாக்க பலவுரைத்தாய்
              அழியாத உணர்வுகளை 
                    அள்ளித்தந்தாய் கவியாக 
               விழியாக தமிழ்த்தாய்க்கு
                     விளங்குகிறாய் பாரதியே ! 

ஏமாறத் தயா­ராகும் தமிழ்க்­கட்­சிகள்


15/09/2019 சம்­பந்­தனின் அந்த இரா­ஜ­தந்திரம், பொது அர­சி­யலின் வெற்­றிக்கு உத­வி­யது, ஆனால் சுய அர­சி­யலின் வெற்றிக்கு உத­வ­வில்லை


கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது­வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ விடம், எந்த எழுத்­து­மூல வாக்­கு­று­தி­யையும் பெற்றுக் கொள்­ளாமல் அவ­ருக்கு ஆத­ரவு கொடுத்­தி­ருந்­தது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு. பேச்­சுக்­களின் இறு­தியில், அவ­ருக்கு ஆத­ரவு அளிக்கும் முடிவு எடுக்­கப்­பட்ட போது, உங்­களின் கோரிக்­கைகள் தொடர்­பாக மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் உடன்­பாடு ஒன்றில் கையெ­ழுத்­தி­டுங்கள் என்று இரா.சம்­பந்­த­னிடம் சந்­தி­ரிகா குமா­ர­துங்க, கேட்­டி­ருந்தார்.

அதற்கு இரா.சம்­பந்தன், எழுத்து மூல உடன்­பாடு செய்து கொண்டால், தவ­றான கருத்­துக்கள் பரப்­பப்­பட்டு, மஹிந்த ராஜபக் ஷவைத் தோற்­க­டிக்கும் பிர­தான நோக்கம் பாழாகி விடும், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் மீது நம்­பிக்கை வைத்து, அவ­ருக்கு ஆத­ர­வ­ளிப்போம் என்று கூறி­யி­ருந்தார்.



19 - மூன்று தலைவர்களின் வியாக்கியானங்கள்


13/09/2019 இலங்கையில் இன்று மூன்று அரசியல் அதிகார மையங்களாக விளங்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ச ஆகியோர் கடந்தவாரம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி மற்றும் அரசியலமைப்புக்கான 19 வது திருத்தம் குறித்து வெளிப்படுத்திய கருத்துகள் நாடு இன்னும் இரு மாதங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுக்கவிருக்கும் நிலையில் உன்னிப்பாக நோக்கப்படவேண்டியவையாக இருக்கின்றன.

துலக்கம் இல்லாதிருக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்


13/09/2019 கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) ஜனாதிபதி தேர்தலை டிசெம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னதாக நடத்துவதற்கும் செப்டெம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னதாக நியமனப்பத்திரங்களை கோருவதற்கும்  தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தீர்மானித்திருப்பதாக கூறப்படுகின்றது.
தேர்தல் களத்தில் நிற்கக்கூடிய வேட்பாளர்களில் முன்னிலையில் விளங்குபவர் குறித்து இதுவரையில் எந்தவிதமான தெளிவும் இல்லாத நிலையொன்று இருப்பது கவனிக்கத்தக்கது. குழப்பங்கள் நிறைந்ததாக இருக்கும் நாட்டில் சகல வற்றையும் நேர்த்தி செய்யக் கூடிய சிறந்த வேட்பாளர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் கருதப்படுகின்ற கோதாபய ராஜபக்ஷ உட்பட எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ உய்த்துணரக் கூடிய அலையொன்று இல்லை. 

எலி வேட்டை - யோகன்- கன்பெரா


எலிகளை அவ்வளவு இலகுவாகப் பிடிக்கவும் முடியாது அல்லது தடியால் அடித்துக் கொல்லவும் முடியாது. அதுவும் சுண்டெலி என்றால் இன்னும் மோசம்.
எலியைப் பிடிக்க  ஒரு பொறி ஒன்று செய்து  விற்கிறார்கள். ஆனால் அப்படி யாதொன்றையும் பாவிக்காமலே எலியை பிடித்து விடலாமென்று எண்ணிக்  கொண்டிருக்கும் அதி புத்திசாலிகள் நாங்கள்.
ஊரில் தருமன்  பொறி , வீமன் பொறி என்றெல்லால் இருந்தது. ஒன்று உயிரோடு எலியைப் பிடித்து வைத்திருக்கும், மற்றையது கழுத்தை துண்டாடி  விடும்.

இரவு சமையலறை விளக்கைப் போட்டதும்  ஒரு சுண்டெலி  குளிரூட்டிக்கு கீழிருந்து அலுமாரிக்குப் பின்னும், பிறகு அங்கிருந்து பாத்திரங்கழுவிக்கு அடியிலுமாக என்று ஒரு சங்கீதக் கதிரை விளையாட்டு விளையாடி வருகிறது. அது ஓடுகையில் வெளித்தெரியும் இந்த இடைவெளியில்தான் நான் கையில் வைத்திருக்கும் துடைப்பக்  கட்டைக்கு அது பலியாகவேண்டும் அல்லது பிளாஸ்டிக் வாளியுடன்  நிற்கும் உஷாவிடம்  சிறைப்படவேண்டும்.
நான் உயிருடனோ அல்லது பிணமாகவோ மீட்க நினைக்கும் அந்த சனியனை வாளியைக் கவிழ்த்து மூடி உயிரோடேயே பிடித்து விடலாமென்று உஷா நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
மேலும் நாங்கள் முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருந்தது ஒரே ஒரு எலிதான் எங்கள் வீடு முழுக்க ஓடிக்கொண்டிருந்ததென்பதை. இதைப்  பிடித்து விடடால்  இன்னொன்று வந்து விடாதா?

'அதை  கொன்று விடாதே. துடைப்பத்தால்  சுவர் மூலைக்குள் அமுக்கிப் பிடி நான் வந்து வாளியால் மூடுகிறேன்.

மழைக் காற்று ( தொடர்கதை ) அங்கம் - 06 - முருகபூபதி


 அந்த வீட்டின் எஜமானி ஜீவிகா மாதாந்தம்  தனக்குத்தரவிருக்கும்  இருபத்தியைந்தாயிரம் ரூபா  வேதனத்தில் தனக்கிருக்கும் செலவுகளை மனக்கணக்கில் வரிசைப்படுத்திப்பார்த்தாள் அபிதா.
அப்பா, அம்மாவுடன்  வாழ்ந்த காலமும், கணவன் பார்த்திபனின் சிறிய வருமானத்தில் காலத்தை கடத்திய கணங்களும் அடிக்கடி நினைவுக்கு வந்துகொண்டிருக்கின்றன.
வீட்டுச்செலவுக்கு வைத்திருந்த சொற்ப பணத்தில், அயலில் சீட்டுப்போட்டு, போர்க்காலத்தில் இடப்பெயர்வினால் அதனையும் மீள எடுக்கமுடியாமல் அவதிக்குள்ளானவேளையிலும் பார்த்திபன் எதுவும் சொன்னதில்லை.
இந்த வீட்டில் மூன்றுவேளையும் வயிறாற உணவிருக்கிறது. உடுத்துக்கொள்ள அவ்வப்போது உடைகளும் கிடைக்கின்றன. மருத்துவச்செலவுகளும் இல்லை. ஆரோக்கியத்திலும் குறைபாடுகள் இல்லை.
இவர்கள் என்னை நெத்தலி என்று அழைத்தாலும் கவலை இல்லை. அவ்வாறு இருப்பதும் ஆரோக்கியமானதுதான்.  உடல்பருமனைக்குறைப்பதற்காக மஞ்சுளாவும் சுபாஷினியும் தினமும் தேகப்பயிற்சி செய்கிறார்கள்.
விடுமுறை நாட்களில் கடற்கரை வரையில் நடைப்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
ஜீவிகா தன்னுடன் பேசிய பிரகாரம் தரப்போகும் மாதாந்த வேதனம் சேமிப்பாகத்தான் மாறிவிடும்.  இனிமேல் யாருக்காக நான் சேமிக்கவேண்டும்…?
பார்த்திபனுடன் வாழ்ந்த அந்த சொற்பகாலத்தில் சேமிப்பதற்கு சிறந்த வழிமுறையாக இருந்தது அந்தச் சீட்டு மாத்திரம்தான்.
  சீதனம் கொண்டுவருவதற்கு வக்கில்லை. சீட்டுப்போடுறாளாக்கும்  “ என்று சுடுவார்த்தைகள் சொன்ன மாமியார் -  பார்த்திபனின் தாயார் போர் உக்கிரமடைவதற்கு முன்பே, ஜெர்மனியிலிருக்கும் மகளிடம் – பார்த்திபனின் தங்கை மாலினியின் முதல் பிரசவத்திற்கு உதவியாக அழைக்கப்பட்டவள்.
அங்கே அந்த மாமி நிரந்தரமாகிவிடுவதற்கு போரும் பார்த்திபனும் குழந்தை தமிழ்மலரும் கொலைகாரப்பாவிகளிடம் சிக்கியது வசதியாகிப்போனது.
 “ போரில் மகனையும் பேத்தியையும் பறிகொடுத்துவிட்டேன். அங்கு திரும்பிச்சென்றால் தனது உயிருக்கும் ஆபத்து  “ எனச்சொல்லி ஜெர்மனியில் அடைக்கலம் பெற்றுவிட்ட மாமியாலும் அவள் மகள் மாலினியாலும் அபிதாவுக்கு எந்தப்பயனும் இல்லை.
தங்களுக்குத் தெரியாமல் தங்கள் மகன் பார்த்திபனை காதலித்தது முதல் குற்றம்! தடுத்தும் சொல்கேளாமல் திருமணம் செய்தது இரண்டாவது குற்றம்!  சீதனம் கொண்டுவராதது மூன்றாவது குற்றம்!  தங்களைவிட குறைந்த சாதி என்பது நான்காவது குற்றம்.  

இலண்டன் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு சாதனை விருதும், தொழில் முன்னேற்ற விழாவும்.. (வித்யாசாகர்)



ங்கிலாந்து நாட்டின் "ஐந்தாவது உலக பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழ்  சாதனையாளர்கள் விருது விழா - 2019" கடந்த திங்கட் கிழமை நாள் 09.09.2019 அன்று இலண்டன் பாராளுமன்றத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. பல நாட்டு தொழிலதிபர்களின் முன்னிலையிலும், இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்குள்ள பிற தமிழ் அமைப்பினர்களின் போற்றுதலோடும் இவ்விருது விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


உலகத் தமிழர் அமைப்பு (WTO ) மற்றும் கூட்டமைப்பின் தலைவர் திரு. ஜேகப் ரவிபாலன் இந்நிகழ்ச்சியை முன்னின்று நடத்த,  நடன ஆசிரியர் மற்றும் சன் தொலைக்காட்சி புகழ்மங்கை திருமதி.திவ்யா அவர்கள் தொகுத்து வழங்கினார்.


இந்நிகழ்வில், உயர்த்திரு. நியா கிரிஃபித், மார்ட்டின் வொய்ட்பீல்டு, வீரேந்திர சர்மா போன்ற இலண்டன் (MP) பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜெனிவா நாட்டின் (MP) பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு. சசீந்திரன் முத்துவேல், டாடா (TATA ) நிறுவனத்தின் இங்கிலாந்து பிரிவுத் தலைவர் திரு. டிம் எல் ஜோன்ஸ், மற்றும் தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், குவைத், ஜெர்மன், துபாய், இந்தியா, கொரியா போன்ற நாடுகளிலிருந்து பல சாதனையாளர்களும் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அவுஸ்திரேலியா - இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெற்ற நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி மாணவர்கள்


அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியைப்பெறும் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி மாணவர்களுக்கான இவ்வாண்டின் இறுதிக்கட்ட நிதிக்கொடுப்பனவுகள் அண்மையில் வழங்கப்பட்டது.
கல்லூரி அதிபர் திரு. புவனேஸ்வரராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நடப்பாண்டு தலைவர் திரு. லெ. முருகபூபதியும் கலந்துகொண்டார்.
மாணவர்களின் தொடர்பாளரும் கல்வி நிதியத்தின் புலமைப்பரிசில் திட்டத்தினால் பயனடைந்த முன்னாள் மாணவியுமான தற்போது இதே கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியை செல்வி நிலோஜினியும் கல்லூரி அபிவிருத்திச்சங்க பொருளாளர் ஆசிரியை திருமதி ஶ்ரீகுமார், ஆசிரியர் திரு. சுதாகரன் மற்றும் இங்கிலாந்திலிருந்து வருகை தந்திருந்த கல்லூரியின் முன்னாள் மாணவி திருமதி ஜெயசித்ரா இந்திரதாஸ ஆகியோரும், உதவிபெறும் மாணவர்களின் தாய்மாரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியை கடந்த காலங்களில் பெற்று கல்வியை இடை நிறுத்தாமல் தொடர்ந்த மாணவிகள் செல்விகள் ரேணுகா, நிலோஜினி ஆகியோர் பல்கலைக்கழக பட்டதாரிகளாகி  தற்போது பாடசாலைகளில் ஆசிரியப்பணியை மேற்கொண்டிருப்பதையும், மற்றும் ஒரு முன்னாள் மாணவியான செல்வி பாமினி செல்லத்துரையும் பட்டதாரியாகி தற்போது நுவரேலியா கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப்பணிப்பாளராகியிருப்பதையும் சுட்டிக்காண்பித்து உரையாற்றிய அதிபர் திரு. புவனேஸ்வரராஜா, அவர்கள் போன்று தற்போது கல்வி நிதியத்தின் உதவிகளை பெற்றுவரும் மாணவர்களும் எதிர்காலத்தில் திகழவேண்டும். நமது கல்லூரிக்கு பெருமை சேர்க்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
உதவிபெறும் மாணவர்கள் மற்றும் அவர்களின் தாய்மாருடனும் கலந்துரையாடல்  இடம்பெற்றது.
இலங்கை மாணவர் கல்வி நிதியம் இவ்வாண்டு இறுதிவரைக்குமான நிதிக்கொடுப்பனவுகளை இதர பிரதேச மாணவர் தொடர்பாளர்கள் ஊடாக அனுப்பிவைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
---0---
-->








இலங்கைச் செய்திகள்


தெற்காசியாவின் உயரமான கோபுரம் ஞாயிறன்று திறப்பு

படகுவழி ஆட்கடத்தலை தடுக்க அவுஸ்திரேலியா - இலங்கை தொடர்ந்து நடவடிக்கை

எழுக தமிழ் நிகழ்வில் தமிழர் அனைவரும் அணி திரள தமிழர் மரபுரிமைப் பேரவை அழைப்பு

திருமண பந்தத்தில் இணைகிறார் நாமல் : படங்கள் இணைப்பு

 “புலதிசி” கடுகதி புகையிரத பயணத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி

ஜனநாயகத்தால் எதனையும் வெற்றி கொள்ள முடியும் - பிரதமர்

பயங்கரவாத தாக்குதலுக்கு  இலக்காகி மீளக் கட்டியெழுப்பப்படும் சியோன் தேவாலயத்திற்கு  டக்ளஸ் விஜயம்!

இலங்கையின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம் : ஐ. நா. பிரதிநிதி ஹனா சிங்கர

அவன்கார்ட் விவகாரம் : கோத்தபாய உட்பட 8 பேரையும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஆலய வழிபாட்டின் போது சிவிலுடை தரித்த பொலிஸாரினால் மக்கள் அச்சம் !

பலாலி விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம்

சு.க உறுப்பினர்கள் ஐவரின் கட்சி உறுப்புரிமை நீக்கம்

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் தென்னிலங்கையரின் உப்பளம்


தெற்காசியாவின் உயரமான கோபுரம் ஞாயிறன்று திறப்பு

09/09/2019 தெற்காசியாவின் உயரமான கோபுரமான தாமரை கோபுரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

உலகச் செய்திககளும் கட்டுரைகளும்


ஹொங்கொங்கை காப்பாற்றுங்கள் - ட்ரம்பிடம் வலியுறுத்திய போராட்டக்காரர்கள்

சீனாவின் 'ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள்" கொள்கை என்றால் என்ன?

ஈரான் விவகாரத்தில் முன்னைய கடும்போக்கிலிருந்து தளர்வை வெளிப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

சீனாவுடனான வர்த்தகப் போரில் இருந்து அமெரிக்கா படிக்கவேண்டிய நான்கு பாடங்கள்

றொபேர்ட் முகாபேயின் முரண்நிலையான மரபு 

இந்திய அரசியலமைப்பின் உறுப்புரை 370 தொடர்பில் சீனாவின் நிலைப்பாடு

மூன்று செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது சீனா

கடும் கட்­டுப்­பா­டு­களை விதிக்கும் ட்ரம்பின்  திட்­டத்திற்கு அனு­மதி


ஹொங்கொங்கை காப்பாற்றுங்கள் - ட்ரம்பிடம் வலியுறுத்திய போராட்டக்காரர்கள்

09/09/2019 குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டமூலத்தை ஹொங்கொங் அதிபர் திரும்பப் பெற்றபோதிலும் பிற நிபந்தனைகளை நிறைவேற்றக் கோரி போராட்டக்காரர்கள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் 1969 - 2019 ச சுந்தரதாஸ் - பகுதி 11


ஓளிவிளக்கு
வெற்றிப் பட நாயகனாக தமிழ்த்திரையில் கோலோக்கிய மக்கள் திலகம் எம் ஜி ஆரின் நூறாவது படம் ஒளிவிளக்கு.  புரட்சி நடிகரின் நூறாவது படத்தை யார் தயாரிப்பார்கள் என்ற கேள்வி திரையுலகில் நிலவி வந்த காலகட்டத்தில் பலர் எம் ஜி ஆரின் நூறாவது படத்தைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் அந்த வாய்ப்பை எம் ஜி ஆர் ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ் எஸ் வாசனுக்கே கொடுத்தார்.

ஏற்கனவே ஏவிஎம் விஜயா புரடக்ஷன்ஸ், மாடர்ன் தியட்டர்ஸ் என்று பல பிரபலமான படநிறுவனங்களில் நடித்திருந்த எம் ஜி ஆருக்கு ஜெமினி நிறுவனத்திலும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் நீண்ட காலமாக இருந்து வந்தது. ஆனால் வாசன் எம் ஜி ஆரை இது தொடர்பாக அணுகாமலே இருந்து வந்தார். 
குடியிருந்த கோயில் படத்தின் சில காட்சிகளை ஜெமினி ஸ்டுடியோவில் படமாக்கும் படி பார்த்துக் கொண்ட எம் ஜி ஆர் அதன் மூலம் வாசைன எங்கு சந்திக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டார். இதன் விளைவாக ஒளிவிளக்கு படத்தை அதிலும் எம் ஜி ஆரின் நூறாவது படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பு வாசனுக்கு ஏற்பட்டது. 

இந்தியில் தர்மேந்திரா மினாகுமாரி நடித்து வெற்றி கண்ட பூல் ஓர் பதார் படத்தை தமிழில் தயாரிப்பதற்கு இணக்கம் உருவானது. சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறுவயது முதல் திருடனாகும் முத்து கொள்ளையடிக்கப் போன இடத்தில் விதவையை பராமரிக்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகிறான். ஆனால் அவன் சார்ந்திருக்கும் கொள்ளைக் கூட்டமோ விதவைப் பெண் மூலம் அவன் திருந்தி விடக்கூடாது என பல சதிகளை தீட்டுகிறது. கொள்ளைக் கூட்டத்தில் இருக்கும் நடனப் பெண் கீதாவும் முத்துவை காதலிக்கிறான். இதற்கிடையில் தீ விபத்தில் சிக்கிய குழந்தையை காப்பாற்ற முனையும் முத்து தீயினால் காயப்படுகிறான்.

ஏராளமான மக்களின் பிரார்த்தனையால் உயிர் பிழைக்கும் முத்து புடம் போட்டட தங்கமாகிறான்.

இந்தக் கதையை அடிப்படையாக கொண்டு ஒளிவிளக்கு கதை உருவானது. மூலக் கதையான இந்திப்படத்தில் திருடனுக்கும் விதவைக்கும் இடையே உருவாகும் காதல் இறுதியில் கல்யாணத்தில் முடிவதாக காட்டியிருந்தார்கள்.  இதன் மூலம விதவை சீர்திருத்த மணம் திருடனுக்கு மறுவாழ்வு என்பன வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தமிழில் எம் ஜி ஆர் ஹீரோ என்பதால் கதையில் அவருக்கேற்றாற் போல் சில மாறுதல்கள் செய்யப்பட்டன. விதவைக்கும் கதாநாயகனுக்கும் இடையிலான உறவு சகோதர உறவாக சித்தரிக்கப்பட்டது.  அதற்கு பதில் நடனப் பெண்ணுக்கும் நாயகனுக்கும் இடையே காதல் என்பதாக காட்டப்பட்டது. விதவை வேடத்தை சௌகார் ஜானகி ஏற்று திறமையாக நடித்திருந்தார். நடனப் பெண்ணாக வரும் ஜெயலலிதா கவர்ச்சிப் பதுமையாக காட்சியளித்தார்.  

உயர் "மாருதி" விருது 2019



அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் இவ்வாண்டிற்கான 'மாருதி' விருதுக்குரியவரை,
தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரைகளை உங்களிடமிருந்து வேண்டி நிற்கின்றார்கள் அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்.

தமிழ் மொழியினதும், தமிழ்ச் சமுதாயத்தினதும் உயர்வுக்காக,
அல்லது  சமூக மேம்பாட்டிற்காக,
அவுஸ்திரேலிய மண்ணில் / மண்ணிலிருந்து தன்னலமற்ற சேவையாற்றிய ஒருவரை,
தமிழ் மக்களிடமிருந்து பெறப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்வுசெய்து,
அவுஸ்திரேலியக் கம்பன் கழக உயர் 'மாருதி' விருதினை,
2012ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் கம்பன் விழாக்களில் வழங்கி வருகின்றார்கள். 

மேற்படி விருதின் 2019இற்கான பரிந்துரைகள்,
அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களிடமிருந்து,
எதிர்வரும் 22-09-2019ஆம் திகதிக்கு முன்னர் எதிர்பார்க்கப்படுகின்றன.
தயவுசெய்து தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வையுங்கள்.

மேலும், தங்கள் நண்பர்களுடனும் இவ்வறிவித்தலைப் பகிர்ந்து துணை செய்க என, 
பணிவன்போடு வேண்டுகின்றார்கள் அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்🙏

தமிழ் சினிமா - சிவப்பு மஞ்சள் பச்சை திரை விமர்சனம்

சித்தார்த், ஜிவி பிரகாஷ் இருவருமே நல்ல கதைகளை தேடி நடித்துவருகின்றனர் அந்த வைகையில் இயக்குனர் சசி இயக்கிய சிவப்பு மஞ்சள் பச்சை படம் என்ன கதை களத்தில் அமைந்துள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.

கதை களம் :

ஜீவி பிரகாஷ் லெஜிமோல் ஜோஸ் அக்கா தம்பிகள் . இவர்களின் பெற்றோர் காலமானதால் தன்னுடைய அத்தையின் வீட்டில் வளர்கிறார்கள் .
ஜீவி பிரகாஷ் பைக் ரேசர். சித்தார்த் போக்குவரத்து காவலர்
ஒரு முறை ஜீவி பிரகாஷ் நண்பர்களுடன் சேர்ந்து பைக் ரேஸில் சாலை விதிகளை மீறி ரேஸில் ஈடுபடுவதை கண்ட சித்தார்த் ஜீவியை கைது செய்கிறார்.
ஜீவியை சித்தார்த் கைது செய்ததுனால் ஜீவி பைக் ரேசில் தோற்று போகும் சூழ்நிலை ஏற்பட ஜீவிக்கு சித்தார்த் மேல் பகை உருவாகிறது. ஜீவி சித்தார்த்தை பழிவாங்க துடிக்கும் நேரத்தில் எதிர்பாரா விதமாக ஜீவியின் அக்காவை சித்தார்த்தை திருமணம் செய்கிறார்.
இருவரின் பகை இந்த திருமணத்தில் என்ன மாற்றங்களை கொடுக்கிறது என்பதுதான் கதை .

படம் பற்றி அலசல்

பெற்றோர் இல்லாமல் அக்காவின் அரவணைப்பில் வளர்ந்ததால் அக்கா பாசம் தனக்கு மட்டும் சொந்தம் என்றிருக்கிறார் ஜீவி . படம் ஆரம்பத்தில் அக்கா தம்பி பாசம் அவ்வள்வு பிணைப்பு இல்லாதமாதிரி தெரிந்தாலும் படம் போக போக நல்ல உணர்வுகளை கொடுக்கிறது .
ஜீவி விளையாட்டு தனமாக இருந்தாலும் ஜீவிக்கும் காஷ்மீரா பர்தேஷி இடையில் காதல் ஏற்பட, காஷ்மீரா பர்தேஷி நிறைய இடத்தில் ஜீவிக்கும் அவரது அக்காவிற்கும் ஆதரவாக அமைந்திருக்கும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ஜீவிக்கும் சித்தார்த்துக்கு இடையில் உள்ள பகையை தாண்டி சித்தார்த் லெஜிமோல் ஜோஸ் திருமணம் செய்துகொள்ள தன் பேச்சை கேக்காமல் அவளுக்கு பிடித்தவரை திருமணம் செய்கிறாள், அதனால் சொந்த அக்கா கல்யாணத்திற்கு வராமல் போவது ஜீவியின் பாச போராட்டத்தை வெளி படுத்துகிறது .
இருவருக்கும் திருமணம் முடிய ஜீவியை சித்தார்த் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என்றாலும் முகம் சுழிக்காமல் ஜீவையை சித்தார்த் குடும்பம் கையாள்வது படத்தில் பிளஸ் .
படத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது, அதிலும் குறிப்பாக ரேஸ் காட்சிகளை படம்பிடித்த விதம், சித்தார்த் பல இடங்களில் லைவ் லொக்கேஷனில் நடித்துள்ளார், அதையெல்லாம் மிக சிறப்பாக படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ப்ரசன்னா.
சிவப்பு மஞ்சள் பச்சை என்றவுடன் முழுக்க முழுக்க சமுதாயம் சார்ந்த படம் என்று நினைத்து செல்ல பாச போராட்டத்தில் கட்டி விடுகின்றனர் . நன்றி CineUlagam