அவுஸ்திரேலியா கன்பராவில் கலை - இலக்கியம் 2016

.
                 நான்கு அமர்வுகளில் நிகழ்ச்சிகள்
ஞானம்  ஆசிரியர்  ஞானசேகரன்  பாராட்டு -  
கருத்தரங்கு 
நூல் அறிமுகம்  -  
ஆவணப்படம்  -  
குறும்படம் காட்சிகள்


                  அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கமும்  கன்பரா  கலை இலக்கிய  வட்டமும்  இணைந்து,  கன்பராவில்  கலை  இலக்கியம் - 2016  என்னும்  நிகழ்ச்சியை  கன்பரா  தமிழ்  மூத்த  பிரஜைகள்  மண்டபத்தில்  (Canberra Tamil Senior Citizens Hall, 11 Brumby Street, Isaacs, ACT 2607) 
எதிர்வரும் 4 ஆம்  திகதி (04-06-2016) சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு  ஒழுங்குசெய்துள்ளன.
நான்கு   அமர்வுகளாக  நடைபெறவுள்ள  இந்நிகழ்ச்சியை  கன்பரா தமிழ்ச்சங்கத்தின்  தலைவர்  திரு. ஞானசிங்கம்,  கன்பரா  தமிழ்  மூத்த பிரஜைகள்  சங்கத்தின்  தலைவர்  திரு. முருகேசு  ருத்திரன், கனடாவிலிருந்து   வருகைதந்துள்ள  இலக்கிய  ஆர்வலர்  கலாநிதி கே. கணேசலிங்கம்,  இலங்கையிலிருந்து  வருகைதந்துள்ள எழுத்தாளர்   திருமதி  ஞானம்  ஞானசேகரன்,  கவிஞி  திருமதி ஆழியாள் மதுபாஷினி  ரகுபதி  ஆகியோர்  மங்கள  விளக்கேற்றி தொடக்கிவைப்பர்.
அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  தலைவர் பேராசிரியர் ஆசி. கந்தராஜாவின்    தலைமையில்  நடைபெறவுள்ள இந்நிகழ்வில்   இலங்கையின்  மூத்த  படைப்பாளியும்  ஞானம் ஆசிரியருமான  டொக்டர்  தி. ஞானசேகரனின்  அயராத இலக்கியசேவைகளை   பாராட்டி  எழுத்தாளர்  திருமதி  யோகேஸ்வரி கணேசலிங்கம்   உரையாற்றுவார்.
 ஞானசேகரனுக்கு    அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய கலைச்சங்கத்தின்   சார்பில்  விருது  வழங்கப்படும்.
டொக்டர்  ஞானசேகரன்  தமது  ஏற்புரையுடன்  "  ஈழத்து இலக்கியமரபின்  இன்றைய  நிலை "  என்னும்   தலைப்பில்  உரை நிகழ்த்துவார்.

இன்றிரவின் முத்தம் - எச்.ஏ. அஸீஸ்

.

                           
ஒரு முச்சக்கர வண்டிக்கு
முத்தம் கொடுத்தது
என் கார் இன்றிரவு
இடுப்புடைந்து போனது
முச்சக்கர வண்டி
நொண்டி நகர்ந்தது
ஒரு பார்க்கில் நடந்த காதல் போல
பார்க்க வந்தனர் எல்லோரும்
உரத்துக் கதைத்தனர்
ஒரு சிலர் என்னிடம்
உன் கார் கொஞ்சம் அவசரப் பட்டதோ 
வாயும் பல்லும் உடைந்து
வழிகிறது இரத்தம்
அழுது தீர்க்கக் கண்ணீரில்லை

ஞானம் ஆசிரியருக்கு சிட்னியில் பாராட்டு விழா

.
இன்று  (29 05 2016 ) "ஞானம்" இலக்கிய  இதழின் ஆசிரியர் திரு ஞானசேகரன்  அவர்களுக்கு சிட்னியில் பாராட்டு விழா.

 கடந்த 16 வருடங்களாக மாதம் தவறாது “ஞானம்” என்றொரு சஞ்சிகையை நடாத்திக் கொண்டிருக்கும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ”போர்க்கால இலக்கியம்”,”புலம்பெயர்ந்தோர் இலக்கியம்” என்ற இரு பெரும் தொகுதிகளை வெளியிட்டவருமான திரு. ஞானம். ஞானசேகரன் அவர்களின் 75வது அகவையைக் கொண்டாடும் முகமாக உயர்திணை அமைப்பினர் இன்று சிட்னியில் பாராட்டு விழா ஒன்றினை நடாத்தியிருந்தார்கள்.


தமிழ் ஊடகப்பயணத்திலிருந்து விடைபெறும் வீ.ஆர். வரதராஜா - முருகபூபதி -

.

தமிழ்  ஊடகப்பயணத்திலிருந்து   விடைபெறும்        வீ.ஆர். வரதராஜா
வீரகேசரியின்  படிகளிலிருந்து  நீதிமன்ற  படிகளுக்கு  ஏறி இறங்கி  செய்தி  சேகரித்த  மூத்த  பத்திரிகையாளன்.
யாழ்தேவி  அன்றைய  காலத்தில்  யாருக்காக  ஓடியது என்பதை  வெளிப்படுத்திய  செய்தியாளன்
                            

வீரகேசரி  ஆசிரிய  பீடத்தில்  பணியாற்றிய காலத்தில்  எம்முடன் இணைந்திருந்த  சிலர்  படிப்படியாக  எம்மை  விட்டு மறைந்துகொண்டிருக்கின்றனர்.   விதி  தனது கடமையைச் செய்துகொண்டிருக்கும்  சூழலில்  நாமும்  அயற்சியின்றி அஞ்சலிக்குறிப்புகளை  தொடருகின்றோம்.
வீரகேசரி   தனது  நூற்றாண்டை   அண்மித்துக்கொண்டிருக்கையில்,  அங்கு தமது  கையில்  பேனை  ஏந்தி   எழுதிக்குவித்தவர்கள்  நினைவில்  வந்து செல்கின்றனர்.   இன்று  காலம்  மாறியிருக்கிறது.  காலம்  கணினியில் எழுதிக்குவிக்கத் தூண்டியுள்ளது.

இம்மாதம்   22  ஆம்   திகதி  ஜெர்மனியில்   வீரகேசரியின்  முன்னாள் ஊடகவியலாளர்   வீ.ஆர். வரதராஜா  மறைந்துவிட்டார்  என்ற துயரச்செய்தியை  மின்னஞ்சலில்   தாங்கி  வந்தது  அங்கு  வதியும்  எனது இலக்கிய   நண்பர்  ஏலையா  முருகதாசனின்  மடல்.  வரதராஜாவுக்கும்  ஜெர்மனியிலேயே   இவரை  முந்திக்கொண்டு   மறைந்துவிட்ட  துணைஆசிரியர்   சேதுபதிக்கும்   சுமார்  33  வருடங்களுக்கு  முன்னர்  நாம் கொழும்பு   கொள்ளுப்பிட்டி  ரன்முத்து  ஹோட்டலில்  பிரிவுபசார  விருந்து வழங்கி   விடைகொடுத்தோம்.

வானமுதம் 10 ம் ஆண்டில் 31 05 2016

.

பத்தேமரி - கானா பிரபா

.
பத்தேமரி - பள்ளிக்கால் நாராயணன் என்ற சாதாரணின் புலம் பெயர் வாழ்க்கைச் சரிதம்

"வெளிநாட்டில் வாழ்க்கைப்பட்டவனின் இருப்பு பலாப்பழத்தின்ர பால் கையில் ஒட்டியது போல" - பள்ளிக்கால் நாராயணன் என்ற கேரளத்துச் சாதாரணன் சொல்கிறான் இப்படி.

அறுபதுகளில் தம் குடும்பச் சுமை மீட்க, கேரளாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குக் கள்ளக் கடல் வழியால் பயணித்தவர்களில் ஒருவனாக இந்தப் பள்ளிக்கால் நாராயணன். ஐம்பது வருடங்களாகச் சாதாரண தொழிலாளியாகத் தன் துபாய் வாழ்வியலினூடே நாட்டில் இருக்கும் குடும்பகாரருக்கு உழைத்துக் கொட்டி மரித்தவனின் வரலாறு பேசும் படம் தான் இது. 

இன்று காலை "பத்தேமரி" படத்தைப் பார்த்து முடித்ததில் இருந்து மனதைச் சஞ்சலிக்க வைத்து விட்டது. இருபத்தொரு வருடங்களாக நான் தரிசித்த, கேட்ட, அனுபவித்த புலம்பெயர் வாழ்வில் கூறுகளை மீளவும் நினைப்பூட்டி விடுமளவுக்கு ஒரு பந்தம் இந்தப் படைப்பின் வழியாக.

ஆறாவது முறை “மம்மி ரிடர்ன்ஸ்” - வழக்கறிஞர் கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்

.

பத்து கட்சிகள் போட்டியிட்டும் தனி ஆளாக ஆடாமல் ஜெயித்த ‘ஜெ
மக்களால் நான்,  மக்களுக்காகவே நான்’ நடத்திய மாயம்

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
கோலங்கள் மாறும் கொண்ட  கொள்கைகள் மாறும் ,
அரசியலில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்றதை மறந்து , ஏற்க  மறுத்துவிட்ட முது பெரும் அரசியல்வாதி இனி ஒரு முறை முதல்வராகவாய்ப்பில்லாமல் போனதற்கு காரணங்கள். 

புரியாத புதிர் அம்மாவாகிய கதை

தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர் , தவறாக சித்திரிக்கப்பட்டவர்தவறாகஅனுமானிக்கப்பட்டவர்தவறாக நிர்வாகிக்கப்பட்டவர்  இப்படி பலர் யானையைபார்த்த குருடனைப்போல பார்க்கப்பட்டவர் ஜெயலலிதா.

நெல் வயல் - கவிதை - சாண்டில்யன் (கந்தர் பாலநாதன்)

.

கிழக்கினில் ஆதிக்கமணி உதயம்
உறக்கத்தில் செயலிழந்த 
உயிர்களுக்கு உணர்வளிக்க,

வேப்ப மரக் கிளைகளில்
உறங்கிய சேவல்கள்
தம்மின பாணியில்
சிறகடித்து இசை அமைக்க, 

உலுகாரிகள் ஒற்றுமை நோக்கில்
கா! கா! என்று கத்தி அழைக்க,  

துயில் கொண்ட விவசாயிகள்
அவ்விசையில் மனம் கவர்வு கொண்டு  
உவந்து தூக்கத்திலிருந்து எழ,

உழவரின் மனைவி துயிலெழுந்து
சுப்பிரபாத இசை பாடி,
தம் காதலர்-கணவருக்கு
 காலை உணவளிக்க,

சைவ மகாசபை நிகழ்வு 05 06 2016

.

உலகச் செய்திகள் வரலாற்று சாதனை படைத்த பராக் ஒபாமா.!


ராஜீவ் படு­கொலை : பதறவைக்கும் 10 மர்­மங்கள்

பாடசாலை விடுதியில் தீ : 17 மாணவிகள் உடல்கருகிப் பலி

500 மதுபான சாலைகள் மூடப்பட்டன : தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடங்கினார் ஜெ.

ஆஸ்திரிய ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி

விமானம் விழுந்த இடத்திலிருந்து துண்டுதுண்டுகளாக சிதறிய 80 மனித எச்சங்கள் மீட்பு.!

பாப்பரசர் - கெய்ரோ பள்ளிவாசல் இமாம் சந்திப்பு 

மல்லையாவின் தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு.!

வரலாற்று சாதனை படைத்த பராக் ஒபாமா.!



வித்தியாசங்கள் வரவேற்புக்குரியவை - பேராசிரியர் சி.மௌனகுரு

.
எளிமையும்,அழகும்,சிருஸ்டித்துவமும் மிகுந்த சாமத்தியச் சடங்கு


அண்மையில் சிவரத்தினம்-அருந்ததி தம்பதியினர் தமது மகளின் சாமத்தியச் சடங்கினை வித்தியாசமான முறையில் வடிமைத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்
சிவரத்தினம்-அருந்ததி தம்பதியினர் மட்டக்களப்பிலுள்ள கழுதாவளை எனும் அழ்கான கிராமத்தைச் சேர்ந்தவர்கள்
கழுதாவளை குல மரபுகளையும்,பாரம்பரியங்களையும் இற்றைவரை பேணிவரும் ஒரு கிராமம்
கூத்துகள்,பறைமேளம்,கரகம்,வசந்தன்,கொம்புமுறி என பல்வேறு கலைகளையும் தன்னுள் வைத்திருந்த கிராமம்
கதிர்காமத்துக்கு வருடந்தோறும் கால்நடையாகச் செல்லும் முருக பக்தர்கள் தங்கி இளைப்பாறிச் செல்லும் சுயம்புலிங்க பிள்ளையார் கோவில் இங்குதான் உண்டு
கோவிலுக்கு செல்லும் வழியில் இருபுறமும் வளர்ந்து சடைத்து நிற்கும் மருத மரங்களும் அவை தரும் நிழல்களும்,கோவில் சூழலும்.கோவில் முன்னால் அமைந்திருக்கு கேணியும் என ஒரு முறை போனோர் என்றும் மறக்க முடியாத இடம் அது

எல்லோர்க்கும் நன்மையன்றோ ! - ( எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ...அவுஸ்திரேலியா )

.

    தேர்தல்தனில் வெற்றிபெற்றால் தெளிந்தமனம் வரவேண்டும்
     வாக்களித்த மக்களது மனங்கோணா இருத்தல்வேண்டும்
     நோக்கமின்றிச் செயல்பட்டு நோகடிக்கா திருந்துவிடின்
     வாக்களித்த மக்களென்றும் வாய்ப்பளிக்க வந்திடுவார்  !

    சொல்லுகின்ற திட்டமெல்லாம் தொய்வின்றிச் செய்துவிடின்
    நல்லாட்சி  எனும்சான்றை நாட்டுமக்கள் வளங்கிடுவார்
    வல்லமையால் வென்றுவிட்டோம் என்றெண்ணம் வந்துவிடின்
    வாக்களித்த மக்களெலாம் மனம்நொந்தே போயிடுவார் !

     வாக்குப் பெற்றுவிட்டதனால் வாய்ப்புவந்து விட்டதென
     நாற்காலி தனைப்பிடித்து நல்லதெல்லாம் தாம்சுருட்டி
     சாக்குப்போக்கு தனைச்சொல்லி  சதிராட்டம் போட்டுநின்றால்
     வாக்களித்த மக்களெலாம் வசைபாடி நின்றிடுவார் !

சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது - என் செல்வராஜ்

.

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை என்ற தலைப்பில் ஏற்கனவே 5 கட்டுரைகள் நான் எழுதி திண்ணையில் வெளிவந்துள்ளது. அவற்றில் பல சிறுகதை தொகுப்புக்களை அறிமுகப்படுத்தி இருந்தேன். பல எழுத்தாளர்களின் பரிந்துரைகளையும் குறிப்பிட்டு இருந்தேன். சிற்றிதழ்கள் பலவற்றின் தொகுப்புக்களையும் குறிப்பிட்டு இருந்தேன்.அந்த கட்டுரைகளுக்கு பிறகு எனக்கு கிடைத்த சில தொகுப்புக்களையும் சேர்த்து சிறந்த சிறுகதைகளைப் பட்டியலிட்டு இருக்கிறேன். சிறந்த சிறுகதையாக இங்கு நான் குறிப்பிடும் கதைகள் அவை இடம் பெற்ற தொகுப்புக்கள், எழுத்தாளர்களின் கட்டுரைகளில் பரிந்துரை பெற்ற கதைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. குறைந்தது நான்கு பரிந்துரைகள் பெற்ற கதைகள் 150 சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஈழத் தமிழ் எழுத்தாளர்களின் தொகுப்பு மற்றும் பரிந்துரைகளும் சேர்க்கப்பட்டு
பட்டியல் தயார் செய்து இருக்கிறேன். தொகுப்பு மற்றும் பரிந்துரைகளை ஒன்றாகபரிந்துரை என்றே எடுத்துக்கொண்டு இந்த ஆய்வை செய்து இருக்கிறேன். இந்த ஆய்வு 5550 கதைகளின் பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்பட்டது. ஒரே எண்ணிக்கையில் பரிந்துரை பெற்ற கதைகள் அகர வரிசையில் பட்டியல் இடப்பட்டிருக்கின்றன. இனி ஆய்வின் முடிவை காணலாம்.

இலங்கைச் செய்திகள்


சீரற்ற காலநிலை : விரைவில் புதிய தேசிய அடையாள அட்டை

சீரற்ற காலநிலை : இதுவரை 92 பேர் பலி

நாமல் பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்

 உணவு கிடைக்கின்ற போது சிலவற்றை வெளிப்படையாக கேட்க முடியாமல் உள்ளது: கண்ணீர் சிந்தும் பாதிக்கப்பட்ட மக்கள்

லலித் வீரதுங்க பாரிய நிதி மோசடி பிரிவில் ஆஜர்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு

ரோஹிதவுக்கு பிணை.!

யாழில் அதிகரிக்கும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த துரிதகதியில் நடவடிக்கை

வற்றியது கொழும்பில் வெள்ளம் : வீடுகள் அலங்கோலமானது  : மனம்நெகிழ வைக்கும் புகைப்படங்கள்

மிகச் சிறந்த தமிழ்க் கதைகளில் தமிழ்நதியின் கதைகளும் அடங்கும்

.

கடந்த 15 ஆண்டுகளில் எழுதப் பட்டிருக்கும் மிகச் சிறந்த தமிழ்க் கதைகளில் தமிழ்நதியின் கதைகளும் அடங்கும். தமிழ்நதிக்கு வாய்த்திருக்கும் மொழி அபூர்வமானது. அவர் சொற்கள், நிலைபெற்ற அர்த்தத்தோடு, யோசித்துப் பெறத்தக்க ஆழப் பொருள்களைக் கொண்டதாக இருக்கும். ஆடம்பரம் அற்ற, அடக்கமான தொனியுடன் கூடிய அவர் கதைகள், பாத்திரங்களின் செயற்பாடுகளை மேற் கட்டுமானமாகவும், அச்செயற்பாடு களின் மன ஊக்கிகளை அடிகட்டு மானமாகவும் கொண்டிருக்கும். நாளின் நிகழ்வுகளைப் பட்டியலிடும் யதார்த்தக் கதைகள் அல்ல, தமிழ் நதியுடையது. நிகழ்வுகளின் மனக் காரணிகளைச் சித்தரிக்கும் ஆழ் யதார்த்தக் கதைகள் அவருடையவை.
ஈழத்தின் திரிகோணமலை நதி மூலம். யுத்தம், அவரைக் கனடாவுக்குப் புலம்பெயர்த்தியது. சென்னை வேடந் தாங்கல். அவர் நீராலானவர். ஒரு பேட்டியில் அவர் சொன்னபடி நதி பிடிக்கும் என்பதால் தமிழ் நதி ஆனார், கலைவாணி. ‘நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது’ எனும் பெயரில் சிறுகதைத் தொகுப்பும், ‘கானல் வரி’ குறுநாவல், யுத்த வரலாற்றைச் சொல்லும் அரிய படைப்பான ‘பார்த்தீனியம்’ என்ற அண்மை நாவலும், தற்போது தமிழக, உலகப் பத்திரிகைகளில் வெளியான நான்கு ஆகச் சிறந்த சிறுகதைகளும் என்முன் இருக்கின்றன.
காற்று, மரங்களை அசைக்கும். இலைகள் பெயர்ந்து காற்றில் மிதக்கும். தான் செல்லும் திசையை இலை தீர்மானிப்பதில்லை. தமிழ் நதி, இந்த இடப்பெயர்வில் தன் வேரோடும் பெயர்ந்து கொண்டிருக்கிறார். இந்த அலைவை அவர் கதைகளாக்கி இருக் கிறார். மூன்று அம்சங்களை அவர் கதைகளில் பார்க்க முடிகிறது. தன்பால், இனத்தின் மேல் கவிந்திருக்கும் சமூக மரபு, பண்பாட்டின் பெயரால் ஒடுக்கப்படும், சகல வன்முறைக்கும் எதிராக மனித அறத்தை அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். எல்லாக் காலத்துக்கும் பொதுவான அன்பை முன்னிறுத்தும் மானுட அறத்தை அடர்த்தியாகப் பேசுகிறார் தமிழ்நதி.

துயரம் ததும்பும் துரியோதனன் படுகளம் - பிருந்தா சீனிவாசன்

.

சித்திரை மாதம் வட தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானது அக்னி வசந்த விழா. திரௌபதி அம்மன் கோயில்கள் அமைந்துள்ள கிராமங்களில் இந்தத் திருவிழா நடைபெறும். ஊராரின் விருப்பத்தையும் பொருளாதாரத்தையும் பொறுத்துப் பத்து முதல் பதிமூன்று நாட்கள்வரை இவ்விழா நடைபெறும். பகலில் ஊர்ப் பொது இடத்தில் பாரதக் கதை படிக்கப்பட்டு, இரவில் அது கூத்தாக நடத்தப்படும். திரௌபதி அம்மன் திருவிழாவின் சிறப்பம்சம் இரவுகளில் நடைபெறும் கட்டைக் கூத்து எனப்படும் பாரதக் கூத்துதான். கடைசி நாளின் கூத்தான கர்ண மோட்சம் விடிய விடிய நடைபெறும். வானம் வெளுக்கத் தொடங்கும்போதுதான் கர்ணனின் உயிர் பிரியும். இனி மிஞ்சியிருப்பது துரியோதனன் மட்டுமே. அன்றைய பகல் பொழுது துரியோதனன் படுகளமாக விரியும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வாலாஜாபேட்டையை அடுத்த ஒழுகூர் கிராமத்தில் அரங்கேறியது துரியோதனன் படுகளம். சோளிங்கர் ஸ்ரீபாரத மாதா நாடக சபா குழுவினரால் நடத்தப்பட்ட கூத்தைக் காண மொத்தக் கிராமமும் பள்ளி மைதானத்தில் குவிந்திருந்தது. மைதானம் முழுமையையும் அடைத்தபடி துரியோதனனின் பிரம்மாண்ட உருவம் மண்ணால் வடிக்கப்பட்டிருந்தது. உருண்டைக் கண்களும் துருத்திய நாக்கும் துரியனின் வீரத்தைப் பிரதிபலித்தன. துரியோதனன் பாடி அழும்போது, சேர்ந்து அழுவதற்காகப் பெரியவர்கள் காத்திருக்க, இளைஞர்கள் கூட்டம் கைப்பேசியில் படம்பிடித்துக்கொண்டிருந்தது.

பிரான்சில் அன்னையர் தினம் - 29 - 05 - 2016- பத்மா இளங்கோவன் (பாரிஸ்)

.
தாலாட்டு...

அன்று நீ பாடினாய்
ஆராரோ.. ஆரிவரோ... ..
அழகான தாலாட்டு
ஆனந்தத் தூக்கமது..!

அம்மா...
நீ சென்றபின்..
இன்று வரையில்லை
அத்தூக்கம்... ..

அன்னையர் தினம்..
அன்னையர் தினமென்று
உலகெங்கும்
பாட்டுக்கள்.. பாராட்டுக்கள்
அம்மாக்களுக்காக... ..!

ரூ.150 கோடி, 2 லட்சம் வேட்டிகள்: அரவக்குறிச்சி, தஞ்சையில் தேர்தல் ரத்து ஆனதன் பின்னணி

.

இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதன் முதலாக 2 தொகுதிகளுக்கு நடைபெற இருந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. காரணம் பெரிய அளவில் வாக்காளர்களுக்கு பணம், பொருள் விநியோகம் நடந்ததாக கடும் புகார்கள் எழுந்ததே.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது இந்திய தேர்தல் வரலாற்றில் தமிழகத்துக்கு ஏற்பட்ட கரும்புள்ளி என்றே அரசியல் நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.
இரு தொகுதிகளிலும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு, அந்தத் தேதியும் இப்போது ரத்து செய்யப்பட்ட நிலையில், தேர்தல் அறிவிப்பு மீண்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையம் இத்தகைய நடவடிக்கை எடுக்கக் காரணம் என்ன?

ஏப்ரல் 22-ம் தேதி அரவக்குறிச்சியில் சி.பி.ஜம்புநாதன் என்பவரின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்ட போது ரூ.4.77 கோடி ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டது. இத்துடன் அதிமுக அரசின் அமைச்சர்களுக்கு தொடர்புடைய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அன்புநாதன் என்பவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்வதோடு, கோயம்புத்தூரில் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். அவர் அதிமுக உறுப்பினரும் கூட என்று தேர்தல் ஆணையம் சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள 29 பக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.