மரண அறிவித்தல்

 .

              திருமதி பூபதியம்மா வடிவேலு  

இலங்கை, யாழ். தச்சந்தோப்பை பிறப்பிடமாகவும், புளியங்கூடலில் வசித்தவரும்,தற்போது அவுஸ்திரேலியா வென்வேத்வில்லை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூபதியம்மா வடிவேலு அவர்கள் வெள்ளிக்கிழமை 02.10.2020 காலை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி.சதாசிவம் நாகம்மா தம்பதிகளின் புதல்வியும்; காலஞ்சென்ற திரு.திருமதி.கந்தையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்; காலஞ்சென்ற திரு.வடிவேலுவின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னார் காலஞ்சென்ற சந்திரபோஸ், காலஞ்சென்ற தியாகராஜா, சுப்பிரமணியம், பத்மாவதி, நித்தியசீலன், கங்காதேவி, காலஞ்சென்ற மல்லிகா தேவியின் அன்பு  சகோதரியும்;

ஹம்சத்வனி,காண்டீபன்,கஜேந்திரன்,தயாவனி,கனீந்திரன்,நித்தியாவனி,கிரிசாவனி,சைலஸ்ரீ, கடோத்கஜன் ஆகியோரின் அன்பு தாயாரும்; 

காலஞ்சென்ற வரதராஜன், லீலா, தேவிகா, வசந்த மோகன், செல்வராணி, ஜெகதீஸ்வரன், கஜேந்திரன், சூரிய ரூபன், றெஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்

ராஜேஷ், ஜர்ஷினி,கீர்த்தனன், நவநிதா, ரஜிந்தன், பானு, கோபி, கீர்த்திகா,ரோசிகா,திசா, கீர்த்திகன்,ரிவி, ரூபி,ரேணுஷன்,அபி,பவன்,பிரஜித்,விதுஜன்,அரஜகன், கிருத்திகா, பிரவீன் ஆகியோரின் அன்பு பாட்டியும்; நிதிஷா,துஷாரா,கிரிகரன், கயல்விழி, கதிரவன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06.10.2020, செவ்வாய்க்கிழமை அன்று பி.. 12.30-3.30 மணி வரை South Chapel, Rookwood Memorial Garden, Lidcombe இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதி கிரியை நடைபெறும்.

விபரங்களுக்கு,

கஜேந்திரன் (மகன்)T.P. No: 0404836012

கீர்த்தி (பேரன்) T.P. No: 04159991400


பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 18 - திருமலை தென்குமரி - சுந்தரதாஸ்

 .


தமிழில் பிரம்மாண்டமான முறையில் பக்தி படங்களை தயாரித்து இயக்கி வெற்றி பெற்றவர் ஏபி நாகராஜன். சிவாஜியின் நடிப்பில் இவர் உருவாக்கிய பக்தி படங்கள் வெற்றி பெற்று இன்றும் ரசிகர்களை கவர்ந்த வண்ணம் உள்ளது. ஆனாலும் பட விநியோகம் சம்பந்தமாக இவருக்கும் சிவாஜியின் தம்பி வீ சி சண்முகத்துக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக குருதட்சனை படத்துக்கு பிறகு சிவாஜியை போட்டு படம் எடுப்பதை விடுத்து சிறிய நடிகர்களை நடிக்க வைத்து படங்களை தயாரித்து இயக்கினார், அவ்வாறு 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் நாகராஜன் உருவாக்கிய படம்தான் திருமலை தென்குமரி.

காற்றில் கலந்த இசைக் கலைஞர் சத்தியமூர்த்தி - செ .பாஸ்கரன்

.

இசை வெள்ளத்தில் ஆழ்த்திய இதயம் ஒன்று தன் மூச்சை நிறுத்திக் கொண்டது. சிட்னியில் நான் அறிந்த நாள் முதல் நாதஸ்வரம் என்றால் அது சத்தியமூர்த்தி. புலம் பெயர்ந்த நாட்டிலும் மேடையில் நாதஸ்வர இசையை கேட்க முடியும் என்ற நம்பிக்கைக்கு உயிர் கொடுத்தவர் திரு சத்தியமூர்த்தி .

பல நாதஸ்வர இசைக் கலைஞர்களுக்கு முன்னால் உட்கார்ந்திருந்து, கண் விழித்தும் கண் துயின்றும் , பாதி நித்திரை பாதி விழிப்பு நிலையிலிருந்து நாதஸ்வர இசை கேட்டு வளர்ந்தவன் நான். அந்த இசை என்றால் ஒரு பற்று, அதை புலம்பெயர்ந்த ஆரம்ப காலத்தில் கேட்டதென்றால் சத்தியமூர்த்தி அவர்களுடைய இசைதான். திரு சத்தியமூர்த்தியும் திரு வைத்தீஸ்வரநும் இணைந்து நமக்கும் ஒரு நாதஸ்வர குழு அவுஸ்திரேலியாவில் இருக்கின்றார்கள் என்பதற்கு முத்தாய்ப்பு வைத்தவர்கள்.

கோவில்கள், பாடசாலைகள், திருமண விழாக்கள், மங்கல நிகழ்வுகளில் மங்கல இசை திரு சத்திய மூர்த்தி என்று பொறிக்கப் படாத நிகழ்ச்சி நிரல்களே இருக்காது. சிட்னி முருகன் கோவிலில் ஆஸ்தான வித்துவானாக நீண்டகாலம் முருகனோடும் மயில் வாகனத்தோடும் கூடவே வலம் வந்த இசைக்கலைஞன் இன்று தன் சேவைகள் போதுமென்று எண்ணி விட்டார் போலும் குழலை சாய்த்து வைத்து விட்டார்.

இசைக்கலைஞர் சத்தியமூர்த்தி பற்றி பல முகங்கள், பல பார்வைகள், பல பக்கங்கள். ஆனால் எனக்கு அறிமுகமான சத்தியமூர்த்தி நித்தி, சக்தியாக அறிமுகமானவர்கள். எங்கும் எதிலும் கணவன்-மனைவியாக சிரித்த முகத்துடன் காட்சி தருவார்கள். அன்பாக பேசுவதும் அரவணைத்து நடப்பதும் அவர் இயல்பு. காணுமிடமெல்லாம் எப்படி பாஸ்கரன் என்ற சுக விசாரிப்பு இருக்கும். கோவில்களில் நாதஸ்வரம் வாசித்து கொண்டு வருவார் காணும்போது ஒரு தலையசைப்பு, அது நாதஸ்வர கலைஞனுக்கு உரிய நலம் விசாரிப்பு. அல்லது கண்ணைச் சிமிட்டி என் அக்கறையை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று சொல்வது போல் ஒரு அறிவிப்பு. இந்தக் கலைஞனால் எப்படி இப்படி இருக்க முடிகிறது என்று ஆச்சரியம். என்னுடன் மட்டும்தானா இவர் இப்படி அன்பாக நடக்கின்றார் அல்லது எல்லோருடனும் இப்படித்தானா என்று என்னையே கேட்டுக் கொள்வேன்.

இன்று அந்த இசைக்கலைஞன் சத்தியமூர்த்தி நம்மிடையே இல்லை. இதை நம்பித்தான் ஆகவேண்டும். நாளை நான் கோவிலுக்கு போகும்போது குங்குமமும் சந்தனமும் கலந்து வைத்த பொட்டும் , கழுத்தில் நீண்டு தொங்கும் பதக்கத்தோடு கிடக்கும் சங்கிலியும், தழையத் தழைய கட்டிய பட்டு வேட்டியும் வலது கையால் பிடித்து இடது தோளில் சாத்திய நாதஸ்வரத்துடன் கைவிரல்களில் மின்னும் தங்க மோதிரங்களுடன் கலைஞனுக்கே உரிய நிமிர்வோடு பார்வதி, பரமேஸ்வரன் போல் நித்தி பக்கத்தில் நிற்க காட்சி தரும் அந்த நாதஸ்வர இசை கலைஞரை இனி காண முடியாது.

நிறபேதம்

      பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி   


சிவபெருமான் மனிதவினம் படைத்த ஞான்று

      சேர்த்தளித்த நுகர்பொருள்கள் அனுப வித்துப் 

பவவினையைச் சிவவாழ்வில் நீக்கி நீக்கிப்       

        பக்குவநிலை எய்தச்சிவ தொண்டொடு தியானம் 

உவந்தியற்றி  இறவாப்பே ரின்ப நிலையை       

        உலகத்தோர் அடைந்திடாது இனமத வெறியால் 

அவப்பொழுது போக்கின்றார்! நிறபே தத்தால்       

        அழிவுகளைச் செய்தழிந்து மாழ்கின் றாரே!  

  

போதுமிந்த நிறபேதம் காட்டும் தீமை     

        போக்கற்ற சிலரிதனைத்  தூண்டத் தூண்டச் 

சூதுவாது தெரியாத அப்பா வியரும்     

        துன்பத்தில் நிதமிதனால் துடிக்கக் கண்டோம்! 

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று     

        நயம்படவே உரைத்திட்டான் தமிழன் அன்று 

ஏதமில்லா இக்கூற்றைத் தேவ வாக்காய்     

    எவ்வினமும் ஓம்பிவந்தால் இன்பம்! இன்பம்!!        

நாகசுரக் கலைஞர் மா.சத்தியமூர்த்திக்கு வானலை வழி ஓர் அஞ்சலி - கானா பிரபா

 


தமிழ் அவுஸ்திரேலியர்களின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த அன்புக்குரிய நாகசுரக் கலைஞர் மாசிலாமணி சத்தியமூர்த்தி அவர்களுக்கு அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் 2 மணி நேரம் கடந்து வானலை வழி அஞ்சலி நிகழ்வை எடுத்திருந்தோம்.

இந்த நிகழ்வில் அன்பர்கள் பலர் சத்தியமூர்த்தி அவர்களின் நினைவை ஆற்றொணாத் துயரோடும், அழுதும், நெகிழ்ந்தும் பகிர்ந்து அந்தக் கலைஞனுக்கு ஆத்மார்த்தமானதொரு அஞ்சலியைக் கொடுத்திருந்தார்கள்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ய உதவிய அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன இயக்குநர் திரு வை.ஈழலிங்கம் அவர்களுக்கும் சிட்னி கலை, மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் நடப்பாண்டுச் செயலாளர் திரு.அனகன்பாபு அவர்களுக்கும், நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

அந்தப் பகிர்வைக் கேட்க


நெஞ்சமெலாம் மகாத்மாவாய் நிறைந்திட்டார் காந்திஜீ !

 

கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... ஆஸ்திரேலியா 




கத்தியும் ரத்தமும் கையெடுக்கா மனிதர்
சத்தியமாய் உருக்கொண்ட உத்தம மனிதர் 
சொத்தாக சுதந்திரத்தை உளங்கொண்ட மனிதர் 
இத்தரையில் வரமாக வந்தமைந்தார் காந்தி 

தேசபிதா எனவழைக்கும் சீர்மையுடை மனிதர்
காசுழைக்கும் தொழிலதனை கண்டிடா மனிதர்
மாசுடைய மனமதனை வாழ்வேற்கா மனிதர்
மாநிலத்தில் காந்தியாய் வந்தாரே சிறக்க 

எளியவுடை  இன்புடனே ஏற்றிட்ட மனிதர்
ஏழைகளை கையணைத்து வாழ்ந்திட்ட மனிதர்
பழிகண்டு துணிவோடு களைத்திட்ட மனிதர்
பார்போற்ற காந்தியாய் பரிமளித்தார் வாழ்வில்

ரசிகனில் கலந்த அசல் கலைஞன்! ஆனந்த விகடனில் என் பதிவு - கானா பிரபா

 


பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவை அதிர்ச்சியோடு மொழி கடந்து நாம் எல்லோரும் எதிர்கொண்டோம்.

இந்தச் சூழலில் ஆனந்த விகடனில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு எஸ்பிபி பற்றி என் உள்ளக் கிடக்கையை எழுதித் தருமாறு.
 
என்னுடைய மூன்று பக்க முழுக் கட்டுரையை அப்படியே இந்த வார விகடனில் பிரசுரித்தார்கள்.
இத்தனை ஆயிரம் பேர் இருக்க ஈழத் தமிழனான என்னைத் தேடி வந்த இந்த அழைப்பு ஒரு பெரும் பேறு. அதிலும் எஸ்பிபிக்காக இந்த இதழில் வந்திருக்கும் ஒரேயொரு கட்டுரையும் இதுவே.

அந்தக் கட்டுரையையும், கட்டுரையின் முகப்போவியத்தையும் இங்கே உங்களோடு பகிர்வதில் பெருமிதமடைகின்றேன்.

தினகரனை அலங்கரித்த பேராசிரியர் கைலாசபதி

 Friday, October 2, 2020 - 6:00am

படைப்பாளிகளுக்கு பத்திரிகையில் களம் அமைத்துக் கொடுத்ததன் மூலம், ஈழத்து இலக்கியத்துக்கு தனித்துவ பாதை வகுத்து  கொடுத்த ஊடகத்துறை பேராசான்

ஏரிக்கரை பத்திரிகை (Lake House) என வர்ணிக்கப்படும் தினகரன் 1932 ஆம் ஆண்டு முதல் நாளிதழாக வெளியாகிறது. 23-.05.-1948 ஆம் திகதியன்று தனது முதலாவது தினகரன் வாரமஞ்சரியை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. ஆங்கில, சிங்கள ஏடுகளையும் சஞ்சிகைகளையும் வெளியிட்டு வரும் ஏரிக்கரையிலிருந்து இயங்கும் Lake House என்ற பெரிய நிறுவனத்தின் ஒரே ஒரு தமிழ்த் தினசரி தினகரன்.

அது வெளிவரத் தொடங்கிய காலகட்டத்தில் மற்றும் ஒரு இந்திய ஊடகம் என்ற மாயைதான் இலங்கை வாசகர்களிடம் உருவாகியிருந்தது. தினகரனை இலங்கையின் தமிழ்த் தேசியப் பத்திரிகையாக்கிய பெருமை பேராசிரியர் க. கைலாசபதியையே சாரும்.

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 34 – தேவதுந்துமி/உருமி – சரவண பிரபு ராமமூர்த்தி


தேவதுந்துமி/உருமி – தோற்கருவி தேவதுந்துமி, உருமி மற்றும் பழங்குடியினர் உருமி ஆகியவை உருமி என்கிற பொதுப் பெயரில் அழைக்கப்பட்டாலும் இசைக்கப்படும் முறையிலும், அமைப்பிலும் தோலிலும் வேறுபாடுகள் உடையவை.  தேவதுந்துமி - தேவதுந்துமி இசைக்கருவி ராஜகம்பள நாயக்கர் சமூக மக்கள் பயன்படுத்துவது. உருமி போன்ற பொது அமைப்பை உடையது. உருண்டை வடிவமான தோற்றமும் நடுவில் குறுகியும் ஓரங்களில் பருத்தும் இருக்கும். உடல் பகுதி வேங்கை மரத்தில் செய்யப்படுகிறது. குறுகிய பகுதியில் இரண்டு சிறிய ஓட்டைகள் இருக்கும். காற்று சுழற்சிக்கு அமைக்கப்படும் இது இக்கருவியின் ஒலியை சீராக்குகிறது. உடுக்கையை பெரிதுபடுத்தி நினைத்துப் பாருங்கள் அந்த வடிவம் தான் தேவதுந்துமியினுடையது. இந்த உடுக்கை வடிவமான பலகையில் இரண்டு பக்கமும் தோல் வார்க்கப்படும். முகத்தின் அளவு 9 இன்ச். மூன்று மாத  வெள்ளாட்டு தோலை நன்கு காயவைத்து,

வட்டமாக  கத்தரித்து  வேங்கை மரப்பலகையில்  கட்டப்படும். கட்டும்போது முறையாக நிதானமாக கட்டவேண்டும். கொஞ்சம் இழுத்து கட்டினால், தோல்பகுதி சிதிலடைந்துவிடும். இடப்பக்கத் தோலில் வளைந்த நொச்சி குச்சியை அழுத்தி இழுத்து உராய்ந்து ஓசை எழுப்புவர். வலப்பக்கத் தோலில் வளைந்த விராலி அல்லது புரசன் குச்சியைப் பயன்படுத்தி அடித்து ஒலி எழுப்புவர். தேவதுந்துமி இசை ஒலி வருவதற்கு கருவியில் இருக்கும் தோலில் உண்ணங்குடி/கிளுவை கொடியின் பாலை சேகரித்து விளக்கெண்ணெயுடன் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். தேவதுந்துமியின் ஒங்கார ஒலிக்கு இந்த உண்ணங்குடி பால் தான் மிக முக்கியம். எப்பேர்ப்பட்ட பனி, மழை காலங்களில் கூட இந்த உண்ணங்குடி பால் கருவியின் தோலில் தேய்த்தால் ஒலி அதிர்வு பல மைல் கேட்கும்.  உருமி : பம்பை இசைக்கருவியை விட நீளமானது உருமி. வேங்கை, மா அல்லது பலா மரத்தில் செய்யப்படும். வேங்கை மரம் எல்லாம் இப்பொழுது கிடைப்பதில்லை என்கிறார்கள் கலைஞர்கள். உடல்பகுதி நடுவில் சற்று குறுகி இருக்கும். இதற்கும் ஆட்டுக்குட்டியின் தோல் தான். உருமும் பகுதி மைக்கு அறுமுக களிம்பு(நாட்டு மருந்து), கண்மை அல்லது வண்டி மை பயன்படும். 

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் - அங்கம் 33 - “ விதியே, விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ..? “ ஆண்டி மாஸ்டர் – சத்தியமூர்த்தி நினைவுகள்

   எனது வாழ்க்கைப்பயணத்தில்  ஆரம்பம் முதல் இன்று வரையில்,  பலர் தொடர்ந்து இணைந்து


வந்துள்ளனர். எனக்கும் எனது வாழ்க்கை ரயில் பயணம் போலத்தான் அமைந்தது. ஒவ்வொருவரதும் கனவுகள், எண்ணங்கள் எப்படி இருந்தபோதிலும்  விதி இடையில் புகுந்து,  “ இதோ நானும் இருக்கின்றேன்  “  என்று அலைந்துழலச் செய்துவிடும்.  பின்னர் அதற்குத்தகுந்தவாறு நாம் வளைந்தும் நெலிந்தும் குறுகியும், குனிந்தும், நிமிர்ந்தும்  ஓடவேண்டியதுதான்.  ஊர் விட்டு  ஊர் ஓடி, நாடுவிட்டு  நாடு ஓடி, வாழ்க்கையின் ஓரத்திற்கு ஓடிவந்து தரித்து நிற்கும்  காலத்தில், அன்று  யாழ். புனித யோவான் கல்லூரியில்  கற்கும்போது பூமிசாத்திரப்பாடத்தில் பார்த்த அவுஸ்திரேலியா கண்டம்  என்னை  இறுதியில் வாழும் இடமாக்கியது .  

இது எவ்வாறு நிகழ்ந்தது..? விதியன்றி வேறு என்ன..? தென்னிலங்கைக்கு வேலைவாய்ப்புடன் வந்து, வடக்கிற்கு மணியோடர் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்திய எமது சமூகத்தவர்கள், இனவாதிகள் அடித்து கலைத்தபோது, மீண்டும் ஊருக்கே ஓடினர்.  கலவரமும் கடந்து செல்லும் வான் மேகங்கள்தானே (Passing Clouds ) என்று  அமைதியடைந்து மீண்டும் தென்னிலங்கை  வந்தார்கள். பிறகு, மீண்டும் கலவரம் வந்ததும்.  இனி இந்த நாடே வேண்டாம் என்று வெளிநாடுகள் தேடி ஓடிவந்தார்கள்.  அகதியாக – பரதேசியாக அலைந்துழன்று,  தஞ்சமடைந்த


நாடுகளில்  வதிவிட உரிமையும் பெற்றார்கள்.  பிரஜா உரிமையும் கிடைத்தது.  அவ்வாறு வரமுடியாதவர்கள்  நீடித்த போரில் செத்து மடிந்தார்கள். வெளித்தேசங்களில் பிரஜாவுரிமை பெற்றவர்கள்,  இரட்டைக்குடியுரிமையுடன் மீண்டும் தாயகம் சென்று பொருளாதார வளம் தேடி மூலதனம் இட்டார்கள்.  நான் முன்னர் வாழ்ந்த வெள்ளவத்தையில் இப்போது  யாழ்ப்பாணக் கடையும் கோலாகலமாக  திறந்து விட்டதாகவும்  செய்திவருகிறது. யாழ்ப்பாண உற்பத்திகள் அனைத்தும் அங்கு விற்பனைக்கு  வந்துவிட்டன.  

யாழ்ப்பாணம் கறி மிளகாய்த்தூளில் சமைத்தால்தான் நாவுக்கு ருசியென்று புகலிடத்திற்கும் அது வந்துவிட்டது.  வாழ்க்கையின் ஓரத்தில் நின்று படுக்கையில் அமர்ந்து அனைத்தையும் யோசித்துப் பார்க்கின்றேன். எங்கள் ஞானகுரு பாரதியும் நினைவுகளில் வந்து சஞ்சரிக்கிறார். விதியே, விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித் தன்மையும் தனது தருமமும் மாயாது என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால் வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ? தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று உள்ளுறு தருமமு உண்மையும் மாறிச்  சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ? ‘அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ? வானுறு மீனோ? மாளிகை விளக்கோ? கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ? விதியே, தமிழச் சாதியை எவ்வகை விதித்தாய்’ என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய். பாரதியோடு  நான் முன்னர் எழுதிய கவிதை ஒன்றும் நினைவுக்கு வருகிறது. 

புலம் பெயர்ந் தேகிப்          புது நிலன் புகுந்து நலன் பெற முந்திய          நம்மவர் சுவடுகள் போதென மலர்ந்து          புதுவழி புலர்ந்தால் யாதும் ஊரெனும்         ஞாலமும் தெளியும்.  ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த என்னை இந்த நிலைக்கு நான் வருவதற்கு யார் காரணமாக இருந்தார்கள்..? என்று சிட்னி வீட்டின் முகட்டைப்பார்த்துக்கொண்டு யோசிக்கின்றேன். வளரும் பயிரை முளையிலே கிள்ளி எறிந்துவிடாமல், அதனை போசித்து ஆரோக்கியமாக வளர்த்த பெருந்தகைகள் யார்..? யார்…? யோசிக்கின்றேன்.  தெல்லிப்பழையில் நான்கு ஆண்டிகள் இருந்தார்கள். கதிரையாண்டி, மலையாண்டி, பிச்சாண்டி, பழனியாண்டி. இவர்கள் நால்வரும் உடன்பிறந்த சகோதரர்கள். மூத்தவர் கதிரையாண்டி.  ஆசிரியராக தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் பணியாற்றியவர்.  

வித்தகத் தமிழ் வேள்வி விளைத்த புதுத் தலைமுறை பரமபுத்திரன்

     


ளையோர் மத்தியில் தமிழை விதைக்க பலபேர் உலகில் முயல்தல் அறிவோம். அதியுயர் நிலையில் உள்ளவர் பலர் ஆங்கிலத்தில் எழுதி தமிழ் என்று வாசிப்பது எங்கள் காதுகள் செய்த பாவத்தின்  சம்பளம் எனலாம்.    காலத்திற்கேற்ப கருத்துகள் செறிந்து ஞாலத்தில் நல்ல தமிழ்  தலைமுறை செழிப்புடன் எழுந்து வனப்புடன் நிலைக்க விதையிடல் மட்டும் போதுமன்று அதனை வளர்த்து விடுதல் அதனிலும் முக்கியம். ஆதலால் புதிய தலைமுறையை இணைத்து, திகடசக்கர வித்தகத் தமிழ்  வேள்வி என்னும் நிகழ்வினை இணைய மூலம்  நாடாத்தியுள்ளது. இங்கு விவாத அரங்கு எனும் நிகழ்வை உருவாக்கி நிகழ்வில்  வாதி அல்லது பிரதிவாதி ஐந்து நிமிடங்களுக்குள் தனது அறிவுசார்ந்த வாத மற்றும் பேசு  திறமையை வெளிக்காட்டலாம். இந்த முயற்சி திகட சக்கர குழுவினர்க்கு மட்டுமல்ல அதில் பங்கு பற்றிய போட்டியாளர்களுக்கும் நற்பலன் தந்துள்ளது என்று கூறலாம். வெற்றி தோல்வி என்ற தலைப்பை நீக்கிவிட்டு அவதானித்தால்  புதிய போட்டியாளர்கள், புதிய தலைப்புகள், புதிய களம் என்று அமைத்து, தேவையற்ற பேச்சுக்களைத்  தவிர்த்து, அவை எல்லாவற்றையும் வென்று, வித்தகத் தமிழ்  என்று பெயர் வைத்துக்கொண்டு புதிய இளைய தமிழர் தளத்தை உலக மட்டத்தில்  வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள் பாராட்டலாம்.   


The Tragic Tale Of The Great Auk

வார இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமைகளில் பிள்ளைகளுக்கான சில வகுப்புகள் நிமித்தம், வலுக்கட்டாயமான நூலக வருகை,வழமையாய்ப் போனது. அவ்வாறொரு ஞாயிறு, பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்டவெனச் சில நூல்களைத்  தேடியலைகின்ற பொழுது,
 கண்ணில் தென்பட்டது ' The Tragic Tale Of The Great Auk'. ஜன் தோர்ண்ஹில் எனும் ஒரு கனடிய எழுத்தாளரின் சிறுவர்களுக்கான படைப்பு அது.

சில கணப்பொழுதேயான நுனிப்புல் மேய்ச்சலின் பின், குழந்தைகளுக்கான அன்றைய இரவின் செவியுணவாக அந்த நூலைத் தேர்ந்தெடுத்தேன்.

பத்தோடு பதினொன்றாக ஒரு சிறுவர் கதை என்ற மனப்புலம் எனக்குள்; திடீர் திருப்பங்களும் தேவதைகளும் பட்டாம்பூச்சிகளும் சிறகடிக்கும் உலகிற்கான திறவுகோல் கொண்டு, அப்பா புதியவோர் உலகினுள் கூட்டிச் செல்லும் கனவுகள் பிள்ளைகளுக்குள்; ஆளுக்கொரு பக்கம் அமர்ந்துகொண்டார்கள்.\
அற்புதமான கம்பீரமான கிறேற் ஆவ்க் பறவைகள்
இன்றைக்கு நானூறு  ஆண்டுகளுக்கு முன், வட அமெரிக்கா, மற்றும் ஐரோப்பாவின் குளிர்மிகுந்த கடல்களில்  நிறைந்திருந்தன.

இன்றோ எம்முடன் இவை இல்லை

ஏன்? இவற்றுக்கு என்னவாயிற்று?

இதன் பேரழிவின் மிக முக்கியமான சூத்திரதாரி மனிதனே; எனினும்
இந்தப் பறவைகளின் உடலமைப்பும் பழக்க வழக்கங்களும்  இவற்றிற்கு ஆபத்தினை அதிகரித்துத் தந்தது. தப்பியோடும் மானின் கொம்பு கொடியினிற் சிக்கி அதன் உயிருக்கு உலை வைத்தாற் போல என வையுங்கள்; 
அல்லது
தலைமுறை தலைமுறையாக இப்பறவையின் மரபணுச் சங்கேதப் பரிமாற்றங்களில்,ஒரு காலத்தில் மனிதன் என்று ஒரு உயிரினம், தமது இரை விழுங்கியாக வரும் என்ற தரிசனம்  ஊடுகடத்தப்படாததால் அழிவு நிகழ்ந்ததா?

புதியதோர் உலகமதை செய்திடுவோம் வாருங்கள் !

கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  ... மெல்பேண் .... அவுஸ்திரேலியா 

ஓடிவரும் நதியெல்லாம் வேறுபெயர் கொண்டாலும்
சேருமிடம் கடலெனவே சிந்தையிலே இருத்திடுவோம் 
மாறுபடு கொள்கையினால் கூறுபடு மனிதவினம் 
சீரழிந்து சிறபழிந்து சிதறுண்டு போகிறதே 

புற்றீசல் போலவே பொல்லாத எண்ணங்கள் 
புறப்பட்டு புறப்பட்டு  புண்ணாக்கி நிற்கிறது
கற்றிடுவார் கசடுவறக் கற்காத காரணத்தால்
கண்ணியமோ காற்றிலே பறந்துவிடக் காணுகிறோம் 

புதியதோர் உலகமதை செய்திடுவோம் எனவுரைக்கும்
மதியுரைஞர் பலரிருந்து வரவவரும் மறுக்கின்றார்
தனியுடமை எனுமுணர்வு தலையெடுத்து அவர்வரவை
தடுப்பணைகள் போடுவதை தானிப்போ காணுகிறோம் 

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக் கூட்டத்தில் அமரர் கலைவளன் சிசு. நாகேந்திரன் நினைவரங்கு ! - முருகபூபதி

https://www.facebook.com/100023681301684/videos/789780061821363/


 அவுஸ்திரேலியாவில் நேற்று 03 ஆம் திகதி இரவு நடந்த ( அமரர் ) கலைவளன் சிசு.நாகேந்திரன் அய்யா அவர்களின்  நினைவுப்பகிர்வு   நிகழ்ச்சி, இணையவழி காணொளி அரங்கில் நடைபெற்றது.              ( அமரர் ) கலைவளன் சிசு.நாகேந்திரன்   அவர்கள் எழுத்தாளர்,  மூன்று நூல்களின் ஆசிரியர், நாடககூத்துதிரைப்பட  நடிகர்,  ஒளிப்படக்கலைஞர்.  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின்  முன்னாள் தலைவர் – காப்பாளர்.  



சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரியும் (17-25/10/2020) Chandi Maha Yagamமும் (18/10/2020)




தாய்மை - நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர்

 .



“தாயிற் சிறந்த கோயில் இல்லைஇது மூத்தோர் வாக்கு, தாய் என்பவள் பத்து மாதங்கள் குழந்தை தன் உள்ளே வளர்த்து இந்த உலகுக்கு கொணர்பவள். குழந்தை ஆகாரம் அருந்தும் வரை தனது உதிரத்தையே ஆகாரமாக அளித்து குழந்தையை வழர்க்கிறாள். அதன் பிறகும் அந்த குழந்தை ஆழாகும் வரை கண்ணின் மணியென குழந்தையை வளர்க்கிறாள். எத்தனை எத்தனையோ தியாகங்கள். தாய் என்பவள் கொடுக்கும் அன்பு ஒப்பு உயர்வற்றது. தன் உதிரமும் தசையுமாக பெற்றெடுத்த குழந்தை என்பதா இதற்கு காரணமாகிறது. இந்த தாய்மை என்ற குணம் பெண்ணுக்கு இயற்கையாகவே அமைந்ததா?

ஏன் மிருகங்கள் கூட தாய்மை அடையும் போது தான் பெற்ற செல்வங்களை கண்ணின் மணியென காப்பாற்றுவதை நாம் காண்கிறோம். வீட்டில் வளரும் பூனை குட்டி போட்டதும் குட்டிகளை எத்தனை பத்திரமாக காலி இடங்களை மாற்றி பாதுகாப்பாக வழர்ப்பதை பார்த்தால் அட நாம் மட்டுமா பெற்ற பிள்ளையில் பாசம் பொழிகிறோம். இந்த நான்கு கால் மிருகம் பாவம் அதிலும் வெகு சிறிய மிருகம் இதுவும் பெற்றெடுத்த குட்டியை வளர்க்க எத்தனை முயற்சி எடுக்கிறது. இதை பார்க்கும் போது தான் தாய்மை என்பது இயற்கையாக ஏற்படும் குணமோ என எண்ணத் தோன்றுகிறது.

இலங்கைச் செய்திகள்

கொழும்பு, பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில்

சர்வதேச நீதி கோரி நேற்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

20 ஐ எதிர்த்து இதுவரை 39 மனுக்கள் தாக்கல்

100 வீடுகள் கொண்ட தொடர்மாடி குடியிருப்புகள் அமைக்க திட்டம்

முகமாலையில் மீட்கப்பட்டது பெண் புலியின் எலும்புக்கூடு

தேசிய நல்லிணக்கமே தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு

பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கில் த.தே. கூட்டமைப்பு 06 பேரும் விடுதலை

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக ப. சத்தியலிங்கம்


கொழும்பு, பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில்

கொழும்பு, பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, முதன்மை அதிதியாக நேற்று கலந்து கொண்டபோது பிடிக்கப்பட்ட படம். நிகழ்வில் கலந்துகொண்ட சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் (பாபு சர்மா), கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இந்துக் கல்லூரியின் அதிபர் டி.பீ.பரமேஸ்வரன், ஆகியோயோரையும் படத்தில் காண்க.  நன்றி தினகரன் 

சிட்னி / மெல்பேர்னில் நடைபெறும் நிகழ்ச்சிகள்.

.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்

தற்போது நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை  கவனிப்போம், அதாவது அதிகபட்சம்  (எந்த நேரத்திலும் 100 மட்டுமே மற்றும் ஒரு நபருக்கு நான்கு சதுர மீட்டர் )



சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்  
     

25/10/2020 Sun   “இலக்கியவெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்”  
                               இணைந்து நடத்தும்  -  இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 3
                                “படைப்புலகில் அ.முத்துலிங்கம்”
                                 Join Zoom Meeting :  இலங்கை நேரம் - மாலை 7.00 :  AEST: 11.30 pm 
                                 (AEDT: 00:30AM 26/10/2020 for NSW & Vic)
            https://us02web.zoom.us/j/89295172679?pwd=aktCREp2cnpiQ2cvaDhwQ0x6WHRsQT09     
            Meeting ID: 892 9517 2679  Passcode: 123456        


                                                                            
        
Melbourne ல் நடைபெறும் நிகழ்வுகள்

சிட்னி இலக்கிய கலை மன்றம் நடாத்தும் திருக்குறள் மனனப் போட்டி - 11/10/2020


தற்போது அவுஸ்திரேலியாவில் பரவி வரும் கொரோனா (COVID-19 Coronavirus) தொற்று நோய் தொடர்பில் மத்திய அரசு, மாநில அரசு , மற்றும் சுகாதாரப் பிரிவு வழங்கும் அறிவித்தலுக்கு அமைய 

அனைத்து போட்டிகளும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் காலை 10.00 மணியிலிருந்து நடைபெறும்.  

போட்டி நடத்தப்படும் பிரிவுகளும் வயது வரம்பும்.

பாலர் ஆரம்ப பிரிவு (01.08.2015 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்)

பாலர் பிரிவு (01.08.2013 க்கும் 31.07.2015 க்கும் இடையில் பிறந்தவர்கள்)

கீழ்ப்பிரிவு (01.08.2011 க்கும் 31.07.2013 க்கும் இடையில் பிறந்தவர்கள்)

மத்தியபிரிவு (01.08.2008 க்கும் 31.07.2011 க்கும் இடையில் பிறந்தவர்கள்)


மேற்பிரிவு     (01.08.2005 க்கும் 31.07.2008 க்கும் இடையில் பிறந்தவர்கள்)

அதிமேற்பிரிவு     (01.08.2001க்கும் 31.07.2005 க்கும் இடையில் பிறந்தவர்கள்)

போட்டிகளுக்கான விவரங்கள் போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவம், மனனம் செய்யவேண்டிய
குறள்களின் விவரங்களை பின்வரும் போட்டிக்குழு அங்கத்தினர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

உலகச் செய்திகள்

நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 16 பேர் பலி 

ஆர்மேனியா-அசர்பைஜான் மோதல்: பொதுமக்களுடன் 100 பேர் வரை பலி

ஹோட்டலை விமர்சித்தவர் சிறை செல்வதற்கு வாய்ப்பு

ஆப்கான் குண்டு வெடிப்பில் 14 பொதுமக்கள் உயிரிழப்பு

இரட்டை குழந்தைகள் உட்பட 11 பேர் பலி

அசர்பைஜான்–ஆர்மேனியா இடையே இரண்டாவது நாளாக உக்கிர மோதல்

மெக்சிகோ மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: 11 பேர் பலி

15 இல் 10 ஆண்டுகள் வரி செலுத்தாத டிரம்ப்

இந்திய-நேபாள எல்லையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிக்கும் பாகிஸ்தான்

ட்ரம்ப் இராணுவ வைத்தியசாலையில் அனுமதி


நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 16 பேர் பலி 

தென்மேற்கு சீனாவில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் சிக்கிய பதினாறு சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதோடு மேலும் ஒருவர் உயிரிக்கு ஆபத்தான நிலையில் சிக்கிச்சை பெற்று வருகிறார்.

பொருட்களை எடுத்துச் செல்லும் பட்டை ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட தீயினால் ஆபத்தான அளவில் காபனோரொக்சைட் வெளியானதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று சீன அரசு குறிப்பிட்டுள்ளது.

“இலக்கியவெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 3 - 25/10/2020


 


வாசகர் முற்றம் – 10 வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்த பெற்றோரை ஆதர்சமாக கொண்டிருக்கும் சுபாஷினி சிகதரன் ஜெயகாந்தனிலிருந்து ஜெயமோகன் வரையில் பயணிக்கும் தேர்ந்த வாசகி முருகபூபதி


எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்  2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்ட வானவில் கவிதைத் தெகுப்பில் 31 கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. அதில் இறக்கைகள் விரியட்டும் என்ற கவிதையை எழுதியிருந்தவர் மெல்பனில் வதியும் சுபாஷினி சிகதரன்.   “ கவிதை எழுதத்தெரியாத முருகபூபதி,  இந்த நூலை தொகுப்பதற்கு முன்வந்தார்  “  என்றும் அச்சமயத்தில் என்மீது விமர்சனமும் ஒரு சிலரால் வைக்கப்பட்டபோது மௌனமாக சிரித்தேன். கவிதை நயம் நூலை கவிஞர் முருகையனுடன் இணைந்து எழுதியிருக்கும் பேராசிரியர் க. கைலாசபதியும் கவிதை எழுதிப்பழகித்தான் அந்த நூலை எழுதினாரோ தெரியவில்லை!   குறிப்பிட்ட வானவில் கவிதைத் தொகுப்பிற்கு முன்னர் உயிர்ப்பு என்ற கதைத் தொகுதியையும் எமது சங்கத்தின் சார்பில் 2005 இல் வெளியிட்டபோது,  எனது கதை அதில் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டேன். ஆனால், எவரும் அது பற்றி விமர்சிக்கவில்லை.  நடிக்கத்தெரியாத பல இயக்குநர்கள் நெறிப்படுத்திய படங்கள் வெற்றியும் பெற்றுள்ளன. ஆனால், அவர்கள் மீது நடிக்கத் தெரியாதவர் இயக்கவந்துள்ளார் என்று எவரும் முறைப்பாடு சொல்லவில்லை. சரி… அதுபோகட்டும் ! 

 இந்த வாசகர் முற்றத்துக்கு வருகின்றேன். இங்கு நான் நினைவுபடுத்தும் கவிஞர் இ.


முருகையனின்பூர்வீகமான தென்மராட்சியில் சாவகச்சேரி சரசாலையில்  ஶ்ரீதரன் – நகுலேஸ்வரி தம்பதியரின் அருமை மகளான சுபாஷினி, 2004 ஆம் ஆண்டு  நடுப்பகுதியில் குளிர்காலத்தில் மெல்பனுக்கு வந்தவர்,  பதினாறு வருடங்கள் கடந்த பின்னரும்,   உடல் இங்கும் மனம்  தாயகத்திலுமாக  வாழ்ந்துகொண்டிருக்கும்  கலை – இலக்கிய ஆர்வலர். அண்மையில் இவர் எழுதிய  திருவண்ணாமலை தரிசனம் பற்றிய பயண இலக்கியம் படித்து வியந்தேன்.  அழகியல் நேர்த்தியுடன்  அதனை  படைத்திருந்தார்.  அதில் பொதிந்திருந்த  தீவிரமான தேர்ந்த  வாசிப்பு அனுபவமும் எனக்கு புலப்பட்டது. அதனால் நான் எழுதிவரும்  வாசகர் முற்றம் தொடருக்காக அவருடன் தொடர்புகொண்டு பேசநேர்ந்தது. சுபாஷினியை இலக்கிய நண்பரும் எழுத்தாளருமான  ‘ ஜே.கே.  ‘ ஜெயக்குமாரனின் இல்லத்தில் நடந்த சில இலக்கிய சந்திப்புகளிலும் கண்டிருக்கின்றேன். ஆனால், பேசுதற்கு சந்தர்ப்பம் இருக்கவில்லை. 2016 ஆம் ஆண்டு இறுதியில் ஜே.கே. யின் கந்தசாமியும் கலக்சியும் நாவல் வெளியீட்டு அரங்கில் மீண்டும் சந்தித்தபோது,  அவரும் அந்நிகழ்வில் பேசுகிறார் என்பது தெரிந்தது. ஜே.கே.யின் அந்த நூல் அங்கதச்சுவை நிரம்பியது.  வாசிக்கும்போது புன்னகையுடன் அதன் பக்கங்களை புரட்டலாம்.  வாய்விட்டும் சிரிக்கலாம். சுபாஷினி தனது உரையின் இறுதியில்  “ இனி... என்ன... கழுவி ஊத்தப்போகிறார்கள்  “ எனச்சொல்லி முடித்தார்.  சபையினருடன் நானும் சிரித்தேன்.  இலக்கிய சந்திப்பில் அமைதியாக மௌனத்தவமியற்றும் இவரிடமிருந்தும்  இலக்கிய ரீதியாக பெற்றுக்கொள்வதற்கு நிறைய இருப்பதாக அன்றைய  இவரது உரை சாட்சியம் பகன்றது.  அதன்பிறகு நடந்த பல இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு இவரை அழைத்தாலும் வரவில்லை.  சரிதான்... இவரும் காணாமல் போனவர்கள் பட்டியலில் இணைந்துவிட்டாரோ என்று நினைத்துக்கொண்டு மறந்தும் விட்டிருந்தேன்.  

ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சைவ சமய அறிவுத் திறன் போட்டி -- 11/10/2020

 
ற்போதுஅவுஸ்திரேலியாவில் பரவிவரும்கொரோனா (COVID-19Coronavirus) தொற்றுநோய்      தொடர்பில்மத்திய அரசு, மாநில அரசு , மற்றும் சுகாதாரப் பிரிவு வழங்கும் அறிவித்தலுக்கு அமைய 

னைத்து போட்டிகளும்  ஒக்டோபர்   மாதம் 11ம் திகதிஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் பிற்பகல் 2 மணியிலிருந்து நடைபெறும்.   வர்ணம் தீட்டுதல்(பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, திருமுறை ஒப்புவித்தல் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்களும் வழங்கப்படும்)

இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது. 
   
போட்டிகளுக்கான விண்ணப்படிவம் 
போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து 10/10/2020 க்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக durgacomp2020@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் அல்லது ஆலய கரும பீடத்தில்  கையளிக்கப்பட வேண்டும். ஓருவர் அந்தந்த வயதிற்கேற்ற போட்டிகளில் பங்குபற்றலாம். எத்தனை போட்டிகளில் பங்கு பற்றினாலும் ஒரு நபருக்கு போட்டிக்கான நுழைவுக்கட்டணமாக $5 (போட்டி நடைபெறும் தினத்தில்) பெறப்படுகின்றது. 
போட்டிக்கான விதிமுறைகள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை விண்ணப்பப் படிவத்தோடு  கீழே பெற்றுக்கொள்ளலாம். 

எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 11 வடக்கில் மலர்ந்த “ மல்லிகை “ மணம்பரப்பிய பிரதேசங்கள் ! மூவினத்தவரையும் இணைத்த மல்லிகை ஜீவா !! சிங்கள ஆசிரியையின் குரலில் ஒலித்த “ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி… “ பாடல் வரிகள் !!! முருகபூபதி


எமது நீர்கொழும்பு வளர்மதி நூலகத்தின் சார்பில்  நாம் வெளியிட்ட வளர்மதி கையெழுத்து சஞ்சிகையில் நானும் தேவா, தருமலிங்கன்,  ரட்ணராஜ், செல்வரத்தினம் ஆகியோரும் கவிதைகள், கட்டுரைகள்,  சிறுகதைகள் எழுதினோம்.  நீர்கொழும்பூர் முத்துலிங்கம் அவற்றுக்கு ஓவியமும் கேலிச்சித்திரங்களும் வரைந்தார்.   வளர்மதி நூலகத்தின் பணிகளில் எனது   பங்களிப்பினை அவதானித்து வந்த அவர் , நான் எழுதிய கட்டுரைக்கு ஒரு கேலிச்சித்திரமும் வரைந்திருந்தார். வளர்மதி நூலகத்தை ஒரு  மலையாகவும் அதனை சுமந்துகொண்டு பறப்பவராக என்னையும் வரைந்திருந்தார். அநுமார்  சஞ்சீவி மலையை சுமந்துகொண்டு பறந்துவருவதுபோன்று அந்த கேலிச்சித்திரத்தில் என்னை வரைந்திருந்தார். அவரிடம் இதுபோன்ற குறும்புத்தனங்கள் அதிகம். கவிதை, நாடகம், சிறுகதை எழுதுவார். ஓவியம் வரைவார்.  அத்துடன் சிலம்பாட்டக்  கலைஞர். எமது ஊரில் பல இளைஞர்களுக்கு சிலம்பம் பயிற்சியும் வழங்கியவர்.  ஊர் ரதோற்சவத்தில்  அவரது குழுவினரின் சிலம்படி  முக்கிய நிகழ்வாகும். சில சிங்கள திரைப்படங்களுக்கும் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியவர்.  நாடகங்கள் இயக்கியவர்.  ஒரு தொலைக்காட்சி நாடகத்தையும் இயக்கினார். ரூபவாகினியில்

ஒளிபரப்பானது.  இவரது வீட்டில்தான் மல்லிகை ஜீவா அவர்களை நான் மீண்டும் 1971 ஆம் ஆண்டில் சந்தித்தேன். நீர்கொழும்பூர் முத்துலிங்கமும் அவரது அண்ணன் மாணிக்கமும் வேறும் சிலரும் இணைந்து ஒரு தமிழ்த்திரைப்படமும் தயாரிக்க முன்வந்தனர். ஆனால், அதற்கான ஆரம்ப வேலைகளுடன் அந்த முயற்சியும் நின்றுவிட்டது. எனது உறவினரான மயில்வாகனன் மாமா, தனது சாந்தி அச்சகத்திலிருந்து 1966 இல் வெளியிடத்தொடங்கிய அண்ணி மாத இதழிலும் முத்துலிங்கம் துணை ஆசிரியராக இணைந்திருந்தார்.  அதில் கௌமாறன் என்ற புனைபெயரில் ஒரு சரித்திர தொடர்கதையும் எழுதினார். அண்ணி இதழின் வெளியீட்டுவிழா அச்சமயத்தில் மட்டக்களப்பு எம்.பி. யாகவிருந்த செல்லையா இராசதுரை தலைமையில் நடந்தது. எழுத்தாளர் மு. பஷீர்,  சிலம்புச்செல்வர் ம.பொ. சிவஞானம் மன்றத்தின் தலைவர்  இலக்கிய ஆர்வலர் த. மணி ஆகியோரும் உரையாற்றினர். 

மழைக்காற்று ( தொடர்கதை ) – அங்கம் 55 முருகபூபதி


பிதா  ஈர உடைகளை வெளியே கொடியில் காயப்போட்டுவிட்டு திரும்பி வந்து உடைமாற்றும்போது,  அவளது கைத்தொலைபேசி மீண்டும்  ஒலித்தது.  கூந்தல் ஈரத்தை துடைத்துக்கொண்டு வந்து கைத்தொலைபேசியையும்  நேரத்தையும் பார்த்தாள்.  லண்டன் அழைப்பு. பகல் பதினொன்றரை.  இந்த நேரத்தில் லண்டன் விடிந்திருக்கும்.   ஜீவிகாவின் பெரியப்பாவாக அல்லது அவரது மகள் தர்ஷினியாக இருக்கவேண்டும். தனது இலக்கத்தை அவர் பதிந்து சேகரத்தில் வைத்திருப்பவர். சில சமயங்களில் அந்தபோனிலிருந்தும் எடுப்பாள். ஆனால், இது புதிய இலக்கத்திலிருந்து வருகிறது.  அநேகமாக அவளாகத்தான் இருக்கும்.  கொஞ்சநேரம் விட்டுப்பிடிப்போம். கூந்தலை துவட்டிவிட்டு,  துவாயினால் இறுக முடிந்தாள். நிலைக்கண்ணாடி முன்னால் வந்து நின்று பார்த்துக்கொண்டாள். எனது அழகை நானே  ரசிப்பதற்கும் நேரம் இல்லாமல் எவ்வளவு காலத்தை கடத்திவிட்டேன்.  இனி இந்த அழகு யாருக்குத் தேவை.   தனது பிம்பத்தை பார்த்து

சிரித்துக்கொண்டாள். அதனுடன் பேசவேண்டும் போலிருந்தது. வீட்டில்தான் எவரும் இல்லையே பேசிப்பார்ப்போம்.   “  அபிதா… இனி என்னடி செய்யப்போகிறாய்..?  “   “  வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்  “   “  லண்டன்காரி எடுத்துக்கொண்டிருக்கிறாள்.  ஏன் எடுக்கிறாள்…? எதற்கு எடுக்கிறாள்… சொல்…. “   “ என்னிடம் ஏன் கேட்கிறாய்….  அவளிடமே கேட்கவேண்டியதுதானே…?  “   “ நான் அழகாக இருக்கிறேனா..?  அந்த ரி,வி. ஷோவுக்கு போய் வந்தது முதல் எனது அழகு பற்றியும் யோசனை வந்துவிட்டது “   “ இப்போதுதான் வீட்டில்  எவரும் இல்லையே,  விதம் விதமாக உடுத்து மேக்கப்போட்டு அழகு பார்க்கவேண்டியதுதானே…. “   “ அதனைப்பார்த்து ரசிப்பதற்கும் எவரும் இல்லையே…? “  “ ஏன் எவரையும் தேடிப்போகிறாய்…? உனது அழகை நீயே ரசிக்கலாம்தானே..?   “  “ அப்படி பழக்கமில்லை. எனது அழகை அவர்மட்டும்தான் ரசித்தார்.  எனது அழகை அவருக்கும் மகளுக்கும்தான் காண்பித்தேன். இனி காண்பிக்க எவரும் இல்லை.   “  “  அடியேய் அபிதா… நீ இனி உன்னை நேசி. உன்னைக்  காதலி.  உன் மீது அன்பு செலுத்து.  உனக்கு நீதான் துணை.  இடைக்கிடை வந்து என் முன்னால் நின்று பேசிக்கொண்டிரு.  அதிலும் ஒரு வகையான சுகம் இருக்கும்.   “   “ தனக்குத்தானே பேசிக்கொண்டால், விசர், பைத்தியம் என்றல்லவா சொல்வார்கள் “   “  யார் சொல்வது…? இந்த உலகத்தில் முக்கால்வாசிப்பேர் பைத்தியங்கள்தான். எல்லோரும் தத்தம் மனதிற்குள் பேசிக்கொண்டுதானிருக்கிறார்கள்.