மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
" மாதங்களில் நான் மார்கழி " என்று கீதையில் கண்ணன்
கூறுகிறார்.திருவெம்பாவையினைத் தந்து சிவனை முன்னுறுத்துகிறார் மணிவாசகப் பெருமான் மார்கழியில். ஆண்டாள் நாச்சியாரும் வந்து திரு வாய் மொழியினை வழங்கித் திருமால் பெருமையைப் பேசுகின் றார். சைவமும் வைணவமும் சங்க மிக்கும் சமய நிகழ்வாய் , சமய விழாவாய் " மார்கழியில் திருவெம்பாவையும் திருப்பாவையும் " அமைகிறது அல்லவா ! ஆனால் மார்கழியில் மங்கல நிகழ்ச்சிகளுக்கு இடங் கொடுக்காமல் விட்டு விட்டோம். இந்த வகையில் இணைவதாய்
ஆடியும் வந்து நிற்கிறது. ஆனால் ஆடியும் - மார்கழி போல் மகத்தான மாதமேயாகும். மார்கழியில் சைவமும் வைணமும் சங்கமிப்பது போல - ஆடியிலும் சங்க மிக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.
ஆடியில் வருகின்ற பூரம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். ஆடிப்பூரம் சைவ ஆலயங்களிலும். வைணவ ஆலயங்களிலும் மிகவும் முக்கியத்துவம் மிக்க சமய நிகழ்வாய் , சமய விழாவாய் இடம் பெறுவதை நாம் காணக்கூடியதாகவே இருக்கிறது.ஆடிப் பூரம் அம்மனின் அற்புதத் திருவிழாவாகும். மக்களையும் , உலகினையும் காப்பதற்கு அம்பாள் சக்தியின் உருவாய் அவதரித்த தினமாய் ஆடிப் பூரம் கொள்ளப்படுகிறது. அதே வேளை வைணவம் போற்றும் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினமாகவும் கொள்ளப்படுகிறது. உமாதேவி அவதாரம் செய்ததாய் சிவபுராணம்சொல்லுகிறது. ஶ்ரீவில்லிபுத்தூரில் துளசிச் செடிக்கு அருகில் குழந்தையாய் ஆண்டாள் நாச்சியார் அவ தாரம் செய்ததாக வைணவவர்கள் நம்புகின்றார்கள். சக்தியின் அவதாரமாகவே ஆண்டாளின் அவதாரம் கொள்ளப்படுகிறது என்பதும் நோக்கத்தக்கது.இந்த ஆடிப்பூர தினத்தில்த்தான் ; சித்தர்களும்