மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
அரனின் நண்பர் ஆலாலசுந்தரர் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
கும்மிப் பா
ஒயிற்கும்மி, இயற்கும்மி, ஓரடிக்கும்மி
வீரமங்கை வேலுநாச்சியார் கும்மி
03.01.1730 - 25.12.1796
ஒயிற்கும்மி
வந்தனமே
உன்னதப் பெண்ணவள் ஒப்பில்லா மண்ணிதில்
உத்தமன் தந்ததை எண்ணிடவே
உதித்தது கதித்தது
திதித்தது விதித்தது
உந்திட எந்தனின் வந்தனமே
இயற்கும்மி
கும்மி அடிபெண்ணே குஞ்சங்கள் கூத்தாடக்
குஞ்சரம்;; பூத்தாடக் கும்மியடி
விம்மிதம் பொங்கிட வீரவேலு நாச்சியார்
விண்கூவித் துங்கத்தைச் சொல்லியடி
03.01.1730
பெண்ணெனப் பூமியில் பேறாய்த் தமிழிச்சி
பெற்றவர் பேர்சொல்லிக் கும்மியடி
மண்ணதன் மானமே மானெனக் கொண்டவர்
மங்காப்பு கழ்பொங்க விண்ணிலடி
விற்காதவை சுவையற்றதல்ல!
-சங்கர சுப்பிரமணியன்.
கரு என்று ஒன்று கிடைத்தால் போதும்
அதனை வைத்து வகை வகையாகவே
பலவற்றை படைப்பவரே படைப்பாளி
பத்தே பத்து வரிகளில் சொல்வதை
சொல்லி முடிப்பவரும் கவிஞர்தான்
கவிஞரல்ல என்று சொல்லமுடியுமா?
பத்து வரிகளுக்கு மேல் பக்கம்பக்கமாய்
ஒருவர் எழுதினால் அதுவும் கவிதைதான்
அதை எழுதிய அவரும் கவிஞரல்லவா?
பத்து வரி கவிதையில் சொல்ல வருவதை
சில பக்கங்களில் கட்டுரையாய் எழுதலாம்
பல பக்கம் எழுதினால் கட்டுரையாகாதா?
பல பக்கங்களில் கட்டுரையாய் வருவதை
ஒருபக்க கதை சிறு கதையாய் எழுதலாம்
ஒன்பதுபக்க பெருங்கதையாக மாற்றலாம்
கண் தானம் -நாட்டியகலாநிதி கார்த்திகா கணேசர்
.
சில தினங்களுக்கு முன் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
மூட நம்பிகைகளை ஒழிக்க ஓயாது உழைத்த ஏப்ரகாம் கோவூர் பற்றி பேச்சு
வந்தது. அப்பொளுது அவர் கூறினார் கோவூர் அவர்களின் மனைவி காலமானபோது, மரண செய்தியிலே அவரது உடல் இலங்கை வைத்திய நிலையத்திற்கு வழங்படும் என அறிவிப்பதற்கு
,இலங்கை வான்ஒலி,அவ்வாறு உடல் வைத்திய நிலையத்திற்கு வழங்கப்படும்என ஒலிபரப்ப மறுக்கப்பட்டதாம். காரணம் இலங்கை பவுத்த நாடு இங்கு அவ்வாறு ஒலிபரப்ப கூடாது, அடக்கம் பண்ணப்படும் அல்லது தகனம்
பண்ணப்படும் என மட்டுமே கூறலாம் என ஒலிபரப்புக்கு பொறுப்பான உயரிடம் மறுத்ததாம். ஆனால் பவுத்த மதபோதனையோ இலங்கை பவு த்தர்களை இறந்த பின் அவர்கள் கண்களை தானமாக வளங்க ஊக்கம் அளிக்கிறது.
உலகிலே யே அதிகமான கண்களை தானமாக வளங்கும் நாடு இலங்கையே . நான் சென்னையில் எனது கணவரின் கண்வைத்தியத்திற்காக,பிரபலமான கண் வைத்திய நிலையத்திய, “ நேத்திரலயா” போனபோது வாசித்த“நே த்திராலயாவின் “ சஞ்சிகையில் தமக்கு வரும் கண்தானங்கள் அதிகப்படியினவை இலங்கையில் இருந்தே வருவதாக எழுதப்பட்டிருந்தது
எனக்கு வியப்பாக இருந்தது, காரணம் இந்திய பெ ருங்கண்டத்தில் கிடை யாதஅளவிற்கு அதன் கீழே குண்டுமணி போலே சிறிதாக இருக்கும் எம் நாடுவழங்கியதா? பெருமை ப்பட்டே ன்.
பில்கிறிமேஜ் ஒவ்; டமில் ரு தி கிறேவ்யாட் ( Pilgrimage of Tamihz to the Graveyard )
சுப்புவும் மதியும் சிறுவயதுமுதல் நல்ல நண்பர்கள். சுப்புவுக்குப் 19 வயதில் ஒரு மகளும் மதிக்குப் 10 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இரு குடும்பங்களும் 2018ஆம் ஆண்டு தை மாதம் குடிபெயர்ந்து அவுஸ்திரேலியாவிலே தங்கள் தங்கள் குடும்பங்களுடன் வாழ்கிறார்கள். சுப்பு அவஸ்திரேலியா வந்த பின்பு அவருக்கு ஒரு மகள் பிறந்து வளர்ந்து கல்வி கற்று வருகிறாள். மதி தொழில் விடயமாக வெளிநாடு சென்று ஐந்து வருடங்களின் பின்பு 2024 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா திரும்பியிருந்தார். சுப்புவின் மூத்தமகள் ஒரு இளம் எழுத்தாளரைக் காதலிப்பதை அறிந்ததும் சுப்பு அவசரப்பட்டு மகளை அவனுக்கு நிச்சயார்த்தஞ் செய்துவைத்தார்.
சுப்புவின்ரை
நிச்சயார்த்தத்துக்குப் போக முடியவில்லை
என்ற கவலையுடன்
இருந்த மதிக்குச் சுப்புவின் தொலைபேசி அழைப்பு வந்தது
சல்லாபம்
தொடர்கிறது..
மதி :- நண்பனே
எனக்கு ஒரு கோபமும் இல்லை. உங்களின் அசிங்கமான கதையைக்; கேட்க இப்பதான் கோபம் வருகுது.
சுப்பு அண்ணா உங்களால்; நல்ல தமிழ் கதைக்க முடியாதா? நீங்கள் நல்ல தமிழ்தானே முன்பெல்லாம் கதைத்து வந்தீர்கள்?. நானே நீங்கள் கதைக்கும் தமிழைத் திருத்தி நல்ல தமிழ் கதைக்க வைப்பதற்கு
உங்களுடன் எவ்வளவு சிரமப்பட்டனான். மறந்துவிட்டீர்களா?. ஏன் இப்ப இப்படிக் கேவலமாகக் கதைக்கிறீர்கள்?.
சுப்பு :- என்ன நீ ------ ரோக்கிங் நொன்சென்ஸ்.-----என்ரை சின்னவள் டெய்யிலி ரோக் லைக் திஸ். என்னைப் போல ஸ்ரைலாய்க் கதைக்க யூ கான்ற். இப்பெல்லாம் இதுதான்டா பாஸன்.ஏன் மதி நீ இப்ப வாற ஸ்ரோறி புக்ஸ் றீட்பண்ண மாட்டாயா? வாசிக்க வாசிக்க எவ்வளவு திறிலிங்டா!
ஒரே சாட்சி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
தமிழ் சினிமாவில் நடிகனாக அறிமுகமாகி , பின்னர் டைரக்டராக மாறி பிரபலமானவர்கள் குறைவு. ஆனால் அவ்வாறு பிரபலமான ஒருவர் தான் கே. விஜயன். 1961ம் ஆண்டு பாதை தெரியுது பார் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் பின்னர் ஒன்றிரண்டு படங்களில் இரண்டாவது ஹீரோவாக நடித்து விட்டு சின்ன வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு பிரபல இயக்குனர் மல்லியம் ராஜகோபாலிடம் இணை இயக்குனராக வேலை செய்யும் வாய்ப்பு விஜயனுக்கு வாய்த்தது. அதனைத் தொடர்ந்து எதிர்பாராத விதமாக பட இயக்குனராகும் வாய்ப்பு காவல் தெய்வம் படத்தின் மூலம் இவருக்கு கிட்டியது. படம் ஓரளவு வெற்றி பெற்ற போதும் ஐந்து ஆண்டுகள் கழித்தே மீண்டும் இயக்குனராகும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது. அப்படி 1974ம் வருடம் அவர் இயக்கிய படம் தான் ஒரே சாட்சி.
தொழிலாளியாக பணியாற்றுகிறான். நேர்மையும், பிறருக்கு உதவும் மனமும் கொண்ட அவனை பள்ளிக்கூட டீச்சரான காஞ்சனா காதலிக்கிறாள். சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் செல்வந்தன் செல்வம் அவளைக் கண்டு மோகித்து அவளுக்கு வலை வீசுகிறான். ஆனால் மாதவன் தக்க சமயத்தில் குறுக்கிட்டு அவளை காப்பாற்றி செல்வத்தையும் எச்சரிக்கிறான். இதனைத் தொடர்ந்து காஞ்சனா, மாதவன் இருவரும் திருமணம் செய்யும் முடிவுக்கு வருகிறார்கள். திருமணத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் ஓர் இரவு கார் விபத்தொன்றில் இருந்து செல்வத்தை மாதவன் காப்பாற்றி அவனது வீட்டிற்கு கொண்டு சென்று சேர்கிறான். தான் காஞ்சனாவை கல்யாணம் செய்யப் போவதையும் தெரிவிக்கிறான்.
இலங்கைச் செய்திகள்
வைத்தியர் அர்ச்சுனா பிணையில் விடுதலை
மன்னார் இளம் தாயின் மரணம்; விசாரணைகள் நடத்தி நடவடிக்கை
‘காசா சிறுவர் நிதியத்திற்கு’ கிடைத்த 590,000 டொலர்
இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல்
வைத்தியர் அர்ச்சுனா பிணையில் விடுதலை
- மன்னார் நீதிமன்றம் உத்தரவு
மன்னார், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (07) மன்னார் நீதவான் நீதிமன்றம் இவரை பிணையில் விடுவித்தது.
உலகச் செய்திகள்
பிரிட்டனில் முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்கள் தொடர்ந்து நீடிப்பு
பிரிட்டனில் கலவரங்களை அடுத்து நாடெங்கும் இனவாத எதிர்ப்பு பேரணி
காசாவில் சரமாரி தாக்குதலுக்கு இடையே பதில் தாக்குதலை எதிர்கொள்ள தயாராகிறது இஸ்ரேல்
இராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறினார் ஷேக் ஹசீனா
பாரிய ஆர்ப்பாட்டத்தை அடுத்து பங்களாதேஷ் பிரதமர் ஹசீனா இராஜினாமா; தப்பியோட்டம்
பங்களாதேஷ் போராட்டம் தீவிரம் பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக்ஹசீனா வௌிநாட்டில் தஞ்சம்
பிராந்திய பதற்றத்திற்கு மத்தியில்: காசாவில் மேலும் இரு பாடசாலைகளில் இஸ்ரேல் தாக்குதல்: 30 பேர் வரை பலி
லெபனான், மேற்குக் கரை மற்றும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களினால் பலரும் பலி
பிரிட்டனில் முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்கள் தொடர்ந்து நீடிப்பு
பிரிட்டனில் தொடர்ந்தும் முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்கள் நீடிப்பதோடு தஞ்சக் கோரிக்கை மையங்கள் மற்றும் குடியேற்றவாசிகளுக்கு உதவும் சட்ட நிறுவனங்களை இலக்கு வைத்து தீவிர வலதுசாரி குழுக்கள் நாடெங்கும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கு எதிராக பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்டு வருகின்றனர்.
சிட்னி ஸ்ரீ துர்கா தேவி ஆலயம் வரலட்சுமி பூஜையை 16 ஆகஸ்ட் 2024 வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணி முதல் சிறப்பு ஹோமம் & அபிஷேகம், தீப பூஜை மற்றும் மஞ்சள் நூல் (தோரக) பூஜையுடன் கொண்டாடுகிறது.
உலகின் எட்டு சக்திகளாக அறியப்படும் அஷ்ட லக்ஷ்மி - ஆதிகால சக்தி (ஆதி லக்ஷ்மி), செல்வம் (தன லக்ஷ்மி), தைரியம் (தைரிய லக்ஷ்மி அல்லது வீர லட்சுமி), ஞானம் (வித்யா லக்ஷ்மி), குழந்தைகள் அல்லது குடும்ப வளர்ச்சி (சந்தான லக்ஷ்மி), வெற்றி (விஜய லக்ஷ்மி), உணவு (தன்ய லக்ஷ்மி) மற்றும் பலம் (கஜ லக்ஷ்மி) ஆகியவை லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. வர லக்மி விரதத்தைக் கடைப்பிடிப்பது ஒரு பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் எட்டு சக்திகளையும் அளிக்கும் என்று புராணங்கள் விவரிக்கின்றன.