Dr Kethieswaran Thuraisingham

.

Dr Kethieswaran Thuraisingham 1936 to 2016

Dr  கேதீஸ்வரன் துரைசிங்கம் 25/09/2016 ஞாயிறு, காலை இறைவனடி சேர்ந்தார் .இவர் யாழ்பாணம் காரைநகரை பூர்வீகமாகவும், ஸ்டர்த்ஃப்ல்ட் NSW அவுஸ்துரேலியாவை 
வசிப்பிடமாகவும் கொண்டவர்.

இவர் வடிவாம்பிகையின் (அம்பி) அன்புக் கணவரும், சசிகலா, மேனகா, ரமணா ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,மோகன், மகேந்திரா, இமாகரன் ஆகியோரின் பாசமுள்ள மாமனாரும், அஷ்வினி, அஞ்சலி, வித்தியா, அரன், ஏடின்ஆகியோரின் பற்றுள்ள பாட்டனாரும் ஆவார்.

மேலும் SK துரைசிங்கம், வேதவல்லி அவர்களின் மகனும், வடிவாம்பிகை UK, தேவகி Syd, Dr யசோதை UK, ராதா Syd,பாமா (அடிலேய்ட்), நந்தபாலன் Syd ஆகியோரின் பட்சமுள்ள சகோதரனும், Dr கருணாகரன், உருத்திரமூர்த்தி, ஊர்மிலாSyd, காலம் சென்றவர்களான Dr கந்தசாமி, Dr சிவதொண்டன், Dr கணேசநாயகம்,  ஆகியோரின் பட்சமுள்ள மைத்துனரும்ஆவார்.

அத்துடன் ராமசந்திரன், திருமதி சரோஜினி தேசபந்து, நடராஜா, பாலசச்ந்திரன் (Melbourne) காலம் சென்றவர்கள்ராதாகிரிஷ்னன், திருமதி அன்னலஷ்மி விஜயர்த்திம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

2016 அக்டோபர் முதலாம் திகதி சனிக்கிழமை காலை 11.00 மணி முதல் Magnolia Chapel, Macquarie Park Cemetery & Crematorium த்தில் அவரது 80 வயது வாழ்க்கைக்கு, கடவுளுக்கு நன்றி நவிலும் வழிபாடு வைபவம் நடைபெறும்.
உற்றார் உறவினர் இவ் அறிவித்தலை ஏற்று, வருகை தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
துரைசிங்கம் குடும்பத்தினர்
Contact: Ramana Kathirkamalingham – Mobile: 0433777391 
                               Email: ambie@yahoo.com
     Those who wish to send flowers or wreaths please honour Kethies’s memory by making a donation to ‘Sivanarulillam” Sri Lanka.
Account name Sivanarulillam
Bank Westpack, Account No 032164  228016  


கார்த்திகா.கணேசரின் நாட்டிய நிகழ்வு - சில அபிப்பிராயக் குறிப்புகள் - யசோதா.பத்மநாதன்.

.

ஒரிரு தினங்களுக்கு முன் ATBC யின் காலை நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருந்தேன். 40 ஆண்டுகளுக்கு மேலாக நடனக் கலை அனுபவம் கொண்டவரும் நடனம் சம்பந்தப்பட்ட பல புத்தகங்களைத் தந்தவரும் பல அரச விருதுகள் பெற்றவருமான கார்த்திகா கணேசர் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார்.
ஒவ்வொரு விடயத்திலும் அவருக்கென ஒரு தனிப் பார்வை இருக்கும். தனிக் கோணம் தெரியும். ஒரு விடயத்தை ஒருவர் சொல்கிறார் என்பதற்காக அன்றி அது சம்பந்தமாக தன்னுடய சொந்த ஆராய்ச்சியில் தனக்குச் சரியெனப் படுவதை சபையில் துணிந்து சொல்லி தன் தரவை சரி என நிறுவ வல்லவர்.

அந்தக் காலை நிகழ்ச்சி பற்றிச் சொன்னேன் அல்லவா? சலங்கை இட்டாள் ஒரு மாது... பாடல் தெரிவு செய்யப் பட்டு ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அழகான பாடல், இசை, குரல் என அந்தப் பாடலுக்கென அமைந்த எல்லாமாக நம் மனதிலும் ஒரு நடனமாது ஆடிக் கொண்டிருந்தாள். அதைத் தவிர வேறு அபிப்பிராயம் எதுவும் எழாத காலை நேர நிர்மலத்திற்குத் தோதான அழகிய பாடல்.பாடல் முடிந்ததும் பாடலுக்கான அபிப்பிராயம் கார்த்திகாவிடம் இருந்து வந்தது. பாவம் இந்த டி. ராஜேந்தர். கலையை ரசிக்காமல் பெண்ணை இப்படி விரசமாக ரசிக்கிறாரே!
இதை அவர் சொன்ன போது அட, ஆமால்ல என்று தோன்றிய அதே கணம்  பானுமதி அம்மையார்  1956ம் ஆண்டில் பாடிய அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணு தான்...பாடல் நினைவுக்கு வந்தது. அதில் ஒரு வரி வரும். அங்கொண்ணு சிரிக்குது ஆந்தை போல் முழிக்குது; ஆட்டத்த ரசிக்கவில்லை ஆளத்தான் ரசிக்குது... கார்த்திகா அவர்களின் பார்வை வீச்சும் அதன் கோணமும் சிலிர்ப்பூட்டியது.

தியாகி திலீபனின் 29 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு 30 09 16

.
தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாதுதன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு,செப்ரம்பர் மாதம் 30ஆம் நாள் வெள்ளிக்கிழமை (விடுமுறைநாள்) மெல்பேணில் இடம்பெறவுள்ளது. 
ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன்,காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான். அடிப்படையான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் மேற்கொண்ட பயணம் எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது.
பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். ஆண்டுதோறும் நடைபெறுவதைப் போல் இம்முறையும் தியாகதீப கலைமாலை என்ற தாயகப்பாடல்களின் இசைநிகழ்வும் இடம்பெறும்.

ஆஸ்கர் தேர்வும் ஆச்சரியங்களும்!


Visaranai1

.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை, ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
1957 முதல் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதுக்காக இந்தியப் படங்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால், இதுவரை ஆஸ்கார் விருதுக்காக ’மதர் இந்தியா’, ’சலாம் பாம்பே’, ’லகான்’  ஆகிய 3 இந்தியப் படங்கள் மட்டுமே ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு இறுதிக்கட்டம் வரை (டாப் 5) சென்றுள்ளன.
இதுதான் அனைவரும் அறிந்த புள்ளிவிவரம். ஆனால் 1957ல் ஆரம்பித்து ஆஸ்கருக்காக அனுப்பப்பட்ட படங்களின் பட்டியலைப் பார்த்தால் பல சுவாரசியப் புள்ளிவிவரங்கள் தென்படுகின்றன.
1957ல் ஆரம்பித்து இதுவரை 48 இந்தியப் படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் 31 ஹிந்திப் படங்கள். (ஹேராம் உள்ளிட்ட 5 படங்கள் ஹிந்தியுடன் சேர்த்து இன்னொரு மொழிப் படமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.)

கலாநிதி க.குணராசா வழங்கிய "சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு" புத்தக மதிப்பீடு கானா பிரபா






செங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்றுப் புத்தகங்களை ஆக்கியளித்துள்ளார். இவற்றில் பாரியார் கமலா குணராசாவும் இணைந்து படைத்த வெளியீடுகளும் அடக்கம்.
"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு" நூல் மாணவருக்கு மட்டுமன்றி இலங்கை வரலாற்றை அறிந்து கொள்ள முனைவோருக்கான பொதுவான படைப்பாக அமைந்திருக்கிறது.

பெளத்த பிக்குகளால் பேணிப் பாதுகாக்கப்பட்ட "மகா வம்சம்" என்ற இலங்கை வரலாற்று நூல் அளவுக்கு இந்த "சூளவம்சம்" குறித்த பரவலான அறிமுகம் கிடைக்கவில்லை. அதையே தன் முன்னுரையின் வழியாக விளக்கி வைத்திருப்பது சிறப்புச் சேர்க்கிறது.

தீப வம்சம் என்ற நூலின் மிகத்திருத்தமான வடிவமாகக் கொள்ளப்படும் மகா வம்சம் 100 அதிகாரங்களைக் கொண்ட நூல். பாளி மொழியில் இருந்து ஜேர்மன் மொழிக்கு மொழி பெயர்த்த வில்லியம் கெய்கர் என்பவர் இதிலுள்ள 37 அதிகாரங்களை "மகா வம்சம்" என்றும் ஏனைய 38 தொட்டு 100 வரையான அதிகாரங்களை "சூளவம்சம்" என்றும் வகுத்திருக்கிறார். இதையே முழுத் திரட்டாக மகா வம்சம் என்றே பாளி மொழியிலிருந்து நேரடி ஆங்கில மொழி பெயர்ப்புச் செய்த ஜோர்ஜ் ரேனர் குறிப்பிட்டுமிருக்கிறார்.

திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி


செய்திகளுக்கான அச்சு ஊடகத்தினூடாக  ஒரு செய்தியாளரின் கதை
வீ.ஆர். வரதராஜா நினைவுகள்
    

                                       
வீரகேசரியால்  எனக்குக்கிடைத்த  நண்பர்கள்  அதிகம். ஊடகத்துறையானது   நண்பர்களையும்  எதிரிகளையும் சம்பாதித்துக்கொடுக்கும்.   ஆனால்,  பொருளாதார  ரீதியில்தான் சம்பாத்தியம்  குறைவானது.
வீரகேசரிக்கு   நூறு  வயது   விரைவில்  நெருங்கவிருக்கிறது.  மகாகவி   பாரதியின்  உற்ற  நண்பர்  வ.ராமசாமி (வ.ரா)  அவர்களும் முன்னொரு  காலத்தில்  இதில்  ஆசிரியராக  பணியாற்றியவர்தான். புதுமைப்பித்தனுக்கும்  பிறிதொரு  காலத்தில்  அச்சந்தர்ப்பம்  வந்தது. ஆனால்,  அவர்  சினிமாவுக்கு  வசனம்  எழுதச் சென்னைக்குச்  சென்றமையால்,  இலங்கைக்கு  வரவில்லை.
கே.பி. ஹரன்,  அன்டன்  பாலசிங்கம்,  செ.கதிர்காமநாதன்,  கே.வி. எஸ்.வாஸ், காசிநாதன், கோபாலரத்தினம், க. சிவப்பிரகாசம், டேவிட் ராஜூ, பொன். ராஜகோபால், சிவநேசச்செல்வன்,  நடராஜா, கார்மேகம், டி.பி.எஸ். ஜெயராஜ், அஸ்வர், கனக. அரசரத்தினம்,  சுபாஷ் சந்திரபோஸ்  உட்பட    பலர்  பணியாற்றிய  பத்திரிகை  வீரகேசரி.
வீரகேசரி குடும்பத்தில் இருந்த  சிலரைப்பற்றி  ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்.
மின்னஞ்சல் -  இணையத்தள  வசதிகள்  இல்லாத  அக்காலத்தில்  அங்கு பணியாற்றியவர்களின்  வாழ்க்கையை  இன்று நினைத்துப்பார்க்கும்பொழுது    சுவாரஸ்யங்களும்  துயரங்களும் கெடுபிடிகளும்   சவால்களும்  நெருக்கடிகளும்தான்  நினைவுகளில் வந்து   அலைமோதுகின்றன.
அத்தகைய  ஒரு கால  கட்டத்தில்தான்  வரதராஜா  வீரகேசரியில் இணைந்திருந்தார்.
அவர்   அங்கு  அலுவலக  நிருபராக  பணியாற்றினார்.  எனக்கு வீரகேசரியுடனான  தொடர்பு  1972  இலிருந்து  தொடங்கியது. அப்பொழுது   நீர்கொழும்பு  பிரதேச  நிருபராகவே அங்கு   இணைந்தேன்.


உலகச் செய்திகள்


சுற்றுலாப் படகு கவிழ்ந்தது : 13 பேர் பலி.!

மரணத்துக்கு முன்னர் ராம்குமார் அனுப்பிய கடிதம் : பீதியில் பொலிஸார்.!

காவிரி நீரை மீண்டும் 10 நாட்களுக்கு திறந்துவிட உத்தரவு

குளத்தில் கவிழ்ந்த பஸ் ; 35 பேர் பலி

ஐக்கிய நாடுகள் சபையில் தனது கடைசி உரையில் ஒபாமா கூறியது இது தான் !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ; ஹிலாரி-டிரம்ப் நேரடி விவாதம்

பிரித்தானியாவின் குட்டி இளவரசருக்கு மண்டியிட்ட கனடிய பிரதமர்


பவள விழாக் காணும் ஈழத்துக் கலையுலக ஆளுமை தாசீசியஸ் பேசுகிறார்...! கானா பிரபா


ஈழத்து நவீன நாடக வரலாற்றிலே புதிய போக்கினை நிறுவிய நாடக நெறியாளர், ஊடகர் ஏ.சி. தாசீசியஸ் அவர்கட்கு இது பவள விழா ஆண்டு.

கனடிய இலக்கியத் தோட்டத்திற்கான தேர்வுக்குழு 2006ஆம் ஆண்டுக்கான இயல் விருது வழங்கியது.  அவ்வேளையில், 'தமிழ்நாதம்" இணையத் தளத்திற்காகச் தாசீசியஸ் அவர்களைப் பேட்டி கண்டேன்.
தன்னுடைய நூலிலும் இந்த நேர்காணலை அவர் குறிப்பிட்டதோடு மெல்பர்னில் வாழும் மூத்த நாடகக் கலைஞர் சிசு நாகேந்திரன் வழியாக எனக்கு அனுப்பியும் வைத்தார் தாசீசியஸ் அவர்கள்.

அந்தச் செவ்வியின் ஒலி வடிவம்


எழுத்து வடிவத்தின் ஒரு பகுதி கீழே
முழுப் பகிர்வையும் வாசிக்க

திரு தாசீசியஸின் நேர்காணலை எழுத்துலக தர்மப்பிரகாரம் சுருக்கியளிக்க என் மனம் இடங்கொடுக்கவில்லை. எமது படைப்பாளிகளின் வாழ்வியல் தரிசனத்தை ஆவணமாக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, இதனை எந்தவிதமான வெட்டல் கொத்தல்களுமின்றி அப்படியே சமர்ப்பிக்கின்றேன்.