கார்த்திகை தீபம் ஏற்றும் வாரீர் !


 







மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா





மாலயன் மருளது போக்கிய காலம்
மலரடி திருமுடி உணர்த்திய காலம்
தேவரும் தெரிசனம் கண்டநற் காலம்
திருவிளக் கேற்றிடும் கார்த்திகைக் காலம் 

கந்தனை வந்தனை செய்திடு காலம்
கனற்பொறி குழந்தையாய் ஆகிய காலம்
நொந்திடு அடியவர் பவவினை போக்கிட
செந்திரு விளக்கதை ஏற்றிடும் காலம்

ஒளிர்வளர் விளக்காய் ஒளிர்ந்திடும் காலம்
தெளிவதைக் கருத்தி லமர்த்திடும் காலம்
பொலிவுடன் பேரொளி தோன்றிய காலம்
போற்றியே தீபத்தை ஏற்றுவோம் வாரீர் 

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 86 “ படித்தோம் சொல்கின்றோம் “ தொடர் பத்தியின் தோற்றமும் வளர்ச்சியும் ! இலக்கிய உலகில் திசை மாறிய பறவையின் வாக்குமூலம் ! முருகபூபதி


இலங்கையிலிருந்த காலப்பகுதியில், மல்லிகை, வீரகேசரி வாரவெளியீடு முதலானவற்றில் நூல்கள், சிற்றிதழ்கள் பற்றிய அறிமுகக் குறிப்புகளை எழுதினேன்.

வீரகேசரி வாரவெளியீட்டில் வாரந்தோறும் இலக்கியப்பலகணி என்ற பத்தித்தொடரை ரஸஞானி என்ற புனைபெயருடன் எழுதிக்கொண்டிருந்தபோது, எனக்கு கிடைக்கும் நூல்கள், சிற்றிதழ்கள் பற்றியெல்லாம் எழுத நேர்ந்தது.

அந்தப்பழக்கம், அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் தொடருகிறது.

முன்னர் அவுஸ்திரேலியாவில்  வெளிவந்த மரபு, அவுஸ்திரேலியா முரசு, தமிழ் உலகம், அக்கினிக்குஞ்சு , கலப்பை, உதயம்  முதலான இதழ்களிலும்,  பின்னாளில் கனடா பதிவுகள், தமிழ்நாடு திண்ணை, ஜெர்மனி தேனீ, இங்கிலாந்து வணக்கம் லண்டன், பிரான்ஸ் நடு, ஆகியனவற்றிலும் இலங்கை வீரகேசரி, தினக்குரல், தினகரன், காலைக்கதிர், யாழ். ஈழநாடு , தீம்புனல்  வார இதழ்களிலும் மற்றும் ஞானம், ஜீவநதி  முதலான மாத  இதழ்களிலும்  நூல் அறிமுகக்குறிப்புகளை படித்தோம் சொல்கின்றோம் என்ற தலைப்பில் தொடர்ந்தும் எழுதிவருகின்றேன்.

சில ஆக்கங்கள்,  இலக்கிய நண்பர் நடேசனின் வலைப்பூவிலும் பதிவேற்றம் கண்டுள்ளன.

இதனைப்படிக்கும் வாசகர்கள் கணினியில்  படித்தோம் சொல்கின்றோம் – முருகபூபதி என்று அழுத்தினால், தேவைப்படும் பதிவுகளை தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரில் முன்னர் குறிப்பிட்டதையே மீண்டும் சொல்ல விரும்புகின்றேன்.

நான் இலக்கிய உலகில் திசைமாறிய பறவை !

அதனால் தனிப்பட்ட முறையில் எனது ஆக்க இலக்கியத்திற்குத்தான் பெரும் பாதிப்பு நிகழ்ந்தது.

படித்தோம் சொல்கிறோம்: திரௌபதையின் மரணவாக்குமூலம் கதையாகும் விந்தை ! ( அமரர் ) சை. பீர் முகம்மதுவின் பயஸ்கோப்காரனும் வான்கோழிகளும் !! முருகபூபதி


இளம்பராயத்தில் தாடிக்காரர்களைத்தேடிய ஒருவர், வாசிப்புப்பழக்கம் ஏற்பட்டதும் தாடிக்காரர்களின் நூல்களை நூலகத்தில் தேடித்தேடி படித்தவர்,  காலப்போக்கில் ஒரு எழுத்தாளனாகவே தன்னை நிலைப்படுத்திக்கொண்டவர்.

 அவர் இலங்கையரோ தமிழகத்தவரோ அல்ல. அவர்தான் மலேசிய தமிழ் இலக்கியத்தை உலகப்பார்வைக்கு எடுத்துச்செல்லவேண்டும் என்ற நோக்கோடு அயராமல் இயங்கிய  சை.பீர்முகம்மது.

கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி மறைந்துவிட்டார்.

 அவரை பல வருடங்களுக்கு முன்னர் மெல்பனில் நடந்த ஒரு


பட்டிமன்றத்தில் சந்தித்தேன். அந்த பட்டிமன்றத்தில் ஒரு மலேசிய பேச்சாளர், அவரது பெயரில் பீரும் இருக்கிறது மதுவும் இருக்கிறது என்று வேடிக்கையாகச்சொல்லி சபையை கலகலப்பாக்கினார்.

 எனது வீட்டுக்கு அழைத்து விருந்துகொடுத்தேன். அவர் இலக்கியவிருந்து படைத்து விடைபெற்றார். அன்று முதல் எனது இலக்கிய நண்பர்கள் பட்டியலில் இணைந்தார். மலேசியாவுக்கு நான் அவரது விருந்தினராகச்சென்றபோது நீண்டபொழுதுகள் அவருடன் இலக்கியம் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. கலை, இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம், என விரிவான உரையாடலுக்கு உகந்த படைப்பாளி. வெறும் படைப்பாளியாக மாத்திரம் திகழாமல் இலக்கிய யாத்ரீகனாகவும் அலைந்தவர். 1942 இல் கோலாலம்பூரில் பிறந்த பீர்முகம்மது, 1959 முதல் எழுதினார்.  இவரது நூலுருப்பெற்ற படைப்புகள்:

வெண்மணல்(சிறுகதை) பெண்குதிரை (நாவல்) கைதிகள் கண்ட கண்டம், மண்ணும் மனிதர்களும், திசைகள் நோக்கிய பயணம், மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும் (கட்டுரை தொகுப்புகள்) அக்கினி வளையங்கள்’ (நாவல்)

பீர்முகம்மதுவின் இலக்கியப்பணிகளில் விதந்துபேசப்படவேண்டியது அவரால் மூன்று தொகுதிகளாக தொகுக்கப்பட்ட மலேசியத்தமிழ் எழுத்தாளர்களின் ஐம்பது ஆண்டு காலச்சிறுகதைகள். அதற்காக தமிழ் இலக்கிய உலகம், குறிப்பாக மலேசிய தமிழ் மக்கள் அவருக்கு நன்றி கூறக்கடமைப்பட்டவர்கள்.

 பயஸ்கோப்காரனும் வான்கோழிகளும்  அவரது மற்றும் ஒரு  சிறுகதைத்தொகுப்பு. இத்தொகுப்பில் 20 ஆவது கடைசிக்கதையாக, இந்தத்தலைப்பிட்ட கதைதான் இடம்பெற்றுள்ளது.

 தமது பதின்மவயதில் ஈ.வே.ரா.பெரியாரின் பேச்சைக்கேட்பதற்காக தமது பெரியப்பாவின் சைக்கிள் பின்புறக்கெரியரில் தொற்றிக்கொண்டு சென்றவர் பீர்முகம்மது.

 இளம்பராயத்திலேயே பெரியாரின் கருத்துக்களால் கவரப்பெற்று தீவிர வாசகனாகி எழுத்தாளனாக முதிர்ந்தவரின் சர்வதேசியப்பார்வையை இந்தத்தொகுப்பில் படித்துணர முடிகிறது.

  “இந்தக் கதைத்தொகுப்பின் தரம்பற்றி நான் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் எனது சிறுகதைப்பாதையை இத்தொகுப்பு மாற்றியமைக்கும். “- எனச்சொல்கிறார் பீர்முகம்மது.

 தான் மேலும் செம்மைப்படுவேன் என்ற தன்னடக்கக் குரலாக இந்த வார்த்தை அவரிடமிருந்து வெளிப்படுகிறது.

உலகெங்கும் வாழும் இலக்கியவாதிகளை இணைக்கும் ‘ பதிவுகள் ‘ கிரிதரன் ! முருகபூபதி


எழுத்துலகம் விசித்திரமானது.  ஒரு எழுத்தாளரை  மற்றும் ஒரு எழுத்தாளர்  எளிதில் அங்கீகரித்துவிடமாட்டார். புராணத்தில் வரும் சிவனுக்கும் அரசவைப் புலவர் நக்கீரனுக்குமிடையே நிகழ்ந்த வாதம் பற்றி அறிவீர்கள். 

 “ ஒரு பெண்ணின் கூந்தலின் மணம் எவ்வாறிருந்தால்தான் என்ன..? அதற்காக வாதப்பிரதிவாதமா..?  அதற்காக  நெற்றிக்கண்ணால் சுட்டு பொசுக்க வேண்டுமா..? இதுவும் வன்முறைதானே !  “ என்று இன்றைய எமது குழந்தைகள் வினா தொடுக்கிறார்கள்.

அடுத்துவந்த, கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் மத்தியில் நிகழ்ந்த


வாதங்களும் பேசப்பட்டுள்ளன.

மொத்தத்தில் எழுத்துலகம் விமர்சனம், அவதூறு,  மோதல், எதிர்வினை, தாக்குதல் எனத்தொடருகின்றது. முகநூல் அறிமுகமானதன்  பின்னர், நிலைமை மேலும் மோசமாகியிருக்கிறது.

இந்தப்பின்னணிகளுடன்தான், கனடாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் பதிவுகள் இணைய இதழை தங்கு தடையின்றி நடத்திவரும் வ. ந. கிரிதரன் அவர்களை அவதானிக்கின்றேன்.

இவரது பதிவுகள் இணைய இதழில் நான் தொடர்ந்து எழுதிவந்திருந்தாலும், அபூர்வமாக எப்போதாவது சந்தர்ப்பம் கிடைக்கும்போதுதான்   தொலைபேசியில் உரையாடியிருக்கின்றேன்.

அதற்கு நான் வதியும் அவுஸ்திரேலியா –  அவர் வதியும் கனடா நாடுகளின் நேர வித்தியாசமும் முக்கிய காரணம்.

கடந்த ஜூன் மாதம் கனடா ஸ்காபரோவில் நடந்த தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழாவில்தான் முதல் முதலில் கிரிதரனை சந்தித்தேன்.  நீண்ட காலம் உறவாடிய உணர்வுடன்தான் நாம் அன்றைய தினம் ( ஜூன் 04 ஆம் திகதி ) பேசிக்கொண்டோம். அதற்குக்காரணம் அவரது பதிவுகள் இணையத்தளத்தை நானும் எனது எழுத்துக்களை அதில் பதிவேற்றிவரும் அவரும் பரஸ்பரம் எழுத்தின் ஊடாகவே நெஞ்சத்திற்கு நெருக்கமாகியிருந்தோம்.

அவர் எனக்காக இரண்டு சந்திப்புகளையும் கனடாவில் ஏற்பாடு செய்திருந்தார்.

இலக்கியவாதிகளை இணைக்கும் பண்பும் கொண்டிருப்பவர்தான் கிரிதரன்.

பதிவுகள் இணைய இதழில் உலகெங்கும் வாழும் எழுத்தாளர்கள் பலர் தொடர்ந்தும் எழுதிவருகின்றனர்.  அவர்களின் கடிதங்கள், மற்றும் எதிர்வினைகளுக்கும் கிரிதரன் போதியளவு களம் வழங்கிவருகிறார்.

கிரிதரனுக்கும் கனடா தமிழ் இலக்கியத்தோட்டம் இம்முறை இலக்கிய சாதனை விருது வழங்கி கௌரவித்து பாராட்டியது.

விருது விழாவில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் கிரிதரன் பற்றி பதிவாகியிருக்கும் குறிப்புகளில் சிலவற்றை இங்கே தருகின்றேன்.  

   வண்ணார்பண்ணை , யாழ்ப்பாணத்தில் பிறந்த எழுத்தாளர் வ. ந. கிரிதரன், தற்போது கனடாவில் வசித்துவருகின்றார். கட்டடக்கலை பட்டதாரியான இவர், ரொறொன்ரோ சென். டானியல் கல்லூரியில் இலத்திரனியல் பொறியியல் துறையிலும் தகவல் தொழில் நுட்பத்துறையிலும் பல்வேறு கல்வித் தகைமைகளைப் பெற்றவர். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம், நகர அதிகார சபை ஆகியவற்றில் பணியாற்றிய இவரது படைப்புகள்,  இலங்கை, தமிழகம், மற்றும் புகலிடத் தமிழர்கள் வெளியிட்ட சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. தமிழகப்பல்கலைக்கழகங்களில் இவரது படைப்புகளைப்பற்றி முனைவர், இளமுனைவர் பட்ட ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

ராஜ ராஜ சோழன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்


மா மன்னன் ராஜ ராஜ சோழனின் வரலாற்றை சொல்லும் விதத்தில் அண்மை காலத்தில் பொன்னியின் செல்வன் திரைப் படம் இரு பாகங்களாக வெளியாகி வெற்றி கண்டது. இப் படத்தில் கதை மன்னனின் இளமைக் கால சரித்திரத்தை விளக்கும் முகமாக அமைத்திருந்தது. ஆனால் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் 1973 இதே ராஜ ராஜ சோழனின் பிற் கால வரலாறு படமாகி திரைக்கு வந்தது. படத்தை தயாரித்தவர் ஆனந்தா மூவீஸ் அதிபர் ஜி . உமாபதி.


மா பொ சிவஞானம் தலைமையிலான தமிழரசு கழகத்தின் தீவிர

தொண்டரான உமாபதி , கழகத்தின் போராட்டங்களில் பங்கு பற்றி சிறை சென்றவராவார். தமிழக, ஆந்திர பிரிவினையின் போது திருத்தணி ஆந்திராவுடன் சேரக் கூடாது, அது தமிழகத்துக்கே சொந்தம் என்று கோரி கழகம் நடத்திய போராட்டத்தில் கலந்து சிறை சென்ற உமாபதி பிற் காலத்தில் திரையுலக பிரமுகரான உருவானார். கடைநிலை ஊழியராக வாழ்வை தொடங்கிய இவர் சென்னையில் தமிழ் படங்கள் திரையிடுவதற்கான முதலாவது குளிர்சாதன திரையரங்கான சாந்தி தியேட்டரை சிவாஜியுடன் சேர்ந்து உருவாக்கினார். பின்னர் தன்னுடைய பங்குகளை சிவாஜிக்கே விற்று விட்டு புதிதாக ஆனந்த் தியேட்டரை உருவாக்கினார். சென்னையிலே முதலாவது 70mm தியேட்டராகவும், சினிமாஸ்கோப் திரையரங்காகவும் இது உருவானது. எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தனக்கு முன் வரிசையில் ஆசனம் ஒதுக்கா விட்டால் திரும்பி சென்று விடும் மனப்பான்மை கொண்ட இவர் தமிழர்களின் சரித்திர நாயகனான ராஜ ராஜ சோழன் படத்தை முதல் தடவையாக அகண்ட திரையில் , சினிமாஸ்க்கோப்பில் , கலர் படமாக தயாரிக்க முன் வந்தார்.


அவ்வை டி கே சண்முகம் சகோதரர்களால் 1955ம் ஆண்டு முதல் மேடை நாடகமாக நடத்தப்பட்டு வந்த ராஜராஜ சோழன் நாடகத்தை எழுதியவர் பத்திரிகை ஆசிரியரும், எழுத்தாளருமான அரு ராமநாதன் ஆவார். இவர் எழுதிய நாடகத்தை இயக்கும் பொறுப்பு ஏ பி நகராஜனிடம் ஒப்படைக்கப் பட்டது. தான் இயக்கும் புராண படங்களில் பக்கம் பக்கமாக வசனங்களை எழுதி படமாக்கும் ஏ பி என் அதே நாடகப் பாணியை பின் பற்றி படத்தை எடுத்து விட்டார் என்றே சொல்ல வேண்டும் .

தமிழ் மன்னர்களில் ஆட்சியில் ராஜராஜ சோழனின் ஆட்சியே தமிழர்களின் பொற்காலம் என்பது வரலாற்று சான்று. அவன் ஆட்சியில் தமிழர் கலை, கலாசாரம் , சைவ சமய பக்தி என்பன மேன்மை உற்றிருந்தன. பல நாடுகள் மீது அவன் படையெடுத்து வெற்றி கொண்ட போதும் அவற்றை அவன் ஆக்கிரமிக்கவில்லை. அப்பேற்பட்ட சக்ரவர்த்தியின் கதையே திரைப்படமானது.

இலங்கைச் செய்திகள்

 யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பிரிவுக்கான புதிய கட்டடம் விரைவில்

வடக்கு, கிழக்கில் தமிழில் சேவையாற்ற 6,000 பொலிஸாருக்கு தமிழ்மொழி பயிற்சி

விளக்கமறியலில் கைதி மரணம்; இரு பொலிஸாருக்கு இடமாற்றம் வட்டுக்கோட்டையில் சம்பவம்

திருமணமாகாத அழகு ராணியாக காரைதீவு நிவேதிகா தெரிவு

3 மாத காலமாக தோட்ட வைத்தியசாலையில் தங்கியிருக்கும் மக்கள் - வீட்டு உரிமைக்கோரி வீதிக்கு இறங்கி போராட்டம்


யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பிரிவுக்கான புதிய கட்டடம் விரைவில்

November 24, 2023 4:48 pm 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ். நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பிரிவு கட்டடம் உத்தியோகபூர்வமாக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

உலகச் செய்திகள்

காசா அழிவுகள்

காசாவில் 48 நாட்கள் நீடித்த போர் நிறுத்தம்; வடக்கு காசா செல்ல இஸ்ரேல் முட்டுக்கட்டை

காசாவில் ஒரே குடும்பத்தின் 50 இற்கும் மேற்பட்டவர்கள் பலி

இஸ்ரேலுடனான உறவை துண்டிக்க தென்னாபிரிக்க எம்.பிக்கள் ஆதரவு

இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பலை கடத்தியது ஹூத்தி



காசா அழிவுகள்

November 25, 2023 2:48 pm 

கடந்த ஒக்டோபர் 7 தொடக்கம் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஏற்பட்ட அழிவு விபரம்,

• சுமார் 6,000 சிறுவர்கள் மற்றும் 4,000 பெண்கள் உட்பட 14,800க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

• 2.3 மில்லியன் மக்கள்தொகை கொண்ட காசாவில் 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர்.

• இவ்வாறு இடம்பெயர்ந்து பலஸ்தீனர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் பணிகள் நிறுவனத்தின் வசதிகளில் அடைக்கலம் பெற்றிருந்த நிலையில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 191 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 798 பேர் காயமடைந்தனர்.

முதியவர்களின் தமிழ்த் தேசியம்

 November 26, 2023


யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் தொடர்பில் தமிழ்த் தேசியர்கள் மத்தியில் கவலைகள் வெளிப்படுகின்றன.
அத்துடன், இவ்வாறான இசை நிகழ்வுகள் திட்டமிட்டு தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் சிலர் கூற முற்படுவதையும் காண முடிகின்றது.
யுத்தம் முடிவுற்று பதினான்கு வருடங்களாகிவிட்டன.
இந்த பதினான்கு வருடங்களில் தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகள் மக்களுக்கு – குறிப்பாக, இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டக்கூடிய அரசியல் அடைவுகள் எதனையும் காண்பிக்கவில்லை.
தொடர்ந்தும் ஒரே மாதிரியான கதைகளையே கூறிவருகின்றனர்.
குறிப்பாக இளைஞர்களை தமிழ்த் தேசிய அரசியலின் பக்கமாக ஈர்ப்பதற்கான எந்தவொரு வேலைத் திட்டமும் தமிழ்த் தேசிய கட்சிகளிடம் இல்லை.
இந்த நிலையில் மக்கள் களியாட்டங்களுக்கு பின்னால் செல்கின்றனர் என்று கவலைப்படுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.
களியாட்டங்கள் மீதான ஈடுபாடு என்பது மக்களது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகும்.
மக்கள் எப்போதும் பழைய சம்பவங்களில் மூழ்கியருப்பவர்கள் அல்லர்.
ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற காலத்தில் சில கட்டுப்பாடுகள் – சில தடைகள் இருந்தன.
அதன் காரணமாக சில விடயங்களை பார்ப்பதற்கும் அதனை அனுபவிப்பதற்கும் மட்டுப்பாடுகள் இருந்தன.
ஆனால், இப்போது அப்படியில்லை.
போருக்கு பின்னரான அரசியல் சூழலை முதலில் தமிழ்த் தேசியர்கள் என்போர் நன்கு வாசிக்க வேண்டும்.
நிலைமைகளிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
அவ்வாறில்லாது போனால் இவ்வாறு ஆதங்கப்படுவதிலேயே நேரத்தை விரயம் செய்ய நேரிடும்.
இன்று வடக்கு, கிழக்கில் இடம்பெறும் எதிர்ப்பு அரசியல் போராட்டங்களில் (அந்தப் பெயரில் இடம்பெறுபவை) சொற்ப எண்ணிக்கையானவர்களே பங்குபற்றுகின்றனர்.
ஆனால், களியாட்டங்களில் பல்லாயிரம் அளவில் திரளுகின்றனர்.
இது ஒரு பொதுவான நிலைமை.

ரணில் விக்கிரமசிங்கவின் தீர்வு?

November 25, 2023


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வு விடயத்தில் முன்னேற்றங்களை கண்டுவருவதான ஒரு தோற்றத்தை சர்வதேச அரங்குகளில் ஏற்படுத்த முயற்சிக்கின்றார்.
மேற்குலக ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்கும்போது, நல்லிணக்க முயற்சிகளில் முன்னேற்றமடைந்து வருவதாகவும் தமிழ் கட்சிகளுடனான பேச்சில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் கூறிவருகின்றார்.
தற்போது அவ்வாறானதொரு கருத்தையே இந்திய ஊடகங்கள் மத்தியிலும் முன்வைக்கின்றார்.
இத்தனைக்கும் ஈழத் தமிழர் விவகாரத்தில் என்ன நடைபெறுகின்றது என்பது இந்திய ஊடகங்களுக்கு நன்கு தெரிந்த விடயம்.
அவ்வாறிருந்தபோதும், தமிழ் மக்களின் இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பான இந்தியாவின் கருத்துகளுடன் தான் உடன்படவில்லை என்று கூறியிருக்கின்றார்.
ஈழத் தமிழ் மக்களின் இனப்பிரச்னைக்கான தீர்வாக 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வொன்றை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி
வருகின்றது.
ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தப் போவதாகக் கூறியிருந்தார்.
இது தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பேச்சுகளிலும் ஈடுபட்டார்.
அரசமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச்சட்டம் ஏற்கனவே, பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய படைகள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டமையைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட முக்கிய அதிகாரங்கள் சிலவற்றை மீண்டும் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுசென்றார்.
இதில் தமிழர் பக்கத்திலும் மோசமான தவறுகள் இழைக்கப்பட்டன என்பதும் உண்மைதான்.
அவற்றை மீளவும் மாகாண சபைகளுக்கு வழங்குவதிலிருந்துதான் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த முடியும்.
இந்த விடயங்கள் தமிழர் தரப்பால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
ஆனால், இந்த விடயத்தில் இதுவரையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஆனால், ரணில் விக்கிரமசிங்கவோ அரசியல் தீர்வு விடயத்தில் முன்னோக்கி செல்வதாகக் கூறிவருகின்றார்.
ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் தமிழ் கட்சிகள் இந்தியாவின் தலையீட்டை கோரும் நிலைமை ஏற்பட்டிருக்காது.

தமிழ் கட்சிகள் விரைந்து முடிவெடுக்க வேண்டும்

 November 23, 2023


ரணில் விக்கிரமசிங்க அடுத்த தேர்தல்கள் தொடர்பில் அறிவித்திருக்கின்றார். அடுத்த ஆண்டு இரண்டு தேர்தல்கள். ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல். பாராளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து – இனி இது தொடர்பில் விவாதிக்க ஒன்றுமில்லை.
இரண்டு தேர்தல்கள் தொடர்பிலும் தமிழ் தேசிய கட்சிகள் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ளவேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலை கையாள்வது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றுக்கு வரவேண்டும்.
அதேவேளை, பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் தொடர்பிலும் சிந்திக்கவேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வியூகம் அதிகாரத்திற்கு வரும் நபருடன் பேரம்பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும் – அடுத்தது, பாராளுமன்ற தேர்தலில் அதிகூடிய ஆசனங்களை வெற்றிகொள்வதற்கான உபாயங்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
உபாயங்கள் இல்லாது வெறும் கொள்கையை சுலோகமாக காவித் திரிவதில் பயனில்லை.
இது தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ‘ஈழநாடு’ அறிவுறுத்தியிருக்கின்றது.
ஆனால், தமிழ்த் தேசிய கட்சிகள்புரிந்துகொள்வதாகத் தெரியவில்லை.
ஒன்றில் இதனை தமிழ் தேசிய கட்சிகள் என்போர் புரிந்துகொள்ள வேண்டும் – அல்லது, தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், புத்திஜீவிகள் மற்றும் மதத் தலைவர்கள் என்போர், கட்சிகளுக்கு புரியவைக்க வேண்டும்.
அவ்வாறானதொரு முயற்சியையே அண்மையில் மக்கள் முறைப்பாட்டுக்கான வடக்கு, கிழக்கு சிவில் சமூகம் மேற்கொண்டிருந்தது.
இந்த முயற்சியுடன் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த அனைத்து சிவில் சமூக தலைவர்களும், மதத்தலைவர்களும் கைகோர்க்க வேண்டும்.
அவர்களுக்கு உண்மையிலேயே மக்களது நலனில் அக்கறையிருந்தால். வெறும் கொள்கை வாதங்களால் பயனில்லை. நாம் சூழ்நிலை கருதி, பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்ள முன்வரவேண்டும்.
காலத்தை கருத்தில் கொண்டு செய்யப்படாத பணிகளால் எவ்வித பயனுமில்லை.

AMAF பெருமையுடன் வழங்கும் முத்தமிழ் மாலை - 23 02/12/2023 மாலை 6 மணி

 



பலஸ்தீனப் பிரச்சினைக்கு தீர்வு காண சவூதி முன்னெடுக்கும் நடவடிக்கைகள்

 November 21, 2023 11:28 am 

பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக அவர்களுக்குப் பக்கபலமாக இருப்பதே பலஸ்தீனப் பிரச்சினையில் சவூதி அரேபியாவின் நிலைப்பாடாகும். சவூதி அரேபிய இராச்சியத்தின் நிறுவனர் மன்னர் அப்துல் அஸீஸ் பின் அப்துர்ரஹ்மான் ஆல் ஸஊத் காலத்திலிருந்து இன்றுவரை அந்நிலைப்பாடு மாறாது நிலையாக இருந்து வருகிறது.

பலஸ்தீனத்தை ஆதரிக்கும் முதல் நாடாக சவூதி அரேபியா வரலாறு நெடுகிலும் இருந்து வந்துள்ளதோடு, இந்தப் பிரச்சினையானது அரேபியர்களின் முதன்மையான பிரச்சினை என்றும் பலஸ்தீனியர்கள் தாம் விரும்புவது போல் கிழக்கு ஜெருசலத்தை தலைநகராகக் கொண்ட அவர்களின் சுதந்திர நாட்டை மீளப் பெறுதல் என்ற இலக்கை அடைந்து கொள்ளும் வரை அனைத்து அரேபியர்களும் மற்றும் முஸ்லிம்களும் அதை ஆதரிக்க வேண்டும் என்றும் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளது.

1982 ஆம் ஆண்டு மொராக்கோவில் பெஸ் நகரில் நடைபெற்ற அரபு உச்சி மாநாட்டில் மன்னர் பஹ்த் பின் அப்துல் அஸீஸின் சமாதானத் திட்டம் உட்பட, பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான பல மாநாடுகள் மற்றும் கூட்டங்களில் சவூதி அரேபியா அங்கம் வகித்துள்ளது. மன்னர் அப்துல் அஸீஸ் சமாதான திட்டமானது அரபு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டதோடு அரபு அமைதி திட்டத்திற்கும் பின்னர் 1991 இல் மெட்ரிட் நகரில் நடைபெற்ற அமைதி மாநாட்டிற்கும் அடிப்படையாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது பலஸ்தீனத்தின் காஸாவில், இஸ்ரேலியப் படைகளின் அத்துமீறல்களால் கடுமையான பிரச்சினைகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.

குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டும் உள்ளதோடு தங்கள் சொந்த இடங்களிள் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வன்னி ஹோப் (VANNI HOPE) ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம் ஏறாவூர் மட்டக்களப்பு விளையாட்டு அபிவிருத்தி அனுசரணை

 "இன்று ஒருவர் புன்னகைக்க காரணம்"

மட்டக்களப்பு, ஏறாவூர், ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, வன்னி ஹோப் பெருமையுடன் ங்கள் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தை முன்வைக்கிறது. பெண்கள் ஹாக்கி அணிக்கு விளையாடவும், செழிக்கவும், சிறந்து விளங்கவும் புதிய விளையாட்டு ஜெர்சிகளை நாங்கள் வழங்கும்போது, இளம் விளையாட்டு வீரர்களின் உற்சாகத்திற்கு சாட்சியாக இருங்கள்!

📹வன்னி ஹோப் களின்  சமீபத்திய வீடியோவில் அனைத்து செயல்களையும் உற்சாகமூட்டும் தருணங்களையும் காணவும்:





சோலைக்கிளி படைப்புகள்: ஓர் உரையாடல்

 





2023 மெல்பேர்ன், சிட்னி, பிறிஸ்பேன், அடிலெயிட், பேர்த், கன்பரா, டார்வின், கிங்ஸ்டன் (தஸ்மேனியா) 2023 மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் மற்றும் காந்தள் மலருக்கான ஆக்கங்கள் வேண்டுகை பற்றிய அறிவித்தல் – 2023!!! Inbox

 நவம்பர் 27ம் திகதி - மாவீரர் நாள்.


தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வரும் இவ்வேளையில்நவம்பர்  27ம்திகதி தமிழர்கள் வாழும் அனைத்து நாடு-களிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெறவிருகின்றனஇந்தவகையில் ஓஸ்ரேலிய நாட்டிலும் மாவீரர் நினைவு- நாள் நிகழ்வுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் நிலையில்ஒஸ்ரேலியாவின் விக்ரோரிய மாநிலமெல்பேர்ன்  பேர்வுட் கிழக்கு மைதானம்பேர்வுட் ஹவேபேர்வுட் கிழக்கு (BURWOOD East Reserve, Burwood Hwy, Burwood East – 3151)  எனும் இடத்தில் நவம்பர் மாதம் 27ம் திகதி, , திங்கட்கிழமை மாலை 6மணிமுதல் இரவு 8மணிவரை தேசிய நினைவெழுச்சிநாள் (மாவீரர் நாள்) நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

 

சிட்னி மாநிலத்தில் Newington Reserve, Holker St,


Silverwater
இல் நவம்பர்மாதம் 27ம் திகதி,  திங்கட்கிழமை மாலை 5.45 மணி முதல் மாவீரர்நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்-படவுள்ளதுநவம்பர் 27ம்திகதி எம் தேசத்து புதல்வர்களை நினைவில் நிறுத்தி மரியாதை செய்ய நம் பேதங்களை மறந்து  அனைவரும் திரண்டு வருவோம்...







ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் (SVT) - வைகுண்ட ஏகாதசி சனிக்கிழமை 23 டிசம்பர் 2023

SRI VENKATESWARA TEMPLE(SVT)

1 Temple Road, Helensburgh, Sydney, NSW – 2508, Australia


வைகுண்ட ஏகாதசி இந்துக்களுக்கு முக்கியமான மற்றும் புனிதமான நாட்களில் ஒன்றாகும், இது விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது இந்து நாட்காட்டியில், "மார்கழி" மாதத்தில் (டிசம்பர் மற்றும் ஜனவரி இடையே) நிகழ்கிறது. கவனித்தபோது, அது மறுபிறப்புகளின் சுழற்சியிலிருந்து விடுதலையை அளிக்கிறது.

பத்ம புராணத்தின் படி, விஷ்ணுவின் பெண் ஆற்றல் "முரன்" என்ற அரக்கனைக் கொன்று 'தேவர்களை' பாதுகாத்தது. இது சந்திர மாதத்தின் பதினோராம் நாளில் தனுர் ராசியில் சூரியனின் சஞ்சாரத்தின் போது நடந்தது. இந்தச் செயலால் கவரப்பட்ட விஷ்ணு, அவளுக்கு ‘ஏகாதசி’ என்று பெயரிட்டு, முரண் மீது அவள் வெற்றி பெற்ற நாளில் ‘ஏகாதசி’யை வழிபடுபவர்கள் ‘வைகுண்டம்’ (அவரது இருப்பிடம்) அடைவார்கள் என்ற வரம் அளிக்கிறார்.

வைகுண்ட ஏகாதசியின் முக்கியத்துவம் பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 'முரன்' - ஒரு அரக்கனின் கொடுங்கோன்மையைத் தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானை அணுகினர், அவர் அவர்களை விஷ்ணுவிடம் வழிநடத்தினார் என்று புராணம் கூறுகிறது. விஷ்ணுவிற்கும் அரக்கனுக்கும் இடையே ஒரு போர் நடந்தது & முரனைக் கொல்ல ஒரு புதிய ஆயுதம் தேவை என்பதை விஷ்ணு உணர்ந்தார். ஓய்வு எடுத்து ஒரு புதிய ஆயுதத்தை உருவாக்க, விஷ்ணு பதரிகாஷ்ரமத்தில் உள்ள ஹைமாவதி தேவிக்காக ஒரு குகைக்குச் சென்றார். தூங்கிக் கொண்டிருந்த விஷ்ணுவை முரன் கொல்ல முற்பட்ட போது, விஷ்ணுவிடம் இருந்து வெளிப்பட்ட பெண்ணிய சக்தி முரனை தன் பார்வையால் எரித்து சாம்பலாக்கியது. மகிழ்ந்த விஷ்ணு, தேவிக்கு ‘ஏகாதசி’ என்று பெயரிட்டு, வரம் கேட்கச் சொன்னார். ஏகாதசி, அதற்கு பதிலாக, அன்று விரதம் அனுஷ்டிப்பவர்கள் தங்கள் பாவங்களில் இருந்து விமோசனம் பெற வேண்டும் என்று விஷ்ணுவிடம் மன்றாடினார். அன்றைய தினம் விரதம் இருந்து ஏகாதசியை வழிபடுபவர்கள் வைகுண்டம் அடைவார்கள் என்று விஷ்ணு அறிவித்தார்.


காலை 09.00 மணி: ஸ்வர்க வாசல் தரிசனம்

காலை 10.30 மணி: மூலவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை.

மதியம் 02.00 மணி: கல்யாண உற்சவம்


பவித்ரா உற்சவம் 2023 (24 நவம்பர் முதல் 26 நவம்பர் 2023 வரை)

 





பவித்ரா உற்சவம் என்பது "பவித்ரா" (புனித) மற்றும் "உத்சவம்" (பண்டிகை) ஆகிய இரண்டு வார்த்தைகளின் கலவையிலிருந்து பெறப்பட்டது.

பவித்ரோத்ஸவம் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் மற்றும் பூஜைகளை நடத்துவதில் "ஆகம" உத்தரவில் ஏதேனும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கத்திற்காக கொண்டாடப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட விதிகளை பின்பற்ற தவறியதில் இருந்து மீட்பதற்காக உற்சவம் கொண்டாடப்படுகிறது.

நவம்பர் 24, 2023 வெள்ளிக்கிழமை

08.00 AM : திருப்பள்ளி எழுச்சி (இறைவன் எழுந்தருளல்), நித்ய பூஜை, புண்யாவசனம், ஸ்ரீ வெங்கடேஸ்வர உற்சவமூர்த்தி, ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ராம லக்ஷ்மண சீதா தேவி, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ சுதர்சன முத்தி மற்றும் ஸ்ரீ கருடன் ஆகியோருக்கு அபிஷேகம்.

மதியம் 12.00: மதிய பூஜை

05.00 PM : நித்ய பூஜை, சங்கல்பம், சோம கும்ப பூஜை மற்றும் யாகம், வாஸ்து பூஜை & ஹோமம், ரக்ஷா பந்தனம், மாலை பூஜை.

பவித்ரா உற்சவம் - சாத்துதல் (பிரசாதம்)