நிலங்கெடுக்கும் புகையிலையை நெஞ்சைவிட்டே அகற்றிடுவோம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .... ஆஸ்திரேலியா  

 

பணப்பயிராய்ப் புகையிலையைப் பார்த்தார்கள் பலபேரும்
இணக்கமுடன் பயிரிட்டு இன்புற்று மகிழ்வடைந்தார்
தமக்குரிய வருவாயைத் தருகின்ற கொடையாக
புகையிலையை மனமெண்ணி புத்துணர்ச்சி பெற்றார்கள்

       

மேல்நாட்டார் கீழ்நாட்டார் விரும்பிவிட்டார் புகையிலையை

புகையிலையைக் காசாக்கி பெருவணிகம் கண்டார்கள்
விதம்விதமாய் புகையிலையை விரும்பிநிற்கும் பாங்கினிலே
விற்பனையில் தந்திரமாய் வெளிகொணர்ந்தார் வர்த்தகர்கள்

      அமெரிக்கா ஐரோப்பா அணைத்திட்டார் புகையிலையை

      அதன்வழியே இந்தியா பயணப்பட்டு நின்றது
      சீனாதான் முந்திவிட சிறகடித்துப் பறந்தது
      ஸ்ரீலங்கா புகையிலையை வரவேற்றும் நின்றது

ஈழத்து இலக்கிய குடும்பத்தின் மூத்த சகோதரன் தெணியான் விடைபெற்றார் முருகபூபதி

 கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய

ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமை நேற்று 22 ஆம் திகதி தமது 80 வயதில் வடமராட்சி கரவெட்டி கரணவாய் இல்லத்தில் மறைந்தார். 06-01-1942 ஆம் திகதி வடமராட்சி பொலிகண்டியில் கந்தையா - சின்னம்மா தம்பதியருக்கு பிறந்த நடேசன் , இலக்கியஉலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கி, அதுவே நிலைத்துவிட்டது. தான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு

எனவும் அவர் வர்ணிக்கப்பட்டவர். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பல நாவல்களும் சில விமர்சனக்கட்டுரைத்தொகுதிகளையும் தமிழ் இலக்கியத்திற்கு வரவாக்கியிருக்கும் தெணியானின் பாதுகாப்பு என்ற சிறுகதை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் வெளிவந்தது. இச்சிறுகதை தற்போது இலங்கைப்பாடசாலைகளில் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் பாட நூலிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான விவேகி இதழில் 1964 இல் தெணியானின் முதல் சிறுகதை பிணைப்பு வெளியாகியது. அதனைத்தொடர்ந்து, மல்லிகை, ஞானம், யாழ். முரசொலி, வீரகேசரி, தினக்குரல் உட்பட பல இதழ்களில் அயராமல் எழுதியிருப்பவர். இவருடைய கழுகுகள் (நாவல்) சொத்து (சிறுகதைத்தொகுதி) குடிமைகள் ( நாவல்) என்பன தமிழ்நாட்டில் பிரபல பிரசுர நிறுவனங்களான நர்மதா பதிப்பகம், என்.சி.பி.எச். மற்றும் கறுப்பு பிரதிகள் முதலானவற்றின் ஊடாக தமிழக வாசகர்களையும் சென்றடைந்துள்ளன. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இயங்கிய காலத்தில் யாழ்ப்பாணக் கிளையின் செயலாளராகவும் இயங்கியிருக்கும் தெணியான், தமது படைப்புகளுக்காக இலங்கை தேசிய சாகித்திய விருது, வடகிழக்கு மகாண அமைச்சுப்பரிசு, யாழ். இலக்கிய வட்டத்தின் பரிசு, இலங்கை தேசிய கலை இலக்கியப்பேரவை - தமிழ்நாடு சுபமங்களா இதழ் ஆகியன இணைந்து வழங்கிய பரிசு, மற்றும் தமிழ்நாடு கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது, கொடகே விருது, கலாபூஷணம் விருது, இலங்கை அரசின் உயர் விருதான சாகித்திய ரத்னா விருதும் பெற்றிருப்பவர். 

ஆழியாள் , ஜெயகரன் ஆகியோருக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் 2021 இன் விருது

பேராசிரியர் சலபதி, கே.சந்துரு உள்ளிட்ட 4 பேருக்கு ‘இயல்’ விருதுகள் அறிவிப்பு!  ஆர்.சி.ஜெயந்தன்,   இந்து தமிழ்  19 May 2022)

இலங்கை, தமிழ்நாடு மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 4 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடு கனடா. அங்கே, கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாகத் திறம்பட இயங்கிவருகிறது கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு. கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியோரின் ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாக கடந்த 2001-ஆம் ஆண்டு, கனடாவின் தலைநகரானா டொராண்டோவில் தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பின் பொதுவான நோக்கம், உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்களை அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 15 “ வித்தகம் பேசி வீண்காலம் போக்காமல் விந்தைப்பணி செய்வோம் வாரீர் “ மெல்பன் கலைமகள் ( 1989 ) விழாவில் கவியரங்கு - இசையரங்கு - நாடக அரங்கு ! முருகபூபதி

அன்னை சரஸ்வதியே…. அடியன் நாவில் குடியிருந்து

அருள்புரிவாய் மிகுந்து ….. நன்னூல் இலக்கணங்கள் நானறிகிலேன்


நம்பினேனே நற்குகந்து நற்கருணை தாராய் !

  என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்

கேட்டோம் பாரதி தீந்தமிழ் இலக்கியத்தில்

தணியாத தாகத்தை தவறாது கேட்டோம்

ஈழமணித் திருநாட்டின் வானொலியில்

தணியாத தாகத்தை தணித்த பின்னே – கடல் சூழ் கண்டமதில்

வாழையும் – முருங்கையும் – கனிதருமரங்களும்

செழித்து வாழும் ராணியின் பூமியில்…

ஆமாம்,  குயின்ஸ்லாந்து  மாநிலத்தில்…

தமிழ்ஒலி பரப்பும் எனதருமை நண்பா வாசுதேவா…

உன்வரவுக்கும் – உன் தலைமைக்கும் வாழ்த்துக்கூறி

செப்பிடுவேன் என் கவிதை.

ஆழமிலா நீரோடை சலசலக்கும் நீரோட்டம்

நீர் குறையும் பெரும் குடம், தளதளத்து தளும்பும் குறை குடம்

வெட்டிப்பேச்சும் – திண்ணைப்பேச்சும் காற்றிலே கரையும்

நிலைத்திருக்கும் செயலும் விளைவும்.

கொலம்பஸ் – கெப்டன் குக் வாய்ச்சொல் வீரரோ..?

வித்தகம் பேசி வாதங்கள் புரியாது கண்டனர் கண்டனர்

கண்டங்கள் கண்டனர்.

ஒரு முட்டை ஈன்று கொக்கரிக்கும் கோழி

பல முட்டை ஈன்றாலும் அமைதி காக்கும் ஆமை.

மாற்றான் தோட்டத்தில் மல்லிகையும் மணக்கும்.

அண்டை வீட்டில் அல்லியும் மலரும்.

இத்தத்துவம் புரியாமல் வித்தகம் பேசுகின்றார்.

19.01.2019 சனிக்கிழமை மெல்பேர்னில் நடைபெற்றது. நிகழ்வில் தெணியான் எழுதிய "பொற்சிறையில் வாடும் புனிதர்கள்" என்ற நாவல் குறித்த தனது வாசிப்பு அனுபவத்தை முருகபூபதி பகிர்ந்து கொண்டார். அதன் இணைப்பு...

 ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (ATLAS) நடத்திய புது வருடத்தின் ( 2019 )  முதலாவது "வாசிப்பு அனுபவ பகிர்வு" நிகழ்வு 19.01.2019 சனிக்கிழமை மெல்பேர்னில் நடைபெற்றது. நிகழ்வில் தெணியான் எழுதிய "பொற்சிறையில் வாடும் புனிதர்கள்" என்ற நாவல் குறித்த தனது வாசிப்பு அனுபவத்தை முருகபூபதி பகிர்ந்து கொண்டார். அதன் இணைப்பு....
கற்பகதருவினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை முப்பத்து எட்டு ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .... அவுஸ்திரேலியா 

                                   

 

    பனங்குட்டான்களில் பெரிய பனங்குட்டானுக்கு ஆனைப்


பனங்குட்டான் என்று பெயரிட்டு அழைத்தார்கள் என்பதை அறிந்தோம். அதே வேளை மிக வும் சிறியதாகவும் பனங்குட்டான் இருந்தது என்பதும் எங்களில் பலருக் கும் தெரியும். அந்தச் சின்னப் பனங்குட்டான் ஒரு அங்குல அளவினதா கவே இருந்தது என்றால் நம்பவே முடியாமல் இருக்கிறதல்லவா ! அந்த அளவுக்கு குட்டான் செய்த திறனை கட்டாயம் மெச்சியே ஆகவேண்டும் அல்லவா ! அந்தச் சின்ன

பனங்குட்டானை " தாயைத்தின்னிக் குட்டான் " என்று பெயரிட்டு அழைத்தார்கள் என்பதைக் கருத்திருத்தல் வேண்டும்.
 கோவில் திருவிழாக் காலங்களில் கச்சான் விற்கும் கடைகள் நிறையவே இருக்கும். கச்சான் கடைகளுக்கு முன்னால் மக்களும் நிறைந்தே இருப்பார்கள். கச்சானுடன் சேர்த்து இந்த சின்னப் பனங்குட்டானையும் கச்சான் விற் பவர் கொடுப்பார். கச்சானுடன் பனங்கட்டி இணையும் பொழுது அதன் சுவையோ ஒரு தனிச்சுவை என்றுதான் சொல்லவேண்டும்.அந்த அனுபவ மும் ஒரு தனியான இனிமையான அனுபவம்தான்.

  குடிசைக் கைத்தொழிலாகச் செய்யப்பட்ட பனங்கட்டியானது காலத்துக்கு ஏற்றாற் போல் நவீனமுறைக்குள் வருகின்ற அவசியமும் தேவையும் ஏற் பட்டது.நவீனம் புகுந்துகொண்ட  காரணத்தால் அதில் அறிவியல் முறைகள் முக்கியத்துவம் பெற்றுவிட்டன. பதனீரைப் பக்குவப் படுத்துவதுஅதனைப் பாகாக்கி எடுப்பதுசுத்திகரிப்பதுபின் பனங்கட்டியாய் எடுப்பது எடுத்த பன ங்கட்டியை விற்பதற்கு உரிய முறையில் பொதியாக்குவதுபனங்கட்டியை

காலிமுகத்திடல் போராட்டத்தில் மாறிவரும் காட்சிகள் ! அவதானி


காலிமுகத்திடல் போராட்டம் தொடங்கி ஐம்பது நாட்களும் கடந்த நிலையில்,  அங்கு காட்சிகளும்  மாறிவருகின்றன. அவற்றின் பாரிய அழுத்தம் அரசுக்குள்ளும் அமைச்சரவைக்குள்ளும் மாற்றங்களை ஏற்படுத்தின.

ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் புதிய அமைச்சரவையில் இடமில்லாமல்போய்விட்டது. அதிபர் கோத்தபாய ராஜபக்‌ஷ மாத்திரமே நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக,  அனைத்து ராஜபக்‌ஷவினரதும் பிரதிநிதியாகத் திகழுகிறார்.

தன்னை இலங்கையில் 69 இலட்சம் வாக்காளர்கள், அதிலும் பௌத்த சிங்கள மக்களே அதிகம் ஆதரவு தந்து அரியணை ஏற்றியதாக இதுவரையில் சொல்லிக்கொண்டிருந்த கோத்தபாய ராஜபக்‌ஷ, புதிதாக நியமித்த அமைச்சரவையில் தனது சகோதரர்களையும்  அண்ணன் மகனையும் இம்முறை இணைத்துக்கொள்ளவில்லை.

இது காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு கிடைத்த


முதல் வெற்றியாக இருந்தபோதிலும் அவர்கள் மேலும் சில வெற்றிக்கனிகளை எட்டிப்பிடிக்க வேண்டியுள்ளது.

கடந்த ஏப்ரில் மாதம் தொடங்கிய போராட்டம் இந்த  மேமாதமும் தொடர்ந்து,  இனி வரும் மாதங்களிலும் நீடிக்கப்போகிறது.

புதிதாக பிரதமராகியிருக்கும் ரணில் விக்கிரமசிங்காவுக்கு 1977 முதல் அரசியல் அனுபவம் உள்ளது. அதாவது 45 வருடகால அனுபவம்.  ஜனாதிபதியாகத் திகழும் கோத்தபாயவுக்கு அரசியல் அனுபவத்தை விட இராணுவ அனுபவம்தான் அதிகம். அவர் இதற்கு முன்னர் என்றைக்குமே அரசியல்வாதியாகத்  திகழவில்லை.

காலமும் சூழ்நிலையும் அவரை அரசியலுக்குள் இழுத்துவிட்டது.  ஆனால், தொடக்கத்தில் அவருக்கு இந்த அரசியல் சாதகமான சமிக்ஞைகளை காண்பித்தாலும், இந்த ஆண்டு தொடக்கம் முதல் சிவப்பு சமிக்ஞையைத்தான் காண்பிக்கிறது.  அவரது சகோதரர்கள் மூவரும், பெறாமகன் நாமல் ராஜபக்‌ஷவும் கழுத்தில் சிவப்பு நிற துப்பட்டாவுடன் வலம் வந்தாலும், இவர் அதனை அணிந்துகொள்ளவில்லை.

எனினும் அநுராதபுரத்திலிருந்து சோதிடம் பார்த்து குறிசொல்லும் ஞானக்கா என்பவரின் ஆலோசனைகளின் பிரகாரம் தனது அரசியல் பாதையை இவர் வகுத்துவருகிறார் என்பது பரகசியம்.  ஆர்ப்பாட்டக்காரர்களினால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட சொத்துக்களில் இந்த ஞானக்காவினதும் அடக்கம்.

ஸ்வீட் சிக்ஸ்டி 16 - சுமைதாங்கி - ச சுந்தரதாஸ்மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா இந்தப் பாடலை அறியாதவர்கள் ரசிக்காதவர்கள் எவருமே இருக்க மாட்டார்கள்.வாழ்க்கையில் நொந்து போய் விரக்தியின் விளிம்பில் நிற்பவனுக்கு கூட உற்சாக டானிக் கொடுக்கும் பாடலாக இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது இப் பாடல்.கவிஞர் கண்ணதாசனின் அற்புத வரிகளில் உருவான இந்தப் பாடல் இடம் பெற்ற படம்தான் 1962ம் ஆண்டு வெளிவந்த சுமைதாங்கி!

குமுதம் வார இதழில் துணை ஆசிரியராகவும்,இணை ஆசிரியராகவும் நான்கு தசாப்தங்களுக்கு மேல் பணியாற்றியவர் ரா கி ரங்கராஜன்.பிரபல நாவலாசிரியரான இவர் எழுதிய நாவலை படமாகத் தயாரித்தார் கவிஞர் கண்ணதாசன்.இவருடன் கோவை செழியனும் தயாரிப்பாளராக இணைந்து கொண்டார்.ரங்கராஜனும்,கண்ணதாசனும் முன்பு சக்தி பத்திரிகையில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள்.ஆதலால் நீண்ட கால நண்பர்கள்.அந்த அறிமுகத்தில் இந்தக் கதை படமாக்கப்பட்டது.

கூட்டு குடும்பத்தில் அண்ணனின் சம்பாத்தியத்தில் தம்பி பாபு பி ஏ படிக்கிறான்.நண்பர்கள் இடையில் போட்டுக் கொண்ட பந்தயத்துக்கு அமைய தன் ஆசிரியர் மகள் ராதாவை காதலித்து அவள் மனதில் குடியேறுகிறான் பாபு.இருவர் இடையே காதல் வளர்கிறது.அதே சமயம் அண்ணனின் வேலையும் திடீரென பறிபோகிறது.இதனால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்கு போகிறான் பாபு.திடீர் என பணக்கார சம்பந்தம் ஒன்று வரவே குடும்ப நன்மைக்காக,அவர்களின் வற்புறுத்தலுக்காக தன் காதலை தியாகம் செய்கிறான்.ராதாவோ மனம் ஒடிந்து போகிறாள்.தொடர்ந்து அண்ணன் ,தங்கை நல்வாழ்வுக்காக சுமைதாங்கியாக குடும்ப பாரத்தை சுமந்து தன்னுடைய சுகங்களை எல்லாம் இழக்கிறான் பாபு.

அவுஸ்திரேலியா இலங்கை மாணவர் கல்வி நிதியம் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவை அதிகரித்துள்ளது.அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 34  வருடகாலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியம்,  இவ்வாண்டு  ( 2022 ) முதல்,  உதவியைப் பெற்றுவரும் மாணவர்களின் நிதிக்கொடுப்பனவை அதிகரித்துள்ளது.

இலங்கையில் நீடித்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழைத்


தமிழ் மாணவர்களுக்கு கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஊடாக உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம்,   போர் முடிவுற்ற பின்னர் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களையும் தெரிவுசெய்து உதவி வருகின்றமை குறிப்பிடத்தகுந்தது.

அவுஸ்திரேலியாவில் வதியும் மனிதநேயம் மிக்க அன்பர்களின் ஆதரவினால் இயங்கி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், இலங்கையில் யாழ்ப்பாணம் சிறுவர் அபிவிருத்தி நிலையம் ( Centre for Child Development )  வவுனியா நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு Voluntary Organization For Vulnerable Community Development – VOVCOD) மலையக சமூக அபிவிருத்தி நிறுவனம் (Plantation Community Development Organization) மற்றும் கம்பகா மாவட்டத்தில்  விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ஆகியனவற்றின் ஊடாக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகின்றது.

இந்த உதவியின் மூலம் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, கம்பகா, மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தைச்சேர்ந்த மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர்.

இலங்கையில் சமகாலத்தில் தோன்றியிருக்கும் பொருளாதார நெருக்கடி -  வாழ்க்கைச்செலவு - விலைவாசி உயர்வு முதலானவற்றை கவனத்தில்கொண்டு இந்த வருடம் ( 2022 ) ஜனவரி மாதம் முதல் கல்வி நிதியத்தின் உதவியை பெறும் மாணவர்களுக்கு  ஒவ்வொரு மாதமும்  மூவாயிரம் ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“சிறிலங்காவில் சீன ஆதிக்கத்துடன் தமிழ் இனப்படுகொலை தீவிரமடைகிறது” பிரித்தானிய தமிழர் பேரவையின் கண்காட்சியும் புத்தக வெளியீடும்


 பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF), 13வது ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் நிகழ்வின் ஒரு பகுதியாக18 மே 2022 அன்று லண்டனில் உள்ள ட்ரஃபல்கர் சதுக்கத்தில் (Trafalgar square) கூடியதுகடந்த ஏழு தசாப்தங்களாக தொடரும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு மற்றும் வன்முறைச் சுழற்சிகளின் வரலாற்றையும் அதற்கான காரணிகளையும் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட விடயங்கள் குறித்த “சிறிலங்காவில் சீன ஆதிக்கத்துடன் தமிழ் இனப்படுகொலை தீவிரமடைகிறது” எனும் தலைப்பிலான கண்காட்சியை ஏற்பாடு செய்தது. 

இலங்கைச் செய்திகள்

இலங்கையின் 24ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே

அஜித் ரோஹண உள்ளிட்ட 3 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசிடம் பல திட்டங்கள்

புலம்பெயர் தமிழரால் பொருளாதாரம் உயரும்

பிரதமராக பதவியேற்க இப்போதும் நான் தயார்

நாமல் எம்.பிக்கு எதிரான ரூ. 70 மில். முறைகேடு வழக்கு

அட்டுலுகம சிறுமியின் மரணம்; விசாரணை CIDயிடம்இலங்கையின் 24ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே

- பாதுகாப்பு படைகளின் புதிய பிரதம அதிகாரியாக ஷவேந்திர சில்வா

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும்  லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகச் செய்திகள்

கிழக்கு உக்ரைனில் தாக்குதல்கள் தீவிரம்

உக்ரைனியருக்கு ரஷ்ய குடியுரிமை

20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கம்மை நோய் உறுதி

தாய்வானுக்கு அருகே சீனா இராணுவ பயிற்சி

டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு: தாக்குதலுக்கு முன் பேஸ்புக்கில் செய்தி அனுப்பிய துப்பாக்கிதாரிகிழக்கு உக்ரைனில் தாக்குதல்கள் தீவிரம்

உக்ரைனின் கிழக்குப் பகுதியின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் வட்டாரங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட நகரங்களில் ரஷ்யப் படையினர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

ஒரு உயிரைக் காப்பாற்றுங்கள் ஒரு கனவைக் காப்பாற்றுங்கள் Save A Life Save a Dream